இதயநோயால் அவதிப்பட்டு வந்த, தென்கச்சி கோ.சுவாமிநாதன், நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.அரியலூர் மாவட்டம், தென்கச்சி பெருமாள்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோ.சுவாமிநாதன். சென்னை, மடிப்பாக்கத்தில் வசித்து வந்தார்.
கடந்த 1977ம் ஆண்டு முதல் 1984ம் ஆண்டு வரை, திருநெல்வேலி வானொலி நிலையத்தில் பணிபுரிந்தார். அகில இந்திய வானொலியில், வேளாண் துறை இயக்குனராகப் பணியாற்றி, "வீடும் வயலும்' நிகழ்ச்சி வழங்கினார். பிறகு, உதவி இயக்குனராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர், "இன்று ஒரு தகவல்' நிகழ்ச்சியில், மூன்று நிமிட நகைச்சுவை, சிந்தனைக் கதைகளைக் கூறி, பிரபலமானார்; கருத்துப் புத்தகங்களையும் எழுதியுள்ளார். ஏராளமான குழந்தைகள் நிகழ்ச்சிகளையும் வழங்கியுள்ளார். "இலக்கணம்' என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
இதயநோயால் அவதிப்பட்ட சுவாமிநாதன், போரூர், ராமச்சந்திரா மருத்துவமனையில், கடந்த 14ம் தேதி அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் 12.40 மணிக்கு காலமானார்; அவருக்கு வயது 68.சுவாமிநாதனுக்கு மனைவி மகாலட்சுமி, மகள் செந்தமிழ்செல்வி, மருமகன் தமிழரசன், பேரன் நவீன் உள்ளனர்.தென்கச்சி சுவாமிநாதனின் உடல், அவரது பூர்வீகமான தஞ்சாவூர் மாவட்டம், கஞ்சனூர் கிராமத்திற்கு நேற்று மாலை கொண்டு செல்லப்பட்டது. அங்கு, அவரது உடலுக்கு ஏராளமானோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். இறுதி சடங்குகள் இன்று நடைபெற உள்ளன.
தென்கச்சி கோ.சுவாமிநாதன் காலமானார்
கல்விக்கொள்ளை
கல்வி என்பது மனிதவாழ்வின் இன்றியமையாத ஒன்றாகும் நமது சமுதாயம் கல்வி கற்று வாழ்வில் முன்னேற வேண்டும். என்பதற்க்காக காமராஜர் போன்றோரால்போற்றி வளர்க்கப்பட்ட கல்வி இன்று பணத்திற்க்கு விலை போகும் பொருளாகிவிட்டது.கல்வி என்பது அனைத்து மக்களுக்கும்
ஏழை பணக்காரன் வித்தியாசமின்றி அனைவரும் வாழ்வில் முன்னேற வேண்டும்என்பதை குறிக்கோளாக உருவாக்கப்பட்ட அரசு பள்ளிகளின் தற்போதைய நிலைமைஎன்ன?
எங்கு நோக்கினும் தனியார் பள்ளிகளின் ஆக்கிரமிப்பே அதிகமாக உள்ளதுஇன்று கல்வி பகல் கொள்ளையர்களின் கூடாரமாக மாறிவிட்டதுதொடக்ககல்வி முதல் கல்லூரி படிப்பு வரைகல்வி என்பது அறிவை வளர்க்கும் இடமாக இல்லாமல்பணம் சம்பாதிக்கும் ஒரு தொழிலாக மாறிவிட்டது.
தொடக்கல்விக்கே இன்று பல ஆயிரங்களைபிடுங்கும் கல்வி நிறுவனங்கள் ,கல்லூரி படிப்பிற்கு பல லட்சங்களை பிடுங்கிக்கொள்கின்றன ஏன் இந்த மாற்றம்! அரசு பள்ளிகள் என்னவாயிற்று? தங்கள் குழந்தைகள் ஆங்கில அறிவிலும் மற்ற அனைத்திலும் சிறந்து விளங்க வேண்டும்என நினைத்த பணக்கரர்களுக்காக மட்டுமே இயங்கிவந்த இது போன்ற பள்ளிகள் என்று பெருகி விட்டதன் காரணம் என்ன? ஆங்கில மோகம் ஒரு புறம் இருந்தாலும்தன் குழந்தையும் சமுதாயத்தில் உயர வேண்டும் எனநினைக்கும் ஏழைகள் கூட இது போன்ற பள்ளிகளையே நாடுகின்றனர்.
இதில் அரசு பள்ளிகளின் நிலை பாடம் நடக்கிறதோ இல்லையோ சர்ச்சைகளும் பிரச்சனைகளுக்கும் மட்டும்குறைவில்லாமல் இருக்கிறது பாலியல் பிரச்சனைகள்,குழந்தைகளை கொடுமைபடுத்துகின்றனர், போன்றுதினம் தினம் சர்ச்சைகளை சுமந்து கொண்டு நிற்கிறதுகல்வித்துறை .ஆசிரியர்கள் போராட்டம் ,அரசு விடுமுறைஇவை அனைத்தும் போக பள்ளி நடப்பதேபோரட்டமாகி விட்டது
இது தவிர ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வரும்தேர்ச்சி விகிதம் தேர்வு முடிவுவெளியிடும் போதெல்லாம் இதனை பற்றி அக்கறை படும்அரசு பின் அதனை பற்றி கண்டு கொள்வதேயில்லை.
ஏன் இந்த நிலை தனியார் பள்ளியில் ரூபாய்2500 க்குவேலை செய்யும் ஒரு ஆசிரியரால் தரக்கூடிய உழைப்பையும்தேர்ச்சி விகிதத்தையும்அரசு பள்ளிகளில் ரூபாய் 13,500 சம்பளம் வாங்கிக்கொண்டு வேலை பார்க்கும்அரசு பள்ளி ஆசிரியர்களால் செய்ய முடியவில்லையே ஏன்?
ஏனென்றால் அங்கு ஆசிரியர்களுக்கென்றுவரைமுறை உள்ளதுஆனால் இங்கு கண்டு கொள்ளாத அரசு, கடமையைஒழுங்காக செய்யதவறிய அரசு அதிகாரிகள், ஆகியோரின்அலட்சிய போக்கால் கல்வி இன்று தனியாரின் கைகளில் அடைக்கலமாகிவிட்டது.
இது போன்ற செயல்களில்அரசு ஏன் அலட்சியம் காட்டுகிறது ஏனென்றால்கல்வி நிறுவனங்களை நிறுவி கொள்ளையில்ஈடுபட்டுள்ளது வேறு யாருமல்ல அரசில் பங்குவகிக்கும்அமைச்சர்கள், அரசியல்வாதிகளுடன் தொடர்புள்ள தொழிலதிபர்கள்இதனாலேயே அரசு தனியார் பள்ளிகளின் மீதுதனி அக்கறை செலுத்தி அவற்றின் கொள்கைகளுக்கு வாய் மூடி கிடக்கிறது .
இவற்றை தடுக்க அரசு தனியார் பள்ளிகள் அனைத்திற்க்கும்ஒரே மாதிரியான கட்டணங்களை நிர்ணயிக்கவேண்டும் "நன்கொடை "என்ற பெயரில் சுருட்டும்பள்ளிகளுக்கு மூடு விழா நடத்தவேண்டும் மேலும் சிறந்த முறையில்செயல் படாத அரசு ஆசிரியர்களை உடனே வீட்டுக்குஅனுப்பவேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
தனியார் பள்ளிகளின் கொள்ளை ஒரு புறமிருக்க தனியார் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைசேர்க்க முடியாத பெற்றோர் அரசு பள்ளிகளை மட்டுமேநம்பி உள்ளனர் ஆனால் அரசு பள்ளிகளின் நிலைமை கவலைக்கிடமாக தவழ்ந்துகொண்டிருக்கிறது.
இப்போது இருக்கும் சூழ்நிலையை கருத்தில்கொண்டு பார்க்கும் போது தனியார் பள்ளிகளில்படிக்கும் குழந்தைகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் போதுஅரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின்நிலைமை மிக மிக மோசமாக உள்ளதுதனியார் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுடன்அரசு பள்ளியில் குழந்தைகள் நமது சமுதாய ஒட்டத்தில்போட்டியிடுவது இயலாத காரியம் இதற்கு தீர்வு தான் என்ன?
அரசு பள்ளிகள் அனத்தும் தனியார் பள்ளிகளின்தரத்திற்க்கு உயர்த்தப்படவேண்டும் பாடத்திட்டங்கள் அனைத்தும் தனியார் பள்ளிகளின் பாடத்திட்டங்களை விடசிறப்பானதாக உருவாக்கப்பட வேண்டும் அரசு பள்ளிகளில் பயின்று சிறந்த இடத்தை பிடித்தவர்கள் பலருண்டுஆனால் இன்று அவற்றின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதுஇதனை சரி செய்ய அரசு அக்கறை செலுத்த வேண்டும்ஒரு சிறந்த அரசின் கடமை ஒரு சிறந்த குடிமகனை உருவாக்குவதே என்பதை மனதில் கொண்டு பாடுபட வேண்டும்நம் குழந்தைகள் தான் தனியாரிடம் நன்றாக படிக்கிறதே நமக்கென்ன என்று அலட்சியமாக இருந்தால் வருங்காலம் நம்மை வசை பாடும் என்பதை மறுப்பதக்கில்லை .
Labels: விமர்சனம்
புதிய ரட்சகர் புறப்பட்டு விட்டார்...
புதிய ரட்சகர் புறப்பட்டு விட்டார்... - தமிழருவி மணியன்
'மரணம் என் வாழ்வின் வாசற்கதவைத் தட்டுவது என் காதில் கேட்கிறது. என் மனம் எல்லையற்ற பெருவெளியை நோக்கி மெள்ளப் பறக்கத் தொடங்கிவிட்டது. விழிமூடும் இந்த மரணப் பொழுதில் என் நண்பர்களிடம் நான் ஒன்றை மட்டும் என் நினைவாக விட்டுச் செல்கிறேன். அதுதான் 'சுதந்திர இந்தியா' என்ற என் பொற்கனவு. இந்தக் கனவை நனவாக்க நம் லட்சியத்தை முன்னெடுத்துச் செல்லுங்கள். எந்த நிலையிலும் ஓரடிகூடப் பின்வாங்கலாகாது. நம் நாட்டின் அடிமைப் பொழுது முடிந்துவிடும். சுதந்திரத்தின் ஒளிக்கதிர்கள் பொன்னொளி வீசுவதைக் காணுங்கள். எல்லோரும் எழுங்கள். அவநம்பிக்கை அடையாதீர்கள். வெற்றி விரைவில் வந்து சேரும்.'
- தூக்கில் தொங்குவதற்கு முன்பு மாவீரன் சூர்யா சென், தன் தோழர்களுக்கு எழுதிய கடிதத்தில் இப்படிக் குறிப்பிட்டான்.
பிரிட்டிஷ் சிங்கத்தின் பிடரியைப் பிடித்து உலுக்கியவன் சூர்யா சென். இளம் புரட்சிப் போராளிகளின் படை நடத்தி, சிட்டகாங் ஆயுதக் கிடங்கைச் சூறையாடியவன். 37 வயதில் அவன் சிறைப்பட்டபோது, வெள்ளை அதிகாரிகள் சுத்தியல் கொண்டு அவனுடைய பற்கள் அனைத்தையும் உடைத்து, விரல் நகங்களைச் சதையோடு பறித்து, உடலின் ஒவ்வொரு மூட்டு இணைப்பையும்
முறித்து, நினைவு தவறிய நிலையில் தூக்கில் தொங்கவிடப்பட்டு, உடலை வங்கக் கடலில் வீசியெறிந்தனர். சூர்யா சென், பகத்சிங், சந்திர சேகர ஆசாத், ராஜகுரு, சுகதேவ், மகாவீர் சிங், மதன்லால் திங்ரா, ராம் பிரசாத் பிஸ்மில், வாஞ்சிநாதன் போன்ற எண்ணற்ற வீர இளைஞர்கள் இந்திய விடுதலைக்காகத் தங்கள் உயிரைத் தந்தனர். நம் வாழ்கால இளைஞர்களில் பலருக்கு இவர்களின் வரலாறு தெரியாது. ஆனால், ஒவ்வொருவருக்கும் நடிகர் விஜய் தெரியும்; விஜயகாந்த்தைத் தெரியும். ஒருவர் நாறிக் கிடக்கும் அரசியலில் நறுமணம் படைக்க வந்தவர். இன்னொருவர் இளைஞர் காங்கிரஸை வலுப்படுத்த அரசியல் களம் நோக்கி வருபவர். தமிழகத்து அரசியலில் புதிய அத்தியாயம் வரைவதற்கு இவர்களை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள்?
நீண்ட காலமாகவே தமிழர் வாழ்வில் கோடம்பாக்கம், வழிபடும் கோயிலாகிவிட்டது. அரிஸ்டாட்டில் அரசியலை (Master Science) 'தலைமை அறிவியல்' என்றான். நம் வாக்காளப் பெருமக்களுக்குக் கஞ்சிக் கலயமும், காதுக்கு சுகமளிக்கும் பேச்சுக் கச்சேரியும்தான் முக்கியம். ஆட்சிக்கலை குறித்தோ, அரசியல் நிலை குறித்தோ அவர்கள் அதிகமாகக் கவலைப்படுவதில்லை. சங்கத் தமிழன் பேகன்கூட பொதி சுமக்கும் கழுதையின் துயர் கண்டு துடித்துப் போர்வை போர்த்தவில்லை. தோகை விரித்துக் கவர்ச்சி விருந்தளித்த மயிலுக்குத்தான் போர்வை தந்து மகிழ்ந்தான். கவர்ச்சியைக் கொண்டாடுவதில் நாம் அனைவரும் வள்ளல் பேகனின் வாரிசுகள்.
எம்.ஜி.ஆர் முதல்வரான பின்பு சில திரையுலக கதாநாயகர்களுக்கு அரசியல் ஆசை வந்து விட்டது. எல்லாரும் எம்.ஜி.ஆராகிவிட முடியாது என்பதை ஏனோ அவர்கள் உணர்வதாக வே இல்லை. கலையுலகில் இருந்தபடி கனவு வெளி யில் சிறகடிக்கும் இவர்கள், தங்கள் திரையுலக மூதாதையரைக் கொஞ்சம் திரும்பிப் பார்க்க வேண்டும். விடுதலை வேட்கை, சமூக சீர்திருத்தம், பெண்ணுரிமை, சாதிக்கொடுமை ஆகியவற்றைத் திரைப்படங்களின் மூலம் வெகுமக்களிடம் சேர்ப்பதற்கு முயன்றவர் கே.சுப்பிரமணியம். வெள்ளையர் அரசால் தடைசெய்யப்பட்ட ஒரே இந்தியத் திரைப்படம் அவர் இயக்கிய 'தியாக பூமி'. சாதி வேற்றுமைகளுக்கு எதிராகவும், விதவை மணத்தை ஆதரித்தும் அவர் தயாரித்த 'பால யோகினி' படத்துக்காகப் பிராமண சமூகம் அவரை 'சாதி பிரஷ்டம்' செய்தது. சினிமா மூலம் நல்ல சமூகத் தாக்கத்தை ஏற்படுத்திய அந்த மாபெரும் கலைஞனுக்கு அரசியல் ஆசை அன்று வரவில்லை.
இசைமேதை கிட்டப்பாவை வாழ்க்கைத் துணையாக ஏற்று 25 வயதில் விதவையாகிவிட்ட கே.பி.சுந்தராம்பாள் கைம்மை நோன்பு பூண்டு, தேனாம்பேட்டை கிராமணியார் தோட்டத்தில் ஆசிரமம் போன்ற வீட்டில் ஒதுங்கி வாழ்ந்தார். அடிமை இந்தியாவில் சுதந்திரக் கனல் சுடர் பரப்புவதற்காக அச்சமின்றி காங்கிரஸ் மேடைகளில் 'காந்தியோ பரம ஏழை சந்நியாசி' என்று பாடிய அந்தக் கொடுமுடி கோகிலம் ஒதுங்கி வாழ்ந்தபோது, மகாத்மா காந்தியே நேரில் அவர் இருக்குமிடம் தேடி வந்தார். தேச சேவையில் மீண்டும் ஈடுபட வேண்டினார். சுயராஜ்ய கட்சி வெற்றிபெற சத்தியமூர்த்தி முழங்கிய மேடைகளிலெல்லாம் சுந்தராம்பாள், 'ஓட்டுடையாரெல்லாம் கேட்டிடுங்கள்: இந்த நாட்டின் நலம் நாடிப் போட்டிடுங்கள்' என்று பாட்டு யாகம் நடத்தினார். 'வீட்டுக்குள்ளிருந்து - வீண் பேச்சுப் பேசுவதால் - நாட்டின் விடுதலை - நாம் அடையக் கூடுமோ?' என்று மக்களிடையே பாடிப் பாடி சுதந்திர உணர்வைத் தூண்டிய கே.பி.எஸ்., அரசியல் ஆதாயம் அடைய ஆசைப்படவில்லை.
கலைவாணர் தான் சம்பாதித்த எல்லாவற்றையும் வறியவர்க்கு அள்ளிக் கொடுத்து, அதனால் வறுமையில் வாடினார். திருமணத்துக்கு உதவி கேட்டு வந்த இளைஞருக்கு வெள்ளி கூஜாவை கொடுத்து 'இதைத் தவிர என்னிடம் வேறேதுமில்லை' எனச் சொல்லி வழங்கிய வள்ளல். பெரியார் கடுமையாக வெளிப்படுத்திய சுயமரியாதை கருத்துகளை மிகவும் மென்மையாக, சிரிக்கச் சிரிக்க நகைச்சுவை விருந்தாய் நமக்குப் பரிமாறிய அந்த உன்னதக் கலைஞர் சினிமா கவர்ச்சியை மூலதனமாக்கி அரசியல் கடை திறக்கவில்லை.
பகுத்தறிவுக் கொள்கைகளைத் தன்னுடைய நாடகங்கள் மூலம் பரப்பியவர் நடிகவேள் எம்.ஆர்.ராதா. 'பெரியாரின் தொண்டன்' என்று சொல்லிப் பெருமிதம் கொண்ட ராதா, திராவிடர் கழக மாநாட்டு ஊர்வலங்களில் முதல் மனிதனாக வெள்ளைப் புரவியில் அமர்ந்து கழகக் கொடியுடன் வலம் வந்தவர்; பட்டுக்கோட்டை அழகிரியால் 'நடிகவேள்' என்று பாராடப்பட்டவர். அந்த நடிகவேளால் 'கலைஞர்' என்ற சிறப்பை அடைந்தவர் நம் முதல்வர். ராதாவின் வலிமையான நாடகப் பிரசாரத்துக்கு அஞ்சி அன்றைய காங்கிரஸ் அரசு, 'நாடகத்தின் முழுமையான கதை வசனத்தையும் மாவட்ட ஆட்சியரிடம் முதலிலேயே சமர்ப்பிக்க வேண்டும்' என்று சட்டம் தீட்டியது. ஒரு தனி மனிதனின் கூர்மையான விமர்சனங்கள் ஆட்சியையே அன்று அலைக்கழித்தது. இந்தியாவிலேயே ராதாவுக்கு இணையாக மக்களின் சிந்தனையில் மறுமலர்ச்சியை உருவாக்க ஒரு சமூகப் போராளியாய் வீறுகொண்டெழுந்த இன்னொரு கலைஞன் இல்லை. 'நடிகர்களை நம்பாதே' என்று மேடைதோறும் மக்களின் மயக்கத்தை ஒழிக்க ஓங்கிக் குரல் கொடுத்த நடிகவேள் அரசியலில் எந்தப் பதவிக்காகவும் எவரிடத்தும் பல்லிளிக்கவில்லை.
ஆனால், இன்று... கோட்டை நாற்காலிக் கனவில் எத்தனை கோடம்பாக்கத்து நாயகர்கள்? சினிமாவில் மார்க்கெட் போனதும், அடுத்த பிழைப்பாக நினைத்தல்லவா அரசியலில் குதிக்கிறார்கள்! ஆட்சி நாற்காலிப் பேரின்ப வாசல் நோக்கி அடியெடுத்து வைக்கின்றார் கள்! எம்.ஜி.ஆர் என்ற துருவ நட்சத்திரத்தைப் போல் மின்ன நினைக்கும் இவர்களில் பலர் வெறும் எரிநட்சத்திரங்களே!
விஜய்காந்த், சரத்குமார், கார்த்திக், டி.ராஜேந்தர் போன்றவர்கள் எந்த நம்பிக்கையில் அரசியல் அங்காடியில் ஆளுக்கொரு பெட்டிக்கடை வைத்து அமர்ந்திருக்கின்றனர்? அதிகபட்சம் இவர்கள் ஒரு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினராக வேண்டும்; முடிந்தால் அமைச்சராக வேண்டும்; வாக்காளர்கள் விவரமே இல்லாத இளிச்சவாயர்களாக இருப்பதைப் பயன்படுத்தி என்றாவது ஒரு நாள் தமிழகத்தின் முதல்வராக வேண்டும். இதற்கு மேல் இவர்களுக்கு என்ன சமூக அக்கறை? இவ்வளவு நாட்கள் இல்லாத கரிசனம் இன்று எப்படி இந்த ஏழைகள் மேல் வந்தது?
இத்தனை ரட்சகர்கள் போதாது என்று விஜய் எந்த அடிப்படைத் தகுதிகளோடு புதிய ரட்சகராகப் புறப்பட்டுவிட்டார்? 'விதியே, விதியே! தமிழ்ச் சாதியை என் செய்ய நினைத்தாய்?' என்று பாரதி அன்று புலம்பியதன் அர்த்தம் இன்றல்லவா புரிகிறது.
வங்கத்தில் ஆளுநராக இருந்து விடைபெற்றபோது மலை போல் குவிந்த பரிசுப் பொருள்களில் எதையும் ஏற்க மறுத்தார் ராஜாஜி. 'தந்தத்தாலான கைத்தடியையாவது எங்கள் அன்பின் அடையாளமாக எடுத்துச் செல்ல வேண்டும்' என்று வேண்டிய போதும், அதை மறுதலித்துவிட்டு வெறுங்கையுடன் திரும்பியவர் அந்த மூதறிஞர். ராமாயணத்து ஜனகனைப் போல் முதல்வர் நாற்காலியில் பற்றற்ற துறவியாய் அமர்ந்து பரிபாலனம் செய்தவர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார். தன் சொத்துகள் முழுவதையும் வடலூர் வள்ளலார் சபைக்கு எழுதிவைத்த ஏந்தல் அவர். பூரண மதுவிலக்கை மாநிலம் முழுவதும் நடைமுறைப்படுத்திய முதல்வர் குமாரசாமி ராஜா, தான் வாழ்ந்த வீட்டையும், சொத்து களையும் தமிழகத்து மக்களுக்கு அர்ப்பணித்தார். தன் எஞ்சிய சொத்தாக வங்கியில் இருந்த 50 ரூபாயையும் பாரதி நினைவு மண்டபம் கட்ட நன்கொடையாகத் தந்துவிட்டு, கையை விரித்தபடி கண்மூடிய ராஜா ஓர் அரிய தலைவர். 10 வேட்டி சட்டையுடன் தன் வாழ்வை முடித்துக் கொண்ட பெருந்தலைவர் காமராஜர் கறுப்பு காந்தியாகவே நம்மிடையே வாழ்ந்து மறைந்தார். இவர்கள் அனைவரும் வளர்த்த காங்கிரஸ் இன்று நடிகர் விஜய்யின் நிழலில் இளைப்பாற இருக்கிறது. விவேக் ஒரு படத்தில் சொன்னதுபோல் 'எப்படி இருந்த காங்கிரஸ் இப்படியாகிவிட்டது'!
சொந்தப் பணத்தைச் சேதப்படுத் தாமல் காங்கிரஸ் கணக்கில் அரசியல் நடத்தி அதிகாரத்தைச் சுவைக்க நினைக்கும் விஜய், ஒருவகையில் விஜய்காந்த்தைவிட விவரமானவர் என்று கருதி மகிழலாம். ஆனால், நடந்தால் நிழல் மட்டுமே தொடரக்கூடிய காங்கிரஸ் தலைவர்கள், ரசிகர் பட்டாளத்துடன் வரும் விஜய்யை ரசிக்கமாட்டார்கள். சிவாஜிகணேசனுக்கு கிடைத்த காங்கிரஸ் அனுபவங்களை விஜய் அறிந்திருக்க நியாயமில்லை. ஓர் அங்குலம் உயரமானவனைக்கூட ஒப்புக் கொள்ளாத குள்ளர்களின் சாம்ராஜ்ஜியம்தான் தமிழக காங்கிரஸ். அங்கே நீண்ட காலம் விஜய் நீடிக்க முடியாது. நீடித்தால் இந்தப் புதிய ரட்சகர் அவமானச் சிலுவையில் அறையப்படுவார்.
அது சரி... விஜய்க்கு ஏன் இந்த ஆசை? அவரிடம் ஏதாவது புதிய அரசியல், சமூகப் பொருளாதார மாற்றுத் திட்டங்கள் இருந்தால் முதலில் அவற்றை அறிவிக்கட்டும். முதல்வர் கனவைத் தவிர வேறெதுவும் இல்லையென்றால், இப்போதே இந்த நெட்டைக் கனவை விட்டு விட்டு, தமிழ் சினிமா பக்கமே தன் கவனத்தை வைத்திருக்கட்டும்!
( நன்றி: ஜூவி )
ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணம்: 5 பேர் உடல்கள் மீட்பு
ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணமடைந்தார். அவருடன் இருந்த 5 பேர் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மாயமான ஹெலிகாப்டர் கர்னூல் மலை உச்சி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக ராணுவ விமானபடை அதிகாரி கூறியுள்ளார். இதனையடுத்து ஆந்திராவில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து ஆலோசிக்க பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் அவசர உயர்மட்டக்குழு கூட்டம் நடக்கவுள்ளது.
நேற்று காலை 8.30 மணிக்கு கிளம்பிய ஹெலிகாப்டர், 9.30 மணிக்கு ரேடியோ தொடர்பை இழந்தது. நல்லமலா வனப்பகுதியில் பறந்து கொண்டிருந்த போதுதான் மாயாமாகி விட்டது. ஹெலிகாப்டரில் பயணித்த அதிகாரிகள் யாரிடமும் செயற்கைகோள் போன் இல்லை. இதுவும் நிர்வாகத்தினருக்கு ஹெலிகாப்டரை தேடுவதில் சிக்கலை ஏற்படுத்தியது.
தற்போது கர்னூலுக்கு கிழக்கே 40 நாட்டிகல் மைல் தூரத்தில் உள்ள இப்பகுதியை ராணுவ ஹெலிகாப்டர்கள் சுற்றிவளைத்துள்ளன. ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை உள் துறை அமைச்சகம் உறுதிசெய்துள்ளது.
எந்த நிலையில் ஹெலிகாப்டர்: தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த ஹெலிகாப்டர் எந்த நிலையில் உள்ளது, விமானம் விபத்தில் சிக்கியதா என்ற கேள்விக்கு விமான அதிகாரி உறுதியான தகவல் ஏதும் கூற முடியாது என்றார். ஹெலிகாப்டர் கிடக்கும் பகுதி மிக சிரமமான மலைப்பகுதி என்பதால் அங்கு செல்ல சிரமம் ஏற்படும் என கருதப்படுகிறது.
துணை ராணுவ கமாண்டோக்கள்: ராஜசேகர ரெட்டி சென்ற ஹெலிகாப்டர் கிடக்கும் பகுதிக்கு துணை ராணுவ கமாண்டோக்கள் விரைந்தனர். அவர்கள் ஹெலிகாப்டர் இருக்கும் பகுதியில் இறக்கி விடப்பட்டனர். உடல்கள் கர்னூலுக்கு கிழக்கே ருத்ரகொண்டா - ரோலபெண்டா இடையே உள்ள அடந்த வனப்பகுதியில் இருக்கிறது.
பிரதமர் அவசர ஆலோசனை: ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணத்தை அடுத்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மன்மோகன்சிங் உயர் மட்ட அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.சோனியாவும் பங்கேற்கிறார்.
முதல்வர் மரணமத்தை பிரதமர் அலுவலகம் உறுதி செய்துள்ளது. இஸ்ரோ எடுத்த புகைப்படத்தில் எதுவும் சிக்கவில்லை: தேடுதல் பணியில்ஈடுபட்டுள்ள இஸ்ரோ 41 புகைப்படங்களை எடுத்துள்ளது. ஆனால் இதில் ராஜசேகரரெட்டி சென்ற ஹெலிகாப்டர் குறித்து எவ்வித அடையாளமும் சிக்கவில்லை. இது மேலும் கவலையை அதிகரித்தது.
நன்றி தினமலர்
நிர்வாணப்படுத்தி தமிழர்கள் சுட்டுக் கொல்லப்படும் வீடியோ காட்சிகள்
கிளிநொச்சி நகரைக் கைப்பற்றியப் பிறகு தங்களிடம் அகப்பட்ட தமிழர்களை சிறிலங்க இராணுவத்தினர் நிர்வாணப்படுத்தி, கண்ணைக் கட்டி சுட்டுக் கொல்லும் வீடியோ காட்சிகளை சானல் 4 இணையத் தளம் வெளியிட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் இந்தப் படுகொலைகள் நடந்ததாக்க கூறி, இந்த வீடியோவை பத்திரிக்கையாளர்களுக்கு வெளியிட்ட ஜர்னலிஸ்ட் ஃபார் டெமாக்ரசி என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த வீடியோ காட்சியில் தமிழர்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு, கைகள் பின்னால் கட்டப்பட்டு, கண்கள் கட்டப்பட்ட நிலையில் கீழே உட்காரவைத்து (ஒரு தமிழரை தனது பூட்ஸ் காலால் தோளில் உதைத்து சிங்கள சிப்பாய் உட்கார வைக்கிறான்) பிறகு அவனுடைய தலையில் சுட்டு கொல்லும் காட்சிகள் இடம் உள்ளது.
சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் தலையில் இருந்து உதிரம் வெளியேறி தரையை நனைக்கிறது. இப்படி சுட்டுக் கொல்லப்பட்டுக் கிடக்கும் 8 பேரின் உடல்கள் அந்த வீடியோவில் உள்ளது. தமிழர்களுக்கு எதிராக சிறிலங்க அரசு மேற்கொண்ட இனப் படுகொலைக்கு இந்த வீடியோ அத்தாட்சியாகும்.
channel4.com/news/articles/world/asia_pacific/is%20this%20evidence%20of%20sri%20lankan%20aposwar%20crimesapos/3321087
யார் "எம்எல்ஏ'க்கள்?
எம்எல்ஏக்களுக்கு சென்னையில் இலவசமாக வீட்டுமனை வழங்கப்படும் என்ற அறிவிப்பு பலமுனைகளில் இருந்து எதிர்ப்புகளை உருவாக்கினாலும், இந்த சட்டப்பேரவையின் காலத்துக்குள் வீட்டுமனை வழங்குவதில் முதல்வர் உறுதியாக இருப்பதாகத் தகவல்.இதற்கிடையே, எம்எல்ஏக்களுக்கு மாதம் ரூ. 50,000 ஊதியம் என்ற உயர்வு அறிவிப்பு வேறு.இந்த நேரத்தில்தான் காலப் பொருத்தத்துடன் சில தலைவர்களின் செயல்பாடுகளைத் திரும்பிப் பார்க்க வேண்டியுள்ளது.காமராஜர் என்றொருவர் தமிழ்நாட்டில் முதல்வராக இருந்தார்! அவர், தனது சொந்த ஊரான விருதுப்பட்டிக்கு (இப்போதைய விருதுநகர்) செல்லும்போது முன்னால் சுழல் விளக்குடன் சென்ற காவல் துறை வாகனத்தை நிறுத்தி "ஏன் சங்கு ஊதிக் கொண்டே செல்ல வேண்டும்?' எனக் கேட்டார்.பின்னொரு முறை தனது வீட்டுக்குச் சென்ற அவர், அங்கே புதிய குடிநீர்க் குழாய் அமைக்கப்பட்டிருப்பதைக் கண்டார். அதிகாரிகளை அழைத்து எனது வீட்டுக்குக் குடிநீர்க் குழாயை அமைக்கக் கேட்டது யார்? என வினவினார்."ஆயிரக்கணக்கானோர் குடிநீரின்றித் தவிக்கும்போது, முதல்வரின் வீடு என்பதால், வீட்டுக்குக் குடிநீர் இணைப்பை இத்தனை வேகத்தில் கொடுப்பீங்களான்னே?' எனக் கேட்டார்.காமராஜர் முதல்வராக இருந்தபோது சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர் ஜீவானந்தம். எதிர்க்கட்சியானாலும், அவரது தொகுதிக்குள் ஒரு விழாவில் பங்கேற்க வந்த காமராஜர் "எங்கே ஜீவானந்தம்?' எனக் கேட்டார். அவரது குடிசை வீட்டுக்குச் சென்று "வாங்க ஜீவா, விழாவுக்குப் போகலாம்' என்றார் காமராஜர். "இல்லையில்லை, என்னால் வர முடியாது; எனது வேஷ்டியையும், சட்டையையும் துவைத்துக் காய வைத்துள்ளேன். காய்ந்தபிறகு அதை உடுத்திக் கொண்டுதான் வர முடியும்' என்றார் ஜீவானந்தம்.இப்படி எளிமையாகவும், யதார்த்தமாகவும் வாழ்ந்த பல எம்எல்ஏக்களை, அமைச்சர்களை, முதல்வர்களை, தலைவர்களை இந்தத் தமிழ்ப் பூவுலகம் கண்டுள்ளது.காமராஜரைப் போல, கக்கனைப் போல, ஜீவாவைப் போல இருங்கள் என்று இப்போதுள்ள தலைவர்களை, மக்கள் பிரதிநிதிகளைக் கேட்டுக் கொண்டால் நாம் புத்திபேதலித்தவர்கள். அரசியல் சூழல் வெகுவாக - தலைகீழாக மாறியிருக்கிறது.ரூ. 50,000 ஊதியம் என்பதில்கூட, கார் பயணம், அலுவலகச் செலவுகள் எல்லாமும் சேர்த்துத்தான் என்று விளக்கமளிக்கிறார்கள். போகட்டும், மக்களுக்காக உழைக்க வந்தவர்கள். ஆனால், சிலவற்றை இந்த நேரத்தில் பதிவு செய்ய வேண்டும்.ரூ. 50,000 ஊதியம் வாங்கும் எம்எல்ஏக்கள் தவறு செய்யக் கூடாது. இன்னும் வேண்டுமானால், தேவையான ஊக்க- உதவித் தொகைகளை கூடுதலாகக் கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள். ஆனால், எவரிடமும், எந்தக் காலமும்- அன்பளிப்பாகக் கூட எந்தப் பொருளையும், பணத்தையும், உதவியையும் பெற்றுக் கொள்ளாதவர்களாக எம்எல்ஏக்கள் மாற வேண்டும்.அவ்வாறு பெறுபவர்களை கையும்களவுமாகப் பிடிக்கும் இன்னொரு காவல் துறைப் பிரிவையும் முதல்வர் உருவாக்க வேண்டும். எந்த அரசியல் தலையீடும் இல்லாத வகையில், அந்தப் பிரிவுக்கான விதிமுறைகளை வகுக்க வேண்டும்.நேர்மையான மக்கள் பிரதிநிதிகளாக எம்எல்ஏக்கள் மாற வேண்டும் என்ற நோக்கத்தின் கீழ் ஊதிய உயர்வை அங்கீகரிக்கலாம். ஆனால், எல்லா வகையிலும்- எம்எல்ஏக்களுக்கு இலவச வீட்டுமனை என்பதுதான் ஏற்றுக் கொள்ள முடியாததாக இருக்கிறது.தொகுதியின், தொகுதி மக்களின் பிரதிநிதியான எம்எல்ஏ, சென்னையில் இடம் கிடைத்துச் சென்றுவிட்டால்? மக்களை விட்டு அவர் விலகி வெகுதொலைவு சென்றுவிடுகிறாரே? அப்புறம் இன்னொன்றையும் செய்யலாம், எம்எல்ஏக்களிடம் மனுக் கொடுக்க சென்னை செல்பவர்களுக்கு இலவச பேருந்துப் பயண அட்டை, தள்ளுபடி விலையில் ரயில் பயண அட்டைகள்...அடுத்து, எம்எல்ஏக்கள் ஒன்றும் நிரந்தரமானவர்கள் அல்லர். ஐந்தாண்டுகளுக்கு முன்பாகவே ராஜிநாமா செய்பவர்கள் அதிகரித்து வருவதும், இடைத் தேர்தலின்போது மீண்டும் அவர்களுக்கு போட்டியிட இடம் கிடைக்காததும் தற்போதைய அரசியலில் இயல்பான ஒன்றாகி வருகிறது.ஒவ்வொரு தேர்தலின்போதும் புதியவர்களுக்கு வாய்ப்பளிப்பது என்பது அனைத்துக் கட்சிகளிலும் இப்போது மாறியிருக்கும் வரவேற்கத்தக்க அரசியல் போக்கு.அப்படியானால், சில பத்தாண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு முழுவதிலுமிருந்து கணிசமான எண்ணிக்கையிலான அரசியல்வாதிகளுக்கு "அதிகாரப்பூர்வமாகவே' சென்னையிலும் சில வீடுகள், தனி மாவட்டம்(!?), போலீஸôருக்கு இருப்பதைப் போல தனி ரேஷன் விநியோக முறை, தனியாக குறைதீர் ஆணையம்...பிறகு, தேர்தலின்போது மட்டும் உள்ளூரில், தொகுதிக்குள் முகாம்- தனி அலுவலகம், சொகுசான வீடு. இப்படியான அக- புற மாற்றங்கள் விளைவுகள் தமிழகத்தில் ஏற்படும் என்பதில் சந்தேகமே இல்லை.மக்களின் வாழ்க்கைத் தரத்தில், வாழ்வியல் சூழலில் எந்த மாற்றமும், முன்னேற்றமும் ஏற்படாது. இன்னமும், இன்னமும் கீழே இறங்கிச் செல்லாமலிருந்தால்தான் ஆச்சரியம்.
- நன்றி தினமணி
ரியல் ஹீரோ ராமசாமி
பாரீஸ் கார்னரின் மொட்டை மாடி ஒன்றில், ஒற்றை ஆளாக டைப்ரைட்டரில் தடதடத்துக்கொண்டு இருக்கிறார் 'டிராஃபிக்' ராமசாமி. 'காங்கிரஸின் வெற்றிக்கு நீங்கள் தவிர்க்க முடியாத காரணம். வாழ்த்துக்கள். ஆனால், தமிழ கத்தின் சீர்குலைவுக்கு ஏதோ ஒரு வகையில் காரணமாக இருப்பதோடு, தேர்தல் நன்னடத்தை விதிகளையும் மீறியதால் தி.மு.க. சார்பாகத் தேர்வான 18 எம்.பி-க்களும் பதவிப் பிரமாணம் ஏற்கவோ, அமைச்சரவையில் பங்கு எடுக்கவோ அனுமதிக்காவிட்டால் உங்களுக்கு அது இன்னும் பெருமை தேடித்....' என்று நீள்கிறது ராகுல் காந்திக்கான அந்தக் கடிதம். 'டிராஃபிக்' ராமசாமி... உண்மையிலேயே ஒன் மேன் ஆர்மி!001''1953-ல் எனக்கு 18 வயசு. ஒரு நாள், ரேஷன்ல அரிசி வாங்கப் போயிருந்தேன். 14 கிலோ அரிசியை அளந்து பையில கட்டிட்டு கிளம்புறப்போ வந்து நின்ன தாசில்தார், 'ஒரு ஆள் இத்தனை கிலோ அரிசியைத் தூக்கிட்டுப் போறதுக்குச் சட்டப்படி அனுமதியில்லை. பையை வெச்சுட்டுப் போ'ன்னாரு. 'இப்ப நான் போறேன்... ஆனா, இதே அரிசியை நீங்களே என்னைத் தேடி வந்து வாங்கிக் கோன்னு கெஞ்சுவீங்க'ன்னு மட்டும் சொல்லிட்டு வந்தேன். அவர் மேல கேஸ் போட்டேன். தீர்ப்பு வந்துச்சு. நான் சொன்ன மாதிரியே, ஒரு பையில அதே 14 கிலோ அரிசியைத் தூக்கிட்டு வந்து எங்க வீட்டுக் கதவைத் தட்டுனாரு அந்த தாசில்தார். அந்த வயசுல அது பெரிய சாதனையா, ரொம்ப மிதப்பா இருந்துச்சு. ஆனா, அதையெல்லாம் தாண்டிப் புரிஞ்ச ஒரு விஷயம்... எதிர்த்து நிக்கிறது எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும், நியாயம் நம்ம பக்கம் இருந்தா நாம பயப்படவோ, கவலைப்படவோ தேவையில்லை. கொஞ்சம் கஷ்டப்பட்டாலும் கடைசியில நாமதான் ஜெயிப்போம்!''002''எனக்குக் கல்யாணம் நிச்சயம் பண்ணாங்க. பொண்ணு வீட்ல 1,500 ரூபாய் வரதட்சணை கேட்டார் எங்கப்பா. ஆனா, அவங்க வீட்ல 16 பிள்ளைகளை வெச்சுக்கிட்டு ரொம்பக் கஷ்டத்துல இருந்தாங்க. 'நான் அந்தப் பொண்ணைத்தான் கட்டிக்குவேன். என்னை நம்பி அவங்க பொண்ணு கொடுக்குறாங்க. எனக்குக் கை, கால் இருக்கு. காசு பணம் வேண்டாம். இதுல உங்களுக்கு எதுக்கு வரதட்சணை கொடுக்கணும்?'னு சொல்லிட்டு, வீட்டைவிட்டு வெளியே வந்துட்டேன்.அந்தப் பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அதுக்குப் பிறகு ஒரு தடவைகூட நான் திரும்ப எங்க வீட்டுக்குப் போகலை. வீட்டுக்கு வெளியே நடக்குற அநியாயங்களைத் தட்டிக் கேக்குறதுக்கு முன்னாடி வீட்டுக்குள்ள இருக்குற கோளாறுகளைச் சரிசெய்யணும். அந்த அளவுக்கு மனசுல தெளிவையும் துணிவையும் வளர்த்துக்குற பக்குவம் வரணும். ஒவ்வொரு தனி மனுஷனும் கத்துக்க வேண்டிய விஷயம் இது. ஆனா, இங்கே பல தலைவர்களுக்கே அந்தத் தகுதி இல்லாததனாலதான், நம்ம தகுதி இப்படி இருக்கு. நம்ம வீட்டுப் பொண்ணு கையை ஒருத்தன் நடுரோட்ல பிடிச்சு இழுத்தா, அவன் மேல நமக்கு எவ்வளவு கோபம் வருமோ, அதே கோபம் நம்ம வீட்டுப் பையன் ஏதோ ஒரு பொண்ணு கையைப் புடிச்சு இழுத்தாலும் வரணும். அப்பதான் நாம மனுஷன்... நான் மனுஷன்!''003''என் ஒரே பொண்ணு மார்க் குறைச்சு வாங்கிட்டதால காலேஜ்ல பி.காம்., சீட் கிடைக்கிறது சிக்கலா இருந்துச்சு. 'உங்களுக்குத்தான் வக்கீல், கோர்ட், கட்சி ஆளுங்கன்னு பழக்கம் இருக்கே... சிபாரிசு பண்ணச் சொல்லுங்க. முடியலைன்னா லஞ்சம் கொடுங்க'ன்னு சிலர் சொன்னாங்க. 'பிரமாதமான மார்க் எடுத்தவங்களுக்கு மட்டும்தான் சீட் கொடுப்பாங்கன்னா, காலேஜ்ல ஒரு கிளாஸ்ல படிக்கிற எல்லா பொண்ணுங்களும் யுனிவர்சிட்டி கோல்ட் மெடல்வாங்கணுமே! மார்க் கொஞ்சம் குறைஞ்சுட்டா அவங்க எதுக்குமே லாயக்கில்லாதவங்க ஆயிடுவாங்களா?'னு அவங்களுக்கு எல்லாம் பதில் சொல்லிட்டு, காலேஜுக்குப் போனேன்.தினமும் பிரின்சிபாலைப் பார்த்து, 'என் பொண்ணு மார்க் இது. இதுக்கு என்ன வாய்ப்பிருக்கோ அதைச் செய்யுங்க!' சொல்லிட்டு வருவேன். கடைசியில பி.காம்., சீட்டே கிடைச்சிருச்சு. சிபாரிசு, லஞ்சம் சங்கதிகளை எல்லாம் தாண்டி நம்ம முனைப்புதான் எதையும் சாதிக்கும்னு நான் அந்த விஷயத்துல புரிஞ்சுக்கிட்டேன்!''004''பின்னி மில் வேலையை விட்டுட்டேன். அப்ப முதல்வரா இருந்த கருணாநிதி 'ஒன் வே'யில் கார்ல போனா படம் புடிச்சுப் போடுறது, போலீஸ்காரங்களோட முறைகேடுகளைத் தட்டிக்கேக்குறதுன்னு பரபரப்பா இருந்ததால, என்னைத் தொல்லையா நினைச்ச ஒரு கிரைம் இன்ஸ்பெக்டர், நாலு பேரை செட்டப் பண்ணி என் மேல் பொய்ப் புகார் கொடுக்க வெச்சார். அதுக்காக விசாரிக்கிறேன்னு சொல்லி என்னைப் பெரிய பட்டாளத்தோடு வந்து பனியன், ஜட்டியோடு கையில விலங்கு போட்டு நடுரோட்ல அடிச்சு இழுத்துட்டுப் போயி தலைகீழா கட்டி அடிச்சாரு. ஒவ்வொரு அடி விழுந்தப்பவும், 'இதுக்கு நிச்சயம் நீங்க பதில் சொல்ல வேண்டியிருக்கும்'னு மட்டும் சொல்லிட்டே இருந்தேன். ஸ்டேஷனைவிட்டுக் கிளம்புறப்போ, 'தேங்க்ஸ் இன்ஸ்பெக்டர்... இப்போ நான் கிளம்புறேன். ஆனா, சீக்கிரமே இந்த நாளுக்காக நீங்க ரொம்ப வருத்தப்படுவீங்க'ன்னு சொல்லிட்டு வந்தேன்..கோர்ட்ல கேஸ் நடந்தது. அவர் அந்த இடைவெளியில் அசிஸ்டென்ட் கமிஷனர் ஆகி டிரான்ஸ்ஃபர்ல நன்னிலம் போயிட்டார். எனக்கு எதிரா நிப்பாட்டுன 22 சாட்சிகளையும் பொய் சாட்சின்னு உடைச்சேன். தீர்ப்பு சொல்ற அன்னிக்கு 'விசாரணை அதிகாரி' என்பதால் அவரையும் வரச் சொல்லி இருந்தாங்க. கோர்ட்ல ரெண்டு பேரும் எதிரெதிர் கூண்டுல நிக்கிறோம். 'ராமசாமி மீதான புகாரில் எந்த முகாந்திரமும் இல்லாததால் அவரை விடுவிக்கிறோம். தேவையே இல்லாமல் அவரை உள்நோக்கத்தோடு அவமானப் படுத்தி காயமடையச் செய்த உங்கள் மீது ஏன் நடவ டிக்கை எடுக்கக் கூடாது?'ன்னு தீர்ப்பு. நிமிர்ந்து என் முகத்தை ஒரு தடவை பார்த்தார் அவர். கூண்டை விட்டு இறங்கினவர், தடால்னு கீழே விழுந்துட்டார். அதுக்கப்புறம் அவர் எழுந்திரிக்கவே இல்லை. கோர்ட், தீர்ப்பு, தண்டனைகளைவிட நம்ம மனச்சாட்சிக்கு உண்மையா இல்லைன்னா என்ன ஆகும்னு நான் தெரிஞ்சுக்கிட்ட நாள்!''005''1998-ல சென்னை ஹைகோர்ட்டைச் சுத்தி ஒன் வே ஆக்கினாங்க. போக்குவரத்து நெரிசலுக்கு எந்த விதத்திலும் தீர்வளிக்காத, ஒரு சில கான்ட்ராக்டர் களைத் தவிர, வேற யாருக்கும் பலனளிக்காத திட்டம் அது. அவ்வளவு அகலமான காலியான ரோடுல சர்... சர்னு பறந்த வண்டிகளால் 23 பொதுமக்கள் உயிர் இழந்தாங்க. பொதுநல வழக்குப் போட்டேன். அந்த ரோட்ல ஓவர் பிரிட்ஜ் கான்ட்ராக்ட் எடுத்திருந்த ஆளுங்கட்சிக்காரன் என்னைக் கொல்ல வந்தான். போலீஸ் மிரட்டுச்சு.சளைக்காம கோர்ட்ல மல்லுக் கட்டினேன். 'அந்தச் சாலையை மீண்டும் இருவழிப் பாதை ஆக்கவும். இனி எக்காலத்திலும் அங்கு ஒன் வே திட்டம் அமல்படுத்தக் கூடாது'ன்னு தீர்ப்பு வந்தது. இப்ப, சமீபத்தில் அசோக் நகரைச் சுத்தியும் ஒன் வே ஆக்கினாங்க. அதனாலயும் எந்தப் பலனும் இல்லை. திரும்பவும் இருவழிப் பாதை ஆக்கச் சொல்லி கோரிக்கைகள், போராட்டங்கள்! 'நீங்க எடுக்குறீங்களா... இல்லை, கோர்ட் மூலமா எடுக்கவைக்கவா?'ன்னு மட்டும் நான் கேட்டேன். 'ராமசாமி, அவசரப்படாதீங்க. ரெண்டு வாரத்துக்குள்ள அசோக் நகர் மீண்டும் இரு வழிப் பாதை ஆகும்'னு சொன்னவங்க, சொன்னதைச் செஞ்சாங்க. ஒரு பாதையில் முதல் தடவை நடக்கும்போதுதான் முள்ளு, கல்லு எல்லாம் காலைக் குத்தும். எடுத்துப் போட் டுட்டு நடந்தோம்னா, அடுத்த தடவை அதே பாதை உங்களுக்கு அத்தனைச் சிரமம் தராது!''006''2002-ல் மீன்பாடி வண்டிகளை ஊருக்குள்ள ஓட்டத் தடை போடச் சொல்லி, பொதுநல வழக்கு போட்டேன். அதுல கடுப்பான ஒருத்தன் கத்தியால என்னைக் குத்த வந்தான். என் கண்ணுகிட்ட கத்தி பாய்ஞ்சு பார்வை பாதிக்கப்பட்டது. நாம போட்ட வழக்கால் பாதிக்கப்பட்ட யாரோ ஒரு மீன்பாடி டிரை வர்தானே ஆத்திரத்துல இப்படிப் பண்ணியிருக்கான்... நேர்மை, நியாயம்னு பேசிட்டு நாம பண்றது தப் போன்னு தோணுச்சு. தடுமாற்றத்துல இருந்தேன்.மறுநாள், ஒரு மீன்பாடி வண்டி அடிச்சு பரிதாபமாச் செத்துப் போனாரு ஒருத்தர். அவரோட ரெண்டு குட்டிப் பொன்ணுங்க அப்பா இறந்துட்டது தெரியாம, பாடி மேல விழுந்து புரண்டு விளையாண் டுட்டு இருந்தாங்க. எனக்குள்ள இருந்த தடுமாற்றம் தெளிவாச்சு. இன்னும் தீவிரமாப் போராடி, மீன் பாடி வண்டிகளுக்குத் தடை வாங்கி னோம்.''007''நடைபாதைக் கடைகளுக்குத் தடை போடச் சொன்னப்பவும் இதே சிக்கல். பிராட்வே பகுதிகள்ல மட்டும் கிட்டத்தட்ட 5,000 வியாபாரிகள். ரோட்ல நடக்குறப்பல்லாம் அத்தனை பேரும் என்னை திட்டித் தீர்த்தாங்க. கம்யூனிஸ்ட் கட்சிக்காரங்கள்லாம் ஏதோ அவங்களுக்கு நல்லது செய்யறதா நினைச்சு, அவங் களோட சேர்ந்துக்கிட்டு என்னை எதிர்த்தாங்க. எந்தத் தயக்கத்துக்கும் இடம் கொடுக்காம அவங்க எல்லா ரையும் கடைகளைக் காலி பண்ணவெச்சேன். காலி பண்ணவங்களுக்கு மாற்று இடத்தை அரசாங்கமே தரணும்னு சொல்லி, அதுக்கும் போராடினேன். கொஞ்சங்கொஞ்சமா எல்லாருக்கும் இடம் கொடுத் துச்சு அரசாங்கம். அதுவரை தண்டல் காசா தினமும் 100 ரூபா கொடுத்து, பயந்து பயந்து வியாபாரம் செஞ்சுட்டு இருந்தவங்க, அதுக்குப் பிறகு அரசாங்க இடத்துக்கு 40 ரூபாய் வாடகை குடுத்து மரியாதையா, கம்பீரமா வியாபாரம் செய்ய ஆரம்பிச்சாங்க.என்னைத் திட்டின எல்லாரும் ஒரு நாள் என்னை வந்து பார்த்து மன்னிப்புக் கேட்டு வருத்தம் தெரிவிச் சாங்க. அதை விடுங்க... அதிகாரிகளும் பொதுமக்க ளும் என்னைப் புரிஞ்சுக்கிட்டாங்க. ஆனா, இந்த அரசியல்வாதிங்கதான் வழிக்கு வர மாட்டேங்குறாங்க. பரவாயில்ல பார்த்துக்கலாம்... நான் போறதுக்குள்ள அவங்களை ஒரு வழி ஆக்கிடுவேன்ல! என்ன பெருசா வயசாயிடுச்சு... ஒன்லி 76தானே நன்றி விகடன்
உலகமெல்லாம் புலிக்கொடி பறக்கவிட்ட எங்கள் புலிதலைவனுக்கு வீர வணக்கங்கள்
வாழ்நாளில் பெரும்பகுதியை போர்முனையில் கழித்த பிரபாகரன்
தனது வாழ்க்கையின் பெரும் பகுதியை போர்முனையில் அர்ப்பணித்தவர் வேலுப் பிள்ளை பிரபாகரன்.
வாழ்க்கைக் குறிப்பு: இலங்கையின் வடக்கில் உள்ள கடற்கரை நகரான வல் வெட்டிதுறையில் திருவேங்கடம் வேலுப் பிள்ளைக்கும், பார்வதிக்கும் கடைசி மகனாக பிரபாகரன், 1954 நவம்பர் 26ல் பிறந்தார். வேலுப்பிள்ளை இலங்கை அரசில் பணிபுரிந்தவர். பிரபாகரனுக்கு அண்ணனும், இரண்டு அக்காவும் இருக்கின்றனர். ஊரிக்காடு எனும் இடத்தில் சிதம்பரா கல்லூரியில் 10ம் வகுப்பு வரை பிரபாகரன் கல்வி கற்றார். கடந்த 1958ம் ஆண்டில் தமிழர்களுக்கு எதிராக சிங்களர்கள் நடத்திய கலவரம், 4 வயது சிறுவனாக இருந்த பிரபாகரன் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது.
வீட்டிலிருந்து வெளியேறினார்: மாணவராக இருந்த போதே பிரபாகரன் தமிழ் ஆதரவாளர் கள் குழுவில் இருந்தார். தன் பள்ளித் தோழர்களுடன் சேர்ந்து கைக்குண்டுகளை தயாரிக்கப் பழகினார். ஒரு முறை குண்டு வெடித்து அவரது காலில் தழும்பை ஏற்படுத்தியது. ஒரு முறை அதிகாலை மூன்று மணிக்கு பிரபாகரனை தேடி போலீசார் அவரது வீட்டுக்கு வந்தனர். அப்போதுதான் தங்களது மகன் புரட்சி இயக்கத்தில் ஈடுபட்டிருக்கிறான் என்ற உண்மை பெற்றோருக்கு புரிந் தது. கதவு தட்டுவதை வைத்து போலீசார்தான் தன்னை தேடுகின்றனர் என்பதை உணர்ந்து கொண்ட பிரபாகரன் தப்பிவிட்டார்.
பிரபாகரனை தேடி சென்று கண்டுபிடித்து வீட்டுக்கு அழைத்து வந்தார் அவரது தந்தை. அப்போது தன் நிலைமையை அவரிடம் பிரபாகரன் கூறிய போது, "உங்களுக்கோ, குடும்பத் துக்கோ நான் பயன்பட மாட்டேன். என்னால் உங்களுக்கு எந்த தொல்லையும் வேண்டாம். என்போக்கில் விட்டு விடுங் கள். என்னை எதிர்பார்க்காதீர்கள்' என்று கூறி வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். அதன் பின் வீடு திரும்பவேயில்லை. கடந்த 1970களில் தமிழர்களுக்கு எதிராக ஏவிவிட்ட கடுமையான அணுகுமுறையும், கல்வித்துறையில் புறக்கணிப்பு உள்ளிட்டவை தமிழ் இளைஞர் கள் மத்தியில் கடுமையான எதிர்ப்புணர்வை உருவாக்கியிருந்தது.
புதிய தமிழ்ப் புலிகள்: பார்லிமென்டில் தமிழ்த்தலைவர் களின் போராட்டங்களுக்கு இலங்கை அரசு செவி சாய்க்கவில்லை. எனவே, தமிழ் பகுதியில் 1970ல் தமிழ் மாணவர் பேரவை துவங்கப் பட்டது. வல்வெட்டித்துறையை சேர்ந்த பிரபாகரனும், நண்பர்களும், உறவினர்களுமே அதில் முக்கிய பங்கு வகித்தனர். இக்குழு மாணவர்கள் மத்தியில் செல்வாக்கு பெறத் தொடங்கியது. அக்குழுவிலேயே மிக இளையவராக இருந்ததால் அவரை "தம்பி' என்றே எல்லாரும் அழைத்தனர். சிங்கள எதிர்ப்பை காட்டும் விதமாக பஸ்சை எரிப்பது என்று முடிவு செய்தனர். அதன் படி 16 வயதாக இருந்த பிரபாகரன், பஸ்சை எரித்து தனது போராட்டத்தை துவக்கினார்.
மாணவர் பேரவையில் இருந்தவர்களை, சிங்கள போலீசார் கைது செய்து கொழும்பில் சித்திரவதை செய்தனர். இச்சூழ்நிலையில் பிரபாகரன் தமிழகம் வந்தார். பின் 1972ல் இலங்கை திரும்பிய அவர், "புதிய தமிழ்ப் புலிகள்' என்ற பெயரில் ஓர் இயக்கத்தை துவக்கினார். ஆயுதம் ஏந்துவதன் மூலமே இனப் பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என்று அவர் தீர்மானமாக இருந்தார்.
முதல் ராணுவ நடவடிக்கை: கடந்த 1974ம் ஆண்டில் யாழ்ப் பாண நகரில் தமிழ் ஆதரவு மாநாடு நடந்தது. இம்மாநாட்டில் துப்பாக்கிச் சூடு நடந்ததில் ஒன்பது பேர் பலியாயினர். இச்சம்பவத்துக்கு பழி தீர்க்கும் விதமாக, 1975ல் பொன்னாலை எனும் இடத்தில் கோவிலுக்கு சென்று கொண்டிருந்த, யாழ்ப்பாண மேயர் ஆல்பிரட் துரையப்பா சுட்டுக்கொலை செய்யப் பட்டார். துரையப்பா, இலங்கை சுதந்திரா கட்சியை சேர்ந்தவர், தமிழ் இன உணர்வை நசுக்கும் நோக்கத்தை கொண்டிருந்தவர். இச்சம்பவத்தை முன்னின்று நடத்தியவர் பிரபாகரன். இதுதான் பிரபாகரனின் முதல் கொலை நடவடிக்கை.
கடந்த, 1975ல் புத்தூர் வங்கிக்குள் தனது தோழர்களுடன் நுழைந்து, ஐந்து லட்ச ரூபாய் மற்றும், இரண்டு லட்ச ரூபாய் நகைகளை கொள்ளையிட்டுச் சென்றார். இதனால் சிங்கள போலீசார் புதிய தமிழ்ப் புலிகளை அழிக்க தீவிரம் காட்டினர். கடந்த, 1976 மே 5ம் நாள் தமிழ் புதிய புலிகள் இயக்கத்தை - தமிழ் ஈழ விடுதலைப்புலிகளாக, புதிய இயக்கமாக பிரபாகரன் நிறுவினார். இலங்கை உளவுப் படையினரை அழித்தல், போலீஸ் நிர்வாகத்தை சீர்குலைத்தல், ராணுவத்தினர் மீது நேரடியாகவும், மறைமுகமாகவும் தாக்குதல் நடத்துதல் ஆகிய மூன்று அம்சங்களை புலிகளின் பணிகளாக அப்போது அறிவித்தார்.
கொரில்லா இயக்கம்: கொரில்லா இயக்கமாக வெளிக் காட்டுவதற்காகவே, இயக்கத்தின் சின்னமாக புலியை தேர்வு செய்தார். புலிகள் இயக்கத்தை உருவாக்கியதால், இலங்கை ராணுவம் அவரை தேடத் தொடங்கியது. போலீசார் மீதும், ராணுவத்தினர் மீதும் புலிகள் தாக்குதல் நடத்தினர். கடந்த, 1978ல், 11 முக்கிய தாக்குதல் சம்பவங்களுக்கு தாங்கள்தான் பொறுப்பு என்று பிரபாகரன் அறிக்கை விட்டார். இதையடுத்து அந்த ஆண்டே விடுதலைப்புலிகள் தடை சட்டம் இலங்கை பார்லிமென் டில் நிறைவேற்றப்பட்டது.
அதே ஆண்டில், ஐக்கிய தேசிய கட்சியின் ஜெயவர்த்தனா அரசு புதிய அரசியல் அமைப்பை உருவாக்கி, தமிழ் மொழியை இரண்டாம் பட்ச நிலைக்கு தள்ளியது. ஒருவரை எந்த விசாரணையும் இன்றி 18 மாதம் சிறையில் தள்ளும் சட்டத்தையும் 1979ல் இலங்கை அரசு நிறைவேற்றியது. இதனால், 1979-80ல் ஆயுத நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு, இயக்கத்தை பலப் படுத்தும் வேலையில் பிரபாகரன் ஈடுபட்டார். 1981ல் சிங்கள ராணுவமும், ஐக்கிய தேசிய கட்சியினரும் இணைந்து யாழ்ப் பாண நூலகத்தை எரித்தனர். தெற்காசியாவில் சிறந்ததாக கருதப்பட்டது இந்த நூலகம். 94 ஆயிரம் புத்தகங்கள் சாம்பலாகின.
கடந்த, 1981ல் யாழ்ப்பாண காங்கேசன் துறைமுகத்தில் ராணுவ வாகனத்தின் மீது புலிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இதுவே ராணுவத்தினர் மீது புலியினர் நடத்திய முதல் தாக்குதல். 1982ல், அதிபர் ஜெயவர்த்தனா தேர்தல் பிரசாரத் துக்கு வந்த போது, பொன்னாலைப் பகுதியில் கண்ணிவெடிகுண்டுகளை புதைத்து வைத்து தாக்குதல் நடத்தினர். கடந்த, 1983 உள்ளூராட்சி தேர்தலின் போது, நடத்திய தாக்குதல், ராணுவத்தினரை நிலைகுலைய செய்தது, கண்ணிவெடித்தாக்குதலில் 13 ராணுவத்தினரை கொன்றது ஆகிய சம்பவங்களை பிரபாகரன் நேரில் நடத்தினார். இதுபோன்று பிரபாகரனின் தீவிர செயல்கள் தொடங்கின. இதையடுத்து கண்ட இடத்தில் போராளிகளை சுடவும், சுட்டுத் தள்ளிய பின் பிணங்களை பிரேத பரிசோதனை இன்றி புதைக்கவும் வழிசெய்யும் ஆணையை சிங்கள அரசு பிறப்பித்தது.
கருப்பு ஜூலை: அப்பாவி தமிழர்கள் மீதான தாக்குதல்களை சிங்கள ராணுவம் அதிகரித்தது கருப்பு ஜூலை என்று அழைக்கப் படும், 1983 ஜூலை 23ல், சிங்களர்களால் 400 தமிழர்கள் கொல்லப்பட்டனர். கடந்த, 1983 ஜூலை, தமிழ் ஈழப் போரின் கொந்தளிப்பான காலகட்டம் என்று சொல்லலாம். ராணுவத்தினர் மீதான கொரில்லா தாக்குதலை பிரபாகரன் தொடங்கினார். அரசியல் மற்றும் ராணுவ அமைப்புகளையும் விரிவாக்கம் செய்தனர்.
இந்தியா ஆயுத பயிற்சி: கருப்பு ஜூலை கலவரத்தை கணக்கில் கொண்டு, அப்போது பிரதமர் இந்திரா, இலங்கை பிரச்னையில் தலையிடுவது என்று முடிவு செய்தார். இதற்கு அப்போது தமிழகத்தில் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்., முயற்சி செய்தார். புலிகளுக்கு ராணுவ பயிற்சியும் ஆயுதமும் வழங்குவது என்று இந்தியா முடிவு செய்தது. இந்நேரத்தில், தமிழ் ஈழத்துக்குத் தேவையான ஆயுதங்களையும் வெளியிலிருந்தும் பிரபாகரன் பெற்றார். இதனால், ராணுவத்தினர் மீது கடுமையான தாக்குதலை புலிகள் நடத்தினர். இந்நேரத்தில் இலங்கை அரசு கலக்கம் அடைந்திருந்தது. தமிழ் ஈழ மக்கள் மகிழ்ச்சி அடைந்த நேரத்தில், 1984ம் ஆண்டில் இந்திரா படுகொலை செய்யப்பட்டார்.
அடுத்து பிரதமராகப் பதவியேற்ற ராஜிவுக்கும், பிரபாகரனுக்கும் இடையில் இணக்கமான சூழ்நிலை உருவாகவில்லை. இலங்கை அரசுக்குச் சாதகமாக ராஜிவ் செயல்படுவதாக பிரபாகரன் கருதினார். இதற்கிடையில், புங்குடுதீவைச் சேர்ந்த மதிவதனியை பிரபாகரன் 1984ம் ஆண்டு அக்., 1ம் தேதி சென்னையை அடுத்த திருப்போரூர் முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு இரு மகன்கள் சார்லஸ் அந்தோணி, பாலச்சந்திரன் மற்றும் ஒரு மகள் துவாரகா பிறந்தனர். இவர்களில் சார்லஸ் அந்தோணி தற்போது போர் முனையில் மரணமடைந்துவிட்டார்.
திம்பு மாநாடு: கடந்த, 1985ம் ஆண்டில் இருதரப்பினருக்கும் போர்நிறுத்தம் ஏற்பட்டது. பூட்டான் தலைநகர் திம்புவில் இந்திய அரசின் முயற்சியில் தமிழ்க் குழுக்கள் மாநாடு நடந்தது. இங்கு புலிகள் முன்மொழிந்த தமிழர் தன்னாட்சி உரிமை தீர்மானத்தை இலங்கை அரசு ஏற்கவில்லை; பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதன்பின், திரிகோணமலை அருகே, இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்தி, 200 பேரைக் கொன்றது. இந்தியாவிலிருந்து அரசியல் ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கம் வெளியேறினார். இதையடுத்து, இந்தியாவுக்கும் - பிரபாகரனுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.
எம்.ஜி.ஆர்., உடன் சந்திப்பு: கடந்த, 1986ம் ஆண்டில் தமிழகத்தில் விடுதலைப்புலிகளின் தகவல் தொடர்பு சாதனங் கள் பறிக்கப் பட்டன. அப்போது பிரபாகரன் தமிழகத்தில் தான் இருந்தார். பிரபாகரனின் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து அவை திருப்பியளிக்கப் பட்டன. 1987ம் ஆண்டில் அவர் ஈழம் திரும்பினார். அப்போது பேசிய அவர், "தனி அரசை அமைக்க உயிர், உடல், ஆன்மாவை அர்ப்பணித்துப் போராடுவோம்' என்றார்.
கடந்த, 1987ம் ஆண்டில் டில்லியில் ராஜிவைச் சந்திக்கும் வழியில், தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரையும் பிரபாகரன் சந்தித்தார். ராஜிவ் - ஜெயவர்தனா ஒப்பந்தம் பற்றி அப்போது அவருக்குத் தெரிவிக்கப்பட்டது. இது தனக்கு அதிர்ச்சி அளித்ததாக பிரபாகரன் கூறினார். மற்ற தமிழ்க் குழுக்கள் ஏற்றுக் கொண்டன என்று கூறி, அப்போது ராஜிவ் - ஜெயவர்தனா ஒப்பந்தம் நிறைவேறியது.
அமைதிப்படை: இந்த ஒப்பந்தப்படி, ஆயுதங்களை புலிகள் இந்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும். இலங்கை அவர்களுக்குப் பொதுமன்னிப்பு வழங்க வேண்டும். இந்திய அமைதிப் படை இரு தரப்புக்கும் இடையில் மோதல் நடக்காமல் கண்காணிக்கும். இதுபற்றி பேசிய பிரபாகரன், "மக்களது விடுதலைக்காக, விமோசனத்துக்காக நாங்கள் ஏந்திய ஆயுதங்களை இந்திய அரசிடம் ஒப்படைக்கிறோம். தமிழீழ மக்களின் ஒரே பாதுகாப்பு சாதனமாக இருந்த இந்த ஆயுதங்களை இந்திய அரசு எங்களிடமிருந்து பெற்றுக் கொள்வதிலிருந்து, தமிழ் ஈழ மக்களின் பாதுகாப்பை ஏற்றுக் கொள்கிறது.
நாங்கள் ஆயுதங்களை அளிக்காவிட்டால் இந்திய ராணுவத்துடன் மோதும் நிலை ஏற்படும். இதை நாம் விரும்பவில்லை. தமிழ் ஈழ தனி அரசே நிரந்தரத் தீர்வைத் தரும்' என்றார். பலாலி ராணுவ முகாமில் இந்திய ராணுவத்திடம் ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்டன. இந்திய - இலங்கை ஒப்பந்தத்திலிருந்த விஷயங்களை இலங்கை அரசு நிறைவேற்றக் கோரி திலீபன் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார். அவருடைய கொள்கை உறுதியால் உண்ணாவிரதத்திலேயே மரணமும் அடைந்தார்.
திலீபன் மரணத்துக்குப் பின், விடுதலைப்புலிகளை இலங்கைக் கடற்படை கைது செய்தது. "இது ஒப்பந்த விதிகளுக்கு முரணானது' என்று கூறிய ஏழு புலிகள் சயனைடு குப்பிகளைச் சாப்பிட்டு மரணம் அடைந்தனர். புலிகளும் போர் நிறுத்தத்தைக் கைவிட்டனர். இந்திய அமைதிப்படைக்கு எதிராகப் புலிகள் போராடுவது குறித்து, தமிழக முதல்வர் எம்.ஜி.ஆருக்கு எழுதிய கடிதத்தில், "இந்திய ராணுவம் புலிகளை ஒழிக்க வேண்டும் என்று நினைப்பதால் தான் எங்களது தற்காப்புக்காகப் போராடி வருகிறோம்' என்று பிரபாகரன் எழுதியிருந்தார்.
1987 மற்றும் 1988ம் ஆண்டுகளில், இடைக்கால அரசை தமிழ்ப்பகுதியில் ஏற்படுத்த வேண்டும் என்று ராஜிவுக்கு எழுதினார் பிரபாகரன். இந்த சமயத்தில் பெண்களையும் போராளிகளாக பிரபாகரன் அனுமதித்தார். பெண்புலிகளும் போர்க்களத்தில் ஈடுபட்டனர். தமிழ் ஈழத்துக்காகப் போரிட்டு உயிர் நீத்த மாவீரர் ளை நினைவு கூறும் தினம் 1989ம் ஆண்டில் பிரபாகரனால் துவக்கப்பட்டது. இந்த சமயத்தில் அதிபராகப் பதவியேற்ற பிரேமதாசா புலிகளைச் சமாதானப் பேச்சுக்கு அழைப்பு விடுத்தார். இதனால், 1990ம் ஆண்டில் இந்திய அமைதிப்படை நாடு திரும்பியது. தமிழர்களுக்கு எதிராக இந்திய ராணுவம் நடந்து கொண்டது எனக் கூறி, அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, ராணுவத்தினரை வரவேற்க விமான நிலையம் செல்லவில்லை. அதிபர் பிரேமதாசாவுடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாததால், 1990 ஜனவரி 10ல் மீண்டும் இலங்கை ராணுவம் மற்றும் புலிகளிடம் மோதல் ஏற்பட்டது.
குற்றச்சாட்டுகள்: கடந்த, 1991 மே 21ல், ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரசாரத்துக்கு வந்த காங்கிரஸ் தலைவர் ராஜிவ், புலிகளின் மனித குண்டுக்கு பலியானார். இதில் பிரபாகரன் குற்றம் சாட்டப் பட்டார். ராஜிவ் -ஜெயவர்தனே மற்றும் அமைதிப்படை விவகாரங்களில் பிரபாகரன் அதிருப்தி அடைந் தது அதற்கு காரணமாக சொல்லப் பட்டது. 2006ல் ராஜிவ் படுகொலை பற்றி பிரபாகரன் கூறிய போது, ராஜிவ் கொலையை, "ஒரு துன்பியல் சம்பவம்' என்றார்.
தமிழ் ஈழ விடுதலை அமைப்பு தலைவர் உமா மகேஸ்வரன், டெலோ தலைவர் சிறிசபாரத்தினம் படுகொலைகளிலும், 1990ல் சென்னையில் ஈ.பி.ஆர்.எல்.எப்., தலைவர் பத்மநாபா மற்றும் அவரது சகாக்கள் 14 பேரை சுட்டுக் கொன்றது தொடர்பாகவும் இவர் மீது குற்றம் சாட்டப் பட்டது. அதிபர் பிரேமதாசா, அதிபர் வேட்பாளர் காமினி திசநாயகா மற்றும் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் மற்றும் லட்சுமண் கதிர்காமர் ஆகியோர் படுகொலையிலும் பிரபாகரன் குற்றம் சாட்டப்பட்டார். 33 நாடுகள் விடுதலைப் புலிகள் மீது தடை விதித்தன. இன்டர்போலும் இவரைத் தேடியது.
முப்படை அமைப்பு: புலிகள் (தரைப்படை), கடற்புலிகள் (கடல் படை - 1984 ம் ஆண்டு முதல் பிரபாகரன் முயற்சி செய்ததன் விளைவாக 1992ல் உருவாக்கப் பட்டது) மற்றும் வான்புலிகள் (விமானப்படை) ஆகிய மூன்று படைகளையும் கொண்ட ஒரே போராளி அமைப்பு என்ற பெயரைப் பெற்றது. 1993ல் உயிரை துச்சமாக எண்ணி, ரகசியமாக தாக்கும் கரும்புலி தற்கொலை படையினரையும் பிரபாகரன் துவக்கினார்.
கடந்த, 2002ல் நார்வே முயற்சியால் அமைதி முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது பிரபாகரன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அமைதி முயற்சிகள் வழக்கம் போல் வெற்றி பெறவில்லை. இருதரப்பினர் இடையிலும் மோதல் தவிர்க்க முடியாதது ஆனது.
2005ல் ராஜபக்ஷே அதிபர் ஆனபின், நார்வே அமைதி முயற்சி முற்றிலுமாக முடிவுக்கு வந்தது. புலிகள் ராணுவப்பிரிவில் இருந்த கருணா அம்மான், 2004 மார்ச்சில் பிரபாகரனிடமிருந்து விலகியது, அந்த அமைப்புக்கு பெரிய சவாலாக அமைந்தது.
கடந்த ஆண்டு இறுதியில், புலிகளின் கிழக்குப் பகுதியில் கடுமையாக சண்டை நடந்தது. 2009 புலிகளுக்கு சோகமானதாகவே இருந்தது. ஜனவரி 2ல், கிளிநொச்சியை ராணுவம் கைப் பற்றியது புலிகளுக்கு பெரிய அடியானது. ஜனவரி 25ல் முல்லைத்தீவை கைப்பற்றியது. வன்னியில் புதுக்குடியிருப்பு பகுதிக்குள் புலிகளின் எல்லையை ராணுவம் நெருக்கியது. இப்பகுதியில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் தமிழர்கள், இரு தரப்பு சண்டையில் சிக்கினர். பின் முள்ளிவாய்க்கால் தீபகற்ப பகுதியில் வேறு இடங்களுக்கு தப்ப முடியாத படி ராணுவம் நெருக்கியது.
இப்பகுதியில், பொதுமக்கள் மீதும் புலிகள் மீதும் ராணுவம் தாக்கியதில் நூற்றுக் கணக் கான புலிகள் மற்றும் அப்பாவி பொதுமக்கள் பலியாகினர். புலிகள் இருக்கும் இடத் துக்கு சில மீட்டர் தூரம் வரை சென்ற ராணுவம், தாக்குதல் நடத்தியதில் பிரபாகரன் மற்றும் அரசியல் பிரிவு தலைவர் நடேசன், பிரபாகரன் மகன் அந்தோணி மற்றும் பொட்டு அம்மான் உள்ளிட்டோர் பலியாகிவிட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் ஈழப் போராட்டத்தில் 70 ஆயிரம் பேர் பலியாகியிருக்கின்றனர்.
வான்படை உருவாக காரணமான சார்லஸ்: புலிகளின் வான்படை உருவாக காரணமாக இருந்த சார்லஸ் அந்தோணி பலியானது எப்படி என்பது குறித்து இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கை: புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் நேற்று அதிகாலை ராணுவம் கடும் தாக்குதல் நடத்தியது. தாக்குதல் முடிவுக்கு வந்த பின், ராணுவ வீரர்கள் இங்கு தேடுதல் வேட்டை நடத்தினர். சண்டையில் பலியான புலிகளின் உடல்களை அடையாளம் காணும் பணி நடந்தது. இதில், 24 வயது மதிக்கத்தக்க சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இது, புலிகள் தலைவர் பிரபாகரனின் மூத்த மகன் சார்லஸ் அந்தோணியின் சடலம் என தெரிய வந்துள்ளது. புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் நடேசனும் சண்டையில் பலியானார். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சார்லஸ் அந்தோணி இறந்த நிலையில் இருப்பது போல் எடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தையும் இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ளது. சார்லஸ், ஏரோ நாட்டிகல் இன்ஜினியரிங் படித்தவர். புலிகள் வான்படையை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர். தகவல் தொடர்பு பிரிவையும் கவனித்து வந்தார். சமீப காலமாக நடந்த சண்டைகளை சார்லஸ் தான் தலைமையேற்று நடத்தியதாக தகவல்கள் வெளியாயின. அதேபோல், தமிழ்ச்செல்வன் மறைவுக்குப் பின் புலிகள் அரசியல் பிரிவு தலைவராக பதவியேற்றவர் நடேசன். இவர், இலங்கையில் முன்பு போலீஸ் கான்ஸ்டபிளாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
"திட்டமிட்ட படுகொலை': "எங்களின் மூத்த தலைவர்கள் இலங்கை ராணுவத்தால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்' என, செஞ்சிலுவை சங்கத்திடம் புலிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
புலிகள் ஆதரவு இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல்: புலிகள் அரசியல் பிரிவு தலைவர் நடேசன், அமைதி செயலக தலைவர் புலித்தேவன் ஆகியோர், ஐரோப்பாவில் உள்ள தங்கள் ஆதரவாளர்களிடம் டெலிபோன் மூலமாக பேசினர். அப்போது, தங்கள் கட்டுப்பாட்டு பகுதியில் காயம் அடைந்தவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என செஞ்சிலுவை சங்கத்திடம் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
இதற்கு சில மணி நேரத்துக்கு பின்னர், நடேசன், புலித் தேவன், சார்லஸ் அந்தோணி ஆகியோர் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவ அமைச்சகத்தின் இணைய தளத்தில் தகவல் வெளியானது. புலிகளை பொறுத்தவரை இவர்கள் மரணத்தை இன்னும் உறுதி செய்யவில்லை. இருந்தாலும், தங்கள் அமைப்பின் மூத்த தலைவர்கள் இலங்கை ராணுவத்தால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என, புலிகள் தரப்பில் செஞ்சிலுவை சங்கத்திடம் புகார் கூறியதாக முன்னதாக தெரிவித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
புலிகள் அமைத்த சிறை: தங்கள் எதிரிகளை துன்புறுத்துவதற்காக வெள்ளாமுள்ளிவாய்க்காலில், விடுதலைப்புலிகள் அமைத்திருந்த சிறைக்கூடத்தை, இலங்கை ராணுவம் கண்டுபிடித்தது.
இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கை: புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வெள்ளாமுள்ளிவாய்க்கால் பகுதியை ராணுவம் கைப்பற்றியது. அங்கு நடந்த தேடுதல் வேட்டையில், புலிகள் அமைத்திருந்த சிறைக்கூடத்தை ராணுவ வீரர்கள் கண்டுபிடித்தனர். தங்கள் அமைப்புக்கு எதிராகச் செயல்படும் ஆண்கள், பெண்களைப் பிடித்து துன்புறுத்துவதற்காக இந்தக் கூடத்தை புலிகள் பயன்படுத்தி வந்துள்ளனர்.
பரந்து விரிந்த கூடம் மற்றும் மிகவும் விசாலமான மூன்று உள் அறைகள் ஆகியவை இதில் உள்ளன. பதுங்கு குழிகளும் அமைக்கப் பட்டுள்ளன. யானைகளை கட்டி வைப்பதற்காக பயன்படுத்தும் இரும்பு சங்கிலிகளைக் கொண்டு, மனிதர்களை இங்கு கட்டி வைத்திருந்ததற்கான அடையாளங்கள் உள்ளன. சுவர்களில் ரத்தச் சிதறல்களும், அறை முழுவதும் மனிதர்களின் தலை முடிகளும் காணப்படுகின்றன. பிரபாகரனின் மேற்பார்வையின் கீழ் இந்த கூடம் செயல்பட்டு வந்ததாகவும் கூறப் படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.
நன்றி தினமலர்வக்கீல்கள் மீது ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் கடும் தாக்கு: கண்டிப்பு! : ஐகோர்ட் சம்பவத்துக்கு போலீஸ் மீதும் பாய்ச்சல்
சென்னை ஐகோர்ட் வளாகத்தில் வக்கீல்களுக்கும் - போலீசாருக்கும் இடையே நடந்த மோதலுக்கு இரு தரப்பினருமே காரணம் என, நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் தெரிவித்துள்ளது. இரு தரப்பினரும் வரம்பு மீறி செயல்பட்டுள்ளனர் என்றும் கண்டித்துள்ளது.அதேநேரத்தில், சென்னை ஐகோர்ட்டில் நடந்த மோதல் தொடர்பான விசாரணையை தான் மேலும் தொடர விரும்பவில்லை என்றும் விடுவித்துக் கொள்வதாகவும் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கூறியுள்ளார்.மோதல் தொடர்பாக நேற்று முன்தினம் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா சமர்ப்பித்த அறிக்கையில், "எதை வேண்டுமானாலும் ஐகோர்ட் வளாகத்தில் வக்கீல்கள் செய்யலாம், அதற்குப்பின் அதில் சம்பந்தமின்றி இருக்கலாம் என்ற தவறான கருத்து எழ இச்சம்பவம் உதவியிருக்கிறது. மேலும், அவர்கள் எந்தச் சட்டத்திற்கும் பதில் கூறத் தேவையில்லாதவர்கள் என்ற கருத்தும் எழுந்திருக்கிறது.
கமிஷன் அளித்த அறிக்கையின்படி முடிவு : "போலீசாரோ தரைத்தளம், முதல்மாடி ஆகியவற்றிலும் விரட்டிவிரட்டிச் சென்று சம்பவத்தன்று ஈவுஇரக்கமின்றி வக்கீல்களைத் தாக்கியுள்ளனர். அதிலும் திருப்திப் படாமல் வக்கீல்களின் சேம்பர்களுக்குள்ளும் புகுந்து பொருட்களைச் சேதப்படுத்தி, வக்கீல்களை அடித்துள்ளனர். அவர்கள் ஒட்டுமொத்தமாகத் தறிகெட்டு, வேண்டுமென்றே பலப்பிரயோகம் செய்திருக்கின்றனர்' என்று குறிப்பிட்டு, தன் கண்டனத்தை தெரிவித்திருக்கிறார்.இந்நிலையில், வக்கீல்கள் - போலீசார் மோதல் தொடர்பாக, போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வக்கீல் வைகையும் மற்றும் சிலரும் தாக்கல் செய்த மனு, தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் சதாசிவம், பாஞ்சால் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி கிருஷ்ணாவின் அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.அதைப் பரிசீலித்த நீதிபதிகள், "ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அளித்த அறிக்கையின்படி, சென்னை ஐகோர்ட்டும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்கலாம்' என, உத்தரவிட்டனர். அந்த அறிக்கையை சென்னை ஐகோர்ட்டிற்கு அனுப்பி வைக்கவும் உத்தரவிட்டனர்.
விசாரணைக் கமிஷன் சட்டப்படி, புதிதாக நீதி விசாரணைக் கமிஷன் அமைப்பது தொடர்பாக மாநில அரசுடன் கலந்தாலோசித்து சென்னை ஐகோர்ட் முடிவு செய்து கொள்ளலாம்.இந்தப் பிரச்னையை ஏற்கனவே ஐகோர்ட் கையாண்டு வருவதால், ஸ்ரீகிருஷ்ணாவின் அறிக்கையின்படி மேல் நடவடிக்கை எடுக்கலாம். சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்துவது உட்பட எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கலாம் என்றும் நீதிபதிகள் கூறினர்.வழக்கு விசாரணைக்கு வந்த போது ஆஜரான வக்கீல் வைகை, "சென்னை போலீஸ் கமிஷனருக்கு நீதிபதி கிருஷ்ணா கமிஷன் நற்சான்று வழங்கியுள்ளது.
தடியடிக்கு உத்தரவிட்ட போலீஸ் யார் ? : கமிஷனர் ராதாகிருஷ்ணன், 4.30 மணிக்கு முன்னதாகவே இருந்ததாக, போலீசார் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அவர் 5.14க்குத்தான் வந்ததாக கிருஷ்ணா கூறியுள்ளார். தடியடிக்கு உத்தரவிட்ட போலீஸ் அதிகாரிகளின் பெயரை வெளியிட மாநில அரசு மறுக்கிறது. கிருஷ்ணா கமிஷன் அறிக்கையிலும் அதுபற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை' என்றார்.
தமிழ்நாடு வக்கீல்கள் சங்கத் தலைவர் பிரபாகரன் கூறுகையில், "தடியடிக்குக் காரணமான போலீஸ் கமிஷனர் மற்றும் இதர போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வரை சென்னை ஐகோர்ட்டில் சுமுகநிலை திரும்பாது. மீண்டும் ஒரு விசாரணைக் கமிஷன் அமைக்கத் தேவையில்லை' என்றார்.சொலிசிட்டர் ஜெனரல் வாகன்வதி, மூத்த வக்கீல் அசோக் தேசாய் ஆகியோர் தமிழக அரசு சார்பிலும், ஐகோர்ட் சார்பில் வேணுகோபாலும் ஆஜராயினர்.
அறிக்கை முக்கிய அம்சங்கள்
*விடுதலைப் புலி ஆதரவு வக்கீல்கள், தொடர்ந்து புலிகளுக்கு ஆதரவாகவும், இலங்கை அரசுக்கு எதிராகவும் ஐகோர்ட் வளாகத்தில் போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர்.
*தினம் ஏதாவது ஓர் அசம்பாவிதம் ஐகோர்ட்டில் நடந்து வந்துள்ளது. இந்த காலகட்டத்தில் பல வக்கீல்கள் மீது 110 கிரிமினல் வழக்குகள் பதிவாகியுள்ளன.
*புலி ஆதரவு வக்கீல்களிடம் இருந்து, தங்களுக்குப் பாதுகாப்பு வேண்டுமென்று சில வக்கீல்கள், முதல்வருக்கு மனு அளித்துள்ளனர்.
*பிப்ரவரி 17ம் தேதி, சுப்ரமணியசாமி மீது, கோர்ட் ஹாலுக்குள் வக்கீல்கள் அழுகிய முட்டைகளை வீசியுள்ளனர்.
*இவ்வழக்கில் வக்கீல்கள் ஒப்புக்கொண்டபடி 19ம் தேதி சரண்டர் ஆக மறுத்துவிட்டனர். போலீஸ் அதிகாரிகளுக்கும், அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது; சிலர் போலீஸ் மீது கற்களை வீசியுள்ளனர்.
*எந்த அதிகாரி லத்திசார்ஜ் செய்ய உத்தரவிட்டார் என்பது வீடியோக்கள் மூலம் தெளிவாகத் தெரியவில்லை.
*போலீஸ் ஸ்டேஷனுக்குள் வக்கீல்கள் நுழைந்து, சேர், கம்யூட்டர் மற்றும் இதர பொருட்களை வெளியே இழுத்துப் போட்டு தீ வைத்துள்ளனர்.
*இதையடுத்து, போலீசார் கோர்ட்டுக்குள் புகுந்து கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளனர்; தடியடியின் போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை போலீசார் கடைபிடிக்கவில்லை.
*வக்கீல்களால் தான் இந்த வன்முறை ஆரம்பமானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
*சென்னை ஐகோர்ட் நீதிபதிகளின் மென்மையான அணுகுமுறையே, இவ்வளவு பெரிய சூழ்நிலை ஏற்படக் காரணம்.
*போலீஸ் கமிஷனர் மீது எந்தக் குற்றமும் சுமத்த முடியாது.
*ஒரு மாதமாக நடந்த சம்பவங்களை வைத்துப் பார்க்கும் போது, அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டதைக் குறைகூற முடியாது.
*வக்கீல்களின் நடத்தைகளுக்கு சில வழிமுறைகளை சுப்ரீம் கோர்ட் வகுக்க வேண்டும்.
இலங்கை போர்க்களத்தில் பிரபாகரன் மகன் சார்லஸ் புதிய தலைமை:: அபாய திட்டங்கள் தயார்
புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோணி தலைமையில் முல்லைத் தீவில் விடுதலைப் புலிகள் சண்டையிட்டு வருவதாகவும், பிரபாகரன் வன்னி பகுதியில் தங்கியிருப்பதாகவும் இலங்கை ராணுவத்திடம் சரணடைந்த கடற்புலிகள் தெரிவித்துள்ளனர். ராணுவத்தைப் பின்வாங்கச் செய்யும் வகையிலான பல அபாயகரமான தாக்குதல் திட்டங்களையும் புலிகள் வகுத்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இலங்கையில் முல்லைத் தீவை நோக்கி முன்னேறிய ராணுவத்தினரைத் தடுப்பதற்கு விடுதலைப் புலிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். கடற்புலிகளின் தற்கொலைப் படைப் பிரிவைச் சேர்ந்த சங்கர், தமிழ் அலை ஆகியோர் இரணமடு அணையை தகர்ப்பதற்காக அனுப்பப்பட்டனர். அவர்களின் முயற்சி தோல்வி அடைந்தது.
இருவரும் இலங்கை ராணுவத்திடம் கடந்த ஜனவரியில் சரணடைந்தனர்.அவர்களிடம் நடந்த விசாரணையில் பல பரபரப்பான தகவல்கள் தெரியவந்ததாக, "சண்டே அப்சர்வர்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. சரண் அடைந்த கடற்புலிகள் இருவரும் கூறியதாக அப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
முல்லைத் தீவை நோக்கி இலங்கை ராணுவம் முன்னேறி வருவதை தடுக்க விடுதலைப் புலிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். இரணமடு அணையை வெடி வைத்து தகர்க்கும்படி எங்களுக்கு உத்தரவிடப்பட்டது. அணையை தகர்ப்பதற்கான திட்டத்தை புலிகளின் கடற்பிரிவுத் தலைவர் சூசையும், புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோணியும் வகுத்தனர்.அணையை தகர்ப்பது எப்படி என்பது குறித்து எங்களுக்கு கம்ப்யூட்டர் மூலமாக சார்லஸ் விளக்கினார். இதற்காக எங்களுக்கு தண்ணீருக்குள் பயிற்சி அளிக்கப்பட்டது. எங்களுடன் சேர்த்து மேலும் 10 பேரும் பயிற்சி பெற்றனர். தற்கொலைப் படை தாக்குதலுக்குக் கிளம்புவதற்கு முன், பிரபாகரன் எங்களுக்கு விருந்து அளித்தார்.விருந்தில் மட்டன் உணவு பரிமாறப்பட்டது.
அணையை தகர்க்கும்போது அதிக பாதிப்பு ஏற்படும் வகையில் செயல்பட வேண்டும் என்றும் எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அணையை தகர்ப்பதன் மூலம் 5,000 ராணுவ வீரர்கள் இறக்க வேண்டும் என சார்லசும், சூசையும் விருப்பம் தெரிவித்தனர். எங்களிடம் சாட்டிலைட் போன், நீச்சல் உடைகள் மற்றும் வெடிகுண்டுகள் தரப்பட்டன.முல்லைத் தீவில் தற்போது நடந்து வரும் சண்டையில் புலிகள் படைக்கு, பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோணி தான், தலைமை ஏற்றுள்ளார். சார்லசுடன் புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர்களான பானு, லட்சுமண் ஆகியோரும் புலிகளுக்கான போர் யுக்தியை வகுத்துக் கொடுக்கின்றனர்.
இலங்கை ராணுவத்தை தோல்வி அடையச் செய்யும் வகையில், பல அபாயகரமான திட்டங்களை புலிகள் வகுத்துள்ளனர்.பிரபாகரன், வன்னி பகுதியில் தங்கியுள்ளார். ராணுவம் அவரைப் பிடிக்கும் வரை அப்பாவி மக்கள் கேடயமாகப் பயன்படுத்தப்படுவர். அப்பாவி இளைஞர்களுக்கு மூளைச் சலவை செய்து, அவர்களை தற்கொலைப் படையினராக மாற்றி வருகின்றனர். பிரபாகரன் தனது மனைவியையும், இளைய மகன் பாலச்சந்திரனையும் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைத்து விட்டார். அவர்கள் எங்கு உள்ளனர் என உறுதியாக தெரியவில்லை.இவ்வாறு கடற்புலிகள் கூறியதாக, "சண்டே அப்சர்வர்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
தற்போது சண்டையை தலைமை ஏற்று நடத்துவதாகக் கூறப்படும் சார்லஸ் அந் தோணி, அயர்லாந்தில் ஏரோநாட்டிகல் பட்டப் படிப்பு படித்தவர். புலிகளின் வான்படை உருவாவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்களில் சார்லசும் ஒருவர் என நம்பப்படுகிறது. புலிகள் அமைப்பின் தகவல் தொழில்நுட்பப் பிரிவுக்கும் அவர் தலைவராக உள்ளார்.இவ்வாறு அந்தப் பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ராஜபக்சேவின் ஆலோசகராக இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி நியமனம்
இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையை அந்நாட்டு அரசு வேகமாக நிகழ்த்தி வரும் நிலையில், அதிபர் ராஜபக்சேவின் தகவல் தொழில் நுட்ப சர்வதேச ஆலோசகராக இந்தியாவைச் சேர்ந்த இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான அறிவிப்பை 'ஆங்கிலம் மற்றும் தகவல் தொழில்நுட்பம்' என்ற தலைப்பில் கொழும்பில் வெளியிட்ட நடந்த விழாவில் வெளியிட்ட அதிபர் ராஜபக்சே,
கொழும்பில் நடைபெற்ற இந்த விழாவிற்கு இன்ஃபோசிஸ் நிறுவனத் தலைவரான நாராயண மூர்த்தியை தலைமை விருந்தினராகவும் ராஜபக்சே அழைத்திருந்தார்.அதனையேற்று கொழும்பு சென்று அவ்விழாவில் கலந்துகொண்டார் மூர்த்தி.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ராஜபக்சே, தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியா கண்டுள்ள வெற்றியின் ஈர்ப்பு காரணமாக இந்தியாவின் பக்கம் தனது பார்வையை திருப்பியிருப்பதாக கூறியதோடு, மேற்கண்ட அறிவிப்பையும் வெளியிட்டார்.
இந்த பொறுப்பை ஏற்க நாராயண மூர்த்தி ஒப்புக் கொண்டதாக இலங்கை வெளியுறவுத் துறை செயலர் பலிதா கோகோனாவும் செய்தியாளர்களிடம் உறுதிபடுத்தினார்.
தமிழ் மக்களின் மீது கொடூரத் தாக்குதல்களை நடத்தி இனப்படுகொலையை நிகழ்த்தி வருவதையும், அதற்கான இந்திய அரசின் உதவிகளையும் கண்டித்து ஒட்டுமொத்தத் தமிழகமும் போராடி வரும் நிலையில், நாராயண மூர்த்தி நியமனம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

































