தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

பிரதமருக்கு தந்திக‌ள் கு‌வி‌கிறது!

இலங்கையில் தமிழர்கள் மீதான ராணுவத் தாக்குதலை தடுத்து நிறுத்த மத்திய அரசு தலையிடக்கோரி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தந்திகள் அனுப்புமாறு முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி விடுத்த வேண்டு கோளை ஏற்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் தந்திகள் அனுப்பி வருகின்றனர்.

இதை‌த் தொட‌ர்‌‌‌ந்து ‌ஆ‌யிர‌க்கண‌க்கான தி.மு.க.‌வின‌ரு‌ம், பொதும‌க்க‌ளு‌ம் ‌பிரதம‌‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌‌ங்கு‌க்கு நே‌ற்று த‌‌ந்‌திக‌ள் அனு‌ப்‌பின‌ர்.

இ‌ன்று அமை‌ச்ச‌ர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் கடலூரில் உள்ள தந்தி அலுவலகத்தில் 1000 பேர் தந்தி அனுப்பின‌ர்.

இதேபோல அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், எ.வ.வேலு, கீதாஜீவன், தமிழரசி, பொன்முடி, செல்வராஜ், மதிவாணன், ராமச்சந்திரன் உள்பட அனைத்து அமைச்சர்களும் பிரதமருக்கு தந்தி அனுப்பின‌ர்.

விழுப்புரம் மாவட்ட தி.மு.க துணை செயலரும், கண்டமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான செ.புஷ்பராஜ் தலைமையில் 300க்கும் மேற்பட்டவர்கள் ‌பிரதமரு‌க்கு இ‌ன்று தந்தி அனு‌ப்‌பின‌ர்.

கடலூர் நகர தி.மு.க இளைஞரணி சார்பில் அதன் அமைப்பாளர் பழக்கடை ராஜா தலைமையில் 200 பேர் இன்று பிரதமருக்கு தந்தி அனுப்பினார்.

இதேபோ‌ல் ப‌ல்வேறு மாவ‌ட்ட‌‌ங்க‌ளி‌ல் இரு‌ந்து தி.மு.க. நாடாளும‌ன்ற உறு‌‌ப்‌பின‌ர்க‌ள், ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள், மாவட்ட செயல‌ர்கள் இன்று அந்தந்த மாவட்டங்களில் தந்தி அனுப்‌பின‌ர். இவ‌ர்க‌ளுட‌ன் சே‌‌ர்‌ந்து பொது ம‌க்களு‌ம் த‌ந்‌தி அனு‌ப்‌பினா‌ர்க‌ள்.

சென்னையில் அண்ணாசாலை தபால் அலுவலகத்தில் தென்சென்னை மாவட்ட செயலர் ஜெ.அன்பழகன் தலைமையில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் தந்தி அனு‌ப்‌பின‌ர். வடசென்னை மாவட்ட செயலர் பலராமன் தலைமையில் 3,000 தி.மு.க. தொண்டர்கள் தந்தி அனுப்பி உள்ளனர்.

0 comments:

Post a Comment

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive