தொலைக்காட்சி இன்று நம் வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது
இன்றைய நிலையில் தொலைக்காட்சிப்பெட்டியை திறந்தாலே
அழுது வடிகின்ற தொலைக்காட்சி தொடர்கள்,ஒரு சேனலில் ஒலிபரப்பாகும் தொடரை போல மற்றொரு சேனலிலும் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது
நல்ல அறிவு திறனை வளர்க்கும் நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டுஆபாசம் , வன்முறை ,கலாசார சீர்கேடுகளை உருவாக்கும் நிகழ்ச்சிகளே அதிகளவில்
ஒளிபரப்படுகின்றன ஒரு சேனலின் நிகழ்ச்சிகளை மற்றொரு சேனல் திருடுவது போட்டி என்ற பெயரில் ஒரே மாதிரியான நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவது போன்றவை மக்களுக்கு சலிப்பையே ஏற்படுத்துகிறது
இன்றைய தொடர்களில் பெண்களை ஆபசமாகவும் ,கீழ்த்தரமான எண்ணங்கள் கொண்டவர்களாகவும் குடும்ப உறவுகளை கேவலப்படுத்தும் விதமாகவும் , கள்ள தொடர்பு ,ஒருவனுக்கு இரண்டு மனைவி,ஒரு பெண்ணுக்கு இரண்டு கணவன்கள் என சித்தரிக்கும் போக்குதான் இன்றைய தொடர்களில் அதிகம் காண்பிக்கப்படுகிறது.
கணவனையும் குழந்தைகளையும் பிரிந்து விவாகரத்து கேட்பது போன்றவையே இன்று கதை கருவாகி போய்விட்டதுஅரைகுறை ஆடைகளுடன் பெண்கள் குத்தாட்டம் போடுவதையே இன்று பல தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்புகின்றனகுழந்தை கணவன் மணைவி என குடும்ப உறுப்பினர்களுடன் அமர்ந்து பார்க்கும் நிகழ்ச்சிகள் குறைவு
வியாபார நோக்குடன் மட்டுமே தொலைக்காட்சி நிறுவனங்கள் செயல்படுகின்றன வருடக்கணக்கில் ஒளிபரப்பாகும் பல தொடர்கள் அரைத்த மாவையே அரைத்து கொண்டிருக்கின்றன இதனை பார்ப்பதற்க்கு விளம்பரங்கள் வேறுபல ஆயிரம் கொடுத்து தொலைக்காட்சி வாங்கி சில நூறு கொடுத்து கேபிள் இணப்பு வாங்கி தரங்கெட்ட நிகழ்ச்சிகளை மட்டுமே நாம் பார்க்க வேண்டுமா?
பல திட்டங்கள் தீட்டும் அரசு தொலைக்காட்சிகளுக்கு என சில கட்டுபாடுகளை விதித்தால் தவிர இந்த நிலை மாறாது என்பதில் ஐயமில்லை
முட்டாளாக்கும் சேனல்கள்
Labels: விமர்சனம்
நமீதா மீதும் வழக்கு போடுவேன்!
முன்னே போனால் கடிக்கவும், பின்னே நின்றால் உதைக்கவும் கற்றுக் கொண்டார் மாளவிகா! கார்த்தீகை படத்தில் தன்னால் தொடர்ந்து நடிக்க முடியாது என்று நடிகர் சங்கத்திடம் கூறிவிட்டார்! வேறுவழியில்லாத இயக்குனரும் படத்திலிருந்தே அவரை நீக்கி விட்டார். மாளுவுக்கு பதிலாக நமீதாவை கேட்டார்களாம். 30 லட்சம் சம்பளம் கேட்ட நமீ, இறுதியாக ஓ.கே சொல்லிவிட்டார். இந்த விஷயம் மாளவிகாவின் காதில் எட்ட, அவ்வளவுதான்! கர்ப்பம் என்றும் பாராமல் ஒரு ஆட்டம் ஆடியிருக்கிறார் (இதைதானே படத்திலும் செய்ய சொன்னார்கள்?)
தனது வழக்கறிஞர்கள் மூலம் இயக்குனர் வீராவை தொடர்பு கொண்ட மாளவிகா, எனக்கு பதிலாக வேறு யார் நடித்தாலும் அவர்கள் மீதும் தயாரிப்பு நிறுவனம் மீதும் வழக்கு தொடருவேன். என் கேரக்டரில் நான்தான் நடிப்பேன் என்றாராம். 'அட, நல்லாயிருக்கே' என்று மகிழ்ந்த இயக்குனருக்கு அடுத்ததாக மாளவிகா சொன்னதுதான் 'ஆப்பு' ரகம்!
இன்னும் சில மாதங்களில் நான் குழந்தை பெற்றதும் உங்கள் படத்தில் நடித்துக் கொடுப்பேன். அதுவரை நீங்கள் வேறு நடிகையை வைத்து இந்த படத்தை எடுக்க கூடாது. இப்படி அவர் போட்ட கண்டிஷன் கேட்டு வெறுத்துப்போன வீரா, போனை துண்டித்து விட்டாராம்.
தயாரிப்பாளர், நடிகை, இருவருமே மாறி மாறி வழக்கு போட்டுக் கொள்ளட்டும். படத்தை முடிக்கிற வழியை பார்ப்போம் என்பதுதான் வீராவின் முடிவு. வீரமான முடிவுதான்!
_ நன்றி தமிழ்சினிமா.காம்
Labels: சினிமா
விளையாட்டு செய்தி
ரெய்னா, காம்பீர் அதிரடியில்
வங்கதேசத்தை வீழ்த்தியது
இந்தியா
முதலில் பேட் செய்த வங்கதேசம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 283/6
ஆறு விக்கெட்டுக்களை இழந்து 283 ரன் எடுத்தது .பின்னர் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவரில் 284 ரன் என்ற கடின இலக்குடன் பேட்டிங்கை தொடங்கியது முதலில் தடுமாறிய இந்தியா பின்னர் ரெய்னா, காம்பீர் ஆகியோரின் விளாசலில் 43.2 ஓவரில் வெற்றி வாகை சூடியது
சிறப்பாக ஆடிய ரெய்னா 116 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்
ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 13 பேருக்கு பதவி உயர்வு
1. மாலதி
2.ஞான தேசிகன்
3.தேவேந்திரநாத்சாரங்கி
4.குற்றாலிங்கம்
5.அலாவுதீன்
6.அம்புஜ் சர்மா
7.என்.எஸ்.பழனியப்பன்
8.ஆர்.கே.கன்னா
9.தீனபந்து
10.பரூக்கீ
11.சுப்புராஜ்
12.லீனா நாயர்
13.கணேசன்
ஆகிய 13 பேரும் முதன்மை செயலராக பதவி உயர்வு பெற்றுள்ளனர்
