ூரியனைச் சுற்றி ஒளிவட்டம் எதனால் ஏற்பட்டது என்று அறிவியல் தொழில் நுட்ப ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சூரியனைச்சுற்றி ஒளி வட்டம்
பரந்து விரிந்த வானில் எண்ணற்ற அதிசயங்கள் நடக்கின்றன. அதில் சில மட்டுமே நமது கண்களுக்கு தெரிகின்றன. அப்படி தெரியும் சிலவற்றை நாம் ஆச்சரியமாக பார்ப்பதோடு, அதனால் பின்விளைவுகள் ஏதாவது ஏற்படுமோ என்ற அச்சமும் சேர்ந்தே வந்துவிடுகிறது.
அந்தவகையில்தான் நேற்றைய தினம் வானில் சூரியனைச்சுற்றி ஏற்பட்ட ஒளிவட்டமும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. இந்த ஒளிவட்டத்தை பார்த்து பலரும் பல கருத்துகளை கூறத் தொடங்கிவிட்டனர். இருப்பினும் அறிவியல் பூர்வமான கருத்துதான் இறுதியானது.
நீர்த்துளிகளே காரணம்
அதன் அடிப்படையில் இது குறித்து சென்னையில் உள்ள தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப ஆய்வு மையத்தின் செயல் இயக்குனர் பி.அய்யம்பெருமாளிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது-
மேகக்கூட்டங்களில் நீர்த்துளிகள் உள்ளன. அந்த நீர்த்துளிகள் உயரத்தில் செல்லும்போது பனிக்கட்டிகளாக மாறிவிடும். ஒவ்வெரு பனிக்கட்டிகளும் முப்பெட்டகம் கொண்டது. ஒவ்வொரு பனிக்கட்டிகளிலும் ஒளிவிலகல் நடப்பதால் சூரியனைச்சுற்றி ஒளிவட்டம் ஏற்படும். இது எப்போதும் வரக்கூடிய ஒன்றுதான். மேகக்கூட்டத்தில் நீர்த்துளிகள் அதிகமாக இருப்பதன் காரணமாகத்தான் இப்படி ஒளிவட்டம் தெரிகிறது. இதன்காரணமாக தட்பவெட்ப நிலையில் எந்த மாறுதலும் வராது.
சூரியனைச் சுற்றி ஒளிவட்டம் எதனால்?
Posted by
தமிழ்க்குமரன்
Tuesday, October 7, 2008

0 comments:
Post a Comment