தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

பி‌க் பே‌ங் சோதனை‌யி‌ல் ‌சி‌க்க‌ல்!

பிரப‌ஞ்ச‌‌ம் தோ‌ன்‌றிய ரக‌சிய‌த்தை‌க் க‌ண்டு‌பிடி‌க்கு‌ம் முய‌ற்‌சி‌யாக ‌வி‌ஞ்ஞா‌னிக‌ள் உருவா‌க்‌கியு‌ள்ள '‌பி‌ங் பே‌ங்' சோதனை இய‌ந்‌திர‌த்‌தி‌ல் பெருமள‌வி‌ல் ஹ‌ீ‌லிய‌ம் வாயு‌க் க‌‌சிவு ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது. இதனா‌ல் சோதனை‌யி‌ன் அடு‌த்த க‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ச் செ‌ல்வ‌தி‌ல் ‌சி‌க்க‌ல் உருவா‌கியு‌‌ள்ளது.

சுமா‌ர் 14 ‌பி‌ல்‌லிய‌ன் ஆ‌ண்டுகளு‌க்கு மு‌ன்னா‌ல் ஏ‌ற்ப‌ட்ட ‌மிக‌ப்பெ‌ரிய அணு‌ ச‌க்‌தி மோத‌லி‌ல்தா‌‌ன் ‌பிரப‌ஞ்ச‌ம் தோ‌ன்‌‌றியது எ‌ன்ற ‌பி‌க் பே‌ங் (பெரு வெடி‌ப்பு) கோ‌ட்பாடே இ‌ன்றளவு‌ம் ந‌ம்ப‌ப்ப‌ட்டு வரு‌கிறது. பூ‌மி உருவா‌கி உ‌யி‌ர்க‌ள் தோ‌ன்றவு‌ம் இதுவே காரண‌ம் எ‌ன்று கருத‌ப்படு‌கிறது.

இ‌ந்த ‌நிலை‌யி‌‌ல் ‌பிரப‌ஞ்ச‌ம் தோ‌ன்‌றியபோது உருவான அணு ச‌க்‌தி மோதலை த‌ற்போது உருவா‌க்‌கி, அத‌ன்மூல‌ம் ‌பிரப‌ஞ்ச‌ம் தோ‌ன்‌றிய ரக‌சிய‌‌த்தை‌க் க‌ண்ட‌றிய 36 ‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட நாடுகளை‌ச் சே‌ர்‌ந்த 5,000‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட ‌வி‌ஞ்ஞா‌னிக‌ளு‌ம் பொ‌றியாள‌ர்களு‌ம் முய‌ற்‌சி‌த்து வரு‌கி‌ன்றன‌ர்.

இத‌ற்காக அவ‌ர்க‌ள் ‌பிரா‌ன்‌ஸ்- சு‌வி‌ட்ச‌ர்லா‌ந்து எ‌ல்லை‌யி‌ல் பூ‌மி‌க்கு அடி‌யி‌ல் 100 ‌மீ ஆழ‌த்‌தி‌ல் சுமா‌ர் 27 ‌‌கிலோ ‌மீ‌ட்ட‌ர் சு‌ற்றள‌வி‌ல் 'பி‌ங் பே‌ங்' சோதனை‌ மை‌ய‌த்தை அமை‌த்து‌ள்ளன‌ர்.

இ‌ங்கு அமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள வ‌ட்ட வடிவ‌க் குழா‌யி‌ன் இரு புற‌ங்க‌ளி‌ல் இரு‌ந்து‌ம் புரோ‌ட்டா‌ன்களை செலு‌‌த்‌தி நேரு‌க்கு நே‌ர் மோத‌வி‌ட்டு, அ‌‌ப்போது உருவாகு‌ம் மா‌ற்ற‌ங்களை ஆ‌யிர‌க்கண‌க்கான கரு‌விக‌ள் மூல‌‌ம் ஆ‌ய்வு செ‌ய்து ‌பிரப‌‌ஞ்ச‌ம் தோ‌ன்‌றிய ரக‌சிய‌த்தை‌க் க‌ண்டு‌பிடி‌க்க‌ உ‌‌ள்ளன‌ர்.

‌திரவ ஹ‌ீ‌லிய‌ம் வாயு‌க் க‌சிவு!

புரோ‌ட்டா‌ன்க‌ள் மோது‌ம்போது ஏ‌‌ற்படு‌ம் டி‌ரி‌ல்‌லிய‌ன் டி‌கி‌ரி‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட வெ‌ப்ப‌த்தை‌க் க‌ட்டு‌ப்படு‌த்த ஏராளமான பாதுகா‌ப்பு ஏ‌ற்பாடுக‌ள் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன. இவை மைன‌ஸ் 271.3 டி‌கி‌‌ரி கு‌ளி‌ரி‌ல் வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன.

இ‌த்தகைய பாதுகா‌ப்பு ஏ‌ற்பாடுக‌ளி‌ல்தா‌ன் இ‌‌ந்‌திய நேர‌ப்படி நே‌ற்று ம‌திய‌ம் 2.57 ம‌ணி‌க்கு கோளாறு ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது. கு‌ளிரூ‌ட்டு‌ம் கரு‌வி ஒ‌‌ன்‌றி‌ல் இரு‌ந்து ஒரு ட‌ன்‌னி‌ற்கு‌‌ம் மே‌ற்ப‌ட்ட ‌திரவ ‌நிலை‌யிலான ஹ‌ீ‌லிய‌ம் வாயு க‌சி‌ந்து‌ள்ளது.

இதையடு‌த்து ‌தீ ‌பிடி‌க்கு‌ம் அபாய‌ம் ஏ‌ற்ப‌ட்டதா‌ல் ‌தீயணை‌ப்பு‌க் கரு‌விக‌ள் வரவழை‌க்க‌ப்ப‌ட்டன. ‌பி‌ங் பே‌ங் சோதனை முய‌ற்‌சிக‌ள் அனை‌த்து‌ம் உடனடியாக ‌நிறு‌த்த‌ப்ப‌ட்டன.

கோளாறு ஏ‌ற்‌ப‌ட்டு‌ள்ள கரு‌விகளை பொ‌றியாள‌ர்க‌ள் ஆ‌ய்வு செ‌ய்து வரு‌கி‌ன்றன‌ர். கு‌றி‌ப்‌பி‌ட்ட கரு‌வியை சாதாரண வெ‌ப்ப ‌நிலை‌க்கு‌க் கொ‌ண்டுவ‌ந்த ‌பிறகே கோளாறை‌ச் ச‌‌ரிசெ‌ய்ய முடியு‌ம் எ‌‌ன்று‌ம் அத‌‌ற்கு சுமா‌ர் 2 மாத‌ங்க‌ள் ஆகலா‌ம் எ‌ன்று‌ம் ‌வி‌ஞ்ஞா‌னிக‌ள் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

மு‌ன்னதாக, ‌பி‌ங் பே‌ங் சோதனை‌யி‌‌ன் முத‌ல்க‌ட்ட‌ம் வெ‌ற்‌றி‌பெ‌ற்றதாக ‌வி‌ஞ்ஞா‌‌னிக‌ள் அ‌றி‌வி‌த்து‌ள்ளது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது. இ‌தி‌ல் கடிகார‌ச் சு‌ற்று‌ப் பாதை‌யி‌ல் புரோ‌ட்டா‌ன்க‌ள் செலு‌த்த‌ப்ப‌ட்டு ஆ‌ய்வு செ‌ய்ய‌ப்ப‌ட்டது.

0 comments:

Post a Comment

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive