தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்


"தமிழ் மறவனுக்கு தமிழ்நிலவு மற்றும் கோடானுகோடி தமிழர்களின் வீரவணக்கம் நீ புதைக்கபடவில்லை தமிழ் மக்களின் இதயங்களில் விதைக்கப்பட்டிருக்கிறாய் உயிர் கொடுத்தேனும் காப்போம் என் தாய்மொழியையும் என் தமிழ் இனத்தையும் தமிழ் இனமே வீறுகொண்டு எழு இல்லையேல் நீ இம்மண்ணில் வாழ தகுதியற்றவனாகி விடுவாய் "

தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு முத்துக்குமார் வினியோகித்த துண்டு அறிக்கையின் விபரம் வருமாறு: விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை...


அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே...

வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க Muthukumarநேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன். உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன். வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?

ராஜீவ்காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பலிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம். ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப்புலிகள் மட்டும் குற்றம்சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம்சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ்காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?

ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத் தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா? ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்கபோகவில்லை என்பதுபோன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன. மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்?

கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் - இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல. காகிதம் எதையும் சாதிக்காது மக்களே! இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன? ஒருமுறை அவரே சொன்னார், ''தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே...

பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே... உங்கள் போராட்டம் வெற்றிபெற சகதமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்னை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான். உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம். உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.

ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள். போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம். உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய ராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்! விடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்! போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் ராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை ராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது - இந்தக் கூட்டணி கொள்கைக்க்கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா!, ஆக இந்திய - இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புகளையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.

இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கல் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆன்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும். ‘நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதிகொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கின்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்‘ என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள். எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்? எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத்தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?

தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத்தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்? எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா? சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்த்வர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழிதவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?

தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே...

உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.

தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே...

உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான். மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழுத்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது. டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக போலீஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப்போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள். ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ்காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி போலீஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் - அதுதான், இந்திய உளவுத்துறை - ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா... இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த
இந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப்பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத்தமிழன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.

களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப்புலிகளே...

அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த்தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே... ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.

அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைகுரிய ஒபாமாவே,

உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இனஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம். உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று... நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது. ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா? வன்னியில், விடுதலைப்புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா? இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொள்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை? ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.

புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா - என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் அடுத்ததால்தான் வந்தது என்பதைப் போலெ.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர்(they are not the reason: just an outcome)

இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது. சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர்வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொண்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது. அப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது. ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது. ராஜீவ்காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவ்ரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ்காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று. ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறுதெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.

இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது? புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள். என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்? தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளை-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை. உதாரணம் ரணில்- கருணா. ஆனால், புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா? அப்பாவித்தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்... வேலிக்கு ஓணான் சாட்சி! இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? ப்ரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல... இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்-நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா? அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்... எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை. அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப்புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.

காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியைவிடக் கொடுமையானது.

1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.

2. ஐநா பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.

3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள்மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.

6. ராஜீவ்காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம்காணப்பட வேண்டும்.

7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.

8.அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்

9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்த வந்தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.

10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக போலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

13.தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத்தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

14. சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.

என்றும் அன்புடன்,

அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,
கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை-99

அருமைத்திமிழ் மக்களே, அநீதிகளுக்கெதிரான போராட்டத்தில் நம் சகோதர்களும், பிள்ளைகளும் அறிவாயுதம் ஏந்தியிருக்கிறார்கள். நான் உயிராயுதம் ஏந்தியிருக்கிறேன். நீங்கள் நகலாயுதம் ஏந்துங்கள். ஆம், உங்கள் கையில் கிடைத்திருக்கும் இந்தத் துண்டறிக்கையை நகலெடுத்து, உங்கள் நண்பர்கள், உறவினர்கள், மாணவர்கள் வசம் கொடுத்து, போராட்டத்திற்கான ஆதரவைப் பெருகப் பண்ணுங்கள் நன்றி.

TODAYS OUR NATIONAL GOD 112TH BIRTHDAY


மலேசியாவில் பிரபாகரன்? : தமிழகத்தில் ஊடுருவலா?கண்காணிப்பு அதிதீவிரம்

விடுதலைப் புலி தலைவர் பிரபாகரன் தப்பியிருக்கலாம் என இலங்கை ராணுவம் எச்சரித்துள்ளதை அடுத்து, மலேசிய அரசு கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. மலேசியா முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். மலேசிய போலீஸ் உயரதிகாரி மூசா ஹசன் கூறியதாவது: விடுதலைப் புலி தலைவர் பிரபாகரன் தப்பியிருக்கலாம் என்று இலங்கை ராணுவ தளபதி சரத் பொன்சேகா எச்சரித்துள்ளார். மலேசியா அல்லது தாய்லாந்துக்குள் அவர் ஊடுருவக் கூடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதன் காரணமாக மலேசியா முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.பிற நாடுகளில் இருந்து மலேசியாவுக்குள் வருவதற்கான அனைத்து பகுதிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.அவர் ஏற்கனவே மலேசியாவுக்குள் ஊடுருவி உள்ளாரா என்பது குறித்து விசாரிக்கும்படியும் உளவு அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஏனெனில், இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் ஆஸ்திரேலியாவில் விடுதலைப்புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கம் என்று தடை செய்யப்பட்டிருக்கிறது.இவ்வாறு மூசா ஹசன் கூறினார்.


பிரபாகரன் தமிழகத்தில் ஊடுருவல்? : விடுதலை புலிகள் அமைப்பு தலைவர் பிரபாகரன் மாறுவேடத்தில் தமிழகத்தில் ஊடுருவ வாய்ப்பு உள்ளதால் கடலோர பகுதிகளில் கியூ பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில் விடுதலை புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்டுள்ள உச்சகட்ட போரில் முல்லைதீவை கைப்பற்ற ராணுவம் கடும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் முல்லைதீவு பகுதியில் உள்ளாரா, தப்பி சென்றுவிட்டாரா என்ற சந்தேகம் ராணுவத்துக்கு ஏற்பட்டுள்ளது.


பிரபாகரன் இந்திய கடலோர பகுதிகள் வழியாக மாறுவேடத்தில் தப்பி வரலாம் என்ற சந்தேகத்தின் படி கியூ பிரிவு போலீசார் கடலோர மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கியூ பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், "பிரபாகரன் மாறுவேடத்தில் இந்தியாவுக்குள் வந்தாலும் கைது செய்யப்படுவார் என்பதால் இந்தியா வர சாத்தியமில்லை .இருப்பினும் கடலோர பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அகதிகளாக வருபவர்களையும் விசாரணை செய்து கண்காணித்து வருகிறோம்' என்றார்.

வெள்ளை மாளிகையில் அதிபராக பதவியேற்கும் ஒபாமா ; மார்டின் லூதர் கிங்கின் கனவு நிஜமானது

அமெரிக்காவின் முதல் ஆப்ரோ-அமெரிக்க அதிபராக ஒபாமா பதவி ஏற்கிறார். நிறப்பாகுபாட்டை எதிர்த்து போராடிய மார்டின் லூதர் கிங்கின் கனவு இதன் மூலம் நிஜமாகியுள்ளது. இன்று வாஷிங்டனில் நடக்கும் பிரமாண்டமான விழாவில் அமெரிக்க அதிபராக ஒபாமா பதவியேற்கிறார். 47 வயதாகும் ஒபாமா அமெரிக்காவின் இளம் அதிபர்களில் ஒருவர்.அமெரிக்காவின் ஹவாயில் உள்ள ஹோனலூலுவில் 1961 ஆக. 4ம் தேதி பராக் ஒபாமா பிறந்தார். இவரது தந்தை சீனியர் ஒபாமா கென்யாவை சேர்ந்தவர். தாய் அமெரிக்காவை சேர்ந்த ஆன் டன்ஹம். இவருக்கு இரண்டு வயதாகும் போதே இவரது பெற்றோர்கள் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். 10 வயதுவரை இந்தோனேஷியாவில் வசித்தார். பின்னர் ஹோனலூலுக்கு திரும்பி தனது தாத்தா வீட்டில் தங்கி பள்ளிப்படிப்பை தொடர்ந்தார். பள்ளியில் சிறந்த கூடைப்பந்தாட்ட வீரராக திகழ்ந்தார்.


பொலிட்டிக்கல் சயின்சில் பட்டம்: லாஸ் ஏஞ்சலிசின் ஆக்சிடென்டல் கல்லூரியில் இரண்டு ஆண்டுகள் படித்தார். 1982ம் ஆண்டு ஒபாமாவின் தந்தை சாலை விபத்தில் உயிரிழந்தார். தனது தந்தையை ஒபாமா ஒருமுறை மட்டுமே சந்தித்துள்ளார்.கொலம்பியா பல்கலைக்கழகத்தில் 1983ம் ஆண்டு பொலிட்டிக்கல் சயின்சில் பட்டம் பெற்ற பின்னர் நியூயார்கில் "பிசினஸ் இன்டர்நேஷனல்கார்ப்ரேஷன்', "நியுயார்க் பப்ளிக் இன்ட்ரெஸ்ட் ரிசர்ச் குரூப்' ஆகிய நிறுவனங்களில் இணைந்து பணியாற்றினார். 1988ல் ஹார்வர்ட் சட்டக்கல்லூரியில் சேர்ந்தார். சட்டப்படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்த பின் வழக்கறிஞராக இருந்த போது 1992ல் மிஷல் ஒபாமாவை திருமணம் செய்து கொண்டார். பின்னர் சிகாகோ பல்கலைக்கழகத்தில் சில மாதங்கள் பணிபுரிந்தார். 1993ல் ஒரு சட்ட நிறுவனத்தில் சேர்ந்து மனித உரிமைகள் தொடர்பான வழக்குகளில் பணியாற்றினார்.


1995ல் அமெரிக்காவில் நிலவும் இன வேறுபாடுகள் குறித்து "டிரீம்ஸ் பிரம் மை பாதர்' என்ற புத்தகத்தை எழுதினார். இந்த புத்தகம் மூலமாக கிடைத்த பணத்தில் சிகாகோவில் வீடு வாங்கியதாக ஒபாமா குறிப்பிட்டுள்ளார். 1996ம் ஆண்டு இல்லினாய்ஸ் செனட் உறுப்பினராக தேர்வானார். 2005ல் அமெரிக்க செனட்டின் உறுப் பினரானார்.


365 இடங்களை கைப்பற்றினார்: ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக தேர்வு பெற இவருக்கும் முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளின்டனின் மனைவி ஹிலாரிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. கடந்த ஆண்டு ஜூன் 3ம் தேதி பெரும் பான்மை பிரதிநிதிகளின் ஆதரவை பெற்று, அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.ஏறத்தாழ ரூ. 3 ஆயிரம் கோடிக்கு மேல் தேர்தல் நிதி திரட்டினார். ஈராக் போர் தொடர்பான புஷ்சின் கொள்கைகளை தனது பிரசாரத்தில் ஒபாமா கடுமையாக விமர்சித்தார். அமெரிக்காவில் மாற்றத்தை ஏற்படுத்த உறுதியளித்தார். கடந்த நவ. 4ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடந்தது. இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட மெக்கைனை எளிதாக வீழ்த்தி மொத்தமுள்ள 538 இடங்களில் 365 இடங்களை கைப்பற்றினார். 52 சதவீத வாக்குகளை பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட மெக்கைனுக்கு 45 சதவீத வாக்குகளே கிடைத்தன.


தாயார் வெள்ளையினத்தவர். : ஒபாமாவின் பிரமாண்ட வெற்றிக்கு அமெரிக்காவில் நிலவும் பொருளாதார சீரழிவே முக்கிய காரணமாக கருதப்படுகிறது. ஒபாமாவின் தந்தை கருப்பினத்தை சேர்ந்தவர். இவரது தாயார் வெள்ளையினத்தவர். எனினும் தனது தாயாரின் முன்னோர்கள் அமெரிக்க பழங்குடி மக்களாக இருக்கலாம் என ஒபாமா தெரிவித்துள்ளார். இவரது தந்தை இஸ்லாமியராக இருந்தாலும், தாயின் கிறிஸ்தவ மதத்தை ஒபாமா பின்பற்றினார். எனினும் இளைஞராக இருந்த போது சில ஆண்டுகள் நாத்திக கொள்கைகளில் நாட்டம் கொண்டார்.


ஆணுஆயுத தயாரிப்பை கைவிடும் படி சிரியா மற்றும் ஈரான் நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தொடர்ந்து ஒபாமா வலியுறுத்தி வருகிறார். உலகம் முழுவதும் அணுஆயுத உற்பத்தியை நிறுத்த ஆதரவளிப்பதாகவும் கூறியுள்ளார். அமெரிக்காவில் ஆயுதங் களை உருவாக்க பல்லாயிரம் கோடி டாலர் செலவிடப்படுவதாகவும், தான் அதிபரானவுடன் அதை குறைப்பேன் என்றும் உறுதியளித் துள்ளார். எண்ணெய் இறக்குமதியை குறைத்து, வேறுவகைகளில் ஆற்றல் உற்பத்தியை பெருக்குவதாக வாக்குறுதி அளித்துள்ளார். ஒபாமாவுக்கு மலியா, ஷாஷா என இரண்டு மகள்கள் உள்ளனர்.

நாட்டுநடப்பு

"நாம் போற்றி வளர்த்த கலாசாரம் இன்று புதைக்குழிக்குள் போய்விட்டது"
"ஒருவனுக்கு ஒருத்தி என்ற நமது உயரிய பண்பாடு இன்று சீர்கெட்டு போய்விட்டது"
நாளேடுகளில் தினம் தினம் வருகின்ற செய்திகள் நாம் வசிப்பது தமிழ் மண் தானா? என ஐயுறச்செய்கின்றன . அத்தனை விதமான செய்திகள் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது நாம் என்று இல்லை உலகில் வசிக்கும் ஒவ்வொரு இனத்திற்க்கும் அவர்களுக்குண்டான மொழி ,உடை ,கலாசாரம் ,ஆகியவை உண்டு இவை தான் அந்த இனத்தின் அடையாளம் இன்று நமது அடையாளம் மறைக்கப்பட்டு மேல்நாட்டுக்கலாச்சாரத்தின் சாரத்தில் அல்லவா வாழ்ந்து கொண்டிருக்கிறாம்
தமிழ் பெண்ணின் அடையாளம் என்ன நெற்றியில் குங்குமம் மானங்காக்க உடலிலே சுற்றி கட்டிய புடவை நாணம் இவை தனே ஆனால் இன்று இவை எங்கே போயிற்று? உடலை மறைத்து மானம் காக்க வேண்டிய ஆடை இன்று உடலை உலகிற்கு காட்டும் பொருளாகவும் தங்களுடைய செல்வ செருக்கை காட்டும் ஒரு பொருளாக மாறிவிட்டது என்பது வேதனை தரும் வெட்கச்செய்தியாகி போனது
இதற்கு நாம் வெட்கப்பட வேண்டாமா? மேல்நாட்டினர் நம்மை பார்த்து ஆச்சரிய பட்டு போவது நம் கலாசாரத்தின் பெருமை கண்டல்லவா!ஆண்களுக்கு நிகராக அனைத்திலும் உரிமை கேட்கும் இப்போதைய பெண்கள் ஆடைகுறைப்பு விசயத்தில் ஆண்களை மிஞ்ஞிவிட்டார்கள் என்பதுதான் மறுக்கமுடியாத உண்மை .எது நாகரிகம் என்று நினைக்கிறார்கள் இன்றைய நகரத்து பெண்கள் ஆடைகுறைப்பு, குடிப்பது, புகைபிடிப்பது போன்றவற்றையா?சில முற்போக்குசிந்தனையாளர்கள் சொல்வார்கள் இன்னும் பழமைவாதி போல பேசிக்கொண்டிருக்கிறான் காலம் மாறி போய்விட்டதென்றுஇன்னும் சிலரோ இன்னும் மேலே போய் இவன் பெண்ணிணத்தின் முன்னேற்றத்திற்கு இடையூறு என்றும் சொல்வார்கள் ஆண்களுக்குநிகராக பெண்கள் முன்னேற்றம் காண வேண்டும் எந்த துறையில் கல்வியிலும், அறிவிலுமே தவிர இது போன்ற தீய செயல்களில்அல்ல என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும் .
கல்வி இல்லா பெண்கள் களர் நிலம் போன்றவர்கள் என்பது ஆன்றறோர் வாக்கு
பெண்களுக்கு அனைத்திலும் சம உரிமை என்பது ஏற்றுக்கொள்ள்க்கூடியேத்தேயாகும் ஆனால் நமது கலாசாரம் சீர்கெட்டு போய்விடக்கூடாது என்பதிலும் நாம் கவனமாக இருக்க வேண்டும்

நம் பாரம்பரியத்தை காக்க வேண்டியது இம் மண்ணில் பிறந்த ஒவ்வொருவருடைய கடமையாகும்

கண்டதும் காதல் கருவிலே குழந்தை காவல்துறையிடம் முறையீடு என பல பெண்களின் வாழ்க்கை சீர்கெட்டு போய்க்கொண்டிருக்கிறதுஇதற்கு யார் காரணம் ? சமுதாயமா? இல்லை பெற்றோரா?
அவசரத்தில் காதல் திருமணம் செய்து கொள்ளும் பெண்களின் வாழ்க்கை எவ்வள்வு வேகமாக தொடங்க பட்டதோ அவ்வளவு சீக்கிரத்திலேயே முடிந்து விடுகிறது.
காதல் தவறென்று சொல்லவில்லை நான் நீங்கள் தேர்ந்தெடுக்கும் நபர்களில் தான் தவறு நிகழ்கிறது வாழ்க்கை ஒரு முறை தான் எடுக்கும் முடிவு தெளிவானதாக இருக்க வேண்டும்
இன்றைய சூழலில் ஒரு 13 வயது சிறுவன் கூட மது அருந்தும் நிலை தான் இப்பொழுது நம் சமூகத்தில் இருக்கிறது
இதற்கு நாம் வெட்கப்படவேண்டாமா? மது அருந்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது ஒரு சிலரால் இது நாகரிகத்தின் அடையாளமாக சுட்டிக்காட்டப்படுவது வேதனையளிக்கிறது.


இதனை தடுக்க வேண்டிய அரசே மதுவை ஊக்குவிக்கிறது "படிப்பதற்கு பள்ளி தர வேண்டிய அரசு குடிப்பதற்கு கட்டடம் கட்டிக்கொடுத்துகொண்டிருக்கிற்து"
" நம் கலாச்சாரம் இருக்கும் வரை தான் நம் தமிழினத்தின் அடையாளம் இருக்கும்
நம் தமிழினத்தின் அடையாளம் மெல்ல மெல்ல அழிந்து வருகிறது என்பதுதான் வேதனையான உண்மை"

உலக கோப்பை வெல்ல முடியுமா? : கிரிக்கெட்டுக்கு ஹாக்கி சவால்

தேசிய விளையாட்டு தொடர்பான விவாதம் சூடு பிடித்துள்ளது. 8 முறை உலக கோப்பை வென்ற பிறகு,தேசிய விளையாட்டுக்கு கிரிக்கெட் உரிமை கொண்டாடலாம் என முன்னாள் ஒலிம்பிக் ஹாக்கி வீரர் பல்ஜித் சிங் செய்னி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.நாட்டின் தேசிய விளையாட்டாக இருக்கும் ஹாக் கியை நீக்கிவிட்டு, கிரிக் கெட்டுக்கு தேசிய அங்கீகாரம் அளிக்க வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் பட்டோடி வலியுறுத்தினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இது குறித்து பல்ஜித் சிங் செய்னி கூறுகையில்,""ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இன்னும் இடம் பெறவே இல்லை. அதனால் முதலில் 8 முறை உலககோப் பையை கிரிக்கெட் வெல் லட்டும். பிறகு வேண்டுமானால் கிரிக்கெட்டை தேசிய விளையாட்டாக அறிவிக்கலாம். இப்போது ஹாக்கி மோசமான நிலையில் இருக்கின்றது என்பது உண்மைதான். ஆனால் விரைவில் நல்ல நிலைக்கு வந்துவிடும்,'' என்றார்.


அங்கீகாரம் இல்லை: முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான வாசுதேவன் பாஸ்கரன் கூறுகையில்,""தேசிய விளையாட்டாக இருந்தும் ஹாக்கிக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. கடந்த 1982, டில்லி ஆசிய கோப்பை போட்டிக்கு முன்புவரை நாம் புல்தரையில் தான் விளையாடினோம். அப்போது நம்மிடம் செயற்கை இழையிலான தளம் ஒன்றுகூட இல்லை. இருப்பினும் 8 ஒலிம்பிக் தங்கம் வென்றோம். 10, 12 அல்லது 20 நாடுகளில் விளையாடப்படும் கிரிக் கெட் இன்னும் ஒலிம் பிக்கில் நுழையவில்லை. ஆனாலும் வர்த்தக ரீதியில் சிறப்பாக செயல்படுவதால் தான் கிரிக்கெட் மோகம் இந்தியாவில் அதிகரித்துள்ளது. மக்களின் ஆர்வமும், ஆதரவும், நவீன வசதியும் உள்ளது. இவை எல்லாம் உண்மையில் ஹாக்கிக்கு தான் கிடைத்திருக்க வேண்டும். இவ்வாறு பாஸ்கரன் தெரிவித்தார். ஹாக்கி வீரர் பல்ஜித்சிங் தில்லான் கூறுகையில்,"" பட்டோடியின் பேச்சு எனக்கு வியப்பு அளிக்கிறது. கிரிக்கெட் அணி தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது.


"நம்பர்-1' அணியாகவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் போதிய வசதிகள் இல்லாத காலத்திலேயே இந்திய ஹாக்கி அணி 8 முறை ஒலிம்பிக்கில் தங்கம் வென்றுள்ளது. இந்தியாவுக்கு பல மறக்க முடியாத தருணங்களை ஹாக்கி பெற்றுத்தந்துள்ளது,'' என்றார்.


கில் ஆதரவு: முன்னாள் ஹாக்கி கூட்டமைப்பு தலைவர் கே.பி.எஸ்.கில்., கூறுகையில்,"" ஹாக்கி 100க்கும் மேற்பட்ட நாடுகளில் விளையாடப்படுகிறது. ஆனால் கிரிக்கெட் 8 அல்லது 10 நாடுகளில் தான் விளையாடப்படுகிறது. ஒலிம்பிக்கில் ஹாக்கி உள்ளது. ஆனால் கிரிக்கெட் இல்லை. யாரும் கிரிக்கெட் விளையாடலாம். ஆனால் சிறந்த உடல்திறன் உள்ளவர்கள் மட்டுமே ஹாக்கி விளையாட முடியும். ஹாக்கிதான் தேசிய விளையாட்டாக தொடர வேண்டும்,'' என்றார்.


ஒவ்வொரு புது வருடத்தின்போதும் தீர்மானங்கள் எடுப்பதும் அவற்றை நிறைவேற்றாமல் இருப்பதும் நம் வழக்கம்.

வயதுக்கேற்ப தீர்மானங்கள் மாறும். இந்த வருடம் தவறாமல் டைரி எழுதவேண்டும்; இந்த வருடத்திலிருந்து குடிப்பதை விட்டு விட வேண்டும். இனிமேல் அசைவம் சாப்பிடுவதில்லை. இனிமேல் வீட்டில் எரிந்து விழுவதில்லை... இப்படி ஒவ்வொரு நபரிடமும் தீர்மானங்களைத் திரட்டினால், அது பெரும் ஆராய்ச்சிக்குரிய சுவையான தொகுப்பாகக் கூட அமையும்.

இந்தத் தீர்மானங்கள் அத்தனைக்கும் பின்னால் ஓர் எளிமையான உண்மை இருக்கிறது. அது என்ன? ஒவ்வொரு மனிதனும் இந்த வருடம் தனக்கு தீங்காக இருந்த பழக்கங்களை விட்டுவிட்டு, நல்ல பழக்கங்களை அடுத்த வருடத்தில் தொடங்க வேண்டும் என்று விரும்புகிறான்.அதாவது சாதாரண மனிதன் தன்னைத் திருத்திக் கொண்டு மேம்பட விரும்புகிறான். தன்னைத்தானே ஏதோ ஒரு வடிவத்தில் சுயவிமர்சனம் செய்து கொள்கிறான்.

ஆனால் நினைத்தபடி எல்லாவற்றையும் மாற்றிக் கொள்ள முடியாமற் போய்விடுகிறது. பைபிளில் எனக்குப் பிடித்த ஒரு வாசகம், இதைப்பற்றிச் சொல்கிறது. The spirit is willing but the flesh is weak. மறு தினம் தான் காட்டிக் கொடுக்கப்பட்டு கைதாகி சித்ரவதைக்குள்ளாவோம் என்பது ஏசுவுக்குத் தெரிந்திருக்கிறது. அந்த நிலையில் முன்னிரவு முழுவதும் இறைவனைத் தொழுவோம் என்று சீடர்களை அழைத்துக் கொண்டு கெத்சமனே தோட்டத்துக்கு செல்கிறார். இரவு வளர, வளர, ஒவ்வொரு சீடராக தூங்கிவிடுகிறார்கள். அவர்களுக்கு விழித்திருந்து தொழ மனதில் விருப்பம்தான்; ஆனால் உடல் ஒத்துழைக்கவில்லை என்ற பொருளில் ஏசு சொன்னதாக இந்த வாக்கியம் விளக்கப்படுகிறது.

எனக்கென்னவோ ஏசு அதைத் தன்னைப் பற்றியே சொல்லிக் கொண்டதாகத்தான் தோன்றுகிறது. மறு நாள் சந்திக்கப்போகும் சிலுவை சித்ரவதைக்கு அவர் சித்தம் தயாராக இருக்கிறது. உடல் இன்னமும் அஞ்சுகிறது. தன்னைத் தயார்படுத்திக் கொள்ளவே அவர் அன்றிரவு முழுவதும் இறைவனுடன் பிரார்த்தனை வழியே உரையாடுகிறார்.

தான் சரி என்று நம்பும் உண்மைக்காக எந்த துன்பத்தையும் சந்திக்க ஒருவர் மனதில் தயாராக இருக்கலாம். அவர் உடலும் தயாராக இருக்க வேண்டும் என்பது அடுத்த கட்ட சுய தயாரிப்பு. கொள்கையில் பிடிப்பு இருக்கும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு கட்டத்தில் வாழ்க்கையில் சந்திக்கும் சவால் இது. பெரும்பாலான மக்கள் இதற்குத் தயாராக இல்லாத நிலையில் தான் வாழ்க்கையில் சமரசங்களைச் செய்கிறார்கள். ரயிலில், தெருவில், ஓட்டலில், டீக்கடையில் என்னை சந்திக்கும் பல வாசகர்கள் `எப்பிடி தைரியமா எழுதறீங்க ?' என்று ரகசியக் குரலில் கேட்கும்போது, அதன் பின்னே இருப்பது, விமர்சனங்களின் விளைவாக ஏற்படக்கூடிய துன்பங்களை எப்படி சந்திப்பது என்பது பற்றிய பொதுக் கவலைதான். அந்தக் கவலை இல்லையென்றால் அவர்களும் விமர்சிக்கத் தயாராகத்தான் இருக்கிறார்கள். The spirit is willing but the flesh is weak.

ஒவ்வொரு புது வருடத்திலும் தசையின் பலவீனத்தைக் கடக்கும் முயற்சியில், சாமான்ய மக்கள் இந்த வருடம் இதைச் செய்வேன் என்று சுயத் தீர்மானங்கள் போடுகிறர்கள்.

ஆனால் நம் சமூகத்தின் மிக பலமான சக்திகளாக இருக்கிற அரசியல், அரசாங்கம், சினிமா, ஊடகங்கள், பத்திரிகைகள், தொழில்கள் இவற்றில் இருக்கிற முக்கியமான புள்ளிகள் யாரும் இப்படி புது வருடத் தீர்மானம் போடுவதே இல்லை. போன வருடம் ரொம்ப அராஜகம் செய்துவிட்டேன். இந்த வருடம் கொஞ்சம் குறைத்துக் கொள்வேன்; போன வருடம் ஓவராக லஞ்சம் வாங்கினேன். இந்த வருடம் கம்மியாக வாங்குவேன்; போன வருடம் ஆபாசமாகவும் அபத்தமாகவும் படங்கள் செய்தேன். இந்த வருடம் கொஞ்சம் நல்ல படங்கள் செய்வேன்; போன வருடம் நம் பத்திரிகை முழுக்க ஆபாசக் களஞ்சியமாக இருந்தது; இந்த வருடம் கொஞ்சம் அடக்கி வாசிப்பேன்; போன வருடம் அபத்தமான சீரியலும் குலுக்கல் டான்சுமாக சேனலை ஓட்டிவிட்டேன். இந்த வருடம் கொஞ்சம் நல்ல ப்ரொகிராம் செய்வேன்.......என்றெல்லாம் துளிக் கூட சுயவிமர்சனப் புது வருடத் தீர்மானங்கள் இந்த அயோக்கியர்கள் செய்வதே இல்லை.

இரண்டு வருடங்களாக நானும் ஒவ்வொரு புத்தாண்டின்போதும் ஒரு தீர்மானத்தை யோசிக்கிறேன். இது என்னைத் திருத்திக் கொண்டு மேம்படுவது சம்பந்தப்பட்டது அல்ல. முழுக்க முழுக்க விரக்தியால் எடுக்கும் தீர்மானம். இனி அரசியல் விமர்சனமே எழுதுவதில்லை என்று சென்ற டிசம்பரில் யோசிக்கத் தொடங்கினேன்.

அதற்குக் காரணம் என் கட்டுரைகளை எல்லாம் தொகுத்து புத்தகங்களாக வெளியிடுவதற்காக, முந்தைய நான்கு வருடக் கட்டுரைகளையும் ஒரே மூச்சில் படித்ததுதான். அவற்றைப் படிக்கப் படிக்க, தமிழகத்தின் பிரதான அரசியல்வாதிகளைப் பற்றிப் புதிதாக சொல்ல எதுவும் மீதியில்லை என்று தோன்றியது. இவர்களுடைய அயோக்கியத்தனங்களின் அந்தந்த வாரத்து நிகழ்ச்சிகளின் பரிமாணங்களை மட்டுமே தொடர்ந்து எழுத முடியுமே தவிர, அடிப்படையாக இவர்களைப் பற்றிப் புதிதாக சொல்ல எதுவும் இல்லை.

விரக்தியை அதிகப்படுத்திய இன்னொரு காரணம், இப்படி தொடர்ந்து எழுதியும், இவர்கள் எதையும் திருத்திக் கொள்வதாக இல்லை என்பதும் என் கட்டுரைகளிலிருந்தே தெரிய வருகிறது. பழைய தவறுகளையே இன்னும் பெரிசு பெரிசாக தொடர்ந்து செய்கிறார்களே ஒழிய துளியும் வெட்கம், கூச்சம், சூடு, சுரணை போன்ற அடிப்படை மனிதப் பண்புகள் எதுவும் இவர்களிடம் காணப்படவில்லை. எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி என்ற ஆராய்ச்சியை நோக்கித்தான் நாம் தள்ளப்படுகிறோம்.

உடனடி உதாரணங்களாகவே சிலவற்றைச் சொல்லலாம். மின்வெட்டால் சிறு தொழில்கள் எல்லாம் மூடப்படும் வேளையில் திருச்சி உறையூரில் ஸ்டாலின் கூட்டத்துக்காக பல கிலோமீட்டர் தூரத்துக்கு அருவருப்பாக மின் அலங்காரங்கள் செய்திருந்ததைக் குறிப்பிட்டு திருந்தவே மாட்டிங்களா என்று ஒரு வாரம் முன்னால் ஓ பக்கங்களில் கேட்டிருந்தேன். இந்த வாரம் சென்னை வேளச்சேரியில், முதலமைச்சர் அடுத்த வாரம் வரப்போகும் நிகழ்ச்சிக்காக சாலைகளில் செய்துவரும் வரவேற்பு ஏற்பாடுகள் போக்குவரத்தையே நிலைகுலைய வைத்து, அந்தப் பகுதி மக்கள் குமுறிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு அர்த்தம் என்ன? திருந்த மாட்டோம், போங்கடா என்பதுதானே?

முதலமைச்சரின் புது வருடக் கனவு, கூவத்தின் பளிங்கு போன்ற நீரில் அவர் வீட்டுப் பிள்ளைகள் குளிப்பது என்று மேம்பாலத் திறப்பு விழாவில் சொல்லியிருக்கிறார். இதே கனவை அவர் 1972ல் நான் கல்லூரியில் படிக்கும்போதும் சொன்னார். அப்போது அவருடைய ஆட்சியில் அதற்கு பணம் ஒதுக்கிச் செலவும் செய்தார்கள். இப்போது என் மகனும் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டான். முதலமைச்சர் கலைஞரும் ஐந்து முறை முதலமைச்சராக இருந்து சாதனை செய்துவிட்டார். கூவம் இன்னும் நாறிக் கொண்டிருக்கிறது.

37 வருடங்களுக்கு முன்னால் கூவம் சீரமைப்பு திட்டத்தைப் போட்டவர் ஏன் அதை அப்போதே சரியாக நிறைவேற்றவில்லை என்ற காரணத்தை, இப்போது இன்னொரு திட்டம் போடும்போது சொல்ல வேண்டாமா? சொல்ல மாட்டார். நம் மக்களின் மறதி, அலட்சியம், விமர்சிப்பதற்கான பயம் இவையெல்லாம்தான் அரசியல்வாதிகளின் முதலீடுகள்.
கலைஞருக்கு மாற்றாக தன்னை முன் நிறுத்தும் எதிர்க் கட்சித்தலைவர் ஜெயலலிதாவின் உச்சகட்ட அரசியல் சாணக்யத்தனம் என்ன தெரியுமா? திருமங்கலம் தொகுதியின் தி.மு.க. வேட்பாளரின் மாமியார், மாமனார், கொழுந்தன் எல்லாரையும் அ.தி.மு.க.வில் சேரச் செய்வதுதான். இதுவா அரசியல்?

தமிழ்நாட்டில் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் மாறி மாறி நடத்தி வந்திருப்பதே இந்தக் குடும்ப அரசியல்தான். அரசியலில் இருக்கும் பல குடும்பங்களில் சிலர் தி.மு.க.விலும் சிலர் அ.தி.மு.க.விலும் இருக்கிறார்கள். எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் குடும்பத்துக்கு லாபம். இரு கட்சிகளும் மேல் மட்டத்திலிருந்து கீழ் வரை, குடும்பங்களின் வாரிசு அரசியல்தான் நடக்கிறது.

ஒரு ஆர்.டி.ஓ. லஞ்ச வழக்கில் கைதானால் அவரிடம் கோடிக்கணக்கில் சொத்து, பிடிபடுகிற ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் கோடிக்கணக்கில் சொத்து. அரசாங்கத்தின் கீழ்மட்ட, நடுமட்ட ஊழியர்களிடமே இவ்வளவு சொத்து குவிகிறதென்றால், அரசியல்வாதிகள், அமைச்சர்கள் எவ்வளவு கொள்ளையடித்திருப்பார்கள் என்று யூகிக்கலாம்.

இன்று தமிழ்நாட்டின் எந்தப் பிரச்னையை எடுத்துக் கொண்டாலும் அதற்கு வேராக இருப்பது லஞ்சம் ஊழல் அராஜகம்தான். நில ஆக்கிரமிப்பு, மணல் கொள்ளை, ஆற்று நீர் மாசுபடுதல், சுற்றுச் சூழல் பாதிப்பு எல்லாவற்றுக்கும் பின்னால் இருப்பது லஞ்சம் ஊழல் அராஜக அரசியல். இதை 1969 முதல் 2009 வரை செய்துவந்திருப்பவர்கள் தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. இரு கட்சிகளும்தான். கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மூவரும்தான் இதற்காக குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவர்கள். புதிதாக உருவாகி வந்த கட்சிகள் இயக்கங்கள் எதுவுமே தங்களுக்கு மாற்றாக உருவாகாதபடி, அவற்றையும் தங்கள் வழியில் அழைத்துச் சென்ற குற்றமும் இவர்களுடையதே.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் எதற்காக நான் தொடர்ந்து அரசியல் விமர்சனம் எழுத வேண்டும் என்ற விரக்தியில் சென்ற ஜனவரியில் எழுதுவதை நிறுத்த முடிவு செய்தேன். அப்போதுதான், எனக்கெதிரான அவதூறுப் பிரசாரங்கள். கண்டனக் கூட்டங்கள். அரசியல் நிர்ப்பந்தங்கள் எல்லாம் நிகழ்ந்தன. விகடனில் என் தொடர் நிறுத்தப்பட்டது. நானாக நிறுத்துவேனே தவிர, இன்னொருவர் நிர்ப்பந்தத்தால் என் குரல் ஒலிப்பது நிற்காது என்று நிரூபிப்பதற்காகவே தொடர்ந்து குமுதத்தில் எழுதத் தொடங்கினேன். ஆனால் என் விரக்திக்கான காரணங்கள் அப்படியே உள்ளன.

2009_ல் தமிழக அரசியலில் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் திருக்குவளை குடும்பமும் மன்னார்குடி குடும்பமும் பலவீனப்படுத்தப்பட்டு அவற்றை அண்டிப் பிழைக்கும் அரசியல் கட்சிகளும் பலவீனப்படுத்தப்பட்டு, முற்றிலும் புதிய நேர்மையான அரசியல் சக்திகள் இளைய தலைமுறையிலிருந்து முகிழ்த்தெழ வேண்டும் என்பதுதான் என் கனவு. இதை நிறைவேற்றப் போகிற பொதுமக்கள், வாசகர்கள், இளைஞர்கள் எங்கே இருக்கிறீர்கள்? தயவுசெய்து வெளியே வந்து என் மனச் சோர்வை நீக்குங்கள். அதுவே நீங்கள் எனக்குத் தரும் புத்தாண்டுப் பரிசு. The spirit must be willing and the flesh should not be weak..

இந்த வருட பூச்செண்டு
மும்பையில் பயங்கரவாதி கசாபை, தன்வசம் எந்த ஆயுதமும் இல்லாதபோதும் துணிச்சலாகப் பிடித்து தன் உயிரையே கடமைக்காகக் கொடுத்த காவலர் துக்காராமுக்கு இந்த வருடப் பூச்செண்டு.

பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவராக எதுவுமே செய்யாமல் அரசியல் நடத்திய ஜெயலலிதாவுக்கு இந்த வருடக் குட்டு.

சன் டி.வி.யிலிருந்து கலைஞர் டி.வி.க்கு சென்ற ஊழியர்கள் அனைவருக்கும் இ.வ.பரிதாப விருது.

கிளிநொச்சியை கைப்பற்றியது இலங்கை ராணுவம் சுற்றி வளைப்பு! புலிகள் தலைமையகம் வீழ்ந்ததால் பெரும் பதட்டம்

இலங்கையில் நடந்துவரும் உள்நாட்டுச் சண்டையில், தற்போது இலங்கை ராணுவத்துக்கு கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. விடுதலைப் புலிகளின் அரசியல் தலைநகரான கிளிநொச்சியை கைப்பற்றியுள்ளது. அதிபர் ராஜபக்ஷே இதற்கான அறிவிப்பை வெளியிட்டு, "கிளிநொச்சி ராணுவ வீரர்கள் கைவசம் வந்துவிட்டது' என்றார்.இலங்கையில் ராணுவத்துக்கும், புலிகளுக்கும் இடையே கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு சண்டை நடந்து வருகிறது. புலிகளை அடியோடு ஒழிப்பதற்கான முயற்சியை கடந்த இரு மாதங்களுக்கு முன் இலங்கை ராணுவம் தீவிரப்படுத்தியது.

புலிகள் மீது கடும் தாக்குதல் : கடந்த சில வாரங்களாக கிளிநொச்சி மாவட்டத்தில் இரு தரப்புக்கும் இடையே சண்டை தீவிரமடைந்தது. துவக்கத்தில் கடும் உயிரிழப்பை சந்தித்த இலங்கை ராணுவம் பின், சுதாரித்துக் கொண்டு படிப்படியாக முன்னேறியது. நேற்று முன்தினம் கிளிநொச்சியின் வடக்கு பகுதியில் இருந்து 6 கி.மீ., தொலைவில் உள்ள பரந்தன் என்ற நகரத்தையும், தெற்கு பகுதியில் இரணமேடு என்ற இடத்தையும் இலங்கை ராணுவம் கைப்பற்றியது. இந்த இரு பகுதிகளில் இருந்தும் கிளிநொச்சியை நோக்கி ராணுவம் வேகமாக முன்னேறியது. இதுதவிர, கிழக்கு பகுதி வழியாகவும் ராணுவ வீரர்கள் முன்னேறினர். ராணுவத்துக்கு ஆதரவாக இலங்கை போர் விமானங்களும் புலிகள் மீது கடும் தாக்குதல் நடத்தின. புலிகளின் கடும் எதிர்ப்பை முறியடித்து ராணுவ வீரர்கள் வெற்றிகரமாக நேற்று கிளிநொச்சிக்குள் நுழைந்தனர். ஏராளமான பீரங்கிகளும் கிளிநொச்சிக்குள் நுழைந்தன.கிளிநொச்சியை கைப்பற்றி விட்டதாக இலங்கை ராணுவம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஆயுதங்களை கீழே போட்டு விட்டு, புலிகள் காட்டுப் பகுதிகளுக்குள் தப்பி ஓடிவிட்டதாகவும் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுதங்களை கீழே போட்டு ஓட்டம் ; இலங்கை பாதுகாப்பு செயலர் கோட்டபயா ராஜபக்ஷே கூறுகையில், "வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகள் வழியாக கிளிநொச்சிக்குள் நுழைந்த ராணுவம், நகரை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. கிளிநொச்சி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. இன்று (நேற்று) அதிகாலையில் நடந்த சண்டையில் மட்டும் 50க்கும் மேற்பட்ட புலிகள் கொல்லப்பட்டனர்; நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். ஆயுதங்களை கீழே போட்டு விட்டு புலிகள் உடனடியாக சரண் அடைய வேண்டும். விரைவில் புலிகள் அமைப்பின் தலைவர்கள் கைது செய்யப்படுவர்' என்றார்.எனினும், இதுகுறித்து புலிகள் தரப்பில் இருந்த எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

கிளிநொச்சி கைப்பற்றப்பட்டது பற்றியும் தகவல் வெளியிடவில்லை. ஆனால், பரந்தனை ராணுவம் கைப்பற்றியதில் புலிகள் தரப்பு தளபதி இளம்பெரியான் மரணம் அடைந்ததாகக் கூறப்பட்டது.பின்னடைவு: கிளிநொச்சியை கைப்பற்றியதன் மூலம், கடந்த 25 ஆண்டுகளாக நடந்துவரும் உள்நாட்டு போரில் ராணுவத்துக்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த கிளிநொச்சியை இழந்ததன் மூலம், புலிகளுக்கு பலத்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

புலிகளின் வான்படை தளம், தகவல் தொடர்பு மையங்கள், ஆலோசனை மையங்கள் ஆகியவை கிளிநொச்சியில் தான் இருந்தன. போர் நிறுத்த காலத்தில் கிளிநொச்சி தான், புலிகளின் முக்கிய ஆலோசனை மையமாக விளங்கியது. பேச்சுவார்த்தைக்காக நார்வே உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்த வெளிநாட்டு பிரதிநிதிகள் புலிகள் அமைப்பின் தலைவர்களை கிளிநொச்சியில் தான் சந்தித்துப் பேசினர்.இத்தனை சிறப்பு மிக்க கிளிநொச்சியை இழந்தது, புலிகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.



புலிகள் சரண் அடைய ராஜபக்ஷே வலியுறுத்தல்: கிளிநொச்சியை இலங்கை ராணுவம் கைப்பற்றியதை அடுத்து, அந்நாட்டு அதிபர் ராஜபக்ஷே "டிவி'யில் உரையாற்றினார். அவர் பேசுகையில், "கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக நடந்துவந்த சண்டையில், இலங்கை ராணுவ வீரர்கள் தற்போது மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளனர். இந்த வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்ற ராணுவ வீரர்கள், நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் "ஹீரோ'க்களாக உருவெடுத்துள்ளனர். தோல்வி சந்தித்துள்ள புலிகள் உடனடியாக ஆயுதங்களை கீழே போட்டு விட்டு, ராணுவத்திடம் சரண் அடையும்படி இறுதி எச்சரிக்கை விடுக்கிறேன்' என்றார். மேலும் அவர், "இத்துடன் சண்டை முடியாது. புலிகள் சக்தி இனி சுருங்கி விடும். தனியாக ராஜ்ஜியம் அமைக்க புலிகள் முயன்றது இந்த வெற்றியால் முறியடிக்கப்பட்டது' என்றார். கிளிநொச்சி வீழ்ந்ததையடுத்து, இலங்கை பங்குச் சந்தையில் பங்குகள் விலை ஏற்றம் கண்டன.


தற்கொலை படை தாக்குதல்: கொழும்பில் உள்ள விமானப் படை தலைமை அலுவலகம் அருகே பயங்கர சத்தத்துடன் நேற்று குண்டு வெடித்தது. இதில், இரண்டு பேர் கொல்லப்பட்டனர்; 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இலங்கை போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், "விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களே இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். இது ஒரு தற்கொலைப் படை தாக்குதல். காயமடைந்த ஏராளமானோர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்' என்றனர். இந்த தாக்குதலை அடுத்து, கொழும்பு முழுவதும் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.


விடுதலைப்புலிகள் ஓட்டம் எங்கே?: பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தங்களின் தலைமையகமாக செயல்பட்டு வந்த கிளிநொச்சியை புலிகள் இழந்துள்ளனர். கிளிநொச்சியில் இருந்து தப்பி ஓடிய புலிகள் எங்கு மறைந்துள்ளனர் என்பது குறித்து இலங்கையில் பரபரப்பாக பேசப்படுகிறது.இலங்கை அரசியல் பார்வையாளர்கள் கூறியதாவது:


புலிகள் கிளிநொச்சியை இழந்தாலும், முல்லைத் தீவு உள்ளிட்ட பகுதிகளில் சில முக்கியமான இடங்கள் அவர்களின் கட்டுப்பாட்டில் தான் உள்ளன. மேலும்,வவுனியாவின் அடர்ந்த வனப் பகுதியும், புலிகளின் முக்கியமான மறைவிடமாக உள்ளது. கிளிநொச்சியில் இருந்து தப்பி ஓடிய புலிகள், இந்த வனப் பகுதிக்குள் தான் மறைந்து இருப்பர் என்று உறுதியாக நம்பப்படுகிறது. இங்கிருந்தபடியே, இலங்கை ராணுவத்துக்கு எதிரான தங்களது தாக்குதல்களை அவர்கள் தொடர்வர். குறிப்பாக, கொரில்லா முறை தாக்குதல்களை அவர்கள் நிகழ்த்தக் கூடும். இதனால், இலங்கை ராணுவத்துக்கு புலிகளால் தொடர்ந்து நெருக்கடி ஏற்படும்.

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive