காரைக்குடி: காரைக்குடியில் 8 மணி நேரம் மின்தடையால் தொழிற்சாலைகளில் தினமும் ரூ.8 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.காரைக்குடி நகரில் தினமும் காலை 6- 9 மணி, இரவு 6 -7, 10- 11 மின்தடை செய்யப்படும் என வாரியம் அறிவித்தது. அதற்கு மாறாக தினமும் எட்டு மணிநேரம் மின்தடை செய்யப்படுகிறது. அறிவிக்கப்பட்ட நேரங்களுடன் காலை 10.30 -12 அல்லது பகல் 12 -1.30, இரவு 11-12 மற்றும் இடையிடையே அரை மணிநேரம் மின்தடை ஏற்படுகிறது.தினமும் ரூ.8 கோடி ரூபாய் இழப்பு: மின்தடையால் காரைக்குடி அமராவதி புதூரிலுள்ள தொழிற்பேட்டையில் பேப்பர் கப்,ஸ்டீல் பர்னிச்சர், பெல்ட் தயாரிப்பு, அரசு அச்சகத்தில் உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. புதுவயல்,பள்ளத்தூர்,கண்டனூரில் அரிசிஆலைகள்,அரியக்குடியில் வெண்கல,பித்தளை விளக்கு தொழிற்சாலை, கண்டனூர், காரைக்குடி, பள்ளத்தூரில் வெள்ளி சாமான்கள், செஞ்சையில் கைத்தறி சேலைகள், தங்கநகை தயாரிப்பு நிலையங்களில் உற்பத்தி பாதிக்கப்பட்டு வருகிறது. இத்தொழிற்சாலையிலிருந்து "ஆர்டர்கள்' பெற்றவாறு வெளிமாவட்ட, மாநிலங்களுக்கு அரிசி மூடைகள், வெள்ளி சாமான், குத்துவிளக்குகள் அனுப்ப முடியவில்லை. இவற்றில் தினமும் 8 கோடி ரூபாய் வரை உற்பத்தி இழப்பு ஏற்பட்டு வருவதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
மின்தடையால் காரைக்குடியில் ஆலைகளில் தினமும் ரூ.8 கோடி இழப்பு
Posted by
தமிழ்க்குமரன்
Tuesday, October 7, 2008
Labels: நாட்டு நடப்பு

0 comments:
Post a Comment