தமிழ் நாட்டில் கரையோரப் பகுதிகளில் ஆளில்லாத உளவு விமானங்களைப் பயன்படுத்த இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாகவது:
தமிழ் நாட்டின் தென்கிழக்குக் கரையோரங்களைக் கண்காணிப்பதற்கு ஆளில்லாத உளவு விமானங்களைப் பயன்படுத்துவதற்கு இந்திய அரசு தீர்மானித்துள்ளது. உச்சிப்புள்ளியில் உள்ள கடற்படைத் தளத்தில் இருந்து சிறிய அளவிலான ஆளில்லாத உளவு விமானங்களை நடவடிக்கையில் ஈடுபடுத்தும் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
தென்குடா நாட்டின் கரையோர மற்றும் கடற்பகுதிகளில் கடற்படையினரின் கண்காணிப்பு நடவடிக்கைகளை அதிகரிப்பதே இதன் நோக்கம். இரண்டரை வருடங்களுக்கு முன்னர் இந்திய கடற்படையினர் தமது முதலாவது ஆளில்லாத உளவு விமான "ஸ்குவாட்ற'னை கொச்சின் பகுதிக்கு நகர்த்தியிருந்தது.
இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்குமிடையில் மோதல்கள் உக்கிரமடைந்து வருகையில் இந்திய அரசின் இந்த நடவடிக்கைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் கடற்படை உயர் அதிகாரிகள் மேற்கொண்ட பயணத்தினைத் தொடர்ந்து உச்சிப்புள்ளி பகுதியில் கடற்படையினரின் வான் கண்காணிப்பு நிலையத்தை அமைப்பது தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டிருந்தன.
கொச்சிப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள இரண்டு இஸ்ரேலியத் தயாரிப்பான ஆளில்லாத உளவு விமானங்களை உச்சிப்புள்ளியில் நடவடிக்கையில் ஈடுபடுத்தத் தீர்மானித்திருப்பதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
தமிழ் நாட்டின் கரையோரத்தில் பயன்படுத்த இந்தியா தீர்மானம்
Posted by
தமிழ்க்குமரன்
Tuesday, October 7, 2008

0 comments:
Post a Comment