தமிழகத்தில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை மக்கள் விரும்பவில்லை எனப் புதிதாக வெளியாகி உள்ள கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.சென்னை லயோலா கல்லூரியின் ஊடக கலைகள் துறை, 2008 ஆகஸ்டு மாதம் தமிழகம் முழுவதும் 31 நாடாளுமன்றத் தொகுதிகளில் சுமார் 2709 பேரிடம் கருத்துக் கணிப்பு நடத்தியது.நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபட வேண்டும் என விரும்புவர்களின் எண்ணிக்கை, மிகக் குறைவாகவே உள்ளது. அவர் நேரடி அரசியலில் ஈடுபட வேண்டும் என 4.3 சதவிகிதம் பேர் மட்டுமே கூறியுள்ளனர். முழு நேர நடிப்பை மேற்கொள்ளலாம் என 45.8 சதவிகிதம் பேர் விருப்பம் தெரிவித்துள்ள போதிலும், அவர் ஓய்வு எடுப்பது நல்லது என்ற ஏமாற்றம் தோய்ந்த பதிலை 32.5 சதவிகிதம் பேர் தெரிவித்திருப்பது, அவர் அரசியலுக்கு வருவதை மிகப் பெரும்பாலானவர்கள் விரும்பவில்லை என்பதையே காட்டுகிறது.முழு நேர ஆன்மீகத்தில் ரஜினி ஈடுபடலாம் என 10.7 சதவிகிதம் பேரும், முழு நேர சமூக சேவையில் ஈடுபடலாம் என 5.2 சதவிகிதம் பேரும் கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்கள்.அரசியல் கட்சி தொடங்கியுள்ள நடிகர்களில் விஜயகாந்தின் தேமுதிக மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அந்தக் கருத்துக் கணிப்பு கூறியுள்ளது.இந்தக் கருத்துக் கணிப்பில் ஆண்கள் 54 சதவிகிதம் பேரும், பெண்கள் 46 சதவிகிதம் பேரும் கலந்து கொண்டனர். இதில் 15.6 சதவிகிதம் பேர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முதன் முதலாக வாக்களிக்கச் செல்பவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் நடிகர்கள் தொடங்கியுள்ள கட்சிகளில் விஜயகாந்தின் தேமுதிக தவிர பிற கட்சிகளால் பெரிதாக எந்தத் தாக்கமும் இராது என்று பெரும்பான்மையோர் கருத்து தெரிவித்துள்ளனர்.வரும் தேர்தலில் தேமுதிக மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று 43.4 சதவிகிதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தக் கட்சி ஓரிரு இடங்களில் மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்தும் என்று 32.8 சதவிகிதம் பேரும், தாக்கமே இருக்காது என 23.8 சதவிகிதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி ஓரிரு இடங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என 14.8 சதவிகிதம் பேர் கூறியுள்ளனர். மிகப் பெரிய தாக்கம் ஏற்படுத்தும் என 2.5 சதவிகிதம் பேரும் தாக்கமே இருக்காது என 82.7 சதவிகிதம் பேரும் கூறுகின்றனர்.விஜய டி.ராஜேந்தின் லட்சிய திமுக, கார்த்தின் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி ஆகியவற்றால் எந்தத் தாக்கமும் இருக்காது என முறையே 94.7 சதவிகிதம் பேரும், 96.2 சதவிகிதம் பேரும் தெரிவித்துள்ளனர்
அன்புமணி ராமதாஸ் முதலிடம்
தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களில் நன்றாக செயல்படுபவர்களின் பட்டியலில் அன்புமணி ராமதாஸ் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். மணிசங்கர் ஐயரின் செயல்பாடு மோசம் என்று லயோலா கருத்துக் கணிப்பு கூறுகிறது.மத்திய அரசில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் அன்புமணியின் செயல்பாடுகள் நன்றாக உள்ளதாக 39.4 சதவிகிதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். அவரது செயல்பாடு குறிப்பிட்டுச் சொல்லும்படி எதுவும் இல்லை என 20.9 சதவிகிதம் பேரும், மோசம் என 39.7 சதவிகிதம் பேரும் கருத்து கூறியுள்ளனர். இந்தப் பட்டியலில் சிதம்பரம் 2ஆவது இடத்திலும் (35.6), ஆர்.வேலு (28.3) 3ஆவது இடத்திலும், டி.ஆர்.பாலு (26.5) 4ஆவது இடத்திலும் உள்ளனர்.எனினும், சிதம்பரத்தின் நடவடிக்கைகள் மோசம் என்று 54 சதவிகதம் பேர் கூறியுள்ளனர். குறிப்பிட்டுச் சொல்லும்படி ஏதுவும் இல்லை என 10.4 சதவிகிதம் பேர் கூறுகின்றனர். வேலுவின் நடவடிக்கைகள் மோசம் என 43.2 சதவிகிதம் பேரும், டி.ஆர்.பாலுவின் செயல்பாடுகள் சரியில்லை என 54.8 சதவிகிதம் பேரும் தெரிவித்துள்ளனர். இந்த வரிசையில் மணிசங்கர் ஐயர் மோசமாக செயல்படுவதாக 63.7 சதவிகிதம் பேர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.மேலும், அன்புமணி ராமதாஸ், ஆர்.வேலுவை தவிர, மற்ற அனைத்து மத்திய அமைச்சர்களும் மோசமாக செயல்படுவதாக 50 சதவிகிதத்திற்கு மேற்பட்டோர் கூறி இருப்பதும் கவனிக்கத்தக்கதாகும். நன்றாகச் செயல்படும் அமைச்சர்களின் பட்டியலில் வேங்கடபதி 3.8 சதவிகித ஆதரவுடன் கடைசி இடத்தில் உள்ளார்
லயோலா கருத்துக் கணிப்பு: அதிமுகவுக்கு அதிக ஆதரவு
சென்னை (ஏஜென்சி), 25 செப்டம்பர் 2008 ( 16:25 IST )
சென்னை லயோலா கல்லூரி நடத்திய கருத்துக் கணிப்பில், தற்போதைய சூழ்நிலையில் அதிமுகவுக்கே பொதுமக்களிடம் அதிக ஆதரவு இருப்பது தெரியவந்துள்ளது. தமிழக அரசியலில் தற்போது பல்வேறு பிரச்சனைகள் நிலவிவரும் நிலையில், லயோலா கல்லூரியின் ஊடகவியல் துறை சார்பில் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அதிமுகவுக்கு ஆதரவு: இதில், "தற்போது தேர்தல் வந்தால் யாருக்கு வாக்களிப்பீர்கள்?" என்ற கேள்விக்கு, 38.3 சதவீதம் பேர் அதிமுகவுக்கே வாக்களிப்போம் என்று தெரிவித்துள்ளனர்.திமுகவுக்கு வாக்களிப்போம் என்று 25.8 சதவீதம் பேரும், மேற்படி இரு கட்சிகளுக்கும் மாற்றாக தேமுதிகவுக்கு வாக்களிப்போம் என்று 19.5சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் தற்போது மிக முக்கிய பிரச்சனையாக கருதப்படுவது மின்வெட்டுதான். இது மக்கள் மத்தியில் பெரும் அதிருதியை ஏற்படுத்தியுள்ளது.வரும் தேர்தலில் இந்த பிரச்சனை எதிரொலிக்கும் என்று தெரிகிறது.தமிழக அரசு சமீபத்தில் அறிவித்த, ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசித் திட்டத்திற்கு மக்களிடம் பெரிய அளவில் ஆதரவு இல்லை. இந்த திட்டம் ஏழை மக்களுக்கு பயன்படும் என்று 22 சதவீதம் பேரும், இது தேவையில்லாதது என்று 52 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.எனினும், தமிழக அரசு அறிவித்த இலவசத் திட்டங்களுக்கு 84 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் தற்போதுள்ள எம்.பிக்கள் மீதும் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்த எம்பிக்கள் மீண்டும் போட்டியிட்டால் வாக்களிக்க மாட்டோம் என 63 சதவீதம் பேர் கூறியுள்ளனர். அரசு துறை அதிகாரிகள் மிக மோசமாக செயல்படுவதாக 87 சதவீதம் பேர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.நடிகர்களின் கட்சிகளின் நிலை: நடிகர்களின் கட்சிகளை பொருத்தவரை, விஜயகாந்தின் தேமுதிகவுக்கு ஆதரவு பெருகி வருவது தெரியவந்துள்ளது. நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என 43.4 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். ஓரிரு இடங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என 32.8 சதவீதம் பேரும், எந்த தாக்கமும் ஏற்படாது என்று 23.8 சதவீதம் பேரும் கூறியுள்ளனர். சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி ஓரிரு இடங்களில் மட்டும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என 14.8 சதவீதம் பேர் கூறியுள்ளனர். எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று கூறியவர்கள் 82.7 சதவீதம் பேர். தேர்தலில் விஜய டி.ராஜேந்தின் லட்சிய திமுக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று 94.7 சதவீதம் பேரும், கார்த்திக்கின் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியால் எந்த தாக்கமும் இருக்காது என 96.2 சதவீதம் கூறியுள்ளனர்.ரஜினிக்கு ஆதரவு இல்லை: இந்த கருத்து கணிப்பில் நடிகர் ரஜினி அரசியலுக்கு வரலாமா என்பது குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டன. ஆனால், அவர் அரசியலுக்கு வருவதை பெரும்பாலானோர் விரும்பவில்லை என்பது கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.இந்த கேள்விக்கு, ரஜினி அரசியலுக்கு வரலாம் என்று கூறியவர்கள் 4.3 சதவீதம் மட்டுமே. நடிப்பில் மட்டுமே ரஜினி கவனம் செலுத்தினால் போதும் என 45.8 சதவீதம் பேரும், அவர் இனி ஓய்வெடுக்கலாம் என்று 32.5 சதவீதம் பேரும் கூறியுள்ளனர். ஆன்மீகத்தில் அவர் ஈடுபடலாம் என 10.7 சதவீதம் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
அத்வானிக்கு இந்தியன் முஜாஹிதீன் கொலை மிரட்டல்
ஷில்லாங்: பாஜக மூத்த தலைவரும், பிரதமர் வேட்பாளருமான எல்.கே.அத்வானி, மேகாலயா தலைநகர் ஷில்லாங்குக்கு வரும்போது அவரை கொலை செய்யப் போவதாக இந்தியன் முஜாஹிதீன் அமைப்பிடமிருந்து இமெயில் மிரட்டல் வந்துள்ளது.அத்வானி 29ம் தேதி ஷில்லாங் வருகிறார். அப்போது அவரை கொலை செய்யப் போவதாக இந்தியன் முஜாஹிதீன் அமைப்பிடமிருந்து ஷில்லாங் டைம்ஸ் மற்றும் மாபோர் ஆகிய இரு மேகாலயா நாளிதழ்களுக்கு இ மெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது.இந்தியன் முஜாஹிதீன் அனுப்பியுள்ள இமெயிலில், அத்வானி ஷில்லாங் செல்லும்போது அவர் கொல்லப்படுவார். அத்வானியின் இந்துத்வா கொள்கை இந்த நாட்டை பாசிச பாதைக்கு இட்டுச் ெசன்றுள்ளது என்று ெதரிவிக்கப்பட்டுள்ளது.அலி ஹூசேன் பாதர், வட கிழக்கு பீல்டு கமாண்டர், இந்தியன் முஜாஹிதீன் என கையெழுத்திடப்பட்டுள்ளது.முதல்வர் அவசர ஆலோசனை:இந்த இ மெயில் குறித்து முதல்வர் டான்குபார் ராய், காவல்துறை உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இ மெயில் வந்த பத்திரிகை அலுவலகங்களுக்கு போலீஸார் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.இதுகுறித்து மேகலாயா மாநில டிஜிபி பி.கே.ராய் சவாய்ன் கூறுகையில், இரு நாளிதழ்களுக்கும் வந்துள்ள மிரட்டல் இ மெயிலில், அத்வானி 29ம் தேதி ஷில்லாங் வரும்போது அவரைக் கொல்லப் போவதாக இந்தியன் முஜாஹிதீன் பெயரில் மிரட்டப்பட்டுள்ளது.இதை நாங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. சீரியஸாக கருதுகிறோம்.இந்த மெயில் எங்கிருந்து அனுப்பப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.அத்வானி ஷில்லாங் வரும்போது அவருக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்படும் என்றார் அவர்.
Labels: அரசியல்
ரூ.1.25 கோடியில்நெல்லையப்பருக்கு தங்க தேர் உருவாக்கும்
நெல்லையப்பர் கோயிலில் 12 அடி உயரத்தில் தங்கத்தேர் செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது.
நெல்லையப்பர் கோயிலுக்கு தங்கத் தேர் செய்ய அறங்காவலர் குழு இந்து சமய அறநிலையத்துறையிடம் அனுமதி கேட்டது. அறநிலையத்துறை அனுமதி அளித்தது.
பன்னிரெண்டே முக்கால் அடி உயரத்திலும், 8 அடி அகலத்திலும் 10 கிலோ தங்கத்தில் ரூ.1.25 கோடியில் தங்கத் தேர் செய்ய திருப்பணிக்குழு முடிவு செய்தது. உபயதாரர்கள் மூலம் 320 கிராம் தங்கம் பெறப்பட்டது.
தேர் செய்ய மரத்தடிகள் குமரி மாவட்டம் மைலாடியிலிருந்து கொண்டு வரப்பட்டன. ஸ்தபதி கல்யாணசுந்தரம் தலைமையில் தேர் செய்யும் பணி கோயிலில் கடந்த 15ம் தேதி தொடங்கி நடந்துவருகிறது.
தேருக்காக 4 சக்கரங்கள் பொள்ளாச்சியில் உருவாக்கப் பட்டு கொண்டு வரப்பட்டன. இப்போது தேரின் கீழ்ப்பகுதி உருவாக்கும் பணி நடக்கிறது.
இதுகுறித்து ஸ்தபதி கல்யாணசுந்தரம் கூறும் போது, ‘நெல்லையப்பர் கோயில் தல வரலாறு தங்கத் தகடுகளில் அச்சிட்டு தேரில் பதிக்கப்படும்.
இது பழனி தேர் போல் இருக்கும். தேரின் மொத்த எடை ஒன்றரை டன். மரவேலைகள் முடிந்ததும் தாமிரத்தகடு பதிக்கப்படும்.
அதைத் தொடர்ந்து தங்கத் தகடுகள் பதிக்கப்படும்’ என்றார்.
Labels: நாட்டு நடப்பு
ஐவரில் ஒருவருக்கு மன அழுத்தம்: ஆய்வில் “திடுக்” தகவல்
பெரும் பணக்கார நாடு என்று கருதப்படும் அமெரிக்காவில், 12 வயதைக் கடந்த 20 பேரில் ஒருவருக்கு மன அழுத்த நோய் உள்ளதாக, சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த மன அழுத்த நோயின் தாக்கம், ஆண்களை விட பெண்களிடம் அதிகமாக காணப்படுகிறது. இதில், 80 சதவீதம் பேர், தங்களால் இயல்பாக செயல்படமுடிவில்லை என்று தெரிவித்துள்ளனர். 27 சதவீதத்தினர், தங்களது வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை என்றும், வீட்டிலோ அல்லது வெளியிலோ எந்தவிதமான பணிகளையும் திறம்பட செய்ய முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
ஏழ்மையில் உள்ள ஏழு அமெரிக்கர்களில் மன அழுத்தம் காரணமாக, பணிசெய்யும் இடத்தில் குறைந்த அளவிலான தொழிலாளர்களே சென்றதால், உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக, கடந்த 2000ம் ஆண்டில் அமெரிக்காவுக்கு. எட்டாயிரத்து 300 கோடி டாலர் இழப்பு ஏற்பட்டதாக இந்த ஆய்வை மேற்கொண்ட லாரா எப்ராட் மற்றும் தேப்ரா ப்ரோடி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.வறுமை காரணமாக, மன அழுத்தங்களுக்கு ஆளான நபர்களும் அதிகமாக உள்ளனர். ஏழ்மையில் உள்ள ஏழு அமெரிக்கர்களில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் மன அழுத்த நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
இதிலும், கறுப்பின மக்களே, வெள்ளையின மக்களைக் காட்டிலும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.மன அழுத்த நோயால் பாதிக்கப்படும் நபர்கள், தகுந்த சிகிச்சை பெற்ற பின்னர், பழைய நிலைக்குத் திரும்பினாலும், மிக அதிகமாக பாதிக்கப்படும் நபர்களில் 39 சதவீதம் பேர் மட்டுமே, மனநல டாக்டர்களிடம் சிகிச்சை பெற்றுள்ளனர்.ஆண்களில் 39 சதவீதத்தினரும், பெண்களில் 22 சதவீதத்தினரும் கடுமையான மன அழுத்த நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
தன் காரணமாக, அவர்களால் எதிலுமே திறம்பட பணியாற்ற முடியவில்லை.இதிலும் 40 முதல் 59 வயது வரையுள்ளவர்களுக்கு இப்பாதிப்பு அதிகம். குறைந்த வருவாய் பெறும் நபர்களுக்கு அதிகமான மன அழுத்தம் ஏற்படுவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Labels: மருவத்துவ செய்திகள்
கொழுப்புச்சத்தை குறைக்கும் குண்டு உடலை மெலிய வைக்கும் முட்டை
கொழுப்புச்சத்து காரண மாக உடல் குண்டான வர் கள் பெரும் அவஸ்தைப்பட்டு வருகின்றனர். எவ்வளவோ மருந்து மாத்திரைகளை உட் கொண்டு வந்தாலும் போதிய பலன் இல்லை.
இதனால் குண்டானவர் கள் உடல் இளைக்க உடற் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு உபாயங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
அப்படிப்பட்டவர்களுக்கு வரப்பிரசாதமாக இங்கிலாந்து இருதய மருத்துவ ஆராய்ச்சி மையம் ஒரு தகவலை தெரிவித்து உள்ளது.
அதாவது தினசரி முட்டை சாப்பிட்டு வந்தால் உடல் மெலியுமாம்.
தினமும் காலை டிபனுக்கு பதில் 2 முட்டை மட்டும் சாப்பிட்டு வர வேண்டும். தொடர்ந்து 12 வாரம் இது போன்று சாப்பிட்டு வந்தால் கொழுப்பு சத்து குறைந்து உடல் மெலியும். அழகான தோற்றம் பெறலாம் என்று அந்த மருத்துவ ஆராய்ச்சி மையம் தெரிவித்து உள்ளது.
Labels: மருவத்துவ செய்திகள்
மணக்கும் பூக்களால் இனிய கனவு
படுக்கை அறையில் பூக்கள் இருந்தால் இனிமையான கனவுகள் வரும் என்று ஜெர்மனி ஆய்வாளர்கள் கூறி உள்ளனர்.
தூங்கும் போது உங்களுக்கு கெட்ட கெட்ட கனவாகவே வருகிறதா? கவலையை விடுங்கள்
தினமும் ஒரு சில பூக்களை படுக்கை அறையில் வையுங்கள். பிறகு பாருங்கள் மாற்றத்தை.
இளைஞர்கள் தினமும் கனவில் தங்களுக்கு பிடித்தமானவர்களுடன் டூயட் பாடலாம்.
முதியவர்கள் பழைய இனிமையான நினைவுகளை அசை போடலாம் என்று ஜெர்மனி ஆய்வாளர்கள் கூறி உள்ளனர்.
ஜெர்மனியை சேர்ந்த ஆய்வாளர்களின் இந்த ஆய்வில் 15 பேரை ஈடுபடுத்தினர். தினமும் அவர்கள் தூங்கும்போது அவர்கள் இருந்த அறைக்குள் விதவிதமான வாசனை பரவ விடப்பட்டது.
ஒரு நாள் இரவில் அழுகிய முட்டை வாசனையும், அடுத்த நாள் ரோஜா மலர்கள் வாசனையை பரவவிட்டனர்.
மூன்றாவது நாள் எந்த வாசனையையும் பரவவிடவில்லை. மறுநாள் காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் இரவில் கண்ட கனவுகளை பற்றி எழுதித் தரும்படி அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
ஒரு மாதத்துக்கு நடந்த இந்த சோதனையில் கிடைத்த தகவல்களை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள், அழுகிய முட்டை வாசனையை தூக்கத்தில் சுவாசித்தவர்களுக்கு கெட்ட கனவு வந்ததும், ரோஜா பூ வாசனையை சுவாசித்த இரவில் அவர்களுக்கு இனிமையான கனவு வந்ததும் தெரியவந்தது.
இதனால், படுக்கை அறையில் பூக்களை வைத்தால் இனிமையான கனவுகள் வருவதற்கு வாய்ப்பு அதிகம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறி உள்ளனர்.
பொங்கல்: தமிழகத்தில் சிறப்பு ரயில்கள்
பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையிலிருந்து மதுரை, திருச்சி, திருவனந்தபுரம், நாகர்கோவில் ஆகிய நகர்களுக்கு சிறப்புரயில்களை இயக்க ரயில்வே இணை அமைச்சர் வேலு உத்தரவிட்டுள்ளார்.
பண்டிகை காலங்களில் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கும், தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும்செல்லும் பயணிகள் கூட்டம் அதிகமாகவே இருந்து வருகிறது. எனவே மதுரையில் இருந்து சென்னை எழும்பூருக்கு, வரும் 10ம்தேதி சிறப்பு ரயில் விடப்படுகிறது.இந்த சிறப்பு ரயில் கொடை ரோடு, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், திண்டிவனம், செங்கல்பட்டு, தாம்பரம்,மாம்பலம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.மறு மார்க்கத்தில் சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு, வரும் 16ம் தேதி சிறப்பு ரயில் இரவு 11 மணிக்கு புறப்படுகிறது. இந்தரயில் மறு நாள் காலை மதுரையை சென்றடைகிறது.மேலும் மதுரையில் இருந்து சென்னை எழும்பூருக்கு, 15ம் தேதியும் ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் 15ம் தேதிமாலை 6 மணிக்கு மதுரையில் இருந்து சென்னைக்கு புறப்படுகிறது.இதே போல் சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு 16ம் தேதி இரவும், நாகர்கோவிலில் இருந்து எழும்பூருக்கு 17ம் தேதிஇரவும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மேலும் திருச்சிக்கு சென்னையில் இருந்து 18ம் தேதி இரவு சிறப்பு ரயில்இயக்கப்படுகிறது.இதையடுத்து சென்னை சென்டிரலில் இருந்து திருவனந்தபுரத்துக்கு வரும் 11ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.திருவனந்தபுரத்தில் இருந்து மறு மார்க்கத்தில் சென்னை சென்டிரலுக்கு 15ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது என்று தென்னகரயில்வே செய்தி குறிப்பு கூறுகிறது
