தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

இனி நமக்கு நல்ல காலம்தான்..!

வெ. பாலசரஸ்வதி

ஒரு காக்கா வெகுதூரம் பறந்து போயிட்டேயிருந்தது.. வழியில அதுக்கு தண்ணீர் தாகம் எடுத்துச்சு… ஆறு, ஓடை, தேங்கியிருக்கிற தண்ணி என்று எதுவுமே கண்ல படல.. சோர்வா மரத்துமேல வந்து உக்காந்துச்சு. அந்த மரத்தடில ஒரு பானை இருந்துச்சு, காக்கா ஆர்வமா போயி பானையில என்ன இருக்குதுன்னு போய் பார்த்துச்சு… அதுல கொஞ்சுண்டு தண்ணி இருந்துச்சு, அதோட இருக்கிற கற்களை எல்லாம் ஒவ்வொன்னா.. எடுத்து போட்டு கிட்டே இருந்துச்சு.. தண்ணி மேல வந்தது, காக்கா தன் தாகத்த தீர்த்துக்குச்சு…
இது காக்கா கதைதாங்க ஆன நமக்காக சொல்லப்பட்ட கதை. இது தெரிஞ்ச கதைதாங்க. ஆனா எத்தனை முறை படிச்சாலும் நமக்குள்ள ஒரு நம்பிக்கைய ஏற்படுத்தக்கூடிய கதை… பானையில இவ்வளவு கீழே தண்ணியிருக்குதே இத நம்மாள குடிக்க முடியாதுன்னு காக்கா நினைக்கில… இந்தத் தண்ணிய நம்மால மேல கொண்டுவர முடியும்.. நம்ம தாகத்த தீர்த்துக் கொள்ள முடியும்னு நினைச்சது. முடிஞ்சுது. நம்மால முடியும்னு நம்ம நினைக்கனும். அப்பதான். வெற்றி பெற முடியும்.
நம்ம ஒவ்வொர்த்த கிட்டேயும் பானையில கொஞ்சமா இருந்த தண்ணீர் போலத்தான் திறமையிருக்கு. அது கற்களாலே மேல வந்தது போல நம்ம முயற்சியால திறமை வளர்க்கப்படும். திறமை வளர்ந்த பிறகு கட்டாயம் அதை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் வந்து சேரும். நமக்கு நேரம் நல்லாயிருக்கு. அப்படின்னு சொல்றதெல்லாம் நம்ம திறமை வெளிப்படும் காலம்னு சொல்ல்லாம். நேரம் சரியில்லன்னு சொல்றது எதனால….
ஒரு படி மேல ஏறும்போது கீழே விழுந்தோமானால் இது அந்த வழியில செல்லக்கூடாது. வேறு வழி பார்ப்போம் என்ற படிப்பை நாம் தெரிந்து கொள்கிறோம். சறுக்கி விழும்போதுதான் சரியான பாதை நமக்குத் தெரியும். என் இலக்கினை என்னால் அடைய முடியும் என்ற நம்பிக்கை இருந்தாலே போதும்.
ஒரு புழு இலையத் தேடி திங்கறதுக்கு உடம்ப நெழுச்சு நெழுச்சு நடந்து போகுது அது உடம்பு வலிக்குது. அதனால் நாம பறக்கணும்னு ஆசைப்படுது.. நம்மாலயும் பறக்க முடியும்னு நம்பிக்கை கொண்டதால, அது பட்டாம்பூச்சியாக முடிந்தது. பறக்கணும்னு நினைச்சது. இலைய வேகவேகமா தின்னுது, வேகவேகமாக கூடு கட்டுது உடம்ப சுருக்கி கூட்டுக்குள்ள உக்காந்து இறக்கைகளை உருவாக்கிக் கொள்ளுது. உடனே பறந்து பட்டாம் பூச்சியா வெளில வந்து என்னாலயும் பறக்க முடியுதுன்று ஒவ்வொரு மலர்களிடமும் போய் சொல்லுது. ஒரு நொடி கூட நிக்காம பறந்து கிட்டே இருக்குது. புழு கூட்டுக்குள்ளே இறக்கயை உருவாக்கறதுக்கு காலத்த அதுக்கு நேரம் சரியில்ல.. அப்படின்னு சொல்ல முடியுமா.. கூட்டுக்குள்ள இருந்து வெளியில வந்து பறந்த காலத்த அதுக்கு நல்ல காலம்னு சொல்ல்லாமா…?
சிறகுகள் இல்லாமலே எண்ணச் சிறகுகளைக் கொண்டு நம்மால எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் போக முடியும்.. அப்படிப்பட்ட நமக்கு முடியும் என்கிற இலட்சியத்தை முடிவு செய்து சாதிக்க வேண்டும் என்று நினைத்தாலே நம்மால நிச்சம் முடியும். இடைப்படுகின்ற தடைகளையோ.. துன்பங்களையோ ஏற்றுக் கொண்டு சோம்பல் மட்டும் இல்லாம உயர்வை மட்டும் நினைச்சோம்னா.. இனி நமக்கு எல்லாமே நல்ல காலம்தாங்க..

புதிய பாதை

புதிய பாதை
தே.சௌந்தர்ராஜன்
BT பருத்தி உருவான விதம்
சமீக காலமாக அனைத்து பத்திரிகைகள், தொலைக்காட்சி ஆகியவற்றில் பேசப்படுவது, மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் இந்தியாவுக்கு தேவையா?
தற்போது பெரும்பாலான பயிரினங்கள் மரபணு மாற்றம் செய்யப்பட்ட ரகங்கள் பல நாடுகளில் உற்பத்தி செய்து கொண்டு உள்ளார்கள். இவற்றில் அமெரிக்கா முன்னணியில் இருந்து வருகிறது.
BT பருத்தியில் ஆம்பித்து, BT மக்காச்சோளம், BT நெல், சோயா மொச்சை, கத்தரி, வெண்டை பன்ற காய்கறிகளிலும் மரபணு மாற்றம் செய்யப்பட பயிர்கள் அனுமதிக்கப்பட்டு சோதனை முறையிலும், விவசாயிகள் வயலிலும் எப்படி பயிரிடப்பட்டு வருகிறது.
இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களில் பருத்தி மட்டும விவசாயிகள் பயிரிட அனுமதிக்கப்பட்டுள்ளது.
இன்று BT பருத்தி, மரபணு மாற்றப்பட்ட பயிர்களில் ஒரு வெற்றிகரமான முயற்சி.
BT பருத்தி எப்படி இந்தியாவில் விவசாயிகள் மத்தியில் பிரபலம் ஆனது?
உலகில் பருத்தி பயிரிடும் பரப்பளவில் இந்தியாதான் முதலிடம். ஆனால் உலக உற்பத்தியில் இந்தியா 16% சதவிகிதம் தான் பங்களிக்கிறது. பருத்தியில் தாக்கும் 16 முக்கிய பூச்சிகளில், பருத்தி காய்ப்புழழு மிகவும் அதிக சேதத்தை ஏற்படுத்துகிறது. இதற்காக பலவகையான பூச்சிகொல்லிகளைப் பயன்படுத்தியும் இந்த காய்ப்புழுவை சமாளிக்க முடியாமல், நிறைய விவசாயிகள் பருத்தி பயிரிடுவதை விட்டுவிட்டு வேறு பயிர்களுக்கு சென்றுவிட்டனர். இதனால் பருத்தி பயிரிடும் பரப்பளவு மற்றும் அதன் விளைச்சல் வெகுவாக குறைந்தது.
பூச்சி எதிர்ப்புத் தன்மையை உடைய ரகங்கள், தாய் ரகங்களான கருவுறுவதில் கிடையாது என்ற நிலைமையில், விஞ்ஞானிகள் இந்த காய்புழுவை கட்டுப்படுத்த மற்ற உயிரினத்தில் உள்ள நச்சுகளை தேடினர். இதனால் கிடைத்தது BT நச்சு - பேசிலஸ் துரிஞ்சியன்சிஸ் என்ற பாக்டீரியாவில் உள்ள CM புரதம்
BT புரதம் காய் புழுவின் வயிற்றில் உள்ள அதிக காரத்தன்மையில் கரைந்து உடனே நச்சுத் தன்மையை உண்டாக்குகிறது. BT நச்சு வயிற்றில் உள்ள திசுக்களில் இணைந்து அதை சேதமடைய செய்கிறது.
1.BT நச்சு உயிர்கள்2. BT நச்சு புழுவின் வயிற்றில் ஒட்டி கொல்லுதல்3. நச்சு புழுவின் வயிற்றில் ஓட்டை உண்டாக்குதல்4. BT நச்சு புழு பூச்சி உடலில் செல்வதால் இறந்து விடுகிறது.
இதனால் காய்புழு, பருத்தி காயில் உள்ள BT நச்சு சாப்பிட்ட உடன் அதன் வயிற்றில் உள்ள செல்கள் சேதமடைந்து இறக்க நேரிடுகிறது.
BT பருத்தி எப்படி இந்தியாவில் நுழைந்தது?
1945ம் ஆண்டு, மகிகோ நிறுவனம் 100 கிராம் BT பருத்தியை (காக்கர் 312 ரகம்) மான்சான்டோ என்ற அமெரிக்க நிறுவனத்திடம் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்தது.
இந்த பருத்தியை இந்தியாவில் அனுமதிக்க கூடாது என்று பல போராட்டங்கள் நடந்தது . ஆனால் இவற்றின் பிற்கால நன்மையைக் கருதி இந்திய அரசு பயிரிட அனுமதி அளித்தது.
இந்த காகர் 312 BT பருத்தியில் உள்ள காய் புழு கொல்லும் தன்மை கொண்ட CRY உள்ள புரதம் உண்டாக்கும் மரபுக்கூற்றை இந்தியாவில் உள்ள பிரபலமான மகிகோ பருத்தி இரகங்களுக்கு மாற்றம் செய்து புதிய இரகங்களை விவசாயிகளுக்கு விற்பனை செய்தது.
முதல் சில ஆண்டுகளில் அந்த அளவுக்கு BT பருத்தி விவசாயிகள் மத்தியில் பிரபலமடையவில்லை.
காரணம்:
1. BT நச்சுத்தன்மை - போதிய அளவு இல்லாததால் காய்புழு இறப்பு அதிக அளவில் இல்லை.
2. BT பருத்தி ரகங்கள் மற்ற பருத்தி ரகங்களைக் காட்டிலும் விளைச்சல் மற்றும் பருத்தி நூல் தன்மைகள் மேற்பட்டதாக இல்லை.
3. ஆனால் தற்போது உள்ள தனியார் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள 62க்கும் BT பருத்திகள் காய்புழுவை முழுவதுமாக கொல்லும் தன்மையுடன் அதிக விளைச்சல், நல்ல பருத்தி நூல் ஆகியவைகளை கொண்டதாக இருப்பதால், தற்போது விவசாயிகளால் பயிரிடப்படுகின்ற பெரும்பாலான பருத்திகள், BT பருத்தி ரகங்களாகவே இருக்கிறது.
மேலும் தனியார் நிறுவனங்களான ராசி பருத்தி விதைகள், மான்காண்டோ, மகிக்கோ, JK அக்ரி, ஆங்குர் விதை நிறுவனங்கள் தங்களிடம் உள்ள சிறந்த பருத்தி வீரிய ஒட்டுகளை BT வீரிய ஒட்டு ரகங்களாக மாற்றி, புதிய வீரிய ஒட்டு ரகங்களாக வெளிவிட்டதால், தற்போது பருத்தியில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை விவசாயிகள் பெருமளவில் பயிரிடுகிறார்கள்.

சதாமின் கார்ரூ.1.5 கோடிக்கு விற்பனை

சதாம் உசேன் பயன்படுத்திய ரோல்ஸ் ராய்ஸ் கார் ரூ.1.5 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.தூக்கில் போடப்பட்ட, ஈராக் அதிபர் சதாம் உசேன் பயன்படுத்திய கார்களில், கருஞ்சிவப்பு நிற ரோல்ஸ் ராய்ஸ் ஸ்போர்ட்ஸ் காரும் ஒன்று. இது விற்பனைக்கு அறிவிக்கப்பட்டது. இந்த காரின் இருக்கைகள், பழுப்பு நிற தோலில், சிவப்பு நிற பைப்புடன் வடிவமைக்கப் பட்டுள்ளது. இந்த கார் விற்பனைக்கு அறிவிக்கப்பட்டது.
பிரிட்டனைச் சேர்ந்த, "ஆட்டோகான்டினென்டல்' நிறுவனத்தின் ஸ்டீவன் பிரவுன், இந்த காரை ரூ.1.5 கோடிக்கு வாங்கியுள்ளார். இந்த காரின் ஆவணங்கள், சதாம் உசேனின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த கார், பாக்தாத்தில் இருந்து ஒரு மாதத்தில் லண்டனுக்கு கொண்டுவரப் பட உள்ளது.

மரு‌த்துவ‌ர்களை தா‌க்‌கினா‌ல் 10 ஆ‌ண்டு ‌சிறை தமிழக அரசு அறிவிப்பு

மரு‌த்துவ‌ர்க‌ளை தா‌க்‌கினா‌ல் 3 ஆ‌ண்டு முத‌ல் 10 ஆ‌ண்டு ‌சிறை த‌ண்டனை ‌வி‌தி‌க்கு‌ம் பு‌திய ச‌ட்ட‌த்தை த‌மிழக அரசு கொ‌ண்டு வ‌ந்து‌ள்ளது.சென்னை அருகே உள்ள பொன்னேரி அரசு மருத்துவமனை டா‌க்ட‌ர் கடந்த மாதம் தாக்கப்பட்டார். இதையொட்டி தமிழ்நாடு முழுவதும் மரு‌த்துவ‌ர்க‌ள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மரு‌த்துவரை தாக்கிய வழ‌க்க‌றிஞ‌ர் மீது நடவடிக்கை எடுக்கவும், மரு‌‌‌த்துவ‌ர்களு‌க்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.இதைத் தொடர்ந்து தமிழக அரசு அவசர சட்டம் ஒன்றை கொண்டு வந்தது. இந்த சட்டத்தை ஆளுந‌ர் சுர்ஜித்சிங் பர்னாலா கடந்த வெள்ளிக்கிழமை கொண்டு வந்தார்.அதன் அடிப்படையில் மரு‌த்துவரையோ, மருத்துவமனை ஊழியர்களையோ தாக்கினாலும், மரு‌த்துவமனையை சேதப்படுத்தினாலும் 3 ஆண்டு முதல் 10 ஆண்டு வரை சிறைத் தண்டனை இச்சட்டத்தின் மூலம் கிடைக்கும்.முதலமைச்சர் கருணாநிதியிடம் கலந்து ஆலோசித்த பிறகு மரு‌த்துவ‌ர்களை பாதுகாக்கும் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இ‌ந்த தகவ‌ல் சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் நீக்கம்: வைகோ அறிவிப்பு

க‌ட்‌சி‌யி‌ன் முடிவு‌க்கு ‌விரோதமாக செய‌ல்ப‌ட்ட எ‌ல்.கணேச‌ன், செ‌‌ஞ்‌சி ராம‌ச்ச‌ந்‌திர‌ன் ஆ‌கியோ‌ர் க‌ட்‌சி‌யி‌ன் அனைத்து பொறு‌ப்‌பி‌ல் இரு‌ந்து‌ம் ‌நீ‌க்க‌ப்படு‌கிறா‌ர்க‌ள்'' எ‌ன்று ம.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் வைகோ அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.
நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில்மத்திய அரசுக்கு ஆதரவாக இவர்கள் வாக்களித்ததால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்‌பு‌ ம‌ற்று‌ம் க‌ட்‌சி‌யி‌ன் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகிறார்கள் எ‌ன்று வைகோ அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

கொஞ்சல்

Posted by Picasa

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive