தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

பாகிஸ்தானை விட்டு செல்ல மாட்டேன் : முஷாரப் உறுதியோ உறுதி

""நான் மிகவும் நேசிக்கும் நாடு பாகிஸ்தான். அந்த நாட்டை விட்டு எங்கும் செல்ல மாட்டேன். நான் வெளிநாட்டில் குடியேறப் போவதாக வெளியான செய்திகள் பொய்யானவை,'' என, பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் தெரிவித்துள்ளார். பதவி விலகிய, முஷாரப்பை நேற்று முன்தினம் சில பிரிவினர் சந்தித்துப் பேசினர்.
அப்போது அவர் கூறியதாவது: நான் அதிபர் பதவியிலிருந்து விலகியதை, தோல்வி அடைந்து விட்டதாகக் கருதக்கூடாது. நாடு மற்றும் மக்களின் நலன் கருதியே பதவி விலகினேன். நான் முதலில் நேசிப்பது பாகிஸ்தானைத்தான். அந்த நாட்டை விட்டு எங்கும் செல்ல மாட்டேன். வெளிநாட்டில் குடியேறும் எண்ணமும் இல்லை. கடந்த திங்கள் கிழமை நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்திய போது, தெரிவித்ததன் அடிப்படையில், நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பாக, விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடுவேன். எனது மகன் அமெரிக்காவில் நல்ல தொழிலதிபராகி இருப்பதால், நான் அங்கு செல்வதாக கூறப்படுவதில் உண்மையில்லை. இதையெல்லாம் ஆதாரமற்ற தகவல்கள். இவ்வாறு முஷாரப் கூறினார். இதற்கிடையில், முஷாரப்பிற்கு விதிமுறைகளின் அடிப்படையில் பாதுகாப்பு அளிக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக, அந்நாட்டின் உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக் கூறுகையில், "பாதுகாப்பு தொடர்பாக முஷாரப் சில வேண்டுகோள்களை விடுத்துள்ளார். விதிமுறைகளின் அடிப்படையில் அவருக்கு சிறப்பான பாதுகாப்பு அளிக்கப்படும்' என்றார்.
ஐ.எஸ்.ஐ.,யின் ஆதிக்கம் குறையும்: "அதிபர் பதவியிலிருந்து முஷாரப் விலகி விட்டதால், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,யின் ஆதிக்கம் குறையும். அதை தற்போதைய கூட்டணி அரசு அடக்கி வைக்கும்' என, ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
லண்டனில் அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது: காபூலில் இந்திய தூதரகத்தில் நடந்த தற்கொலை படை தாக்குதலில், பிரிகேடியர் அந்தஸ்திலான அதிகாரிகள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் பலியாயினர். இந்த தாக்குதல் சம்பவத் திற்கு பாக்., உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., யின் சதியே காரணம். பாகிஸ்தான் பிரதமர் கிலானி நல்ல மனிதர். நல்ல நோக்கங்களை கொண்டவர். அவர் ஐ.எஸ்.ஐ., அமைப்பை அடக்கி வைப்பார் என நம்புகிறேன். அப்படி செய்வது சர்வதேச சமுதாயத்திற்கு உதவுவதாக இருக்கும். இவ்வாறு கர்சாய் கூறினார்.

ஸ்பெயினில் விமான விபத்து : 146 பேர் பலி

ஸ்பெயின் ஏர் ஜெட் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மாட்ரிட் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 178 பயணிகளுடன் புறப்பட தயாரான விமானம் ஓடுபாதையில் திடீரென சறுக்கி எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தின் கீழ்ப்புற பகுதி தீப்பிடித்துக் கொண்டது. இந்த விபத்தில் 146 பேர் பலியாயினர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.

ஒலிம்பிக்கில் சுஷில்குமார் வெண்கலம்! * விஜேந்தர் வெற்றியால் இன்னொரு பதக்கம் உறுதி

இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் நேற்று மறக்க முடியாத நாள். மல்யுத்த போட்டியில் சுஷில் குமார் வெண்கலம் வென்று சாதித்துக் காட்டினார். குத்துச்சண்டையில் விஜேந்தர் குமார் வெற்றி பெற்று, பதக்க வாய்ப்பை உறுதி செய்துள்ளார். ஏற்கனவே அபினவ் பிந்த்ரா துப்பாக்கிச் சுடுதலில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இதன் மூலம் ஒலிம்பிக்கில் முதல் முறையாக இந்தியா, மூன்று பதக்கங்களை கைப்பற்றும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.
சீனத் தலைநகர் பீஜிங்கில் 29வது ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. இதில் 205 நாடுகளைச் சேர்ந்த சுமார் 11 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். துப்பாக்கிச் சுடுதல் 10 மீட்டர் "ஏர் ரைபிள்' பிரிவில் இந்திய வீரர் அபினவ் பிந்த்ரா தங்கப் பதக்கம் வென்றார். இதற்கு பிறகு டென்னிஸ் நட்சத்திரங்கள் பயஸ், பூபதி, சானியா மிர்சா போன்றோர் ஏமாற்றினார். நீளம் தாண்டுதலில் அஞ்சு ஜார்ஜ் தகுதிச் சுற்றில் வெளியேற, நிலைமை மோசமானது. இந்தச் சூழலில் நேற்று நடந்த மல்யுத்த போட்டியில் டில்லியைச் சேர்ந்த 25 வயதான சுஷில் குமார் நம்பிக்கை தந்தார்.
சாதித்தார் சுஷில்: ஆண்களுக்கான 66 கி.கி., "பிரீஸ்டைல்' பிரிவில் பங்கேற்ற சுஷில் குமார் முதல் சுற்றில் உக்ரைனின் ஆன்ட்ரி ஸ்டாட்னிக்கிடம் தோல்வி அடைந்தார். ஆனாலும் "ரெபிசேஜ்' (வைல்ட் கார்ட் போன்றது) அடிப்படையில் அடுத்த சுற்றில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றார். இதில் அசத்தலாக செயல்பட்டார் சுஷில். துவக்கப் போட்டியில் அமெரிக்காவின் டக் ஸ்கவாபை வீழ்த்தினார். அடுத்த சுற்றில் பெலாரசின் ஆல்பர்ட் பாதிரோவை வென்றார். இதையடுத்து இரண்டு வெண்கலப் பதக்தங்கள் அடங்கிய அரையிறுதிக்கு முன்னேறினார். இதில் கஜகஸ்தானின் லியானிட் ஸ்பிரிடோனோவை சந்தித்தார். வென்றால்...வெண்கலம் உறுதி என்ற நிலையில் மிகுந்த துடிப்பாக செயல்பட்டார் சுஷில். இவரது இரும்புப் பிடியில் இருந்து லியானிட் தப்ப முடியவில்லை. தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய சுஷில் குமார் 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கலம் வென்றார். துருக்கியின் சாகின் ரமசான் தங்கம், உக்ரைனின் ஆன்ட்ரி ஸ்டாட்னிக் வெள்ளி வென்றனர். மற்றொரு வெண்கலப் பதக்கத்தை ஜார்ஜியாவின் ஓடார் துஷிஷ்விலி பெற்றார்.
ஜாதவுக்கு பிறகு: கடந்த 1952, ஹெல்சின்கி ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற ஜாதவுக்கு பிறகு மல்யுத்தத்தில் பதக்கம் பெறும் இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை சுஷில் குமார் பெற்றுள்ளார். இதே 1952ல் நடந்த ஹாக்கியில் இந்திய அணி தங்கம் வென்றது. இதன் மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் 56 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் இந்தியாவுக்கு இரண்டு பதக்கங்கள்(பிந்த்ரா, சுஷில் குமார்) கிடைத்துள்ளன.
விஜேந்தர் அபாரம்: தவிர நேற்று நடந்த குத்துச்சண்டை 75 கி.கி., "மிடில் வெயிட்' காலிறுதியில் இந்தியாவின் விஜேந்தர் குமார், ஈகுவடாரின் கார்லஸ் கங்கோராவை வீழ்த்தினார். இதையடுத்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ள விஜேந்தர் குறைந்தபட்சம் வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்துள்ளார். இவர் தொடர்ந்து சூப்பராக "குத்து' விட்டால் தங்கம் வென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
வாழ்த்து, பரிசு மழை: வெண்கலம் வென்ற சுஷில் குமாருக்கு ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ரயில்வேயில் "டிக்கெட் இன்ஸ்பெக்டராக' பணிபுரியும் இவரை துணை "கமர்ஷியல் மேனேஜராக' பதவி உயர்த்துவதாக மத்திய அமைச்சர் லாலு தெரிவித்துள்ளார். தவிர ரூ. 55 லட்சம் பரிசு வழங்குவதாகவும் அறிவித்துள்ளார். இதைத் தவிர அரியானா அரசு ரூ. 25 லட்சம், டில்லி அரசு ரூ. 50 லட்சம் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளன.

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive