கல்வி என்பது மனிதவாழ்வின் இன்றியமையாத ஒன்றாகும் நமது சமுதாயம் கல்வி கற்று வாழ்வில் முன்னேற வேண்டும். என்பதற்க்காக காமராஜர் போன்றோரால்போற்றி வளர்க்கப்பட்ட கல்வி இன்று பணத்திற்க்கு விலை போகும் பொருளாகிவிட்டது.கல்வி என்பது அனைத்து மக்களுக்கும்
ஏழை பணக்காரன் வித்தியாசமின்றி அனைவரும் வாழ்வில் முன்னேற வேண்டும்என்பதை குறிக்கோளாக உருவாக்கப்பட்ட அரசு பள்ளிகளின் தற்போதைய நிலைமைஎன்ன?
எங்கு நோக்கினும் தனியார் பள்ளிகளின் ஆக்கிரமிப்பே அதிகமாக உள்ளதுஇன்று கல்வி பகல் கொள்ளையர்களின் கூடாரமாக மாறிவிட்டதுதொடக்ககல்வி முதல் கல்லூரி படிப்பு வரைகல்வி என்பது அறிவை வளர்க்கும் இடமாக இல்லாமல்பணம் சம்பாதிக்கும் ஒரு தொழிலாக மாறிவிட்டது.
தொடக்கல்விக்கே இன்று பல ஆயிரங்களைபிடுங்கும் கல்வி நிறுவனங்கள் ,கல்லூரி படிப்பிற்கு பல லட்சங்களை பிடுங்கிக்கொள்கின்றன ஏன் இந்த மாற்றம்! அரசு பள்ளிகள் என்னவாயிற்று? தங்கள் குழந்தைகள் ஆங்கில அறிவிலும் மற்ற அனைத்திலும் சிறந்து விளங்க வேண்டும்என நினைத்த பணக்கரர்களுக்காக மட்டுமே இயங்கிவந்த இது போன்ற பள்ளிகள் என்று பெருகி விட்டதன் காரணம் என்ன? ஆங்கில மோகம் ஒரு புறம் இருந்தாலும்தன் குழந்தையும் சமுதாயத்தில் உயர வேண்டும் எனநினைக்கும் ஏழைகள் கூட இது போன்ற பள்ளிகளையே நாடுகின்றனர்.
இதில் அரசு பள்ளிகளின் நிலை பாடம் நடக்கிறதோ இல்லையோ சர்ச்சைகளும் பிரச்சனைகளுக்கும் மட்டும்குறைவில்லாமல் இருக்கிறது பாலியல் பிரச்சனைகள்,குழந்தைகளை கொடுமைபடுத்துகின்றனர், போன்றுதினம் தினம் சர்ச்சைகளை சுமந்து கொண்டு நிற்கிறதுகல்வித்துறை .ஆசிரியர்கள் போராட்டம் ,அரசு விடுமுறைஇவை அனைத்தும் போக பள்ளி நடப்பதேபோரட்டமாகி விட்டது
இது தவிர ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வரும்தேர்ச்சி விகிதம் தேர்வு முடிவுவெளியிடும் போதெல்லாம் இதனை பற்றி அக்கறை படும்அரசு பின் அதனை பற்றி கண்டு கொள்வதேயில்லை.
ஏன் இந்த நிலை தனியார் பள்ளியில் ரூபாய்2500 க்குவேலை செய்யும் ஒரு ஆசிரியரால் தரக்கூடிய உழைப்பையும்தேர்ச்சி விகிதத்தையும்அரசு பள்ளிகளில் ரூபாய் 13,500 சம்பளம் வாங்கிக்கொண்டு வேலை பார்க்கும்அரசு பள்ளி ஆசிரியர்களால் செய்ய முடியவில்லையே ஏன்?
ஏனென்றால் அங்கு ஆசிரியர்களுக்கென்றுவரைமுறை உள்ளதுஆனால் இங்கு கண்டு கொள்ளாத அரசு, கடமையைஒழுங்காக செய்யதவறிய அரசு அதிகாரிகள், ஆகியோரின்அலட்சிய போக்கால் கல்வி இன்று தனியாரின் கைகளில் அடைக்கலமாகிவிட்டது.
இது போன்ற செயல்களில்அரசு ஏன் அலட்சியம் காட்டுகிறது ஏனென்றால்கல்வி நிறுவனங்களை நிறுவி கொள்ளையில்ஈடுபட்டுள்ளது வேறு யாருமல்ல அரசில் பங்குவகிக்கும்அமைச்சர்கள், அரசியல்வாதிகளுடன் தொடர்புள்ள தொழிலதிபர்கள்இதனாலேயே அரசு தனியார் பள்ளிகளின் மீதுதனி அக்கறை செலுத்தி அவற்றின் கொள்கைகளுக்கு வாய் மூடி கிடக்கிறது .
இவற்றை தடுக்க அரசு தனியார் பள்ளிகள் அனைத்திற்க்கும்ஒரே மாதிரியான கட்டணங்களை நிர்ணயிக்கவேண்டும் "நன்கொடை "என்ற பெயரில் சுருட்டும்பள்ளிகளுக்கு மூடு விழா நடத்தவேண்டும் மேலும் சிறந்த முறையில்செயல் படாத அரசு ஆசிரியர்களை உடனே வீட்டுக்குஅனுப்பவேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
தனியார் பள்ளிகளின் கொள்ளை ஒரு புறமிருக்க தனியார் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைசேர்க்க முடியாத பெற்றோர் அரசு பள்ளிகளை மட்டுமேநம்பி உள்ளனர் ஆனால் அரசு பள்ளிகளின் நிலைமை கவலைக்கிடமாக தவழ்ந்துகொண்டிருக்கிறது.
இப்போது இருக்கும் சூழ்நிலையை கருத்தில்கொண்டு பார்க்கும் போது தனியார் பள்ளிகளில்படிக்கும் குழந்தைகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் போதுஅரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின்நிலைமை மிக மிக மோசமாக உள்ளதுதனியார் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுடன்அரசு பள்ளியில் குழந்தைகள் நமது சமுதாய ஒட்டத்தில்போட்டியிடுவது இயலாத காரியம் இதற்கு தீர்வு தான் என்ன?
அரசு பள்ளிகள் அனத்தும் தனியார் பள்ளிகளின்தரத்திற்க்கு உயர்த்தப்படவேண்டும் பாடத்திட்டங்கள் அனைத்தும் தனியார் பள்ளிகளின் பாடத்திட்டங்களை விடசிறப்பானதாக உருவாக்கப்பட வேண்டும் அரசு பள்ளிகளில் பயின்று சிறந்த இடத்தை பிடித்தவர்கள் பலருண்டுஆனால் இன்று அவற்றின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதுஇதனை சரி செய்ய அரசு அக்கறை செலுத்த வேண்டும்ஒரு சிறந்த அரசின் கடமை ஒரு சிறந்த குடிமகனை உருவாக்குவதே என்பதை மனதில் கொண்டு பாடுபட வேண்டும்நம் குழந்தைகள் தான் தனியாரிடம் நன்றாக படிக்கிறதே நமக்கென்ன என்று அலட்சியமாக இருந்தால் வருங்காலம் நம்மை வசை பாடும் என்பதை மறுப்பதக்கில்லை .
கல்வி கொள்ளை!
Labels: விமர்சனம்
பக்காவாக 18 சிடிக்கள் "சிக்கிய குரு அரசின் அதிரடி"
பா.ம.க.வின் அரசியல் ஜாதகத்தில், `குரு' பார்வை மிகமிக முக்கியமானது. `குரு' பார்த்த பார்வையால் இன்று தி.மு.க. கூட்டணியை விட்டு பா.ம.க. நீக்கப்பட்ட திருவிளையாடல் நடந்திருப்பதோடு, அந்த `குருவே' கைதான சம்பவமும் நடந்திருக்கிறது.
கூட்டணிக்குள் இருந்தபடியே தி.மு.க.வுக்கு பா.ம.க. தந்த குடைச்சல் கொஞ்ச நஞ்சமல்ல. விடிந்தால் விமர்சனம், கண் விழித்தால் கண்டனம், கொட்டாவி விட்டால் குற்றச்சாட்டு என்ற ரீதியில்தான் பா.ம.க.வின் போக்கு இருந்தது. பா.ம.க.வின் எத்தனையோ விமர்சனக் கணைகளை எதையும் தாங்கும் இதயத்துடன் தாங்கிக் கொண்ட தி.மு.க., கட்டக் கடைசியில் `பொறுத்தது போதும் பொங்கி எழு' என்று கிளர்ந்தெழுந்து பா.ம.க.வுக்கு கூட்டணியில் இருந்து கல்தா கொடுத்தது. கூட்டணியில் இருந்து `குட்பை' சொல்வதை மட்டுமே வழக்கமாகக் கொண்ட பா.ம.க.வுக்கு முதல்முறையாக `டாட்டா' காட்டப்பட்டது.
கூட்டணி முறிந்த கையோடு கைதாவார் என்று கருதப்பட்ட காடுவெட்டி குரு, எண்ணி இருபது நாள் இடைவெளிக்குப்பின், 5-ம் தேதி அதிகாலையில் சொந்த ஊரான காடுவெட்டியில் வைத்துக் கைதானார். குருவின் கைதுக்குக் காரணமாக இருந்தது குணசேகரன் என்ற அ.தி.மு.க.காரர் கொடுத்த புகார். ``பழைய பா.ம.க. ஆளான நான் அ.தி.மு.க.வில் சேர்ந்தேன். கட்சிக்கு ஆள் சேர்த்து, கொடியேற்ற முடிவு செய்த என்னை, குரு கடந்த மார்ச் மாதம் 30_ம்தேதி கூட்டிப்போய் அடிஅடி என்று அடித்தார். அப்போது காதில் இருந்து வழியத் தொடங்கிய ரத்தம் இன்னும் நிற்கவில்லை'' என்று குரு மீது கொலை முயற்சி புகார் கொடுத்திருந்தார் குணசேகரன்.
மேலும் பா.ம.க. மகளிரணி முன்னாள் செயலாளர் செல்வி செல்வம் வீட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன், வெடிகுண்டுவீச்சு நடந்தது. `இந்திரா என்ற பெண்ணுடன் காடுவெட்டி குரு பாலியல் உறவு வைத்திருந்ததாக அதிரடி புகார் கிளம்ப செல்வி செல்வம்தான் காரணம். அதன் எதிரொலியாகவே அவரது வீட்டின்மேல் குண்டுவீசப்பட்டது. அதற்கு காடுவெட்டி குருதான் காரணம்'என்றும் ஒரு புகார் கொடுக்கப்பட்டிருந்தது.
குணசேகரன் கொடுத்த புகார் தொடர்பாக மூன்று பேருக்கு காப்பு மாட்டிய போலீஸார், குரு தலைமறைவாக இருப்பதாகக் கூறிவந்த போலீஸ், கடைசியாக காடுவெட்டி கிராமத்தை ஆயிரம் போலீஸாருடன், நூற்றைம்பது வாகனங்களில் முற்றுகையிட்டு, இரண்டு வழக்குகளுக்கும் சேர்த்து குருவுக்கு காப்பு மாட்டி விட்டனர். பதினைந்து நாள் நீதிமன்றக் காவலாக திருச்சி சிறையில் முதல் வகுப்பில் அடைக்கப்பட்டார் குரு. அவரது கைதை தி.மு.க.வினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். பா.ம.க.வினரோ அதைக் கண்டித்து சில இடங்களில் சாலை மறியல், பஸ் உடைப்புகளை நடத்தினர். திருச்சிக்கு வந்த ராமதாஸும் ஆர்ப்பாட்டம் நடத்தினார். இதற்கிடையில், ``இப்படி பஸ் உடைப்பு நடத்தியது தமிழர் நீதிக்கட்சி நிறுவனர் சுபா. இளவரசனின் ஆட்கள்தான். எங்களை வன்முறைக் கட்சியாக சித்திரிப்பது உளவுத்துறையின் முக்கிய அதிகாரி ஒருவர்தான்'' என்று சொல்லி பா.ம.க.வினர் திகைக்க வைத்தனர்.
இதற்கிடையே குரு கைதுப் படலத்தில் இன்னும் பல எதிர்பாராத திருப்பங்கள் திடீர் திடீரென அரங்கேறி அதிசயிக்க வைத்து விட்டன. இந்த வழக்குகள் தொடர்பான விசாரணைக்காக குருவை போலீஸ் காவலில் எடுக்கக் கருதி கடந்த 7-ம்தேதி, திருச்சி ஜெயிலில் இருந்து குருவை மதியம் பன்னிரண்டு மணியளவில் அரியலூர் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர்.
`கொலை முயற்சி வழக்கோடு, ஆயுத வழக்கு உள்பட இன்னும் சில பிரிவுகளைச் சேர்த்தால் குருவுக்கு கட்டாயம் குண்டர் சட்டம்தான்' என்று போலீஸார் கருதிக் கொண்டிருந்ததாகக் கேள்வி. ஆனால், போலீஸாருக்கு அன்று அதிர்ச்சிதான் காத்திருந்தது.
குரு மீது புகார் கொடுத்திருந்த குணசேகரனும், செல்வி செல்வமும் கோர்ட்டில் அதே நாளில் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்திருந்தனர். அதில் குணசேகரன், அவரது அபிடவிட்டில், ``என் வீட்டுப் பிரச்னைக்காகத்தான் போலீஸில் புகார் தரப்போனேன். போலீஸார் என்னிடம் வெள்ளைத் தாளில் கையெழுத்துப் போடும்படி கேட்டனர். நானும் கையெழுத்துப் போட்டேன். மற்றபடி நான் குரு மீது எந்தப் புகாரும் கொடுக்கவில்லையே'' என திடீர் பல்டியடித்திருக்க, அந்தத் தகவல் தெரிந்ததும் பா.ம.க.வினர் முகங்களில் பளிச் என ஆயிரம் வாட்ஸ் பிரகாசம்.
செல்வி செல்வம் அவரது அபிடவிட்டில், ``குரு அண்ணனுக்கும் எனக்கும் தனிப்பட்ட முறையில் எந்த விரோதமும் இல்லை. அவர் மீது நான் எந்தப் புகாரும் கொடுக்கவில்லை. 10.03.08 அன்று அதிகாலையில் அடையாளம் தெரியாத சிலர் என் வீட்டு வாசலில் நின்று என்னைத் தகாத வார்த்தைகளால் திட்டினார்கள். நான் வெளியே வந்ததும் ஓடிவிட்டார்கள். அதன்பின் உடையார்பாளையம் போலீஸில் புகார் செய்யப் போனேன். அவர்கள், பதற்றத்தில் இருந்த என்னிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு அனுப்பி விட்டனர். காடுவெட்டி குருவின் பெயரை அந்தப் புகாரில் நான் குறிப்பிடவே இல்லை. அரசியல் உள்நோக்கத்தோடு போலீஸார்தான் ஏதோ இப்படிச் செய்திருக்கின்றனர்'' என்று கூறியிருக்க, போலீஸார் முகத்தில் லிட்டர் கணக்கில் ஏதோ வழிய ஆரம்பித்தது.
செல்வி செல்வம் அந்த அபிடவிட்டைத் தாக்கல் செய்ததோடு நிற்காமல் கோர்ட்டில் விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே ஓடிஓடிப்போய் மாஜிஸ்தி ரேட்டிடம், ``நான் சொல்றதைக் கேளுங்கம்மா. இது பொய் கேஸ். போலீஸார் என்னை டார்ச்சர் செய்து இந்தக் கேஸைப் போட்டுவிட்டார்கள்'' என்று சொல்லிப் பதறினார்.
இந்த அந்தர்பல்டிகள் போலீஸாரை அயர வைத்தாலும், தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் ஸ்டைலில் செயல்பட்டுள்ளனர் போலீஸார். பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் தொடர்புள்ள இருவரைப் பற்றி குருவிடம் வாக்குமூலம் வாங்கவேண்டியிருப்பதால், அவரை ஏழு நாட்கள் போலீஸ் காவலில் விட வேண்டும்'' என்ற கோரிக்கையை நீதிபதி விஜயராணியிடம் வைத்தனர். குருவுக்காக ஆஜராகிய வக்கீல்கள் செலஸ்டின் க்ளாஸ்டர், ஸ்ரீதர், சிவகுமார் ஆகியோர் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ``பெட்ரோல் குண்டு வீசப்பட்டது என்றால், அதுபற்றி சேகரிக்கப்பட்ட தடயங்களை வைத்து ரசாயனப் பரிசோதனை நடத்தினார்களா? சம்பவம் நடந்து மூன்றரை மாதங்கள் ஆகிவிட்டநிலையில் அந்த ரிசல்ட் இருக்கிறதா?'' என்று கேட்டனர். அதற்குப் போலீஸாரிடம் பதில் இல்லை.
``ஆளுங்கட்சியான தி.மு.க.வின் உயர்மட்டத் தலைவர்களைச் சந்தோஷப்படுத்துவதற்காகவே போலீஸ் இந்த மாதிரி புனையப்பட்ட வழக்குகைளப் போட்டு எங்கள் கட்சிக்காரரை அலைக்கழிக்கிறது'' என்று அவர்கள் பேசி முடிக்க, கோர்ட்டில் இதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த குருவின் முகத்தில் புன்னகை பூத்தது. மாலையில் தொடங்கிய கோர்ட்டில் இந்த விவாதம் சுமார் ஒன்றரை மணிநேரம் நடந்தது.
``குருவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸார் முயன்றாலும் நாங்கள் பயப்பட மாட்டோம். `இந்த வழக்கில் நாங்கள் குருமீது புகார் கொடுக்கவில்லை' என்று கோர்ட்டிலேயே சொல்ல புகார் கொடுத்தவர்கள் தயாராக இருக்கிறார்கள். அப்படியே குண்டர் சட்டத்தில் உள்ளே போட்டாலும் அட்வைஸரி போர்டிலேயே அதை உடைக்கவும் எங்களிடம் விஷயம் இருக்கிறது'' என்று சொல்லி உற்சாகமாக இருந்தனர், குருவின் வழக்கறிஞர்கள்.
இதற்கிடையே குரு பிரச்னையில் இறுதிச்சிரிப்பு சிரித்தது போலீஸார்தான். அவர்கள் கேட்டபடியே குருவை ஏழு நாட்கள் போலீஸ் காவலில் விட நீதிபதி ஜெயராணி அனுமதிக்கவில்லை என்றாலும் இரண்டு நாள் போலீஸ் காவலில் குருவை வைக்க அவர் அனுமதித்தார். அதன்படி அவரை போலீஸார் தங்கள் கஸ்டடிக்கு அழைத்துச் சென்றபோது, பா.ம.க.வினர் போலீஸ் வேனை மறிக்க, கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக போலீஸ் தடியடி நடத்தியது. அதில் சிலர் காயமடையவும் செய்தனர்.
கதை அத்துடன் முடியவில்லை. ``குரு ஒன்றிரண்டு வழக்குகளில் தப்பிக்கலாம். ஆனால் பொது மேடையில் கொலைமிரட்டல் தோரணையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, இந்நாள் முதல்வர் ஆகியோருக்கு எதிராக குரு பேசிய சுமார் 18 சி.டி.க்கள் எங்கள் வசம் உள்ளன. அவை இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும். அதன்பின் குரு குண்டர் சட்டத்தில் இருந்து தப்பவே முடியாது'' என்கிறார்கள் உளவுத்துறை போலீஸார் உற்சாகமாக.
காரணம் அரியலூர் மாவட்ட பா.ம.க.பொதுக்குழு கூட்டத்தில் ஆண்டிமடம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. சிவசங்கர், பெரம்பலூர் மக்களவைத் தொகுதி எம்.பி.யும், மத்திய அமைச்சருமான ஆ.ராசா ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் குருவை போலீஸார் மீண்டும் கைது செய்துள்ளனர். இந்தப் புதிய வழக்கால் இப்போதைக்கு அவர் ஜாமீன் பெற முடியாது. இந்தக் கண்ணாமூச்சி ஆட்டத்தில் இறுதி வெற்றி யாருக்கு என்பது இனிமேல்தான் தெரியும்.
போலீஸ் கெடுபிடி!
காடுவெட்டி குருவை அரியலூர் நீதிமன்றத்தில் 7-ம் தேதியன்று ஆஷர்படுத்த போலீஸார் கூட்டி வந்தனர். அன்று காலையில் இருந்தே அரியலூர் கோர்ட்டில் பெரம்பலூர் (பிரேம் ஆனந்த் சின்ஹா) அரியலூர் எஸ்பி (கிருஷ்ணமூர்த்தி)க்களின் தலைமையில் அரியலூர் கோர்ட் பகுதி போலீஸாரால் முற்றுகையிடப் பட்டிருந்தது. கோர்ட்டுக்கு வெளியில் மட்டுமல்லாது கோர்ட்டுக்கு உள்ளேயும் போலீஸாரின் கெடுபிடி அதிகமாக இருந்தது. எதிர்த்துக் கேட்ட வக்கீல்களிடம், `பாதுகாப்பு காரணங்களுக்காக' என்று போலீஸாரிடம் இருந்து பதில் வந்தது.காடுவெட்டி குரு மீது புகார் கொடுத்த நபர்களில் ஒருவரான குணசேகரனை கோர்ட்டுக்குள் இருந்து வெளியே வரும்படி பெரம்பலூர் எஸ்.பி கூப்பிட, வக்கீல்களின் கோபம் உச்சத்துக்குப் போய்விட்டது. அவர்கள் நீதிபதியின் முன்னால் போய், ``கோர்ட்டை நடத்துவது நீங்களா? இல்லை போலீஸ் அதிகாரிகளா? உள்ளே யார் இருக்க வேண்டும்? யார் இருக்கக் கூடாது? என்பதைக் கூட அவர்கள் முடிவு செய்ய இது ஒன்றும் போலீஸ் ஸ்டேஷன் இல்லையே'' என்று கூச்சலிட்டனர். அதன்பின் மாஜிஸ்ட்ரேட் விஜயராணி போலீஸாரை வெளியே போகச் சொன்னார். அதன் பிறகே அங்கே இயல்பு நிலை திரும்பியது.
Labels: அரசியல்
