தென் கொரியாவின் சியோல் நகரிலுள்ள மூன்றே கால் மைல் நீளமான ஹான் ஆற்றை,
அதற்கு மேலாக குறுக்கே கட்டப்பட்டிருந்த கயிற்றில் 11 நிமிடங்களில் கடந்த சீனாவைச் சேர்ந்த யேக்புஜியாங் மெய்மிதிலி சாதனை படைத்துள்ளார்.
சியோலின் இரண்டாவது சர்வதேச கயிற்றில் நடத்தல் வெற்றிக் கிண்ணப் போட்டியின் போதே அவர் இந்த சாதனையை நிறைவேற்றியுள்ளார்.
இந்த மூன்று நாள் போட்டியில் கலந்து கொண்ட ஏனைய 26 பேருடன் போட்டியிட்டு வெற்றி பெற்று வெற்றிக் கிண்ணத்துடன் 20,000 டொலர் பெறுமதியான பணப் பரிசையும் யேக்புஜியாங் சுவீகரித்துக் கொண்டார்.
இப்போட்டியில் கலந்து கொண்ட கொலம்பியாவைச் சேர்ந்த அலன் மார்ட்டினஸ் 11 நிமிடங்கள் 23 செக்கன்களில் மேற்படி ஆற்றைக் கடந்து இரண்டாமிடத்தை பெற்றுள்ளார்.
கடந்த வருட வெற்றியாளரான சீனாவைச் சேர்ந்த அபுதுஸாதயர் வுஜியாபுதுல்லா, 11 நிமிடங்கள் 28 செக்கன்களில் இந்த ஆற்றைக் கடந்து போட்டியில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
20 வயதான யேக்புஜியாங், தனது குடும்ப பாரம்பரிய கலாசாரத்துக்கு அமைய தனது 7 ஆவது வயதிலேயே கயிற்றில் நடக்கும் பயிற்சியைப் பெற்றுள்ளார். இந்த வெற்றி தொடர்பில் மெய்மிதிலி விபரிக்கையில், ""கயிற்றில் நடந்தபோது நான் மிகவும் பரவசமடைந்தேன்'' என்று தெரிவித்தார். மேற்படி 1.2 அங்குல தடிப்புடைய கயிறானது 69 அடி உயரமுடைய கோபுரங்களில் கட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சியோல் ஆற்றை 11 நிமிடங்களில் கயிற்றில் கடந்து சீனர் சாதனை
Posted by
தமிழ்க்குமரன்
Tuesday, October 7, 2008

0 comments:
Post a Comment