தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

விஜயகாந்துக்கு அமைச்சர் கீதாஜீவன் க‌ண்டன‌ம்!

ஊனமுற்றவர்கள் நலனில் தான் ஒருவர் மட்டும்தான் அக்கறையோடு இருப்பதுபோல சுய விளம்பர நோக்கத்தோடு தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் பேசி இருப்பதாக சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் குற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

webdunia photo FILE
இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், தே.மு.தி.க. சார்பில் பார்வையற்றோருக்கு கணினி வேலை வாய்ப்பு பயிற்சியை தொடங்கி வைத்து பே‌சிய விஜயகாந்த், ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவேன். என்னைப் பார்த்து போட்டி போடும் மற்ற கட்சிகள் இது போன்ற உதவிகளைச் செய்வதிலும் போட்டி போட வேண்டியது தானே? நான் ஒரு கோடி ரூபாய்க்கு திட்டமிட்டால் பத்து கோடிக்கு திட்டமிடலாமே என்றெல்லாம் கவர்ச்சி வசனங்களைப் பேசியிருக்கிறார்.

ஏதோ பார்வையற்றவர்கள் நலனில் இவர் ஒருவர்தான் அக்கறை கொண்டுள்ளவரைப் போலவும் மற்ற யாருக்கும் எந்த அமைப்புக்கும் எந்தவிதமான அனுதாபமும் இல்லாததைப் போலவும் பேசியிருக்கிறார். பார்வையற்றோர்கள் நலனிலும் உடல் ஊனமுற்றோர் நலனிலும் தனிப்பட்டவர்களும் சமூக அமைப்புகளும், அரசும் தேவையான அளவு அக்கறை எடுத்துக் கொண்டு அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்திட வேண்டும். அப்படிச் செய்யும் போது ஏதோ தான் ஒருவர் மட்டும்தான் அவர்கள் மீது அக்கறை கொண்டுள்ளதைப்போல பேசுவது உடல் ஊனமுற்றோரை இழிவுபடுத்துவதற்கு ஒப்பானதாகும். விஜயகாந்த் மட்டும் தான் தனது சொந்தப் பணத்திலிருந்து பலருக்கு உதவிகளைச் செய்து வருவதைப் போல அடிக்கடி பேசி வருகிறார்.

2005-ம் ஆண்டில் கலைஞர் 'மண்ணின் மைந்தன்' படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதியதன் மூலம் கிடைத்த 11 லட்சம் ரூபாய் 'கண்ணம்மா' படத்தின் மூலம் கிடைத்த ஊதியம் 10 லட்சம் ரூபாய் ஆக 21 லட்சம் ரூபாயை சுனாமி நிவாரணத்திற்காக அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் மு.க.ஸ்டாலின் நேர் சென்று வழங்கும்படி செய்தவர் கலைஞர்.

இப்படி பல்வேறு திட்டங்களை வகுத்து எண்ணற்ற வகைகளில் ஊனமுற்றோர் மறுவாழ்வும் மறுமலர்ச்சியும் பெறுவதற்காக அயர்வின்றி ‌கருணா‌நி‌தி அரசும் கருணா‌நி‌தியு‌ம் தொடர்ந்து பாடுபட்டு வருவதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். அத்துடன் பல்வேறு தன்னார்வ நிறுவனங்களும் ஊனமுற்றோர் நலம் பேண குறிப்பிடத்தக்கப் பணிகளை இந்த அரசின் ஆதரவுடன் ஆற்றி வருகின்றார்கள்.

எனவே விஜயகாந்த் சுயவிளம்பர நோக்கத்தோடு ஏதோ தான் ஒருவர் மட்டும்தான் ஊனமுற்றோருக்கு உழைத்திட அவதாரம் எடுத்துள்ளதைப் போலவும், தனது சொந்தப் பணத்தை மற்றவர்களுக்கு செலவு செய்ய முன்வந்திருப்பதைப் போலவும் பேசுவதும், செய்தி வெளியிடுவதும் ஊனமுற்றோருக்குச் செய்யும் உண்மையான சேவையாகாது'' எ‌ன்று ‌கீதா‌ஜீவ‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

0 comments:

Post a Comment

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive