மிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாய் இருக்கும் வில்லன்கள் யார்? அழிக்க வேண்டிய நரகாசுரர்கள் யார் என்று சமூக சிந்தனையுள்ள சில பிரபலங்களைக் கேட்டோம். அவர்கள் தந்த லிஸ்ட் இது:
சத்யராஜ்
1.கடவுள்
2.மதம்
3.ஜாதி
4.சாமியார்
5.நம்ம ஊர் அரசியல்
6.ஏமாற்றுபவர்கள்
7.ஏமாறுபவர்கள்
8.பயிலாமை
9.முயலாமை
10.இயலாமை
தமிழச்சி
1.உலகத்திலேயே இரண்டாவது பெரிய கடற்கரையான மெரினாவை பாழ்படுத்தும் பீச் குப்பை.
2.சிக்கன், மட்டன் வகைகளைப் பொரித்து பாக்கெட்டில் விற்கும் கம்பெனிகள்.
3.சிக்னலில் காத்திருக் கும் டூ வீலரைக்கூட இடித்துக்கொண்டு நிற்கும் தண்ணீர் லாரிகள்.
4.சாலையைக் கடக்கும் போதுகூட இடை விடாமல் பேச வைக்கும் செல்போன்கள்.
5.உலகம் வெப்பமயம் ஆவது பற்றி கவலைப்படாமல் புகையைக் கக்கும் பேருந்துகள்.
6.அமெரிக்கத் தூதரகம் முன்பு கால் கடுக்க காத்துக்கிடக்கும் பெருங்கூட்டம்.
7.நடிகர்களின் கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்யும் ரசிகர்கள்.
8.பெண்களை அழ வைக்கும், வில்லியாகக் காட்டும் டி.வி. சீரியல்கள்.
9.முதியோர் இல்லங்களில் அதிகரித்து வரும் முதியோர்கள்.
10.கொஞ்சம்கூட குறையாத, பேருந்துகளில் தொங்கிச் செல்லும் இளைஞர்களின் எண்ணிக்கை.
சுப.வீரபாண்டியன்
1.சாதீய அமைப்பும் அதில் மக்களுக்கு உள்ள பிடிப்பும்.
2.திரைப்படத்திலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் தொலையும் நேரம்.
3.சுற்றுச்சூழலில் அக்கறையில்லாமை.
4.இந்துத்துவ வன்முறை அரசியல்.
5.ஆற்றுநீர் உரிமை மறுக்கும் அண்டை மாநிலங்கள்.
6.முட்புதராய் மண்டிக்கிடக்கும் மூடநம்பிக்கைகள்.
7.கையூட்டு வாங்கியும், கொடுத்தும் பழகிப்போன சமூகம்.
8.பொதுவாழ்க்கைக்கு வரத் தயங்கும் நேர்மையாளர்கள்.
9.உலகமயமாதலில் நாம் இழந்துகொண்டிருக்கும் இன்றைய வாழ்க்கை.
10.இன்னும் அழுத்தமாய் மேலோங்கி நிற்கும் ஆணாதிக்கம்.
நல்லகண்ணு
1.காடுகள் அழிப்பு
2.குடிதண்ணீர் வியாபாரம்
3.மணல் கொள்ளை
4.மக்கள் நலத்திட்டங்களில் மக்களை ஈடுபடுத்தாமல் இடைத் தரகர்களிடம் ஒப்படைப்பது.
5.லஞ்ச ஊழல்.
6.சமூக விரோதிகள் - அரசு அதிகாரிகள் கூட்டாட்சி.
7.கல்வி, மருத்துவத் துறையில் தனியார்களின் அதிகரிப்பு.
8.ஜாதி மத அரசியல்
9.தாய்மொழி புறக்கணிப்பு
10.வாரத்தில் ஏழு நாட்களிலும் 24 மணி நேரமும் பார்க்கப்படும் தொலைக்காட்சி..
நன்றி குமுதம்
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாய் இருக்கும் வில்லன்கள் யார்
அண்ணா நூற்றாண்டு விழா கைதிகள் விடுதலையில் ஏகப்பட்ட குளறுபடி
பசுமை நிறைந்த நினைவுகளே!' என்று ஜெயிலுக்குள் பாட்டெல்லாம் பாடினார்களா என்று தெரியாது! ஆனாலும் அண்ணா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலையாகிப் பறந்து விட்டார்கள். அவர்களுடன் இதுநாள் வரை பழகிக் களித்த மற்ற பிரிவு கைதிகள் மட்டும் ஏக விரக்தியில் கிடக்கிறார்கள். கைதிகள் விடுதலையில் ஏகப்பட்ட குளறுபடிகள் இருப்பதாகத் தகவல் ஒருபுறம் கும்மியடிக்க, மற்றொருபுறம், ``விடுதலை லிஸ்டில் இருந்த என் மகனை விடுவிக்காமல் விட்டு விட்டார்கள்'' என்று ஒரு மூதாட்டி குமுறிக் கொண்டிருக்கிறார்.
அந்த மூதாட்டியின் பெயர் கன்னியம்மாள். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்த விதவைப் பெண். இவரது ஒரே மகன் மணிகண்டன், ஆயுள் தண்டனைக் கைதியாக மதுரை ஜெயிலில் இருக்கிறார். மகன் விடுதலையாகிவிடுவான் என்ற நினைப்பில் இன்னும் மதுரை ஜெயில் வாசலில் தவம் கிடக்கும் கன்னியம்மாளை நாம் சந்தித்துப் பேசினோம்.
``என் மகன் மணிகண்டன் கயத்தாறில் நடந்த ஒரு கொலை வழக்குத் தொடர்பாக 2000-ம் ஆண்டில் ஆயுள் தண்டனை பெற்றான். மதுரை மத்திய சிறையில் ஏழாண்டு காலம் சிறைவாசத்தைக் கழித்துவிட்டான். `அண்ணா நூற்றாண்டை முன்னிட்டு என்னையும் விடுவிக்கப் போகிறார்கள். அதற்கான ஆவணங்களில் கையெழுத்துப் போட்டு விட்டேன். விடுதலையானதும் ஒழுக்கமாக வாழ்வேன்' என்று எனக்குத் தகவல் சொல்லி அனுப்பினான்.
அண்ணா பிறந்தநாளன்று அதிகாலையில் இருந்து மதுரை ஜெயில் வாசலில் பழிகிடந்தேன். அன்று இரவாகியும் என் மகன் மட்டும் விடுதலையாகவில்லை. ஏமாற்றத்துடன் வீடு திரும்பினேன். அதன்பிறகு என் மகனைப் பார்க்க மனு போட்டும் அதிகாரிகள் அனுமதி தரவில்லை. இதற்குள் உறவினர் ஒருவர் என் மகனை சிறையில் சந்தித்தபோது அவன், அதிகாரிகள் தன்னிச்சையாக தனது விடுதலையைத் தடுத்து விட்டதாகக் கூறி அழுதிருக்கிறான்.
ஏழ்மை நிலையில் இருக்கும் நான், இறுதிக்காலத்தை என் மகனின் ஆதரவோடு கழிக்க நினைத்திருந்தேன். அந்த எண்ணத்தில் மண் விழுந்துவிட்டது. இதுகுறித்து தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்குக் கடிதம் எழுதியிருக்கிறேன். என் மகன் விடுதலையானால் சரி'' என்று கண்களைத் துடைத்துக் கொண்டார் கன்னியம்மாள்.
மணிகண்டன் பற்றி மதுரை சிறைக் கண்காணிப்பாளர் கண்ணனிடம் நாம் பேசினோம்.. "மணிகண்டன் மீது மேலும் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. குறிப்பிட்ட தேதிக்குள் அந்த வழக்கில் அவர் பெயில் கூட பெறவில்லை. அதனால்தான் அவரை விடுவிக்க இயலவில்லை!'' என்றார் அவர்.
கன்னியம்மாளின் வக்கீல் பெ. விஜயராகவனிடம் நாம் இதுபற்றிப் பேசியபோது, ``நிலுவையில் வழக்கு இருந்தால் ஒரு கைதியை விடுவிக்க வழியில்லை என ஜெயில் அதிகாரி கூறியிருப்பது தவறு. மதுரையைச் சேர்ந்த கனகு என்பவர் ஆயுள்தண்டனைக் கைதியாக இருந்தார். இவர் பரோலில் போயிருக்கும் போது ஒருவரை வெட்டியதாக இவர் மீது வழக்குத் தொடரப்பட்டு அது நிலுவையில் இருக்கிறது. அந்த கனகு இப்போது விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். இதுபோல பல உதாரணங்களைக் காட்டமுடியும். அப்படியிருக்கையில், மணிகண்டனை மட்டும் ஏன் விடுதலை செய்யவில்லை? விடுதலை செய்யப்படுபவர்கள் லிஸ்டில் இருந்த மணிகண்டனின் பெயர் கடைசி நேரத்தில் நீக்கப்பட்டு அதிகாரிகள் வேறு பெயரைச் சேர்த்தார்களா என்பது தெரியவில்லை. இது ஜெயில் அதிகாரிகளின் தவறா?அல்லது அரசின் தவறா? இது தொடர்பாக நியாயம் கேட்டு ஐகோர்ட் செல்லப்போகிறோம்'' என்றார் விஜயராகவன்.
சிறை அதிகாரி ஒருவரிடம் நாம் பேசியபோது, அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி கைதிகளை விடுவித்ததில் நடந்த குளறுபடிகளைப் பட்டியலிட்டார் அவர்.
``ஒரு கொலை வழக்கில் முதல் குற்றவாளிக்கு ஆயுள்தண்டனையும், அடுத்த குற்றவாளிக்கு பத்தாண்டு தண்டனையும் கிடைக்கிறது என வைத்துக் கொள்வோம். இப்போது அண்ணா நூற்றாண்டையொட்டி ஏழாண்டு காலம் தண்டனை அனுபவித்த ஆயுள்தண்டனைக் கைதி விடுதலையாகிவிட, அவரைவிட குறைவான குற்றம் செய்த 10 ஆண்டு தண்டனைக் கைதி உள்ளே இருக்கிறார். இதில் நியாயம் இருப்பதாகத் தெரியவில்லையே?
அதுபோல கொலைக்குற்றம் செய்த ஆயுள் தண்டனைக் கைதிகள்கூட விடுதலையாகிப் போய்விட முடிகிற நிலையில், குறைவான குற்றம் செய்தவர்கள் ஜெயிலில் தொடர்ந்து கிடந்து குமைந்து கொண்டிருக்கிறார்கள். இது பல கைதிகளின் மனங்களில் விரக்தியை ஏற்படுத்தியிருக்கிறது. மதுரை ஜெயிலில் தொண்ணூறு வயதான முதியவர் ஒருவர் இருக்கிறார். அவருக்குப் பத்தாண்டு ஜெயில் தண்டனை. அவர் ஏழாண்டுகளை முடித்து விட்டார். ஆனால் அவர் ஆயுள் தண்டனைக் கைதி இல்லை என்பதால் அவருக்கு விடுதலை கிடைக்கவில்லை.
அதுபோல மதுரை ஜெயிலில் பிரேமஸ்ரீ என்னும் இலங்கை கைதி ஒருவர் இருக்கிறார். சாக்பீஸ், சோப் போன்றவற்றில் அருமையாக சிற்பம் செய்யக்கூடியவர் அவர். அதன் மூலம் சம்பாதித்தும் வருகிறார். போதைப் பொருள் கடத்தியதாக பத்தாண்டு ஜெயில் தண்டனையும், மூன்று லட்ச ரூபாய் அபராதமும் அவருக்கு விதிக்கப்பட்டது. அபராதம் கட்ட முடியாததால் கூடுதலாக ஒன்பதாண்டுகள் ஜெயில் தண்டனை கிடைத்தது. அவர் பத்தாண்டுகளை சிறையில் கழித்துவிட்டார்.
அண்ணா பிறந்தநாளையொட்டி ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலையானதைப் பார்த்து தனக்கு விடுதலை கிடைக்கவில்லையே என்ற ஏக்கத்தில் அவர் ஜெயிலில் உள்ள ஒரு புளியமரத்தின் உச்சியில் ஏறி தற்கொலைக்கு முயன்றார். ஜெயில் அதிகாரிகள், தீயணைப்பு அதிகாரிகள் முயற்சித்தும் அவரைக் காப்பாற்றி கீழே இறக்க முடியவில்லை. கடைசியில் கருப்பு என்கிற கைதி விறுவிறுவென மரத்தில் ஏறி, குற்றுயிரும் குலையுயிருமாக இருந்த பிரேமஸ்ரீயைக் காப்பாற்றினார். இப்படி பல சம்பவங்கள் ஜெயில்களில் நடந்து வருகின்றன.
பரோலில் போன கைதி லேட்டாக வந்தால், அதை `பரோல் எஸ்கேப்' என்பார்கள். இந்த பரோல் எஸ்கேப்பைக் காரணமாகக் காட்டியே மதுரைச் சிறையில் சுமார் 25 பேருக்கு விடுதலை கிடைக்கவில்லை. வெறும் ஆறு மணி நேரம் லேட்டாக வந்தவர்கள் விடுதலையாக முடியாமல் ஆறாண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது வேதனைதானே?'' என்றார் அந்த சிறை அதிகாரி.
ஒட்டகம் திருடிய பெரிய குற்றவாளிகள் உற்சாகமாக விடுதலையாகிப் போய் விட, முட்டை திருடிய சிறிய குற்றவாளிகள் சிறைக்கம்பிகளுக்குள் இன்று குமைந்து கொண்டிருக்கிறார்கள். அண்ணா நூற்றாண்டு விழாவில் ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலையானதன் பின்னணியில் இத்தனை வேதனைகள் இருக்கிறதா என்ற விரக்தி நம்மையும் தொற்றிக்கொள்ள, அவரிடம் இருந்து விடை பெற்றோம்
நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்
யார் சூப்பர் ஸ்டார் ? ரஜினியை உசுப்பிவிட்ட கருத்து கணிப்பு
படைபரிவாரங்களுடன் ரோம் நகரை நெருங்கிவிட்டார் ஜூலியஸ் சீசர். இடையே நொப்பும் நுரையுமாகக் கொந்தளித்து ஓடும் ரூபிகான் ஆறு. `ஆற்றைக் கடந்து போய் ரோமைக் கைப்பற்றுவதா? இல்லை அப்படியே பின்வாங்கி விடுவதா?' என்ற அறத்துன்பமான நிலை. அப்போது சீசர் எடுத்த முடிவு ரூபிகான் ஆற்றைக் கடப்பதுதான். அதன்பின் நடந்ததெல்லாம் வரலாறு.
சீசரைப் போல சூப்பர் ஸ்டார் ரஜினியும் அவரது வாழ்க்கை வரலாற்றில் ஒரு ரூபிகான் ஆற்றின் பக்கம் வந்து சேர்ந்து விட்டதாகவே தோன்றுகிறது, அண்மையில் அவர் தொடர்பாக நடக்கும் சில நிகழ்வுகளைப் பார்க்கும்போது. `இனியும் தாமதிக்க முடியாது. முடிவெடுத்தே ஆக வேண்டும்' என்ற நிலைக்கு ரஜினி தள்ளப்பட்டு விட்டதாகவே தெரிகிறது.
ஒரு காலத்தில் மூன்று ஆண்டுக்கு ஒருமுறைதான் ரஜினி படம் முகிழ்க்கும் என்றிருந்த நிலையில், `சந்திரமுகி'யைத் தொடர்ந்து உடனே `சிவாஜி' வெளிவர பூரிப்பில் ஒரு சுற்று பெருத்துப் போனார்கள் ரஜினி ரசிகர்கள். ஆனால் `குசேலன்' வெளிவந்தபோது அந்த மகிழ்ச்சி அடியோடு குளோஸ். காரணம், குசேலனில் இடம்பெற்றிருந்த ரஜினி பேசும் சில வசனங்கள். இந்த வசனங்கள் ரஜினியின் இமேஜை உடைத்தெறிய, `குசேலன்' படமும் ஊற்றிக் கொள்ள, தான் பேசிய வசனங்களுக்காக ரசிகர் மன்ற நிர்வாகிகளை நேரில் அழைத்து வருத்தம் தெரிவித்து, அந்தப் பிரச்னைக்கு அப்போதைக்குப் முற்றுப்புள்ளி வைத்தார் சூப்பர் ஸ்டார்.
அந்த சரிவுக்குப் பின், ஷங்கர் இயக்கத்தில், `எந்திரன்' படத்தில் பிஸியானார் ரஜினி. அமெரிக்கா மற்றும் பெரு நாடுகளில் அவர் நடிகை ஐஸ்வர்யாராயுடன் டூயட் பாடிக் கொண்டிருந்த நேரம், `அக்டோபரில் ரஜினி தனது ரசிகர்களைச் சந்திக்கிறார்' என்ற செய்தி தமிழகத்தில் மெதுவாக கட்டவிழ்ந்தது. `அக்டோபரில் ஆலோசனை! 2011-ல் அரியணை!' என்று ரசிகர்கள் போஸ்டர் ஒட்டும் அளவுக்கு அது போனது.
இதற்கிடையே நடந்ததுதான் அந்த இன்னொரு முக்கிய நிகழ்வு. அது லயோலா கல்லூரி நடத்திய ஒரு கருத்துக்கணிப்பு. பல்வேறு அரசியல் தகவல்களை அள்ளித் தெளிந்திருந்த அந்தக் கருத்துக் கணிப்பில் ரஜினி தொடர்பான ஒரு கணிப்பு, அவரது ரசிகர்களின் உயிர்களை உலுக்கி விட்டது என்றே சொல்ல வேண்டும். தமிழ் சினிமாவின் ஈடுஇணையில்லாத சூப்பர் ஸ்டாராக இதுவரை திகழ்ந்து வந்த ரஜினியை, இளைய தளபதி விஜய் தாண்டி விட்டார் என்பதுதான் அந்தக் கணிப்பு. சினிமாத் துறையில் மக்கள் செல்வாக்கில் ரஜினி 16.2 புள்ளிகள் பெற்றிருந்த நிலையில், விஜய் 16.4 புள்ளிகள் பெற்று, சூப்பர் ஸ்டாரைத் தாண்டிவிட்டதாக அந்தக் கருத்துக் கணிப்பில் காட்டப்பட்டிருந்தது, ரஜினி ரசிகர்களை ஆட்டி அசைத்து விட்டது. ``யானை படுத்தாலும்கூட குதிரை உயரத்துக்கு இருக்குமே? எங்கள் சூப்பர் ஸ்டாராவது சினிமாவில் இரண்டாவது இடத்துக்குப் போவதாவது?'' என கொதித்துப் போனார்கள் ரஜினி ரசிகர்கள். இந்தநிலையில் அக்டோபரில் ரஜினி அவரது ரசிகர்களைச் சந்தித்து அளவளாவ இருப்பதற்கும், இந்த விஜய் தொடர்பான கருத்துக்கணிப்புக்கும் இடையே விடுவிக்க முடியாத அளவுக்கு ஒரு முடிச்சு விழுந்திருக்கிறது.
```சூப்பர் ஸ்டார்' என்பது ஓர் ஆளின் பெயர் அல்ல. ஓர் இடத்துக்கான பெயர். நாளை யார் வேண்டுமானாலும் சூப்பர் ஸ்டாராக வரலாம்'' என்று ஒரு மேடையிலேயே பகிரங்கமாகப் பேசியவர்தான் ரஜினி. அவ்வளவு பெரிய பெருந்தன்மைக்குச் சொந்தக்காரராக ரஜினி இருந்தாலும், கண்ணெதிரே அவரது சூப்பர் ஸ்டார் பதவி பறிபோவதை அவரது ரசிகக் கண்மணிகளால் கண்டிப்பாகப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இந்நிலையில் விஜய் தொடர்பாக நடந்த அந்த `கில்லி' விளையாட்டு மற்றும் ரசிகர்களின் `இனி பொறுப்பதில்லை நெஞ்சே' என்பது மாதிரியான போக்குத்தான் சூப்பர் ஸ்டாரை அவரது ரசிகர்களுடன் இன்னும் நெருக்கமாக்கி இருக்கிறது என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள். அதன் ஒரு கட்டம்தான் அக்டோபர் இரண்டாவது வாரத்தில் ரசிகர்களுடன் ரஜினி நடத்தப்போகும் அந்தச் சந்திப்பு.
ரஜினி உண்மையாகவே ரசிகர்களைச் சந்திக்கப் போகிறாரா? அந்த சந்திப்புக்குப் பின் அறிவிக்கப்படப் போவது என்ன? என்ற மில்லியன் டாலர் கேள்விகளுடன் கோடம்பாக்கம் ஸ்ரீ ராகவேந்திரா கல்யாண மண்டபம் வட்டாரங்களில் நாம் வலம் வந்தோம். அகில இந்திய ரஜினி ரசிகர் மன்றத்தலைவர் சத்தியநாராயணாவுக்கு நெருக்கமாக இருக்கும் சிலரிடம் இதுபற்றி பேச்சுக் கொடுத்தோம்.
`` `குசேலன்' நஷ்டத்தை ஈடு செய்ய வேண்டும் என்று தியேட்டர் ஓனர்களும் விநியோகஸ்தர்களும் ரஜினிக்கு எதிராக, கடந்த ஆகஸ்டில் போர்க்கொடி தூக்கியபோது, ரஜினி ரசிகர்கள் கொதித்துப் போனார்கள். தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு எதிராக சென்னையில் பிரமாண்டமான கூட்டம் ஒன்றை நடத்த அவர்கள் ஆயத்தமானார்கள். அந்தக் கூட்டத்தில் விநியோகஸ்தர்களுக்குக் கண்டனம் தெரிவிப்பதோடு, ரஜினி உடனடியாக அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றவும் அவர்கள் தீர்க்கமாக முடிவெடுத்திருந்தனர்.
அது சத்தியநாராயணாவின் காதுக்கு வர, அவருக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி. ரசிகர் மன்ற நிர்வாகிகளை அழைத்து அமைதிப்படுத்திய அவர், `விரைவில் சூப்பர் ஸ்டாரைச் சந்திக்க ஏற்பாடு செய்கிறேன். அப்போது, உங்கள் ஆதங்கத்தை அவரிடம் சொல்லுங்கள்' என்று உறுதியளித்தார். அந்த வாக்குறுதியை நம்பி, அப்போதைக்கு அந்தக் கூட்டம் ரசிகர் மன்றத்தினரால் ஒத்தி வைக்கப்பட்டது. ஆனால், அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவே இல்லை. அது நீரின் மேல் எழுதிய எழுத்தான நிலையில், செப்டம்பர் 4-ம்தேதி, ஷ்ரீராகவேந்திரா கல்யாண மண்டப வாசலில் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ஏராளமான ரசிகர்களும் குவிந்தனர். இதனால், அந்தப் பகுதியே பரபரப்பானது.
அதிர்ந்து போன சத்தியநாராயணா, மீண்டும் சமரசம் செய்ய முயன்றார். ஆனால், இந்த முறை ரசிகர்கள், சத்திய நாராயணாவின் பேச்சை காதில் வாங்கவில்லை. `இப்போதே ரஜினியிடம் பேசவேண்டும்' என்று கோஷம் போட ஆரம்பித்தனர். வேறு வழியில்லாமல் ரஜினியைத் தொடர்பு கொண்ட சத்தி, `அக்டோபர் முதல் வாரத்தில் ரஜினி உங்களைச் சந்திப்பார்' என்று ரசிகர்களிடம் உறுதி அளித்தபிறகுதான் ஒருவழியாக அங்கிருந்து கலைந்து சென்றனர் ரசிகர்கள்.
அதன் பின்பு கடந்த 27-ம் தேதி `எந்திரன்' படத்தின் முதல் ஷெட்யூல் முடித்துவிட்டு, பெரு நாட்டிலிருந்து சென்னை வந்த சூப்பர் ஸ்டார் எப்படியும் தங்களைச் சந்தித்துவிடுவார் என்று ஆவலுடன் காத்திருந்தனர் ரசிகர்கள். ஆனால், எதுவும் நடக்கவில்லை. அதற்குள், கடந்த 4-ம்தேதி, `எந்திரன்' ஷூட்டிங்கிற்காக ரஜினி கோவா பறந்துவிட்டார் என்ற தகவல் வெளியானதும் விரக்தியின் விளிம்புக்கே சென்று விட்டனர் ரசிகர்கள். அதுபற்றி மீண்டும் சத்திய நாராயணாவிடம் பேசினர்.
இனிமேலும் ரசிகர்கள் பொறுக்க மாட்டார்கள் என்ற நிலையில்தான், `அக்டோபர் 12-ம்தேதி ஸ்ரீராகவேந்திரா கல்யாண மண்டப நிர்வாகி பாபா என்பவரின் மகள் திருமணத்துக்காக ரஜினி சென்னை வருகிறார். அப்போது நிச்சயம் உங்களைச் சந்திப்பார்' என்று ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்குத் தகவல் சொல்லப்பட்டது. இந்த இறுதி நம்பிக்கையில்தான் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்'' என்றன அந்த வட்டாரங்கள்.
`இதெல்லாம் சரி. உண்மையில் ரஜினி மனதில் என்னதான் இருக்கிறது?' என்று அந்த விடை தெரியாத கேள்வியை நாம் அவர்களிடம் வைத்தோம்.
``கடந்த 27-ம் தேதி பெரு நாட்டிலிருந்து சென்னை வந்த ரஜினி, ரசிகர் மன்ற நிர்வாகிகள் தன்னைச் சந்திப்பதில் காட்டும் ஆர்வத்தைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்டார். அத்துடன், `குசேலன்' பட விவகாரம் தொடர்பாக பத்திரிகைகளில் தன்னைப்பற்றி வந்த செய்திகளையும் ஒவ்வொன்றாகப் படித்தார். அப்போதெல்லாம் அருகில் இருந்த தனக்கு நெருக்கமானவர்களிடம் இங்குள்ள அரசியல் நிலைமையைக் கேட்டுத் தெரிந்து கொண்டார்.
அத்துடன், `உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருக்கும் தனது ரசிகர்களுக்கு தான் செய்ய வேண்டியது என்ன?' என்று எங்களிடமும், அவரது குடும்பத்தாரிடமும் கேட்டார். அவரது கேள்வியால் நாங்கள் சற்றுத் தடுமாறிப் போனோம். ஏதாவது சொல்லி அதனால் அவர் அப்செட்டாகிவிடக் கூடாது என்பதால் மௌனம் காத்தோம். ஆனால் சூப்பர் ஸ்டாரின் அந்தக் கேள்விக்கு அவரது குடும்பத்தார் சில யோசனைகளைச் சொன்னார்கள். அதோடு `இப்போதைய சூழ்நிலையில், அரசியல் என்ட்ரி என்பது கூடவே கூடாது' என சிலர் சொன்னதையும் ரஜினி கவனமாகக் கேட்டுக் கொண்டார்.
அந்த ஆலோசனைக்குப் பின் சில நாட்கள் தனிமையில் இருந்த அவர் திடீரென அழைப்பு வந்ததும் கோவாவுக்குச் சென்றுவிட்டார். எங்களுடன் நடத்திய அந்த ஆலோசனையினால், தனது ரசிகர் மன்றங்களை இணைத்து சமூக சேவை இயக்கம் ஒன்றைத் தொடங்கும் முடிவில் அவர் இருக்கலாம். அக்டோபர் 12-ம்தேதி, திருமண விழாவுக்கு வரும் அவர், தேர்ந்தெடுத்த சில மன்ற நிர்வாகிகளைச் சந்தித்து இந்த முடிவைச் சொல்லி ஆலோசனை நடத்த வாய்ப்பிருக்கிறது.. பின்னர் பத்திரிகையாளர் சந்திப்பில் அந்த `சமூக சேவை இயக்கம்' பற்றி அவர் அறிவிப்பார் என எதிர்பார்க்கிறோம்.
ரஜினியின் இந்த அறிவிப்பு, ரசிகர்களின் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக இருக்கும். அதோடு அடிக்கடி தான் சொல்லும், `வாழ வைத்த தெய்வங்களான தமிழக மக்களுக்கு' ஏதாவது நல்லது செய்வதாகவும் இருக்கும். கடந்த 12 ஆண்டுகளாக ரசிகர்களுக்கும், தனக்கும் இடையே இடைவெளி விழுந்து விட்டதை உணர்ந்துள்ள ரஜினி, இந்தச் சந்திப்பின் மூலம் புதிதாக ஒரு பாலம் போட விரும்புகிறார்'' என்று நீண்ட விளக்கத்தைச் சொல்லி முடித்தனர் அவர்கள்.
இதற்கிடையே, சூப்பர் ஸ்டாரை நடிகர் விஜய் தாண்டிவிட்டார் என்ற கருத்துக் கணிப்பு ரஜினி ரசிகர்களை உள்ளூர ரணகளப்படுத்தியிருக்கிறது. இதுபற்றி, நம்மிடம் பேசிய `ஒன்லிரஜினி டாட் காம்' என்ற வெப்சைட் நடத்தி வரும் சுந்தர், ``உடுமலையில் `குசேலன்' படப்பிடிப்பில் கலந்து கொண்டு சென்னை திரும்பும் வழியில் கோவை விமான நிலையத்துக்கு ரஜினி வருகிறார் என்ற தகவல் கசிந்ததும் சில மணிநேரங்களில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் விமானநிலையம் முன் குவிந்து விட்டார்கள். அப்போது, அவர்களின் நெரிசலில் சிக்கிய ரஜினியை விமான நிலையத்துக்குள் அழைத்துச் செல்ல அவரது உதவியாளர்கள் திணறிவிட்டார்கள்.
கடந்த 1989-ல் தனது நண்பருக்காக குளிர்பான அறிமுக விழாவில் கலந்து கொள்ள ரஜினி திருச்சி சென்ற போது, அவருக்கு கிடைத்த வரவேற்பை யாரும் மறந்துவிட முடியாது. இத்தனைக்கும் அந்த விழாவுக்கு முதல்நாள் இரவுதான் விழாவில் ரஜினி கலந்து கொள்கிறார் என்று அறிவித்தார்கள். ராமராஜன்(!) தொடங்கி கமல் வரை ரசிகர் மன்ற மாநாடுகளை நடத்தி விட்டார்கள். ஆனால், இதுவரை ரஜினி தனது ரசிகர்களை சென்னையைத் தவிர்த்து வேறு இடங்களில் சந்தித்ததே இல்லை. அப்படி ரஜினி மட்டும் ரசிகர்களைச் சந்திக்க ஒரு விழா நடத்தினால், அது தமிழகம் இதுவரை பார்த்திராத மிகப்பெரிய திருவிழாவாக இருக்கும். இதில் ரஜினி செல்வாக்குக் குறைந்து விட்டது என்று யாரோ சொல்கிறார்கள் என்பதையெல்லாம் எந்த ரசிகரும் நம்பத் தயாராகவே இல்லை'' என்று முடித்துக் கொண்டார் சுந்தர்.
இவர், இப்படி கூறினாலும் விஜய் தொடர்பான கருத்துக் கணிப்பு ரஜினிக்கு நெருக்கமான வட்டாரங்களில் உள்ளவர்களின் நெஞ்சில் ஒரு முள்ளை ஊன்றிவிட்டது என்கிறார்கள் சிலர். ரசிகர் மன்றங்களை இணைத்து சமூக சேவை இயக்கம் தொடங்கும் முடிவுக்கு ரஜினி வந்துள்ளதற்கு அந்தக் கருத்துக் கணிப்பும் ஒரு காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் அவர்கள்.
இந்தமுறையும் ரஜினி அவரது ரசிகர்களைச் சந்திக்காமல் விட்டுவிட்டால் அவரது வீடு அல்லது கல்யாண மண்டபம் முன்பு மிகப்பெரிய தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தப் போவதாக ரசிகர்கள் முடிவெடுத்திருக்கிறாார்கள். ``1996-ல் ரஜினிக்கு அரசியலில் மிகப் பெரிய கதவு திறந்திருந்தது. அதை அவர் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இந் நிலையில், 2011-ல் கிடைக்கும் வாய்ப்பையும் அவர் நழுவவிட்டால் திரும்பவும் அந்தக் கதவு எத்தனை முறை தட்டினாலும் திறக்காது'' என்று ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் நம்மிடம் ஆரூடம் சொன்னார்.
``கட்சியும் வேண்டாம்; ஒரு கொடியும் வேண்டாம்'' என்று `ராஜாதி ராஜா' படத்தில் ரஜினி பாடுவார். இந்தநிலையில் இயக்கம் என்ற பெயரில் இப்போதைக்கு ரஜினி கொஞ்சம் இறங்கி வந்தால் கூட ரசிகர்களுக்கு அது ஓர் இனிய அதிர்ச்சியாகவே இருக்கும். `இயக்கம் தொடங்கட்டும். இறங்கிவரட்டும்' என்று காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். என்ன செய்யப் போகிறார், சூப்பர் ஸ்டார்?
நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்
என்னால் 25000 கோடி இழப்பா?
ஹாட் கேக்` போல விற்பனையாகியிருக்க வேண்டிய ஓர் அலைவரிசைத் தொகுப்பை மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சர் ராசா ஏதோ `அவிச்ச கடலை' ரேஞ்சுக்கு விற்றுவிட்டதாக ஒரு குற்றச்சாட்டு அலைபாய்கிறது. பொது ஏலம் மூலம் நடந்திருக்க வேண்டிய இந்த விற்பனையை முன்னுரிமை அடிப்படையில் அமைச்சர் ராசா நடத்தியதால் மத்திய அரசுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பு ரூ. 25,000 கோடியைத் தாண்டும்' என்கிறார்கள். நாட்டில் இப்போது அனல்பறப்பது இந்தப் பிரச்னைதான். இது தொடர்பாக நம் நெஞ்சில் நெருஞ்சி முள்ளாகத் தைத்த சில கேள்விகளுடன் அமைச்சர் ராசாவைச் சந்தித்து அவர்முன் நாம் அந்தக் கேள்விகளை வைத்தோம்.
அலைவரிசைத் தொகுப்பை பகிரங்க ஏலம் விடாமல் முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் கொடுத்திருக்கிறீர்களே? ஏலம் விட்டிருந்தால் பெரும் தொகை கிடைத்திருக்கும் என்கிறார்களே?
``ஆம்! இப்படி ஒரு பரபரப்பான கேள்வி எழுந்திருப்பதைப் பார்த்து எனக்குச் சிரிப்புத்தான் வருகிறது. ஏதோ `ஓர் அரசியலுக்காக` இப்படியொரு குற்றச்சாட்டைக் கிளப்புகிறார்கள். உண்மையை முழுவதும் அறிந்து கொள்ளாமல், தெரிந்து கொள்ளாமல் அவர்கள் இருட்டில் எதையோ தேடுகிறார்கள். கற்பனையாகக் குரல் எழுப்புகிறார்கள். அமெரிக்காவில் 90 ஆயிரம் கோடிக்கு ஏலம் விடப்பட்டிருப்பது ஜி-3 அலைவரிசை. இந்தியாவிலும் ஜி-3 அலைவரிசை உண்டு. அதை ஏலம் விடத்தான் போகிறோம்.. அதில் மாற்றமில்லை.''
அப்படியானால் இப்போது தனியாருக்கு கமுக்கமாக (!) கொடுக்கப்பட்டிருக்கும் அலை வரிசை எது?
``அது இரண்டாம் தலைமுறைக்கான ஜி-2 அலைவரிசை. இதையும் ஏலம் விடுவதாக இருந்தது. ஆனால் அது நடைமுறைக்கு ஒத்துவரவில்லை. அதை ஏற்கெனவே ஏலம் எடுத்தவர்கள் சரியாகச் செயல்படுத்த முடியவில்லை. அதனால் மத்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருந்தது. அதன்பின்தான் அமைச்சரவை கூடிப்பேசி `வருவாயில் பங்கு' என்ற அடிப்படையில் தனியார் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு முன்னுரிமை தந்து விற்க முடிவு செய்தது. இங்கிருக்கும் பலருக்கு ஜி-2-க்கும் ஜி-3-க்கும் வித்தியாசம் தெரியவில்லை என்பதுதான் வேதனை.''
இந்த அலைவரிசையைக் கூட மிகக்குறைந்த விலைக்கு (ரூ.1650 கோடிக்கு) விற்றிருப்பதாகச் சொல்கிறார்களே?
``எதையும் முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் பேசு கிறார்கள். இது அலைவரிசை விற்பனைக்கான தொகை அல்ல. ஒரு நிறுவனம், சேவை வழங்குவதற்கு வசூலிக்கப்படும் உரிமைக் கட்டணம். அலைவரிசைக் கட்டணம் எது? உரிமைக் கட்டணம் எது? என்ற விஷயமே தெரியாமல் சிலர் என்மீது குற்றம் சாட்டுவது வேடிக்கையாகத்தான் இருக்கிறது.''
இது தொடர்பாக மத்திய நிதித்துறை உங்கள் மீது குற்றம் சுமத்தி கடிதம் எழுதியிருப்பதாகச் சொல்கிறார்களே?
``அப்படியொரு கடிதம் எங்களுக்கு வரவேயில்லை. பொதுவாகவே ஒரு துறை மீது பத்திரிகைகளில் ஏதாவது ஒரு சர்ச்சை எழுந்தால் அது பற்றி நிதித்துறை விளக்கம் கேட்கும். அப்படி எங்களிடமும் கேட்டார்கள். அதற்கு நாங்கள் பதிலும் அளித்து விட்டோம். இதை வைத்துக் கொண்டு நிதித்துறை எங்களைக் குற்றம்சாட்டியிருப்பதாகக் கூறுவது சுத்த அபத்தம்.''
இதில் பிரதமர் தலையிட்டு விசாரிக்க வேண்டும் என்கிறார்களே? உண்மை இல்லாமலா அப்படிச் சொல்வார்கள்?
``அப்படியென்றால் பிரதமர் தன்னைத்தானே விசாரித்துக் கொள்ள வேண்டியதுதான். ஏனென்றால் இது தொடர்பாக நான் ஆறு முறைக்கும் குறையாமல் பிரதமருடன் பேசி ஆலோசனை பெற்றுத்தான் இதை நடைமுறைப்படுத்தியிருக்கிறேன். அதேபோல நிதித்துறை அமைச்சரிடமும் ஆலோசித்திருக்கிறேன்..''
அலைவரிசையைப் பெற்றிருக்கும் நிறுவனங்களின் வருமானத்தில் அரசு பங்கு பெறுவது என்பது சாத்தியமானதா? அந்த நிறுவனங்கள் வருவாயைக் குறைத்துக் காட்டி அரசை ஏமாற்ற வாய்ப்புள்ளதே?
``இது வேடிக்கையான குற்றச்சாட்டு. நாம் இன்னும் எந்தக் காலத்தில் இருக்கிறோம் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளாமலேயே வதந்தியைக் கிளப்புகிறார்கள். நம்மிடம் `டெலிகாம் இன்ஜினீயரிங் சென்டர்' என்ற புலனாய்வு அமைப்பு இருக்கிறது. ஒவ்வொரு தொலைபேசி நிறுவனமும் தினமும் எத்தனை அழைப்புகளைக் கையாள்கிறது என்பதை அந்த அமைப்பு துல்லியமாகக் கண்காணித்து வருகிறது. போதாக்குறைக்கு அந்த நிறுவனங்களைக் கண்காணிக்க டிராய் அமைப்பும் நம்மிடம் இருக்கிறது. அப்படியிருக்க, அந்த நிறுவனங்கள் எந்த விதத்திலும் அரசை ஏமாற்ற முடியாது.''
இப்போது செயல்பாட்டில் இருக்கும் பெரிய நிறுவனங்களுக்கு அலைவரிசைத் தொகுப்பை விற்காமல், புதியவர்களுக்குக் கொடுத்ததில் உள்நோக்கம் இருக்கிறது என்று ஒரு பத்திரிகை கூறுகிறதே?
``உள்நோக்கமும் கிடையாது. வெளிநோக்கமும் கிடையாது. இது முற்றிலும் தவறானது. இருக்கின்ற நிறுவனங்களுக்கு மட்டும்தான் அலைவரிசைத் தொகுப்பைத் தர வேண்டும் என்று எந்த ஆணையும் கிடையாது. ஒரு தனியார் கம்பெனியின் சேவைதாரர்களின் எண்ணிக்கை கூடக்கூட அதற்கேற்ப இரண்டு மெகாஹெட்ஸ் வீதம் அலைவரிசையைக் கொடுக்க டிராய் நிறுவனம் பரிந்துரை செய்திருக்கிறது. அதன்படி இப்போதும் வழங்கி வருகிறோம். நம்மிடம் இதுவரை பயன்படுத்தப்படாமலேயே இருக்கிற அலை வரிசையைத்தான் புதியவர்களிடம் கொடுத்திருக்கிறோம். பழைய நிறுவனங்களே இதை உபயோகிக்கும் என்று நாம் நினைத்தால் பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு நாம் காத்திருக்க வேண்டியதுதான். அதுகூட தெரியாமல் அந்த நாளேடு அப்படி கூறுமானால் அதில் உள்நோக்கம் இருப்பதாகத்தான் எல்லோரும் நினைப்பார்கள்.''
தயாநிதிமாறன் தொலைதொடர்புத்துறை அமைச்சராக இருந்தவரை 2ஜி, 3ஜி அலைவரிசை எதுவும் இல்லை என்று சொன்னார்களே? உங்களுக்கு மட்டும் இந்த அலைவரிசைகள் எப்படி வந்தன? இவ்வளவு காலமும் இல்லை என்று சொன்ன விலைமதிக்க முடியாத சொத்தினை சேவைக்குக் கொண்டு வராமல் இருந்தது யார் தவறு?
``நல்ல கேள்வி. இந்த விஷயத்தில் பிரதமர் ஒத்துழைப்போடு நான் ஒரு போலீஸ் அதிகாரியைப் போலவே செயல்பட்டேன். இந்தத் துறையில் ஏகபோகம் செய்யும் சில தனியார் நிறுவனங்கள் இப்படிப்பட்ட தோற்றத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சி செய்து வெற்றியும் கண்டார்கள். இதை விசாரிப்பதற்கு `வேறு யாரும்' முன் வரவில்லை.
நான் பொறுப்பேற்ற பிறகு வெளிநாடு சென்றேன். அங்கு செல்போன் சேவைக்காக குறைந்தபட்சம் 60 மெகாஹெட்ஸ் பயன்படுத்தப்படுவதைத் தெரிந்து கொண்டேன். இந்தியாவில் 35 மொஹெட்ஸ்தான் பயன்பாட்டில் இருந்தது. தொடக்கத்தில் என்னிடத்திலும், அலைவரிசை கையிருப்பு இல்லை என்றுதான் சொன்னர்கள். கண்டுபிடித்தவுடன் நானே தொழில் நுட்பப் புலனாய்வு மற்றும் ஒயர்லெஸ் ஆலோசகர் ஆகியோரோடு விசாரணை மேற்கொண்டேன். முடிவில் நம்மிடம் கையிருப்பு நிறையவே இருப்பதைக் கண்டுபிடித்தேன்.
பிரதமரிடம் முதன்முதலாக இதைச் சொன்னபோது அதிர்ந்து ஆச்சரியப்பட்டார். என் முதுகில் தட்டிப் பாராட்டி `உடனடியாக அதைச் செய்யுங்கள்' என்றார். நிதித்துறையின் ஆலோசனையின் பேரில் புதிய நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டு, இப்போது அவற்றுக்கு அலைவரிசை வழங்கப்பட்டு இருக்கிறது.
`ஜி-3 அலைவரிசையைப் பொறுத்தவரை வளர்ந்த நாடுகள் ஏற்கெனவே இந்தச் சேவையைத் தொடங்கி விட்ட பிறகும் `என்ன காரணத்தினாலோ' இந்த சேவையைத் தொடங்க, போதுமான முயற்சிகள் எனக்கு முன்பு வரை எடுக்கப்படவில்லை. இந்த முயற்சியையும் நான்தான் எடுத்து இந்த ஆண்டுக்குள் சேவையைத் தொடங்க இருக்கிறேன். அதிலும் பி.எஸ்.என்.எல்.லுக்கு முன்னுரிமை கொடுத்து அலைவரிசை ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டது. எனவே உங்கள் கேள்வியில் உள்ள நியாயத்தை என்னால் உணர முடிகிறது. நான் கால தாமதம் செய்வேனே தவிர, மற்றவர்களைப் போல `தயாநிதிமாறானால் பலஆயிரம் கோடி இழப்பு' என்று சொல்லி, பெருமைத் தேடிக் கொள்ள மாட்டேன்.''
சில தனியார் நிறுவனங்கள் ஏகபோகமாக அனுபவித்து வந்த இந்தத்துறையின் வியாபார நுணுக்கத்தையும் அதிக லாபத்தையும் மக்கள் நலன் கருதி நீங்கள் பரவலாக்க முயற்சி செய்தீர்கள் என்றும் அதனால்தான் உங்களுக்கு இத்தனை குடைச்சல்கள் என்றும் பேசப் படுகிறதே?
``இந்த முயற்சியை நான் எடுத்தபோது எனக்கு எப்படிப்பட்ட எதிர்ப்புகள் வந்தன என்பதைப் பலரும் அறிவார்கள். ஒவ்வொருமுறையும் என்மீது ஊழல் புகார்கள் வந்து கொண்டே இருந்ததும் பின்பு அது பொய்யாகிப் போனதும் தெரிந்ததே. ஆனால் பிரதமரின் முழு நம்பிக்கையையும் கலைஞர் அவர்களின் முழு ஆதரவையும் ஒவ்வொரு கட்டத்திலும் நான் பெற்ற காரணத்தால் இந்தத் துறையில் ஒரு புதிய வரலாற்றை என்னால் படைக்க முடிந்திருக்கிறது. ஒரு நல்லதைச் செய்கிறபோது எதிர்ப்பு வருவதும், அந்த எதிர்ப்பையே எரிபொருளாக்கிக் கொண்டு வேகமாக இயங்குவதும் `கலைஞர் பேச்சைக் கேட்கின்ற' தம்பிகளுக்குச் சாத்தியமான ஒன்று என்பதற்கு இது உதாரணம்.''
நன்றி : குமுதம் ரிப்போர்ட்டர்
சியோல் ஆற்றை 11 நிமிடங்களில் கயிற்றில் கடந்து சீனர் சாதனை
தென் கொரியாவின் சியோல் நகரிலுள்ள மூன்றே கால் மைல் நீளமான ஹான் ஆற்றை,
அதற்கு மேலாக குறுக்கே கட்டப்பட்டிருந்த கயிற்றில் 11 நிமிடங்களில் கடந்த சீனாவைச் சேர்ந்த யேக்புஜியாங் மெய்மிதிலி சாதனை படைத்துள்ளார்.
சியோலின் இரண்டாவது சர்வதேச கயிற்றில் நடத்தல் வெற்றிக் கிண்ணப் போட்டியின் போதே அவர் இந்த சாதனையை நிறைவேற்றியுள்ளார்.
இந்த மூன்று நாள் போட்டியில் கலந்து கொண்ட ஏனைய 26 பேருடன் போட்டியிட்டு வெற்றி பெற்று வெற்றிக் கிண்ணத்துடன் 20,000 டொலர் பெறுமதியான பணப் பரிசையும் யேக்புஜியாங் சுவீகரித்துக் கொண்டார்.
இப்போட்டியில் கலந்து கொண்ட கொலம்பியாவைச் சேர்ந்த அலன் மார்ட்டினஸ் 11 நிமிடங்கள் 23 செக்கன்களில் மேற்படி ஆற்றைக் கடந்து இரண்டாமிடத்தை பெற்றுள்ளார்.
கடந்த வருட வெற்றியாளரான சீனாவைச் சேர்ந்த அபுதுஸாதயர் வுஜியாபுதுல்லா, 11 நிமிடங்கள் 28 செக்கன்களில் இந்த ஆற்றைக் கடந்து போட்டியில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
20 வயதான யேக்புஜியாங், தனது குடும்ப பாரம்பரிய கலாசாரத்துக்கு அமைய தனது 7 ஆவது வயதிலேயே கயிற்றில் நடக்கும் பயிற்சியைப் பெற்றுள்ளார். இந்த வெற்றி தொடர்பில் மெய்மிதிலி விபரிக்கையில், ""கயிற்றில் நடந்தபோது நான் மிகவும் பரவசமடைந்தேன்'' என்று தெரிவித்தார். மேற்படி 1.2 அங்குல தடிப்புடைய கயிறானது 69 அடி உயரமுடைய கோபுரங்களில் கட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பூர்ணம்விஸ்வநாதன் உடல் தகனம்; நடிகர், நடிகைகள் அஞ்சலி
மரணம் அடைந்த நடிகர் பூர்ணம் விஸ்வநாதன் உடல் தகனம் இன்று நடந்தது. பழம்பெரும் நடிகர் பூர்ணம் விஸ்வநாதன் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 87.
உடல் நலக்குறைவு கார ணமாக சென்னையில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மாலை சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. கோட்டூர்புரத்தில் உள்ள அவரது மகன் வீட்டில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
நடிகர் சங்கம் சார்பில் பொதுச்செயலாளர் ராதாரவி பொருளாளர் காளை ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
நடிகர்கள் ராஜேஷ்,ஒய்.ஜி.மகேந்திரன்,எஸ்.வி.சேகர், காத்தாடிராமமூர்த்தி,டைரக் டர் பாலச்சந்தர். மற்றும் பழைய நடிகைகள் பலர் அஞ்சலி செலுத்தினர். பூர்ணம் விஸ்வநாதன் வறுமையின் நிறம் சிவப்பு, தில்லுமுல்லு, வருஷம்16, மகாநதி உள்பட 80 படங் களில் நடித்துள்ளார்.
சினிமாவுக்கு வரும்முன் அகில இந்திய வானொலியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார். இந்தியா சுதந்திரம் அடைந்த செய் தியை வானொலியில் அறி வித்த பெருமை இவருக்கு உண்டு. அகில இந்திய வானொலியில் தெற்கு ஆசிய ஒலிபரப்பிலும் முதல் அறிவிப்பாளராகபணி யாற்றியுள்ளார்.
மரணம் அடைந்த பூர்ணம்விஸ்வநாதனுக்கு சுசிலா என்ற மனைவியும் சித்தார்த் என்ற மகனும் உமா, பத்மினி என்ற 2 மகள் களும் உள்ளனர்.
பூர்ணம்விஸ்வநாதன் உடல் இன்று பகல் வீட்டில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு மயிலாப்பூரில் உள்ள மின்சார மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
தே.மு.தி.க. தலைவர் விஜய காந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் சிறந்த குணசித்திர நடிகர் பூர்ணம்விஸ்வநாதன் மறைந்த செய்தி கேட்டு வருந்துகிறேன். அனைத்து பெரிய நடிகர்களுடன் இணைந்து நடித்து புகழ் பெற்று விளங்கினார். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கும், திரை உலகினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப் பிட்டு உள்ளார்.
பசுமைப் புரட்சி
வெப்பமயமாதலை தடுப்பதற்கான முயற்சியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, மத்திய பிரதேச மாநிலம் போபாலில், வெப்பமயமாதலை எதிர்க்கும் வகையில், ஆடை அலங்கார காட்சி நடைபெற்றது.
இதில் உலக அழகி போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொள்ள இருக்கும்
சிம்ரன் கவுர் (வலது) மற்றும் மிஸ் டூரிஸம் வேர்ல்டு பிரியங்கா ஷா ஆகியோர் கலந்து கொண்டு பசுமைப் புரட்சியை வலியுறுத்தும் வகையிலான நவீன ஆடைகளுடன் வலம் வந்தனர்.
விண்வெளி வாகனம்
அமெரிக்காவின் ஹ¨ஸ்டன் நகரில் உள்ள ஜான்சன் விண்வெளி மையத்தில்,
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின்
தலைமை பொறியாளர் லூசியா ஜங்கின், வாகனத்தை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இந்த வாகனம் சந்திரனுக்கு அனுப்பப்பட உள்ளது.
நீருக்குள் பெண் மீன்
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் பேஷன் மற்றும் அழகுக்கலை துறைகளின்
விளம்பர நிகழ்ச்சிகள் இந்த மாதம் முழுவதும் நடக்கின்றன.
அதன் ஒரு பகுதியாக காஸ்மோபொலிடன் இதழுக்காக நீருக்கடியில் மாடல்களை புகைப்படம் எடுக்கப்பட்டது.
பிரம்மாண்ட கண்ணாடித் தொட்டியில் நிரப்பப்பட்ட நீரில் ஆஸ்திரேலிய மாடல் நிக்கி பிலிப்ஸ்,
மீன் போல நளினமாக நீந்தியபடி போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார்
அந்தரத்தில் கேக்
சூடான வாயுக்கள் நிரம்பிய பலூன்கள் பறப்பது ஜெர்மனியின் மேற்கு பகுதியில் உள்ள வார்ஸ்டெய்ன் நகரில்!
அங்கு ஆண்டுதோறும் பலூன்கள் பறக்கவிடப்படும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதில் பயணம் செய்பவர்கள் ஆங்காங்கே அந்தரத்தில் ஹாய் சொல்லிக் கொள்வது உண¢டு.
இந்த ஆண்டு வழக்கமான பலூன் வடிவத்தில் மட்டுமல்லாமல், வித்தியாசமான பலூன்களும் இடம் பெற்றன.
அதில் ஒன்றுதான் படத்தில் இருக்கும் கேக் வடிவ பலூன். அதுவும் பிறந்த நாள் கொண்டாடுவோர் வெட்டி, ஊட்டிவிடும் கேக்.
அதன் வடிவத்தில் பிரம்மாண்டமான கேக் இருந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
அசைவ உணவை தவிர்ப்பது ஆபத்து அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் தகவல்.
சைவ உணவே சிறந்தது, அசைவ உணவை தவிர்ப்பது நல்லது'' என்ற கருத்து பரவலாக உள்ளது.
ஆனால் அவுஸ்திரேலியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வு முடிவில் மாறுபட்ட கருத்தை தெரிவித்து இருக்கிறார்கள்.
வெறும் சைவ உணவை மட்டும் சாப்பிடுபவர்களுக்கு சில வைட்டமின் குறைபாடு ஏற்படுகிறது.
மூளை சுருங்கும் பாதிப்பும் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று அவர்கள் கூறியுள்ளனர். `பி12' வைட்டமின் சத்து பால், இறைச்சி, மீன், ஈரல் போன்றவற்றில் அதிகமாக உள்ளது.
இவற்றை சாப்பிடாதவர்களுக்கு `பி12' குறைபாடு ஏற்பட்டு மூளை திறன், உடல் திறன், ஞாபக சக்தி குறைபாடு போன்றவை ஏற்படும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.
குடிப்பழக்கம் உள்ளவர்களும், இந்த பாதிப்புகள் வரும் வாய்ப்பு அதிகம். அசைவ உணவும் அவசியம் என்பதற்காக கொழுப்பு சத்துஉணவை அதிகம் சாப்பிட வேண்டும் என்பதில்லை எனவும் தெரிவித்துள்ளனர்
ரஷியாவில் விமானம் விழுந்து 88 பேர் பலி
ரஷியாவின் ஏரோபிளாட் நிறுவனத்துக்கு சொந்தமான போளிங் 737 விமானம் மாஸ்கோ நகரின் ஷெரி மெட்டிவோ விமான நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது.
அந்த விமானத்தில் 83 பயணிகளும் 5 சிப்பந்திகளும் இருந்தனர்.விமானம் ரஷியாவின் பெர்ம் நகரின் புறநகர் பகுதிக்கு மேல் பறந்து கொண்டிருந்தது. அது மலைப்பகுதி.
அப்போது விமானத்தில் திடீர் என்று கோளாறு ஏற்பட்டது. 1800 மீட்டர் உயரத்தில் விமானத்தை விமானி கீழே இறக்கினார். ஆனால்திடீர் என்று விமானம் மலையில் மோதி நொறுங்கி விழுந்தது. விழுந்த வேகத்தில் விமானம் தீ பிடித்து எரிந்தது.இதில் விமானத்தில் இருந்த பயணிகள், ஊழியர்கள் உள்பட 88 பேரும் பலியாகி விட்டனர். பலி யானவர்களில் ஒரு குழந்தையும் அடங்கும் விபத்து நடந்த பகுதிக்கு மீட்பு படையினர் விரைந்துள்ளனர்
கோட்டைக்கு இசை வடிவம்
பிரான்சில் உள்ள மிகப் பிரபலமான சாம்போர்டு கேசில் கோட்டை இது.
விமானத்தில் இருந்து எடுக்கப்பட்ட படம்.
16ம் நூற்றாண்டில் பிரான்கோசிஸ் முதலாம் மன்னரால் கட்டப்பட்டது.
156 மீட்டர் நீளம், 117 மீட்டர் அகலம், 440 அறைகள் கொண்டது.
அதைச் சுற்றி விசாலமான தோட்டங்கள்,
அடர்ந்த வனப் பகுதிகள் அதிகம்.
தோட்டங்களில் இங்கிலாந்தின் பிரபலமான இசைக் குழுவான ரோலிங் ஸ்டோன்சின் சின்னத்தை பிரான்ஸ் கலைஞர்கள் நிலிஸ் காடஜின், கிளைர் டோடிங்னன் வடிவமைத்து உள்ளனர்.
பிரான்ஸ், இங்கிலாந்து கலாசார விழாவை முன்னிட்டு இந்த ஏற்பாடு
காதோடுதான்... பாடும்
ஜப்பானைச் சேர்ந்த சோனி நிறுவனம் தயாரித்து அறிமுகம் செய்துள்ள வயர்லெஸ் கருவியை இந்த மாடல் காதணி போல அணிந்துள்ளார்.
கருவியின் பெயர் சோனி &டிஆர்&பிடி 160ஏஎஸ்.
இது ப்ளூடூத் தொழில்நுட்பத்தில் செயல்பட்டு,
அணிந்திருப்பவரின் செல்போன், மியூசிக் பிளேரில் இருந்து பாடல்களை டிஜிட்டல் தரத்தில் கேட்க உதவும்.
காதோடுதான் நான் பாடுவேன் என்று காதுக்குள் இசை மழை பொழியப் போகும் இக்கருவியை நவம்பரில் சோனி விற்பனைக்கு கொண்டு வருகிறது.
478 காரட் வைரம்
தென் ஆப்பிரிக்காவை போலவே இங்கு ஏராள மான தங்கம், வைர சுரங் கங்கள் உள்ளன.
இங்குள்ள வெட்செங் பகுதியில் உள்ள சுரங்கத்தில் அபூர்வ வைரக் கல் வெட்டி எடுத்திருக் கிறார்கள்.
உலகிலேயே பெரிய வைர கற்களில் இதுவும் ஒன்று.
இந்த வைரக்கல் 478 காரட்.
இன்னும் இந்த வைரக்கல் பட்டை தீட்டப்படவில்லை.
இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு கொண்டு செல்லப்பட்ட 105 காரட் கோகினூர் வைரத்தை விட இது மிகவும் பெரியது.
ஆப்பரினாஸ் 3106 காரட் வைரக்கல் கடந்த 1905 வெட்டி எடுக்கப்பட்டது.
மிகப் பெரிய வைரக்கற்களில் அது முதல் இடத்தை பிடித்தது.
இப்போது லிசோ தோவில் வெட்டி எடுக்கப் பட்ட வைக்கல்
இந்த வரிசையில் 20-வது இடத்தை பிடித்துள்ளது
அலை அலையாய் மின்சாரம்
அலையோடு விளையாடு என்பதோடு மட்டுமில்லாமல் அலையில்
இருந்து மின்சாரம் எடுக்கவும் தொடங்கி விட்டது போர்ச்சுக்கல்.
பெருகி வரும் மின் தேவையை சமாளிக்க, வார்ஜிம் நகரை ஒட்டிய அட்லான்டிக் கடல்
பகுதியில் பெரிய ட்யூப்களை மிதக்க விட்டுள்ளது.
அதில் மோதும் அலைகளின் வேகத்தால் வெளியாகும் நீர்மின்சாரத்தை கரையில் ஜெனரேட்டர்களைப் பொருத்தி சேமிக்கின்றனர்.
போர்ச்சுகல் தொடங்கியுள்ள முதல் அலை மின்சார உற்பத்தி மையம் இது.
சில்லுனு ஒரு ‘பார்’
ஆமி ரனியூ (இடது) மற்றும் ஷெல்லி பிரெஸ்டனும் மது கோப்பையுடன் இருப்பது ஒரு புது உலகத்தில்.
ஆம் அதுதான் ஐஸ் உலகம்.
அமெரிக்காவின் புளோரிடா மாநிலம் ஆர்லாண்டோவில் உள்ள ஒரு பார் இது.
இதன் சிறப்பம்சம் என்னவென்றால், மைனஸ் 27 வெப்பநிலையில் அமைந்துள்ளதுதான்.
இதில் வாடிக்கையாளர்கள் 45 நிமிடங்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இதுபோன்ற வசதியுள்ள முதல் பார் இதுதான்.
கவலைவேண்டாம் வாசகர்களே! உடல் எடையைக் குறைக்க இதோ வழிகள
வயது 40 ஐத் தாண்டிவிட்டால் பலருக்கு வரும் பெரும் பிரச்னை உடல் எடை கூடுவதுதான்.
இன்றைய காலத்தில் இந்த பிரச்னை 30 வயதிலேயே பலருக்கும் வருகின்றது. உடல் உழைப்பின்றி எந்நேரமும் நாற்காலியிலேயே கம்ப்யூட்டர் முன் அமர்ந்து பணியாற்றுவது இந்த பிரச்னையில் கொண்டு விடுகிறது.
இவர்களுக்கு சில விஷயங்களை தெளிவு படுத்தி கற்றுத் தருவதற்கென்றே ஒரு இணைய தளம் இயங்குகிறது.
உடல் எடையைக் குறைக்க இந்த இணையதளம் எடுத்துச் சொல்லும் வழி புதியதாய் இருக்கிறது.
இங்கு உடற்பயிற்சி செய், உணவைக் குறை, தண்ணீர் மட்டுமே குடி, பழச்சாற்றில் மட்டுமே உயிர் வாழக் கற்றுக் கொள் என்றெல்லாம் வழி சொல்வதில்லை. இந்த தளத்தின் பிரிவுகள் சற்று வித்தியாசமானவை.
11.Diet and Weight Loss Tips. முதலாவதாக இந்த பிரிவு உள்ளது. உணவுப் பழக்கம் மற்றும் எடை குறைப்பதற்கான ஆலோசனைக்கானது இந்த பிரிவு. இதில் இந்த பொருள் சம்பந்தப்பட்ட பல கட்டுரைகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. இவற்றைப் படிப்பதன் மூலம் பல விஷயங்களை அறிந்து கொள்ள முடிகிறது.
2. Tutorial: இந்த பிரிவு உங்கள் உணவுக் கட்டுப்பாட் டிற்கு ஒரு முடிவைத் தெரிவித்து அதற்குப் பதிலாக பிராக்டிகலாக என்ன செய்திட வேண்டும் என வழி சொல்கிறது.
3. . Calories Burned Calculator இங்கு உங்களுடைய பாடி மாஸ் இன் டெக்ஸ் ஆMஐ (ஆணிஞீதூ Mச்ண்ண் ஐணஞீஞுது) என்பதற்கான விளக்கமும் அதனை எப்படி கணக்கிடுவது என்பதற்கான கால்குலேட்டரும் தரப்படுகிறது. ஒவ்வொரு செயலுக்கும் என்ன கலோரி செலவாகிறது என்பதற்கான ஐந்து வகை கால்குலேட்டர்கள் இதில் தரப்பட்டுள்ளன.
4. Food Calories & Nutrition Calculator : இந்த கால்குலேட்டரில் முதலில் ஹெல்ப் பட்டனை அழுத்தி தொடங்கலாம். ஏனென்றால் அப்போதுதான் நீங்கள் என்ன செய்திட வேண்டும் எனத் தெரிந்து கொள்ளலாம். உணவு வகைகளை இதில் இன்புட் செய்தால் உடன் அதன் கலோரி கணக்கில் விடை கிடைக்கிறது.
5. Weight Loss Calculator இந்த பிரிவில் மூன்று கால்குலேட்டர்கள் உள்ளன. எவ்வளவு காலத்தில் நீங்கள் விரும்பும் வகையில் எடையைக் குறைக்கலாம் என்பதற்கு விடை தருகிறது. இன்னொன்று ஒவ்வொரு நாளும் உடல் எடையைக் குறைக்க எவ்வளவு கலோரி செலவழிய வேண்டும் எனக் கூறுகிறது.
6. Weights & Measures Converte: இது ஒரு கன்வெர்ஷன் கால்குலேட்டர் என்று கூறலாம். உங்கள் எடை, உயரம், உணவு அளவுகளை நீங்கள் பழைய முறையில் கணக்கு வைத்திருந்தால் இன்றைய மெட்ரிக் அளவில் எவ்வளவு என மாற்றிக் கூறும்.
7. Weight Loss Forums : : இது ஒரு அமைப்பு. இங்கு உடல் எடை குறைய விருப்பம் கொண்டு அதற்கென உழைப்பவர்களைச் சந்திக்கலாம். உங்களுக்கு தேவையான ஆலோசனைகளைப் பெறலாம். உங்களைச் சில கேள்விகள் கேட்டு நீங்கள் தரும் பதில்களின் அடிப்படையில் உங்களுக்கான டிப்ஸ்கள் கிடைக்கின்றன. மொத்தத்தில் இந்த இணைய தளம் உடல் நலத்துடன் வாழ நல்ல டிப்ஸ்களைத் தந்து வழி காட்டுகிறது.
இந்த தளத்தின் முகவரி:
http://www.caloriesperhour.com/
போதை பழக்கத்துக்கு அடிமையான யானை
திருட்டுதனமாக அந்த யானைக்கு வாழைப்பழத்தில் ஹெராயின் போன்ற போதை மருந்துகளை கலந்து சாப்பிட வைத்தனர்.
பல நாட்களாக இப்படி சாப்பிட்டு வந்த அந்த யானைக்கு போதை பழக்கம் ஏற்பட்டு விட்டது.
அந்த யானையை வன உயிரியல் துறையினர் மீட்டனர். 4வயது ஆன இந்த யானையின் பெயர் சிங்குவாங். போதைபழக்கத்தில் இருந்து விடுபட அந்த யானைக்கு போதை தடுப்பு மையத்தில் சிகிச்சை மற்றும் பயிற்சி அளிக்கப்பட்டது.
3ஆண்டுகளாக சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து அந்த யானை போதை பழக்கத்தில் இருந்து விடுபட்டது. இப்போது போதை பொருட்களை அந்த யானை தொடுவதே இல்லை. மீண்டும் அந்த யானையை காட்டுக்குள் அனுப்பி வைத்
தாயுடன் விளையாடும் புலிக்குட்டிகள்
நிïசிலாந்தின் ஆக்லாந்து உயிரியல் பூங்காவில் ஒரு புலி 3 குட்டிகளை போட்டது.
பிறந்து 2 மாதங்களே ஆன அந்த புலிக்குட்டிகளுக்கு ஜலூர், பெரானி, சிந்தா என்று பெயரிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பார்வைக்காக கூண்டில் அடைக்கப்பட்டுள்ள
அந்த 3 புலிக்குட்டிகளும் தாயுடன் விளையாடும் காட்சி.
இந்த சுமத்ரா வகை புலிகள் உலகம் முழுவதும் 560 உள்ளன
கணனி பாவனையாளர்களுக்கு இன்றியமையாத எச்சரிக்கைகள்
இமெயில் என்பது ரேஷன் கார்டு போல தேவைப்படும் ஓர் வசதியாக உள்ளது. யாரும் இப்போது தபால் அலுவலகத்தை நாடுவதே இல்லை.
அவசரத்திற்கும் தகவல் பரிமாற்றத்திற்கும் இமெயில் அக்கவுண்ட் கட்டாயம் நமக்குத் தேவயாய் உள்ளது.
ஆனால் இதில் பலரும் தவறு இழைக்கின்றனர். திருத்திக் கொள்ள வேண்டிய தவறுகளை இங்கு காண்போம்.
1. முதலாவதாக ஒரே ஒரு இமெயில் அக்கவுண்ட் வைத்துக் கொண்டு இன்றைய இணையச் சிக்கலில் மாட்டிக் கொள்ளாதீர்கள். வர்த்தக ரீதியான இமெயில் தரும் நிறுவனத்தின் இமெயில் அக்கவுண்ட்டை பணம் செலுத்திப் பெற்றுள்ளீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.
இதனை உங்கள் வர்த்தகத்திற்குப்பயன்படுத்திக் கொண்டிருக்கலாம். உங்கள் அக்கவுண்ட் உள்ள சர்வர் பிரச்சினையில் மாட்டிக் கொண்டால் உங்களுக்கான இமெயில் சேவை கிடைக்காது.
ஆனால் உங்களின் இமெயில் தெரிந்தவர்கள் அதற்கு மட்டுமே மெயிலை அனுப்பிக் கொண்டிருப்பார்கள். எனவே ஒன்றுக்கு மேற்பட்ட இமெயில் அக்கவுண்ட்களை வெவ்வேறு நிறுவன சர்வர்கள் மூலம் வைத்திருந்தால் அவை உங்களுக்கு இது போன்ற சிக்கலான நேரத்தில் உதவும் அல்லவா? பொதுவாக வர்த்தக பயன்பாட்டிற்கு ஒன்றும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடனான பரிமாற்றத்திற்கென ஒன்றும் மற்ற இல்ணைய தேடல்களுக்கு ஒன்றுமாக வைத்துக் கொள்வது நல்லது.
2. நீங்கள் வெகு நாட்களாக ஒரு இமெயில் அக்கவுண்ட் வைத்திருக்கிறீர்கள் என்பதற்காக அதனையே வைத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. ஏனென்றால் வெகுநாட்கள் பயன்படுத்திய இமெயில் அக்கவுண்ட்கள் ஸ்பாம் மெயில் அனுப்புபவர்கள் வசம் நிச்சயம் சிக்கியிருக்கும். எனவே சில ஆண்டுகள் சென்ற பின்னர் அதனை விடுத்து புதிய அக்கவுண்ட் திறப்பது தான் நல்லது.
3. இமெயில் பயன்பாட்டிலும் சில நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். உங்கள் இல்லம் இல்லாமல் வெளியே உங்கள் அலுவலகத்திலோ அல்லது இன்டர்நெட் மையங்களிலோ உங்கள் இமெயில் அக்கவுண்ட்டினைப் பயன்படுத்துபவராக இருந்தால் பயன்பாட்டிற்குப் பின் இமெயில் அக்கவுண்ட் தரும் சர்வரில் அக்கவுண்ட்டை முறையாக மூடிவிட வேண்டும். இல்லையேல் அடுத்து அந்த கம்ப்யூட்டரைப் பயன்படுத்துபவர்கள் உங்கள் இமெயிலைத் தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்பு ஏற்படலாம். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் மூடுவது மட்டுமின்றி அந்தக் கம்ப்யூட்டரின் கேஷ் மெமரியைக் காலி செய்துவிடுவதும் நல்லது.
அத்துடன் ஹிஸ்டரி, பாஸ்வேர்ட் இவை எதுவும் இருந்தால் அவற்றையும் கிளியர் செய்திட வேண்டும். கேஷ் மெமரியை எப்படி கிளியர் செய்வது என்று கேட்கலாம்? இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் Tools, Internet Optionsசென்று அங்கு இருக்கும் Clear History,” “Delete Cookies” and “Delete Files”என்ற மூன்று பட்டன்களிலும் கிளிக் செய்து ஓகே கொடுங்கள். பயர் பாக்ஸ் தொகுப்பு பயன்படுத்துபவர்கள் Ctrl + Shift + Del என்ற மூன்று கீகளையும் ஒரு முறை அழுத்தினால் போதும்.
4. எப்போதும் உங்கள் அலுவலகக் கம்ப்யூட்டரில் உங்கள் இமெயில் செக் செய்திட வேண்டாம். இது முறையற்றது மட்டுமின்றி உங்களின் ரகசிய தகவல்கள் மற்றவருக்கு தெரிந்து போகும் வாய்ப்புகள் உண்டு. அத்துடன் தெரிந்து போனால் வேலை போய்விடும் அல்லவா?
5. எல்லாவற்றிற்கும் இமெயில் என அலைய வேண்டாம். ஏனென்றால் இமெயில் என்பது உங்கள் நடவடிக்கைகளைப் பதிவு செய்திடும் ஓர் சாதனமாகும். பின்னர் நான் இதனை அனுப்பவே இல்லை என்று சாதிக்க முடியாது. எனவே ரகசிய தகவல் பரிமாற்றங்களுக்கு தொலைபேசியையே பயன்படுத்தவும்.
6. தேவையற்ற போது மற்றவர்களின் இமெயில் முகவரியை அடுத்தவர் அறியும் வகையில் அனுப்ப வேண்டாம். பலர் தேவையின்றி தங்களின் பிரதாபங்களை வெளிப்படுத்த தாங்கள் எழுதும் இமெயில் கடிதங்களை மற்றவருக்கும் காப்பி(CC மூலம்) அனுப்புவார்கள். இதனால் அந்த இன்னொரு நபரின் இமெயில் முகவரி மற்றவருக்கும் தெரிகிறது. இது தேவயற்ற வகையில் அனைவருக்கும் தெரியநேர்கையில் இதனை தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்புகள் ஏற்படுகின்றன. அப்படி உங்கள் கடிதத்தை மற்றவர்களுக்கும் காட்ட வேண்டும் என்றால் BCC பயன்படுத்துங்கள்.
7. உங்களுக்கு வந்த இமெயில் கடிதங்களுக்குப் பதில் அளிக்க விரும்புகையில் இமெயில் கிளையண்ட் புரோகிராமில் Reply / Reply All என இரண்டு வசதிகள் உண்டு. இதில் எதனைப் பயன்படுத்துவது எனச் சிலருக்கு சந்தேகம் உண்டு. ரிப்ளை ஆல் பட்டனை அழுத்தினால் அந்த கடிதத்தில் உள்ள அனைத்து இமெயில் முகவரிகளுக்கும் பதில் போய்ச் சேரும். மெயில் அனுப்பிய வருக்கு மட்டுமே பதில் அனுப்ப வேண்டும் எனில் ரிப்ளை பட்டனை அழுத்தி பதில் கடிதம் எழுதி அனுப்பவும்.
8. ஒரு சிலர் தங்களுக்கு வந்த கடிதங்களை அவை மற்றவர்களுக்குப் பயன்படுமா என்று சரியாக முடிவு செய்திடாமல் தேவையற்ற வகையில் மற்றவர்களுக்கு பார்வேர்ட் செய்வார்கள். இந்தப் போக்கு தேவையற்ற ஒன்று. இதில் பெரும்பாலும் ஸ்பாம் மெயில்களே அதிகம் பார்வேர்ட் செய்யப்படும். இவ்வாறு தேவையற்ற பார்வேர்டிங் செய்வது கூடாது. இந்தப் பழக்கமும் உங்கள் நண்பர்களுடைய இமெயில் முகவரிகளை மற்றவர்களிடம் அவசியம் இன்றி கொண்டு சேர்க்கும்.
9. இமெயில்களை, குறிப்பாக முக்கிய இமெயில்களை பேக்கப் செய்து வைத்துக் கொள்வது நல்லது. இவையும் சில டாகுமெண்ட்களைப் போல முக்கியமானவையே.
10. குறுக்கு வழியில் பணம் கிடைக்கும் என்று வருகிற இமெயில்களை நம்புவதும், இந்த இமெயில்களை 45 பேருக்கு அனுப்புவதால் உங்களுக்குப் புண்ணியம் வந்து சேரும் என்று கூறும் இமெயில்களை உடனே அழித்துவிடுவதுதான் நல்லது. எதற்கும் பதில் அனுப்பித்தான் பார்ப்போமே என்று அனுப்பினால் அவ்வளவுதான் தொலைந்தீர்கள். உங்களுடைய கடைசி பைசா வரை அவர்களின் பைசாவாகிவிடும்.
11. தேவையற்ற மின் இதழ்களுக்கு சப்ஸ்கிரைப் செய்திட வேண்டாம். ஒரு சில நிறுவனங்கள் உங்கள் விருப்பங்கள், நாடு, மொழி என்று கண்டறிந்து உங்கள் இமெயில் முகவரியை மற்றவர்களுக்கு விற்றுவிடுவார்கள். எனவே தேவை என்று உணரும் இதழ்களுக்கு மட்டுமே சப்ஸ்கிரைப் செய்திடவும். அவற்றிற்கும் கூடுமானவரை இலவச இமெயில் முகவரிகளைக் கொடுங்கள். பதிவு செய்கையில் உங்களைப் பற்றிய பெர்சனல் தகவல்களைத் தூண்டி தூண்டி கேட்கும் தளங்களைச் சந்தேகப்பட்டால் கற்பனையான தகவல்களைத் தரவும்.
12. பல வேளைகளில் உங்கள் நண்பரின் இமெயிலிலிருந்து சில பிஷ்ஷிங் இமெயில்கள் வரும். நண்பர் தானே என்று திறந்து அந்த செய்தியில் கூறியபடி செய்திட வேண்டாம். சில வைரஸ்கள் இது போல உங்கள் நண்பரின் கம்ப்யூட்டரில் அமர்ந்து கொண்டு அட்ரஸ் புக்கில் முகவரிகளைத் திருடி உங்கள் நண்பரின் இமெயில் முகவரியிலிருந்து வருவது போலவே பிஷ்ஷிங் மெயில்களை அனுப்பும்.
13. மிக அதிகமாகக் கவனம் எடுக்க வேண்டியது இமெயில் அட்டாச்மெண்ட்கள்தான். முறையாக ஸ்கேன் செய்திடமால் எந்த அட்டாச்டு பைல்களையும் திறக்க வேண்டாம்.
14. கூடுமானவரை மற்றவர்களின் கம்ப்யூட்டர்கள் வழியாக இமெயில் செக் செய்வதனைத் தவிர்த்திடுங்கள். ஏனென்றால் அந்தக் கம்ப்யூட்டர் பாதுகாப்பானதா என்று தெரியாது. அதில் உள்ள பிஷ்ஷிங் புரோகிராம் வழியாக உங்கள் இமெயில் முகவரியும் மாட்டிக் கொள்ளும் வேளையும் உண்டு.
15. இமெயிலுக்கான பாஸ்வேர்ட் களை அடுத்தவர் அறிந்து கொள்ளாதவண்ணம் அமைத்துக் கொள்ளுங்கள். உங்கள் பிறந்த நாள், உங்கள் பட்டப் பெயர், குழந்தைகளின் பெயர்கள், அவர்களின் பிறந்த நாள்கள் ஆகியவற்றைத் தவிர்க்கவும்.
கம்பியூட்டரை ரீ ஸ்டார்ட் செய்யும் டைம்ஸ், ஷட் டவுண் செய்வது அவசியமா?
கம்ப்யூட்டரை எவ்வளவு நேரத்திற்கு ஒரு முறை ஷட் டவுண் செய்து பின் ரீ ஸ்டார்ட் செய்திட வேண்டும்? இது போல பல கேள்விகளை நமக்கு பட்டியலிட்டு வாசகி திருமதி வேணி ராஜகோபால் குற்றாலத்திலிருந்து எழுதி உள்ளார். மேலே குறிப்பிட்ட கேள்வி குறித்து இதுவரை எழுதாததால் உடனே குறிப்புகளைச் சேகரித்து இங்கு தருகிறேன்.
கட்டாயம் நாம் கம்ப்யூட்டரை நிறுத்தி சும்மா வைத்திருக்க வேண்டுமா? கம்ப்யூட்டர்கள் கட்டாயம் ரெஸ்ட் எடுக்க வேண்டுமா? இப்படி ஒரு கட்டாயம் எந்த கம்ப்யூட்டருக்கும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
குறைந்த பட்ச இயக்க நிலை அல்லது அதிக பட்ச இயக்க நிலை என்று எதுவும் இல்லை. ஆனால் சில வேளைகளில் கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டமே கம்ப்யூட்டரை இப்போது ரீ ஸ்டார்ட் செய்திடுக, என்று நமக்கு செய்தி கொடுக்கும். இந்த செய்தி பெரும்பாலும் ஏதேனும் ஒரு சாப்ட்வேர் தொகுப்பை இன்ஸ்டால் செய்தவுடன், அதன் செயல்பாடுகளை இயக்க கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் செய்ய வேண்டிய சூழ்நிலையில், இந்த செய்தி காட்டப்படும். இருந்தாலும் பின் ஒரு நேரத்தில் ஸ்டார்ட் செய்திட வேண்டும் என்றாலும் செய்திடலாம் என்று சலுகையும் தரப் படும். அந்த சலுகையையும் மேற்கொள்ளலாம்.
கம்ப்யூட்டரில் பிரச்னைகள் ஏற்படுகையில் நாம் கட்டாயமாக ரீஸ்டார்ட் செய்தே ஆக வேண்டும். ஏனென்றால் பிரச்னையின் சூழ்நிலை காரணமாக கம்ப்யூட்டரின் செயல்திறன் முடங்கிப்போயிருக்கும். இங்கு ரீ ஸ்டார்ட் செய்வதால் எந்த பிரச்னையினால் கம்ப்யூட்டர் முடங்கிப் போய் விட்டது என்று அறிய வாய்ப்பு கிடைக்கும். பிரச்னைகள் இருந்தால் தானாக சரியாகும் வாய்ப்பும் உண்டு.
சூரியனைச் சுற்றி ஒளிவட்டம் எதனால்?
ூரியனைச் சுற்றி ஒளிவட்டம் எதனால் ஏற்பட்டது என்று அறிவியல் தொழில் நுட்ப ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சூரியனைச்சுற்றி ஒளி வட்டம்
பரந்து விரிந்த வானில் எண்ணற்ற அதிசயங்கள் நடக்கின்றன. அதில் சில மட்டுமே நமது கண்களுக்கு தெரிகின்றன. அப்படி தெரியும் சிலவற்றை நாம் ஆச்சரியமாக பார்ப்பதோடு, அதனால் பின்விளைவுகள் ஏதாவது ஏற்படுமோ என்ற அச்சமும் சேர்ந்தே வந்துவிடுகிறது.
அந்தவகையில்தான் நேற்றைய தினம் வானில் சூரியனைச்சுற்றி ஏற்பட்ட ஒளிவட்டமும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. இந்த ஒளிவட்டத்தை பார்த்து பலரும் பல கருத்துகளை கூறத் தொடங்கிவிட்டனர். இருப்பினும் அறிவியல் பூர்வமான கருத்துதான் இறுதியானது.
நீர்த்துளிகளே காரணம்
அதன் அடிப்படையில் இது குறித்து சென்னையில் உள்ள தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப ஆய்வு மையத்தின் செயல் இயக்குனர் பி.அய்யம்பெருமாளிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது-
மேகக்கூட்டங்களில் நீர்த்துளிகள் உள்ளன. அந்த நீர்த்துளிகள் உயரத்தில் செல்லும்போது பனிக்கட்டிகளாக மாறிவிடும். ஒவ்வெரு பனிக்கட்டிகளும் முப்பெட்டகம் கொண்டது. ஒவ்வொரு பனிக்கட்டிகளிலும் ஒளிவிலகல் நடப்பதால் சூரியனைச்சுற்றி ஒளிவட்டம் ஏற்படும். இது எப்போதும் வரக்கூடிய ஒன்றுதான். மேகக்கூட்டத்தில் நீர்த்துளிகள் அதிகமாக இருப்பதன் காரணமாகத்தான் இப்படி ஒளிவட்டம் தெரிகிறது. இதன்காரணமாக தட்பவெட்ப நிலையில் எந்த மாறுதலும் வராது.
கையடக்க தொலைபேசிகளால் விந்தணுக்கள் பாதிக்கப்படும்
கையடக்க தொலைபேசிகள் காற்சட்டைப் பைக்குள் இயங்கு நிலையில் இருக்க, செவிப்பன்னித் தொகுதியைப் பயன்படுத்தி உரையாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ள ஆண்களுக்கு, விந்தணுக்கள் செயற்றிறன் இழக்கும் அபாயம் உள்ளதாக அமெரிக்க கிளேவ்லான்ட் மருத்துவமனையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
கையடக்கத் தொலைபேசியானது இயங்கு நிலையில் இனவிருத்தி உறுப்புகளுக்கு அண்மையில் இருக்கும் போது, விந்தணுவின் உற்பத்திக்கும் அதன் தராதரத்துக்கும் தீங்கு விளைவிப்பது தமது ஆய்வொன்றின் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக மேற்படி மருத்துவமனையின் மீள் உற்பத்தி மருத்துவ நிலைய பணிப்பாளர் அசோக் அகர்வால் தெரிவித்தார்.
இதன்போது ஆய்வு கூடத்தில் ஒரே வெப்பநிலை, நிபந்தனை என்பவற்றின் கீழ் 32 ஆண்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதன்போது மேற்படி ஆண்களின் காற்சட்டைப் பையில் அவர்களது இனவிருத்தி உறுப்பிலிருந்து 2.5 சென்ரி மீற்றர் தூரத்தில் இருக்குமாறு 850 "மெகா ஹேர்ட்ஸ்' கொள்ளளவுடைய கையடக்க தொலைபேசி சுமார் ஒரு மணி நேரத்துக்கு இயங்கு நிலையில் வைக்கப்பட்டது.
இதன்போது மேற்படி ஆண்களில் ஒட்சியேற்ற அழுத்தம் அதிகரித்து அவர்களது விந்தணுக்களின் தராதரம் வீழ்ச்சி அடைவது அவதானிக்கப்பட்டதாக அசோக் அகர்வால் கூறினார்.
எனினும், தாம் தமது ஆராய்ச்சியின் ஆரம்பக் கட்டத்திலேயே இருப்பதாகவும், இது தொடர்பில் உறுதிப்படுத்த பல படிநிலைகள் முன்செல்ல வேண்டியுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
சாமந்திப் பூ டீ குடித்தால் நீரிழிவு நோய் பாதிக்காது
சாப்பாட்டுடன் சீமை சாமந்திப் பூ டீயும் சேர்த்து குடித்தால், நீரிழிவு நோய் வராது. நீரிழிவு நோயினால் ஏற்படும் நரம்பு பாதிப்பு,
பார்வையிழப்பு, சிறுநீரக கோளாறு போன்றவையும் ஏற்படாது என, ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் மேலும் கூறியுள்ளதாவது:உலக நாடுகள் பலவற்றிலும் "டைப்2' வகை நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மன அழுத்தம்,
ஜலதோஷம், மாதவிலக்கு கோளாறுகள் போன்றவை உட்பட பல பிரச்னைகளை தீர்க்க சீமை சாமந்திப் பூ, பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நாம் சாப்பிடும் போது, இந்த சாமந்திப் பூவில் தயாரான மூலிகை டீயையும் சேர்த்துக் குடித்தால், நீரிழிவு நோய் வராது.
இந்த சீமை சாமந்திப் பூவில் தயாரான டீயை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட எலிகளுக்கு கொடுத்து பரிசோதித்ததில்,
அவற்றின் ரத்தத்தில் சர்க்கரை அளவு கணிசமாக குறைந்துள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இருந்தாலும், இன்னும் பல சோதனைகள் மூலம் இவை உறுதி செய்யப்பட வேண்டும். இவ்வாறு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்
Labels: மருவத்துவ செய்திகள்
இரு கோள்கள் மோதியதற்கு சான்றாக விளங்கும் நட்சத்திர தூசுகள்
அண்டவெளியில் பொது ஈர்ப்பு மையத்தைக் கொண்ட இரட்டை நட்சத்திர முறைமையொன்றை சுற்றி பாரிய தூசுப் படலங்கள் வலம் வருவது அவதானிக்கப் பட்டதாகவும். அவை பூமியையொத்த இரு கோள்கள் ஒன்றுடன்
ஒன்று மோதியதில் ஏற்பட்ட மிக மோசமான சிதைவால் உருவாகியவையாக இருக்கலாம் என தாம் கருதுவதாகவும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பூமியும் வெள்ளிக் கிரகமும் ஒன்றுடன் ஒன்று மோதி அழிவடையும் பட்சத்தில் உருவாகும் பாரிய தூசுப் படலத்தை ஒத்ததாக இது உள்ளதென மேற்படி ஆய்வில் பங்கேற்ற கலிபோர்னியா பல்கலைக்கழக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் பென்ஜமின் சுக்கெர்மன் தெரிவித்தார்.
மேற்படி நட்சத்திர தூசுக்களானது, பூமியிலிருந்து 20,307,300 ஒளியாண்டுகளுக்கு அதிகமான தூரத்தில் மேஷ நட்சத்திரத் தொகுதியிலுள்ள நட்சத்திரத்தை சுற்றியே இந்த தூசு காணப்படுவது கண்டறியப்பட்டதாக மேற்படி ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஒரு ஒளியாண்டானது ஒரு வருடத்தில் ஒளி பயணிக்கும் தூரமான 6 திரில்லியன் மைல்களுக்கு சமமாகும்
உலகின் மிகப் பழைமையான பாறை கனடாவில் கண்டுபிடிப்பு
னடாவின் ஹட்ஸன் பே கடற்கரையில் 4.28 பில்லியன் ஆண்டுகள் பழைமையான உலகின் மிகவும் ஆதிகாலப் பாறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஆதிகால உயிரினங்கள் தொடர்பான சான்றுகளையும் இப்பாறை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
""இப்பாறைகளில் மிகவும் விசேடத்துவம் பொருந்திய இரசாயன கையெழுத்தொன்று காணப்பட்டது.
இது மிக பழைமையானதாகும். இத்தகைய பழைய கையெழுத்து உலகில் வேறெங்கும் கண்டுபிடிக்கப்படவில்லை'' என மேற்படி கண்டுபிடிப்பை மேற்கொண்ட ஆய்வுக் குழுவில் பங்கேற்ற மொன்றியல் மக்கில் பல்கலைக்கழகத்தின் பூகர்ப்பவியல் பேராசிரியர் டொன் பிரான்சிஸ் தெரிவித்தார்.
இப்பாறையிலுள்ள இரசாயன சான்றுகளானது, உலகம் எவ்வாறு தோன்றியது, உலகில் உயிரினங்கள் எவ்வாறு தோற்றம் பெற்றன என்பன தொடர்பான பல மர்மங்களுக்கு தீர்வுகாண உதவக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அண்டவெளியில் சஞ்சரிக்கும் விண்கற்களால் எதிர்கால பூலோகவாசிகளுக்கு பாரிய அபாயம் காத்திருப்பதாகவும்,
எனவே முழு உலகமும் ஒன்றிணைந்து அதற்கு ஒரு தீர்வைக் காண வேண்டும் எனவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
அமெரிக்க சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற சர்வதேச விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் விசேட கூட்டத்தின்போதே விஞ்ஞானிகள் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பூமிக்கு அண்மையிலான வஸ்துகளின் விண்வெளி வெடிப்புகள் சபையைச் சேர்ந்த இவ் விஞ்ஞானிகள், இரு வருட தீவிர ஆராய்ச்சியையடுத்தே மேற்படி அறிக்கையை சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.""பூமியை விண்கற்கள் அணுகும் பட்சத்தில் அது தொடர்பான அபாயத்தை எதிர்கொள்ள சர்வதேச சமூகம் தயாராக வேண்டும். எனவே நாம் இது சம்பந்தமான முயற்சிகளில் ஒரு நிறுவன கட்டமைப்பொன்றை ஏற்படுத்துவது அவசியம்'' என மேற்படி சபை உறுப்பினரும் "அப்பலோ 9' விண்கல விண்வெளிவீரருமான ருஸ்தி ஸெவீக்கார்ட் கூறினார்.
மேற்படி அனர்த்தத்தை தவிர்ப்பதற்கான முயற்சிகளில் சர்வர·தச ரீதியான நிறுவனக் கட்டமைப்பு உருவாக்கம் தொடர்பில் போதிய அக்கறை இதுவரை செலுத்தப்படவில்லை என அவர் கவலை தெரிவித்தார். எதிர்வரும் ஆண்டுகளில் முன்னேற்றகரமான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பூமிக்கு அச்சுறுத்தலாக விளங்கக் கூடிய மேலும் பல விண்கற்கள் கண்டறியப்படலாம் என அவர் குறிப்பிட்டார்.
5000 வருடங்களுக்கு முன் ஒரு பஸ் அளவிலான விண்கல்லொன்று அமெரிக்க அரிஸோனா மாநிலத்தில் விழுந்தமைக்கான சான்றுகள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதன் பின் கடந்த சில வருடங்களில் கனடாவிலும் பெருவிலும் சிறிய அளவான விண்கற்கள் விழுந்துள்ளன. அத்துடன் ஒரு நூற்றாண்டுக்கு முன் சிபேரியாவின் காட்டுப் பகுதியில் விழுந்த விண்கல் மூலம் வெளிப்பட்ட சக்தியானது, ஹிரோசிமாவில் அணுகுண்டு போடப்பட்டபோது வெளிப்படுத்தப்பட்ட சக்தியிலும் 1000 மடங்கு அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பிக் பேங் சோதனையில் சிக்கல்!
பிரபஞ்சம் தோன்றிய ரகசியத்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியாக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள 'பிங் பேங்' சோதனை இயந்திரத்தில் பெருமளவில் ஹீலியம் வாயுக் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் சோதனையின் அடுத்த கட்டத்திற்குச் செல்வதில் சிக்கல் உருவாகியுள்ளது.
சுமார் 14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் ஏற்பட்ட மிகப்பெரிய அணு சக்தி மோதலில்தான் பிரபஞ்சம் தோன்றியது என்ற பிக் பேங் (பெரு வெடிப்பு) கோட்பாடே இன்றளவும் நம்பப்பட்டு வருகிறது. பூமி உருவாகி உயிர்கள் தோன்றவும் இதுவே காரணம் என்று கருதப்படுகிறது.
இந்த நிலையில் பிரபஞ்சம் தோன்றியபோது உருவான அணு சக்தி மோதலை தற்போது உருவாக்கி, அதன்மூலம் பிரபஞ்சம் தோன்றிய ரகசியத்தைக் கண்டறிய 36 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 5,000க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளும் பொறியாளர்களும் முயற்சித்து வருகின்றனர்.
இதற்காக அவர்கள் பிரான்ஸ்- சுவிட்சர்லாந்து எல்லையில் பூமிக்கு அடியில் 100 மீ ஆழத்தில் சுமார் 27 கிலோ மீட்டர் சுற்றளவில் 'பிங் பேங்' சோதனை மையத்தை அமைத்துள்ளனர்.
இங்கு அமைக்கப்பட்டுள்ள வட்ட வடிவக் குழாயின் இரு புறங்களில் இருந்தும் புரோட்டான்களை செலுத்தி நேருக்கு நேர் மோதவிட்டு, அப்போது உருவாகும் மாற்றங்களை ஆயிரக்கணக்கான கருவிகள் மூலம் ஆய்வு செய்து பிரபஞ்சம் தோன்றிய ரகசியத்தைக் கண்டுபிடிக்க உள்ளனர்.
திரவ ஹீலியம் வாயுக் கசிவு!
புரோட்டான்கள் மோதும்போது ஏற்படும் டிரில்லியன் டிகிரிக்கும் மேற்பட்ட வெப்பத்தைக் கட்டுப்படுத்த ஏராளமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவை மைனஸ் 271.3 டிகிரி குளிரில் வைக்கப்பட்டுள்ளன.
இத்தகைய பாதுகாப்பு ஏற்பாடுகளில்தான் இந்திய நேரப்படி நேற்று மதியம் 2.57 மணிக்கு கோளாறு ஏற்பட்டுள்ளது. குளிரூட்டும் கருவி ஒன்றில் இருந்து ஒரு டன்னிற்கும் மேற்பட்ட திரவ நிலையிலான ஹீலியம் வாயு கசிந்துள்ளது.
இதையடுத்து தீ பிடிக்கும் அபாயம் ஏற்பட்டதால் தீயணைப்புக் கருவிகள் வரவழைக்கப்பட்டன. பிங் பேங் சோதனை முயற்சிகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட்டன.
கோளாறு ஏற்பட்டுள்ள கருவிகளை பொறியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். குறிப்பிட்ட கருவியை சாதாரண வெப்ப நிலைக்குக் கொண்டுவந்த பிறகே கோளாறைச் சரிசெய்ய முடியும் என்றும் அதற்கு சுமார் 2 மாதங்கள் ஆகலாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, பிங் பேங் சோதனையின் முதல்கட்டம் வெற்றிபெற்றதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் கடிகாரச் சுற்றுப் பாதையில் புரோட்டான்கள் செலுத்தப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.
இருண்ட தமிழகம் தட்டிக்கேட்க தட்டாமல் வருகிறார் ரஜினிகாந்த்

ஆந்திராவில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி பிரஜா ராஜ்யம் கட்சியை தொடங்கியுள்ளார். இதையடுத்து, தமிழகத்தில் ரஜினியும் அரசியலுக்கு வரவேண்டும் என்று அவரது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிரித்துள்ளது.
கோவையில் உள்ள ரஜினி ரசிகர்கள் ஆந்திராவில் பிரஜா ராஜ்யம், தமிழகத்தில் ரஜினி ராஜ்யம் என போஸ்டர் ஒட்டி கடந்த வாரம் பரபரப்பை ஏற்படுத்தினர். இதையடுத்து, தமிழகம் முழுவதும் ரஜினி ரசிகர்கள் போஸ்டர் ஒட்டத் தொடங்கியுள்ளனர்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் கிலோ ரூ.2 ரூபாய் அரிசி, இப்போது 1 ரூபாய், 6 ரூபாய் பேருந்து கட்டணம் இப்போது 13 ரூபாய், மின் பற்றாக்குறையால் இருண்ட தமிழகம். தட்டிகேட்க தட்டாமல் வருகிறார் ரஜினி என்று போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
மற்றொரு போஸ்டரில் இந்திய அரசியல் வானில் வரவேண்டிய நேரத்தில் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினியே.. வருக சரித்திரம் படைக்க என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
வாடிப்பட்டி, ராமநாயக்கன்பட்டி, குட்லாடம்பட்டி, கச்சைகட்டி, ஆண்டிபட்டி, வடுகபட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டப்பட்ட இந்த போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Labels: அரசியல்
பாலித்தின் பைகளுக்கு மாற்றாக தவிடு மூலம் பை தயாரிக்க திட்டம்
பாலித்தின் பைகளுக்கு மாற்றாக அரிசி தவிடு மூலம் தயாரிக்கப்படும் பைகள், 3 மாதத்தில் பயன்பாட்டுக்கு வரும்’ என்று
கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவாசகம் கூறினார்.
இதுகுறித்து அவர் நமது நிருபரிடம் கூறியதாவது:
மலை, பனிப்பிரதேசங்களில் பணிபுரியும் ராணுவ வீரர்கள், அரிசி தவிடு மூலம் தயாரிக்கப்படும் பைகளை பயன்படுத்துகின்றனர்.
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத, எளிதில் மக்கும் தன்மை கொண்ட பைகள் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை வழங்குமாறு ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திடம்(டிஆர்டிஓ) கேட்டோம்.
இதன்படி அரிசி தவிடு மூலம் பை தயாரிக்கப்படும் புதிய தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.
இதைப் பயன்படுத்துவது குறித்து டிஆர்டிஓ விஞ்ஞானிகள், பல்கலைக்கழக விஞ்ஞானிகள், ஓட்டல் அதிபர்களுடன் இம்மாத இறுதிக்குள் ஆலோ சனை நடைபெறும்.
தமிழ்நாடு ஓட்டல் சங்கத்தினர், பை தயாரிக்க தேவையான நிதியை வழங்க சம்மதித்துள்ளனர்.
அரிசி தவிட்டை புதிய தொழில்நுட்ப அடிப்படையில் அதிக வெப்பத்துக்கு உட்படுத்தி, குளிர்வித்து பை தயாரிக்கப்படும். இது இன்னும் 3 மாதத்தில் பயன்பாட்டுக்கு வரும்.
அரிசி தவிடு தாராளமாக உள்ளதால் ஒரு பைக்கு 2 முதல் 3 பைசா விலை தான் ஆகும்.
இந்த தொழில்நுட்பத்தை பெற்று வணிக நீதியாக தயாரிக்க மும்பை, டெல்லியில் இருந்து 3 நிறுவனங்கள் அணுகின. நாங்கள் மறுத்துவிட்டோம்.
சமுதாய நலன் கருதி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பாரதியார் பல்கலைக்கழகமே அரிசி தவிடு மூலம் பைகளை தயாரிக்கும். இதற்கு காப்புரிமை பெறப்படும். இதற்கான சாம்பிளை டிஆர்டிஓ அளித்துள்ளது.
இது பாலிதின் பைகளுக்கு மாற்றாக இருக்கும். இந்த பைகள் அதிக எடை, சூடு தாங்கக் கூடியது. எளிதில் மக்கும் தன்மை கொண்டது.
Labels: செய்திகள்
தசரா பண்டிகை: ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து
நவராத்திரி விழா நாடு முழுவதும் தசரா பண்டிகையாக 10 நாள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி துர்கா பூஜையும் கொண்டாடப்படுகிறது.
இந்த தசரா மற்றும் துர்கா பூஜையையொட்டி ஜனாதிபதி பிரதிபா பட்டீல், பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
சென்னையில் தே.மு.தி.க. இளைஞர் மாநாடு
சென்னையில் தே.மு.தி.க. இளைஞர் மாநாடு : தொண்டர்களை தடுக்க முயற்சி-விஜயகாந்த் குற்றச்சாட்டு
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-
சென்னை தீவுத்திடலில் வருகிற 18-ந் தேதி தே.மு.தி.க. இளைஞர் அணி மாநாடு நடைபெறுகிறது. இளைஞர்கள் மட்டுமல்ல, கட்சி தொண்டர்கள் அனைவரும் குடும்பத்துடன் வாருங்கள் என்று அழைப்பு விடுத்திருக்கிறேன். பல இடங்களில் நிகழ்ச்சி நடத்தி இருக்கிறேன். சென்னையிலும் ஒரு பெரிய நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்பதற்காக தீவுத்திடலில் மாநாடும் முன்னதாக பேரணியும் நடத்துகிறோம். இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மாநிலம் முழுவதும் இருந்து தொண்டர்கள் வருவதற்காக பஸ், வேன், கார்களை முன்பதிவு செய்துள்ளனர்.
மாநாட்டுக்கு வருபவர்களை தடுப்பதற்கான முயற்சியில் ஆளும் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். எங்களுக்கு பஸ், வேன், கார் தரமுன் வந்தவர்களை மிரட்டி வருகின்றனர். கொடுத்த முன் பணத்தை சிலர் திருப்பித் தந்துவிட்டார்கள்.
எப்படி நாம் ஜெயிப்பது என்றுதான் ஒரு கட்சி திட்டமிட வேண்டும். அராஜகத்தால் மற்றொரு கட்சியை அழிக்க நினைக்க கூடாது. வளர்ந்த கட்சிகள் மற்ற கட்சிகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். அதை விட்டு விட்டு புதிய கட்சிகளை மிரட்ட கூடாது.
போலீசாரும், போக்கு வரத்து துறையும் மாநாட்டுக்கு வரும் தொண்டர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். எங்கள் கட்சி வேகமாக வளர்ந்து வருவதால்தான் இந்த மிரட்டல்கள் வருகின்றன.
மாநாட்டில் நிச்சயமாக மின்வெட்டும் இருக்கும். இது பற்றியும் கட்சி நிர்வாகிகளிடம் தெரிவித்து இருக்கிறேன். மற்ற கட்சி தலைவர்கள் யாரையும் மாநாட்டுக்கு அழைக்கவில்லை. இடதுசாரி கட்சி தலைவர்கள் மரியாதை நிமித்தமாக என்னை சந்தித்து பேசினார்கள்.
ஊழலை ஒழிப்பதில் எங்களுக்கு ஒருமித்த கருத்து இருக்கிறது. கூட்டணி பற்றி தேர்தல் வரும்போது பார்த்துக்கொள்ளலாம்.
இலங்கை பிரச்சினையில் நல்ல தீர்ப்பு ஏற்பட வேண்டும். அங்கு வாழும் தமிழர்கள் சுதந்திரமாக வாழ வேண்டும். மத்திய மந்திரிகளாகவும், எம்.பி.க்களாகவும் இருப்பவர்கள் இலங்கை தமிழர்களுக்கு என்ன செய்தார்கள்.
தந்திகொடுப்பது, கூட்டம் நடத்துவது எல்லாம் வெறும் நாடகம் தான். 1956 முதல் தமிழர்களுக்காக குரல் கொடுப்பதாக கருணாநிதி சொல்கிறார். இத்தனை ஆண்டுகளில் என்ன தீர்வு கண்டார். தமிழர்களுக்கு ஆதரவாக கம்ïனிஸ்டுகள் உண்ணாவிரதம் இருந்த போது, அன்று அரை குறையாக ஆதரித்தவர்கள் இப்போது உண்ணாவிரத்துக்கு போகிறார்கள் என்று கூறினார்.
இப்படி அவர் பேசினால் மற்றவர்கள் அவரோடு எப்படி ஒத்துப்போவார்கள். ஒவ்வொரு முறையும் இலங்கை தமிழர்கள் தாக்கப்படும் போது, பிரதமரிடம் பேசினேன். தன்னிடம் கேட்டார், தூதரை கண்டித்தார்கள். இலங்கை அரசுக்கு எச்சரிக்கை என்று சொல்கிறார்கள். எத்தனை முறைதான் இந்த சடங்கை நடத்துவது.
இந்த ஆட்சி தேவையா என்ற கேள்விக்கு விடை காண வேண்டும் என்றும் கருணாநிதி சொல்கிறார். எத்தனையோ முறை இப்படி சொல்லிவிட்டார். எப்போது தான் அவர் விலகினார். எம்.ஜி.ஆர். உயிருடன் இருந்திருந்தால் இலங்கை பிரச்சினை எப்போதே முடிவுக்கு வந்திருக்கும்.
பார்வையற்றோருக்கு நான் செய்த உதவியை விமர்சித்து அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது தொகுதியில் உள்ள எப்போதும் வென்றான் என்ற ஊரில் வாரம் ஒருமுறைதான் தண்ணீர் வருகிறது. 8 மணி நேரம் மின் வெட்டு இருக்கிறது. இதை எல்லாம் அவர் கண்டு கொள்ளவில்லை. அவரது அறிëக்கையிலேயே முரண்பாடு இருக்கிறது. நான் ஊனமுற்றவர்களுக்கு செய்வது போல மற்றவர்களும் போட்டி போட்டு செய்யலாம் என்றுதான் கூறினேன்.
முதல்-அமைச்சர் சினிமாவில் கிடைத்த பணத்தை நலிந்த கலைஞர்களுக்கு தான் கொடுத்தார்.
மத்திய தொலை தொடர்பு துறையில் ஊழல் நடைபெறுகிறது என்று நான் ஒருமாதத்துக்கு முன்பு கூறினேன். இது தொடர்பாக சம்மந்தப்பட்ட மந்திரியை பதவி நீக்கம் செய்து விட்டு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியை நியமித்து விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.
தன்னை பற்றி முதல்-அமைச்சர் கருணாநிதி தெரிவித்த கருத்துகளுக்கு பண்ருட்டி ராமச் சந்திரன் விளக்கம் அளித்தார்.
அவர் கூறும் போது இலங்கை பிரச்சினை தொடர்பாக எம்.ஜி.ஆர். முதல்-அமைச்ëசராக இருந்த போது தனி ஈழம் அமைவது Öன் தீர்வு என்று தெரிவித்தோம். அப்போது இது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டது. அந்த கூட்டத்தில் இருந்து கருணாநிதி வெளியேறினார். பிளவு நிலையை தொடர்ந்து கடைபிடிப்பால்தான் இன்னும் இந்த பிரச்சினை தீரவில்லை என்றார்.
Labels: அரசியல்
தமிழ் நாட்டின் கரையோரத்தில் பயன்படுத்த இந்தியா தீர்மானம்
தமிழ் நாட்டில் கரையோரப் பகுதிகளில் ஆளில்லாத உளவு விமானங்களைப் பயன்படுத்த இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாகவது:
தமிழ் நாட்டின் தென்கிழக்குக் கரையோரங்களைக் கண்காணிப்பதற்கு ஆளில்லாத உளவு விமானங்களைப் பயன்படுத்துவதற்கு இந்திய அரசு தீர்மானித்துள்ளது. உச்சிப்புள்ளியில் உள்ள கடற்படைத் தளத்தில் இருந்து சிறிய அளவிலான ஆளில்லாத உளவு விமானங்களை நடவடிக்கையில் ஈடுபடுத்தும் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
தென்குடா நாட்டின் கரையோர மற்றும் கடற்பகுதிகளில் கடற்படையினரின் கண்காணிப்பு நடவடிக்கைகளை அதிகரிப்பதே இதன் நோக்கம். இரண்டரை வருடங்களுக்கு முன்னர் இந்திய கடற்படையினர் தமது முதலாவது ஆளில்லாத உளவு விமான "ஸ்குவாட்ற'னை கொச்சின் பகுதிக்கு நகர்த்தியிருந்தது.
இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்குமிடையில் மோதல்கள் உக்கிரமடைந்து வருகையில் இந்திய அரசின் இந்த நடவடிக்கைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் கடற்படை உயர் அதிகாரிகள் மேற்கொண்ட பயணத்தினைத் தொடர்ந்து உச்சிப்புள்ளி பகுதியில் கடற்படையினரின் வான் கண்காணிப்பு நிலையத்தை அமைப்பது தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டிருந்தன.
கொச்சிப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள இரண்டு இஸ்ரேலியத் தயாரிப்பான ஆளில்லாத உளவு விமானங்களை உச்சிப்புள்ளியில் நடவடிக்கையில் ஈடுபடுத்தத் தீர்மானித்திருப்பதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
தமிழ் நாட்டில் 'மர்மயோகி'
பிரமிட் சாய்மீரா, ராஜ் கமல் இண்டர்நேஷனல் இணைந்து தயாரிக்கும் 'மர்மயோகி'யின் மர்ம முடிச்சுகள் இன்னும் அவிழாமலே உள்ளன. படத்தின் பட்ஜெட் நூறுகோடி, நூற்றைம்பதுகோடி என பல்வேறு புள்ளிவிவரங்கள்.
இந்நிலையில் கமல், த்ரிஷா, ஸ்ரேயா பங்குபெற்ற போட்டோசெஷன் சென்னையில் நடந்தது. படப்பிடிப்பை பிரேசிலில் கமல் தொடங்குகிறார் என்றொரு செய்தியும் கசிய விடப்பட்டது. ஆனால், தமிழ்நாட்டில்தான் 'மர்மயோகி'யின் படப்பிடிப்பு தொடங்குகிறது. இம்மாதம் 26-ந் தேதி படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளார் கமல்.
Kamalhasan
சரித்திர படமான 'மர்மயோகி'க்கு ரஹ்மான் இசையமைக்கிறார். சரித்திர படம் என்பதால் பின்னணி இசைக்கும், பாடல்களுக்கும் என்னென்ன கருவிகளை பயன்படுத்துவது என்று தனியே ஆராய்ச்சியே நடத்தியிருக்கிறார் இசைப்புயல். இரண்டு பாடல்கள் ஏற்கனவே பதிவாகி விட்டன என்கின்றன தகவல்கள்.
இம்மாத இறுதியில் கமலின் கனவு படங்களில் ஒன்றான 'மர்மயோகி'யின் படப்பிடிப்பு தொடங்குகிறது.
'மர்மயோகி'யின் முதல்கட்ட படப்பிடிப்பு சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி பகுதியில் நடத்தப்படலாம் என்கிறார்கள் தயாரிப்பு வட்டாரத்தில்.
நவராத்திரி பண்டிகையின் போது குண்டு வைக்க சத
அக்டோபர் 07,2008,07:00
மும்பை: பெங்களூரு, ஆமதாபாத், டில்லி உட்பட தொடர் குண்டு வெடிப்பை தொடர்ந்து போலீசார் தொடர் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக ஏற்கனவே சில நபர்களை மும்பையில் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் மும்பையில் போலீசார் நடத்திய தொடர் தேடுதல் வேட்டையில் சந்தேகத்தின் பேரில் 20பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரனை மேற்கொண்ட போது தீவிரவாதிகள் என்றும் மும்பையில், நவராத்திரி பண்டிகையின் போது, குண்டு வெடிக்கச் செய்ய சதித் திட்டம் தீட்டியது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மேலும் குறைந்தத
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கடந்த 2003 ம் ஆண்டுக்குப்பின் முதன்முறையாக அதிகமாக குறைந்திருக்கிறது. சர்வதேச அளவில் நிதி சந்தையில் ஏற்பட்டிருக்கும் குழப்பம் இன்னும் தீராததால் இந்திய பங்குசந்தையில் முதலீடு செய்திருக்கும் அன்னிய முதலீட்டாளர்கள் அதிக அளவில் பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு இருப்பதால், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இன்று காலை நிலவரப்படி 48.01/48.02 ஆக குறைந்திருந்தது. இது திங்கள் அன்று முடிந்த ரேட்டான ரூ.47.80/81 ஐ விட 1.5 சதவீதம் குறைவு.
Labels: செய்திகள்
அமைச்சர் ராஜாவை பதவி நீக்கம் செய்ய விஜயகாந்த் வலியுறுத்தல்
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அவர் மூன்றாம் தலைமுறைக்கான அலைவரிசை தொகுப்பு ஒதுக்கீட்டில் மோசடி செய்த குற்றத்துக்காக மத்திய அமைச்சர் ராஜாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். உண்மையை கண்டறிய சுப்ரிம் கோர்ட் நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
Labels: நாட்டு நடப்பு
தினமலர் இணையதளத்தில் தினமலர் நிறுவனர் டி.வி.ஆர். வாழ்க்கை வரலாற
தினமலர் நிறுவனர் டி.வி.ஆரின் நூற்றாண்டை முன்னிட்டு அவரது வாழ்க்கை வரலாறு - கடல் தாமரை, நமது தினமலர் இணையதளத்தில் முழுமையாக வழங்கப்பட்டுள்ளது. செய்தது சொற்பம், அதை நினைத்து பெருமைப்பட கூடாது செய்யவேண்டியது பல அதை செய்து முடித்திட வேண்டும் என்பதையே தனது வாழ்க்கை தத்துவமாக கொண்டு வாழ்ந்த அவரது வாழ்க்கை அனைவருக்கும் முன்னுதாரணமாக அமையும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. visit: http://www.dinamalar.com/kadal_thamarai/kadal_thamarai.asp
மின்தடையால் காரைக்குடியில் ஆலைகளில் தினமும் ரூ.8 கோடி இழப்பு
காரைக்குடி: காரைக்குடியில் 8 மணி நேரம் மின்தடையால் தொழிற்சாலைகளில் தினமும் ரூ.8 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.காரைக்குடி நகரில் தினமும் காலை 6- 9 மணி, இரவு 6 -7, 10- 11 மின்தடை செய்யப்படும் என வாரியம் அறிவித்தது. அதற்கு மாறாக தினமும் எட்டு மணிநேரம் மின்தடை செய்யப்படுகிறது. அறிவிக்கப்பட்ட நேரங்களுடன் காலை 10.30 -12 அல்லது பகல் 12 -1.30, இரவு 11-12 மற்றும் இடையிடையே அரை மணிநேரம் மின்தடை ஏற்படுகிறது.தினமும் ரூ.8 கோடி ரூபாய் இழப்பு: மின்தடையால் காரைக்குடி அமராவதி புதூரிலுள்ள தொழிற்பேட்டையில் பேப்பர் கப்,ஸ்டீல் பர்னிச்சர், பெல்ட் தயாரிப்பு, அரசு அச்சகத்தில் உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. புதுவயல்,பள்ளத்தூர்,கண்டனூரில் அரிசிஆலைகள்,அரியக்குடியில் வெண்கல,பித்தளை விளக்கு தொழிற்சாலை, கண்டனூர், காரைக்குடி, பள்ளத்தூரில் வெள்ளி சாமான்கள், செஞ்சையில் கைத்தறி சேலைகள், தங்கநகை தயாரிப்பு நிலையங்களில் உற்பத்தி பாதிக்கப்பட்டு வருகிறது. இத்தொழிற்சாலையிலிருந்து "ஆர்டர்கள்' பெற்றவாறு வெளிமாவட்ட, மாநிலங்களுக்கு அரிசி மூடைகள், வெள்ளி சாமான், குத்துவிளக்குகள் அனுப்ப முடியவில்லை. இவற்றில் தினமும் 8 கோடி ரூபாய் வரை உற்பத்தி இழப்பு ஏற்பட்டு வருவதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
Labels: நாட்டு நடப்பு
நிதி நெருக்கடி: மிட்டலுக்கு ரூ.13,800 கோடி நஷ்டம் - ஒரு மணி நேரத்துக்கு ரூ.50 கோட
சர்வதேச நிதி நெருக்கடியின் பாதிப்புகள் பல பெரும் தொழிலதிபர்களையும் பாதித்துள்ளது. உலகப் பெரும் தொழிலதிபர்களுள் ஒருவரான நம்ம ஊர் லட்சுமி மிட்டலின் நிறுவனமும் இதற்குத் தப்பவில்லை.
நிதி நெருக்கடி காரணமாக மிட்டல் இழந்துள்ள தொகை 16.6 பில்லியன் பவுண்டுகள் (ஒரு பவுண்ட் மதிப்பு: ரூ. 83). அதாவது சுமார் 13800 கோடி ரூபாய்!
இந்த நெருக்கடியில் பெரும் இழப்புகளைச் சந்தித்துள்ள டாப் 10 உலகப் பணக்காரர்களில் முதலிடத்தில் இருப்பவர் லட்சுமி மிட்டல்தான் என சண்டே டைம்ஸ் கருத்து தெரிவித்துள்ளது.
சமீபத்தில் இவர் வாங்கிய ஆர்செலர் ஸ்டீஸ் நிறுவனத்தில் மிட்டலுக்கு 33.24 பில்லியன் பவுண்ட் பங்குகள் இருந்தன.
இப்போது அந்த பங்குகளின் மதிப்பு 16.63 பில்லியனாகக் குறைந்துள்ளது. அதாவது ஒரு மணிநேரத்துக்கு 6 மில்லியன் பவுண்ட் - ரூ.50 கோடி ரூபாய்!
மற்றொரு தொழிலதிபரான அனில் அகர்வால் 2.7 பில்லியன் பவுண்ட் இழப்புக்கு உள்ளாகியுள்ளார்.
பாகிஸ்தானுக்கு இந்தியா ஒருபோதும் அச்சுறுத்தல் இல்லை: சர்தாரி
: பாகிஸ்தானுக்கு இந்தியா ஒருபோதும் அச்சுறுத்தலாக இருந்ததில்லை என்று பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி கூறியுள்ளார்.
நியூயார்க்கில் இருந்து வெளி வரும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்களை தீவிரவாதிகள்தான் நடத்தி வருகின்றனர். காஷ்மீரில் போராடி வரும் அவர்களை விடுதலை போராளிகள் என்று கூறுவேன்.
பாகிஸ்தானுக்கு இந்தியா ஒருபோதும் அச்சுறுத்தலாக இருந்ததில்லை. இந்தியா மீது பாகிஸ்தானுக்கு எந்த அச்சமும் இல்லை. வெளிநாடுகளில் இந்தியாவுக்கு உள்ள செல்வாக்கை பார்த்து நானோ எனது நாடோ பயந்ததில்லை.
இந்தியா - அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒப்பந்தத்திற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மிகப் பெரிய ஜனநாயக நாடும், பழைமையான ஜனநாயக நாடும் நட்பாக இருப்பது பார்த்து நாங்கள் ஏன் பொறாமைபட வேண்டும்?
இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள பாகிஸ்தான் விரும்புகிறது. வர்த்தக ஒப்பந்தத்தை முதலில் அண்டை நாடுகளுடன் செய்து கொள்ள விரும்புகிறோம் என்று கூறினார்.
சிரஞ்சீவி கட்சிக்குத் தாவினார் தெலுங்குதேசம் எம்.எல்.ஏ
விசாகப்பட்டனம் மாவட்டம் சோதாவரம் தொகுதியைச் சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ. காந்த சீனிவாச ராவ் அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார். சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் கட்சியில் அவர் இணையவுள்ளார்.
தனது ராஜினாமா கடிதத்தை பேக்ஸ் மூலம் கட்சித் தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளார் ராவ். தனது எம்.எல்.ஏ பதவியையையும் அவர் ராஜினாமா செய்து விட்டார்.
விலகல் குறித்து அவர் கூறுகையில், கடந்த இரண்டு வருடமாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு பரிதவித்தேன். இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறது.
சந்திரபாபு நாயுடுவுடன் எனக்கு எந்தப் பிரச்சினையம் இல்லை. ஆனால் விசாகப்பட்டனத்தைச் சேர்ந்த கட்சித் தலைவர்களுடன் என்னால் அட்ஜஸ்ட் செய்து கொண்டு போக முடியவில்லை.
விரைவில் பிரஜா ராஜ்ஜியம் கட்சியில் இணைய முடிவு செய்துள்ளேன் என்றார் ராவ்.
தெலுங்கு தேசம் கட்சியின் எம்.எல்.ஏ ஒருவர் அக்கட்சியிலிருந்து விலகி பிரஜா ராஜ்ஜியம் கட்சியில் இணையவிருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
ராவ் தவிர, விசாகப்பட்டனம் மாவட்ட தெலுங்கு தேசம் தலைவர் ஜாகிர் அகமதுவும் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார். முன்னாள் எம்.எல்.ஏவான கானபாபுவும் கட்சியிலிருந்து விலகி வட்டார். அனைவரும் சிரஞ்சீவி கட்சியில் ஐக்கியமாகிறார்கள்.
ஏற்கனவே இதே மாவட்டத்தைச் ேசர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ ரஹ்மான் கட்சியிலிருந்து விலகி சிரஞ்சீவி கட்சிக்குத் தாவினார். இப்போது எம்.எல்.ஏ உள்ளிட்ட 3 முக்கிய தலைவர்கள் விலகியுள்ளது தெலுங்கு தேசம் கட்சிக்கு பெருத்த அடியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
8 நிமிடங்களில் முடிந்த ரிசர்வேஷன்: பயணிகள் கடும் ஏமாற்றம
தீபாவளி சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கிய 8 நிமிடங்களில் அனைத்து இருக்கைகளும் நிரம்பி விட்டதால் அதிகாலை முதலே நீண்ட வரிசைகளில் காத்திருந்த ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் ஏமாற்றமடைந்தனர்.
வருகிற 27ம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கும், கோவை போன்ற ஊர்களுக்கும் செல்லும் வெளியூர்ப் பயணிகள் 90 நாட்களுக்கு முன்பே ரயில்களில் முன்பதிவு செய்து விட்டனர்.
இதையடுத்து சென்னையிலிருந்து மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, திருநெல்வேலி, எர்ணாகுளம் உள்ளிட்ட ஊர்களுக்கு 10 சிறப்பு ரயில்களை அறிவித்தது. இவற்றுக்கான முன்பதிவு இன்று தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி இன்று காலை 8 நிமிடங்களில் முன்பதிவு தொடங்கியது. வழக்கமான ரயில்களில் டிக்கெட் கிடைக்காதவர்கள், சிறப்பு ரயில்களிலாவது எடுக்கலாம் என்பதற்காக அதிகாலை முதலே சென்னையில் உள்ள எழும்பூர், மாம்பலம், தாம்பரம் உள்ளிட்ட ரயில்வே முன்பதிவு மையங்களில் காத்திருந்தனர்.
ஆனால் 8 மணிக்கு முன்பதிவு தொடங்கிய 8 நிமிடங்களிலேயே அனைத்து சீட்களும் நிரம்பி விட்டன. அதன் பின்னர் வந்தவர்களுக்கு காத்திருப்போர் பட்டியலில்தான் இடம் கிடைத்தது.
இதனால் நீண்ட நேரமாக காத்துக்கிடந்த பொதுமக்கள் பெரும் அதிருப்தியும், அதிர்ச்சியும் அடைந்தனர்.
ஆன்லைன் மூலம் டிராவல்ஸ் நிறுவனங்கள் மொத்தமாக டிக்கெட்களை புக் செய்து விடுவதே இதற்கு முக்கிய காரணம் என அவர்கள் குற்றம் சாட்டினர்.
இப்படி புக் செய்து விட்டு பின்னர் அதிக விலைக்கு டிக்கெட்களை பல டிராவல்ஸ் நிறுவனங்கள் விற்பதாகவம் அவர்கள் குமுறல் வெளியிட்டனர். இதற்கு ரயில்வே நிர்வாகம் முடிவு கட்ட வேண்டும். இல்லாவிட்டால் எத்தனை சிறப்பு ரயில்கள் விட்டாலும் வரிசையில் நின்று யாரும் டிக்கெட் எடுக்கவே முடியாது என்றும் அவர்கள் கோபத்துடன் கூறின
அக். 22ம் தேதி சந்திராயன் விண்கலம் ஏவப்படுகிறத
பெங்களூர்: பல்வேறு தாமதங்களைத் தாண்டி, இந்தியாவின் முதல் ஆளில்லாத நிலவு விண்கலமான சந்திராயன்-1, அக்டோபர் 22ம் தேதி ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.
ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து சந்திராயன்-1 ஏவப்படும். பி.எஸ்.எல்.வி.சி-11 ராக்கெட், சந்திராயனை விண்ணில் செலுத்தும். அன்று காலை 6.20 மணிக்கு ராக்கெட்டை ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.
ரூ. 386 கோடி மதிப்பில் சந்திராயன்-1 திட்டம் முடிவடைந்துள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இதுகுறித்த முதல் அறிவிப்பு வெளியானது என்பது நினைவிருக்கலாம்.
இந்தியாவின் விண்வெளி அத்தியாயத்தில் புதிய சகாப்தம் படைக்கும் சந்திராயன் விண்கலத்தை ஏவுவது பலமுறை தடைபட்டது. தற்போது நிலவுப் பயணத்திற்கு சந்திராயன் தயாராகி விட்டது.
சந்திராயன் விண்கலம் அனைத்தும் ஏற்கனவே ஸ்ரீஹரிகோட்டாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டது. இந்த வார இறுதியில் பி.எஸ்.எல்.வி ராக்கெட்டுடன் சந்திராயன் விண்கலம் இணைக்கப்படும்.
சந்திராயனுடன் 10 செயற்கைக் கோள்களும் உடன் செலுத்தப்படவுள்ளது. இதில் 5 இந்தியாவுனுடையது. மற்றவை ஐரோப்பா, அமெரிக்கா, பல்கேரிய நாடுகளுக்குச் சொந்தமானவை.
8 நாள் பயணத்துக்குப் பின்னர் நிலவை அடையும் சந்திராயன். அங்கு 2 ஆண்டு காலம் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொள்ளும். நிலவில் தரையிறங்கத் தேவையான தொழில்நுட்பத்தை உருவாக்குவது தொடர்பான ஆய்வு உபகரணத்தையும் சந்திராயன் தன்னுடன் எடுத்துச் செல்கிறது.
நிலவின் மண் வளம் உள்ளிட்டவை குறித்து சந்திராயன் ஆய்வு செய்யவுள்ளது.
திமுகவுடன் மீண்டும் கூட்டணி கஷ்டம்:
ாரணமில்லாமல் பாமகவை திமுக வெளியில் அனுப்பியது. அந்த கட்சியுடன் மீண்டும் கூட்டணி அமைத்துக் கொள்வது மிகவும் கடினம்.
கூட்டணி விஷயத்தில் திமுகவுடன் சமரசம் செய்து கொள்வது மிகவும் கடினம் என்றார்.
அதிமுகவுடன் கூட்டணி பற்றிய கேள்விக்கு பதில் அளிக்காத அவர் தேமுதிகவுடன் கூட்டணி பற்றி கேள்விக்கு அரசியலில் நிரந்தர எதிரி இல்லை என்றார்.
தேமுதிகவுடன் கூட்டணி வைக்க பாமகவுக்கு ஆட்சேபனையில்லை என்று அன்புமணி ராமதாஸ் கூறியிருப்பது அரசியல் அரங்கில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டணிக்காக யார் காலிலும் விழ மாட்டேன்: விஜயகாந்த்
தெய்வமாக நான் வணங்கும் மக்கள் காலில் விழுவேன். ஊரை அடித்து உலையில் போட்டு கொள்ளை அடிக்கிறவர்கள் காலில் கூட்டணிக்காக என்றும் விழ மாட்டேன். அப்படி ஒரு நிலைமை வந்தால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்வேன் என்று தேமுதிக தலைவர் விஜய்காந்த் கூறினார்.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு கட்சிகளின் தொண்டர்கள் இன்று விஜயகாந்த் முன்னிலையில் தேமுதிகவில் இணைந்தனர்.
கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடந்த இந்த விழாவில் விஜய்காந்த் பேசுகையி்ல்,
அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும். தெய்வம் தன் சித்து விளையாட்டை தொடங்கி விட்டதால் திமுக கூட்டணியில் இருந்து ஒவ்வொரு கட்சியாக வெளியேறி வருகின்றன.
என் தொண்டர்கள் எனது பிறந்த நாளுக்காக டிஜிட்டல் பேனர்களை வைத்தனர். பகலில் அந்த பேனர்களை அகற்ற துணிவில்லாமல் இரவில் அகற்றியிருக்கிறார்கள்.
அந்த டிஜிட்டல் போர்டுகள் தொண்டர்கள் ரத்தம் சிந்தி உழைத்த பணத்தில் தயாரிக்கப்பட்டவை. பேனர்களை கட்டுவதற்கு பயன்படுத்தியது கயிறுகள் அல்ல, தொண்டர்களின் நரம்புகள்.
அவர்களின் உணர்ச்சிகளை புரியாதவர்கள்தான் விஷமத்தனமான வேலைகளில் ஈடுபடுகிறார்கள். வன்முறையை மட்டுமே அவர்கள் கட்சி தலைவர்கள் கற்றுக் கொடுக்கிறார்கள்.
போலீசில் திமுக போலீஸ், அதிமுக போலீஸ் என்று 2 பிரிவுகள் உள்ளன. இந்த நிலை மாறினால்தான் நாட்டுக்கு நல்லது. மக்கள் சிந்தித்து பார்த்து நல்ல கட்சிகளை தேர்வு செய்ய வேண்டும்.
என்னிடம் ஆட்சி பொறுப்பை ஒப்படைத்து 2 ஆண்டுகள் அவகாசம் தந்தால் சமச்சீர் கல்வி, சுகாதாரம் ஆகியவற்றை ஏற்படுத்தி லஞ்சத்தையும் ஒழித்து காட்டுவேன்.
தெய்வமாக நான் வணங்கும் மக்கள் காலில் விழுவேன். ஊரை அடித்து உலையில் போட்டு கொள்ளை அடிக்கிறவர்கள் காலில் கூட்டணிக்காக என்றும் விழ மாட்டேன். அப்படி ஒரு நிலைமை வந்தால் அவர்கள் காலில் விழுவதை விட தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்வேன் என்றார் விஜய்காந்த்.
நிகழ்ச்சியின்போது கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், இளைஞர் அணிச் செயலாளரும் விஜய்காந்த்தின் மச்சானுமான சுதீசும் உடனிருந்தனர்.
சென்னை சென்டிரலில் இருந்து நாகர்கோயிலுக்கு சிறப்பு ரயில்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு 24, 26ஆம் தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், "வரும் 24, 26ஆம் தேதிகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில் (வ.எண். 0631) சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.30 மணிக்கு நாகர்கோயில் சென்றடையும்.
மறுமார்க்கம், நாகர்கோயிலில் இருந்து சென்னைக்கு 25, 27ஆம் தேதிகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில் (0632) நாகர்கோவிலில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்டிரல் ரயில் நிலையத்தை வந்தடையும்.
இச்சிறப்பு ரயில்கள் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சிமணியாச்சி, திருநெல்வேலி, வள்ளியூர் ஆகிய ரயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும்.
நாகர்கோவில் இருந்து சென்னை வரும் சிறப்பு ரயில்கள் பெரம்பூரில் கூடுதலாக நிற்கும். இதற்கான முன்பதிவு இன்று (செவ்வாய்கிழமை) காலை தொடங்குகிறது" என்று கூறப்பட்டுள்ளது
இருளில் தவிக்கும் தமிழகம்: விஜயகாந்த்!
தமிழகம் முழுவதும் இன்று இருள் சூழ்ந்துள்ளது என்றும் பார்வை இருந்தும் தமிழக மக்கள் வெளிச்சம் இல்லாமல் இருளில் தவிக்கிறார்கள் என்றும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் குற்றம்சாற்றியுள்ளார்.
படித்த, பார்வையற்ற இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் ‘கேப்டன் வாழ்வொளி திட்டம்’ என்ற திட்டத்தை தே.மு.தி.க தொடங்கியுள்ளது.
இதன் தொடக்க விழா நிகழ்ச்சி சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. அப்போது பார்வையற்ற 7 பேருக்கு சுயதொழில் தொடங்குவதற்கு தலா ரூ.25 ஆயிரத்தை வழங்கிய தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், பார்வையற்றோருக்கு கணினி கல்வி கற்றுக் கொடுக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் விஜயகாந்த் பேசுகையில், பார்வையற்றோரின் வாழ்வில் ஒளி ஏற்றுவதற்காக இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சிலர் பார்வை இருந்தும், பார்வையற்றவர்களாக இருக்கிறார்கள்.
பார்வையற்றவர்கள் 1 லட்சத்து 41 ஆயிரம் பேர் உள்ளதாக கூறப்படுகிறது. இதில் 6 விழுக்காடு பேர்தான் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். அவர்கள் பதிவு செய்யச் சென்றால், ஏதாவது ஒரு குறையைச் சொல்லி பதிவு செய்ய அதிகாரிகள் மறுக்கிறார்கள். எங்களுடைய கட்சியின் வளர்ச்சியைப் பார்த்து பல கட்சிகள் போட்டிபோடுகின்றன.
இங்கு குத்துவிளக்கு ஏற்றி பார்வையற்றவர்களின் வாழ்வில் ஒளி ஏற்ற திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், இன்று தமிழகம் முழுவதும் இருள் சூழ்ந்துள்ளது. பார்வை இருந்தும் தமிழக மக்கள் வெளிச்சம் இல்லாமல் இருளில் தவிக்கிறார்கள்.
இளைஞர் அணி மாநாட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளேன். குறைந்தது ஒரு லட்சம் பேருக்கு வேலை வாங்கித் தருவேன். இது நிச்சயம் என்று விஜயகாந்த் தெரிவித்தார்
பிரதமருக்கு தந்திகள் குவிகிறது!
இலங்கையில் தமிழர்கள் மீதான ராணுவத் தாக்குதலை தடுத்து நிறுத்த மத்திய அரசு தலையிடக்கோரி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தந்திகள் அனுப்புமாறு முதலமைச்சர் கருணாநிதி விடுத்த வேண்டு கோளை ஏற்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் தந்திகள் அனுப்பி வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான தி.மு.க.வினரும், பொதுமக்களும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நேற்று தந்திகள் அனுப்பினர்.
இன்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் கடலூரில் உள்ள தந்தி அலுவலகத்தில் 1000 பேர் தந்தி அனுப்பினர்.
இதேபோல அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், எ.வ.வேலு, கீதாஜீவன், தமிழரசி, பொன்முடி, செல்வராஜ், மதிவாணன், ராமச்சந்திரன் உள்பட அனைத்து அமைச்சர்களும் பிரதமருக்கு தந்தி அனுப்பினர்.
விழுப்புரம் மாவட்ட தி.மு.க துணை செயலரும், கண்டமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான செ.புஷ்பராஜ் தலைமையில் 300க்கும் மேற்பட்டவர்கள் பிரதமருக்கு இன்று தந்தி அனுப்பினர்.
கடலூர் நகர தி.மு.க இளைஞரணி சார்பில் அதன் அமைப்பாளர் பழக்கடை ராஜா தலைமையில் 200 பேர் இன்று பிரதமருக்கு தந்தி அனுப்பினார்.
இதேபோல் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலர்கள் இன்று அந்தந்த மாவட்டங்களில் தந்தி அனுப்பினர். இவர்களுடன் சேர்ந்து பொது மக்களும் தந்தி அனுப்பினார்கள்.
சென்னையில் அண்ணாசாலை தபால் அலுவலகத்தில் தென்சென்னை மாவட்ட செயலர் ஜெ.அன்பழகன் தலைமையில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் தந்தி அனுப்பினர். வடசென்னை மாவட்ட செயலர் பலராமன் தலைமையில் 3,000 தி.மு.க. தொண்டர்கள் தந்தி அனுப்பி உள்ளனர்.
காதலின் விழுந்தேன் படப் பிரச்சனை: ஆற்காடு வீராசாமி அறிக்கை!
தி.மு.க.விற்கு எதிராகவும், தி.மு.க. ஆட்சிக்கு எதிராகவும் தொலைக்காட்சி, பத்திரிகைகளில் பேட்டி கொடுத்திருக்கும் இயக்குநர் பிரசாத்துக்கும், எனக்கும் எந்தவித ஒட்டும் உறவும் இல்லை'' என்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 'காதலில் விழுந்தேன்' பட இயக்குநர் பி.வி.பிரசாத் எனது சிறிய தாயாரின் பேரன். இவர் இயக்கியுள்ள இந்த படம் சன் தொலைக்காட்சிக்கு விற்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இயக்குநர் பிரசாத் தி.மு.க.விற்கு எதிராகவும், தி.மு.க. ஆட்சிக்கு எதிராகவும் தொலைக்காட்சி, பத்திரிகைகளிலும் பேட்டி கொடுத்திருக்கிறார். எனக்கும், இயக்குநர் பிரசாத்துக்கும் எந்தவித ஒட்டும் உறவும் இல்லை. எங்கேயாவது அவர் எனது பெயரைப் பயன்படுத்தினால், அதற்கு நான் பொறுப்பாக மாட்டேன்.
எனவே திரைப்படத் துறையினரும், தயாரிப்பாளர்களும் இயக்குநர் பிரசாத் விடயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார
மருத்துவம்: 3 விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு!
மனித இனத்திற்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் 2 நோய்களுக்கு காரணமான வைரஸ் கிருமிகளைக் கண்டறிந்த மூன்று விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
இதில் கர்ப்பப்பை புற்றுநோய்க்கு காரணம் எனக் கூறப்பட்ட கூற்றுகளை உடைத்து தெரியும் வகையில், ஆன்கோஜெனிக் ஹுமன் பபிலோமா வைரஸ் (oncogenic human papilloma virus-HPV) என்ற நோய்க் கிருமிதான் அதற்கு முழுக் காரணம் என ஜெர்மன் விஞ்ஞானி ஹெரால்ட் ஜுர் ஹவ்சன் (Harald zur Hausen) கண்டறிந்தார். இதற்காக 2008ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுத் தொகையில் 50 விழுக்காடு அவருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் தற்போதைய சூழலில் உலகின் மிகக் கொடிய ஆட்கொல்லி நோயாக கருதப்படும் எய்ட்ஸ் நோய்க்கு காரணமான நோய்க் கிருமியை கண்டறிந்த விஞ்ஞானிகள் ப்ரான்கோய்ஸ் பேரி-சினோவ்ஸி, லுக் மான்டெக்னியர் ஆகியோருக்கு நோபல் பரிசுத் தொலையில் தலா 25 விழுக்காடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹெச்.ஐ.வி. கண்டுபிடிப்பு: கடந்த 1981இல் மனித உயிர்களை பலி கொள்ளும் புதிய ரக நோய் குறித்து தகவலறிந்ததும், அதற்கு மூலக் காரணமான கிருமியை கண்டறியும் பணியில் பிரான்ஸ் விஞ்ஞானிகளான ப்ரான்கோய்ஸ் பேரி-சினோவ்ஸி, லுக் மான்டெக்னியர் ஆகிய இருவரும் ஈடுபட்டனர்.
இதற்காக எய்ட்ஸ் நோயின் ஆரம்பகட்ட நிலையில் உள்ள நோயாளிகளின் உடலில் இருந்து பாதிக்கப்பட்ட திசுக்களை எடுத்து ஆய்வு மேற்கொண்டனர். அதில், ஒரு நோய்க்கிருமி தொடர்ந்து பன்மடங்காகப் பெருகி, செம்மையான உயிரணுக்களையும் தொடர்ந்து பாதிப்பதுடன் அவற்றையும் நோய்க் கிருமியாக மாற்றி வருவதை அவர்கள் ஆய்வில் கண்டறிந்தனர்.
இந்நோய்க்கு காரணம் எனக் கூறப்பட்ட ஆன்கோஜெனிக் ரெட்டிரோ வைரஸ் என்ற நோய்க்கிருமியின் தன்மையும், விஞ்ஞானிகள் ப்ரான்கோய்ஸ் பேரி-சினோவ்ஸி, லுக் மான்டெக்னியர் கண்டறிந்த நோய்கிருமியின் தன்மையும் முற்றிலும் வேறு மாதிரியாக இருந்தது. தொடர் ஆய்வில் எய்ட்ஸ் நோய்க்கு காரணமானது அவர்கள் புதிதாக கண்டறிந்த நோய்க்கிருமி என்பதும் உறுதி செய்யப்பட்டு அதற்கு ஹெச்.ஐ.வி. (human immunodeficiency virus-HIV) எனப் பெயரிடப்பட்டது.
ஹுமன் பபிலோமா வைரஸ்: கடந்த 1970களில் கர்ப்பப்பைப் புற்றுநோய்க்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்ட காலத்தில், ஹுமன் பபிலோமா வைரசுக்கும், கர்ப்பப்பை புற்றுநோய்க்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்ற கோணத்தில் ஹெரால்ட் ஜுர் ஹவ்சன் தனது ஆய்வைத் துவக்கினார்.
கட்டிகளை உண்டாக்கும் உயிரணுக்களில், ஆன்கோஜெனிக் வைரஸ் இருந்தால் அது அவர்களுடைய ஒவ்வொரு உயிரணுவிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைக் கண்டறிந்தார். இதுபோன்ற வைரஸ் உடைய டி.என்.ஏ.-க்களை கண்டறிய கட்டிகளை உண்டாக்கும் உயிரணுக்களை அவர் தேடத் துவங்கினார்.
சுமார் 10 ஆண்டு காலம் இந்த ஆய்வில் ஈடுபட்டதன் பயனாக கர்ப்பப்பை புற்றுநோய்க்கு உள்ளானவர்களிடம் அந்த டி.என்.ஏ. (ஹுமன் பபிலோமா வைரஸ் டி.என்.ஏ.) இருப்பதைக் கடந்த 1983இல் ஹெரால்ட் கண்டுபிடித்த. பின்னர் 1984இல் தான் கண்டுபிடித்த HPV16 ரக வைரஸைக் கொண்டு HPV18 ரக வைரஸை அவர் உருவாக்கினார்.
தற்போது கர்ப்பப்பை புற்றுநோய்க்கு உள்ளாகும் 70 சதவீதம் பெண்களில் உடலில் HPV16 மற்றும் HPV18 வைரஸ்கள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
விஜயகாந்துக்கு அமைச்சர் கீதாஜீவன் கண்டனம்!
ஊனமுற்றவர்கள் நலனில் தான் ஒருவர் மட்டும்தான் அக்கறையோடு இருப்பதுபோல சுய விளம்பர நோக்கத்தோடு தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் பேசி இருப்பதாக சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் குற்றம்சாற்றியுள்ளார்.
webdunia photo FILE
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தே.மு.தி.க. சார்பில் பார்வையற்றோருக்கு கணினி வேலை வாய்ப்பு பயிற்சியை தொடங்கி வைத்து பேசிய விஜயகாந்த், ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவேன். என்னைப் பார்த்து போட்டி போடும் மற்ற கட்சிகள் இது போன்ற உதவிகளைச் செய்வதிலும் போட்டி போட வேண்டியது தானே? நான் ஒரு கோடி ரூபாய்க்கு திட்டமிட்டால் பத்து கோடிக்கு திட்டமிடலாமே என்றெல்லாம் கவர்ச்சி வசனங்களைப் பேசியிருக்கிறார்.
ஏதோ பார்வையற்றவர்கள் நலனில் இவர் ஒருவர்தான் அக்கறை கொண்டுள்ளவரைப் போலவும் மற்ற யாருக்கும் எந்த அமைப்புக்கும் எந்தவிதமான அனுதாபமும் இல்லாததைப் போலவும் பேசியிருக்கிறார். பார்வையற்றோர்கள் நலனிலும் உடல் ஊனமுற்றோர் நலனிலும் தனிப்பட்டவர்களும் சமூக அமைப்புகளும், அரசும் தேவையான அளவு அக்கறை எடுத்துக் கொண்டு அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்திட வேண்டும். அப்படிச் செய்யும் போது ஏதோ தான் ஒருவர் மட்டும்தான் அவர்கள் மீது அக்கறை கொண்டுள்ளதைப்போல பேசுவது உடல் ஊனமுற்றோரை இழிவுபடுத்துவதற்கு ஒப்பானதாகும். விஜயகாந்த் மட்டும் தான் தனது சொந்தப் பணத்திலிருந்து பலருக்கு உதவிகளைச் செய்து வருவதைப் போல அடிக்கடி பேசி வருகிறார்.
2005-ம் ஆண்டில் கலைஞர் 'மண்ணின் மைந்தன்' படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதியதன் மூலம் கிடைத்த 11 லட்சம் ரூபாய் 'கண்ணம்மா' படத்தின் மூலம் கிடைத்த ஊதியம் 10 லட்சம் ரூபாய் ஆக 21 லட்சம் ரூபாயை சுனாமி நிவாரணத்திற்காக அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் மு.க.ஸ்டாலின் நேர் சென்று வழங்கும்படி செய்தவர் கலைஞர்.
இப்படி பல்வேறு திட்டங்களை வகுத்து எண்ணற்ற வகைகளில் ஊனமுற்றோர் மறுவாழ்வும் மறுமலர்ச்சியும் பெறுவதற்காக அயர்வின்றி கருணாநிதி அரசும் கருணாநிதியும் தொடர்ந்து பாடுபட்டு வருவதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். அத்துடன் பல்வேறு தன்னார்வ நிறுவனங்களும் ஊனமுற்றோர் நலம் பேண குறிப்பிடத்தக்கப் பணிகளை இந்த அரசின் ஆதரவுடன் ஆற்றி வருகின்றார்கள்.
எனவே விஜயகாந்த் சுயவிளம்பர நோக்கத்தோடு ஏதோ தான் ஒருவர் மட்டும்தான் ஊனமுற்றோருக்கு உழைத்திட அவதாரம் எடுத்துள்ளதைப் போலவும், தனது சொந்தப் பணத்தை மற்றவர்களுக்கு செலவு செய்ய முன்வந்திருப்பதைப் போலவும் பேசுவதும், செய்தி வெளியிடுவதும் ஊனமுற்றோருக்குச் செய்யும் உண்மையான சேவையாகாது'' என்று கீதாஜீவன் கூறியுள்ளார்.
அற்ப விஷயம் செல்வம்: போப்பாண்டவர்
ணமும், பேரவாவும் எவ்வளவு அற்பமானவை என்பதை தற்போதைய உலக நிதி நெருக்கடி காட்டுகின்றது என்று புனித பாப்பரசர் பெனடிக்ட் அவர்கள் கூறியுள்ளார்.
வத்திக்கானில், ஆயர்கள் மாநாடு ஒன்றை முன்னிட்டு உரையாற்றிய பாப்பரசர், பெரும் பெரும் வங்கிகளின் வீழ்ச்சியானது, பணம் எப்போது வேண்டுமானாலும் மறைந்துபோகும் என்பதையும், அதன் முக்கியத்துவம் இரண்டாம் பட்சமானதே என்பதையும் காண்பிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மக்கள் தமது வாழ்க்கையை வெற்றிகளின் மீதும், தொழில் முன்னனேற்றங்களின் மீதும், பணத்தின் மீ்தும் நிர்மாணிக்கக் கூடாது என்றும், ஆண்டவனின் உலகமே வலுவான யதார்த்தமாகும் என்றும் கூட அவர் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி: bbctamil.com
ஊதியத்துக்கேற்ற வசூல் வருகிறதா?
ஹாலிவுட் முன்னணி நட்சத்திரங்கள் தங்களுடைய மலைக்கவைக்கும் ஊதியங்களுக்கேற்ப பெரும் வசூலை அள்ளுகிறார்களா?
ஹாலிவுட் சினிமா உலகத்தில், ஒரு திரைப்படம் மாபெரும் வெற்றியடைய வேண்டுமென்றால், அதில் பிரபல நட்சத்திரங்கள் நடித்திருப்பது அவசியம் என்ற கருத்து ஆரம்ப காலம்தொட்டே நிலவிவந்திருந்தது.
ஆனால் முன்னணி நட்சத்திரங்கள் வாங்கும் மலைக்கவைக்கும் சம்பளங்களின் அளவுக்கு, அவர்களால் வசூலை அள்ளமுடியவில்லை என்பதாக தற்போது புதிய ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.
ஒரு பெரிய பட்ஜெட் படத்தில் பிராட் பிட் போன்ற மிகப் பிரபலமான நடிகர் ஒருவர் நடிக்கிறார் என்றால், உலக அளவில் அந்தப் படம் சம்பாதிக்கும் தொகையில் 20 சதவீதம் அவருக்குக் கிடைக்கும். அப்படிப் பார்க்கையில், குறைந்தபட்சம் 2 கோடி டாலர்களாவது அவருக்குக் கட்டாயம் கிடைக்கும்.
ஆனால் அவ்வளவு பெரிய தொகையைச் சம்பளமாக கொடுக்கும் அளவுக்கு அவர்கள் நடிக்கும் படங்கள் வசூலை வாரிக் குவிப்பதில்லை என்ற எண்ணம் தயாரிப்பாளர்களிடையே மேலோங்கிவருகிறது.
இதனால் சினிமா முன்னணி நட்சத்திரங்கள் திரைப்படத் தொழில்துறையில் தம்முடைய பயன்பாட்டை இழந்துவிட்டார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து ஆராயும் செய்தியாளர் வின்செண்டின் பெட்டகத்தின் தமிழ் வடிவத்தை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கல
அநுராதபுரத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதல்; முன்னாள் இராணுவ அதிகாரி ஜானக்க பெரேரா உட்பட 28 பேர் பலி
புதுப்பிக்கப்பட்ட நாள்: 05 அக்டோபர், 2008 - பிரசுர நேரம் 14:04 ஜிஎம்டி
மின்அஞ்சலாக அனுப்புக அச்சு வடிவம்
செய்தியரங்கம்
கூட்டம் முடிந்த வேளையில் குண்டுவெடிப்பு நடந்துள்ளது
குண்டுவெடிப்பு நடந்த இடம்
தமிழோசை
அநுராதபுரத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதல்; முன்னாள் இராணுவ அதிகாரி ஜானக்க பெரேரா உட்பட 28 பேர் பலி
இலங்கையின் வடமத்திய மாகாணத் தலைநகராகிய அநுராதபுரத்தில் திங்களன்று காலை இடம்பெற்ற நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியாகிய ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத் திறப்பு விழா வைபவம் ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் மாகாண மட்டத்திலான முக்கிய அரசியல்வாதிகள் 3 பேர் உட்பட 28 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
வடமத்திய மாகாண சபையின் புதிய எதிர்க்கட்சித் தலைவராகிய முன்னாள் இராணுவ அதிகாரியாகிய மேஜர் ஜெனரல் ஜானக்க பெரேராவும் அவரது மனைவியாரும், மேலும் இரண்டு மாகாண சபை உறுப்பினர்களும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டிருப்பதாக அநுராதபுரம் பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.
இந்தச் சம்பவத்தில் தொலைக்காட்சி நிலையம் ஒன்றின் உள்ளுர் செய்தியாளராகிய ரஷ்மி மஃறூப் அவர்களும் கொல்லப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
மேலும் 84 பேர் இந்தச் சம்பவத்தில் காயமடைந்திருக்கின்றார்கள். காயமடைந்தவர்கள் அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களில் 15 பேர் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும் அநுராதபுரம் மருத்துவமனை பணிப்பாளர் தெரிவித்திருக்கின்றார்.
ஜானக்க பெரேரா
வடமத்திய மாகாண சபையின் புதிய எதிர்க்கட்சித் தலைவராகிய மேஜர் ஜெனரல் ஜானக்க பெரேரா அவர்களுக்கான புதிய அலுவலகத் திறப்பு விழா நடைபெற்று முடிந்து, முக்கியஸ்தர்கள் ஒன்றுகூடி பேசிக்கொண்டிருந்தபோது அங்கு அவசர அவசரமாகக் கூட்டத்தினுட்புகுந்து வந்துசேர்ந்த தற்கொலைக் கொலையாளியே இந்தக் குண்டுத் தாக்குதலை நடத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தத் தாக்குதலை விடுதலைப் புலிகளே நடத்தியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது. எனினும் இது குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.
இலங்கை தமிழர்கள் பாதிப்புகுள்ளாவது குறித்து இந்திய அரசு கரிசனை
இலங்கையின் வடபகுதியில் இடம்பெறும் தற்போதைய மோதல்களில் தமிழ் பொதுமக்கள் பலியாவது அதிகரித்துவருவதாக விபரித்து, அது தொடர்பாக புதுதில்லிக்கான இலங்கை துணைத் தூதரை அழைத்து, அவை தொடர்பிலான தமது கரிசனைகளை இந்தியா வெளியிட்டுள்ளது.
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாரயணனுக்கும், இலங்கை இராஜதந்திரியான பாலித கனேகொடவுக்கும் இடையிலான இந்தச் சந்திப்பில், இலங்கை பெரிய அளவில் சுயகட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், சிறுபான்மை தமிழ் மக்களிடையே அதிகரித்துவரும் பாதுகாப்பற்ற உணர்வுகளைப் போக்க முயற்சி செய்ய வேண்டும் என்றும் கேட்கப்பட்டதாக அதிகாரபூர்வ அறிக்கை ஒன்று கூறுகின்றது.
வடக்கில் தற்போது நடக்கும் இலங்கை படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்களில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
இரு நாடுகளையும் பிரிக்கும் பாக்குநீரிணை பகுதியில், இலங்கை கடற்படையினர் என்று கூறப்படுபவர்களால், இந்திய மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் தொடர்வதாகவும் இந்திய அதிகாரிகள் கடுமையான கவலையை வெளியிட்டுள்ளனர்.
இவ்விவகாரம் குறித்து தெற்காசிய அரசியல் விவகார ஆய்வாளரான ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியர் சஹாதேவன் வழங்கும் ஆய்வுக் செவ்வியை நேயர்கள் கேட்கலாம்.
பிரதமருடன் தமிழக முதல்வர் தொலைபேசி உரையாடல்
முன்னதாக, தமிழக முதல்வர் கருணாநிதி இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை தொலைபேசியில் தொடர்புகொண்டு இலங்கைத் தமிழர் பாதிக்கப்பட்டுவருவது குறித்து இந்திய அரசு இலங்கைத் தூதரை அழைத்து தனது கவலையையும் கண்டனத்தையும் வெளிப்படுத்த வேண்டும் என்று கோரியிருந்தார்.
இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியா தலையிட்டு போர்நிறுத்தத்தை வலியுறுத்த வேண்டுமென்று கோரி தமிழக மக்கள் இந்தியப் பிரதமருக்கு தந்தி அனுப்ப வேண்டுமென கருணாநிதி ஞாயிறன்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.
ஞாயிறன்றைய அறிக்கையிலும் திங்களன்றைய தொலைபேசி உரையாடலிலும் இலங்கையில் நடப்பதை 'இனப்படுகொலை' என்று கருணாநிதி வருணித்திருப்பது குறிப்பிடத்தக்கத
பிறப்பு, இறப்பு சான்றுக்கு அலைக்கழிப்பு அரசு மருத்துவமனையில் மக்கள் அவத
சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்குவதற்காக அமைக்கப்பட்ட மையம் வேலை நாட்களில் சரிவர திறக்கப்படாததால், சான்றிதழ் பெற வரும் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர்.சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதி மக்களுக்கு பிறப்பு, இறப்பு சான்றிதழ் மாநகராட்சி நிர்வாகம் மூலம் கடந்த ஆண்டுகளில் வழங்கப்பட்டு வந்தது. சேலம் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கும் மாநகராட்சியை அணுகியே சான்றிதழ் பெற வேண்டிய நிலை இருந்தது.அதை தவிர்க்கும் பொருட்டு, அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு உடனுக்குடன் சான்றிதழ் வழங்க சிறப்பு மையம் மருத்துவமனை வளாகத்திலேயே அமைக்கப்பட்டது.
மேயர் ரேகா பிரியதர்ஷினி, இம்மையத்தை கடந்த மாதம் திறந்து வைத்தார்.மாநகராட்சி நிர்வாகம் மூலம் பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெறாதவர்களுக்கு சான்று வழங்கும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. 1990ம் ஆண்டுக்கு பின் பிறந்த மற்றும் இறந்தவர்களுக்கு அதற்குரிய சான்றிதழ் வழங்கப்பட்டது. மூன்று நாட்கள் நடந்த இம்முகாமில் ஆயிரக்கணக்கானோர் சான்றிதழை பெற்றனர்.இந்த முகாம் நிறைவுக்கு பின், பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெறுவதில் பொதுமக்கள் சிலர் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அரசு மருத்துவமனையில் செயல்படும் சான்றிதழ் வழங்கும் மையத்தை மாநகராட்சி அதிகாரிகள் சரிவர திறப்பதில்லை, சான்றிதழ் கேட்டால் நாளை வாருங்கள் என இழுத்தடிப்பு செய்து அலைக்கழிக்கின்றனர்.அரசு மருத்துவமனையில் செயல்படும் சான்றிதழ் வழங்கும் மையம் நேற்று காலை முதல் திறக்கப்படவில்லை.
அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளின் பெற்றோர், சான்று பெறுவதற்காக மாநகராட்சி அலுவலகத்தில் பணம் செலுத்தி ரசீது பெற்று வந்தனர். இறப்பு சான்றிதழ் பெறவும் காலை 9 மணி முதல் பொதுமக்கள் காத்திருந்தனர். தொடர்ந்து அரசு மருத்துவமனை ஆர்.எம்.ஓ.,வை தொடர்பு கொண்டு கேட்டனர். அவர், "மாநகராட்சி அதிகாரிகள் வருவர். அங்கு காத்திருங்கள்' என கூறிவிட்டார்.இது குறித்து சேலம் பொன்னம்மாபேட்டையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் வெங்கடேஷ் கூறுகையில், ""கடந்த வாரம் அரசு மருத்துவமனையில் என் மனைவிக்கு பெண் குழந்தை பிறந்தது. பிறப்பு சான்றிதழ் பெறுவதற்காக மாநகராட்சியில் ரூ.12 கட்டணம் செலுத்தி ரசீது வாங்கி வந்தேன்.
அரசு மருத்துவமனையில் செயல்படும் மையம் காலை முதல் திறக்காமல் மூடப்பட்டு கிடக்கிறது. வேலையை விட்டு இங்கு வந்து காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது,'' என்றார். இதேபோறு பலரும் சான்றிதழ் பெற அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.மாநகராட்சி கமிஷனர் பழனிசாமியிடம் கேட்டபோது, ""அரசு மருத்துவமனை பிறப்பு, இறப்பு சான்றிதழ் மையத்தில் பதிவு செய்த அனைவருக்கும் சான்றிதழ் கிடைக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். சம்மந்தப்பட்ட உதவி ஆய்வாளரை அனுப்பி வைத்துள்ளேன். சான்று பெறாதவர்கள் பெற்றுக் கொள்ளலாம்,'' என்றார்.
Labels: நாட்டு நடப்பு
