தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

உடல் உறுப்புகளை தானமாக வழங்கிய மாணவனுக்கு கண்ணீர் அஞ்சலி

திருக்கழுக்குன்றம் விபத்தில் இறந்த டாக்டர் மகன் உடலுக்கு பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். மகனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்கிய டாக்டர் தம்பதியை அனைவரும் பாராட்டினர்.



திருக்கழுக்குன்றம் ஆசிரியர் நகரைச் சேர்ந்தவர் அசோகன்; இவரது மனைவி புஷ்பாஞ்சலி; இருவரும் டாக்டர்கள். திருக்கழுக்குன்றம் அடிவார வீதியில் கிளினிக் வைத்துள்ளனர். இவர்களின் மூத்த மகன் இதயேந்திரன்(15); செங்கல்பட்டு செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தான். இளைய மகன் லஷ்மண்(11) அதே பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த 20ம் தேதி மாலை, பெற்றோர் கிளினிக்கில் இருந்தனர். சகோதரர்கள் வீட்டில் இருந்தனர். இதயேந்திரன் குளிர்பானம் வாங்க வெளியில் செல்ல முடிவு செய்தான். மோட்டார் சைக்கிளில் செல்ல, கிளினிக்கிலிருந்த அம்மாவிடம் அனுமதி கேட்டான். அவர், அப்பாவிடம் கேட்டுவிட்டு, ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் செல்லும்படி கூறினார். இதயேந்திரன், தந்தையிடம் கேட்காமல் மோட்டார் சைக்கிளில் வெளியில் சென்றான்.



வீடு திரும்பும் வழியில், சாலையோரம் நின்றிருந்த மீன்பாடி வண்டி மீது மோட்டார் சைக்கிள் மோதியது. பலத்த காயமடைந்த இதயேந்திரன், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தான். அவனது பெற்றோர், இறந்த மகனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்கினர். இதயேந்திரனின் உடல், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் கொண்டு வரப்பட்டது. பரிசோதனை முடிந்து, இரவு 8 மணிக்கு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. நேற்று டாக்டர் வீட்டில், அவரது மகன் உடலுக்கு அஞ்சலி செலுத்த, நகரின் முக்கியப் பிரமுகர்கள், பொதுமக்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் திரண்டனர். இதயேந்திரன் உடலுக்கு மலர் வளையம் வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். டாக்டர் வீட்டின் அருகில் வசிக்கும் சிறுவன் அசோகன் வந்ததும், டாக்டர் மனமுடைந்து அழுதார். "உன்னுடைய நண்பன் எல்லாரையும் விட்டுவிட்டு போய்விட்டான். நீங்கள் பெற்றவர்களை தெய்வமாக மதித்து நடந்து கொள்ளுங்கள். அவர்களின் அறிவுரையைக் கேளுங்கள்' என்றார்.



பின் அவர், நமது நிருபரிடம் கூறியதாவது: இதயேந்திரன் டாக்டருக்கு படிக்க மறுத்துவிட்டான். எனவே, கம்ப்யூட்டர் இன்ஜினியராக்க முடிவு செய்தோம். அவன் இப்போது இல்லை. மனிதனுக்கு மூளை இறந்துவிட்டால் 10 நாட்களில் உயிரிழப்பது நிச்சயம். இடைப்பட்ட நாட்களில், மற்ற உறுப்புகள் உயிரோடு தான் இருக்கும். எங்கள் மகன் இறந்துவிட்டாலும் அவனது உறுப்புகளால் மற்றவர்கள் பிழைக்கட்டும்; அவர்கள் மூலம் எங்கள் பையனும் வாழ்ந்துகொண்டு தான் இருப்பான். அவன் இறந்துவிட்டான் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.



தொழிலில் பிசியாக இருந்ததால் அவனை கவனிக்க முடியாமல் இழந்துவிட்டேன். விபத்தில் காயமடைந்ததும், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஓடோடி வந்த திருக்கழுக்குன்றம் அரசு மருத்துவமனை டிரைவருக்கு நன்றி. அவர் வந்திருக்காவிட்டால் அங்கேயே இறந்து, மற்றவர்கள் பிழைக்க வாய்ப்பு இருந்திருக்காது. குழந்தைகள், வாகனத்தை திருட்டுத்தனமாக ஓட்டிச் செல்லக்கூடாது. மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்தே செல்ல வேண்டும். இவ்வாறு டாக்டர் அசோகன் கூறினார்.



இதயேந்திரனின் பள்ளி தோழர்கள் அருண், பிரவீன் ஆகியோர் கூறும்போது, ""நல்ல பழக்கவழக்கங்களுக்கு இதயேந்திரனை உதாரணமாகச் சொல்லலாம். யாரிடமும் வம்பு செய்ய மாட்டான். இரக்க குணம் உண்டு. ஏதேனும் தேவை என்று சொன்னால் தனது பணத்தில் வாங்கி கொடுப்பான். படிப்பிலும் திறமையானவன். என்.சி.சி., ஸ்கவுட் செயல்பாடுகளில் விருது வாங்கியுள்ளான்,'' என்றனர். டாக்டர் அசோகன், திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த எழில் கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை சுப்பிரமணி; பெங்களூரில் இன்ஜினியராகப் பணிபுரிந்தவர். அசோகன் இரண்டாவது மகன். செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் படித்தார்.



இலவச மருத்துவ முகாம்களுக்கு அதிகம் செல்வார். திருக்கழுக்குன்றத்தில் கிளினிக் நடத்திய டாக்டர்கள், கிளினிக்கிற்கு வரமுடியாத நிலையில், மாணவராக இருந்த அசோகனை தங்கள் மருத்துவமனைக்கு வரவழைத்தனர். திருக்கழுக்குன்றத்திற்கு அடிக்கடி சென்ற அசோகன், அங்கு ஏழைகள் அதிகளவில் இருப்பதைக் கண்டார். எனவே, படிப்பு முடித்ததும் அங்கேயே கிளினிக் துவக்கினார்.



அப்பல்லோவில் உறங்கும் உறுப்புகள்: மூளைச் சாவு ஏற்பட்டு இறந்ததாக அறிவிக்கப்பட்ட இதயேந்திரனின் உடல் உறுப்புகள், அப்பல்லோ மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் செரியன் வேண்டுகோளின்படி, அவரது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி அபிராமிக்கு, இதயேந்திரனின் இதயம் பொருத்தப்பட்டது. இறந்த சிறுவனின் அனைத்து உறுப்புகளையும் அவனது பெற்றோர் தானமாக வழங்கியுள்ளனர். கிட்னி, கல்லீரல், எலும்பு மஜ்ஜை ஆகியவை அகற்றப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. கண்கள் இரண்டும் நேற்று முன்தினமே அகற்றப்பட்டு, சங்கர நேத்ராலயா மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டன.



கிட்னி, கல்லீரல் உறுப்புகள், தேவைப்படுவோருக்கு பொருத்தப்பட உள்ளன. புற்றுநோயால் அவதிப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக எலும்பு மஜ்ஜை பயன்படுத்தப்பட உள்ளது. உறுப்பு தானம் குறித்து சிறுவனின் பெற்றோர் கூறுகையில், ""இதயேந்திரனின் உறுப்புகள் யாருக்குப் பொருத்தப்படுகின்றன என தெரிந்துக் கொள்ள நாங்கள் விரும்பவில்லை. ஆனால், அவர்கள் பிழைத்தது என் மகனால் தான் என்பதை அறிந்து, அவனை புகழ வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்,'' என கண்ணீர் மல்கக் கூறினர்.



20 கி.மீ., தூரம்; 120 கி.மீ., வேகம்; 12 நிமிடம்: கர்நாடக மாநிலம் பெங்களூரு ராமச்சந்திராபுரத்தில் வசிக்கும் தமிழ் தொழிலதிபர் சேகரின் மகள் அபிராமி(9). பிறந்தது முதல் சுட்டியாக, மற்ற குழந்தைகள் போல் இருந்த அபிராமிக்கு, திடீரென மூச்சடைப்பு, கால்வீக்கம், உணவு சாப்பிடுவதில் சிரமம், மயக்கம், மார்புவலி என தொடர் பாதிப்புகள் ஏற்பட்டன. பெற்றோர், அங்குள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். நாள்கணக்கில் அலைந்தும் மகளின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை. சென்னைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளிக்க அவர்கள் முடிவு செய்தனர். சில நாட்களுக்கு முன், சென்னை முகப்பேரில் உள்ள பிராண்டியர் லைப் லைன் மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்து வந்தனர்.



அங்குள்ள டாக்டர்கள், சிறுமிக்கு பல்வேறு உடல் சோதனைகள் மேற்கொண்டனர். அப்போது சிறுமி அபிராமி, "டைலேட்டர் கார்டியோ மையோபதி' என்ற இதய நோயால் பாதிக்கப்பட்டிருப்பதை அவர்கள் உறுதி செய்தனர். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருந்து, மாத்திரை உட்கொண்டாலும் பலன் இருக்காது என்பதை சிறுமியின் பெற்றோரிடம் டாக்டர்கள் எடுத்துக் கூறினர். இருப்பினும் ஸ்டெம் செல் தெரபி சிகிச்சை (எலும்பில் உள்ள செல்களை பயன்படுத்தி சிகிச்சை அளிக்கும் முறை), சிறுமிக்கு பலனளிக்குமா என்பது குறித்து டாக்டர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.



தற்போதைய நிலையில், அதுவும் சிறுமியின் உயிர் காக்க உதவாது என்ற முடிவுக்கு டாக்டர்கள் வந்தனர். கடைசியாக இதய மாற்று சிகிச்சை மட்டுமே இப்பிரச்னையை தீர்க்கும் என்ற தகவலை அபிராமியின் பெற்றோரிடம் டாக்டர்கள் தெரிவித்தனர். என்ன விலை கொடுத்தாலும் வாங்க முடியாத உறுப்பை டாக்டர்கள் கேட்டதும் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், செய்வதறியாது திகைத்தனர். பத்து மாதம் சுமந்து பெற்று ஒன்பது ஆண்டுகள் பாசத்தைக் கொட்டி வளர்த்த தங்கள் மகள் உயிர் பிழைக்க, இறைவனிடம் சிறுமியின் பெற்றோர் வேண்டினர்.



அந்த நேரத்தில் தான், விபத்தில் மூளை செயல்பாடு இழந்த டாக்டர் தம்பதியர் மகன் இதயேந்திரனின் இதயம், சிறுமி அபிராமிக்கு உயிர் கொடுக்க துடித்துக்கொண்டு இருப்பது தெரிந்தது. 20 நிமிடங்களுக்குள் இதயம் தனது கைக்கு கிடைத்தால், சிறுமியை மீண்டும் சுட்டிக்குழந்தை ஆக்க முடியும் என்று பிராண்டியர் லைப் லைன் மருத்துவமனையின் இயக்குனர் செரியன் நம்பிக்கை தெரிவித்தார். இதையடுத்து தான் அந்த இதயம், அப்பல்லோ மருத்துவமனை அறுவை சிகிச்சை அரங்கில் இருந்து 20 கி.மீ., தூரத்தை 12 நிமிடத்தில் 120 கி.மீ., வேகத்தில் கடந்து முகப்பேரில் உள்ள பிராண்டியர் லைப் லைன் மருத்துவமனையை வந்தடைந்தது.



டாக்டர் செரியன் தலைமையிலான டாக்டர்கள் 45 நிமிடம் போராடி, சிறுமி அபிராமிக்கு இதய மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர். தொடர்ந்து ஒரு மணிநேரம் சிறுமிக்கு இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டன. அப்போதில் இருந்தே, இதயம் கொடுத்த சிறுவன் இதயேந்திரனையும் அதற்கு பெரிய மனதுடன் சம்மதித்த அவனது பெற்றோர்களான டாக்டர் தம்பதியையும், சிறுமி அபிராமியின் உறவினர்கள், கடவுளாக நினைத்து வணங்கினர்.



இதயம் இடம் மாறியது எப்படி?: இதய மாற்று அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒப்பானது தான். அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், கனடா போன்ற வெளிநாடுகளில் இந்த சிகிச்சை சர்வசாதாரணம் ஆகிவிட்டது. பெரியவர்களை விட குழந்தைகளுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வது மிகச்சிரமம். இதய மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், தொடர்ந்து 10 நாட்கள் டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்க வேண்டும்.



அந்த நாட்களில், சிகிச்சை பெற்றுக்கொண்டவருக்கு எலும்பு சோதனை, எக்ஸ்ரே மற்றும் ஈ.சி.ஜி., சோதனைகள், நடப்பதற்கான சோதனை, ரத்த அழுத்த சோதனை, எலக்ட்ரோ கார்டியோகிராம் எனப்படும் இதயத் துடிப்பு சோதனைகள் உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும். அதன்பிறகே சிகிச்சை பெற்றுக்கொண்ட நோயாளிகள், வீட்டிற்கு அனுப்பப்படுவர். தொடர்ந்து, ஆண்டுக்கு ஒரு முறையாவது அவர்கள் இந்தச் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும். இது மட்டுமின்றி, நாள்தோறும் இரண்டு வேளை என, வாழ்நாள் முழுவதும் சைக்ளோஸ் போரிக், இமுரான், பிரட்னி சொலோன் ஆகிய மருந்துகளையும் அவர்கள் உட்கொள்ள வேண்டும்.



மாற்று உடலில் இருந்து பெற்ற இதயம் சீராக செயல்படுவதற்கு இந்த மருந்துகள் உதவுகின்றன. ஒருவரது உடலில் இருந்து எடுக்கப்படும் இதயம், நான்கு மணி நேரம் வரை செயல்படும். இந்த நான்கு மணி நேரத்திற்குள்ளேயே இதயத்தின் செயல்பாட்டில் மாற்றம் தெரியும். அதனால், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் மாற்று உடலில் இதயத்தை பொருத்திவிட வேண்டும். ஒரு முறை ஒருவரது உடலில் இருந்து எடுத்து மாற்று அறுவை சிகிச்சை செய்த இதயத்தை, மீண்டும் மற்றவர் உடலில் பொருத்த முடியாது. மாற்று அறுவை சிகிச்சை பெற்றவர் உடலில் இதயத்திற்கும், சதைகளுக்கும் இடைவெளி குறைந்துவிடுவது தான் இதற்கு முக்கிய காரணம் என்கின்றனர் இதய சிகிச்சை நிபுணர்கள்.



சாதனை: கடந்த 1995ம் ஆண்டு, சென்னையைச் சேர்ந்த 24 வயது வாலிபருக்கு டாக்டர் செரியன் இதய மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளார். அவரிடம் சிகிச்சை செய்துகொண்ட அந்த நபர், இப்போது எந்தப் பிரச்னையும் இல்லாமல் தற்போது உள்ளார். இதேபோல 2000ம் ஆண்டில், இந்தியாவிலேயே முதல் முறையாக 11வயது சிறுவனுக்கு, இதயமாற்று சிகிச்சையை செரியன் செய்து, சாதனைப் படைத்தார். தொடர்ந்து இந்தியாவில் இரண்டாவது முறையாக 9 வயது சிறுமிக்கு அவர் மீண்டும் இதயமாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனைப் படைத்துள்ளார்.

இன்போசிஸ் திடீர் முடிவு

இன்போசிஸ் நிறுவனம் இந்த ஆண்டு வேலைக்கு ஊழியர்களை சேர்ப்பதை 29 சதவீதம் குறைக்க முடிவு செய்துள்ளது.
கடந்த ஆண்டு இந்த நிறுவனம் 35,000 ஊழியர்களை சேர்த்த இந்த நிறுவனம், இந்த ஆணடு இதை 25,000 ஆகக் குறைக்க முடிவு செய்துள்ளதாக இன்போசிஸ் அறிவித்துள்ளது. இது கிட்டத்தட்ட 29 சதவீதம் வெட்டு ஆகும்.
இந்த 25,000 பேரில் 18,000 பேரை கேம்பஸ் இன்டர்வியூக்கள் மூலம் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் துணைத் தலைவரும் எச்.ஆர். பிரிவின் தலைவருமான நந்திதா குஜ்ஜார் கூறினார்.
அடிப்படை கட்டமைப்பு வசதியின்மை மற்றும் பிஸினஸ் திட்டங்களில் ஏற்பட்டுள்ள சில மாற்றங்களே இதற்குக் காரணம் என்றார். ஆனால், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார தேக்கத்தால் ஊழியர்கள் சேர்ப்பை குறைக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

33.4 கோடி தொலைபேசிகள்

நமது நாட்டில் உள்ள தொலைபேசி இணைப்புகளின் மொத்த எண்ணிக்கை, கடந்த மாத இறுதியில் 33.48 கோடியை தொட்டது. ஜூன் மாதத்தில் இது 32.57 கோடியாக இருந்தது. நடப்பாண்டு ஜூலை மாதத்தில் மட்டும் மொத்தம் 90 லட்சம் புதிய தொலைபேசி இணைப்புகள் (வயர்லைன் மற்றும் வயர்லெஸ்) தரப்பட்டுள்ளன. ஜூன் மாதத்தில் பெறப்பட்ட இணைப்புகளின் எண்ணிக்கை 88 லட்சமாகும். ஒட்டுமொத்த தொலைத் தொடர்பு அடர்த்தி ஜூலை மாதத்தில் 29.08 விழுக்காட்டை எட்டியுள்ளது. இது ஜூன் மாதத்தில் 28.33 விழுக்காடாக இருந்தது. அகண்ட அலைவரிசை வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 45.7 லட்சத்தை எட்டியுள்ளது.

ரிசர்வ் வங்கியின் புது ஆளுநர்

ரிசர்வ் வங்கியின் அடுத்த ஆளுநராக நிதித் துறை செயலர் டி .சுப்பாராவ் பதவியேற்கிறார்.
தற்போது ஆளுநராக உள்ள ஒய்.வி.ரெட்டியின் பதவிக் காலம் விரைவில் நிறைவடைவதை ஒட்டி, சுப்பாராவ் புதிய ஆளுநராகப் பதவியேற்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஐசிஐசிஐ திவால்?: திடீர் புரளி

ஐசிஐசிஐ வங்கி திவால் ஆகி விட்டதாகத் தூத்துக்குடி மாவட்டத்தில் வதந்தி பரவியதால் வங்கிக் கிளைகளில் வாடிக்கையாளர்கள் நூற்றுக்கணக்கில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அமெரிக்காவின் முன்னணி முதலீட்டு வங்கியான லேமேன் பிரதர்ஸ் திவால் ஆகிவிட்டது. இதையடுத்து உலக பங்குச் சந்தைகளில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சிட்டி வங்கியின் கிரெடிட் கார்டுகளை ஏற்க சென்னை உள்ளிட்ட நகரங்களில் உள்ள வணிக நிறுவனங்கள் மறுத்து வருகின்றன. இதனால் சிட்டி வங்கியின் கிரெடிட் கார்டுகளை வைத்திருப்போர் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
இதற்கிடையே, இந்தியாவின் முன்னணி வங்கியான ஐசிஐசிஐ வங்கி திவால் ஆகி விட்டதாக வதந்தி பரவியதை அடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் பரபரப்பு காணப்பட்டது. பங்குச் சந்தை வீழ்ச்சி எதிரொலியால், ஐசிஐசிஐ வங்கியும் திவால் ஆகி விட்டதாக செப்.17 அன்று காலை தூத்துக்குடி, திருச்செந்தூர், வீரபாண்டியன்பட்டினம் ஆகிய பகுதிகளில் வதந்தி பரவியது.
இதையடுத்து இந்த வங்கிகளில் கணக்கு வைத்துள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் கிளைகளில் குவிந்தனர். ஏடிஎம் மையங்களிலும் நீண்ட கியூ வரிசையில் நின்று பணம் எடுத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
அவர்களிடம் இது வெறும் வதந்தியே, ஐசிஐசிஐ வங்கி திவால் ஆகவில்லை, நல்ல நிலையில்தான் உள்ளது, யாரும் பீதி அடைய வேண்டாம் என வங்கி அதிகாரிகள் விளக்கிய பின்னரே பாதி மனதுடன் வாடிக்கையாளர்கள் கலைந்து சென்றதாகக் கூறப்படுகிறது.

பாதிப்பில்லை: ஐசிஐசிஐ வங்கி

அமெரிக்க நிதி நெருக்கடியால் எந்த பாதிப்புமில்லை என்று ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, ஐசிஐசிஐ வங்கியின் இணை நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிதி அதிகாரி சந்தா கோச்சார் விடுக்கும் அறிக்கை வருமாறு:
3.6.2008 அன்றைய நிலவரப்படி ஐசிஐசிஐ வங்கி மற்றும் அதன் சார்பு நிறுவனங்கள் மொத்த சொத்து மதிப்பு 4,84,643 கோடி ரூபாயாக உள்ளது.
ஐசிஐசிஐ வங்கி யுகே பிஎல்சியின் சொத்து மதிப்பு அன்றைய தேதியில் 8.7 மில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது.
லேமன் பிரதர்ஸ் நிறுவனத்தில் ஐசிஐசிஐ வங்கி பிஎல்சியின் முதலீடான 57 மில்லியன் யூரோ (தோராயமாக 80 மில்லியன் டாலர்) என்பது ஐசிஐசிஐ வங்கி யுகே பிஎல்சியின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பில் 0.1 சதவிகிதத்திற்கும் குறைவாகும். இந்தப் பத்திரங்களுக்கு எதிரான முதலீட்டில் 12 மில்லியன் டாலருக்கு நிகரான ஒதுக்கீட்டை ஐசிஐசிஐ யுகே பிஎல்சி ஏற்கெனவே பெற்றுள்ளது.
50 சதவிகிதத்தைத் திரும்பப் பெறும் வாய்ப்பைக் கணக்கிட்டால் தேவைப்படும் கூடுதல் ஒதுக்கீடு என்பது 28 மில்லியன் டாலராக மட்டுமே இருக்கும். எனவே லேமன் பிரதர்ஸ் முதலீட்டில் ஐசிஐசிஐ வங்கிக்கோ அல்லது ஐசிஐசிஐ வங்கி யுகே பிஎல்சிக்கோ வேறு எந்தப் பாதிப்புமில்லை.

செல் துறையில் புதிய மாற்றம்

ஒரு நிறுவனத்தின் மொபைல் போன் சர்வீஸிலிருந்து வேறு நிறுவன சேவைக்கு மாறினாலும், வாடிக்கையாளர் பழைய மொபைல் எண்ணையே தெதடர்ந்து பயன்படுத்தும் வகையிலான திட்டம் (Mobile Number Portability) அடுத்த ஆண்டு இந்தியாவில் அமலாக்கப்பட உள்ளது.
உதாரணத்துக்கு ஏர்டெல்லிலிருந்து நீங்கள் பிஎஸ்என்எல்லுக்கு மாறினாலும் உங்கள் பழைய ஏர்டெல் எண்ணையே தொடர்ந்து உபயோகிக்க முடியும். அதேபோல் பிஎஸ்என்எல்-இலிருந்து ஏர்டெல்லுக்கு மாறினாலும், உங்கள் பழைய பிஎஸ்என்எல் எண்ணையே உபயோகிக்கலாம்.
அடுத்த ஆண்டு ஜூன் மாதம் முதல் இந்த சேவையை அறிமுகப்படுத்த இந்திய தொலைத் தொடர்புத் துறை உத்தேசித்துள்ளது. இத்தகவலை மத்திய தொலைத் தொடர்புத் துறை செயலாளர் சித்தார்த் பெஹ�ரா தெரிவித்தார்.
வரும் 2015ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் மொபைல் போன் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை நிச்சயம் 100 கோடியைத் தொட்டுவிடும் என இந்திய மொபைல் போன் ஆபரேட்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை மொபைல் போன் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 30 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல் கட்டணம் 33% குறைப்பு

2008 நவம்பர் 1 முதல் செல்பேசி கட்டணம் 33 சதவீதம் வரை குறைக்கப்படும் எனத் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் அறிவித்துள்ளது.
மேலும் அவுட்கோயிங் மற்றும் ரோமிங் கட்டணங்கள் அடியோடு ரத்து செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாத வாடகையும் 20 சதவீதம் குறைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் செல்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தொலைபேசி துறை இந்த அதிரடி விலைகுறைப்பில் இறங்கி உள்ளது.
இந்த விலைகுறைப்பு நவம்பர் 1 முதல் அமலுக்கு வரும் எனவும் கூறப்பட்டுள்ளது

கொடுமை - கின்னஸ் படுத்தும்பாடு


பணபைத்தியங்களைகேள்விப்பட்டிருப்பீர்கள். இதுபுகழ்பைத்தியங்களைக்குறித்தது.
கீழேகாணும் படத்தை பாருங்கள் - வெறும் 15 மாதமே ஆன பச்சிளங் குழந்தையை தண்ணீரில் போட்டு கொடுமைப்படுத்துவதை.
சென்னை, திருவல்லிக்கேணி வி.ஆர்.பிள்ளை தெருவை சேர்ந்த தம்பதி கமலாகர், விஜயலட்சுமி. இவர்களது மகன் மஹாரந்த் கமலாகர். பிறந்து 15 மாதங்களே ஆன இந்த பச்சிளங் குழந்தையை கின்னஸில் இடம் பிடிக்க வைக்க வேண்டும் என்பதற்காக விஜயலட்சமியின் தம்பி அருண் பாலாஜியிடம் நீச்சல் பயிற்சி எடுக்க வைத்து வருகின்றனர்.
சென்னை காஸ்மோபாலிடன் கிளப்பில் நேற்று மாலை கின்னஸில் இடம் பிடிப்பதற்காக இப்பச்சிளங் குழந்தையை வைத்து பாலாஜி முயற்சி மேற்கொண்டார். இந்த கொடுமையை பார்க்க பலர் அங்குள்ள நீச்சல் குளத்தின் முன் கூடியிருக்கின்றனர். குழந்தை மஹாரந்த் நான்கு மீட்டர் தூரம் மூச்சடைத்து நீந்தியதைப் பார்த்து கூடியிருந்தவர் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
குழந்தையின் தாயார், “ஆஸ்திரேலியாவில் இரண்டரை வயது குழந்தை ஒன்று தண்ணீரில் கை, கால்களை அசைத்து மிதப்பதை பார்த்தோம். அப்போது எங்களுக்கு மஹாரந்த்தையும் குறைந்த வயதில் நீந்த வைக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அவனுக்கு ஒரு வயது ஆன போது நீச்சல் குளத்தில் தண்ணீரில் போட்டோம். அவன் அழவில்லை. நீச்சலடிப்பதில் அவனிடம் முன்னேற்றம் தெரிந்தது. இதையடுத்து அவனுக்கு பயிற்சியளித்து வருகிறோம். தினசரி ஒரு மணி நேரம் பயிற்சி மேற்கொள்வான். எனது மகன் சிறந்த நீச்சல் வீரனாகி, பல்வேறு நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு விருதுகள் பெற வேண்டும் என ஆசைப்படுகிறேன்.” என்று கூறினார்.

பிரபஞ்சம் தோன்றியது எப்படி?

நம்முடைய பிறந்த நாளை நம்முடைய பெற்றோர்கள் கூறித்தான் நமக்குத் தெரியும். இது போலவே, அவர்களின் பிறந்தநாளை அவர்களது பெற்றோர் கூறி அவர்களுக்குத் தெரியும்.இப்படியே கூறிக்கொண்டே போகலாம். என்றாலும், நமது மூதாதையர்களைப் பற்றிய வரலாற்றை இரண்டு அல்லது மூன்று தலைமுறைக்கு மேல் நாம் அறிந்திருக்க முடியாது!நமது மூதாதையர்களுக்கும் முன்னோடியாக குரங்கு இனம் இருந்து வந்ததாக அறிவியல் கூறுகிறது. (சார்லஸ் டார்வின் தமது ஆய்வில் குறிப்பிடுகிறார்) இதையே நாம் ஒப்புக்கொண்டு மேலும் விவரங்கள் அறிய முற்படுவோமேயானால்:இவர்கள் காலத்திற்கும் முன்னால் நமது உயிர்த்தோற்றம் அமீபாக்கள் என்று கூறப்படும் சின்னஞ்சிறு உயிர்களில் தோன்றி, காலப்போக்கில் இரு கால்களும், அவற்றில் பத்து விரல்களும், இவைகளை இயக்கும் நரம்புத் தொடர்களும், இவைகளின் மூலம் இயக்கப்படும் ஒரே ஒரு மூளையும், இந்த மூளையில் அடங்கப்பெற்ற செல்களைத் துளைத்தெடுக்கும் பல்வேறு கேள்விகளும், அதற்குப் பதில்களும் கூறக்கூடிய மனித இயந்திரமாக இன்று மனிதன் உருவகப்பட்டிருக்கிறான்.பிரபஞ்சத்தில் நிகழப்பெற்ற எந்த ஒரு கேள்விகளுக்கும் - பிரச்சினைகளுக்கும் பதில் கூறும் ஒரே ஒரு உயிர் “மனிதன்” மட்டும்தான் என்பதை பெருமையோடு ஒப்புக்கொள்வோம்.இன்று நம் முன்னே தோன்றப்படும் எந்த ஒரு பொருளை எடுத்துக்கொண்டாலும் அது எப்படித் தோன்றியது என்ற வினா எழுப்பி, அதற்குப் பதில் கூறும் நிலையில் இன்று அறிவியலில் வளர்ந்திருக்கிறான் மனிதன்.அந்த அடிப்படையில் இப்பிரபஞ்சப் பொருட்களின் தோற்றம் எப்படித் தோன்றியது? என்று பல்வேறு அறிஞர் பெருமக்கள் தமது ஆராய்ச்சி மூலம் கருத்துகளை வெளியிட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.அந்தக் கருத்துகளை இங்கே பகிர்ந்து கொள்வதுடன், நமது கருத்துகளையும் முன்வைக்க கடமைப்பட்டுள்ளோம்.பிரபஞ்சம் உருவான கட்டத்தில் மிகப் பெரிய வெடிப்பு ஏற்பட்டிருக்க வேண்டும்; அப்படி ஏற்பட்ட வெடிப்பின் மூலம் சிதறி ஓடப்பெற்ற பொருட்கள் இந்த நிமிடம் வரை விண்வெளியில் தொடர் ஓட்டமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்று கூறுகிறார் பெல்ஜிய வான ஆராய்ச்சியாளர் ஷேர்த் லேமாத்ரே (Georges Lemaitre) என்ற அறிஞர்.
நினைத்துப் பார்க்க முடியாத அமுக்கத்தில்; அதாவது, ஒரு தேக்கரண்டி அளவுள்ள பொருள் கிட்டத்தட்ட 10 கோடி டன் எடையுள்ளதாக இருந்தால் எந்த அளவுக்கு அமுக்கம் நிறைந்திருக்குமோ அந்த அளவு திணிவு கொண்ட பொருளாக இருந்து, “பெரும் டமார்” என்ற சத்தத்துடன் வெடித்துச் சிதறியிருக்க வேண்டும்; என்று கூறும் அவர்,இந்நிகழ்வு ஏற்பட்டு கிட்டத்தட்ட எழுநூறு கோடி ஆண்டுகள் கடந்திருக்கும் என்கிறார்.
பிரபஞ்சம் மேலும் மேலும் பெரிதாகி வரும் நிகழ்வினை கவனிக்கிற போது, அது புறப்பட்ட ஆரம்பம் என்று ஒன்று இருந்து அதிலிருந்து தொடர் ஓட்டமாக விரிந்துகொண்டே செல்கிறது என்று கூறுகிறார்.பிரபஞ்சம் உருவாகி எழுநூறு கோடி ஆண்டுகள் இருக்கலாம், என்ற இக்கருத்தில் சில தவறுகள் தொக்கிக் கொண்டிருக்கின்றன.ஒரு ஆண்டு என்பதே பூமியின் 365 சுற்றுக்களுக்குள் நிறைவடையும் ஒரு அலகு. பொருள் வெடித்து, அது சிதறி ஓடி, ஓடிய பாதையில் ஆங்காங்கே நட்சத்திரங்களாகவும், கிரகங்களாகவும் இடம் பெற்று அது தன்னைத் தானே சுற்றிக்கொண்டதில் கணிக்கப்பட்டது தான் நமது பூமியின் தோற்றம். ஒரு ஆண்டு கணக்கு.பூமியின் 365 சுழற்சி கொண்டதுதான் ஒரு வருடம் என கணக்கிட்டு, அதை நமது நடைமுறைக்கு வழமையாக்கி வருகிறோம்.எனவே இந்தச் சுழற்சி கணக்கீட்டின் மூலம் பிரபஞ்சத் தோற்றம் ஏற்பட்ட காலக்கணக்கை வகைப்படுத்துவது என்பது எப்படிப் பொருந்தும்? எனவே,இக்கருத்து சரியானது இல்லை.திணிவு மிக்க மொத்தை உருவம் ஒன்று வெடித்துச் சிதறி, ஓடியதின் தொடரில் தான் பிரபஞ்சப் பொருள் அனைத்தும் உருவாகியிருக்க வேண்டும் என்ற இக்கருத்து அமெரிக்கப் பவுதீக விஞ்ஞானி ஜார்ஜ் காமோவ் (George Gamow) என்பவரும் ஒப்புக்கொள்கிறார்.* இன்று காணப்படும் பிரபஞ்சப் பொருள் அனைத்தும் அடர்த்திக்கொண்ட மொத்தையாக ஒரு கட்டத்தில் இருந்திருக்கிறது.* இந்த மொத்தை 2500 கோடி டிகிரி பாரன்ஹைட் வெப்பத்தில் வெடித்துச் சிதறியிருக்கிறது.*வெப்ப நிலை 50 லட்சம் டிகிரி பாரன்ஹைட்டாகக் குறைந்து மூலகங்கள் உருவாகி இருக்கிறது.* வாயு நிலையில் இந்த பொருட்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து, ஈர்த்து, முகில்களாகப் பிரியச் செய்து நட்சத்திரங்களாகவும், கிரகங்களாகவும் உருப்பெற்றிருக்கின்றன என்ற இக்கருத்தை ஜார்ஜ் காமோவும் ஒப்புக்கொள்கிறார்.மேற்கண்ட இக்கருத்தின் மூலம், பரிணாம வளர்ச்சியின் பல படிக்கட்டுகளை கடந்து இன்று, ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகளுக்குப் பதில் கண்டுபிடிப்பவர்களாக இருக்கிறோம்.பெரும் பிண்டம் வெடித்துச் சிதறியதன் மூலம் அண்டங்கள் விரிவடைகின்றன என்ற கருத்தை ஒப்புக் கொள்வதாக இருந்தால், வெடித்துச் சிதறியதற்கு முந்தைய கட்டம் மற்றும் ஆரம்ப இடம் எங்கிருக்கிறது என்ற வினா எழுகிறது.தவிர, வெடிப்புக்கு முந்தைய கட்டத்தில் விண்வெளி முழுமையும் வெறும் வெற்றிடமாக இருந்ததா? அவை வெடித்துச் சிதறி ஓடும் பாதைகளில் தடுப்பலைகள் இருந்து அதையும் கடந்து சென்றனவா என்பன போன்ற நியாயமான கேள்விகளுக்கு விடை கண்டுபிடிக்கின்ற இடத்திலே இருக்கிறோம். வேறு சில விஞ்ஞானிகள் தூசுப் படலம் தோன்றி, காலப் போக்கில் அவைகள் ஒன்றோடொன்று திரண்டு, திரட்சிகளாகி அதுவே, நட்சத்திரங்களாகவும், கிரகங்களாகவும் உருப்பெற்றிருக்கலாம் என்ற கருத்தை முன் வைக்கின்றனர்.அறிவியல் வளர்ச்சியின் வேகம் புதிர்களுக்கு விடை காண்பதுதான் என்பதிலே பெருமை கொள்வோம்.

பாம்பு பால் குடிக்குமா?

பாம்புகளில் சில பாம்புகள் மட்டும் நச்சுத் தன்மை கொண்டவை. பெரும்பாலான பாம்புகள் நச்சுத்தன்மை அற்றவை. அவை கடித்தால் தடிப்பு, சொறி, உடல் வீக்கம் ஏற்படும், உயிருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. விரியன் பாம்புகள் மிகவும் கொடிய நச்சைக் கொண்டவை. கடித்த சில மணித்துளிகளிலே உயிரைக் குடிக்கும் தன்மை உடையவை.
பாம்புகள் பெரும்பாலும் இருட்டிய பிறகே இரை தேடப் புறப்படுகின்றன. எலி, தவளை, சிறுசிறு பூச்சிகள், மற்ற பறவைகளின் முட்டைகள் ஆகியவற்றை உணவாகக் கொள்கின்றன. சில பாம்புகள் மற்ற வகைப் பாம்புகளையே உண்ணக் கூடியவை. பாம்புகளில் மிகவும் எடையும், வலுவும், நீளமும், கொண்டவை மலைப்பாம்புகள்.
பாம்புகள் அந்த இனங்களிலேயே தங்களுக்கு இணைகளைத் தேடிக் கொள்கின்றன. பாம்புகள் முட்டையிட்டு அடைகாக்கும் தன்மை கொண்டன. பெரும்பாலும் ஆண் பாம்புகளே அடை காக்கின்றன. இடத்திற்கும், தட்ப வெப்ப நிலைக்கும் ஏற்ப பாம்புகள் வெண்மை, மஞ்சள், கருமை, நீலம், பச்சை, சிவப்பு, பழுப்பு மற்றும் பல வண்ணங்களில் மணமும் பல வகையாக உள்ளன.
பாம்புகளுக்கு காதுகள் கிடையாது பாம்பின் கால் பாம்பறியும், கட்செவி போன்றவை பாம்பைப் பற்றி ஆராய்ச்சி அறிவு இல்லாத காலத்தில் கூறப்பட்டவையாகும். பாம்பாட்டி மகுடியை அப்படியும் இப்படியும் அசைத்து ஆட்டும் போது பாம்பும் தன் பார்வையை மகுடி மீது செலுத்தி அதற்கேற்றவாறு அசைவதைத்தான் “மகுடியின் இசையில் தான் பாம்பு ஆடுகிறது” என்று தவறாகக் கூறுகிறார்கள்.
பாம்பு தன் அடி வயிற்றிலுள்ள செதில்கள் போன்ற அமைப்பு மூலம் தரையைப் பற்றி (மண்புழு போன்றே) முன்னுக்கு நகர்கிறது. மண்புழுவிற்கு முன் பக்கம் மட்டுமே அந்த அமைப்பு உள்ளது. ஆனால், பாம்புக்கோ கழுத்திலிருந்து வால் வரை செதில் அமைப்பு உண்டு. இதனால் தான் மிக வேகமாக நகர முடிகிறது.
பாம்புகளுக்கு அதிர்வுகளை உணரும் திறன் உண்டு. மனிதனோ, விலங்கோ, நெருங்கும் போது, நிலத்தில் ஏற்படும் அதிர்வலைகளைப் பாம்புகள் தங்கள் வயிற்றுப்புறச் செதில்கள் மூலம் உணர்ந்து அதற்கேற்றவாறு தன் திசையை மாற்றி எதிரிகளிடமிருந்து தப்பித்துக்கொள்ளும்.
பாம்புகளுக்கு நாக்கு பிளவுபட்டு கம்பிகள் போல் இருக்கும். எனவே, பாம்பு பாலையோ நீரையோ நக்கிக் குடித்திட முடியாது. கிண்ணத்தில் பாலை வைத்தால் பாம்பு உறிஞ்சிக் குடிக்கிறது என்று பக்தர்கள் கூறுகிறார்கள். இது மிகவும் அறியாமையாகும். பாம்புக்கு அதன் தலையின் நுனிப் பகுதியில் மூக்கு உள்ளது. அது நீர்மப் பொருளில் வாயை வைக்கும்போது முதலில் நுழைவது மூக்காகத்தான் இருக்கும். மூக்கை நீரிலோ, பாலிலோ நுழைத்தாலே பாம்பு மூச்சுத்திணறிச் செத்து விடும். இதை அறியாதோர்தான் பாம்பு பால் குடிக்கிறது என்று தவறாகச் சொல்லி வருகின்றனர்.
மேலும் முட்டையைக் கூட உடைத்து உறிஞ்சிக் குடிப்பதாகவும் பக்தர்கள் சரடு விடுகிறார்கள். பாம்பு இரையை (எலி, தவளை போன்றவற்றை) அப்படியே விழுங்குமேயன்றி மென்று சாப்பிடக் கூடிய அமைப்பு கிடையாது. எனவே முட்டையையும் பாம்பு விழுங்குகிறதேயன்றி உடைத்து உறிஞ்சிக் குடிக்காது.
பாம்புகள் அதன் இனத்திலேயே இணைந்து இனப்பெருக்கம் செய்கின்றன. ஆனால், நல்ல பாம்பும், சாரைப்பாம்பும் தான் இணைகின்றன என்ற தவறான கருத்தினைக் கூறி வருகிறார்கள். பறக்கக் கூடிய பறவைகள் எல்லாம் ஒரே இனத்தைச் சேர்ந்திருப்பதால் கோழி, கொக்குடன் இணையுமா? கழுகு, வவ்வாலுடன் இணையுமா? காக்கை குயிலுடன் இணை யுமா? குருவி, கரிச்சானோடு இணையுமா? வாத்து வான்கோழியுடன் இணையுமா? இவை எப்படிச் சாத்தியமில்லையோ அப்படித் தான் பாம்பின் சேர்க்கையும் ஆகும்.
நன்றி: உண்மை மாதமிருமுறை இதழ்

கல்வியும் செல்வமும்

ஒவ்வொரு பட்ஜெட்டிலும் நிதியமைச்சர் கல்வித் துறைக்கு அள்ளி இறைக்கும் நிதி, எந்தக் காலத்திலும் எந்த அரசினாலும் செலவிடப்படாதஅளவிற்கு உள்ளது என்கின்ற தொழிற்கட்சி, தாம் கல்வி முறையில், கல்விச் சாலைகளில் செய்த மாபெரும் மாற்றங்களைச் சுட்டிக் காட்டி,தமது வெற்றிகளைக் கணக்கிலெடுக்காது, எங்காவது மூலையில் நடக்கும் ஒரு தோல்வியை மட்டும் பெரிதுபடுத்தி தம்பட்டம் அடிக்கிறார்கள்எதிர்க்கட்சியினர் என்கிறார்கள்.அதுதானே எதிர்க்கட்சியின் அரசியல் தர்மம்......? இது ஏன் அவர்களுக்குப் புரியவில்லையோ?இது இன்றைய முக்கிய சர்ச்சைக்குள் அரசை கொண்டு வந்து நிறுத்தியுள்ளது எனலாம். ஆமாம் இங்கிலாந்து அமைச்சரவையில் சமூக,கலாச்சார, பெண்ணியம் ஆகியவற்றின் தற்போதைய அமைச்சரும், முன்னாள் கல்வி அமைச்சருமாகிய திருமதி ரூத் கெலி ( ஙழ்ள். தன்ற்ட் ஓங்ப்ப்ஹ்) தன் மகனைத் தனியார்பாடசாலை ஒன்றில் அனுமதித்திருப்பதால் எழுந்துள்ள சர்ச்சையே இது.கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து அரச பாடசாலைகளில் கல்வித் தரத்தை உயர்த்தியுள்ளோம் என்று மார் தட்டிக்கொள்ளும் இந்தத் தொழிற்கட்சியின் அரசாங்கத்தைச் சேர்ந்த முக்கிய அமைச்சர் ஒருவர், அதுவும் முன்னைநாள் கல்வித் துறையமைச்சர் தன் மகனைத் தனியார்பாடசாலைக்கு அனுப்புவது அவர் தன் அரசாங்கத்தின் கூற்றையே மறுதலிப்பாகாதா? என்பதுதான் எதிர்த்தரப்பினரின் வாதம்.ஆனால் இன்றைய பத்திரிகைச் செய்திகளின்படி இந்த அமைச்சருடைய மகன் வாசிப்பதில் சிரமம் உடைய ஒரு வியாதியைக் ( ஈஹ்ள்ப்ங்ஷ்ண்ஹ) கொண்டிருப்பதாகவும் அதன்நிமித்தமாக மருத்துவர்களுடனும், கல்வி அதிகாரிகளுடனும் கலந்தாலோசித்து, அவர்களின் ஆலோசனையின் பெயரிலேயே அவர் இந்தமுடிவை எடுத்தார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. எப்படியிருப்பினும் டோனி பிளேயரின் அரசாங்கத்திற்கு இது ஒரு தலையிடியாகத்தான் அமைந்துள்ளது. இன்னும் சில மாதங்களேபதவியிலிருக்கப் போகும் பிரதமர், எத்தகைய நினைவுகளை, சாதனைகளை மக்கள் மனத்தில் நிலை நிறுத்திவிட்டுப் போகப் போகின்றார் என்றகேள்வி எழும் வேளையிலே இது அவருக்கு தேவையில்லாத ஒன்று இங்கே நாம் சில கேள்விகளை முன்வைக்கவேண்டியுள்ளது.அரச பாடசாலைகளின் தரத்தை உயர்த்தி, வாழ்க்கையின் சாராசரிப் படிகளிலே வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களின் குழந்தைகளுக்கும்தேவையான வசதிகளுடன் கல்வி பயிற்றுவிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றது, அரசாங்கம். பாடசாலைகளின் தரத்தை உயர்த்த, உயர்த்தமக்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரிக்கின்றனவோ என்னும் கேள்வி எழத்தான் செய்கின்றது.எதிர்பார்ப்புகளுக்கும், அதை அடையும் வேகத்திற்கும் இடையே உள்ள வெளி அதிகரிக்கின்றது. இந்த ஏமாற்றம், ஆத்திரமாக அரசாங்கத்தின்மீதும், அதில் அங்கம் வகிப்போரின் மீதும் விழுகின்றது. இந்த வேளையில்தான் அந்த அமைச்சரும் மாட்டிக்கொண்டாரோ என்று எண்ணத்தோன்றுகின்றது.அது மட்டுமல்ல இன்றைய இங்கிலாந்திலே, விஞ்ஞான வளர்ச்சியின் உச்சத்திலே வர்க்க பேதம் அடிபட்டுப் போனது போலத் தோன்றுகின்றது.ஒரு நாட்டிலே நடுத்தர வர்க்கம் மிகையாகி விட்ட நிலையிலே, சோசலிஸக் கொள்கைகள் எந்த அளவிற்கு எடுபடும் என்பது கேள்விக் குறியே

அக்டோபர் 2 முதல் அமலாகிறது பொது இடங்களில் புகைக்க தடை

அக்டோபர் 2ம் தேதி முதல் நாடு முழுவதும் பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. இதை மீறுவோரை தண்டிக்க, பள்ளி, கல்லூரி முதல்வர்கள், போஸ்ட்மேன் உட்பட பலருக்கு அதிகாரம் வழங்கப்பட உள்ளது. ரோட்டில் புகை பிடித்துக் கொண்டு நிற்பவர்களிடமும் இவர்கள் அபராதம் வசூலிக்கலாம்.
பொது இடங்களில் புகை பிடிக்க தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதியில் இருந்து நாடு முழுவதும் இந்த தடை அமலுக்கு வருகிறது. இதை மீறுவோரை தண்டிக்க புதிய சட்டங்களும் கொண்டு வரப்படுகிறது.
பொதுஇடங்கள் என்ற பட்டியலில் வீடும் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் வீட்டில் உள்ள ஆண் உறுப்பினர்கள் புகை பிடிப்பதை தடுக்க குடும்பத் தலைவிகள் பாடுபட வேண்டும் என்று மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
ஒரு தங்கும் விடுதியில் 30 அறைகள் இருக்கும்பட்சத்தில் அல்லது 30 பேர் அமர்ந்து உணவருந்தும் கூடம் இருக்கும்பட்சத்தில் அங்கும் புகை பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. இதேபோல் பள்ளி, கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், ஓட்டல்கள், மருத்துவமனைகள், பூங்காக்கள், ரயில், பஸ், விமான நிலையங்கள் என எல்லா இடத்திலும் புகை பிடிக்க தடை வருகிறது.
புகை பிடிப்பவர்களுக்கு முன்பு அதிபட்சமாக ரூ.200 வரை அபராதம் விதிக்கப்பட்டது. இதை ரூ.2,000 வரை உயர்த்தலாம் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. ஆனால், இதற்கு மத்திய அரசு இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை. இதனால் இப்போதைக்கு பழைய அபராதமே விதிக்கப்பட உள்ளது.
இதற்கிடையே, புகை பிடிப்போரை தண்டிக்கும் அதிகாரமும் பரவலாக்கப்பட உள்ளது. இதன்படி, பள்ளி, கல்லூரி முதல்வர்கள், அரசு உயரதிகாரிகள், போஸ்ட்மேன், ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர்கள், தனியார் நிறுவன அதிகாரிகளுக்கு வழங்கப்பட உள்ளது. இவர்களிடம் அபராதம் வசூலிக்கும் புத்தகம் தரப்படும். இதைக்கொண்டு பொது இடத்தில் புகைப்பிடிப்போரிடம் இவர்கள் அபராதத்தை வசூலிக்கலாம். பின்னர் இந்த பணத்தை அரசு கருவூலத்தில் கட்டிவிட வேண்டும். இதற்கான சட்டவிதிகள் மத்திய அரசிதழில் செப்டம்பர் 2வது வாரத்தில் வெளியிடப்பட உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

தலைப்புச் செய்தி.

குடியரசுத் தலைவரின் உரை-பெட்டிச் செய்தி.
குஷ்புவின் முடியில் நரை-தலைப்புச் செய்தி.

பயங்கரவாதத்தை ஒழிக்க சீரிய, விரிவான அணுகுமுறை தேவை

மும்பை ரயில்களில் குண்டுகள் வைத்து 200 பேரை கொன்று விழுங்கிய பயங்கரவாதம், மலீகானில் 38 பேரை கொன்று தள்ளியுள்ளது. தொடரும் இந்த வெறியாட்டத்திற்கு முடிவு எப்போது? அப்பாவி மக்களை இப்படி கொத்துக் கொத்தாக கொன்று தள்ளும் பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய அதிகபட்ச கட்டாயத்தில் மத்திய, மாநில அரசுகள் நிற்கின்றன!காஷ்மீர் பிரச்சனையின் அடிப்படையில்தான் ஒரு ஆயுதப் போராட்டமாக உருவானது என்று கூறப்பட்ட பயங்கரவாதம், இன்று ஜம்மு-காஷ்மீரைத் தாண்டி இந்தியாவின் எந்தப் பகுதியிலும், எந்த நேரத்திலும், எப்படி வேண்டுமானாலும் தனது கோர வடிவத்தை வெளிப்படுத்தக்கூடும் என்கின்ற அச்ச உணர்வு நமது நாட்டு மக்களிடையே பரவலாக எழுந்துள்ளது. உலக அளவில் மிரட்டிவரும் பயங்கரவாத சக்திகளுடன் முழுமையான தொடர்புடனும், ஆதரவுடனும், சில நாடுகளின் மறைமுகத் தூண்டுதலுடனும் கோரத் தாண்டவமாடிவரும் பயங்கரவாதத்தை, பாதுகாப்புப் படைகளை பலப்படுத்துவதனாலும், உளவுத் தகவல்களை அளித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் தடுத்து நிறுத்திவிட முடியாது என்பதையே ஸ்ரீநகர், மும்பை, மலீகான் தாக்குதல்கள் நிரூபிக்கின்றன. பயங்கரவாதத்தின் வேராக உள்ள காஷ்மீர் உள்ளிட்ட பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரம் காட்டும் அதே நேரத்தில், பயங்கரவாத சக்திகளின் மூல பலத்தை நொறுக்குவதிலும் அதிகபட்ச அக்கறையும், சிரத்தையும் காட்ட வேண்டியது அவசியமாகிறது. உதாரணத்திற்கு, காஷ்மீரில் எல்லைத் தாண்டிய ஊடுருவலைத் தடுக்க வேலி அமைக்கும் பணி துவக்கப்பட்டது. இந்திய - பாகிஸ்தான் இடையிலான சர்வதேச எல்லையிலும், கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியிலும் பெருமளவிற்கு வேலியிடப்பட்டதால் ஊடுருவல் குறைந்தது. ஆனால், தற்பொழுது பாகிஸ்தானின் உளவு அமைப்பாக ஐ.எஸ்.ஐ.யால் பயிற்றுவிக்கப்படும் பயங்கரவாதிகள் நேபாளத்தில் இருந்தும், வங்க தேசத்தில் இருந்தும் ஊடுருவுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த எல்லைப் பகுதிகளிலும் வேலியிடப்பட்டு, ஊடுருவலிற்கான மற்ற சாத்தியக்கூறுகள் ஏதுமின்றி கண்காணிக்கப்பட வேண்டும். மத அறக்கட்டளைகளை கண்காணிக்க வேண்டும்!பயங்கரவாதிகள் பயன்படுத்தும் ஆர்.டி.எக்ஸ். உள்ளிட்ட வெடிபொருட்களுக்கும், நடத்தும் தாக்குதல்களுக்கும் மிக அவசியமானது நிதி ஆதாரமாகும். பிடிபட்ட பயங்கரவாதிகள், அவர்களுக்கு உதவியதாக கூறப்பட்ட உள்ளூர் தொடர்புகள் ஆகியோரிடம் இருந்து ஆயிரக்கணக்கில் இந்திய, அயல்நாடு பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. எனவே, பயங்கரவாதத்திற்கு உதவிடும் அமைப்புகளும், ஹவாலா போன்ற நிதி வரும் வழிகளும் கண்டுபிடிக்கப்பட்டு முடக்கப்பட வேண்டும்.உலக அளவில் பயங்கரவாதத்திற்கு நிதி முதுகெலும்பாக இருந்தது மத அறக்கட்டளைகள் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இப்படிப்பட்ட மத ரீதியான அறக்கட்டளைகள் பல்லாயிரக்கணக்கில் பதிவு செய்யப்பட்டுள்ளன. வருமான வரி ஏய்ப்பிற்காக பதிவு செய்யப்படும் அறக்கட்டளைகளில் இருந்து மத தீவிரவாதத்திற்கும், மதப் பிரச்சாரத்திற்கும், மத மாற்றத்திற்கும், மற்ற ரகசியத் திட்டங்களுக்கும் உதவிட பல மத அறக்கட்டளைகள் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.இப்படிப்பட்ட அறக்கட்டளைகளை அடையாளம் கண்டு முடக்க வேண்டும். இதில் இந்து, முஸ்லிம், கிறித்தவ பாகுபாடுகளை கிஞ்சித்தும் பார்க்காமல், அவைகளின் செயற்பாடு, அவைகள் துவக்கப்பட்டதற்கான நோக்கத்தோடு ஒத்துப் போகின்றதா என்பதை துல்லியமாக ஆராய்ந்து கண்டுபிடிக்க வேண்டும். ஏனெனில், இப்படிப்பட்ட அறக்கட்டளைகளுத்தான் அயல்நாட்டில் இருந்து பல லட்சக்கணக்கில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பணம் குவிகிறது. இவைகளில் இருந்துதான் மத பாடத்தைப் படிப்பதற்கு என்று கூறி அயல்நாட்டிற்கு அனுப்பப்பட்டு அங்கு தீவிரவாத பயிற்சி எடுப்பதற்கு உதவப்படுகிறது. எனவே, அறக்கட்டளைகள் அனைத்தையும் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். தேச அடையாள அட்டை அவசியம்!சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், இரண்டு முக்கிய அம்சங்களை குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வலியுறுத்தினார். ஒன்று, நமது நாட்டு மக்கள் அனைவருக்கும் குடிமக்கள் அட்டையை மத்திய அரசு வழங்கிட வேண்டும். இரண்டு, பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் மக்களையும் பங்கேற்கச் செய்ய வேண்டும் என்று அப்துல் கலாம் கேட்டுக் கொண்டார். ஆனால், அது குறித்து அரசு இன்று வரை அதிகாரப்பூர்வமாக எதையும் கூறவில்லை. தலைநகர் டெல்லியில் நடந்த முதலமைச்சர்கள் மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மன்மோகன் சிங், பொதுமக்களையும் பங்கேற்கச் செய்வது குறித்து பேசினார். ஆனால், தேச அடையாள அட்டை குறித்து மத்திய அரசு இன்று வரை வாய் திறக்கவில்லை. இப்படிப்பட்ட அடையாள அட்டை குடிமக்கள் அனைவருக்கும் வழங்குவதன் மூலம் அவர்களைப் பற்றிய முழுமையான விவரங்கள் அரசின் வசம் இருப்பது மட்டுமின்றி, போலி கடவுச் சீட்டுடன் ஊடுருவும் பொது விரோதிகளை அடையாளம் காணவும் வழியேற்படும். பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் ரோந்து காவலருக்கு உள்ள பங்கு மிக முக்கியமானது என்று பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்திப் பேசினார். நமது உள் நாட்டு, அயல் நாட்டு உளவு அமைப்புகளை விட முக்கியத்துவம் வாய்ந்தது காவல் துறையின் உளவுப் பிரிவுகளாகும். எனவே, ஒவ்வொரு மாநில காவல் துறையின் முக்கிய அங்கமாக உள்ள உளவுப் பிரிவின் பலத்தைக் கூட்ட வேண்டும். அயல்நாடுகளின் பிளைன் கிளாத் போலிஸ்மேன் என்று அழைக்கப்படும் சீருடைய அணியாத (உளவு) காவலர் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். உளவுப் பலம் இல்லாமல் பயங்கரவாதத்தின் திட்டங்களை அறிவது இயலாததாகும். பயங்கரவாதத்தை ஒடுக்கும் போரில் ஒன்றுபட்டு நிற்போம், ஒற்றுமையாக இருப்போம், சேர்ந்து முறியடிப்போம் என்றெல்லாம் முழக்கங்கள் விடுப்பதை தவிர்த்துவிட்டு ஆழமான, விரிவான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் துரிதமாக மேற்கொண்டு பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் உறுதியுடனும், சிரத்தையுடனும் செயல்பட வேண்டும்

அணு சக்தி பேரத்திலிருந்து ஆட்சியைக் காப்பாற்றும் பேரம் வரை

இந்திய ஜனநாயகம் இதுவரை எதிர்கொள்ளாத அளவிற்கு நாடு தழுவிய சர்ச்சையை எழுப்பிய இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை, தனது அரசிற்கு நான்காண்டுக் காலமாக வெளியில் இருந்து ஆதரவளித்த இடதுசாரிக் கட்சிகளின் கடும் எதிர்ப்பையுன் மீறி, நடைமுறைப்படுத்த முற்பட்டதால் மக்களவையில் பெரும்பான்மை ஆதரவை இழந்த மன்மோகன் அரசு, ஆட்சியைக் காப்பாற்ற படாத பாடுபட்டு வருகிறது.ஆட்சிக்கு அளித்தவந்த ஆதரவை விலக்கிக்கொள்வோம் என்று இடதுசாரிகள்
தித்த அடுத்த கனமே அதுவரை அரசை எதிர்த்துவந்த மூன்றாவது அணியின் முக்கிய அங்கமாக இருந்தகொண்டு அணு சக்தி ஒப்பந்தத்தை எதிர்த்துவந்த சமாஜ்வாடிக் கட்சியுடன் காங்கிரஸ் கட்சி சமரசம் செய்துகொண்டது.உத்தரப்பிரதேச அரசியலில், முதலமைச்சர் மாயாவதிக்கு தொல்லை கொடுக்க மத்திய அரசை நாட, இடதுசாரிகளின் கெடுவால் மத்திய அரசுக்கு ஆபத்து ஏற்பட, காங்கிரஸூம், சமாஜ்வாடியும் நண்பர்களானார்கள். ‘அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர பகைவர்களும் இல்லை’ என்று அரசியல்வாதிகள் வரித்துக்கொண்ட அற்புத கொள்கையின் அடிப்படையில், தேச நலனைக் காப்பாற்ற ‘ஒருவருக்கு மற்றவர் ஒத்தாசையாக இருப்பது’ என்று ஒன்றிணைந்தனர்.அரசியல் ஆலோசகரான தேச ஆலோசகர்!இந்த நலன் போற்றும் நட்பின் காரணமாக இடதுசாரிகள் ஆதரவை விலக்கிக்கொண்டதால் ஆட்சிக்கு ஏற்பட்ட ஆபத்தை சமாளிக்கும் திறனைப் பெற்றது காங்கிரஸ் கட்சி.ஆட்சிகளைக் கவிழ்ப்பதிலும், தனது ஆட்சியாக இருக்கும் பட்சத்தில் அதனை ‘எப்பாடுபட்டாவது’ காப்பாற்றிக் கொள்வதிலும் காங்கிரஸ் கட்சிக்கு ஈடான ஒரு கட்சி இந்தியாவில் இல்லை.
, சமாஜ்வாடிக் கட்சியை தனக்கு ஆதரவாகக் கொண்டுவருவதைக் கூட வெறும் அரசியலாகக் காட்டாமல் மிகச் சாமர்த்தியமாக காய் நகர்த்தியது காங்கிரஸ். அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை எதிர்த்துவந்த சமாஜ்வாடிக் கட்சி, ஏதோ பேரத்தின் வாயிலாக தங்கள் பக்கம் வந்ததாக தெரிவிடக்கூடாது என்பதற்காக, தேச பாதுகாப்பு ஆலோசகரை அவர்களிடம் அனுப்பி அணு சக்தி ஒப்பந்தத்தின் ‘நன்மைகளை’ விளக்கி, அதன்மூலம் அது தேச நலனிற்காகவே என்பதை உணரவைத்து ஆதரவைப் பெற்றது காங்கிரஸ்!அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பாக நமது நாட்டின் மூத்த அணு சக்தி விஞ்ஞானிகள் கேள்விகளை எழுப்பியபோது அவர்களுக்கு விளக்க தேச பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனை அனுப்பி வைத்திருந்தால் இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருக்காதே? சமாஜ்வாடிக் கட்சியின் ஆதரவு உறுதியானதும், ஆளும் கூட்டணியில் இருந்தும் பதவி தரப்படாத்தால் பிணக்கில் இருந்த ஜார்க்கண்ட முக்தி மோர்ச்சாவை சரிகட்டும் பேரத்தில் இறங்கியது காங்கிரஸ். 5 மக்களவை உறுப்பினர்களைக் கொண்ட இக்கட்சிக்கு இரண்டு மத்திய அமைச்சர் பதவிகள் (அதில் ஒன்று காபினெட்), அக்கட்சியின் தலைவர் சிபு சோரனின் மகன் ஜார்க்கண்ட் மாநில துணை முதலமைச்சர் பதவி! இதனை செய்தியாளர்கள் கூட்டத்திலேயே சிபு சோரன் அறிவிக்கிறார். எல்லாம் தேச நலனைக் கருதிதான்!மாயா(வதி) ஜாலம்!அப்பாடா... ஆட்சியைக் காப்பாற்றிவிடலாம் என்று நம்பிக்கை பெற்ற காங்கிரஸ் தலைமை, அடுத்த கட்டமாக அஜீத் சிங் தலைமையிலான ராஷ்ட்ரிய லோக்தளம் கட்சியுடனும், தேவே கவுடாவின் மதச் சார்ப்பற்ற ஜனதா தளத்துடனும் பேரம் பேசத் துவங்கியது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் இதில் ஈடுபட்டார். தேச நலனைக் காப்பாற்ற வேண்டும் அல்லவா?
PTIஇவர்களுடன் நடத்த பேரம் படியவில்லை. காரணம் மாயாவதி. தனக்கு எதிராக மத்திய புலனாய்வுக் கழகத்தை ஏவிவிட்டு நெருக்குதல் கொடுக்கத் துவங்கிய மத்திய அரசிற்கு தன்னாலும் நெருக்கடி கொடுக்க முடியும் என்று நிரூபிக்க களமிறங்கிய மாயாவதி அஜீத் சிங்கையும், தேவே கவுடாவையும் தன்பக்கம் இழுத்து மூன்றாவது அணி செத்துவிடவில்லை என்று தெலுங்கு தேசக் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவுடன் இணைந்து சிறிய கட்சிகளை தன்பக்கம் இழுக்கும் தேசப் பணியில் ஈடுபட்டுள்ளார்.ஆதரவு கொடு அல்லது வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் ஒதுங்கிக்கொள் என்ற அடிப்படையில் நடந்த பேரத்தில் மேலும் சில உதிரி கட்சிகளை வயப்படுத்தியுள்ளது காங்கிரஸ். மக்களவையில் இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட காஷ்மீரின் தேச மாநாட்டுக்(National Conference) கட்சி வாக்கெடுப்பில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று முடிவு செய்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநில அரசு அமர்நாத் கோயிலிற்குச் செல்லும் யாத்திரிகர்கள் தங்கிச் செல்ல அக்கோயிலின் நிர்வாகத்திற்கு 100 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்த்தைக் கண்டித்து, மதவாத நிலையெடுத்து தனது தொண்டர்களைத் தூண்டிவிட்டு கலவரத்தை ஏற்படுத்தி, காங்கிரஸ் தலைமையிலானஆட்சியைக் கவிழக் காரணமான
மாநாட்டுக் கட்சி, மதவாத சக்திகளுக்கு ஆதரவாக செயல்படமாட்டோம் என்று கூறி, இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளப்போவதில்லை என்ற முடிவை எடுத்து மன்மோகன் அரசை காப்பாற்ற முன்வந்துள்ளது. பாஜ.க., சிவ் சேனா கட்சிகளிலுள்ள உறுப்பினர்களையும் தன்பக்கம் இழுத்துள்ளது காங்கிரஸ் கட்சி. அதனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கையுடன் கூறியுள்ள அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, எவ்வளவு வாக்குகள் தங்களுக்கு ஆதரவாக (276) கிடைக்கும் என்பதையும் நாடாளுமன்றத்திலேயே வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்!
அணு சக்தி பேரத்திலிருந்து ஆட்சியைக் காப்பாற்றும் பேரம் வரை!
அதற்கு ஒரே ஒரு நெருடல், சமாஜ்வாடி கட்சிதான். அதன் எத்தனை உறுப்பினர்கள் ஆட்சிக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்பதில்தான் காங்கிரஸ் கட்சிக்கு வயிற்றில் புளிகரைத்துக் கொண்டிருக்கிறது. 39 உறுப்பினர்களைக் கொண்ட சமாஜ்வாடியின் பலம், சற்றுமுன் வந்த செய்தியின்படி 33 ஆக குறைந்துள்ளது. இது மேலும் எவ்வளவு குறையும் என்பது மாயாவதியின் ‘கைத்திறனில்’ உள்ளது. ஆயினும் இதையெல்லாம் காங்கிரஸ் சமாளித்துவிடும் என்பது அக்கட்சியை நன்கு அறிந்தவர்களுக்குத் தெரியும். காங்கிரஸ் நலனே தேச நலன்!அரசமைப்புச் சட்டத்தின் 356வது பிரிவைப் பயன்படுத்தி அது கலைக்காத மாநில அரசுகள் இல்லாத மாநிலமே இல்லை என்று கூறுமளவிற்கு கவிழ்த்துத் தள்ளியக் கட்சி
. மத்தியிலும் அது ஆடிய திருவிளையாடல்கள் கொஞ்ச நஞ்சமல்ல.1977 தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வட மாநிலங்களில் துடைத்தெறிந்து வெற்றி பெற்று மொரார்ஜி தேசாய் தலைமையில் சிறப்பான ஆட்சியைத் தந்த ஜனதா ஆட்சியை (கட்சியையும்தான்) சரண் சிங்கிற்கு ஆசை காட்டி உடைத்து ஆட்சியைக் கவிழ்த்து, பிறகு சரண்சிங்கை பிரதமராக ஆதரவு தந்து அவர் நாடாளுமன்றத்தை சந்திப்பதற்கு முன்னரே ஆதரவை விலக்கி அவமானப்படுத்தி பதவிறக்கி, தனது அரசியல் வித்தகத்தால் ஆட்சியைக் கைப்பற்றிய காங்கிரஸ், 1990இல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் வி.பி. சிங் தலைமையில் அமைந்த ஆட்சியை, சந்திரசேகரைத் தூண்டிவிட்டுக் கவிழ்த்து, பிறகு அவரைப் பிரதமராக்கி 3 மாதங்களில் ஆட்சியைக் கவிழ்த்து தேர்தலுக்கு கொண்டு சென்றது.1996இல் தேவே கவுடா ஆட்சி, அடுத்த 6 மாதத்தில் ஐ.கே. குஜ்ரால் தலைமையிலான ஆட்சி என அடுத்தடுத்துக் கவிழ்த்து ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கியது. 1992இல் நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது இதேபோல நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது இதே ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியைக் காப்பாற்றிக்கொண்டது. நரசிம்மராவ்
நிதியமைச்சராக இருந்தவர் மன்மோகன் சிங், எனவே அப்போது கடைபிடிக்கப்பட்ட சித்துவேலைகள் அனைத்தையும் அறிந்தவர். எனவே இவரும் தனது அரசை தக்கவைத்துக் கொள்வதில் தோற்றுவிட மாட்டார் என்று நிச்சயம் நம்பலாம். ஏனென்றால் காங்கிரஸ் நலனே தேச நலன். தங்களது ஆட்சி தொடர்வதே தேசத்திற்கு நல்லது என்று மக்களை நம்பவைக்கும் முயற்சியில் அயராது ஈடுபட்டுவரும் காங்கிரஸ் கட்சி எதைச் செய்தாலும் அது தேச நலனே என்று நாமும் நம்புவோமாக!

பயங்கரவாதத்தை ஒடுக்க முடியமா?

1998ஆம் ஆண்டு சென்னை மாநகர காவல் ஆணையராக பெ.காளிமுத்து இருந்தபோதுதான் கோவை குண்டு வெடிப்பைத் தொடர்ந்து சென்னையிலும் தாக்குதல் நடத்த இருந்த சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது. பல இடங்களில் ஆர்.டி.எக்ஸ். என்ற சக்திவாயந்த வெடிபொருள் கைப்பற்றப்பட்டது. குண்டுகளை வெடிக்கச் செய்யும் டெட்டனேட்டர்களும், மற்ற ஆயுதங்களும் காவல் துறையினரின் துரிதமான நடவடிக்கையினால் கைப்பற்றப்பட்டது. மறைந்திருந்த தீவிரவாதிகள் பலர் கைது செய்யப்பட்டனர்.காளிமுத்துவின் பணி மிகவும் பாராட்டப்பட்டது. சென்னை காப்பாற்றப்பட்டது. அதன் பிறகு தமிழக காவல் துறையின் தலைமை இயக்குனராக பதவி உயர்வு பெற்று ஒய்வு பெற்றார் பெ. காளிமுத்து. பயங்கரவாதம் நமது நாட்டை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் இந்த வேளையில் டெல்லியிலும் மற்ற இடங்களிலும் நடந்தது போன்ற பயங்கரவாத தாக்குதல்களை தடுக்க முடியுமா? எந்த அளவிற்கு நம்மால் அதனை சாதிக்க முடியும்? அந்தத் திறன் நமது காவல் துறைக்கு உள்ளதா? நமது உளவு அமைப்பிற்கு அந்தப் பலம் உள்ளதா? என்பதையெல்லாம் கேட்டறிய அவரிடம் தமிழ்.வெப்துனியா.காம் பேட்டி கண்டது. 23.09.2008 செவ்வாய்கிழமையன்று மாலை இந்த நேர்காணல் நடந்தது.
WDபயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுக்க எந்த முறையிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்?கடந்த காலங்களில் பாகிஸ்தான் எல்லையில், கிழக்கு பிராந்திய எல்லைகளில் பல்வேறு பயங்கரவாத நடவடிக்கைகள் நடந்தது நினைவிருக்கும்.அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்பெயின், ஈராக், ஆப்கானிஸ்தான், சீனாவில் கூட பயங்கரவாத தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டது. உலகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவியிருக்கும் பயங்கரவாதத்தை முழுமையாக தடுக்க வேண்டும் என்பதில் எவருக்கும் மாறுபட்ட கருத்து இருக்காது.இதனை அரசு, பொருளாதார, சமூக ரீதியாக, அங்காங்கு வாழும் மக்கள் சாதி, மத, இன, வட்டாரம் போன்ற எவ்வித வேறுபாடும் இன்றி, அனைவரும் ஒன்றுபட்டு பயங்கரவாதத்தை அழிக்க வேண்டும்.இதற்கு பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சட்டத்தை அமல்படுத்தும் அரசு நிறுவனங்கள், காவல்துறை மற்றும் பொதுத் தொண்டு புரியும் அனைத்து தொண்டு நிறுவனங்களும், பொதுமக்களும் ஒன்றுபட்டு, பயங்கரவாதிகளாக இருக்கலாம் என்று சந்தேகிக்கபடுபவர்கள் எங்கெல்லாம் இருக்கின்றார்களோ அவர்களை முன்கூட்டியே கண்டு, கவனித்து காவல்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும்.கவனிக்க வேண்டியது என்னவென்றால், ஓரிடத்தில் தீவிரவாதிகள் வந்து தங்கியிருந்து, சதி திட்டங்களைத் தீட்டி, பொது மக்களை கொன்றுவிட்டு, பெரும் தீங்கிழைத்த பிறகே, அவர்களைப் பற்றிய தகவல்களை பொதுமக்கள் கொடுக்கின்றார்களே ஒழிய, தங்கள் தெருவில் தங்கள் பகுதியில் வசிக்கும், வந்து செல்லும் சந்தேகிக்கப்படுபவர்களைப் பற்றிய விவரத்தை ஆங்காங்கு உள்ள காவல்நிலையத்தில் தெரியப்படுத்துவதில்லை. அதனைச் செய்ய வேண்டியது அவசியம்.அப்படி தகவல் கொடுக்கும் பட்சத்தில் காவல்துறையினர் அவர்களை ரகசியமாகக் கண்காணித்து, சதி திட்டத்தில் ஈடுபடுவதற்கு முன்பே அவர்களை கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்தவும். பெரும் அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்கவும் முடியும். மக்களின் ஒத்துழைப்புதான் முக்கியம் என்று கூறுகிறீர்கள். அப்படியென்றால், காவல்துறையில் இருக்கும் உளவு துறையை விட, மக்கள் கொடுக்கும் விவரம்தான் அதிக முக்கியத்துவம் பெறுகிறது என்கிறீர்களா?அதாவது காவல்துறைக்கு மக்கள் கொடுக்கும் தகவல் ஒரு பெரும் உதவியாக இருக்கும். அது மட்டும் அல்லாமல், உளவு அமைப்புகளில் இருப்பவர்கள் இன்னும் சிறப்பாக தங்களது பணியை ஆற்றிட வேண்டும் என்றுதான் சொல்ல வேண்டும்அதாவது கடந்த காலங்களில் நிகழ்ந்த அசம்பாவிதங்களைப் பார்க்கையில், இந்த தனிப்பிரிவினர் தங்களது உளவுப் பணியை இன்னும் அதிகப்படுத்திட வேண்டும் என்று வெளிப்படையாகவே கூறலாம்.அவர்கள் அவ்வாறு சிறப்பாக செயல்பட்டு தீவிரவாதிகளைப் பற்றிய தகவல்களை சேகரித்து அனுப்பியிருந்தால் பல்வேறு அசம்பாவிதங்களை தவிர்த்திருக்கலாம்.பயங்கரவாத நடவடிக்கைகளைத் தவிர்ப்பதில் பொதுமக்களின் பங்கும் முக்கியமானது. அதில் காவல்துறை மற்றும் உளவுப் பிரிவினரின் பங்கு அதிகமாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே இதுபோன்ற பயங்கரவாத வன்முறைகளை தடுக்க முடியும்.ஒவ்வொரு மாநில காவல்துறைக்கும் பயங்கரவாதம் மட்டுமே இலக்கு அல்ல. ஒரு பக்கம் நக்சலைசம் வருகிறது. மற்ற மற்ற பிரச்சினைகள் வருகின்றன. சென்னை மாநகராட்சியின் சிறந்த ஆணையராக இருந்தவர் என்ற முறையிலும், கோவை குண்டு வெடிப்பிற்கு பிறகு சென்னையில் நடத்தப்பட இருந்த தொடர் குண்டு வெடிப்பு சதியை முறியடித்து பல்வேறு இடங்களில் குண்டுகளைக் கைப்பற்றியவர் என்ற முறையிலும் உங்களிடம் ஒரு கேள்வி. அதாவது, பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையே உளவுத் துறை பயங்கரவாதத்தை வேறருக்கும் முயற்சியில் முழுமையாக ஈடுபடுத்தப்படவில்லை என்பது உண்மைதானே?தமிழகத்தைப் பொறுத்த அளவில் இங்கிருக்கும் உளவுத் துறை சிறப்பாகவே பணியாற்றி வருகிறது. கோவையில் நடந்த அந்த கோர தொடர் குண்டு வெடிப்பு யாரும் எதிர்பார்க்காத ஒன்று. அதே கோவை மாநகரத்தில் 1988 முதல் 1991 வரை நான் மண்டல காவல்துறை தலைவராக (டி.ஐ.ஜி.) பணியாற்றினேன். அந்த காலக்கட்டத்தில் கூட தீவிரவாதத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. எங்களது செயல்பாடு பொதுமக்களோடு நெருங்கியபடி இருந்ததாலும், ஒரு சிலர் அடிக்கடி எங்களைத் தொடர்பு கொண்டு தகவல்கள் கொடுத்ததாலும், நாங்கள் சிறப்பாக பணியாற்றிய காரணத்தினால் எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடக்காமல் பார்த்துக் கொண்டோம்.அந்தப் பின்னணியைத்தான் சென்னையில் ஆணையராக பணியாற்றியக் காலத்திலும் நாங்கள் பின்பற்றியதால் பல்வேறு அசம்பாவிதங்களைத் தவிர்க்க முடிந்தது.ஓரளவிற்கு தகவல் கொடுத்தார்கள். ஆனால் அதற்கு மேலாக பொதுவாக காவல்துறையினரே, அந்தந்த பகுதிகளில் நிலவும் சூழ்நிலைகளைக் கண்காணித்து வந்தனர்.கர்நாடகாவில், ஒரிசாவில், குஜராத்தில், டெல்லியில் நடந்த அசம்பாவித சம்பவங்களைப் பார்க்கும்போது, உளவுத் துறையினர் முன்கூட்டியே சரியான தகவல்களை சேகரிக்கத் தவறிவிட்டனரோ என்ற எண்ணம்தான் தலைதூக்குகிறது.ஒரு நாட்டில் நடக்கிற மிகப்பெரிய வன்முறைச் சம்வங்களைத் தடுக்க வேண்டும் என்றால் அப்பகுதிகளில் செயல்படும் உளவுத் துறையினர், இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.கர்நாடகத் தலைநகர் பெங்களூரு, அஹமதாபாத், அதற்குமுன் ஜெய்ப்பூரில் குண்டுகள் வெடித்தன. சூரத்தில் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. பிறகுதான் டெல்லியில் குண்டு வெடித்தது. இந்த விசாரணையில் தெரிய வந்த விஷயம் என்னவென்றால், இவை அனைத்தையும் செய்தது ஒரே அமைப்புதான் என்பது. ஓரிடத்தில் குண்டுகள் வெடித்ததில், அதில் தொடர்புடைய அமைப்பு பற்றியும், அதன் அடுத்த குறி என்ன என்பதையும் அணுமானிக்க தவறியதில் உளவுத் துறையும், காவல்துறைக்கும் பங்கு உள்ளது அல்லவா?குண்டுகளை வெடிக்கச் செய்து அப்பாவி பொதுமக்களை கொலை செய்யும் அந்த கல் நெஞ்சக்காரர்கள் அடுத்து எங்கு, எப்படி பயங்கரவாதச் செயலை செய்யப் போகிறார்கள் என்பதை யாராலும் முழுமையாக அறிந்து கொள்ள முடியாது. இது உளவுப் பிரிவாக இருந்தாலும், காவல்துறையாக இருந்தாலும் சரி.ஆனால் எப்படி செயல்பட்டிருக்க வேண்டும் என்றால், கடந்த காலங்களில் நடந்த சம்பவங்களைக் கோர்வையாக கலந்து ஆராய்ந்து பார்த்திருந்தால், இந்தந்த அமைப்புகளால் இந்த இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கலாம் என்று தீர்மானிக்க முடியும். அதன் அடிப்படையில் உளவுப் பிரிவினர் அந்தந்த பகுதிகளுக்கு தகவல் கொடுக்க முடியும். இது ஒருபுறமிருக்க, உளவுப் பிரிவு அதிகாரிகள், இந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு நாடு தழுவிய அளவில் விவரங்களைச் சேகரித்து, தீவிரவாத செயல்களில் முன்பு ஈடுபட்டவர்கள் யார், தற்போது யாரெல்லாம் ஈடுபாட்டில் இருக்கிறார்கள் என்பதை முன்கூட்டியே கண்டறிந்து, இவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்ற தகவலை கட்டாயம் கொடுத்திருக்க வேண்டும்.மூன்றாவதாக, திடீரென்று ஒரு தீவிரவாதி எங்கோ இருந்து வந்து குண்டு வைப்பது கிடையாது. ஒரு பகுதிக்கு வந்து அங்கு ஒரு வீட்டைப் பிடித்து ஒரு சில மாதங்கள் தங்கியிருந்து உளவு பார்த்துவிட்டு பின்னர்தான் அங்கு குண்டு வெடிப்புகளை நிகழ்த்துகின்றனர். அப்போதே அவர்களைப் பற்றிய சந்தேகம் அருகில் இருப்பவர்களுக்கு எழும். நள்ளிரவுகளில் வெளியில் செல்வது, வருவது போன்ற சந்தேகம் எழும்போதே காவல்துறைக்குத் தெரிவித்து காவல்துறையை உஷார்படுத்த வேண்டும்.ஏனோத் தெரியவில்லை. பொதுமக்கள் தாங்களாக முன்வந்து தங்களது சந்தேகத்தை காவல்துறையிடம் தெரியப்படுத்த இதுவரை முன்வரவில்லை. அது பொதுமக்களின் தவறு.இந்த சூழ்நிலையில் தேசிய அளவில் பயங்கரவாதத்தை ஒடுக்க தனியாக புலனாய்வு அமைப்பு உருவாக்கப்பட வேண்டியது அவசியம் அல்லவா?உளவு அமைப்புகளில் பணியாற்றும் காவலர்களும் பணியாற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள். மாநில அளவில் உள்ள உளவு அமைப்புகளும் சிறப்பாக பணியாற்றுகிறார்கள். அங்கு சில குறைபாடுகள் உள்ளனதான். ஆனால் அதனைக் களைய உளவு வேலையில் ஈடுபட்டு தகவல்கள் அளிக்க இன்னும் கூடுதல் காவலர்கள் நியமிக்கப்பட வேண்டும். பெருவாரியான நவீன கருவிகள் அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும்.மற்ற மாநில காவல்துறையினருடன் கலந்து கருத்து பரிமாற்றம் செய்கின்ற ஒரு நிலை உருவாக வேண்டும்.கடந்த பல ஆண்டு காலமாக நடத்தப்பட்ட அசம்பாவிதங்களைக் கோர்வையாக ஆய்ந்து அதுபற்றி கலந்து பேசி, இதில் ஈடுபட்டவர்கள், காரணமான அமைப்பு, உதவி செய்யும் நாடுகளைக் கண்டறிந்து அந்நாட்டுடன் தொடர்பு கொண்டு குற்றவாளிகளை பிடித்து தண்டிக்கும் வகையில் பல அதிகாரம் மற்றும் வசதி வாய்ப்புகள் உளவுப் பிரிவினருக்கு அளிக்கப்பட வேண்டும்.அவர்களுக்கு இதுபோன்ற அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டால் இருக்கின்ற இந்த அமைப்பே போதுமானதாகும். இதற்கென்று ஒரு தனி அமைப்பை உருவாக்குவதற்கு அதிகமான காலமும், பொருளாதார செலவும் ஆகும். அதற்கான அதிகாரிகளையும் இந்த உளவு அமைப்பில் இருந்தே அளிக்க வேண்டும். அதற்கு பதிலாக இந்த அமைப்பினை இன்னும் பலப்படுத்தினால் அதுவே போதுமானதாகும்.அரசும் இதுபோன்ற உளவு அமைப்புகளுக்கு அதிகமான அதிகாரங்களையும் வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். பயங்கரவாதத்தை ஒடுக்க தனியாக சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கருத்து பரவலாக உள்ளது. காவல்துறை அதிகாரி என்ற அடிப்படையில் இதனை நீங்கள் எப்படி பார்க்கின்றீர்கள்?பொடா சட்டம் இருந்தபோது ஒரு சில மாநிலங்களில் அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக சிலர் மீது தவறாகப் பயன்படுத்தப்பட்டது என்பது உண்மை.என்னைப் பொருத்தவரை பொடா சட்டம் போன்ற கடுமையான சட்டத்தைக் கொண்டு வருவதை விட, இருக்கிற சட்டத்தின் சரத்துக்களை கடுமையாக்கி, அதனை சரியான முறையில் காவல்துறையினர் நடைமுறைப்படுத்தும் வகையில் சட்டத்தை திருத்தினாலே போதும் என்பது எனது கருத்து.கோவையில் தொடர் குண்டு வெடிப்பு நடந்த பின்னர் சென்னையிலும் அதுபோன்ற சதிதிட்டம் தீட்டப்பட்டது. அப்போது காவல்துறை ஆணையராக இருந்த நீங்கள் அந்த சதிதிட்டத்தை முறியடித்தீர்கள். அப்போது எந்த விதமான யுக்தியை கடைபிடித்தீர்கள்?கோவை தொடர் குண்டு வெடிப்பு மிகப்பெரிய கோரச்சம்பவம் ஆகும். அதன்பிறகு அவர்கள் சென்னையைத் தாக்குவார்கள் என்று ஒரு தகவல் எங்களுக்குக் கிடைத்தது. அதன் அடிப்படையில் ஏறத்தாழ 90 நாட்கள் சென்னை மாநகரில் பணியாற்றிய அனைத்து காவல்துறையினரும், இரவு பகலாக பாடுபட்டு சென்னையில் அதுபோன்ற அசம்பாவிதம் நிகழ விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற சபதம் எடுத்தோம்.கோவையில் வெடித்ததை விட அதிகமான ஆயிரக்கணக்கான குண்டுகளை (ஆர்டிஎக்ஸ்) வெடிக்காமல் கண்டெடுத்து அப்புறப்படுத்தினோம்.இதற்குக் காரணம், பணியாற்றிய அன்றைய சென்னை மாநகர காவல்துறையினரின் ஒட்டுமொத்த ஒத்துழைப்பு. அன்று இருந்த கலைஞரின் அரசு எங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு கொடுத்து. பல நேரங்களில் கலைஞர் என்னுடன் தொலைபேசியில் நேரடியாக தொடர்பு கொண்டு, கோவையில் நடந்தது போன்ற ஒரு சம்பவம் சென்னையில் நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.இதையெல்லாம் நாங்கள் ஒரு சவாலாக எடுத்து செய்துள்ளோம். அனைத்து காவல்துறையின் கூட்டு முயற்சியின் பலன். அதுமட்டும் அல்லாமல் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் அப்போதைக்கு அப்போது தகவல்களைக் கொடுத்து வந்தனர்.அதிலும் முக்கியமான விஷயம், எங்களுக்குக் கிடைத்த அனைத்துத் தகவல்களும் நூற்றுக்கு நூறு உண்மையான தகவல்களாகவே இருந்தது. அதனால்தான் சென்னை மாநகரத்தில் எவ்வித குண்டு வெடிப்பு சம்பவங்களும் நிகழாமல் நாங்கள் பார்த்துக் கொண்டோம்.அக்கம் பக்கத்து வீடுகளில் யார் வசிக்கிறார்கள் என்பதே தெரியாத நிலையில், காவல்துறைக்கு பொதுமக்கள் எந்த வகையில் ஒத்துழைக்க முடியும் என்று நினைக்கின்றீர்கள்?மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் தமிழகத்தில் தீவிரவாதம் குறைவுதான். அதுதான் உண்மை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்கள் மட்டும்தான். அதற்குப் பிறகு வந்த அரசுகளும், காவல்துறையும் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் காரணத்தால் தீவிரவாதம் தலைதூக்காமல் உள்ளது.ஆனால், அண்டை மாநிலங்களில் நடந்த அசம்பாவிதங்களைப் பார்க்கும்போது இதுபோன்ற பயங்கரவாதம் எப்போதும் எங்கு வேண்டுமானாலும் நுழைய முடியும் என்று தோன்றுகிறது. மக்களிடம் ஒரு அச்ச உணர்வும் உள்ளது. எனவே காவல்துறையும், உளவு அமைப்புகளும், குறிப்பாக பொதுமக்களும் மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு இருக்க வேண்டும். காவல்துறையினர் திறமையாக செயலாற்ற வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.மக்கள் ஏனோ தானோ வென்று இல்லாமல், நமக்கு ஒரு பிரச்சினை வரும் வரை நாம் ஏன் தலையிட வேண்டும், நமக்கென்ன என்ற எண்ணம் மாற வேண்டும். பொதுமக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். அவர்களது பகுதிகளில் சந்தேகப்படும் படியான நபர்களோ, செயல்களோ நடந்தால் உடனடியாக அப்பகுதி காவல்நிலையத்திற்கு தகவல் கொடுக்க முன் வர வேண்டும். அந்த அளவிற்கு பொதுமக்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும் என்று இந்த வாய்ப்பின் மூலமாக வேண்டுகோளாக வைக்கிறேன்

ஒரே நேரத்தில் லோக்சபா, சட்டசபை தேர்தல்: கலாம் யோசானை

ுதுடில்லி: "லோக்சபா, சட்டசபை மற்றும் கிராம ஊராட்சிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண் டும்' என்று, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறிய கருத் தை, காங்கிரஸ், பாரதிய ஜனதா, ராஷ்டிரிய ஜனதா தளம் உள் ளிட்ட முக்கிய கட்சிகள் வரவேற்றுள்ளன.டில்லியில் நடந்த ஐ.பி.என்., 7 வைர மாநில விருதுகள் வழங் கும் விழாவில் கலந்து கொண்ட அப்துல் கலாம், சுகாதாரம், கல்வி, வேலை வாய்ப்பு, ஏழ்மை ஒழிப்பு நடவடிக்கை, குடிநீர் வசதி, கழிவுநீர் அகற்றுதல், பெண்கள் மேம்பாடு, குடிமக்கள் பாதுகாப்பு, நீதி, அடிப்படை கட்டமைப்பு, சுற்றுச்சூழலில் சிறப்பிடம் வகித்த பல்வேறு மாநிலங்களுக்கு விருதுகள் வழங்கினார்.
அனைத்து துறைகளிலும் சிறப்பிடம் வகித்ததற்காக, கேரள அரசுக்கு விருது வழங் கப்பட்டது. சிறிய மாநிலங்களில், கோவாவுக்கு இவ்விருது கிடைத்தது.அப்போது, ""லோக்சபா, சட்டசபை, கிராம ஊராட்சிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படுவதன் மூலம், பதவிக்கு வருவோர், மேம்பாட்டுப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த முடியும்' என்று குறிப்பிட்டார்.இந்நிகழ்ச்சியில், கலந்து கொண்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், "கலாம் யோசனை பின்பற்றப் பட்டால், ஆளும் கட்சிகளுக்கு அரசு மேம்பாட்டு நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்தும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்' என்று தெரிவித்துள்ளனர்.
உடனடி ஆதரவு : மத்திய உள்துறை அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சிவராஜ் பாட்டீல், ""இப்பிரச்னையில் மாறுபட்ட கருத்துக்கள் எழாத நிலையில், இதை செயல்படுத்த நாங்களும் ஆர்வமாக இருக்கிறோம்,'' என்று கூறினார்.இதற்கு உடனடி ஆதரவு தெரிவித்த பா.ஜ., மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி, ""இந்த நடவடிக் கையை ஆதரிக்க நாங்கள் தயாராக உள்ளோம். தேவைப் பட்டால், அரசியலமைப்புச் சட்டத்தில் இது தொடர்பாக திருத்தம் கூட கொண்டு வரலாம்,'' என்றார்.இதற்கு ஆதரவு தெரிவித்த, ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவரும், ரயில்வே அமைச்சருமான லாலு பிரசாத் யாதவ், ""இந்த விஷயத்தில் ஒருமித்த கருத்து ஏற்படுத்த வேண்டும்,'' என்று கூறினார்.
""ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்காக, முதல்வர் பதவியை தியாகம் செய்ய முன் வருவோருக்கு கூடுதல் ஓய்வூதிய பலன்கள் கூட அளிக்கலாம்,'' என்று, நகைச்சுவையாக குறிப்பிட்டார் லாலு.""இந்த விஷயத்தில் ஒருமித்த கருத்து ஏற்பட்டால், பதவியை ராஜினாமா செய்யத் தயார்,'' என்று உத்தரகண்ட் முதல்வர் பி.சி.கந்தூரி கூறினார்.
""எனது அரசு ஓராண்டு, ஏழு மாதம் மட்டுமே ஆட்சியில் இருந்தாலும், அனைத்து மாநிலங்களிலும் ஒரே நேரத்தில் தேர்தல் நடப்பதாக இருந்தால், நாங்கள் தயார்.இதன் மூலம், அடுத்த நான்கு ஆண்டுகள், எட்டு மாதம் உத்தரகண்ட்டில் மேம்பாட்டுப் பணிகளில் தீவிர கவனம் செலுத்த முடியும்,'' என்றும் கந்தூரி கூறினார்.

பாரபட்சமாக நடத்தும் திருச்சி அண்ணா பல்கலை: மாணவர்கள் குற்றச்சாட்டால் பரபரப்ப

திருச்சி: "பாரதிதாசன் தொழில்நுட்ப கல்லூரியில் (பி.ஐ.டி.,) சேர்ந்த எங்களை திருச்சி அண்ணா பல்கலை நிர்வாகம் பாகுபாட்டுடன் நடத்துகிறது' என்று திருச்சி அண்ணா பல்கலை மாணவர்கள் புகார் கூறி வகுப்பு புறக்கணித்ததால் பரபரப்பு நிலவியது. திருச்சியில் அண்ணா பல்கலை கடந்த கல்வியாண்டு துவக்கப்பட்டது. பாரதிதாசன் பல்கலையால் நடத்தப்பட்டு வந்த பாரதிதாசன் தொழில்நுட்ப கல்லூரியில் வளாகம் முழுவதும் திருச்சி அண்ணா பல்கலையாக மாற்றப்பட்டது. பல்கலை துவக்கப்பட்ட போது பாரதிதாசன் தொழில்நுட்ப கல்லூரியில் படித்த மாணவர்கள் தற்போது அண்ணா பல்கலையில் மூன்று, நான்காம் ஆண்டு படித்து வருகின்றனர். இவர்கள் நேற்று காலை திடீரென வகுப்புகளை புறக்கணித்து விட்டு பல்கலை வளாகத்தில் நிர்வாகத்துக்கு எதிராக கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தினர். இதுகுறித்து மாணவர்கள் கூறியதாவது: பாரதிதாசன் தொழில்நுட்ப கல்லூரியில் (பி.ஐ.டி.,) தான் நாங்கள் இன்ஜினியரிங் படிக்க சேர்ந்தோம். அதுவே கடந்த ஆண்டு அண்ணா பல்கலையாக மாற்றப்பட்டது. தற்போது மூன்று, நான்காம் ஆண்டு படிக்கும் எங்களை அண்ணா பல்கலை நிர்வாகம் பி.ஐ.டி., மாணவர்கள் தானே என்ற பாகுபாட்டுடன் நடத்துகிறது. அண்ணா பல்கலையின் நிர்வாகத்தின் கீழ் வந்த எங்களுக்கு போதுமான வகுப்பறை, லேப் வசதி இல்லை. விடுதியில் தங்கியிருப்பவர்களுக்கு சாப்பாடு சரியாக வழங்குவதில்லை. அறையில் மாணவர்கள் கூட்டமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். விடுதியில் மாணவர்களுக்கு கட்டில் கூட இல்லாமல் தரையில் படுத்து தூங்குகின்றனர். பல்கலை நூலகத்தில் தேவையான புத்தகங்கள் இல்லை. தகுதியான ஆசிரியர்களும் இல்லை. இதையெல்லாம் கடந்த ஓராண்டாக பொறுத்துக் கொண்டு வந்தோம். தற்போது இன்டர்னல் மதிப்பெண் வேண்டும் என்றே காழ்ப்புணர்ச்சியுடன் அதிகமான மாணவர்களுக்கு குறைத்து போட்டுள்ளனர். இதுகுறித்து கல்லூரி டீனிடம் கேட்டால் அவர் கண்டபடி பேசுவதால் மாணவர்கள் மனதை பாதித்துள்ளது. இதையடுத்தே நாங்கள் இன்று வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் இறங்கினோம். மாணவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வுக்கு தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். பல்கலை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் பதிவாளர் சந்திரசேகரன் பேச்சுவார்த்தை நடத்தி, "குறைகள் களைய விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்று உறுதியளித்ததைத் தொடர்ந்து மாணவர்கள் தங்களின் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். திருச்சி அண்ணா பல்கலை பதிவாளர் சந்திரசேகரன் கூறுகையில், ""மாணவர்கள் பாகுபாடாக நடத்தப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு உண்மையில்லை. அனைத்து மாணவர்களும் ஒன்றாகவே நடத்தப்படுகின்றனர். மாணவர்களின் பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும்,'' என்றார்.

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

வியன்னா: "அணு குண்டுகள் தயாரிக்க பயன்படும் புளூடோனியம் அணு உலைகளை அமைக்கும் பணியில் பாகிஸ்தான் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதனால், இந்தியா-பாக்., நாடுகளுக்கு இடையே அணு ஆயுத போட்டி உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது' என, அமெரிக்கா எச்சரித்துள்ளது. "டெய்லி டைம்ஸ்' பத்திரிகையில், சர்வதேச அறிவியல் ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு மையத்தை மேற்கோள் காட்டி வெளியாகியுள்ள செய்தியில் தெரிவிக் கப்பட்டுள்ளதாவது: வர்த்தக நோக்கத் துக்காக அமெரிக்காவால் செலுத்தப்பட்ட சேட்டிலைட் அனுப் பிய புகைப்படங்களில் அணுகுண்டு தயாரிக்கும் பணியில் பாக்., தீவிரமாக செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக, பாக்., - இந்தியா இடையே அணு ஆயுத போட்டி ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளத

கடல்நீரிலிருந்து குடிநீர் : ஜனவரியில் விநியோகம

சென்னை: கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் முடிக்கப்பட்டு, வரும் ஜனவரியில் சென்னைக்குக் குடிநீர் வழங்கப்படும், என்று அமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலின், சென்னையில் ஜவகர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தில், கீழ்ப்பாக்கம் நீரேற்று நிலையத்தில் நடந்துவரும் பணிகளை நேற்று பார்வையிட்டார். பின், மீஞ்சூரில் நாள் ஒன்றுக்கு 10 கோடி லிட்டர் உற்பத்தித் திறன் கொண்ட, கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் பணிகளை ஸ்டாலின் பார்வையிட்டார்.
மீஞ்சூர் காட்டுப்பள்ளி கிராமத்தில், இத்திட்டத்தை வடிவமைத்து, கட்டுமானம் செய்து, இயக்கி மாற்றித் தருதல் முறைப்படி, "சென்னை வாட்டர் டீசாலினேஷன் லிட்.,' என்ற நிறுவனத்துடன் சென்னைக் குடிநீர் வாரியம் 25 ஆண்டுக்கான கொள்முதல் ஒப்பந்தம் செய்துள்ளது. இத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து அமைச்சர் ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது: கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தை அமைக்கும் பணிகளில் குறிப்பாக, கடலுக்கடியில் நீரை உள்கொண்டுவரும் குழாய்களைப் பதிக்கும் பணிகளை செப்டம்பர், அக்டோபரில் தான் மேற்கொள்ள இயலும். இப்பணிகள் முடிக்கப்பட்டு, வரும் ஆண்டு ஜனவரி மத்தியில் இந்நிலையத்திலிருந்து குடிநீரை வழங்க இயலும். தற்போது இத்திட்டத்தில் 80 சதவீதப் பணிகள் முடிவடைந்துள்ளன. மீஞ்சூர் காட்டுப்பள்ளியில் அமைக்கப்படும் இந்நிலையத்திலிருந்து, மாதவரம் மற்றும் செங்குன்றம் வரை குடிநீரைக் கொண்டுசெல்லும் குழாயை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இத்திட்டத்துக்கு ஜவகர்லால் தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தில், 87.80 கோடி ரூபாய்க்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
மாதவரம் மற்றும் மணலி நீரேற்று நிலையங்கள் வரை குழாய் பதிக்கும் பணியில், மொத்தம் 23 ஆயிரத்து 350 மீட்டர் நீளத்தில் தற்போது 20 ஆயிரத்து 614 மீட்டர் நீளத்துக்கு ஆயிரம் மி.மீ., விட்டமுள்ள நெகிழ்விரும்புக் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு ஸ்டாலின் கூறினார். அமைச்சருடன் நகராட்சி நிர்வாகத்துறைச் செயலர் தீனபந்து, சென்னைக் குடிநீர் வாரிய இயக்குனர் சுனில் பாலீவால், செயல் இயக்குனர் தங்கசாமி மற்றும் வாரியத்தின் மூத்த இன்ஜினியர்கள் சென்றிருந்தனர்.

340 காய்களுடன் கூடிய 'மெகா' சைஸ் வாழைத் தார்

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே ஒரு தோட்டத்தில் விளைந்த வாழைத்தாரில் மொத்தம் 340 காய்கள் இருந்தன. "30 ரூபாய் செலவு செய்து வாழை மரத்தை வளர்த்தால், அதில் விளையும் தாரை, 300 ரூபாய்க்கு விற்கலாம்' என, விவசாயி மாடசாமி தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அடுத்துள்ள சேர்வைக்காரன் மடத்தில், ஜோஸ்வா ரத்தினராஜ் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. அதில், மாடசாமி என்பவர் வேலை செய்து வருகிறார். அங்கு, "கற்பூரவல்லி' வாழை இனத்தைச் சேர்ந்த ஆயிரம் வாழைகள், கடந்த ஒன்றரை ஆண்டிற்கு முன் பயிரிடப்பட்டன. தற்போது அந்த வாழை மரங்களின் தார்கள் நன்கு வளர்ச்சியடைந்துள்ளன. அதில் பெரும்பாலானவை வெட்டி விற்கப்பட்டன. அவ்வாறு விளைந்த ஒரு தாரில், 19 சீப்புகளில், மொத்தம் 340 காய்கள் இருந்தன.
விவசாயிக்கு பாராட்டு : தூத்துக்குடியில் நேற்று நடந்த நுண்நீர் பாசனக் கருத்தரங்கிற்கு, அந்த கற்பூரவல்லி "மெகா சைஸ்' வாழைத் தாரை, விவசாயி மாடசாமி கொண்டு வந்திருந்தார். அந்த தாரைப் பார்த்து பாராட்டி கலெக்டர் பழனியாண்டி உள்ளிட்டோர் மாடசாமிக்கு பரிசு வழங்கினர். மாடசாமி கூறுகையில்,"தேரி செம்மண், நுண்நீர்ப் பாசனம், நல்ல உரம் ஆகியவற்றால் வாழைத்தார் நன்கு வளர்ச்சியடைந்து, அதில் 340 காய்கள் உள்ளன. ரூ. 30 செலவு செய்து "கற்பூரவல்லி' வாழை மரத்தை வளர்த்தால் அதில் கிடைக்கும் தாரை வெளிமார்க்கெட்டில் ரூ. 300 வரை விற்கலாம்' என்றார்.

உலக அளவில் பெண் குழந்தை பற்றாக்குறை ஏற்படும்!

குழந்தை பாக்கியம் கிடைத்தும் அதனை தக்க வைத்துக் கொள்ள முடியாதவர்களை பற்றி ஜாதகத்தில் முன்னறிய முடியுமா?உலகில் இன்று பலர் குழந்தை பாக்கியம் கிடைக்காமல் ஏங்குகின்றனர். ஆனால் அதே தருணத்தில் குழந்தை பாக்கியம் கிடைத்த சிலர் தங்களது குழந்தைகளை வளர்க்க முடியாமல் அரசு காப்பகங்களிலோ, அநாதையாகவே விட்டுவிடுகின்றனர். மேலும் சிலரது குழந்தைகள் பயணத்தின் போதோ அல்லது திருவிழாவிலோ தொலைந்து விடுகிறது.
webdunia photo
WDசமீபத்தில் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியில், தருமபுரியில் அரசு தொட்டில் குழந்தை திட்டத்தின் கீழ் கிடைத்த தகவலின்படி கடந்தாண்டு ஆயிரத்திற்கும் அதிகமான பெண் குழந்தைகள் அதன் பெற்றோரால் கைவிடப்பட்டது தெரியவந்துள்ளது. ஒருவர் ஜாதகத்தை வைத்தே அவருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்குமா? அப்படிக் கிடைத்தால் அது நிலைக்குமா? என்பதை கண்டறிய முடியுமா?ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்:தருமபுரியில் ஆயிரம் பெண் குழந்தைகள் அவர்கள் பெற்றோரால் கைவிடப்பட்டது, இதற்கு கிரக அமைப்புகளே காரணம் (குழந்தை பெற்றுக் கொண்ட பின்னர் அவற்றை புறக்கணிப்பது).உலகளவில் பெண் குழந்தை பற்றாக்குறை மிக விரைவில் வரப்போகிறது. இதன் விளைவாக ஹோமோ செக்ஸ் உள்ளிட்ட பல அவலங்கள் தொடரும். இப்போதே பல ஜாதிகளில், பெண் கிடைப்பது குதிரைக் கொம்பாக உள்ளது. இதன் காரணமாக ஜாதி விட்டு ஜாதி திருமணங்களும் அதிகரிக்கத் துவங்கியுள்ளன.நம் நாடு புண்ணிய தேசம். சக்தி வீடு. நம் நாட்டின் ராசி கடகம். பெண் ராசி என்பதும் கடகம் தான். தற்போது இந்த கடகத்தில் பாவ கிரகங்கள் தொடர்ந்து சூழ்ந்து கொண்டிருக்கிறது. சந்திரனை ஜோதிட நூல்கள் பெண் கிரகம் என்று கூறுகிறது. அதாவது பெண் தன்மை அதிகம் உள்ள அல்லது பெண்ணாதிக்க கிரகம் என்று கூறலாம். சுக்கிரனும் பெண்ணாதிக்க கிரகமே. கடந்த 2001இல் இருந்து கடக ராசியை சனி சூழ்ந்துள்ளது. வரும் 27-9-2009 முதல் கடகத்தை விட்டு முழுவதுமாக விலகுகிறது. அதன் பிறகு தொட்டிலில் பெண் குழந்தை, அநாதைகளாக விடப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிரடியாக குறையும். ஒரு கணக்கெடுப்பு நடத்தினால் கடந்த காலங்களை விட 2001-2009 வரையிலான காலகட்டத்தில்தான் பெண் குழந்தைகள் புறக்கணிப்பு உயர்ந்திருக்கும்சேலம், தருமபுரி ஆகியவை தொண்ட மண்டலத்திற்கு உரிய பகுதிகள். இவை சனியின் ஆதிக்கத்தில் வருபவை. தற்போது ஏழரைச் சனி நடைபெறுவதால், அப்பகுதி மக்கள் தவறான வகையில் பிள்ளைப்பேறு உள்ளிட்ட சில அசிங்கமான நிகழ்வுகளை சனி தனது கெட்ட கதிர்வீச்சின் மூலம் அப்பகுதி மக்கள் மீது செலுத்துகிறார். வரும் 27-9-09க்கு பிறகு பெண் பிள்ளைகளின் அருமை அப்பகுதி மக்களுக்கும் தெரியத் துவங்கும். அதன் பிறகு புறக்கணிக்கப்படும் எண்ணிக்கை குறையும்.குழந்தைப் பிறப்பு பாதிப்பு!ஜோதிட ரீதியாக ஒருவரது ஜாதகத்தில் 5ஆம் இடம் குழந்தை ஸ்தானமாகும். ஐந்தாம் இடத்தில் இரண்டு அல்லது மூன்று பாவ கிரகங்கள் இருந்தால் குழந்தை உருவாகாது. அப்படி உருவானால் தவறாக உருவாகும். நேரடியாகக் கூற வேண்டுமென்றால் கணவராக ஒருவர் இருந்தாலும், ஆனால் குழந்தை வேறு ஒருவருக்கு பிறக்கும்.இந்தப் பையன் ஜாதகத்திற்கு இப்போது அவரது தந்தை உயிருடன் இருக்கக் கூடாதே என்று என்னிடம் ஜாதகம் பார்க்க வரும் சிலரிடம் கேட்டுள்ளேன். “நல்லா பார்த்து ஜோசியத்தை சொல்லு” என்று மிரட்டலுடன் கூறுவார்கள். இந்தப் பையன் பிறந்ததற்கு பின்னர் தான் அவரது தந்தை மிகப் பெரியளவில் வளர்ந்துள்ளார், பல சொத்துகளுக்கு அதிபதியானார் என்றெல்லாம் கூறுவார்கள். ஆனால் உண்மையில் விந்தை விட்டவன் எங்காவது நொந்து போய் கிடப்பான் அல்லது இறந்திருப்பான். தற்போது தந்தை என்று கூறப்படுபவர் அக்குழந்தையை பாதுகாவலனாக மட்டுமே இருப்பார். எனவே அப்பெண் கூறினால் மட்டுமே உண்மையான தகப்பன் யார் என்று தெரியும். சில கூட்டு கிரக அமைப்புகள் (அதாவது சுக்கிரன் ராகுவுடன் அல்லது சனியுடன் 5ஆம் இடத்தில் சேர்ந்திருந்தால்) அப்பெண் மாற்றானுக்கு பிள்ளை பெறுவாள் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. அதே 5ஆம் இடத்தில் சூரியன், செவ்வாய், சனி ஆகிய 3 கிரகங்கள் அமையப் பெற்றால் இதேபோல் நிகழும்.அடுத்ததாக 5வது இடத்தில் கொடிய கிரகங்கள் (செவ்வாய், ராகு, சனி) அமரும்போது அப்பெண் தான் பெற்ற குழந்தையை தூக்கி எறிவாள் என்றும் ஜோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளது

அணு சக்தி ஒப்பந்த‌ம்: உண்மையை உடைத்த ரகசிய கடிதம்!

அரசஅளித்பதிலுமகடிதத்தினமுரண்பாடும்!

இந்திய-அமெரிக்அணசக்தி ஒப்பந்தமதொடர்பாவிவாதமநடந்தபோதெல்லாம், “இந்ஒப்பந்தமஎந்விதத்திலுமபாதுகாப்புததொடர்பாநமதஅணசக்திககொள்கையகட்டுப்படுத்தாது. எதிர்காலத்திலநமதபாதுகாப்பையும், தேநலனையுமகருத்தில்கொண்டஅணஆயுசோதனநடத்துவதற்கஇந்ஒப்பந்தமஎந்விதத்திலுமஒரதடையாஇருக்காது” என்றமத்திஅரசபதிலதந்துவந்துள்ளது.

அதமட்டுமல்ல, அணசக்தி ஒத்துழைப்பஒப்பந்தமநடைமுறைப்படுத்துவததொடர்பாவிவாதமநடந்தபோதெல்லாமஹென்றி ஹைடசட்டத்தினபிரிவுகளகுறித்தகேள்வி எழுப்பியபோதெல்லாமபதிலளித்நமதபிரதமரும், அயலுறவஅமைச்சரபிரணாபமுகர்ஜியும், “வேறொரநாட்டினநாடாளுமன்றத்திலநிறைவேற்றப்பட்ஒரசட்டமஎந்விதத்திலுமநம்மகட்டுப்படுத்தாது. அணசக்தி ஒத்துழைப்பநடைமுறைப்படுத்உருவாக்கப்பட்டுள்ள 123 ஒப்பந்தமமுக்கியமானது, அதுதானஇரதரப்பையுமகட்டுப்படுத்தககூடியது” என்றெல்லாமகூறியுள்ளார்கள். இதநாடாளுமன்றத்தினகுறிப்புகளிலஇடம்பெற்றுள்ளது, அனைத்தஊடகங்களிலுமசெய்தியாவந்துள்ளது.



இப்படிப்பட்பொய்யுரைகளைத்தானஅமெரிக்நாடாளுமன்றத்தினஅயலுறவகுழுவினதலைவரஹோவர்டபெர்மானவெளியிட்கடிதமஅப்பட்டமாஉடைத்தஉண்மையவெளிக்காட்டியுள்ளது.

இந்திய-அமெரிக்அணசக்தி ஒத்துழைப்பஒப்பந்தமதொடர்பாஅமெரிக்நாடாளுமன்றத்தினஅயலுறவவிவாகாரககுழுவினதலைவராஇருந்டாமலான்டோஸகடந்ஆண்டஅக்டோபரமாதம் 5ஆமதேதி எழுதிகடிதத்திற்கஇந்ஆண்டஜனவரி மாதம் 16ஆமதேதி அமெரிக்அயலுறவஅமைச்சகமதங்களநிலையவிளக்கி எழுதிகடிதத்தைத்தானதற்பொழுதஅக்குழுவிற்குததலைவராஇருக்குமஹோவர்டபெர்மானவெளியிட்டுள்ளார
இதவெளியிட்டதற்காகாரணத்தையுமபெர்மானகூறியுள்ளார். இரநாடுகளுக்குமஇடையிலாமுக்கியமானதொரஒத்துழைப்பஒப்பந்தமதொடர்பாஉண்மைகளஅமெரிக்கர்க‌மட்டுமின்றி, இந்தியர்களுமஅறிந்துகொள்வேண்டுமஎன்பதற்காகவதானவெளியிட்டதாகூறியுள்ளார். பாராட்டிற்கு‌ரியது.


FILE
இந்தககடிதத்திலவெளியாஉண்மைகளஎதுவுமபுதிதல்ல, எல்லாமஏற்கனவதெரிந்ததுதானஎன்றகூறி மத்திஅரசமழுப்பி வருகிறது. அதஉண்மையானாலஇக்கடிதத்தினவிவரங்களஇந்தியர்களுமஅறிந்துகொள்வேண்டுமஎன்றபெர்மானகூறியதஏனஎன்பதநாமசிந்திக்வேண்டும். எல்லாமஏற்கனவதெரிந்ததுதானஎன்றால், அக்கடிதமவெளியானதுமபிரதமரமன்மோகனசிஙஅவசரககூட்டமகூட்டி விவாதித்ததஏன்? கடிதமவெளிப்படுத்திவிவரங்களதொடர்பாஇரண்டநாட்களுக்குபபிறகவிளக்அறிக்கஅளிப்பதஏன்?

அமெரிக்அரசஅல்ல, அந்நாட்டநாடாளுமன்றத்தினஅயலுறவவிவகாரங்களகுழுவின் (House Foreign Affairs Committee) தலைவரபெர்மான், மிமுக்கியத்துவமவாய்ந்இந்ஒப்பந்தமகுறித்தஅமெரிக்மக்களஅறிந்தகொள்வேண்டுமஎன்பதற்காகவஅதனவெளியிட்டதாகககூறியுள்ளார். ஆனாலநமதநாட்டஅரசஎல்லாவற்றையுமமூடி மறைக்கபபார்க்கிறது!

அயலுறவிலஎப்படியோ, ஆனாலஅமெரிக்அரசியல்வாதிகளதங்களநாட்டிலஜனநாயகத்தைககாப்பதிலஎவ்வளவகருத்தாஉள்ளனர்! நமதநாட்டஅரசும், அரசியல்வாதிகளுமமக்களுக்கஉண்மையமறைப்பதிலஒருமித்கருத்திலஉள்ளனர். ஆனாலஇரண்டுமஜனநாயநாடுகள்தான்.

சோதனசுயககட்டுப்பாடும், எதிர்காலமும்!

இந்தககடிதமவெளியிட்உண்மஎப்படிப்பட்பாதிப்பநமதநாட்டினபாதுகாப்பிற்கும், இறையாண்மைக்குமஏற்படுத்தக்கூடியதஎன்பதகவனமாஆராயவேண்டும்.





இந்தியதனதபாதுகாப்பகருத்திலகொண்டஎதிர்காலத்திலஅணஆயுதசசோதனநடத்தினால், இந்ஒப்பந்தத்தினகீழஇந்திஅணஉலைகளுக்கஅளிக்கப்படுமஎரிபொருளநிறுத்தப்படும், உடனடியாஒப்பந்தமமுறித்துக்கொள்ளப்படுமஎன்றடாமலாண்டோஸஎழுப்பிய 16வதகேள்விக்கஅமெரிக்அயலுறவஅமைச்சகமபதிலளித்துள்ளது.

'நமதநாட்டைபபொறுத்தவரை, அணஆயுசோதனநடத்துவதில்லஎன்கின்சுகட்டுப்பாட்டை (Unilateral Moratorium) கடைபிடித்தவருகிறது. ஆனால், எதிர்காலத்திலசர்வதேசூழ்நிலைகளமற்றுமநமதபாதுகாப்பு, தேநலனஆகியவற்றைககருத்திலகொண்டஅணஆயுசோதனநடத்வேண்டிஅவசியமஏற்பட்டாலஇந்தியஅணஆயுசோதனநடத்தும், அதனஎந்தசசக்தியுமதடுக்முடியாது' (இதெல்லாமநமதநாடாளுமன்விவாதத்திலஅரசகொப்பளித்வீவசனங்கள்) என்றஇந்தியகூறியுள்ளது.நமதகேள்வி இதுதான்:

இந்திய-அமெரிக்அணசக்தி ஒத்துழைப்பஒப்பந்தமநடைமுறைக்கவந்பிறகு, அமெரிக்கஉள்ளிட்அணசக்தி தொழில்நுட்நாடுகளிடமிருந்து 1,000 மெகவாடமினஉற்பத்தி திறனகொண்அணசக்தி உலைகளைபபெற்றநா‌மநிறு‌விவருமநிலையிலஅல்லதநிறு‌ி செயல்பட்டுக்கொண்டிருக்குமநிலையிலோ, நமதஅண்டநாடுகளிலஏதாவதஒன்றஅணஆயுசோதனநடத்தி ஒரஅச்சுறுத்தலஉருவாக்கும்பட்சத்திலஅல்லதமாறுபட்ஒரசர்வதேசூழலிலநமதபலத்தசர்வதேசமூகத்திற்கஒரஎச்சரிக்கையாதெரிவிக்குமஅவசியமஎழுந்தோலஎப்படி அணஆயுதசசோதனநடத்முடியும்?


FILE
பாதுகாப்புசசூழலஅணஆயுசோதனையஅவசியமாக்குகிறது. அதவேளையிலஅணஆயுதசசோதனநடத்தினாலஅணசக்தி ஒத்துழைப்பு (அமெரிக்மட்டுமல்ல, மற்நாடுகளும்தான்) முறிந்துவிடும். நமதஅணஉலைகளுக்கஎரிபொருளகிட்டாது. அணுததொழிலநுட்உபகரணங்களவாங்கவுமமுடியாது, விற்கவுமமுடியாது. இந்நிலையிலஅரசாலஎன்முடிவஎடுக்முடியும்?

இப்படிப்பட்சூழ்நிலஏற்படும்போது, துணிந்தஅணஆயுதசசோதனநடத்தினால், அணஉலைகளைபபெநாமசெய்முதலீடுகளஅனைத்துமகேள்விக்குறியதாகிவிடும். எரிபொருளகிட்டாமலஇன்றநாமசந்தித்துவருமஅதநிலஏற்படும். இதனஎப்படி அரசசமாளிக்கும்?

இதநமதசுதந்திரமாசெயல்பாட்டபாதி‌க்கிறதே. அதனால்தானஇந்ஒப்பந்தமநமதஇறையாண்மையமுடக்கிவிடககூடியதஎன்றஎதிர்‌ப்பாளர்களகூறுகின்றனர்.

இதற்கமத்திஅரசினபதிலஎன்ன? அப்படிப்பட்சூழ்நிலையிலஇருந்ததற்காத்துக்கொள்போதுமாஎரிபொருளஇருப்பஉருவாக்கிககொள்வோமஎன்றமுன்பபதிலளிக்கப்பட்டது. அதனையுமஇந்தககடிதமதகர்த்துவிட்டது. அப்படிப்பட்எரிபொருளஇருப்பஇந்தியஉருவாக்கிககொள்எந்அனுமதியுமவழங்கவில்லஎன்றஅமெரிக்அயலுறவஅமைச்சகமதனதகடிதத்திலதெளிவாகககூறியுள்ளது.


FILE
எனவநமதஅணஉலைகளுக்குததேவையாஎரிபொருளைப் (யுரேனியம்) பெநாமஅமெரிக்காவுடனாஅணசக்தி ஒத்துழைப்பிற்குசசெல்கிறோம். ஆனாலஅவர்களநமதகுடுமியமுழுமையாகபபற்றி இறுக்கிவிடப்பார்க்கிறார்கள்.

இந்திய-அமெரிக்அணசக்தி ஒத்துழைப்பஒப்பந்தமதொடர்பாஒவ்வொரகேள்விக்குமஅந்த 26 பக்கடிதத்தில் (45 கேள்விகளுக்கஅளிக்கப்பட்டு‌ள்பதில்களில்) முழுமையாவிளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதிலமத்திஅரசமழுப்புவதற்கஏதுமில்ல

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive