தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் பாகிஸ்தான் நடவடிக்கைகள் ‌நிறைவை அளிக்கிறது : ஐ.நா அந்தர் பல்டி

மும்பை தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் அரசு பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்க எடுத்துள்ள நடவடிக்கைகள் மனபிறைவை அளிப்பதாக, ஐ.நா., தெரிவித்துள்ளது. மும்பை தாக்குதலுக்கு பிறகு, பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் ஜமாயத்-உத்-தாவா அமைப்பை ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது. தொடர்ந்து அந்த அமைப்பின் செயலாக்கங்களை முடக்குமாறும் அறிவுறுத்தியது. இதனை தொடர்ந்து பாகிஸ்தானும் ஜமாயத்-உத்-தாவா அமைப்பின் தலைவர்கள் சிலரை கைது செய்ததுடன், அந்த அமைப்பின் வங்கி கணக்கையும் முடக்கியுள்ளதாக அறிவித்தது. விஷயம் வெளியாகிய பரபரப்பு அடங்குவதற்குள்ளாகவே, வீட்டுக்காவலில் எடுத்த தலைவர்களையும், கைது செய்த தலைவர்களையும் விடுவித்தது. வழக்கம் போல் கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்றியது பாகிஸ்தான். முடக்கப்பட்டதாக கூறப்படும் ஜமாயத் - உத் - தாவாவின் வங்கி கணக்குகளும் வழக்கம் போல இயங்கி வருவதாக ‌தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய சூழ்நிலையில் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் ஒருங்கிணைப்பாளர் ரிச்சர்ட் பேரட் ஒரு தனியார் தொலைகாட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், பாக்., அரசின் நடவடிக்கைகள் மனநிறைவை தருவதாக கூறியிருப்பது, இந்தியாவுக்கு அ‌திருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பேரட் கூறியிருப்பாவது : ஒரு அமைப்பின் மீது உடனடியாக தடை விதிப்பது என்பது அவ்வளவு எளிதில்லை , ஆனால் பாகிஸ்தான் ஐ.நா., உத்தரவின் பேரில் பயங்கரவாதிகளை ஒடுக்க நல்ல வகையில் ஒத்துழைத்து செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். பயங்கரவாதிகள் பாகிஸஅதானிலிருந்து தான் வந்தார்கள் என பாகிஸ்தான் மாஜி பிரதமர் நவாஸ் ஷெரிப் முதல் பாகிஸ்தான் மூத்த பத்திரிகையாளர் வரை அனைவரும் அடித்துச் சொல்லியும் கூட பாகிஸ்தான் இன்னும் இந்தியாவிடம் ஆதாரம் கேட்டு வருகிறது. இத்தகைய சூழலில் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் இந்த கருத்து அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive