தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்


இந்தியாவில் சட்ட விரோதமாக சம்பாதிக்கப்பட்டதும், வரி ஏய்ப்பு செய்யப்பட்டு பதுக்கப்பட்டதுமான இந்திய கறுப்புப்பணம் உலக வங்கிகளில் ரகசியமாக வைக்கப்பட்டுள்ள தொகை எவ்வளவு தெரியுமா? சுமார் 64 லட்சம் கோடி. இதயமே நின்றுவிடும்போல் இருக்கிறதா? மேலே படியுங்கள்.

உலகிலேயே கறுப்புப் பணத்திற்குப் பாதுகாப்பான இடம் `சுவிஸ் பேங்க்' என்றழைக்கப்படும் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகள்தான். அந்நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரமும் இந்த வங்கிகளின் சேவைகளைப் பொறுத்தே அமைந்துள்ளது. சுவிஸ்ஸில் உள்ள வங்கிகள் சுவிஸ் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வராது. எனவே, அந்த அரசே நினைத்தாலும் வங்கிக் கணக்குப் பற்றிய எந்த விவரத்தையும் அறிந்து கொள்ள முடியாது. இதுதான் உலகில் உள்ள கறுப்புப் பண முதலைகள் அனைவரும் சுவிஸ் வங்கிகளில் தங்களின் பணத்தைப் பதுக்கி வைப்பதற்கான முக்கிய காரணம். இந்த ரகசிய காப்பு விவகாரங்களை 1934 ஆம் ஆண்டு முதலே ஒரு சட்டமாக்கி பாதுகாத்து வருகிறது சுவிஸ் அரசு.

மேலும், அந்த நாட்டின் சட்டப்படி அதிகப்படியான வருமானத்தை கணக்கில் காட்டாமலிருப்பதோ, சொத்துக்கள் மற்றும் முதலீடுகளை மறைப்பதோ ஒரு குற்றமே இல்லை. எனவேதான் உலக நாடுகளில் சட்ட விரோதமாக சம்பாதிக்கும் பணம், வரிஏய்ப்பு செய்யப்பட்ட பணம் என எல்லாவிதமான கறுப்புப் பணமும் சுவிஸ் வங்கிகளில் குவிந்து வருகின்றது.

இந்த ஆண்டு கடந்த மே மாதம் புதுடெல்லியில் உள்ள இண்டியன் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் பைனான்ஸ் நிறுவனத்தின் பொருளாதாரத்துறை பேராசிரியர் சுமன் அகர்வால் ஒரு ஆய்வறிக்கையைத் தாக்கல் செய்துள்ளார். அதன்படி உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் கறுப்புப் பணமாக பதுக்கப்பட்டுள்ளது மட்டும் 2.5 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள். அதாவது இந்தத் தொகை உலகப் பொருளாதாரத்தில் ஏழு சதவிகிதமாகும். அதில் 1.4 டிரில்லியன் அமெரிக்க டாலர் பணம் இந்தியர்களுக்குச் சொந்தமானது. இந்தத் தொகையின் இந்திய மதிப்பு சுமார் 64 லட்சம் கோடி ரூபாய். இந்தியர்களுக்கு அடுத்த இடத்தில் ரஷ்யர்கள் 470 பில்லியன் அமெரிக்க டாலர்களையும், இங்கிலாந்து 390 பில்லியன் அமெரிக்க டாலர்களையும் கறுப்புப் பணமாக பதுக்கி வைத்துள்ளனர்.

``உலகிலேயே கறுப்புப் பண பதுக்கலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது இந்தியர்கள்தான். இந்தியர்களின் கறுப்புப் பணமான 64 லட்சம் கோடி ரூபாய் என்பது ஒட்டுமொத்த இந்திய பொருளாதாரத்தில் 48 சதவிகிதம் என்கின்றார் இந்திய பொருளாதார நிபுணர் அருண்குமார்.

இந்த 64 லட்சம் கோடி ரூபாய் என்பது உலக நாடுகளில் இந்தியா வாங்கியுள்ள கடன் தொகையைப் போல பதின்மூன்று மடங்கு அதிகம். அதாவது இந்தியாவின் ஒட்டுமொத்த கடனே நாலரை லட்சம் கோடிக்கும் குறைவுதான். நாம் நமது பணத்தை கறுப்புப் பணமாக வங்கிகளில் பதுக்கி வைத்துவிட்டு, உலக நாடுகளிடம் கடன் வாங்கிக் கொண்டிருக்கிறோம்.

இந்தப் பணம் இந்திய அரசியல்வாதிகள், பெரும் தொழிலதிபர்கள், ஸ்டாக் புரோக்கர்கள், கிரிக்கெட் வீரர்கள், சினிமா தயாரிப்பாளர்கள், சினிமா நடிகர்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் கிரிமினல்களுக்குச் சொந்தமானதாக கூறப்படுகிறது.

உலக அளவில் இது போன்ற கறுப்புப் பணம் பெரும்பாலும் சர்வதேச தீவிரவாதம், போதைப் பொருள் தயாரித்தல், கடத்தல், விற்பனை, சர்வதேச அளவில் விபசாரம், புளூபிலிம் தயாரிப்பு, விநியோகம் மற்றும் கடத்தல், சூதாட்டம் ஆகியவைகளுக்குப் பயன்படுத்தப்படுவதாக உலக நாடுகள் கருதுகின்றன. அதிலும் கறுப்புப்பணமே சர்வதேச தீவிரவாதத்திற்குப் பயன்படுத்தப்படுவதாக உலகநாடுகள் பலவும் அஞ்சுகின்றன.

எனவேதான் சுவிஸ் வங்கிகளில் கறுப்புப் பணம் வைத்திருப்போரின் விவரங்களை வெளியிடும்படி அமெரிக்கா, ஐ.நா. சபை உட்பட அனைத்து நாடுகளும் சுவிஸ் அரசை வலியுறுத்தி வந்தன. அதிலும் 09.11.2001-ல் அமெரிக்காவில் ட்வின் டவர் தீவிரவாதக் கும்பலால் உடைக்கப்பட்ட பிறகு இந்த நிர்ப்பந்தம் சுவிஸுக்கு அதிகமாகியது. அதுவரை இந்த வங்கிக் கணக்குகளின் ரகசிய பராமரிப்பைப் பாதுகாக்கவே ஐ.நா. சபையில் உறுப்பினராகாமல் இருந்த சுவிஸ் நாடு 2002-ல் வேறு வழியின்றி ஐ.நா. சபையில் உறுப்பினரானது. மேலும் சுவிஸ் அரசு அந்நாட்டு வங்கிகளுக்கு ஒரு சட்டமும் கொண்டு வந்தது. அதன்படி சுவிஸ் வங்கிகளில் பிரைவேட் அக்கவுண்ட் தொடங்குபவர்களின் விவரங்களை வங்கிகள் முழுமையாகப் பெற்றிருக்க வேண்டும். அதை அரசுக்கோ வேறு யாருக்குமோ தெரிவிக்க வேண்டியது இல்லை என்றாலும், தங்களின் வாடிக்கையாளர்களின் விவரங்களை வங்கிகள் அறிந்திருக்க வேண்டும் என அந்த சட்டம் கூறியது.

இது ஒரு புறமிருக்க, ஆஸ்திரேலியாவுக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையில் உள்ள சிறிய நாடு லீச்டென்ஸ்டீன். இந்நாட்டிலுள்ள எல்.டி.ஜி. வங்கியில் கறுப்புப் பணத்தை முதலீடு செய்துள்ள எண்ணூறு வாடிக்கையாளர்களின் விவரங்களை ஜெர்மனியின் புலனாய்வுத்துறையான பி.என்.டி. அமைப்பு சேகரித்துவிட்டது. இதைத் தொடர்ந்து உலக நாடுகளான அமெரிக்கா, பின்லேண்ட், கனடா, நார்வே, சுவீடன், இத்தாலி, அயர்லாந்து, இங்கிலாந்து உட்பட பல நாடுகள் அந்த எல்.டி.ஜி. வங்கியில் கணக்கு வைத்துள்ள தங்களின் நாட்டைச் சேர்ந்தவர்களின் விவரங்களை வாங்கிவிட்டது. மேலும், அவர்கள் மூலம் அந்தப் பணத்தை மீண்டும் சொந்த நாட்டிற்கே எடுத்து வரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

அதே நேரத்தில் இந்திய அரசு கேட்டுக் கொண்டால், எல்.டி.ஜி. வங்கியில் உள்ள இந்திய கறுப்புப் பண முதலீட்டாளர்களின் பெயர்கள் உட்பட அனைத்து விவரங்களையும் அளிக்கத்தயாராக இருப்பதாக, இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவித்தது. ஆனாலும் இந்திய அரசு இதுவரை அதைக் கண்டு கொள்ளவில்லை.

இது குறித்து `ட்ரான்ஃபரன்ஸி இன்டர்நேஷனல்' என்ற சர்வதேச அமைப்பின் இந்தியத் தலைவரும் முன்னாள் கடற்படைத்தலைவருமான அட்மிரல் தஹிலியானி, ``இந்தப் பணம் இந்திய மக்களுக்குச் சொந்தமானது. அதை வாங்கித் தர இந்தியா தயங்குவதும் மறுப்பதும் ஏன்?'' என்று கேட்டிருக்கிறார்.

இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க செயலாளருமான மோகனகிருஷ்ணன் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடுக்க தயாராகி வருகிறார். ``பொதுமக்களிடம் நேர்மையானவர்களைப்போல் நாடகமாடும் அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்கள், மக்களைச் சுரண்டி சேர்த்த பணம்தான் கறுப்புப் பணம். டெல்லியில் உள்ள உயர்மட்ட அரசியல்வாதிகள் தொடங்கி, தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் வி.ஐ.பி.கள் மற்றும் தொழிலதிபர்களின் போர்வையில் நடமாடுபவர்கள் சிலர் இந்தப் பட்டியலில் உள்ளனர். அந்தப் பட்டியலைத் தர ஜெர்மன் அரசு தயாராக இருந்தும், இந்திய அரசும் நிதித்துறையும் அது குறித்து என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்றறிய உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர ஏற்பாடுகள் செய்து வருகின்றார். நிச்சயம் அந்தப் பட்டியலை வெளியிட வைப்பேன்'' என்றார் நம்பிக்கையோடு..

-புஷ்கின்ராஜ்குமார்

சுவீஸ் வங்கியில் கணக்குத் துவங்குவது எப்படி?

சுவிஸ்வங்கியில் கணக்குத் துவங்க ஐந்தாயிரம் சுவிஸ் பிராஸஸ் பணம் கட்டி யார் வேண்டுமானாலும் சாதாரண கணக்கைத் தொடங்கலாம். இந்தக் கணக்கில் கறுப்புப் பணத்தைப் பதுக்கி வைக்க முடியாது. இதற்கு பிரைவேட் அக்கவுண்ட் எனப்படும் ஸ்பெஷல் அக்கவுண்ட் ஓபன் செய்ய வேண்டும். இந்த பிரைவேட் அக்கவுண்ட் ஓபன் செய்ய முதல் டெபாசிட்டே இந்திய மதிப்பில் ஒன்றரைக் கோடி ரூபாயைக் கட்ட வேண்டும். இதற்கு நாம் சுவிஸ் நாட்டுக்குப் போக வேண்டுமென்பதில்லை. இமெயிலில் நமது விவரங்களை அனுப்பினாலே, அந்த வங்கியின் பிரைவேட் பேங்கர்ஸிலிருந்து ஒரு நபர் நீங்கள் குறிப்பிடும் இடத்திற்கே வந்து, அது சென்னையாக இருந்தாலும் வந்து உங்களின் பிரைவேட் அக்கவுண்டை தொடங்கி வைப்பார். பிரைவேட் அக்கவுண்ட் தொடங்கப்பட்டதும் ஒரு அக்கவுண்ட் நம்பர் கொடுக்கப்படும். அதன்பிறகு எல்லாமே அந்த நம்பர்தான். அதுமட்டுமின்றி, இந்த பிரைவேட் வங்கியின் இன்னொரு ஸ்பெஷாலிட்டி என்னவெனில், வங்கிக் கணக்கைத் தொடங்கியவர் யாரை நாமினியாக குறிப்பிடுகிறாரோ அவரைத் தவிர வேறு யாரும் மனைவி, பிள்ளைகளாக இருந்தாலும் இந்தப் பணத்தை உரிமை கோர முடியாது.

இப்படி பிரைவேட் அக்கவுண்ட் வைத்திருக்கும் நபர் சுவிட்சர்லாந்து நாட்டின் தண்டனைச் சட்டப்படி அந்த நாட்டு நீதிமன்றத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால்தான், அந்நாட்டு அரசே அந்த நபரின் பிரைவேட் அக்கவுண்ட் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள முடியும். இப்படி பல்வேறு இறுக்கமான சிக்கல்கள் இருப்பதால்தான், இந்தியர்களின் இன்வெஸ்ட்மெண்ட் சுவிஸ் வங்கிகளில் குவிந்து கொண்டிருக்கிறது.


தமிழகத் தலைவர்கள் பெயரில் எவ்வளவு?

சுவிஸ் வங்கியில் பிரைவேட் அக்கவுண்ட்டில் பணம் வைத்திருக்கும் இந்தியர்கள் பற்றிய விவரங்கள் இப்போது லேசாக கசியத் தொடங்கியுள்ளன. அதில் டெல்லி முக்கியத்தலைவர்கள் சிலரின் பெயரும் அடக்கம். மும்பை பக்கம் பவர் பாலிடிக்ஸ் செய்பவரும் அதில் இடம் பெற்றிருக்கிறாராம்.

அதேபோல் தமிழகத்தில் முக்கிய தலைவர் ஒருவருக்கு நெருக்கமானவர்களின் உறவினர்கள் பெயரும் அதில் அடங்கியிருக்கிறது. தமிழகத்தின் வாரிசு தலைவர் ஒருவர் இப்போது டில்லியில் மணியடித்துக் கொண்டிருக்கிறார். அவரின் கணக்கில் முப்பத்தாறாயிரம் கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது. கேடி சகோதரர்களின் கணக்கிலும் கணக்கில்லாமல் பணம் கிடக்கிறதாம். அதேபோல் ஃபுரூட் லேங்க்வேஜ் பெயரில் இப்போது புதுக்கணக்கு துவங்கப்பட்டிருக்கிறதாம். அந்தக் கணக்கைத் துவங்கி வைத்து பூஜை போட்டது ராஜாதி ராஜாவாம். தமிழகத்தைச் சேர்ந்தவர்களில் கடைசியாக கணக்குத் துவங்கியுள்ளவர் இந்த ஃப்ரூட் லேங்க்வேஜ்தானாம்.

பசும்பொன்னில் ஜெயலலிதா கார் மீது கல் வீச்சு: போலீசார் தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு

பசும்பொன்னில் நேற்று நடந்த திடீர் கலவரத்தில், ஜெயலலிதா கார் மீது கல் வீசப்பட்டது. ஜெயலலிதா காயமின்றி தப்பினார். போலீசார் நடத்திய தடியடியில் 20 பேர் காயமடைந்தனர்.


ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் 101வது ஜெயந்தி விழாவும், 46வது குரு பூஜை விழா நடந்தது. தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக ஜெயலலிதா, சென்னையிலிருந்து விமானத்தில் நேற்று பிற்பகல் 2.35 மணிக்கு மதுரை வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் பசும்பொன் ஹெலிகாப்டர் தளத்தில் பிற்பகல் 3 மணிக்கு இறங்கினார். அங்கிருந்து காரில் தேவர் நினைவிடம் வந்தார். ஐந்து கார்களில் மத்திய பாதுகாப்பு படை போலீசார் மற்றும் மாநில பாதுகாப்பு போலீசாரும் வந்தனர்.


ஜெயலலிதா கார், பசும்பொன் நினைவிடத்தில் முக்கிய பிரமுகர்கள் நுழையும் வாயிலை நெருங்கியதும், சரமாரியாக கற்கள் வீசப்பட்டன. ஜெயலலிதா காரின் முன்பக்க, பின்பக்க கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. பாதுகாப்பு படை போலீசார் கார்களின் கண்ணாடிகளும் நொறுங்கின. கற்கள் வீசிய கும்பல் மீது தடியடி நடத்த, ஏ.டி.ஜி.பி., ராஜேந்திரன் உத்தரவிட்டார். போலீசார் விரட்டியும் அங்கிருந்து அகலாமல், அதே கும்பல் தொடர்ந்து கற்கள், செருப்புகளை வீசின.


போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை மூன்று முறை வீசினர். இதன் பின், கல் வீசிய கும்பல் சிதறி ஓடியது. கல் வீச்சு தாக்குதலில், பரமக்குடி போக்குவரத்து போலீஸ் முருகேசன், ராமநாதபுரம் ஆயுதப்படை எஸ்.ஐ., அருளானந்தம், திண்டுக்கல் போக்குவரத்து போலீஸ் ராஜேந்திரன் மற்றும் காரைக்குடி அண்ணா நகரைச் சேர்ந்த லட்சுமி காயமடைந்தனர். இவர்களுக்கு தலையில் காயம் ஏற்பட்டதால், தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவசர விபத்து மருத்துவச் சிகிச்சை வாகனத்தில் முதலுதவி அளிக்கப்பட்டது.


போலீசார் நடத்திய தடியடியில் 20 பேர் காயமடைந்தனர். பசும்பொன் தேவர் நினைவிட நுழைவாயில் வரை எங்கு பார்த்தாலும், செருப்புகளும், கற்களும் சிதறிக் கிடந்தன. இதற்கிடையில், ஜெயலலிதா தனது தோழி சசிகலாவுடன், தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி விட்டு, அதே பகுதியில் அ.தி.மு.க., ஏற்பாடு செய்திருந்த அன்னதானத்தையும் துவக்கி வைத்தார். பின்னர், மதுரை வழியாக சென்னை புறப்பட்டுச் சென்றார். இச்சம்பவத்துக்கு பின், தேவர் சமாதி நுழைவாயில் மற்றும் பிரதான நுழைவாயில் கதவுகள், 30 நிமிடம் மூடப்பட்டன. அமைதி திரும்பிய பின், மீண்டும் அஞ்சலி செலுத்துவதற்காக திறந்து விடப்பட்டன.


மிரட்டல்களுக்கு பயப்பட மாட்டேன் ஜெயலலிதா பேட்டி: "மிரட்டல்களுக்கு பயப்பட மாட்டேன்' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா கூறினார். ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின், நிருபர்களிடம் ஜெயலலிதா கூறியதாவது: பசும்பொன்னில் நடந்த தாக்குதல், தி.மு.க.,வினரால் திட்டமிட்டு நடத்தப்பட்டது. தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு கெட்டுவிட்டது என்று கூறுவதைவிட, சட்டம்-ஒழுங்கு சுத்தமாக இல்லை என்று கூறவேண்டும். இந்த தாக்குதல் அற்பத்தனமானது. தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி மற்றும் தேசவிரோத ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த சம்பவம் உதாரணமாக அமைந்துள்ளது.


எனக்கு நேற்றுதான் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. எனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்று மத்திய புலனாய்வுத் துறையினர், மாநில அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர். இருப்பினும் எனக்கு எந்த பாதுகாப்பும் அளிக்காமல் தாக்குதல் நடத்துவதற்கு போலீசார் வழிவகை செய்து கொடுத்துள்ளனர். இன்று பசும்பொன் கிராமத்தில் கூடியிருப்பவர்கள் அனைவரும் என்னுடைய மக்கள். என்னை பார்ப்பதற்காக வந்தவர்கள்.


இந்த கூட்டத்தை பார்த்து சகித்து கொள்ள முடியாத சிலர், திட்டமிட்டு தாக்குதலை நடத்தியுள்ளனர். எனக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்பது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. அந்த வழக்கில், இன்று நடந்த தாக்குதல் சம்பவத்தையும் இணைத்து கொள்ள முடிவு செய்துள்ளேன். கடந்த 17 ஆண்டுகளாக நான் மிரட்டல்களை சந்தித்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இதுபோன்ற மிரட்டல்களுக்கு பயப்பட மாட்டேன். இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.


தனி விமானம் மூலம் நேற்று மாலை 5.50 மணிக்கு சென்னை திரும்பிய ஜெயலலிதா விமான நிலையத்தில் அளித்த பேட்டி:


பசும்பொன் தேவர் குருபூஜையில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவருமே என் ஆதரவாளர்கள். என்மீது அக்கறை கொண்டவர்கள். என்னை பார்க்க வேண்டும் என்பதற்காக அங்கு உற்சாகமாக கூடியிருந்தனர். அவர்கள் மத்தியில் இருந்த நான்கு விஷமிகள் கற்களை வீசி வன்முறை செயல்களில் ஈடுபட்டனர். இதில் என் கார் கண்ணாடி உடைந்தது. எனக்கும் காயம் ஏற்பட்டது.


என் காருக்கு பின்னால் நின்று கொண்டிருந்த கான்வாயில் இருந்த கார்களும் சேதமடைந்தன. இந்த சம்பவம் நடக்கும் போது போலீசாரும் இருந்தனர். வன்முறையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய அவர்கள், கைகளை கட்டிக் கொண்டு நடவடிக்கை எடுக்காமல் மவுனமாக இருந்தனர். பெருகிவரும் எனது ஆதரவை, இந்த சம்பவத்தால் தடுத்து நிறுத்த முடியாது. இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.


புறப்பாடு தாமதம்: விமான படிக்கட்டுக்களில் ஏறும் போது கால் தவறியதால் ஜெயலலிதாவின் மதுரை புறப்பாடு தாமதமானது. மாற்று ஏற்பாட்டிற்கு பின், அவர் நேற்று மதியம் தனி விமானம் மூலம் மதுரை சென்றார். ஜெயலலிதா நேற்று காலை 10.55 மணியளவில் சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். மதுரை செல்வதற்காக "இன்டர்நேஷனல் ஏர்கிராப்ட் பாம்பே' என்ற தனியார் நிறுவனத்தின் விமானம் வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்தது.


அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருந்த நிலையில், விமானத்தில் ஏறுவதற்காக ஜெயலலிதா வந்தார். அவர் உள்ளே ஏறுவதற்கு வசதியாக படிக்கட்டுக்கள் பொருத்தப்பட்டிருந்தன. படிகளின் அகலம் மிகவும் சிறியதாக இருந்ததால் அதில் ஜெயலலிதா ஏற முயன்ற போது கால் தவறியது. இதையடுத்து அவர் விமானத்தில் ஏறாமல், கார் மூலம் 11.10 மணிக்கு வீடு திரும்பினார். இதற்கிடையில் அகலமான படிக்கட்டுக்கள் விமானத்தில் பொறுத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து மதியம் 1.50 மணிக்கு ஜெயலலிதா மீண்டும் விமான நிலையத்திற்கு வந்தார். பின், 1.55 மணிக்கு தனி விமானம் மூலம் மதுரை புறப்பட்டுச் சென்றார். மாலையில் அதே விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

ரஜினிக்கு கவுரவ டாக்டர் பட்டம் நிராகரிப்பு

சர்ச்சை கிளம்பியதால், நடிகர் ரஜினிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க காரைக்குடி அழகப்பா பல்கலை மறுத்துவிட்டது. காரைக்குடி அழகப்பா பல்கலையில், டிச., 24ம் தேதி, 21வது பட்டமளிப்பு விழா, கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா தலைமையில் நடைபெற உள்ளது. இவ்விழாவில் நடிகர் ரஜினிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குமாறு மகாராஷ்டிர ரசிகர் மன்றத்தலைவர் ஆதிமூலம், பதிவாளருக்கு கோரிக்கை மனு கொடுத்தார்.


ரஜினிக்கு பட்டம் நிராகரிப்பு: பதிவாளர் இ.இளமதியன் கேட்டுக் கொண்டதால், ரஜினியின் பயோடேட்டாவை, பல்கலைக்கு அனுப்பினார் ஆதிமூலம். இது குறித்து சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு எடுக்க, பல்கலை நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. ரஜினி குறித்து திடீர் சர்ச்சை எழுந்ததால், அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் திட்டத்தை, பல்கலை நிராகரித்து விட்டது. புதிய நடிகர் ஒருவர் தரப்பிலிருந்து எதிர்ப்பு தெரிவித்ததால் பல்கலை இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது.


பல்கலை பதிவாளர் வெளியிட்ட அறிக்கையில், "21வது பட்டமளிப்பு விழாவில் யாருக்கும் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்போவதில்லை' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


நமது நிருபரிடம் அவர் கூறுகையில், "நடிகர் ரஜினிக்கு கவுரவ பட்டம் வழங்கக் கோரி மனுவுக்கு மதிப்பளித்து பயோடேட்டா கேட்டோம். சிண்டிகேட் ஒப்புதலுக்கு கொண்டு செல்வதற்கு முன்பாகவே இது சர்ச்சைக்குரிய விஷயம் என்பதால், அத்திட்டத்தை நிராகரித்து விட்டோம். மற்றபடி புதிய நடிகர் தரப்பில் யாரும் எங்களிடம் பேசவில்லை' என்றார்.

ஜெயலலிதாவுக்கு விடுதலைப்புலிகள் மிரட்டல்!: தாய்லாந்தில் இருந்து வந்தது எச்சரிக்கை

"பெனசிர் புட்டோ கதி ஜெயலலிதாவுக்கு ஏற்படும்' என, விடுதலைப்புலிகள் மிரட்டல் விடுத்துள்ளதாக ஐகோர்ட் நீதிபதி மற்றும் போலீசிடம் அ.தி.மு.க., புகார் அளித்துள்ளது.


தனக்கு முழுமையான, "இசட் பிளஸ்' பாதுகாப்பு வழங்க உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில், ஜெயலலிதா மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதி ஜெய்சந்திரன், "எஸ்.பி.,க்குக் குறையாத அதிகாரியை நியமிக்க வேண்டும். அவர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கருத்து பெற வேண்டும். பின், அறிக்கையை பாதுகாப்பு ஆய்வுக் குழுவிடம் அளிக்க வேண்டும். சட்டப்படி இக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என உத்தரவிட்டிருந்தார்.


நேற்று பிற்பகலில் சென்னை ஐகோர்ட் நீதிபதி ஜெய்சந்திரன் சேம்பருக்கு அ.தி.மு.க., வக்கீல்கள் நவநீதகிருஷ்ணன், எல்.பி.சண்முகசுந்தரம், வெங்கடேஷ், கந்தசாமி உள்ளிட்டோர் சென்று, ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்திருப்பதாக தெரிவித்தனர். கடிதத்தின் நகல்களை டி.ஜி.பி., உள்துறைச் செயலருக்கு அனுப்ப வக்கீல்களிடம் நீதிபதி ஜெய்சந்திரன் கூறினார். சிறப்பு அரசு பிளீடருக்கும் நகலை வழங்கும்படி கூறினார். இதுகுறித்து மனு தாக்கல் செய்யும்பட்சத்தில், இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக வக்கீல்களிடம் நீதிபதி தெரிவித்துள்ளார்.


வக்கீல்கள் நவநீதகிருஷ்ணன், சண்முகசுந்தரம் கூறும்போது, "உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்து இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கடிதம் அனுப்பியவர் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். ஜெயலலிதாவுக்குப் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். ஐகோர்ட் உத்தரவுப்படி இன்னும் பாதுகாப்புக் குழு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை' என்றனர். ஐகோர்ட் உத்தரவுப்படி உள்துறைச் செயலர், டி.ஜி.பி., போலீஸ் கமிஷனர் ஆகியோரை, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சந்தித்தார்.


அவர்களிடம் அளித்த மனுவில், "எங்கள் கட்சித் தலைவருக்கு அனுப்பப்பட்ட மிரட்டல் கடிதத்தின் நகல் இணைக்கப்பட்டுள்ளது. பசும்பொன் கிராமத்துக்குச் செல்ல இருக்கும் நிலையில், இதுபோன்ற கடிதம் வந்துள்ளது. இதை அனுப்பியவர் யார், பின்னணியில் யார் உள்ளனர் என்பதைக் கண்டறிந்து உரியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயலலிதாவுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்' எனக் கூறியுள்ளார்.


"இலங்கைத் தமிழர் பிரச்னைக்காகப் போராடும் விடுதலைப்புலிகள் பிரச்னையில் தலையிட வேண்டாம்' என இறுதி எச்சரிக்கை விடுப்பதாக அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. "உலகத் தமிழ் இனப் பாதுகாப்புக் கழகம், பேங்காக் கிளை, தாய்லாந்து; தலைமையகம் - ராபர்ட் ஸ்டிரீட், குயிஸ் ஹவுஸ், கனடா' என்ற முகவரி அந்தக் கடிதத்தில் உள்ளது. வெ.தமிழ்மைந்தன், ஆசிய திட்ட அலுவலர் என கையெழுத்திடப்பட்டுள்ளது.


மொத்தம் நான்கு பக்கம் உள்ள அந்தக் கடிதத்தில், "புலிகளைப் பற்றி பொய் பிரசாரம் செய்ய வேண்டாம். தேவையில்லாமல் தலையிட்டால் அதன் விளைவு மிகப் பயங்கரமாக இருக்கும். பாகிஸ்தானில் பெனசிர் புட்டோவுக்கு ஏற்பட்ட கதி ஏற்படும். புலிகளை யார் அழிக்க நினைத்தாலும், எதிராக செயல்பட்டாலும் அவர்களை அழிக்கத் தயங்க மாட்டோம்' எனக் கூறப்பட்டுள்ளது.

600 யூனிட்டுக்கு மேல் மின் கட்டணம் 50 சதவீதம்! அதிகரிப்பு: மின்சார சிக்கனத்துக்கு அரசு அதிரடி கட்டுப்பாட

மின்சாரம் பயன்படுத்துவோருக்கு புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. வீட்டு உபயோகத்துக்கு இரு மாதங்களுக்கு, 600 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்தினால், 50 சதவீதம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நவம்பர் 1ம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது.தமிழகத்தில் தற்போது மின்சாரப் பற்றாக்குறை கடுமையாக உள்ளது. பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களைக் குறைக்க, குறிப்பாக வீடுகளுக்கு மாலை மற்றும் இரவு நேரங்களில் மின்சாரம் வழங்கவும், விவசாயிகளது தேவைக்கேற்ப மின்சாரம் வழங்கவும், தமிழக அரசு மின் பகிர்மான மற்றும் பயன்பாட்டுக் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.நவம்பர் 1ம் தேதியில் இருந்து நடைமுறைப்படுத்தப்படும் இந்தக் கட்டுப்பாடுகள் வருமாறு:


* கிராமங்களில் தினமும் 10 மணி நேரம் மும்முனை மின்சாரமும், 14 மணி நேரம் ஒரு முனை மின்சாரமும் வழங்கப்படும். இதனால், விவசாயிகள் பகலில் ஆறு மணி நேரமும், இரவில் நான்கு மணி நேரமும் ஆக மொத்தம் 10 மணி நேரம் அவர்களது பம்புசெட்டுகளை இயக்கலாம். ஒரு முனை மின்சாரம் வழங்கும்போது விவசாயத்துக்கு அதைப் பயன்படுத்தக் கூடாது.


* நகர்ப்புறப் பகுதிகளில் வீட்டு இணைப்புகளுக்கு தினமும் குறைந்தபட்சம், 20 மணி நேரம் மின்சாரம் வழங்குவது உறுதி செய்யப்படும்.


* வீட்டு இணைப்புகளில் இரு மாதங்களுக்கு, 600 யூனிட்களுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துவோர், அவர்களது மின் தேவையில் 20 சதவீதம் குறைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு மேலாக பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு, கூடுதலாக 50 சதவீத கட்டணம் வசூலிக்கப்படும்.


* உயர் அழுத்த தொழிற்சாலைகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு கேட்பு (டிமாண்ட்) மற்றும் பயனீட்டில் 40 சதவீதம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும். கேட்புக் கட்டணம் அதற்கேற்ப குறைக்கப்படும்.


* எல்.டி., - சி.டி., இணைப்புகள் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு பயனீட்டில் 20 சதவீதம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும்.


* தாழ்வழுத்த (எல்.டி.,) மின் இணைப்புகள் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு இரண்டு மாதங்களில், 2,000 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தும் பயனீட்டாளர்கள், மின் தேவையை 20 சதவீதம் குறைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு மேலாக பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு, கூடுதலாக 50 சதவீத கட்டணம் வசூலிக்கப்படும்.


* மாலை நேரங்களில் (6 முதல் 10 மணி வரை) அனைத்து உயரழுத்த மற்றும் எல்.டி.,- சி.டி., மின் இணைப்பு உள்ள தொழிற்சாலைகளும், வணிக வளாகங்களும் மின் வாரியத்திடம் இருந்து மின்சாரம் பெறக்கூடாது. மீறினால் இணைப்பு துண்டிக்கப்படும்.


* கோவில் திருவிழாக்கள் தவிர தனியார் நடத்தும் விழாக்களுக்கு ஆடம்பர விளக்குகள் பயன்படுத்தும்போது மின் வாரியம் மின்சாரம் வழங்காது.


* அனைத்து மருத்துவமனைகள், மத்திய மற்றும் மாநில அரசு கட்டடங்கள், வெளிநாட்டுத் தூதரகங்கள், ரயில்வே இணைப்புகள், செய்தி மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்கள், தொலைத் தொடர்பு இணைப்பகங்கள், கல்வி நிறுவனங்கள், உரத் தொழிற்சாலைகள், பால் குளிர்படுத்தும் நிறுவனங்கள் ஆகிய அத்தியாவசிய மின் இணைப்புகளுக்கு, மின் வெட்டிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.


இந்தக் கட்டுப்பாட்டு முறை டிசம்பர் இறுதியில் மீண்டும் பரிசீலிக்கப்பட்டு, தேவை இருப்பின் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.


புதிய மின் கட்டண விகிதம் எப்படி?: மின் வினியோகத்தில் புதிய கட்டுப்பாட்டு முறை குறித்து தமிழக அரசின் அறிவிப்பு நேற்று வெளியானது. "வீட்டு இணைப்புகளில் இரு மாதங்களுக்கு, 600 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துவோர் அவர்களது மின் தேவையில் 20 சதவீதம் அளவிற்கு பயனீட்டை குறைத்துக்கொள்ள வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட அளவீட்டிற்கும் மேலாக பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு, கூடுதலாக 50 சதவீத கட்டணம் வசூலிக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல், "தாழ்வழுத்த (எல்.டி.,) மின் இணைப்புகள் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு இரண்டு மாதங்களில், 2,000 யூனிட்டிற்கு மேல் பயன்படுத்தும் பயனீட்டாளர்கள் அவர்களது மின் தேவையில் 20 சதவீதம் அளவிற்கு பயனீட்டை குறைத்துக்கொள்ள வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட அளவீட்டிற்கும் மேலாக பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு, கூடுதலாக 50 சதவீத கட்டணம் வசூலிக்கப்படும்' என அறிவிக்கப்பட்டுள்ளது.


குழப்பம் ஏற்பட்டது: தமிழக அரசின் அறிவிப்பில், வீட்டு இணைப்பில் இரு மாதங்களுக்கு, 600 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்கள், 50 சதவீத கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டுமா அல்லது 20 சதவீதம் கழித்த பின் வரும் 480 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோர் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டுமா என்ற குழப்பம் ஏற்பட்டது.இதேபோல், தொழிற்சாலைகளுக்கான கூடுதல் கட்டண அறிவிப்பிலும் குழப்பம் ஏற்பட்டது. இதுகுறித்து மின்வாரிய உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, "தமிழக அரசின் அறிவிப்பு குறித்து எங்களுக்கு தகவல் ஏதும் வரவில்லை. அரசின் அறிவிப்பு எங்களுக்கு முறையாக வந்தவுடன் அதை ஆணையம் பரிசீலித்து, அதன் பின் எத்தனை யூனிட்டுக்கு மேல் போனால் அதிக கட்டணம் வசூலிப்போம் என்பது குறித்து முடிவு செய்து அறிவிப்போம்.


அதிர்ச்சி அளிக்கிறது: "தற்போதைய நிலையில் அரசு அறிக்கையில் என்ன சொல்லியிருக்கிறதோ அதை அப்படியே போட்டுவிடுங்கள். நவம்பர் 1ம் தேதி தான் இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வரும் என்பதால், அடுத்து வரும் 10 நாட்களுக்குள் நாங்கள் பேசி முடிவு எடுத்துவிடுவோம்' என்ற குழப்பமான பதிலைத் தெரிவித்தனர்.மின் வினியோகம் தான் முறையாக இல்லையென்றால், கட்டணம் குறித்த அறிவிப்பைக் கூட தெளிவாக வெளியிடாமல் மக்களைக் குழப்பும் வகையில் அதிகாரிகள் பதில் தெரிவித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.


அரசின் அறிக்கை குறித்து மின்துறை அமைச்சக வட்டாரங்களிடம் கேட்டபோது, "வீட்டு இணைப்புகளில் இரு மாதங்களுக்கு, 480 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்களிடம் இருந்து 50 சதவீத கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். அதே போல், தொழிற்சாலைகள், 1,600 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தும் போது 50 சதவீத கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்' என்று உறுதிப்படுத்தினர்.

எலி கறி சாப்பிடும் விவசாய கூலிகள் : வேலை கிடைக்காததால் பரிதாபம்

ராமநாதபுரம் அருகே பள்ளவச்சேரி கிராமத்தினர், விவசாயக் கூலி வேலைக்கு செல்ல முடியாததால், எலிகளை வேட்டையாடி சாப்பிடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் பலத்த மழையால், விளை நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், உழவு பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. விதைநெல் அழுகி, விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. விவசாயக் கூலி வேலைக்கு செல்வோர் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர்.அதேபோல், உப்பள பணியாளர்களும் மழையினால் சோர்வடைந்துள்ளனர்.


வயல்களில் திரியும் எலிகளை : இவர்களில் பலர், அன்றாட சாப்பாட்டிற்கு வழியில்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் அருகே, பள்ளவச்சேரி கிராமத்தில், 500 பேர் வசிக்கின்றனர். இவர்கள் அனைவரும் விவசாயக் கூலி வேலைக்கு செல்பவர்கள். மழையால் வேலை இழந்துள்ள இவர்கள், வயல்களில் திரியும் எலிகளை வேட்டையாடி சாப்பிடத் துவங்கியுள்ளனர்.


பகிர்ந்து உண்டேன்' : கிராமத்தைச் சேர்ந்த ராக்கம்மாள்(65) கூறுகையில், "வேலை இல்லாமல் முடங்கிக் கிடப்பதால், அரிசி வாங்கக்கூட காசு இல்லை. எனவே, வயலில் எலிகளை பிடித்து சமைத்து சாப்பிடுகிறோம்' என்றார்.பள்ளி மாணவன் முருகன் கூறுகையில், "மழை நேரம் என்பதால் வயல்வெளிகளில் அதிகமான எலிகள் நடமாடுகின்றன.


ஒரு நாள் வேட்டையாடியதில் 17 எலிகள் எனக்கு கிடைத்தன; அதை, எனது நண்பர்களோடு பகிர்ந்து உண்டேன்' என்றார்.

நிலவில் முத்திரை பதிக்கிறது மூவர்ணக்கொடி

சந்திராயன்-1 செயற்கைக்கோளில் உள்ள "மூன் இம்பாக்ட் புரோப்' கருவி, நவம்பர் இரண்டாவது வாரத்தில் நிலவில் மோதி இறங்கவுள்ளது. இந்திய மூவர்ணக்கொடி பொறிக்கப்பட்ட இக்கருவி, நிலவை அடைந்த ஆறாவது நாடு என்ற பெருமையை இந்தியாவிற்குப் பெற்றுத்தரவுள்ளது.ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி.,-சி11 ராக்கெட் மூலம் சந்திராயன்-1 செயற்கைக்கோள், வரும் 22ம் தேதி காலை 6.20 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. ஏவப்பட்ட 20வது நிமிடத்தில், சந்திராயன்-1 செயற்கைக்கோள் பூமியின் சுற்றுப்பாதையை அடையும். அங்கிருந்து படிப்படியாக, மூன்று லட்சத்து 84 ஆயிரம் கி.மீ., தொலைவில் உள்ள நிலவின் சுற்றுப்பாதையை அடையவுள்ளது.


3டி புகைப்படம் எடுத்தல் : நிலவின் சுற்றுப்பாதையை அடைந்த பிறகு, சந்திராயன்-1 செயற்கைக்கோள் நிலவிலிருந்து 100 கி.மீ., தொலைவில் நிலவை இரண்டு ஆண்டுகள் சுற்றிவந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது. இதற்காக சந்திராயன்-1 செயற்கைக்கோளில் மொத்தம் 11 கருவிகள் உள்ளன.இக்கருவிகள் நிலவில் தாதுக்கள், வாயுக்கள், தண்ணீர், பனிக்கட்டி இருப்பது குறித்த ஆய்வு மற்றும் நிலவை 3டி புகைப்படம் எடுத்தல் பணிகளில் ஈடுபடுகின்றன. சந்திராயன்-1 செயற்கைக்கோளில், இந்தியாவுக்குச் சொந்தமான ஐந்து கருவிகள் உள்ளன.இந்திய மூவர்ணக்கொடி பொறிக்கப்பட்ட மூன் இம்பாக்ட் புரோப் (எம்.ஐ.பி.,) கருவி, நவம்பர் இரண்டாவது வாரத்தில் (9ம் தேதி என எதிர்பார்க்கப்படுகிறது)


அமெரிக்கா, ரஷ்யா : சந்திராயன்-1 செயற்கைக்கோளிலிருந்து பிரிக்கப்படுகிறது. எம்.ஐ.பி., கருவியில் உள்ள ராக்கெட்டால் இக்கருவியை நிலவை நோக்கி செலுத்தப்பட்டு, நிலவில் மோதி இறங்கவுள்ளது.இதன் மூலம், எதிர்காலத்தில் நிலவில் மனிதன் பாதுகாப்பாக இறங்குவதற்கான தொழில்நுட்பத்தை, "இஸ்ரோ' சோதனை செய்யவுள்ளது. இதன்மூலம் இந்திய மூவர்ணக்கொடி, நிலவில் இடம்பெறவுள்ளது.அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பான ஐரோப்பிய விண்வெளிக் கழகம், ஜப்பான், சீனா ஆகிய ஐந்து நாடுகள், இதற்கு முன் நிலவிற்கு செயற்கைக்கோள் அனுப்பியிருக்கின்றன. இந்தப் பட்டியலில் இந்தியா ஆறாவது நாடாக இணையவுள்ளது.


சந்திராயன்-1 செயற்கைக்கோளிலிருந்து வரும் தகவல்களைப் பெற பெங்களூரிலிருந்து 40 கி.மீ., தொலைவில் உள்ள பைலாலு கிராமத்தில், "இந்தியன் டீப் சயின்ஸ் நெட்வொர்க்' மையம் 100 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டுள்ளது. சந்திராயன்-1 செயற்கைக்கோளிலிருந்து பெறப்படும் தகவல்கள் பல்வேறு நாடுகளிடையே பகிர்ந்து கொள்ளப்படவுள்ளன.சந்திராயன்-1 செயற்கைக்கோள், பி.எஸ்.எல்.வி.,-சி11 ராக்கெட்டில் பொருத்தப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இறுதிக்கட்ட சோதனைகள் நடந்து வருகின்றன. ராக்கெட் கட்டுமான மையத்திலிருந்து, செயற்கைக்கோள் பொருத்தப்பட்ட ராக்கெட் நேற்று இரண்டாவது ஏவுதளத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இந்தியக் கோரிக்கையை ஏற்றது இலங்கை

இந்தியா விடுத்த கோரிக்கையை ஏற்று, உயர் மட்டக்குழுவை அனுப்ப இலங்கை அரசு முன்வந்திருக்கிறது. இக்குழு விரைவில் இந்தியா வந்து அங்குள்ள நிலையை நேரடியாக அரசிடம் விளக்கும்.கடந்த இரு நாட்களாக இலங்கை அரசிடம் இந்தியா வைத்த கோரிக்கைகளை அடுத்து இந்த நடவடிக்கைக்கு அதிபர் ராஜபக்சே உத்தரவிட்டிருக்கிறார்.


இலங்கையில் உள்ள மனிதாபிமானப் பிரச்னைகளை அந்த அரசு நியாயமாக அணுகுகிறதா என்று கவனிக்க வேண்டும் என டில்லியில் உள்ள இலங்கை ஐ-கமிஷனர் ஜெயசிங்கேயை அழைத்து விளக்கம் கேட்டதையடுத்து இந்த நடவடிக்கை அமைந்திருக்கிறது. இதுகுறித்து இலங்கை மீடியாத்துறை அமைச்சர் அபயவர்த்தனே கூறுகையில், "ஐந்து எம்.பி.,க்களும் இரு உயர் அதிகாரிகளும் கொண்ட உயர்மட்டக்குழு இந்தியாவுக்குச் சென்று அங்கு நிலைமையை விளக்க வேண்டும் என்று அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார். ஆகவே, இந்தக் குழுவை அமைத்து விரைவில் இந்தியாவுக்குச் சென்று அவர்கள் கவலைப்படும் விஷயங்கள் குறித்து விளக்கம் தரப்படும்' என்றார். அதேசமயம், "அப்பாவித் தமிழர்கள் போரில் கொல்லப்படவில்லை; மாறாக, தமிழர்களுக்கும் புலிகளுக்கும் கருத்து வேறுபாடு இருப்பது அதிகம்' என்றும் அபயவர்த்தனே கூறினார். தவிரவும், இலங்கையில் கடும் சண்டை நடந்து வரும் நிலையில், அகதிகளாக உள்ளவர்களுக்கு உதவுவதற்காக ஐ.நா., சார்பில் அனுப்பப்பட்ட உணவுப் பொருட்கள் நேற்று வவுனியா சென்றடைந்தன. அங்கு உணவுப் பொருட்கள் வினனியோகமும் துவங்கியது.இலங்கையில் புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. புலிகளின் கட்டுப்பாட்டில் கிளிநொச்சியைப் பிடிப்பதற்காக ராணுவத்தினர் தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றனர். இரு தரப்பினருக்கும் இடையே நடக்கும் இந்தச் சண்டையால், 2.30 லட்சம் பேர் அகதிகள் போல உள்ளனர்.


இவர்களுக்கு உதவுவதற்காக ஐ.நா., சார்பில் உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால், கடும் சண்டை காரணமாக உணவுப் பொருட்களுடன் சென்ற லாரிகள் நேற்று முன்தினம் திரும்பி வந்தன. இந்நிலையில், நேற்று 50 லாரிகள், தலைநகர் கொழும்பில் இருந்து 250 கி.மீ., தொலைவில் வடகிழக்குப் பகுதிக்கு 750 டன் உணவுப் பொருட்களுடன் சென்றன. அவை எந்த விதமான பாதிப்பும் இல்லாமல் சென்றடைந்ததாக, ஐ.நா., தகவல் தொடர்பாளர் கூறியுள்ளார். போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உணவுப் பொருட்கள் வினியோகம் துவங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மழை !!!

தண்ணி பார்ட்டி !!

உலகில் என்னை மாதிரி தண்ணியடிக்காத தறுதலைகளுக்கெல்லாம் கஷ்டமான காரியங்களில் ஒன்று தண்ணிப் பார்டிக்குப் போவது. இதில் சிகரெட் பிடிக்கும் பழக்கம் இல்லையென்றால் இன்னும் விசேஷம். தீர்த்தம் சாப்பிடும் மஹானுபாவர்களின் குஷியை இந்த மாதிரி பார்ட்டிக்குப் போகும் போது பார்க்கவேண்டுமே. சும்மா தேமேன்னு இருந்தாலும் விடமாட்டார்கள். "சும்மா வாடா, அங்க அவனவன் வாயில ஃபனல வச்சு ஊத்திக்கிறத பாரு கண்கொள்ளாக் காட்சியா இருக்கும்" என்று சும்மா இருக்க விடமாட்டான். முதலில் ரெண்டு மூனு தரம் இப்படி ஏமாந்து போயிருக்கிறேன். வாயில் ஃபனலை வைத்து கொண்டு ஊத்திக் கொள்வதெல்லாம் உண்மை தான். ஆனால் அன்ட்ராயர் அவிழ்ந்தது கூடத் தெரியாமல் ஊத்திக் கொள்ளுவதெல்லாம் எனக்கு என்னமோ கண்கொள்ளாக் காட்சியாகப் படவில்லை. ஒழுங்காய் பேசிக் கொண்டிருப்பவர்களெல்லாம் ரெண்டு ரவுண்டு உள்ளே போனவுடன் கார்ல் மார்க்ஸாகி விடுவார்கள். வாழ்க்கை என்றால் என்ன, இன்பம் என்றால் என்ன துன்பம் என்றால் என்ன என்று தத்துவங்கள் எடுத்து விடுவார்கள் பாருங்கள்...காதில் ரத்தம் வந்துவிடும். சிலர் வள்ளலார் மாதிரி கருணைக் கடலாகி விடுவார்கள். உலகில் ஏழைகளே இருக்கக் கூடாதுடா என்று ஆரம்பித்து கருணை உணர்ச்சி பொங்கும். ஒரு நண்பன் தண்ணியடித்துவிட்டு சிக்கனை மென்று கொண்டே எறும்புகள் வாழ்கையில் எப்பிடி கஷ்டப்படுகின்றன, மழை பெய்தால் எவ்வளவு கஷ்டம் அதற்கு உடம்பு சரியில்லாமல் போனாலும் யார் உதவுவார்கள் என்றெல்லாம் ஃபீல் பண்ணி குலுங்கிக் குலுங்கி அழுதிருக்கிறான். நமக்கு சிரிப்பு வந்தாலும் சிரிக்க முடியாது. மற்ற தண்ணியடித்த தொண்டரடிப் பொடியாழ்வார்கள் கோவித்துக் கொண்டுவிடுவார்கள். அதற்கப்புறம் அடுத்த நாள் இதைப் பற்றி சொல்லிச் சொல்லி நான் ஓட்டின ஓட்டில் அவன் ஓடியே போய்விட்டான்.

கூட்டமாய் போனாலும் பரவாயில்லை. தண்ணியடிக்கும் நண்பனுக்கு கம்பெனி குடுக்க தனியாய் போய் மாட்டிக் கொண்டால் அவ்வளவு தான். அதிலும் லவுஸ் விடும் நண்பனாய் இருந்தால் கிழிஞ்சுது கிருஷ்ணகிரி. விட்டத்தைப் பார்த்துக் கொண்டு சிகிரெட் புகையை ஊதிக்கொண்டு "அன்னிக்கு அவ என்னை ஒரு பார்வை பார்த்தா பாரு" என்று ஃபீலிங் காட்டுவார்கள் பாருங்கள், சினிமாவில் ஒரு தாடி வைத்த தாத்தா கம்பளி போர்வையை போர்ர்திக் கொண்டு பின்னால் புகை வர கைய்யில் ஒரு வட்டமான கொட்டைத் தட்டிக் கொண்டு ஒருத்தருமே இல்லாத ஊரில் தெருத் தெருவாக ஒரு நாயைக் கூட்டிக் கொண்டு போய் யாருக்காகவோ பாடுவாரே அதெல்லாம் தோத்துவிடும். பீலிங் படலத்திற்கு பிறகு வாயிலெடுத்து வழித்துக் கொட்டும் வைபவமும் இருக்கும். என்னைப் பொறுத்த வரை தண்ணியடிப்பவர்களுக்கு கோபம், தாபம், பாசம்,சுயமரியாதை, உலக அக்கறை என்று எல்லா உணர்ச்சிகளுமே மேலோங்கி இருக்கும். சொந்தக்கார வட்டத்தில் இரண்டு பேர் தண்ணியடித்து விட்டு ராத்திரி டி.வி.யெஸ் 50ல் வந்துகொண்டிருக்க, ஒரு (உண்மையான) கழுதை குறுக்கே ஓடி வந்து வண்டியிலிருந்து விழுந்துவிட்டார்கள். ஒரு நண்பனுக்கு கொஞ்சம் அடிபட்டு முட்டியில் ரத்தம் வந்து விட்டது. அதைப் பார்த்த இன்னொரு நண்பனுக்கு கோபம் தலைக்கேறி பழிவாங்கும் உணர்ச்சி மேலோங்க கழுதையை அடிக்க ரோடு முழுக்க துரத்திய கதை இன்னமும் குடும்பத்தில் பிரசித்தம். " அது எதுக்குடா கழுதைய அந்த துரத்து துரத்தின" என்று ஒவ்வொரு தரமும் என் வீட்டுக்காரி என்முன்னால் அவர் மானத்தை வாங்குவார்.சில கேஸ்கள் நேர் உல்டா. ரெண்டு ரவுண்டுக்கு அப்புறம் வாயே திறக்க மாட்டார்கள். கடப்பாறையை போட்டு நிமிண்டினால் தான் ஒரு வார்த்தை சாஸ்திரத்துக்குப் பேசுவார்கள்.

ஒருதரம் சென்னையில் ராம்கோவில் சிஸ்டம்ஸில் இருந்த போது நண்பர் ஒருவருக்கு குழந்தை பிறந்த சந்தோஷத்தைக் காரணம் காட்டி அவருக்கு மொட்டை போட நண்பர் குழாம் முடிவு செய்தது. வழக்கமாக அடையாறில் வெட்டுகிற இடங்களை எல்லாம் விட்டு விட்டு தரமணி டாக்கீஸ் என்று தண்ணியடிக்கும் தர்மவான்கள் முடிவு செய்தார்கள். அங்கே தண்ணியும் உண்டு நல்ல சப்பாடும் உண்டு என்று சதிவலை பின்னப்பட்டதில், நானும் இன்னொரு அப்பாவியும், சாப்பாடு கிடைக்கும் என்று நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு போனோம். தியேட்டர் மாதிரி திரையெல்லாம் வைத்து நல்ல ஜோராகத் தான் இருந்தது. "என்ன வேண்டும்" என்று கேட்டு பேரர் விருந்தோம்பாமல் பாருக்குப் போனால் தான் சைட் டிஷ் இலவசம் இங்கே தீர்த்தம் சப்பிட்டால் சைட் டிஷ்க்கும் படியளக்கவேண்டும் என்று சொல்ல, கும்பல் பாருக்கு குடிபெயர்ந்தது. ஜூஸெல்லாம் குடித்தால் சாப்பிட சாப்பாடு அளவு குறைந்துவிடும் என்று நான் ஜூஸை வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். ஏழு மணிக்கு ஆரம்பித்த பார்ட்டி, பத்து மணி வரை தண்ணியிலேயே மிதந்து கொண்டிருந்தது. நானும் அந்த அப்பாவியும் வந்து கொண்டிருந்த சுண்டலை மட்டும் நொசுக்கிக் கொண்டிருந்தோம். திடிரென்று பத்து மணிக்கு பார்ட்டி கொடுப்பவர் "தம்பிகளா...இந்தப் பார்டிக்கு என்னோட பட்ஜெட் இவ்வளவு தான் " என்று கையை விரித்து விட்டார்.முன்னாடியே சொல்லியிருந்தால் வந்த சுண்டலையாவது கூடக் கொஞ்சம் நொசுக்கி இருப்பேன் என்று எனக்கு ஒரே வருத்தம். பார்ட்டிக்குப் போய் வெற்று வயிற்றுடன் வந்ததற்கப்புறம் இந்தியாவில் இனி தண்ணிப் பார்டிக்கே போகக் கூடாதென்று முடிவு செய்திருந்தேன்.

இங்கே வெள்ளைக்கார தண்ணிப் பார்ட்டியில் இம்சை வேறு மாதிரி. எதிராளி கைய்யில் க்ளாஸ் வைத்திக்கொண்டிருக்கும் போது நாம் வைத்துக் கொள்ளாவிட்டால் மரியாதை குறைச்சல். இதற்காக ஆரஞ்சு ஜூஸாவது வைத்துக் கொள்ளவேண்டும். ஆனால் துரை ஒரு க்ளாஸ் பியரையோ, காக்டெயிலையோ ஒருமணி நேரமாய் வைத்துக் கொண்டிருப்பார். நானெல்லாம் ஊரில் ஆரஞ்சு ஜூஸ் குடுத்தால் 2 H.P மோட்டார் போட்டு உறிகிற மாதிரி ஒரே உறிஞ்சாக உறிஞ்சி காலியாக்கி விட்டுத்தான் க்ளாஸை கீழே வைப்பேன். மருந்து குடிக்கிற மாதிரி சின்னச் சின்ன சீப்பியாக குடிப்பதற்கு ரொம்பவே முதலில் கஷ்டப் பட்டேன். இப்பொழுது கொஞ்சம் பழகிவிட்டது. இதோடு இன்னொரு கஷ்டம் வேறு இங்கே உண்டு. வந்த புதிதில் துரைமார் பேசுவது வழவழ கொழகொழவென்று ஏற்கனவே ஒரு இழவும் புரியாது, இதில் தண்ணியடித்து விட்டுப் பேசச் சொன்னால் சுத்தம். அத்தோடு இங்கே இருக்கிற பப்புகளில் மாரியம்மன் கோவில் கொடை விழா மாதிரி பாட்டை வேறு அலறவிட்டு விடுவார்கள். குத்து மதிப்பாக "யா யா", "அப்கோர்ஸ்", "கிரேட்", "ஈஸிட்?" "ஓ ரியலி" என்று வரிசைகிரமம் வைத்து சிரித்துக் கொண்டே சொல்லிவிடுவேன். இந்த லட்சணத்தில் துரை நான் பேசுவது புரியவில்லை என்பார். எல்லாம் நேரக் கொடுமைடா...என்று நினைத்துக் கொண்டு "சந்தைக்குப் போனும் ஆத்தா வையும்" என்று கம்பி நீட்டிவிடுவேன்.

இந்த மாதிரி கொடுமைக்காவது தண்ணியடிக்க கத்துக்கனும் என்று ரொம்ப நாளாக சொல்லிக் கொண்டு இருக்கிறேன். புது வருஷ கொள்கைகள் மாதிரி அதற்கும் இன்னும் வேளை வரவில்லை.

21 நாட்கள் !!!!

வருடத்திற்கு 365 நாட்கள்! இதில் தொடர்ந்து 21 நாட்களை நீங்கள் ஒதுக்கி வைக்கத் தயாரா?

எனக்காக இல்லை...உங்களுக்காகத்தான்!

உங்களை விட்டு ஒழிக்க வேண்டும் என்று நினைக்கும் குணத்தை ஒழித்துக் கட்ட, புதிதாய் ஒரு நல்ல விசயத்தை பழக்கமாக்கிட வேண்டும் என்ற எண்ணத்தை திண்ணமாக்க உங்களுக்கு விருப்பம்தானே ?

ம்ம்ம்.. என்ன மௌனம் ?

சொல்லுங்கள் ...உங்களை நீங்கள் மாற்றிக்கொள்ள ஆசையில்லையா...?

கருதிய காரியம் கைகூட இறுதி வரை உறுதியாய் இருக்க வேண்டும் அல்லவா!

நம்மை வெற்றிக்கு அழைத்துச் செல்லும் ஒருசில வழிகளை நம் அன்றாட வாழ்வின் பழக்கமாக்கிட வேண்டாமா!

அதற்குத்தான் 21 நாட்களை ஒதுக்கச் சொல்கிறேன்..

அதற்கு முன்னால் சில விசயங்களை அலசுவோம் :)

வீட்டில் திடீரென்று இரவு 9 மணி அளவில் மின்சாரம் ரத்தாகி விடுகிறது ? என்ன செய்வீர்கள்?

பதில்கள்...

1. மின்சாரத்துறையை திட்டோ திட்டென்று திட்டுவேன் :)
2. அய்யோ பார்க்க வேண்டிய டி.வி சீரியல் போய்ச்சுதே என்று அலறுவேன் :)
3. பக்கத்து வீட்டாரிடம் கதைக்கப் போயிடுவேன் :)

இப்படியெல்லாம் செய்யாமல் உடனே தீப்பெட்டி/மெழுகுவர்த்தி தேடிப் போவீங்க.. :)

அப்படித்தானே!

உங்களைச் சொல்லி அதை எடுக்க சொன்னோம் என்று வைத்துக்கொள்ளுங்கள்.. மின்சாரம் வந்த பின்னர் பார்த்தா வீடே ரணகளப்பட்டு இருக்கும். அதற்குள் போன மின்சாரம் திரும்பவும் வந்திருக்கும் :)

ஆனா! நம்ம வீட்டில் இருக்கிற ஹோம் மினிஸ்டர் அந்த கும்மிருட்டிலேயும் தட்டு தடுமாறி விழாமல் அலேக்கா அடுப்பறை போய் தீப்பெட்டியை கொண்டு வந்து ஒரு பத்து பத்த வச்சிடுவாங்க(மெழுகு வர்த்தியைத்தான்)!

அது எப்படி சார் முடியுது? இருட்டுல கூட அவங்களுக்கு கண்ணு தெரியுது..

ஆங்க்!..அங்கதானே விசயமே இருக்குது..

சரி, ஒரு டெக்னிகல் உதாராணம் சொல்றேன்.

உங்களோட மின்னஞ்சல் அல்லது கணிணி யோட பாஸ்வேர்டை இப்போ மாற்றுங்க. உங்க Screen Saver ருக்கான நேரம் சில மணித்துளியாக இருக்கட்டும். இருக்கையை விட்டு எழுந்து சென்று விடுங்கள். இப்போது கணிணி உள் நுழைய முயற்சியுங்கள்.

பாஸ்வேர்ட் தட்டச்ச தடுமாறுகிறீர்களா :)

இதை நீங்கள் கண்டிப்பாக அனுபவித்திருக்க வேண்டும்.. ஏன் இந்த தடுமாற்றம்.. உம் யோசனை பண்ணுங்க..

சரி ஒரு வழக்கமான உதாரணம் பார்ப்போம்..

சைக்கிள் ஓட்டக் கற்றுக்கும் போது ஊருக்கு பெரிய சர்க்கஸே நடத்திக் காட்டியிருப்போம்.

நமக்கு கற்றுத் தந்தவர் படு பீலா விட்டுருப்பாரு.. அங்கே பார்க்காதே இங்கே பார்க்காதே நேரா பாரு, கீழே பார்க்காதே, மேலே பார்க்காதே, இடுப்பை ஒடிக்காதே இன்னும் ஏகப்பட்ட கட்டளைகள்..

கொஞ்சம் நினைச்சிப் பாருங்க இதெல்லாம் செய்யாம நம்மளால எதைத்தான் ஓட்ட முடியும் ?

மோட்டார் வாகனம் பழகும் போதும் இதே கதைதான். ஆனா இப்போ பாருங்க , சென்னை போன்ற பெரிய நகரங்களில் விட்டா கூட நாம வண்டியை சும்மா தில்லா ஓட்டிட்டு போறோம் இல்லையா?.

எல்லாம் ஆட்டோமெட்டிக கண்ட்ரோல் போல நடக்குது இல்லையா?

ஆரம்பத்தில் சிரமமாய் இருந்த விசயம் பழக்கத்தில் எளிதாய் ஆகிவிடுகிறது. தினசரி நாம் ஒரு செயலை தொடர்ந்து செய்யும் போது அது நம் வழக்கமாகி பின் பழக்கமாகி அதுவே நம் குணமாகி விடுகிறது.

குணம் என்பது நமது அன்றாடப் பழக்கத்தின் பிரதிபலிப்பே! நல்ல குணம் படைத்தவன் என்ற பெயர், நமது பழக்கத்தினாலேயே தீர்மானிக்கப்படுகிறது.

அதனால் நாம் என்ன செய்ய வேண்டும்? நம்மிடையே இருக்கும் கெட்டப் பழக்கங்களை விட வேண்டும்; நல்ல பழக்கங்களை பழகுதல் வேண்டும்.

அதற்காகத்தான் உங்களிடம் இருந்து 21 நாட்களை ஒதுக்கிவைக்க முடியுமா என்று கேட்டேன். "அது என்ன 21 நாள் ?" என்று நீங்கள் கேட்பீர்கள்.

எல்லாம் நம்ம முன்னோர்கள் சொன்ன விசயம்தான். 41 நாள் விரதம், 11 நாள் விரதம், 30 நாள் நோன்பு இதெல்லாம் நமக்கு பழக்கமானதுதானே. அதே போன்றுதான் 21 நாட்களும்.

நம்ம பெரியோர்கள் சொல்ற விசயத்தை காதுல போட்டுக்க மாட்டோம். ஆனா அதே விசயம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியானால், ஆஹா ஓஹோன்னு கொண்டாடுவோம்(என்ன பண்ணுறது நம்ம பழக்கம் அப்படி :) )

அதாவது ஒரு பழக்கத்தை ஒருவன் கைவிட/கைக்கொள்ள வேண்டும் என்றால் 21 நாட்கள் தொடர்ந்து செய்தால் போதும் என்று உலகப்புகழ் ஹார்வர்ட் பலகலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் வெளியிட்டு இருக்கிறது.

ஆங்கில சுயமுன்னேற்ற அறிஞர்கள் இதை " 21 Days Habit" என்பார்கள்.

முதலில் நாம் செய்யவேண்டியது என்னவென்றால், எந்த பழக்கத்தையெல்லாம் விட வேண்டும் என்று பட்டியல் இடுங்கள்!

1. புகை
2. மது
3. மாது
4. சூது
5. புறங்கூறல்
6. அச்சம்
7. மேடை நடுக்கம்
..
..
..
இன்னும் பல...


எந்த விசயத்தை பழக்கமாக்கிட வேண்டும்

1. அதிகாலை எழுவது
2. புத்தக வாசிப்பு
3. உடற்பயிற்சி
4. மொழிப்பயிற்சி
5. யோகா
6. ஆன்மீகம்
7. விளையாட்டு
..
..
..
இன்னும் பல.

பட்டியலைத் தயாரித்துக் கொண்டபின்,

உங்கள் இலக்கிற்கு உறுதுணையாய் இருக்கும் பழக்கத்திற்கு முதல் முக்கியத்துவம் கொடுங்கள்.

உதாரணமாக "அதிகாலை எழுதல்" என்பதைக் கொண்டால். அதை 21 நாட்கள் வலுக்கட்டாயமாக நீங்கள் கடைபிடிக்க வேண்டும்(கடிகாரத்தின் உதவியோடு). 21 நாட்கள் நீங்கள் தொடர்ந்து செய்து விட்டால் 22 ஆம் நாள் நீங்கள் தானாகவே அதிகாலையில் கடிகார அழைப்பு இன்றி எழுந்து விடுவீர்கள். கடிகாரமே உங்களிடம் கேட்டுக் கொண்டுதான் மணி எழுப்பும்!

உங்களுக்கு அந்த திறன் 21 நாட்களுக்கு முன்னதாகக் கூட வரலாம். அது அவரவர் கட்டுப்பாட்டை/திறமையைப் பொறுத்தது.

இம்முறையில் நாம் ஒரு பழக்கத்தை நம் வழக்கம் ஆக்கிக் கொள்ள முடியும். இதை நீங்கள் பரிசோதித்துப் பார்க்கும் போது நன்கு அறிவீர்கள்.

முதல் வாரத்தில் கண்டிப்பாய் ஒரு தடங்கல் வரும். அதையும் மீறி நீங்கள் செயல் பட வேண்டும். அதை வெற்றி கண்டால் இரண்டாவது வாரத்தில் தடங்கல் வரும். அதையும் தாண்டி, 3 வது வாரம் வருகின்ற தடங்கலையும் தாண்டிவிட்டால் நீங்கள் கைக்கொள்ள நினைத்த பழக்கம், உங்கள் குணம் ஆகி இருக்கும்.

ஒரு முக்கிய விதி.. 21 நாட்களில் தடங்கல் ஏற்பட்டு விட்டால் நீங்கள் மறுபடியும் ஒன்றில் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும்.

எப்படி இருக்கிறது இந்த விளையாட்டு ? என்ன நீங்கள் விளையாடத் தயாரா?

நல்ல பழக்க வழக்கங்களே ஒருவனின் நிலையான வெற்றியை தீர்மானிக்கிறது. குணவான் ஆக்கிறது. சமுதாயதில் "சொக்க தங்கம்" என்ற பாராட்டைப் பெறச் செய்கிறது. மனதில் மகிழ்ச்சியைப் பெருக்குகிறது.

ஆகவேதான் இந்த 21 நாட்கள் பற்றி எழுதினேன்.

எனது சொந்த அனுபவத்தையும் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். ஊர்வன பறப்பன, நடப்பன என்று ஒன்றும் விடாமல் தின்று தீர்ப்பவன் நான்(மாமிசம் சாப்பிடுவதை நான் ஒரு குறையாய் சொல்லவரவில்லை. அதை குறை கூறுவது எனது நோக்கமும் அல்ல).

என் வாழ்வில் குருநாதர் என்று ஒருவர் வந்த பின் என் பாதைகள்/பார்வைகள் மாறியது. (8 வருடங்களுக்கு முன்) அனுமன் ஜெயந்திக்காக ஒரு நாற்பது நாள் விரதம் இருந்தேன். சற்றுக் கடுமையான விரதம்தான். டீ, காபி தவிர்த்தல், காலில் செருப்பின்றி இருத்தல், காவி உடை தரித்தல், வெறுந்தரையில் படுத்தல், இரு வேலை குளித்தல், அதிகாலையில் எழல், மாமிசம் உண்ணாதிருத்தல், இலைச்சோறு சாப்பிடுதல், டி.வி நிகழ்ச்சி, சினிமா செய்திகள் பாராதிருத்தல் என்று கடுமையான விரதம்தான்.

விரத நிறைவுநாள் அனுமன் ஜெயந்தி! மகிழ்ச்சியான தரிசனம் அமைந்தது.
மறுநாள் என் அன்னை எனக்கு காபி கொண்டு வந்து தந்த போது.. "வேண்டாம்மா பால் போதும் " என்றேன்.

கருவாட்டு குழம்பு என்றால் சாப்பாட்டு ராமனாகி விடும் யான், ஞாயிறன்று அவர்கள் கருவாடு சமைத்த போது அதை உண்ண வேண்டும் என்ற எண்ணமே எழுவில்லை. (பின் எனக்கென்று தனியே ரசம் வைத்தார்கள் அது வேறு கதை). அன்று மாறியவன் இன்று வரை அப்படியே இருக்கிறேன். விரத்தில் நான் கடைப்பிடித்த ஒருசில விசயங்கள் தவிர உண்ணும் விசயத்தில் எனக்கு ஏற்பட்ட மாற்றம் இந்த "21 நாட்கள்" தலைப்பிற்கு நல்ல உதாரணமாய் பட்டதால் உரிமையோடு இங்கு சொன்னேன்.

இது எப்படி சாத்தியம் என்றால், எந்த ஒரு விசயத்தை தொடர்ந்து செய்கிறோமோ அது நமது ஆழ்மனதில் பதிந்து பின்னர் தானே செயல்பட ஆரம்பிக்கிறது. நமது கட்டளை இன்றி தானாகவே செயல்படுகிறது.

உங்கள் அலுவலகத்திற்கு செல்ல இரண்டுக்கு மேற்பட்ட வழிகள் இருந்தாலும் குறிப்பிட்ட வழியிலேயேதானே தொடர்ந்து செல்கிறீர்கள்.
அந்த வழியை விடுத்து மாற்றுப்பாதையில் செல்லும் போது நீங்கள் வித்தியாசமாய் உணருவீர்கள். வழக்கமான வழியில் செல்லும் போது இலகுவாக இருப்பதை அறிவீர்கள். இதற்கெல்லாம் அடிப்படை நமது ஆழ்மனமே!

ஆழ்மனம் பற்றி ஏற்கனவே "ஜெயமே ஜெயத்தில் " எழுதிவிட்டேன்.

நாம் இங்கே சொல்ல வந்தது 21 நாட்கள் பற்றியது.

என்ன அன்பர்களே! உங்கள் வாழ்க்கைக்கு, உங்கள் இலட்சியத்திற்கு உதவிடச் செய்யும் பண்பை வளர்க்க இப்போது நீங்கள் 21 நாட்களை ஒதுக்கி வைக்க சம்மதம்தானே

உடல் சூட்டைத் தடுக்கும் நல்லெண்ணெய்

நல்லெண்ணெய். இதன் பெயரிலேயே அதன் சிறப்பு உள்ளது.

நல்லெண்ணை அல்லது எள் எண்ணெய் என்று நாம் இதனைக் கூறுகிறோம். எள் என்பது பல்வேறுபட்ட மருத்துவ குணங்களைக் கொண்டது.

எள்ளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயே நல்லெண்ணெய். பொதுவாக கிராமங்க்ளில் ஒரு பழமொழி கூறுவார்கள்.

``வைத்தியருக்குக் கொடுப்பதைக் காட்டிலும் வாணிபருக்குக் கொடுக்கலாம்''- என்பதே அது.

அதாவது வைத்தியர் - டாக்டரிடம் செல்லாமல் இருப்பதற்கு, எண்ணெய் விற்கும் வாணிபருக்கு பணம் கொடுக்கலாம். எனவே அதிக எண்ணெய் வாங்கிப் பயன்படுத்தினால், வைத்தியச் செலவு இருக்காது என்பதே நம் முன்னோர் நமக்குக் கற்றுத் தந்த பாடம்.

உடல் சூட்டைத் தணிப்பதில் நல்லெண்ணெய் முக்கியப் பங்கினை வகிக்கிறது.

உடல் சூட்டால் வயிறு எரிச்சல், மலச் சிக்கல், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், ஒருவித பாரத்துடனான தலைவலி போன்ற எண்ணற்ற நோய்கள் ஏற்படுகின்றன.

இவற்றுக்கெல்லாம் ஒரே தீர்வு. வாரம் ஒரு முறை நல்லெண்ணெயை உச்சி முதல் உள்ளங்கால் வரை உடல் முழுக்க நன்றாகத் தேய்த்து, இளஞ்சூட்டில் வெந்நீர் வைத்து, நல்ல சீயக்காயைத் தேய்த்துக் குளிப்பதே.

`சனி நீராடு' என்பதன் பொருளும் அஃதே. நல்லெண்ணெய் குளிர்ச்சியைத் தருவதோடு, உடலில் இருக்கும் தேவையற்ற கசடுகளை வெளியேற்றுவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. தவிர மேனிக்கு புதுப்பொலிவையும் நல்லெண்ணெய் அளிக்கிறது.

இதன் காரணமாகவே பெண்கள் பூப்பெய்தவுடன் நல்லெண்ணெயுடன் உளுந்தில் செய்யப்பட்ட கழியையும் சேர்த்து சாப்பிடக் கொடுப்பார்கள். உளுந்தும் உடலுக்கு குளிர்ச்சி என்பதால், உடலின் சூட்டைத் தடுக்கவே இவற்றைத் தருகிறார்கள்

எஞ்சியிருப்பது 80 வயது ஒரே ஆமை : அரிய இனம் அழிவை தடுக்க முயற்சி

அழிந்து போகும் நிலையில், நான்கு மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், அவற்றில் ஒன்றான அரிய வகை பெண் ஆமையால், அதன் இனம் விருத்தி செய்யப்படுமா என்ற எண்ணத்தில் விஞ்ஞானிகள் காத்திருக்கின்றனர். அந்த பெண் ஆமையின் வயது 80. மென்மையான ஓட்டுடன் கூடிய ராட்சத யாங்க் டெஸ் இனத்தை சேர்ந்த ஆமைகள் தற்போது, உலகளவில் நான்கு மட்டுமே எஞ்சி உள்ளது. நீண்ட தேடலுக்கு பின், கடந்த ஆண்டு ஒரு பெண் ஆமை கண்டுபிடிக்கப்பட்டு, சீனாவில் உள்ள கஜோவு வனவிலங்கு பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டது. அந்த பெண் ஆமையின் வயது 80. ஏற்கனவே வனவிலங்கு பூங்காவில் உள்ள, இதே இனத்தை சேர்ந்த மூன்று ஆமைகளும், ஆண் ஆமைகள். அவற்றில் 100 வயது கொண்ட ஒரு ஆமையுடன், பெண் ஆமை அதிர்ஷ்டவசமாக இணைந்தது. பெண் ஆமைக்கு செயற்கை முறை மூலம் கருத்தரிக்கச் செய்வது மிகவும் கடினமான காரியம் என்பதால், அது முட்டை பொரிக்கும் காலம் வரை விஞ்ஞானிகள் ஆர்வமுடன் காத்திருந்தனர். எதிர் பார்த்த படியே இரண்டு முறை 10க்கு மேற்பட்ட முட்டைகளை பெண் ஆமை இட்டது. அவற்றை குஞ்சு பொரிக்கும் முயற்சியில், விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக எந்த முட்டையும் குஞ்சு பொரிக்கவில்லை. இதனால், விஞ்ஞானிகள் ஏமாற்றமடைந்தாலும், மனம் தளராமல், அடுத்த சினைக் காலத்துக்காக ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

தற்கொலை விரும்பிகளால் நிரம்பும் சென்னை !!!

மன அழுத்தமோ, வேலைப்பளுவோ, நிராகரிப்போ நிகழ்ந்து விட்டால் எதைப் பற்றியும் யோசிக்காமல் தற்கொலை செய்து கொள்வது என்பது பலவீனமான மனதின் வெளிப்பாடு.
இது இன்றைக்கு சீனாவின் மிகப்பெரிய தேசப் பிரச்சனையாக உருவாகி இருக்கிறது.

சீனாவில் ஆண்டுதோறும் தற்கொலை செய்து கொள்ளும் மக்களின் எண்ணிக்கை தெரியுமா ? 2,50,000 !!! இவர்கள் வயது 15 க்கும் 34 க்கும் இடையே ! இதை இணைய தளங்கள் ஊக்குவிக்கின்றன என்பது கூடுதல் அதிர்ச்சி !

வாழவேண்டிய வயதில், வாழ்க்கையின் முதல் பக்கத்திலேயே இவர்களுடைய வாழ்க்கை இப்படி வீணாக விரையமாவது சீன அரசின் மிகப்பெரிய கவலையாக மாறியிருக்கிறது.

ஒவ்வொரு இரண்டு நிமிடமும் ஒரு தற்கொலையும், எட்டு தற்கொலை முயற்சிகளும் சீனாவின் மெயின்லாண்டில் பதிவாவதாக சீனாவின் மனநல அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தத் தற்கொலைகளின் காரணங்களை ஆராய்ந்தால் முதலிடத்தில் இருப்பது திருமண வாழ்வின் தோல்வி. சுமார் 30 விழுக்காடு தற்கொலைகள் திருமண வாழ்க்கையின் அமைதியின்மையினால் நிகழ்கின்றனவாம்.

இரண்டாவது இடத்தில் இருப்பது கடுமையான வேலையினால் உருவாகும் மன அழுத்தம். இது இருபது விழுக்காடு. மிச்சமுள்ள ஐம்பது விழுக்காடுகளை வறுமை, சரியான வேலைவாய்ப்பின்மை, சமூகத்தின் அங்கீகாரமின்மை உட்பட பல்வேறு காரணங்கள் நிரப்புகின்றன.

சீனாவிலும் நகர்ப்புறங்களை விட வசதிகள் குறைவான ஊர்ப்பகுதிகளில் இந்த தற்கொலைகள் அதிகம் நிகழ்வதாக அரசு தெரிவிக்கிறது. இந்தியாவைப் போலவே சீனாவிலும் இளைஞர்கள் எல்லாம் நகர்ப்புறங்களுக்கு இடம் பெயர்ந்ததால் கிராமங்கள் முதியோர் இல்லங்களாய் காட்சியளிக்கின்றனவாம்.

பள்ளிக்கூடத்தில் பயிலும் பல பதின் வயதினரும் தற்கொலை செய்து கொள்வது உண்மையிலேயே கலவரமூட்டுகிறது. இந்த விழுக்காடு 17 என அதிர்ச்சித் தகவல் தெரிவிக்கிறது. படிப்பின் பயமும், தனிமை உணர்வும் இவர்களை வாட்டுகிறதாம்.

தற்கொலை, வாழ்வின் மீதான நம்பிக்கையின்மையின்மையின் வெளிப்பாடு. சென்னையிலும் கடந்த ஆண்டு மட்டுமே 2500 பேர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தகவல்கள் திகிலூட்டுகின்றன.

பொறுமையும், சகிப்புத் தன்மையும், முக்கியமாக குடும்ப உறவுகளில் பிடிப்பின்மையும் இத்தகைய காலமாற்றத்தின் காரணம் எனலாம். வாழ்க்கை நாகரீகத்தின் அடித்தளத்தில் கட்டப்படாமல், உண்மை உறவுகளின் மேல் கட்டியெழுப்பப்படவேண்டும் என்பதையே இவை சுட்டிக் காட்டுகின்றன.

நீங்க சுறுசுறுப்பான பார்ட்டியா?

சுறுசுறுப்பாய் இருப்பவர்களுக்கும், சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்பவர்களுக்கும் புற்று நோய் வரும் வாய்ப்பு மிகவும் குறைவு என ஜப்பானில் நிகழ்த்தப்பட்ட மிகவும் விரிவான ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

இந்த ஆய்வில் ஆண்களும், பெண்களுமாக சுமார் 80,000 பேர் ஈடுபடுத்தப்பட்டனர். பொதுவாக உடற்பயிற்சிக்கும் ஆரோக்கியத்துக்கும் இடையேயான தொடர்பையே ஆய்வுகள் முன்னிலைப்படுத்தும். இந்த ஆராய்ச்சி வெறும் உடற்பயிற்சியை மட்டும் கவனத்தில் கொள்ளாமல் ஆய்வு செய்யப்பட்ட நபரின் முழு வாழ்க்கை முறையையும் பரிசீலித்தது.

தினசரி வாழ்க்கையில் எப்படிப்பட்ட நிலையில் இயங்குகிறார் என்பதும், தினமும் உடலுக்கு எப்படிப்பட்ட வேலை தரப்படுகிறது என்பதும் கவனத்தில் இந்த ஆய்வு கவனத்தில் கொண்டது.

ஜப்பான் நாட்டில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு மக்களின் ஓய்வு, தூக்கம், உடற்பயிற்சி, உடல் உழைப்பு, தினசரி அலுவலின் தன்மை அனைத்தையும் கணக்கில் கொண்டு விரிவாக நடத்தப்பட்டது. இதன் முடிவில் தான் சுறுசுறுப்பான வாழ்க்கை எனில் புற்று நோய் பயத்தைக் குறைக்கலாம் எனும் முடிவு எட்டப்பட்டுள்ளது.

பொதுவாக இன்றைய நவீன உலகத்தில் உடலுழைப்புக்கு அதிகம் தேவையற்ற சூழலில் இந்த ஆராய்ச்சி முடிவு நம்மை சற்றே ஓடியாடி உழைக்க உற்சாகப் படுத்துகிறது எனலாம்.

உடலுக்குக் கொடுப்போம் தேவையான இயக்கம் - அதைக்
கொடுப்பதில் மனமே உனக்கென்ன தயக்கம் ?

வயாகராவை மிஞ்சும் புதிய மருந்து

வயாகரா மாத்திரை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உலகெங்கும் சுமார் மூன்று கோடிபேருக்கும் அதிகமாக அந்த மாத்திரையைப் பயன்படுத்தியுள்ளனர் என புள்ளி விவரங்கள் சொல்லிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் வந்திருக்கிறது அடுத்த அசத்தல் கண்டுபிடிப்பு.

லிபிடோ இன்செக்ஷன் எனும் இந்த புதிய மருந்து வயாகராவைப் போல மேனியில் நேரடியாக மாற்றங்களை ஏற்படுத்தாமல் மூளையில் மாற்றத்தை ஏற்படுத்தி பாலியல் ஆர்வத்தையும், ஆரோக்கியத்தையும் தூண்டுகிறதாம்.

பாலியல் ஆர்வமின்மை இன்றைய அவசர யுகத்தில் சர்வ சாதாரணமாகிவிட்டது. மூன்றில் ஒரு பங்கு பெண்களும், ஆறில் ஒரு பங்கு ஆண்களும் இந்த ஆர்வமின்மை கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான வரப்பிரசாதம் இது என்கின்றனர் இந்த புதிய அதிசய மருந்து தயாரிப்பாளர்கள்.

இந்த மருந்து Type 2 gonadotropinb ஐ வெளிவிடும் ஹார்மோன்களை ஊக்கப்படுத்துவதன் மூலம் பாலியல் ஆர்வத்தை தூண்டுகிறதாம்.

வயாகரா வெறுமனே உடலில் மாற்றத்தை ஏற்படுத்துவதுடன் நின்று விடுகிறது. மன அளவில் அது எந்த விதமான ஆர்வத்தையோ, விருப்பத்தையோ, மோகத்தையோ கிளறிவிடுவதில்லை. கூடவே அது முழுக்க முழுக்க ஆண்களுக்கானது. ஆர்வமற்ற பெண்களுக்கு வயாகராவினால் எந்த பயனும் இல்லை. ஆனால் இந்த புதிய ஆர்வம் தூண்டும் மாத்திரை பெண்களுக்கும் ஆண்களுக்கும் பொதுவானது என்பது குறிப்பிடத் தக்கது.

ஆர்வத்தைத் தூண்டுவதன் மூலமும், அதற்குரிய சுரப்பிகளை சுரக்கச் செய்வதன் மூலமும் ஆண்மைக் குறைபாடு உட்பட பல நோய்களையும் இந்த மருந்து சரி செய்து விடும் என்கின்றனர்.

முதலில் பெண்களுக்கென தயாரிக்கப்பட்ட இந்த மருந்து ஆண்களுக்கும், பெண்களுக்கும் பயன்படுத்தப்படும் வகையில் இப்போது உருவாகி வருகிறது.

மூளையில் நேரடியாக ஊசி மூலம் செலுத்த வேண்டும் என துவங்கிய ஆராய்ச்சி இப்போது இரத்தக் குழாய்களிலும் செலுத்தலாம் எனும் அளவில் வளர்ச்சியடைந்திருக்கிறது. இதை மாத்திரை வடிவத்துக்குள் அடைக்கும் முயற்சி இப்போது நடைபெற்று வருகிறது.

வயாகராவை முழுமையாக துடைத்து எறியும் நோக்குடன் இந்த மருந்து மன உடல் சார்ந்த பிரச்சனைகளின் தீர்வாக தயாராகிக் கொண்டிருக்கிறது என்பது சர்வதேச கவனத்தை ஈர்த்திருக்கிறது.

இதன் பக்க விளைவு ஒரு பக்கா விளைவாம். அதாவது உடல் எடை கணிசமாகக் குறையுமாம்.

அட !! ஒரு க(பி)ல்லிலே இரண்டு மாங்கா !

ஓருரூபாய் அரிசி எப்படி?


வாயில் கூட வைக்க முடியாது இப்போதைய ரேஷன் அரிசியை. எதற்குத் தான் இப்படி நாற்றம் வீசும், மட்டமான, மோசமான அரிசியைத் தருகிறார்களோ ? இதெல்லாம் வெறும் ஏமாற்று வித்தை. மனுஷன் சாப்பிட முடியாது. இப்லப்பாம் எவனுமே ரேஷன் அரிசியைச் சாப்பிடறதே இல்லை. பிச்சைக்காரனுக்குக் கொடுத்தா கூட துப்பிடுவான்.

இப்படியெல்லாம் இரண்டு ரூபாய், ஒரு ரூபாய் ரேஷன் அரிசியைக் குறித்து திகட்டத் திகட்ட, கிண்டல்களும், நக்கல்களும், திட்டுகளும் இணையத்திலும் வெகுஜன இதழ்களிலும் மலிந்து கிடப்பதைப் படித்துப் படித்து ரேஷன் அரிசியைக் குறித்த ஒரு மதிப்பீட்டை உள்ளுக்குள் உண்டாக்கி வைத்திருந்தேன்.

தினமும் அலுவலகம் வரும்போது வேளச்சேரி ரேஷன் கடையைத் தாண்டியே வருவேன். ரேஷன் கடை முன்னால் தினமும் காலையில் புதுப்பட ரிலீஸ் கணக்காய் கூட்டம் அலை மோதும். முரண் உறுத்தும். இவ்ளோ மட்டமான அரிசியை வாங்க இப்படிக் கூட்டம் அலைமோதுகிறதே என நினைத்துக் கொண்டே சென்று விடுவேன்.

கடந்த வாரம் மனதில் தோன்றியது, உண்மையிலேயே இந்த ரேஷன் அரிசி மகா மட்டமானது தானா ? அரிசி தருவது அரசியலா ? இல்லை அரிசியை எதிர்ப்பது அரசியலா ?

உய்த்துனர்தலே சிறந்ததென முடிவெடுத்தேன்.

வீட்டில் விண்ணப்பம் வைத்ததால் ரேஷன் அரிசி வாங்கினார்கள். சுடச்சுட சாதம் வைத்து சாம்பார் ஊற்றி சாப்பிட்ட போது தான் புரிந்தது வெறுமனே நக்கல் அடிப்பவர்கள் ரேஷன் அரிசியை சாப்பிட்டிருக்கவே மாட்டார்கள் என்பது !!!

அளவில் பெரியதான அரிசி (சி.ஓ என்று எங்கள் ஊரில் அழைப்பது போன்ற அரிசி). சாப்பிட்டு எனக்கு ரொம்பவே பழக்கம் என்பதால் ரேஷன் மிகவும் ரசிப்புக்குரியதாகி விட்டது. கொஞ்சமும் குறை சொல்ல முடியாத, எந்த நாற்றமும் வீசாத, சுவையான அரிசி !

ஒரு வேளை சென்னையில் மட்டும் நல்ல அரிசி தந்து விட்டு கிராமங்களின் தலையில் மோசமானதைக் கட்டுகிறார்களோ எனும் சந்தேகத்தில் மாலையில் ஊருக்கு போன் போட்டேன். அம்மா போன் எடுத்தார்கள்.

“அம்மா அங்கே ரேஷன் அரிசி நல்லா இருக்கா ? “

“என்னடா.. எப்போவும் அம்மா நல்லா இருக்கீங்களான்னு கேப்பே… இப்போ ரேஷன் அரிசி நல்லா இருக்கா கேக்கறே ?”

“சும்மா தாம்மா.. சொல்லுங்க “

“ரேஷன் அரிசி ரொம்ப நல்லா இருக்கு. நாங்க அதைத் தானே சாப்பிடுகிறோம்”
கிராமத்திலிருந்து அம்மா சொன்னார்கள்.

எங்களூர் ரேஷன் கடைக்காரர் குஞ்சுகிருஷ்ணனிடம் பேசினேன். எப்படி மக்கள் ரேஷன் அரிசியை வாங்குகிறார்களா ? நல்லா இருக்கா அரிசி ?
பெரும்பாலும் நல்ல அரிசியே கிடைக்கிறது. கேரளாவில் இதே அரிசியை கொஞ்சம் மில்லில் போட்டு பாலீஷ் செய்து சந்தையில் விற்றால் இருபது ரூபாய் தாராளமாய் கிடைக்கும் ! (அனுபவம் பேசியதா தெரியவில்லை ) என்றார்.

உண்மையிலேயே நல்லா இருக்குன்னா ஏன் இதை எதிர்க்கிறாங்க ? இதற்குப் பெயர் தான் அர(சி)சியலா ?

ஒரு காலத்தில் மரவள்ளிக் கிழங்கையே உணவாய் தின்று சாதத்தை கூட்டு போல கொஞ்சமாய் தின்று வாழ்ந்த கிராமம் இன்று மரவள்ளிக் கிழங்கை கூட்டு போல் சாப்பிடுகிறது. காரணம் கிலோ அரிசி ஒரு ரூபாய்க்குக் கிடைக்கிறது, மரவள்ளிக் கிழங்கின் விலை பத்து ரூபாயாகி விட்டது !

அழகிரியை அடக்கி வைக்க முதல்வருக்கு ஜெ. வலியுறுத்தல்

முதல்வர் கருணாநிதி தன் மகன் மு.க. அழகிரியை அடக்கி வைக்க வேண்டும் ன்றும், இல்லாவிட்டால் மதுரை நகரில் மக்கள் வசிக்க முடியாமல் போய்விடும் என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார்.

மாநகராட்சியில் நடைபெறும் நிர்வாக சீர்கேடுகளைக் கண்டித்தும், முதல்வர் கருணாநிதியின் மகன் அழகிரியின் அராஜகத்தை அடக்கக் கோரியும் அதிமுக சார்பில் இன்று மதைரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:

தீவிரவாதிகளையும், சமூக விரோதிகளையும் எனது அரசு இரும்பு கரம் கொண்டு அடக்கியது. கருணாநிதி ஆட்சிப் பொறுப்பேற்றது அண்டை மாநிலங்களில் இயங்கி வந்த தீவிரவாத அமைப்புகள் தமிழகத்தை புகலிடமாக மாற்றிக் கொண்டன.

காவல் துறை, முதல்வர் கருணாநிதியின் ஏவல் துறையாகிவிட்டது. தங்களது உயிரையம் உடமைகளையும் மக்களே பாதுகாத்துக் கொள்கிற கட்டாயத்துக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் 7 ஆண்டு சிறைவாசம் அனுபவித்த 1405 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் பெரிய வன்முறைக்கு கருணாநிதி வித்திடுகிறாரோ என்று தோன்றுகிறது.

சட்டத்தையும் நீதிமன்றத் தீர்ப்புகளையும் பற்றி கவலைப்படால் தான் தோன்றித் தனமாக சிபிஎம் கவுன்சிலர் லீலாவதி படுகொலையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் திமுகவைச் சேர்ந்த குற்றவாளிகளையும், தனது மகன் அழகிரி மற்றும் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு வேண்டப்பட்ட குற்றவாளிகளையும் விடுவித்திருப்பது உள்நோக்கம் கொண்டதாகும்.

இது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது செயல். கருணாநிதியின் இந்த அறிவிப்பால் விடுவிக்கப்பட்டவர்களும் வெளியில் உள்ள சதிகாரர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

'அண்ணனுக்கு நன்றி!'

மேலும் மதுரை முழுவதும் அண்ணனுக்கு நன்றி என்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இது அழகிரியின் படையை விரிவாக்குவதற்காக கருணாநிதி இந்த செயலை செய்திருக்கிறாரோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

1405 கைதிகளை விடுதலை செய்து அவர்கள் துணையுடனும் ஏவல் துறையின் முழு ஒத்துழைப்புடனும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் முயற்சியில் கருணாநிதி ஈடுபட்டுள்ளார்.

ஒட்டுமொத்தத்தில் கைதிகள் விடுதலையை எதிர்க்கிறேன். இதன் காரணமாக மக்களுக்கு பாதிப்பு ஏற்படுமானால் அதற்கு முழு பொறுப்பு கருணாநிதியைத்தான் சேரும்.

அழகிரி அராஜகம்:

அழகிரியின் தலையீடு காரணமாக, மதுரையில் ஊழல் தலைவிரித்தாடுகிறது.

அழகிரி கைகாட்டும் நபர்களுக்கே அனைத்து ஒப்பந்தங்களும் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

அழகிரியை முதல்வர் உடனடியாக அடக்கி வைக்க வேண்டும். அரசின் நடவடிக்கைகளில் அவரது தலையீடு இருக்கவே கூடாது, என்று தன் அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

வருவதை யாரும் தடுக்க முடியாது: அரசியல் குறித்து ரஜினி

அரசியலுக்கு நான் வந்து தான் ஆக வேண்டும் என்று என்னை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. நான் அரசியலுக்கு வர முடிவெடுத்தால், என்னை யாரும் தடுக்கவும் முடியாது,'' என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.தொடர்ந்து, "சூப்பர் ஸ்டாராக' வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்ற கோரிக்கை, அவரது ரசிகர்களால் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக் போன்ற நடிகர்கள் அரசியலுக்கு வந்ததைத் தொடர்ந்து, ரஜினி ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்தது.


ரஜினி மன்றத்தினர், தனிக்கொடி: ரஜினியின் நண்பரான நடிகர் சிரஞ்சீவி, சமீபத்தில் அரசியல் கட்சி தொடங்கிய நிலையில், "ரஜினி அரசியலுக்கு வந்தே ஆக வேண்டும்' என்ற குரல், ரஜினி ரசிகர் களால் பலமாக எழுப்பப்பட்டுள்ளது. ரஜினியின் அரசியல் பிரவேசத்தை வலியுறுத்தியும், வேண்டுகோள் விடுத் தும் ரஜினி ரசிகர்கள் மாநிலம் முழுவதும் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.கோவையில் ஒரு படி மேலாக ரஜினி பெயரில் ஒரு கட்சியைத் தொடங்கிய ரஜினி மன்றத்தினர், தனிக்கொடி, உறுப்பினர் விண்ணப்பம் உள்ளிட்டவற்றையும் கடந்த வாரம் அறிமுகப்படுத்தினர்.


இந்த மாதம் முதல் வாரத்தில் ரசிகர் மன்ற நிர்வாகிகளை ரஜினி சந்திப்பார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது."எந்திரன்' படப்பிடிப்பில் ரஜினி பிசியாக இருந்ததால், இந்தச் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கவில்லை. இதனால், எதிர்பார்ப்பில் இருந்த ரஜினி ரசிகர்கள் கொந்தளிப்படைந்தனர். இரு நாட்களாக, ரஜினிக்குச் சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தை முற்றுகையிடத் தொடங்கினர்.


ரசிகர்கள் உணர்வு குறித்து ரஜினிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரசிகர்களை அமைதிப்படுத்தும் வகையில், அவர் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை:


சமீப காலமாக ரசிகர் மன்றங்களின் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும், நான் அரசியலுக்கு வர வேண்டும் என்ற பேச்சு அன்றாடம் நிலவி வருகிறது. அண்டை மாநிலத்திலும், தமிழகத்திலும் நடிகர்களின் அரசியல் பிரவேசத்தால், நானும் தமிழக அரசியலில் நேரடியாக ஈடுபட வேண்டும் என்ற எனது ரசிகர்களின் ஆர்வம், எனக்கு நன்றாகப் புரிகிறது.


அனுமதிக்க மாட்டேன்: தற்போது பிரமாண்டமாக உருவாகிக் கொண்டிருக்கும் "எந்திரன்' படப்பிடிப் பில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறேன். அரசியல் ஆர்வமுள்ள எனது ரசிகர்கள், அவரவர்களுக்கு விருப்பமுள்ள கட்சிகளில் அவர்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம்.ஆனால், எனது பெயரில் ஒரு கட்சி, அதற்கென ஒரு கொடியை அறிமுகப் படுத்துதல், என் படத்தைப் பயன்படுத்துதல் போன்ற செயல்களில் ரசிகர்களோ, மற்றவர்களோ ஈடுபடுவதை நான் எப்போதும் அனுமதிக்க மாட்டேன். இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுபவர்களை, அந்தந்த மாவட்ட தலைவர்கள், தலைமை மன்றத்திற்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும்.


அவர்களை அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்து நீக்க, நான் நடவடிக்கை எடுப்பேன். நீக்கிய பின்னரும் இத்தகைய நடவடிக்கைகள் தொடருமானால், அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். "அரசியலுக்கு நான் வந்து தான் ஆக வேண்டும் என்று என்னை யாரும் கட்டாயப்படுத்த முடியாது.


அப்படி நான் அரசியலுக்கு வர முடிவெடுத்தால், என்னை யாரும் தடுக்கவும் முடியாது' என இறுதியாகவும், உறுதியாகவும் சொல்ல விரும்புகிறேன். அந்த நிலைமையில் எனது ரசிகர்கள் எங்கிருந்தாலும் என்னுடன் இணைவதை நான் வரவேற்பேன்.


இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார். அரசிலுக்கு வருவேன், வர மாட்டேன் என்று தெளிவாகக் கூறாமல் மீண்டும் குழப்பமான அறிக்கையை ரஜினி வெளியிட்டுள்ளதால், ரசிகர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

புகைக் குழந்தை

வேலை செய்யும் இடத்தில் மதிய உணவுக்காக கூடியிருந்தோம். அப்போது புத்தம் புதிதாய் ஒரு குழந்தைக்கு பாட்டியாக பதவி உயர்வு பெற்ற ஒரு பெண்ணும் அங்கே இருந்தார். குழந்தை பிறந்தது அறிந்ததும், ஒஸ்ரியா போய் குழந்தையை பார்த்து விட்டு திரும்பி இருந்தார்.

மிகவும் ஆவலுடனும், ஆசையுடனும் அந்த குழந்தையைப் பார்த்து வந்த மகிழ்ச்சியை எல்லோரிடமும் பகிர்ந்து கொண்டிருந்தார். அப்போது குழந்தை என்ன நிறை என்று ஒருவர் கேட்க, அதற்கு அவர், 2400g என்று சொன்னார். உடனே இன்னொருவர் premature baby யா என்று கேட்க, “இல்லை, குழந்தை சரியான நேரத்தில்தான் பிறந்திருக்கிறது. ஆனால் உடல் எல்லாம் மிகவும் மெலிவாக இருக்கிறது. கைகளைப் பார்த்தால், ஒரு மெல்லிய தடியில், கொஞ்சம் பெரிதான உள்ளங்கையை வைத்து ஒட்டியதுபோல் இருக்கிறது. அந்தக் குழந்தை ஒரு புகைக் குழந்தை” என்று கொஞ்சம் கவலையுடன் சொன்னார். எனக்கு புரியவில்லை. ‘அது என்ன புகைக் குழந்தை?’ என்று பக்கத்தில் இருந்தவரிடம் மெதுவாய் விசாரித்தேன். அவர் சொன்னார், “குழந்தையின் தாய் புகைப்பவர். குழந்தை வயிற்றில் இருந்த காலத்திலும் தொடர்ந்து புகைத்திருக்கின்றார்” என்று. கவலையாக இருந்தது. புகைத்தலின் கேடுகள் தெரிந்திருந்தும், அது குழந்தைக்கு கெடுதல் என்று தெரிந்திருந்தும் எப்படி அந்த தாயால் புகைத்தலை நிறுத்திக் கொள்ள முடியாதிருந்தது என்று நினைத்துப் பார்த்தேன்.

இனியாவது புகைப்பதை நிறுத்தி விடுவாராமா என்று ஒருவர் கேட்டார். அதற்கு அவர் சொன்ன பதில் அதிர்ச்சியாக இருந்தது. ஒரு வருடம் மட்டும் வீட்டிற்குள் புகைப்பதை (குறித்துக் கொள்ளுங்கள் புகைப்பதை அல்ல) நிறுத்தி வைப்பதாக வாக்கு கொடுத்திருக்கின்றாராம். குழந்தைக்கு பாலூட்டும் காலத்திலும் புகைக்கத்தான் போகின்றார். ஆனால் வெளியே போய் புகைப்பாராம். ஒரு வருடத்துக்குப் பின்னர் வீட்டினுள் புகைத்தால் மட்டும் அது குழந்தையை பாதிக்காதா? இவர்கள் ஒன்றும் passive smoking பற்றி கேள்விப் படாதவர்கள் அல்லவே. தனது குழந்தைக்கு கேடானது என்று தெரிந்தும், எப்படி இவர்களால் இப்படி நடந்து கொள்ள முடிகின்றது?

நோர்வேயில் 35-44 வயது எல்லைக்குள் புகைப்பவரில் பெண்களே அதிகமாக இருப்பதாகவும், 45-54 வயதுக்கிடையில் புகைப்பவர்களில் ஆண்களும் பெண்களும் கிட்டத்தட்ட சம அளவில் இருப்பதாகவும், ஏனைய வயதெல்லைகளில் ஆண்களே அதிகம் புகைப்பவர்களாய் இருப்பதாகவும் ஒரு புள்ளி விபரம் கூறுகின்றது. குழந்தைகளுடன் அதிக தொடர்பு வைத்திருக்கும் வயதில் இந்த பெண்கள் ஏன்தான் புகையை நாடுகின்றார்களோ என்று எரிச்சலாக இருக்கிறது.


புகைத்தல்!

பொது இடங்களில் நின்று கொண்டு புகைப்பவர்கள், அந்த புகையை மற்றவர் நாசிக்கும், சுவாசத்திற்கும் அனுப்பி, நாற்றத்தை கொடுப்பதோடு, தம்மை மட்டுமல்லாமல், மற்றவர்களையும் உடல் நலிவடையச் செய்கின்றார்கள். ஏன் இதை உணர மறுக்கின்றார்கள்?

Funny pictures இல் ஒரு இடத்தில், குழந்தையின் வாயில் சிகரெட் இருப்பதுபோல் ஒரு படம் பார்க்க நேர்ந்தது. நகைசுவைக்காக என்று ஒரு குழந்தையின் வாயில் சிகரெட் வைத்து படம் எடுக்க எப்படி முடிகின்றது என்றுதான் எனக்கு தோன்றியது.

புகைப்பவர்களுக்கு புகைத்தலை தவிர்ப்பதற்கு வழங்கப்படும் மிக முக்கியமாக 10 காரணங்கள் ஒரு இடத்தில் கொடுக்கப்பட்டிருந்தது.

10. வரி அதிகரித்துக் கொண்டு போகும் இந்த கால கட்டத்தில், புகைத்தலுக்குரிய செலவும்
அதிகரித்துக் கொண்டே போகும். இந்த செலவு அவசியம்தானா?

9. உங்கள் குடும்பத்தை நேசிப்பவரா நீங்கள் இருந்தால், அவர்களுக்கு வலியை கொடுப்பது அவசியமானதா?

8. உங்கள் நேரத்தை விரயமாக்கி, உங்களை பலவீனமானவராய் ஆக்கும் இந்த புகைத்தல் அவசியமானதா?

7. நாற்றத்தை உருவாக்கி, உங்களை ஒரு சுத்தமானவராக காட்டாத இந்த புகைத்தல் அவசியமானதா?

6. அழகான வெண்பற்களின் நிறத்தையே மாற்றி அலங்கோலமாக காட்டுவது அவசியம்தானா?

5. உங்களுக்கு நீங்களே கெளரவமற்றவராக மாறிக் கொள்வது அவசியம்தானா? புகைத்தலை விட்டு விடுவதனால், நீங்களே கண்ணியமானவராக உங்கள் நிலையை உயர்த்திக் கொள்ள மாட்டீர்களா?

4. நீங்கள் புகைத்தலை விட்டு விட்டால், புகைக்கும் மற்றவர்களை திருத்தி நல்வழிக்கு கொண்டு வர முடியுமல்லவா?

3. புகைத்தலை நிறுத்துவது கடினமானது. அதையே உங்களால் நிறுத்தி விட முடிந்தால், நீங்கள் விரும்பும் வேறு பல உபயோகமான காரியங்களை செய்வதற்கும் உங்களுக்கு தனி வலிமை கிடைக்குமல்லவா?

2. கான்சரைப் பற்றியோ, இதய நோய்கள் பற்றியோ, வேறு இது தொடர்பாக வரும் நோய்கள் பற்றியோ பயந்து கொண்டிருக்காமல், உடல் நலமுள்ளவராக உணர்வது எத்தனை இனிமையாக இருக்கும்.

1. துர்ப்பழக்கத்தை கை விடுவதன் மூலம், அல்லது தூக்கி வீசுவதன் மூலம், உங்களை நீங்களே அதிக தகுதி உடையவராக ஆக்கிக் கொள்கின்றீர்கள்.

Yes, you deserve better for yourself.

இது விடயமாக, எங்கேயோ வாசித்து, மனதுக்கு பிடித்த ஒரு வரி>…….

“மனிதனே, தவணை முறையில் கிடைக்கிறது என்பதற்காக மரணத்தைக் கூடவா வாங்க துணிந்து விட்டாய்?”

புகைத்தலை விடுவதற்காய் சிலர் நிக்கோட்டின் சுயிங்கம் பாவிக்கின்றார்கள். இந்த சுயிங்கம் கன்னம், முரசு, தொண்டையில் கான்சரை கொண்டு வரலாம் என்று சொல்கிறார்கள். இதன் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள், இதில் பக்க விளைவு இல்லை என்று சொன்னாலும், பல ஆராய்ச்சியாளர்கள் அது உண்மையல்ல என்கிறார்கள். நிக்கோட்டினின் தொழிற்பாடு அங்கேயும் இருப்பதால், பக்கவிளைவுகள் மட்டும் எப்படி இல்லாமல் போகும். நியாயமான கேள்விதானே? ஒரே ஒரு நன்மை இந்த சுயிங்கத்தால்… பக்கத்தில் இருப்பவர்களுக்கு தொந்தரவு இல்லை, அந்த சிகரெட் நாற்றத்தால் மற்றவர்களை கஷ்டப்படுத்த தேவை இல்லை :). ஆனால் குடும்ப உறுப்பினர்கள், பாசம் கொண்டவர்களுக்குத் தீராத தொல்லைதான். நிக்கோட்டின் சுயிங்கத்தில், நிக்கோட்டினுடன் ஒரு addictive drug உம் உள்ளது என்கின்றார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஒரு பழக்கத்தில் இருந்து விடுபட, இன்னொரு பழக்கத்துக்கு, அதுவும், அதே தீயவிளைவுகளைத் தரும், அடிமைப்படுத்தும் பழக்கத்துக்கு மாறுவதா?

ஆனால், சரியான consultant இன் உதவியுடன், இந்த சுயிங்கம் பாவிப்பதால், பின்னர் சிகரெட்டுடன், அந்த சுயிங்கத்தையும் கை விட்டு விடலாம் என்கிறார்கள். அது ஒரு வேளை சரியாக இருக்கலாம். மனதில் உறுதிதான் முக்கியம். அது இருந்தால், consultant இல்லாமலே கூட இந்தப் பழக்கத்தை கை விட்டு விடலாம். நமக்கு ஒன்று மிகவும் பிடித்ததாய் இருந்தாலும், அதை எம்முடன் உள்ளவர்களுக்காகவும், ஏன் முக்கியமாய் எமக்காகவும், அந்த ஒன்றை நாம் விட வேண்டும் என நினைத்தால், அந்த மன உறுதியை நமக்குள் வளர்த்துக் கொண்டால் நிச்சயம் அது முடியுமல்லவா

புகைப் பழக்கத்தை எளிதல் விரட்டலாம்

சமீபகாலமாக சமூக அக்கறை கொண்ட அரசியல்வாதிகளாலும், சமூக அமைப்புகளினாலும் புகைத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பரவலாக உருவாகியுள்ளது கண்கூடு. புகைத்தலை விட வேண்டும் எனும் எண்ணம் புகைப்பழக்கம் உடைய அனைவருக்குமே உண்டு என்கிறது ஆய்வு ஒன்று. ஆனால் பெரும்பாலானவர்கள் புகைத்தலை விட முயன்று முயன்று படு தோல்வி அடைந்தவர்களே.

உலக அளவில் புகைப் பழக்கத்துக்கு அடிமையானவர்களில் பத்து விழுக்காடு பேர் இந்தியர்கள் என்பது கவலைக்குரியது. சீனா இந்த விஷயத்திலும் முதலிடத்தில் உள்ளது, அங்குள்ள மக்களில் சுமார் முப்பது விழுக்காட்டினர் புகைப் பழக்கத்துக்கு அடிமையாய் இருக்கின்றனர்.

இன்னும் இருபது ஆண்டுகளில் புகைப் பழக்கத்தினால் இறக்கும் மனிதர்களில் 80 விழுக்காட்டினர் பிந்தங்கிய மற்றும் வளரும் நாடுகளில் இருப்பார்கள் என்பது புகைப் பழக்கத்துக்கு எதிரான போராட்டம் வலிமையடைந்தே ஆகவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.

உலக அளவில் தினமும் சுமார் 15, 000 பேர் புகைப் பழக்கத்தினால் மடிந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலை படிப்படியாய் வளர்ந்து கொண்டிருப்பது மிகப்பெரிய சவாலாய் உருவெடுத்துள்ளது.

அடுத்த நூற்றாண்டு முளைக்கும் போது நூறு கோடி பேர் புகைக்கும் பழக்கத்தினால் புதையுண்டு போயிருப்பார்கள் என்கிறது உலக நலவாழ்வு நிறுவன ஆய்வறிக்கை.

உலகெங்கும் சுமார் 200 பில்லியன் டாலர்கள் (சுமார் 88 ஆயிரம் கோடி ரூபாய் ) அரசுகளுக்கு வரியாக வந்து சேர்கின்றன சிகரெட் பொருட்கள் மூலம், ஆனால் அதில் 0.2 விழுக்காடு கூட புகைத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக அரசுகள் செலவிடுவதில்லை என்கிறது உலக நலவாழ்வின் அறிக்கை.

அரசுகள் புகைத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என நலவாழ்வு நிறுவனம் எச்சரிக்கிறது. குறிப்பாக புகையிலைப் பொருட்களுக்கான வரியை அதிகப்படுத்துகள், புகைத்தலுக்கு எதிரான விளம்பரங்களைத் தீவிரப்படுத்துதல், புகையிலை பொருட்களுக்கான சலுகைகள் அனைத்தையும் நிறுத்துதல், பொது இடங்களில் புகைத்தலை தடை செய்தல், புகையிலையின் கொடுமையை மக்களுக்குப் புரிய வைத்தல், புகைப் பழக்கத்தை விட விரும்புபவர்களுக்கு உதவுதல் என ஆறு வகைகளில் அந்த நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என அது வலுயுறுத்தியுள்ளது.

உலக நலவாழ்வு நிறுவனத்தின் அறிக்கை 179 நாடுகளின் புகை பழக்கம் குறித்த தகவல்களை துல்லியமாய் தருகிறது. அதன்படி 74 நாடுகள் மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்களில் புகைத்தலை அனுமதிக்கிறது !, உலகின் ஐம்பது விழுக்காடு நாடுகள் அரசு அலுவலகங்களில் புகைத்தலை அனுமதிக்கிறது, வெறும் இருபது நாடுகள் மட்டுமே புகைக்கு எதிரான கடினமான கொள்கைகளை வகுத்துள்ளது.

பெற்றோரின் புகைப் பழக்கம் பிறக்கப் போகும் குழந்தையைக் கூட தாக்கும் என்பது அதிர்ச்சியளிக்கும் செய்தியாகும். அதிலும் குறிப்பாக தாய்க்கு புகைக்கும் பழக்கம் இருந்தால் குழந்தையின் இதயம் பாதிக்கப்படும் என்கிறது ஆய்வு ஒன்று.

உலகின் ஐந்து மரணங்களில் ஒன்று புகைத்தலினால் வருகிறது. புகைத்தலினால் அல்சீமர் போன்ற நோய்கள் விரைவிலேயே தாக்குகிறது என்று புள்ளி விவரங்களும், மருத்துவத் தகவல்களும் தொடர்ந்து மக்களை எச்சரித்துக் கொண்டே இருந்தாலும் இன்னும் புகைப் பழக்கம் ஒழியவில்லை.

மைக்கேல் ராய்சன் மற்றும் மெஹ்மெட் எனும் மருத்துவர்கள் ஒன்றிணைந்து புகைத்தலை நிறுத்துவதற்கான வழி முறை ஒன்றைக் கண்டறிந்துள்ளனர்.

இது நான்கு படிகளைக் கொண்டது.

முதல் படி, புகை பழக்கமுடையவர் தன்னுடைய புகைப் பழக்கத்தைக் குறித்த முழு அறிவைப் பெறுதல். அதாவது ஒரு நாள் எத்தனை சிகரெட் பிடிக்கிறார், தனியாக புகை பிடிக்கிறாரா, நண்பர்களுடன் புகை பிடிக்கிறாரா ? காலையில் அதிகம் பிடிக்கிறாரா ? இரவிலா ? போன்ற அனைத்து விவரங்களையும் தயாராக்குதல்.

இரண்டாவது படி, புகைக்க வேண்டும் எனும் ஆர்வத்தைத் தூண்டும் காரணிகளைக் கண்டறிந்து விலக்குதல். உதாரணமாக சிலருக்கு காபி குடித்தவுடன் புகைக்கத் தோன்றும், சிலருக்கு உண்டபின் புகைக்காவிட்டால் தலையே வெடித்துவிடும், சிலருக்கு மாலை நேரத்தில் நண்பர்களோடு இருக்கும்போது நிறுத்தாமல் புகைக்க வேண்டும் இப்படி பலப் பல காரணிகள். இவற்றைக் கண்டறிந்து விலக்க வேண்டும். மாற்று வழிகள் யோசிக்க வேண்டும், உதாரணமாக உண்ட பின் கொஞ்ச நேரம் நடப்பது போல.

மூன்றாவது படி, நீங்கள் நீண்ட நாட்களாக புகைக்கிறீர்கள், நிறைய புகைக்கிறீர்கள் எனில் ஒரு மருத்துவரின் ஆலோசனை பெறுவது. அதாவது புகை வெறுப்பு மருந்துகள், புகைக்கு மாற்று மருந்துகள் போன்றவற்றைக் குறித்த தகவல்களுக்காக.

நான்காவது படி, புகைப்பதை நிறுத்தியதை மிகப்பெரிய சாதனையாய் கருதி, உங்களை நீங்களே பாராட்டிக் கொள்வது. காரணம் பல கோடி பேர் முயன்று முடியாததை நீங்கள் சாதித்திருக்கிறீர்கள் என்பது கர்வத்துக்குத் தக்கதே.


பெரும்பாலான புகை அடிமைகள் தங்கள் பழக்கத்தை பதின் வயதுகளிலேயே பெற்று விடுகின்றனர். எனவே தான் பதின் வயதுகளில் புகை சார்ந்த பழக்கம் வராதபடி பார்த்துக் கொள்தல் அவசியமாகிறது. குறிப்பாக அவர்களைக் கவரும் ஊடகங்கள், நண்பர்கள், சூழல் இவை புகை இல்லாததாய் இருத்தல் அவசியம்.

புகையை நிறுத்த கீழ்க்கண்ட வழிகளை முயன்று பாருங்கள்.

1. புகையை நிறுத்தவேண்டும் என மனதில் முடிவெடுங்கள். ஒரு நாளை தீர்மானியுங்கள். அன்றிலிருந்து முழுமையாக விட்டு விடுங்கள். உடனே வீட்டில் இருக்கும் லைட்டர், ஆஷ் டிரே எல்லாவற்றையும் தூக்கி வீசுங்கள். இன்று மட்டும் ஒன்று – எனும் எண்ணத்தை அறவே ஒழியுங்கள். இல்லையேல் புலி வால் பிடித்த கதையாய் மாறிவிடும்.

.
2. புகையைத் தூண்டும் காரணிகளை விலக்குங்கள். காபி குடித்ததும் புகைக்கத் தோன்றினால் காபியை விட்டு விடுங்கள். உண்டபின் சிகரெட் பிடிக்கத் தோன்றினால் சற்று தூரம் நடந்து விட்டு வாருங்கள். வழக்கமாக சிகரெட் வாங்கும் கடைப்பக்கமாய் கடைக்கண் பார்வையும் வைக்காதீர்கள்.

.
3. உடற்பயிற்சி செய்யுங்கள். யோகா பழக முடிந்தால் யோகா பழகுங்கள், காலையில் முப்பது நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்யுங்கள், புகைக்கும் விருப்பத்தை இவை மட்டுப்படுத்தும். அலுவலகங்களில் படிகளில் ஏறி இறங்குவது, நடப்பது என உங்களை உற்சாகமாய் வைத்துக் கொள்ளுங்கள்.

.
4. புகையை விட்ட சில நாட்கள் சோதனைக் காலம். நான் உனக்கு அடிமையாக மாட்டேன் – என உள்ளுக்குள் உறுதி கொள்ளுங்கள். நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.

.
5. உங்கள் சூழலை மாற்றுங்கள். புகைக்கும் நண்பர்களை நேரில் சந்திப்பதைத் தவிருங்கள், புகைக்கும் கடை பக்கமாய் ஒதுங்குவதை விடுங்கள். புது சூழலை உருவாக்குங்கள். புகைக்கத் தோன்றினால் உடலுக்கு ஊறு விளைவிக்காத சூயிங்கம் போன்றவற்றை மெல்லலாம்.

.
6. புகைக்காமல் கடந்து போகும் ஒவ்வொரு நாளையும் கொண்டாடுங்கள். உங்கள் குடும்பத்தினருக்காய் வாழும் வாழ்க்கையின் நீளம் அதிகரிக்கும் என ஆனந்தம் அடையுங்கள். பாராட்டிக் கொள்ளுங்கள், பெருமிதம் கொள்ளுங்கள்.

.
7. அலைபாயும் மனமே புகையின் தோழன். மனதை கட்டுக்குள் வைத்திருக்க தியானம், நல்ல இசை என பழகுங்கள்.

.
8. மூச்சுப் பயிற்சி பழகுங்கள். ஆழமாக மூச்சை விடும் பயிற்சி உடலுக்கு உயிர்வளியை அதிகம் கொண்டு வரும். அது உடலை தெம்பாக்கி, புகைக்கும் விருப்பத்தைக் குறைக்கும்.

.
9. ஊறு விளைவிக்காத சிகரெட் என எதுவுமே இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். சிகரெட்டை விட்டபின் சற்று உடல் எடை அதிகரிக்க வாய்ப்பு உண்டு. உங்கள் உடலின் சுரப்பிகளும், செரிமானமும் மீண்டும் சரிவர செயல்பட ஆரம்பித்ததன் அறிகுறி அது. உணவை வகைப்படுத்துங்கள். முடிந்தமட்டும் இயற்கை உணவுகளை உண்ணுங்கள்.

.
10. சரியான தூக்கம் கொள்ளுங்கள். சரியான தூக்கம் இருந்தால் உடல் உற்சாகமடைந்து தேவையற்ற சிந்தனைகள் மறையும்.


தமிழ் ஓசை களஞ்சியம் இதழில் வெளியான கட்டுரை

தமிழக அரசியல் கட்சிகளுக்கு விடுதலைப்புலிகள் நன்றி அறிவிப்பு

இலங்கை தமிழர்கள் பிரச்னையில் தமிழகத்தில் உள்ள அனைத்துக்கட்சிகளும் ஒன்றிணைந்து ஆதரவு தெரிவித்துள்ளதற்கு விடுதலைப்புலிகள் அமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதல் கடுமையாக இருந்துவருவதாகவும், இதனால், அங்குள்ள மக்கள் படும் அவலங்களை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழர்கள் தமது உரிமைக்காக கடந்த 30 ஆண்டுகளாக பெரும் தியாகங்கள் செய்துவருவதாகவும், இந்த போராட்டத்திற்கு தமிழக மக்களிடம் இருந்து தொடர்ந்து ஆதரவு மற்றும் உதவிகளை எதிர்பார்ப்பதாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர். இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழக அரசியல் கட்சிகள் போராட்டங்கள் நடத்தி குரல் கொடுத்து வருவது, துன்பப்பட்டு வரும் தமது மக்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கங்குலி ஓய்வு அறிவிப்பு : ரிக்கி பாண்டிங் கருத்து

இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் கங்குலியின் ஓய்வு அறிவிப்பைத் தொடர்ந்து சில மூத்த இந்திய வீரர்களும் ஓய்வு பெறும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாக ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போவதாக கடந்த செவ்வாய் கிழமை அன்று கங்குலி அறிவித்தார். இதனைத்தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் டெஸ்ட் போட்டித் தொடரின் கேப்டன் அனில் கும்ளேவும், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் பாண்டிங், கங்குலியின் அறிவிப்பு, இந்திய மூத்த வீரர்களில் மேலும் சிலரையும் ஓய்வு பெறும் நிலைக்குத் தள்ளியிருப்பதாகவும், இது வருத்தமளிக்கிறது என்றும் கூறினார். இதனிடையே, இந்திய கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ள தேர்வுக்குழுவினரின் மோசமான செயல்பாடுகளே, தனது அறிவிப்புக்குக் காரணம் என்று கங்குலி தெரிவித்துள்ளார்.

மின்பற்றாக்குறையைப் போக்க 2 புதிய மின்திட்டங்கள்-

தமிழகத்தில் மின்பற்றாக்குறையைப் போக்குவதற்காக, 7 ஆயிரத்து 627 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு புதிய மின் திட்டங்களுக்கான ஒப்பந்தம் இன்று முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில் கையெழுத்தானது.

இதுதொடர்பாக அரசு வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் அதிகரித்து வரும் மின்தேவைக்கு, நிரந்தரமாக மற்றும் நீண்டகால தீர்வுக்கு வழிவகுக்கும் வகையில், 7 ஆயிரத்து 627 கோடி ரூபாய் செலவில் இரண்டு புதிய மின் திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில், தமிழ்நாடு மின்வாரியமும், நெய்வேலி அனல்மின் நிலையமும் இணைந்து, 4 ஆயிரத்து 909 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்திக்கான இரண்டு மின் திட்டங்களை அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, வடசென்னை அனல் மின் நிலையத்தில், 600 மெகாவாட் மின் உற்பத்திக்காக 2 ஆயிரத்து 718 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில் இன்று தலைமைச் செயலகத்தில் கையெழுத்தானது. இதில் அமைச்சர் ஆற்காடு வீராசாமி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பருவமழை பெய்யாததால், மின் உற்பத்தி பாதிப்பு-மச்சேந்திரநாதன் பேட்டி

தமிழகத்தில் பருவமழை பெய்யாததும், காற்று இல்லாததுமே மின்வெட்டுக்கு காரணம் என்று தமிழக மின்வாரியக் கழகத் தலைவர் மச்சேந்திரநாதன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த ஆண்டைவிட, தமிழகத்தில் குறைந்த அளவே மழை பெய்ததாகவும், அதனாலேயே, மின் உற்பத்தி குறைந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதுவரை, அறிவிக்கப்பட்டிருந்த மின்வெட்டு நேரத்தைவிட கூடுதல் நேரம் மின்சாரம் நிறுத்தப்பட்டு வந்ததாக தெரிவித்த அவர், மின்வெட்டு நேரத்தை முன்கூட்டியே மக்களுக்கு தெரிவிக்கும் வகையில், இன்று முதல், மேலும் ஒரு மணி நேரம் மின்வெட்டு நீட்டிக்கப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்தார். மேலும் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.

மத்திய அரசுக்கு அளிக்கும் ஆதரவை வாபஸ்பெற வேண்டும்-ஜெயலலிதா அறிவிப்பு

இலங்கை தமிழர்கள் பிரச்னையில், மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை தி.மு.க. விலக்கிக்கொள்ள வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை அரசுக்கு, மத்திய அரசு அளித்து வரும் ராணுவ உதவியை தடுப்பதற்கு தி.மு.க. எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளார். வரும் 14 ஆம் தேதி, முதலமைச்சர் கருணாநிதி கூட்டியிருக்கும் அனைத்துக் கட்சி கூட்டம், ஒரு கண்துடைப்பு நாடகம் என்றும், எனவே, இதில் அ.தி.மு.க. பங்கேற்காது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், இலங்கைத் தமிழர்கள் பிரச்னை தொடர்பாக, மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை தி.மு.க. விலக்கிக்கொள்ளாதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பங்குச் சந்தையில் இன்று கடும் வீழ்ச்சி

இந்திய பங்குச் சந்தையில் இன்று கடும் வீழ்ச்சி ஏற்பட்டதால், முதலீட்டாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்திய பங்குச் சந்தை இன்று தொடக்கத்தில் ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் குறைந்து, 10 ஆயிரம் புள்ளிகளைத் தொட்டது. வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே சென்செக்ஸ் பத்து சதவீதம் குறைந்து, அதாவது, 1088 புள்ளிகள் குறைந்து வீழ்ச்சியடைந்தது. பின்னர், பங்குச் சந்தை சரிவில் இருந்து மீண்டது. நிதி நிலைமையை சீராக்க, ரிசர்வ் வங்கி ரொக்க கையிருப்பு விகிதத்தை 1.5 சதவீதமாக குறைத்துள்ளது. இது நாளை முதல் அமலுக்கு வருகிறது.

பங்குச் சந்தையின் சரிவால், தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு 304 ரூபாய் அதிகரித்தது. இதனிடையே, நாட்டின் பணவீக்கம், கடந்த மாதம் 27 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 11.8 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த வார இறுதியில், இது 11.99 சதவீதமாக இருந்தது

குஷ்புவும் அன்புமணியும் ஓரணியில்

அன்புள்ள மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி அவர்களுக்கு,

வணக்கம்.

சுய இனப் பாலுறவு பற்றித்தான் இந்தக் கடிதம் எழுதத் தொடங்கினேன். ஆனால், அதற்கு முன்னால் சில விஷயங்கள்.

முதலிலேயே தெளிவாக அறிவித்துவிடுகிறேன். சிகரெட்டுக்கு எதிராக நீங்களும், மதுவுக்கு எதிராக உங்கள் தந்தையும் எடுத்து வரும் முயற்சிகள் எல்லாவற்றையும் நான் பாராட்டுகிறேன். ஆதரிக்கிறேன். உங்கள் இருவருக்கும் அதற்காக என் முழு ஆதரவு உண்டு. அவற்றுக்காக ஆளுக்கொரு பூச்செண்டும் உண்டு.

சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களும் மது வகைகளும் எப்படியெல்லாம் நம் சமூகத்துக்குத் தீங்கானவை என்பது பற்றிய விவாதம் அவசியமற்றது. கொலையையும் தற்கொலையையும் குற்றங்களாக சட்டப்படி அறிவித்துள்ள சமூகத்தில், சிகரெட் புகைப்பவர்_ புகைக்காதவரைக் கொலை செய்பவராகவும், மது அருந்துபவர்_ தற்கொலை செய்து கொள்பவராகவும் கருதப் போதுமான நியாயங்கள் உள்ளன.

முதல் கட்டமாகப் பொது இடங்களில் சிகரெட் புகைப்பதைத் தடை செய்திருப்பதை வரவேற்கிறேன். ஆனால் இது போதாது. சிகரெட் தயாரிப்பு தடை செய்யப்படவேண்டும். இது உங்கள் கையில் இல்லை என்றும் ஐந்து அமைச்சகங்கள் தொடர்புள்ள பிரச்னை என்றும் சொல்லியிருக்கிறீர்கள்.

ஏராளமான புகையிலை விவசாயிகளின் வேலை வாய்ப்புகளும் பீடி,சிகரெட் தயாரிக்கும் ஆலைத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்புகளும் பாதிக்கப்படும் என்ற கவலையினால், தயாரிப்பும் விற்பனையும் தடை செய்யப்படாமல் இருக்கின்றன. இந்த சமாதானம் நியாய மானது அல்ல. அவர்களுக்கான மாற்று வேலைவாய்ப்புகளை உருவாக்குவதைப் பற்றித்தான் யோசிக்க வேண்டும்.

புகையிலைக்கு நாம் சூட்டியிருக்கிற பெயரே தவறானது. அதைப் புரத இலை என்றுதான் சொல்ல வேண்டும். மனித உடலில் சுரக்கும் புரதங்களையும் மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் புரதங்களையும் தயாரிக்க மிகச் சிறந்த தாவரங்களில் அது ஒன்று. ரத்தம் உறைவதைக் கரைக்கவும், புற்று நோயைத் தணிக்கவும் தயாரிக்கப்படும் மருந்துகளுக்குத் தேவைப்படும் மூலப் பொருட்கள் புகையிலையில் உள்ளன. பெட்ரோல் எரிபொருளுக்கு மாற்றாக பயன்படுத்தக் கூடிய எத்தனால் தயாரிக்கவும் புகையிலை பயன்படும். இந்தத் தயாரிப்பில், சோளம், கரும்பு ஆகியவற்றுக்கு நிகரான பயோமாஸ் உள்ள செடியாக புகையிலை கருதப்படுகிறது.

உலகமெங்கும் சிகரெட் கம்பெனிகளின் பண பலம்தான் புகையிலையை மாற்றுப் பயன்பாடுகளுக்குத் திருப்ப விடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கும் தெரிந்திருக்கும்.

அதே போலத்தான் மது தயாரிப்பும். மின்சாரம் தயாரிக்கவும் வண்டிகளுக்கான எரிபொருள் தயாரிக்கவும் மொலாசஸைப் பயன்படுத்தாமல் போதை திரவங்களைத் தயாரிப்பதில் திருப்பிவிட்டிருப்பது மது உற்பத்தியாளர்களின் பண பலம்தான்.

ஜனநாயக தேர்தல் அரசியல் எப்போதும் பண பலத்துக்கு அடிபணிந்துதான் செயல்பட்டாகவேண்டியிருந்தாலும், அதையும் மிஞ்சக்கூடியது மக்கள் பலம். சிகரெட்டாலும் மதுவாலும் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்துக்கு ஒருத்தரேனும் இருக்கிறார்கள். அவர்களால் அவரவர் குடும்பங்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

மக்கள் கருத்தை உங்களுக்கு சார்பாகத் திரட்டித்தான் நீங்கள் சிகரெட், மது கம்பெனிகளை எதிர்கொள்ளமுடியும். சிகரெட், மது தயாரிப்புக்குத் தடை விதிப்பதையே உங்கள் கட்சியின் கொள்கையாகச் சொல்லி, வரும் தேர்தலில் நீங்கள் மக்களைச் சந்திக்கலாம். குறைந்தபட்சம் நீங்கள் போட்டியிடும் தொகுதியில் இதையே பிரச்னையாக முன்வைத்து நீங்கள் முன்னுதாரணம் படைக்கலாம்.

அண்மையில் நீங்கள் மத்திய அமைச்சரவையிலிருந்தே விலகுவதாக மிரட்ட வேண்டிய ஒரு சந்தர்ப்பம் வந்தது. அப்படி ஏதாவது செய்வீர்கள் என்றும் எதிர்பார்த்தேன். ஆனால் நீங்கள் அப்படி எதுவும் செய்யவில்லை.

உங்கள் அமைச்சகத்திலிருந்து டெல்லி நீதிமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கு நேர் எதிரான ஒரு கருத்தை, உள்துறை அமைச்சகம் அதே மன்றத்தில் தெரிவித்தது. அது மட்டுமல்ல. உங்கள் கருத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டாம் என்று மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மல்ஹோத்ரா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இது போன்ற ஒரு கேவலம் இதற்கு முன்பு மத்திய அரசில் நிகழ்ந்தது இல்லை. ஒரு அமைச்சரின் கருத்தை, அவருடைய அமைச்சகம் நீதி மன்றம் முன்பு தெரிவித்த கருத்தை, நீதிபதி ஏற்கக்கூடாது என்று மத்திய அரசின் வக்கீலே நீதிபதியிடம் சொல்லுவது என்பது விசித்திரமானது மட்டுமல்ல, விபரீதமானதும் கூட. ஒரு தவறான முன்னுதாரணமும் கூட.

இதில் வருத்தத்துக்குரியது என்னவென்றால், உங்கள் கருத்துதான் சரியான கருத்து. அதைத்தான் உள்துறை அமைச்சகம் ஏற்கக் கூடாது என்று நீதிபதியிடம் சொல்லியிருக்கிறது.

ஓரினப் பாலுறவு எனப்படும் ஹோமோசெக்ஷுவாலிட்டியை தண்டனைக்குரிய குற்றமாக இந்திய தண்டனைச் சட்டம் 377-ம் பிரிவு வைத்திருக்கிறது. விக்டோரியா மகாராணி காலத்தில் 1861-ல் போட்ட இந்த சட்டத்தை இன்றைய பிரிட்டனே கைவிட்டுவிட்டது. தன் பால் உறவு என்பதை ஒரு நோயாக ஒரு காலத்தில் அறிவித்த ஐ.நா.வின் உலக சுகாதார நிறுவனமும் அந்தக் கருத்தை நீக்கிவிட்டது.

இந்தியாவும் இந்த சட்டத்தை நீக்க வேண்டும் என்று சென்ற வருடம் பொருளாதார அறிஞர் அமர்த்யாசென், கேப்டன் லட்சுமி, கிரீஷ் கர்னாட், அருந்ததி ராய், குல்தீப் நய்யார், ராஜ்தீப் சர்தேசாய், அபர்ணா சென் முதலிய 250 பிரமுகர்கள் உங்கள் பிரதமரிடம் கோரிக்கை வைத்தார்கள். பாவம், அவருக்கு புஷ் சொல்வது மட்டும்தானே காதில் விழும். இந்தக் கோரிக்கையைக் கண்டுகொள்ளவே இல்லை.

நீங்கள் இந்தச் சட்டத்தைக் கைவிட இன்னொரு சரியான காரணம் சொல்லியிருக்கிறீர்கள். இந்தியாவில் இருக்கும் ஓரின உறவாளர்களில் 80 சதவிகிதம் பேருக்கு எய்ட்ஸ் நோய் உள்ளது. இந்த சட்டத்தின்படி அவர்களுக்கு சிகிச்சை தரும் டாக்டர் முதல் சமூக சேவகர் வரை எல்லாரையும் தண்டிக்கலாம் என்ற அபத்தத்தைச் சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள்.

ஓரின உறவு, தண்டனைக்குரிய குற்றம் என்பதை நீக்கினால் தான், அந்த வாழ்க்கைமுறை உள்ளவர்களில் எய்ட்ஸ் தொற்றியவர்கள் பகிரங்கமாக வந்து சிகிச்சை பெற முடியும். எய்ட்ஸ் பரவுவதைத் தடுக்க இது அவசியம் என்று நீங்கள் சொன்னதைத்தான் கண்டுகொள்ளவேண்டாம் என்று நீதிபதியிடம் மத்திய அரசு வக்கீல் சொல்கிறார். இதைக் கண்டித்து நீங்கள் ராஜினாமா செய்வதாக மிரட்டியிருக்க வேண்டாமா?

போகட்டும். அமைச்சரவையில் உங்கள் கருத்துக்கு ஆதரவு தருவோரைத் திரட்டிச் சென்று பிரதமரிடம் முறையிடப் போவதாகச் சொல்லியிருக்கிறீர்கள். உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.

எய்ட்ஸ் பரவாமல் தடுக்கவும் பாதிக்கப்பட்ட ஓரின உறவாளர்களைக் காப்பாற்றவும் நீங்கள் பேசியதை உங்கள் கட்சியினரும் தமிழகத்தில் இருக்கும் கலாசாரக் காவல்காரர்களும் இதுவரை எதிர்த்துப் பேசாமல் இருப்பது எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது.

``தமிழ்நாட்டில் ஓரின உறவாளர்களே கிடையாது. அது சிலப்பதிகார மரபுக்கு விரோதமானது. அப்படி சிலர் இருப்பதாகவும் அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்றும் அன்புமணி குரல் கொடுப்பது தமிழ்ப் பண்பாட்டுக்கு விரோதமானது. தமிழகத்து ஆண் சிங்கங்களை இழிவுபடுத்துவதாகும்'' என்று கூக்குரல் எழுப்பி, இத்தனை நேரம் உங்கள் மீது மஞ்சக்குப்பம் முதல் களியாக்காவிளை வரை 144 கோர்ட்டுகளில் வழக்குப் போடாமல் அவர்கள் இருப்பது எத்தனை பெரிய ஆச்சரியம் !

நடிகை குஷ்பு உங்களைப் போலவே எய்ட்ஸ் பரவுவதைத் தடுக்க, பாதுகாப்பான செக்ஸ் வைத்துக் கொள்வதைப் பற்றிக் கருத்து சொல்லப் போய்த்தானே அவருக்கு எதிராக உங்கள் கட்சிக்காரர்களும் கலாச்சாரக் காவலர்களும் பொங்கியெழுந்தார்கள்? இன்னும் அந்த வழக்குகள் அப்படியே இருக்கின்றன.

டாக்டர் அன்புமணி அவர்களே, தயவுசெய்து அந்த வழக்குகளை திரும்பப் பெறச் சொல்லுங்கள். குஷ்புவிடம் அவர்களை வருத்தம் தெரிவிக்கச் சொல்லுங்கள். கருத்து ரீதியாக, நீங்களும் குஷ்புவும் ஓரணியில்தான் இருக்கிறீர்கள் என்பதை உங்கள் கட்சியினர் உணரட்டும்.
ஒரு சமூகத்தில் சிகரெட், மது முதலியவை மட்டுமல்ல, பண்பாடு என்ற பெயரில் பிற்போக்கான மனநிலையில் இருப்பதும் ஒரு போதைதான். எல்லா போதைகளிலிருந்தும் சமூகத்தை மீட்கும் சக்தியும் கடமையும் உங்களுக்கு இருக்கிறது. அந்தக் கடமையை நீங்கள் செய்யும்போதெல்லாம் என்னைப் போன்றவர்கள் நிச்சயம் உங்களை ஆதரிப்போம்..

இந்த வாரப் பூச்செண்டு

இலங்கை ராணுவம் அங்குள்ள தமிழர்கள் மீது குண்டு வீசி நடத்தும் தாக்குதலை நிறுத்த இந்திய அரசைத் தலையிட வைக்கத் தன்னால் முடியாது என்று உணர்ந்து மக்களையே பிரதமருக்கு தந்தி அனுப்பும்படி சொல்லி விட்டதற்காக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கு இ.வா.பூ.

இந்த வாரப் பரிதாபம்

மின்சாரத் தட்டுப் பாட்டால் தேர்தலில் தோல்வி ஏற்படுமோ என்ற பயம் உள்ளது. இதை நினைத்தால் இரவில் தூக்கம் வருவதில்லை & அமைச்சர் ஆற்காடு வீராசாமி.

இந்த வாரக் குட்டு

129 பூச்செண்டுகளுடன் நாங்கள் காத்திருந்தும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளாமல், பெரியார் எழுத்தையும் கருத்தையும் நாட்டுடைமையாக்கத் தவறிய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கு 129 குட்டுகள்.

நன்றி குமுதம்

அமெரிக்கர்,2 ஜப்பானியருக்கு இயற்பியல் நோபல் பரிசு

அணு இயற்பியல் தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக 2008-ம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசுக்கு 2 ஜப்பானியர், ஒரு அமெரிக்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.ராயல் ஸ்வீடிஷ் அறிவியல் அகாதெமி இந்த அறிவிப்பை செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

பரிசு பெற்ற அமெரிக்க விஞ்ஞானியின் பெயர் யாசிரோ நாம்பு. சிகாகோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர். அணு இயற்பியல் சார்ந்த கண்டுபிடிப்பு தொடர்பாக பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பரிசுத் தொகையான 14 லட்சம் டாலரில் பாதியை இவர் பெறுவார். பரிசுத் தொகையின் அடுத்த பாதியை ஜப்பானின் மகோடா கோபயாஷியும் மஸ்காவா தோஷிஹைடும் பகிர்ந்துகொள்வர்.

பரிசளிப்பு விழா ஸ்டாக்ஹோமில் டிசம்பர் 10-ம் தேதி நடைபெறும்.

யாசிரோ நாம்பு

இவர் ஜப்பானில் 1921ல் பிறந்தார். ஜப்பானிய வம்சாவளி அமெரிக்க இயற்பியல் விஞ்ஞானியான இவர் உல்ப் பரிசு, திராக் பதக்கம், சகுராய் பரிசு என பல்வேறு பரிசுகளை வென்றுள்ளார். உபஅணு இயற்பியல் சார்ந்த புதிய கண்டுபிடிப்புக்காக 2008ம் ஆண்டுக்கான நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் 1950ல் ஒசாகா சிட்டி பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியர் பணியில் அமர்ந்தார். தற்போது ஓய்வுபெற்று சிகாகோ பல்கலைக்கழகத்தின் கெ?2;வ பேராசிரியராக உள்ளார்.

மஸ்காவா

தோஷிஹைடு மஸ்காவா 1940ம் ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி பிறந்தார். ஐஷி மாவட்டத்தைச் சேர்ந்தவர். நகோயா பல்கலைக்கழகத்தில் 1962ல் பட்டம் பெற்று, அதே பல்கலைக்கழகத்தில் 1967ல் பிஎச்டி பட்டம் பெற்றார்.

தற்போது கியாடோ சாங்யோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார்.

கோபயாஷி

ஜப்பானில் உள்ள நகோயா பகுதியில் 1944ம் ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி பிறந்தார் மகோடா கோபயாஷி. இவருக்கு மிகவும் பிடித்தமான துறை உயர் ஆற்றல் இயற்பியல். இவர் படித்தது நகோயா பல்கலைக்கழகம். சகுராய் பரிசு (1985), ஜப்பான் அகாதெமி பரிசு (1985), அசாகி பரிசு (1995) என பல்வேறு பரிசுகளை வென்றவர்.

நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள மற்றொரு விஞ்ஞானியான தோஷிஹைடு மஸ்காவாவும் இவரும் சேர்ந்து எழுதிய ஆய்வுக் கட்டுரை வெகுவாக பாராட்டப்படுகிறது. துணைஅணு நுண்பொருள்களின் 3 குடும்பங்கள் இயற்கையில் இருப்பதை கணிக்க உதவும் கண்டுபிடிப்புக்காக இந்த இருவருக்கும் நோபல் பரிசு தரப்படுகிறது.

ஜார்ஜ்புஷ் மீது ஒபாமா சரமாரி புகார்:

அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த மாதம் (நவம்பர்) 4- ந் தேதி நடக்கிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் ஜான்மெக்கேனும், ஜன நாயக கட்சி சார்பில் கறுப்பர் இனத்தை சேர்ந்த ஒபாமாவும் போட்டி யிடுகிறார்கள்.

தேர்தல் நெருங்கி வருவதை தொடர்ந்து இரு வரும் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரு கிறார்கள்.

இந்த நிலையில் ஒபாமா மாவும், ஜான் மெக்கேனும் நேரடியாக ஒரே மேடையில் நேருக்கு நேர் விவாதம் நடத்தினார்கள். 2- வது முறையாக டெக்னிசி மாகா ணத்தில் நேருக்கு நேர் ஒரே மேடையில் விவாதம் நடந்தது.

அப்போது ஜார்ஜ்புஷ் மீது ஒபாமா சரமாரியாக புகார்களை அள்ளி வீசினார். இவரது புகார்களுக்கு பதில் அளிக்க முடியாமல் ஜான் மெக்கேன் திணறி னார். அமெரிக்க பொருளா தாரத்தை ஜார்ஜ் புஷ் சீரழித்து விட்டார். ஜார்ஜ்புஷ்சின் பொருளாதார கொள்கை கள் தோல்வி அடைந்து விட்டன என்றும் ஒபாமா ஆதாரத்துடன் விளக்கி னார். ஜார்ஜ்புஷ்சின் கொள்கை களை ஆதரிக்கும் ஜான் மெக் கேன் இதற்கு பதில் அளிக்க முடியவில்லை.

இந்த நேருக்கு நேர் விவாதத்தை அமெரிக்க மக்கள் டெலிவிஷனில் பார்த் தனர்.

இந்த விவாதத்தை அடிப் படையாக வைத்து பொது மக்களிடம் ஒரு நிறுவனம் கருத்து கணிப்பு நடத்தியது. இதில் ஜான்மெக்கேனை விட ஒபாமாதான் புத்தி சாலி, திறமையானவர். அவர்தான் அதிபராக வர தகுதி உள்ளவர் என்று பெரும் பாலானவர்கள் கருத்து தெரிவித்தனர். ஒபாமாவுக்கு 65 சதவிதத்தினரும், மெக் கேனுக்கு 28.4 சதவீதத் தினரும் ஆதரவு தெரிவித்தனர்.

தமிழக மீனவர்கள் அனைவரும் படகுகளை எடுத்துக்கொண்டு இலங்கை செல்வோம்

தமிழக மீனவர்கள் அனைவரும் படகுகளை எடுத்துக்கொண்டு இலங்கை செல்வோம். அங்குள்ள சிங்களர்களை ஒரு கை பார்ப்போம்--ராமதாஸ்
தராக்கிராம் உலகத்தமிழர் செய்தி இலங்கையில் உண்மை நிலையை அறிய அனைத்து கட்சியை சேர்ந்த 10 பேர் எம்.பி.க்கள் குழுவை அனுப்புங்கள் என்று முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டித்து, பா.ம.க. சார்பில் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே. மூர்த்தி எம்.பி., பொன்னுச்சாமி எம்.பி., பாடலாசிரியர் அறிவுமதி, இயக்குனர் சீமான், ஓவியர் வீரசந்தானம் உள்பட பா.ம.க. எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை ஏற்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-

இலங்கையில் ஈழ தமிழர்களுக்கு, மனித உரிமை ஆர்வலர்கள் சொல்லும் அளவுக்கு கொடுமை நடக்கிறது. தமிழன் தூங்குகிறான். அங்கு போடப்படும் குண்டுகளின் சத்தம் முதல்-அமைச்சர் கருணாநிதியின் காதில் விழவில்லையா?.

நீங்கள் 5 முறை முதல்-அமைச்சராக இருந்துள்ளீர்கள். 6-வது முறையாகவும் நீங்கள் ஆளுவதற்கு நாங்கள் உங்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம். ஆனால், ஈழ தமிழகம் மலரும் என்று தீர்மானம் நிறைவேற்றுங்கள். தமிழக மீனவர்கள் அனைவரும் படகுகளை எடுத்துக்கொண்டு இலங்கை செல்வோம். அங்குள்ள சிங்களர்களை ஒரு கை பார்ப்போம்.

விடுதலைப்புலிகளை ஆதரித்ததால் அன்று மத்திய அரசு ஆட்சியை கலைத்துவிட்டதாக கூறினீர்கள். இப்போது, மத்தியிலும் உங்களது தயவில்தானே ஆட்சி நடக்கிறது. இப்போது அந்த பிரச்சினை குறித்து பேசவேண்டியது தானே?. அப்படி ஆட்சியை கலைத்தால் நாங்கள் சும்மா விட்டு விடுவோமா என்ன?. நீங்கள் வரலாற்றில் இடம்பெற வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். நீங்கள் பேசுவதை உலக தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள். உங்கள் வாய் சொல்தான் அருமருந்து. உடனே, இலங்கை தமிழர் பிரச்சினையில் தலையிடுங்கள். முதல்-அமைச்சர் கருணாநிதி அவர்களே 10 நாட்களுக்குள் நல்ல முடிவு எடுங்கள்.

தி.மு.க. எம்.பி.க்கள், மற்றும் பா.ம.க., பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளை சார்ந்த எம்.பி.க்கள் அடங்கிய 10 பேர் குழுவை இலங்கையில் உள்ள வவுனியாவுக்கு அனுப்புங்கள். அவர்கள் அங்குள்ள உண்மை நிலையை கண்டறிந்து மத்திய அரசுக்கு சொல்லட்டும்.

தற்போது சீனாவிடம் இருந்து இலங்கை வாங்கியுள்ள ரேடார் கருவி முப்பரிமானம் கொண்டது. இது இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியை மட்டும் அல்லாமல், தென் இந்தியாவையும் காட்டிக் கொடுக்கும். அது முதல்-அமைச்சர் கருணாநிதிக்கும், உளவுப் பிரிவுக்கும் தெரியாதா?.

இன்னும் 10 நாட்களில் முடிவு எடுக்காவிட்டால் கருஞ்சட்டை படைகள் 1,000 பேர் ஒன்றிணைந்து சென்னை தீவுத்திடலில் தீப்பந்தம் ஏந்தி, ஈழ தமிழர்களுக்காகவும், தமிழ் ஈழம் விடுதலைக்காகவும் குரல் கொடுப்போம்.

மேலும், பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்திற்குள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவார்கள். அவர்களை நீங்கள் உடனே கைது செய்து சிறையில் அடையுங்கள். விட்டு விடாதீர்கள். அடுத்து எங்கள் கட்சி எம்.பி.க்கள், இளைஞர் படையினர், மாணவர்கள் படையினர், மகளிர் படையினர் அனைவரும் உண்ணாவிரதம் இருப்பார்கள். அவர்கள் அனைவரையும் சிறையில் அடையுங்கள். இன்றைக்கு தமிழகத்தில் உள்ள எல்லா கட்சிகளும் சேர்ந்து, இலங்கை அரசை கண்டித்தும், தமிழ் ஈழத்தை ஆதரித்தும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அப்போது தான் இந்திய அரசு ஒப்புதல் தரும்.

உடனே, ஈழ தமிழர் பிரச்சினைக்கு ஒரு நல்ல முடிவெடுங்கள். தமிழ் ஈழம் மலர்ந்தே தீரும்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.

பொருளாதார நெருக்கடியை கையாள அனைத்து நாடுகளும் முயலவேண்டும்

அனைத்து நாடுகளும் தமது முயற்சிகளை ஒன்றாக ஒருங்குபடுத்தும் நிலையில் மாத்ததிரமே

உலக நிதி நெருக்கடியை சரியாகக் கையயாள முடியும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைவரான டொமினிக் ஸ்டாரொஸ் கான் தெரிவித்துள்ளார்.

உலகம் பொருளாதார வீழ்ச்சியின் பிடியில் இருப்பதாகக் கூறிய அவர்,

அபிவிருத்தியடைந்துவரும் பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளுக்கு சர்வததேச நாணய நிதியம் அவசர கடன்களை வழங்கக்கூடியதாக இருக்கும் என்றும் அறிவித்துள்ளார்.

சென்னையில் மறியற் போராட்டம் நடத்திய ம.தி.மு.க பொது செயலாளர் திரு. வை.கோ கைது

சென்னையில் மறியற் போராட்டம் நடத்திய ம.தி.மு.க பொது செயலாளர் திரு. வை.கோ உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது

இலங்கை இராணுவத்தினருக்கு இந்திய அரசு வழங்கி வரும் இராணுவ உதவிகளை தடுத்து நிறுத்திட வலியுறுத்தி ம.தி.மு.க சார்பில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் அக்கட்சியின் பொது செயலாளர் திரு. வை. கோ உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இலங்கையில் தமிழர்கள் மீது இராணுவ தாக்குதல் நடத்தி வரும் இலங்கை அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இப்பிரச்சினையில் இந்திய அரசு, அந்நாட்டு அரசிற்கு உதவி வருவதை கண்டித்தும் ம. தி. மு. க சார்பில் சென்னையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகம் முன் மறியல் போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சியில் சார்பில் அறிவிக்கப்பட்டது. மேலும் மறியலுக்கு முன் சென்னை அண்ணா சாலையில் உள்ள காயிதே மில்லத் பெண்கள் கல்லூரி அருகேயிருந்து ஊர்வலம் புறப்படும் என்றும் தெரிவிக்கபட்டது.

இதனால் காலையில் இருந்தே இன உணர்வாளர்களும், கட்சியினரும் ஏராளமானோர் திரண்டனர். இந்த மறியல் போராட்டத்திற்கு கட்சியின் பொது செயலாளர் திரு. வை. கோ தலைமை தாங்கினார். தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் திரு.பழ. நெடுமாறன் கூட்டத்திற்கு வந்து தனது ஆதரவை தெரிவித்தார்.

அ.தி.மு.க சார்பில் அக்கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் திரு. முத்துசாமி கலந்து கொண்டார். கூட்டத்தில் உரையாற்றிய திரு. வை. கோ இப்பிரச்சினையில் தமிழக அரசும், இந்திய அரசும் துரோகம் இழைத்து வருவதாக குற்றஞ்சாட்டினார். தமிழர்களை ஈவிரக்கமில்லாமல் கொன்று குவித்து வரும் இலங்கை அரசாங்கத்திற்கு இந்திய அரசு இராணுவ உதவி வழங்கிட கூடாது என்றும், சிங்கள கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சுட்டு கொல்லப்படுவது தடுத்து நிறுத்தப்படவேண்டும் என்றும் வலியுறுத்தினார். அங்கு போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு உணவு, உடை, மருந்து போன்ற அடிப்படை வசதிகளை கூட செய்து கொடுக்க மறுக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தார்.

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான எனது நிலை தொடரும் என்றும், அவர்களது சுதந்திர போராட்டத்தை ம.தி.மு.க தொடர்ந்து ஆதரிக்கும் என்று தெரிவித்தார். பின் பேரணியாக புறப்பட்டு, மத்திய அரசு அலுவலகம் முன்பாக மறியல் ஆர்பாட்டம் செய்ய முயன்ற போது, பொலீஸார் அவரையும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட அவரது கட்சி தொண்டர்களையும் கைது செய்தனர்.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாய் இருக்கும் வில்லன்கள் யார்

மிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாய் இருக்கும் வில்லன்கள் யார்? அழிக்க வேண்டிய நரகாசுரர்கள் யார் என்று சமூக சிந்தனையுள்ள சில பிரபலங்களைக் கேட்டோம். அவர்கள் தந்த லிஸ்ட் இது:

சத்யராஜ்

1.கடவுள்

2.மதம்

3.ஜாதி

4.சாமியார்

5.நம்ம ஊர் அரசியல்

6.ஏமாற்றுபவர்கள்

7.ஏமாறுபவர்கள்

8.பயிலாமை

9.முயலாமை

10.இயலாமை

தமிழச்சி

1.உலகத்திலேயே இரண்டாவது பெரிய கடற்கரையான மெரினாவை பாழ்படுத்தும் பீச் குப்பை.

2.சிக்கன், மட்டன் வகைகளைப் பொரித்து பாக்கெட்டில் விற்கும் கம்பெனிகள்.

3.சிக்னலில் காத்திருக் கும் டூ வீலரைக்கூட இடித்துக்கொண்டு நிற்கும் தண்ணீர் லாரிகள்.

4.சாலையைக் கடக்கும் போதுகூட இடை விடாமல் பேச வைக்கும் செல்போன்கள்.

5.உலகம் வெப்பமயம் ஆவது பற்றி கவலைப்படாமல் புகையைக் கக்கும் பேருந்துகள்.

6.அமெரிக்கத் தூதரகம் முன்பு கால் கடுக்க காத்துக்கிடக்கும் பெருங்கூட்டம்.

7.நடிகர்களின் கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்யும் ரசிகர்கள்.

8.பெண்களை அழ வைக்கும், வில்லியாகக் காட்டும் டி.வி. சீரியல்கள்.

9.முதியோர் இல்லங்களில் அதிகரித்து வரும் முதியோர்கள்.

10.கொஞ்சம்கூட குறையாத, பேருந்துகளில் தொங்கிச் செல்லும் இளைஞர்களின் எண்ணிக்கை.

சுப.வீரபாண்டியன்

1.சாதீய அமைப்பும் அதில் மக்களுக்கு உள்ள பிடிப்பும்.

2.திரைப்படத்திலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் தொலையும் நேரம்.

3.சுற்றுச்சூழலில் அக்கறையில்லாமை.

4.இந்துத்துவ வன்முறை அரசியல்.

5.ஆற்றுநீர் உரிமை மறுக்கும் அண்டை மாநிலங்கள்.

6.முட்புதராய் மண்டிக்கிடக்கும் மூடநம்பிக்கைகள்.

7.கையூட்டு வாங்கியும், கொடுத்தும் பழகிப்போன சமூகம்.

8.பொதுவாழ்க்கைக்கு வரத் தயங்கும் நேர்மையாளர்கள்.

9.உலகமயமாதலில் நாம் இழந்துகொண்டிருக்கும் இன்றைய வாழ்க்கை.

10.இன்னும் அழுத்தமாய் மேலோங்கி நிற்கும் ஆணாதிக்கம்.

நல்லகண்ணு

1.காடுகள் அழிப்பு

2.குடிதண்ணீர் வியாபாரம்

3.மணல் கொள்ளை

4.மக்கள் நலத்திட்டங்களில் மக்களை ஈடுபடுத்தாமல் இடைத் தரகர்களிடம் ஒப்படைப்பது.

5.லஞ்ச ஊழல்.

6.சமூக விரோதிகள் - அரசு அதிகாரிகள் கூட்டாட்சி.

7.கல்வி, மருத்துவத் துறையில் தனியார்களின் அதிகரிப்பு.

8.ஜாதி மத அரசியல்

9.தாய்மொழி புறக்கணிப்பு

10.வாரத்தில் ஏழு நாட்களிலும் 24 மணி நேரமும் பார்க்கப்படும் தொலைக்காட்சி..

நன்றி குமுதம்

அண்ணா நூற்றாண்டு விழா கைதிகள் விடுதலையில் ஏகப்பட்ட குளறுபடி

பசுமை நிறைந்த நினைவுகளே!' என்று ஜெயிலுக்குள் பாட்டெல்லாம் பாடினார்களா என்று தெரியாது! ஆனாலும் அண்ணா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலையாகிப் பறந்து விட்டார்கள். அவர்களுடன் இதுநாள் வரை பழகிக் களித்த மற்ற பிரிவு கைதிகள் மட்டும் ஏக விரக்தியில் கிடக்கிறார்கள். கைதிகள் விடுதலையில் ஏகப்பட்ட குளறுபடிகள் இருப்பதாகத் தகவல் ஒருபுறம் கும்மியடிக்க, மற்றொருபுறம், ``விடுதலை லிஸ்டில் இருந்த என் மகனை விடுவிக்காமல் விட்டு விட்டார்கள்'' என்று ஒரு மூதாட்டி குமுறிக் கொண்டிருக்கிறார்.

அந்த மூதாட்டியின் பெயர் கன்னியம்மாள். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்த விதவைப் பெண். இவரது ஒரே மகன் மணிகண்டன், ஆயுள் தண்டனைக் கைதியாக மதுரை ஜெயிலில் இருக்கிறார். மகன் விடுதலையாகிவிடுவான் என்ற நினைப்பில் இன்னும் மதுரை ஜெயில் வாசலில் தவம் கிடக்கும் கன்னியம்மாளை நாம் சந்தித்துப் பேசினோம்.

``என் மகன் மணிகண்டன் கயத்தாறில் நடந்த ஒரு கொலை வழக்குத் தொடர்பாக 2000-ம் ஆண்டில் ஆயுள் தண்டனை பெற்றான். மதுரை மத்திய சிறையில் ஏழாண்டு காலம் சிறைவாசத்தைக் கழித்துவிட்டான். `அண்ணா நூற்றாண்டை முன்னிட்டு என்னையும் விடுவிக்கப் போகிறார்கள். அதற்கான ஆவணங்களில் கையெழுத்துப் போட்டு விட்டேன். விடுதலையானதும் ஒழுக்கமாக வாழ்வேன்' என்று எனக்குத் தகவல் சொல்லி அனுப்பினான்.

அண்ணா பிறந்தநாளன்று அதிகாலையில் இருந்து மதுரை ஜெயில் வாசலில் பழிகிடந்தேன். அன்று இரவாகியும் என் மகன் மட்டும் விடுதலையாகவில்லை. ஏமாற்றத்துடன் வீடு திரும்பினேன். அதன்பிறகு என் மகனைப் பார்க்க மனு போட்டும் அதிகாரிகள் அனுமதி தரவில்லை. இதற்குள் உறவினர் ஒருவர் என் மகனை சிறையில் சந்தித்தபோது அவன், அதிகாரிகள் தன்னிச்சையாக தனது விடுதலையைத் தடுத்து விட்டதாகக் கூறி அழுதிருக்கிறான்.

ஏழ்மை நிலையில் இருக்கும் நான், இறுதிக்காலத்தை என் மகனின் ஆதரவோடு கழிக்க நினைத்திருந்தேன். அந்த எண்ணத்தில் மண் விழுந்துவிட்டது. இதுகுறித்து தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்குக் கடிதம் எழுதியிருக்கிறேன். என் மகன் விடுதலையானால் சரி'' என்று கண்களைத் துடைத்துக் கொண்டார் கன்னியம்மாள்.

மணிகண்டன் பற்றி மதுரை சிறைக் கண்காணிப்பாளர் கண்ணனிடம் நாம் பேசினோம்.. "மணிகண்டன் மீது மேலும் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. குறிப்பிட்ட தேதிக்குள் அந்த வழக்கில் அவர் பெயில் கூட பெறவில்லை. அதனால்தான் அவரை விடுவிக்க இயலவில்லை!'' என்றார் அவர்.

கன்னியம்மாளின் வக்கீல் பெ. விஜயராகவனிடம் நாம் இதுபற்றிப் பேசியபோது, ``நிலுவையில் வழக்கு இருந்தால் ஒரு கைதியை விடுவிக்க வழியில்லை என ஜெயில் அதிகாரி கூறியிருப்பது தவறு. மதுரையைச் சேர்ந்த கனகு என்பவர் ஆயுள்தண்டனைக் கைதியாக இருந்தார். இவர் பரோலில் போயிருக்கும் போது ஒருவரை வெட்டியதாக இவர் மீது வழக்குத் தொடரப்பட்டு அது நிலுவையில் இருக்கிறது. அந்த கனகு இப்போது விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். இதுபோல பல உதாரணங்களைக் காட்டமுடியும். அப்படியிருக்கையில், மணிகண்டனை மட்டும் ஏன் விடுதலை செய்யவில்லை? விடுதலை செய்யப்படுபவர்கள் லிஸ்டில் இருந்த மணிகண்டனின் பெயர் கடைசி நேரத்தில் நீக்கப்பட்டு அதிகாரிகள் வேறு பெயரைச் சேர்த்தார்களா என்பது தெரியவில்லை. இது ஜெயில் அதிகாரிகளின் தவறா?அல்லது அரசின் தவறா? இது தொடர்பாக நியாயம் கேட்டு ஐகோர்ட் செல்லப்போகிறோம்'' என்றார் விஜயராகவன்.

சிறை அதிகாரி ஒருவரிடம் நாம் பேசியபோது, அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி கைதிகளை விடுவித்ததில் நடந்த குளறுபடிகளைப் பட்டியலிட்டார் அவர்.

``ஒரு கொலை வழக்கில் முதல் குற்றவாளிக்கு ஆயுள்தண்டனையும், அடுத்த குற்றவாளிக்கு பத்தாண்டு தண்டனையும் கிடைக்கிறது என வைத்துக் கொள்வோம். இப்போது அண்ணா நூற்றாண்டையொட்டி ஏழாண்டு காலம் தண்டனை அனுபவித்த ஆயுள்தண்டனைக் கைதி விடுதலையாகிவிட, அவரைவிட குறைவான குற்றம் செய்த 10 ஆண்டு தண்டனைக் கைதி உள்ளே இருக்கிறார். இதில் நியாயம் இருப்பதாகத் தெரியவில்லையே?

அதுபோல கொலைக்குற்றம் செய்த ஆயுள் தண்டனைக் கைதிகள்கூட விடுதலையாகிப் போய்விட முடிகிற நிலையில், குறைவான குற்றம் செய்தவர்கள் ஜெயிலில் தொடர்ந்து கிடந்து குமைந்து கொண்டிருக்கிறார்கள். இது பல கைதிகளின் மனங்களில் விரக்தியை ஏற்படுத்தியிருக்கிறது. மதுரை ஜெயிலில் தொண்ணூறு வயதான முதியவர் ஒருவர் இருக்கிறார். அவருக்குப் பத்தாண்டு ஜெயில் தண்டனை. அவர் ஏழாண்டுகளை முடித்து விட்டார். ஆனால் அவர் ஆயுள் தண்டனைக் கைதி இல்லை என்பதால் அவருக்கு விடுதலை கிடைக்கவில்லை.

அதுபோல மதுரை ஜெயிலில் பிரேமஸ்ரீ என்னும் இலங்கை கைதி ஒருவர் இருக்கிறார். சாக்பீஸ், சோப் போன்றவற்றில் அருமையாக சிற்பம் செய்யக்கூடியவர் அவர். அதன் மூலம் சம்பாதித்தும் வருகிறார். போதைப் பொருள் கடத்தியதாக பத்தாண்டு ஜெயில் தண்டனையும், மூன்று லட்ச ரூபாய் அபராதமும் அவருக்கு விதிக்கப்பட்டது. அபராதம் கட்ட முடியாததால் கூடுதலாக ஒன்பதாண்டுகள் ஜெயில் தண்டனை கிடைத்தது. அவர் பத்தாண்டுகளை சிறையில் கழித்துவிட்டார்.

அண்ணா பிறந்தநாளையொட்டி ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலையானதைப் பார்த்து தனக்கு விடுதலை கிடைக்கவில்லையே என்ற ஏக்கத்தில் அவர் ஜெயிலில் உள்ள ஒரு புளியமரத்தின் உச்சியில் ஏறி தற்கொலைக்கு முயன்றார். ஜெயில் அதிகாரிகள், தீயணைப்பு அதிகாரிகள் முயற்சித்தும் அவரைக் காப்பாற்றி கீழே இறக்க முடியவில்லை. கடைசியில் கருப்பு என்கிற கைதி விறுவிறுவென மரத்தில் ஏறி, குற்றுயிரும் குலையுயிருமாக இருந்த பிரேமஸ்ரீயைக் காப்பாற்றினார். இப்படி பல சம்பவங்கள் ஜெயில்களில் நடந்து வருகின்றன.

பரோலில் போன கைதி லேட்டாக வந்தால், அதை `பரோல் எஸ்கேப்' என்பார்கள். இந்த பரோல் எஸ்கேப்பைக் காரணமாகக் காட்டியே மதுரைச் சிறையில் சுமார் 25 பேருக்கு விடுதலை கிடைக்கவில்லை. வெறும் ஆறு மணி நேரம் லேட்டாக வந்தவர்கள் விடுதலையாக முடியாமல் ஆறாண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது வேதனைதானே?'' என்றார் அந்த சிறை அதிகாரி.

ஒட்டகம் திருடிய பெரிய குற்றவாளிகள் உற்சாகமாக விடுதலையாகிப் போய் விட, முட்டை திருடிய சிறிய குற்றவாளிகள் சிறைக்கம்பிகளுக்குள் இன்று குமைந்து கொண்டிருக்கிறார்கள். அண்ணா நூற்றாண்டு விழாவில் ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலையானதன் பின்னணியில் இத்தனை வேதனைகள் இருக்கிறதா என்ற விரக்தி நம்மையும் தொற்றிக்கொள்ள, அவரிடம் இருந்து விடை பெற்றோம்

நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive