என் பர்சை நீ பார்த்தாயா?”
”என் செல்போனை நீ எடுத்தாயா?” ஆகிய கேள்விகளுக்கு சம்பந்தப்பட்டவர்களின் பதில்கள் இல்லை என்பதே. ஆனால், தொனி மற்றும் தோரணையை வைத்தே இல்லைகளுக்குள் பதுக்கி வைக்கப்பட்டுள்ள ஆம்களை வெளியே கொண்டு வந்துவிடலாம்.
”நான் பெத்த பிள்ளையே இல்லை நீ; உனக்கு நான் அப்பனுமில்லை, நீ எனக்கு மகனுமில்லை” என்று மனம் வெறுத்துக் கத்துகிறார் ஓர் அப்பா. அவசரப்பட்டு இது ‘இல்லை’ இரகத்தைச் சேர்ந்தது என்கிற முடிவிற்கு எவரும் வந்துவிடவேண்டாம். இதற்குள் ஓர் ஆம் ஒளிந்து கிடக்கிறது.
தம் மகன் நன்றாக வரவேண்டும் என்கிற அக்கறையின் முரண்பாடான வெளிப்பாடே இது. நாம் விண்ணப்பம் விடுத்த எவ்வளவோ இடத்தில், தீர்மானமாக நமக்கு ‘இல்லை’கள் சொல்லப்பட்டு அவை ‘ஆம்’களாகியிருக்கின்றன.
கல்லூரியில் படிக்கும் மகன் செலவுக்குப் பணம் கேட்கிறான். ஆரம்பத்தில் அம்மாவிடமிருந்து இல்லைதான் பதிலாக வருகிறது. புறப்படும்போது, ”உன் தொந்தரவு தாங்கலை! இந்தா வச்சுக்கோ! நல்ல செலவாப் பண்ணு!” என்று அதுவே ஆமாக அரைமணி நேரத்திற்குள் உருமாறுகிறது.
”மாப்பிள்ளை மோட்டார் சைக்கிள் கேக்கிறார்ப்பா. பஸ் ஸ்டாண்ட்ல காத்துக் கிடந்தே நேரம் வீணாப் போகுதப்பா. சீக்கிரமே போயிடறார். ராத்திரி லேட்டா வர்றார். புள்ளைங்க ரெண்டு நேரமும் தூங்கிடுதுங்க. எங்களோட அவர் இருக்கிற நேரமே குறைச்சல்தாம்பா” என்று சிணுங்கும் மகளுக்கு அப்பா முதலில் சொல்வது இல்லைதான்.
”எப்படிம்மா முடியும்? நான் எங்கம்மா போவேன்? கல்யாணத்துக்கு முன்ன வாங்கின கடனே கழுத்தை அழுத்துது” என்ற அதே அப்பா எப்படியோ மாப்பிள்ளைக்கு மோட்டார் சைக்கிள் வாங்கிக் கொடுத்து விடுகிறாரே!
ஆம்! பாசத்திற்கு இல்லைகளை ஆம்களாக மாற்றும் ஆற்றல் உண்டு. ஆனால், தொடர்ந்து ‘இல்லை’தான் என்பது பதிலாக இருப்பின் அந்த இல்லைகள் ஆராயப்பட வேண்டும்.
இந்த வழியில் நீ வந்ததால் இல்லை. இந்நபர் மூலம் அணுகியதால் இல்லை. நேரமற்ற நேரத்தில் சூழ்நிலை புரியாமல் கேட்டதால் இல்லை போன்ற பதில்கள் வெளிவரும்.
‘இல்லை’களை எப்போதுமே நிரந்தரமாக அடைக்கப்பட்ட கதவுகளாகக் கருதக்கூடாது. தட்டும் நேரம்; தட்டப்பயன்படுத்தும் கருவி; தட்டப்படும் சூழல் ஆகியவை சாதகமாக இருக்கின்றனவா என உன்னிப்பாகக் கவனித்து அனைத்தையும் சாதகமாக்கிக் கொண்டு களத்தில் இறங்க வேண்டுமே தவிர, ஒப்புக்குத் தட்டிவிட்டு ‘இல்லை’களை வாங்கிக்கொண்டு வெளியேறி விடக்கூடாது
உழைக்கத்தெரிந்தும் பிழைக்கத்தெரியாதவர்கள்
இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!
‘நற்சொல் சொல்லிக் கண்டிப்பதாவது? இது சாத்தியமில்லாத ஒன்று. காரசாரமாகவும் கடுமையாகவும் திட்டினால் அதற்குப் பெயர்தான் கண்டிப்பு’ என்று வாதிடுபவர்கள், இக்கட்டுரையின் இறுதியிலும் விடாப்பிடியாகச் சொல்லமுடியுமா என்று பாருங்கள்.
“ரொம்ப நல்லா இருக்கு நீ பண்றது” என்கிற பாராட்டு வாக்கியத்தை ரொம்ப என்பதை அழுத்தி, குரலில் பாராட்டு - உற்சாகத் தொனி வந்துவிடாமல் சொல்லிப் பாருங்கள். நீ பண்றது ரொம்பத் தப்பு என்கிற அர்த்தம் வந்துவிடும்.
வாக்கியம் என்னவோ ஒன்றுதான். தொனிதான் சுருதிக் குறைவான தொனி.
தேன் கலந்த மருந்தையே இந்த உலகம் விரும்புகிறது. கசப்பை அல்ல!
“நாங்க செஞ்ச நல்லதுக்கு நீ நல்லாவே திரும்ப செஞ்சிட்டே” என்பதில், நல்லாவே என்கிற வார்த்தையை தொனி மாற்றிப் பேசினால், சொல்ல வந்த பொருளே வேறு.
என்ன பேச்சு இது? என்கிற சொல்லில் எதிர்மறையான சொல் ஏதும் இல்லை. இந்த நல்ல வாக்கியத்தின் தொனியை மட்டும் மாற்றி ஒருவரை மென்மையாகக் கண்டிக்க முடியும்.
“மறக்கமுடியாதபடி பண்ணிட்டீங்க!” என்பதைப் பாராட்டாகவும் பயன்படுத்தலாம். குறை சொல்லவும் பயன்படுத்த முடியும்.
“உங்களை மாதிரியான ஆளை நான் இதுவரை பார்த்ததே இல்லை” ரொம்பத்தான் உழைச்சிட்டே!” ஆகிய பாராட்டுகளும் இந்த இரகத்தைச் சேர்ந்ததே!
கண்டிக்க முடியாத சூழ்நிலை. ஆனால் கண்டித்தே ஆகவேண்டும். எழுகிற உணர்வைக் கொட்டித்தான் ஆகவேண்டும். ஆனால், அப்படியே கொட்ட முடியாத நிலை. இப்படிப்பட்ட சூழலில் நம் உணர்வுகளை வெளிக்காட்ட இந்த நற்சொல்லால் கண்டிப்பது மிக உதவும்.
அது என்ன நற்சொல்லால் கண்டிப்பது? கடுமையாகவே திட்டிவிட்டுப் போகிறேன் என்கிறவர்களுக்கு ஒரு வார்த்தை.
இப்படிச் செய்தால் நமக்கு மேலும் சில பாதிப்புகள் ஏற்படலாம். இதைத் தவிர்க்க இது சிறந்த வழி. அது மட்டுமல்ல, அவர் என்ன சொல்லிவிட்டார்? தப்பா ஒண்ணும் சொல்லலியே! உங்களை மாதிரியான ஆளை நான் பார்த்தது இல்லைன்னு தானே சொன்னார்? இதில் என்ன தப்பு இருக்கு என்று நமக்காக வரிந்து கட்டிக் கொண்டு பேசவும் நான்கு பேர்கள் வேறு கிடைப்பார்கள்!
குறை சொன்னால் கோபம் வருவது ஏன்?
“நல்லாத்தனர் பேசினீங்க. ஆனால் இரண்டு இடத்தில் பேச்சுக் குறிப்பை விட்டுட்டு, தேடிக் கண்டுபிடிக்க அதிகநேரம் எடுத்துகிட்டீங்க. கூட்டம் அதுக்குள்ள சலசலத்துவிட்டது” என்றார். மேடையிலிருந்து பேசிவிட்டு இறங்கியவரிடம் அவரது நண்பர்.
பாராட்டத்தான் நெருங்கி வருகிறார் என எதிர்பார்த்த பேச்சாளருக்கு ஏமாற்றம். “மேடையில் ஏறி நின்னு பேசிப் பாரு. அதில் உள்ள கஷ்டம் புரியும்” என்று கடுப்பாகச் சொல்லிவிட்டு வேகமாக ன நகர்ந்துவிட்டார் அந்தச் பேச்சாளர். விமரிசித்த நண்பருக்கு ஏமாற்றம். நல்லதுக்குத்தானே சொன்னோம். இப்படித் தப்பா புரிஞ்சுக்கிட்டுப் பேசுறாரே! என்று ஒரு வழி ஆகிவிட்டார்.
‘நீங்க சொல்றது சரி, சரியாக் கண்டுபிடிச்சீங்க இனித் தவிர்க்கிறேன்’ என்று பதில் சொல்லியிருந்தால், முதலிலே சொன்னாரே. நல்லாத்தான் பேசினீங்க என்கிற பாராட்டைத் தலைப்புச் செய்தியாக இவர் எடுத்துக் கொண்டு மகிழ்ந்திருக்கலாம்.
நம் செயல்களில் உள்ள தவறுகளை ஏற்றக்கொள்கிறபோது அத்தவறின் வீரியத்தை நாம் அழகுறக் குறைத்துவிடுகிறோம் என்பதை ஏனோ பலர் உணர மறுக்கிறோம்.
குறை சொல்லவும் ஒரு தகுதி வேண்டும் என்பதும் பலரிடம் இருக்கும் தவறான எதிர்பார்ப்பு. ‘இவனிடம் ஆயிரம் ஓட்டைகள். இவன் எப்படி என்னைச் சொல்லலாம்’ என்று கோபப்படுவது வாதத்தின் அடிப்படையில் சரிதான். ஆனால் பலனின் அடிப்படையில் தவறு.
தோட்டத்துக் கத்தரிக்காயை எவரும் விமரிசிக்கமாட்டார்கள். கடைக்கு, விற்பனைக்கு வந்துவிட்டால் சொத்தை, பூச்சி என்று சொல்லத்தான் செய்வார்கள்.
குறைகளை ஒப்புக்கொண்டால் உலகம் அதைப் பெரிதுபடுத்தாது. மறுத்தாலோ, சாக்குப்போக்குச் சொன்னாலோ அதைக் கெளரவப் பிரச்னையாக்கிவிடும்.
நம் முத்திரை கிழிக்கப்பட்டுவிட்டதே என்பதும் பலரது கோபத்திற்குக் காரணம், யானைக்கும் அடிசறுக்கும் என்கிற விதியை ஏற்கவேண்டியதுதான்.
பிறர் நகைக்க இடமாகிவிட்டதே என்பதும் சிலரது கோபம். திருஷ்டி கழியும் என்று நம்ப ஆரம்பித்து நல்ல ஆறுதல்.
100 சதவிகித முழுமையை இவ்வுலகம் எப்படி எதிர்பார்க்கலாம் என்பதும் சிலரது கோபம். அதில் நமக்கு நன்மை இருக்கிறதே!
குறை சொல்பவர்கள் தங்கள் மேதாவித்தனத்தைக் காட்டுகிறார்கள். காட்டிவிட்டுப் போகட்டுமே! இதற்குச் சலுகை கொடுங்கள். கோபப்படாதீர்கள்
சொன்னால் தவறு சொல்லாதது குற்றம்!
நமக்காகப் பிறர் செலவு செய்தால் நமக்கு மிகவும் சந்தோஷமாகத்தான் இருக்கிறது. ‘ஆஹா எவ்வளவு நல்ல மனசு!’ என்று பாராட்டத் தோன்றுகிறது.
ஆனால், செலவழித்தவருக்கோ ‘இவ்வளவு செலவழித்தோமே, நானும் அதைப் பகிர்ந்து கொள்கிறேன்’ என்று சொல்ல மனம் இல்லையே என்று வருத்தமடைகிறது.
செலவு செய்பவருக்கு அதில் மகிழ்ச்சிதானா என்று நாம் உறுதிப்படுத்திக் கொண்டால்தான் நம் மகிழ்ச்சியில் முழுமையோ பொருளோ இருக்க முடியும்.
நமக்கு அதைப் பகிர்ந்து கொள்ள மனம் இல்லையாதலால், நாம் அதுபற்றிக் கேட்டால் அவர் ரொம்ப வருத்தப்படுவார். அப்செட் ஆகிவிடுவார் என்று நமக்குச் சாதகமாகக் கற்பனை செய்து கொண்டு விடுகிறோம்.
கேட்டால் தவறாகிவிடும் என்று எண்ணுபவர்களுக்கு ஒரு வார்த்தை நாம் கேட்கும் விதமாகக் கேட்க வேண்டும்.
”உங்களுக்கு நிறையச் செலவு வைத்து விட்டேனோ என்று குற்ற உணர்வு இருக்கிறது. நீங்க தவறா எடுத்துகலைன்னா” என்று மெல்ல ஆரம்பித்து அவர்கள் உள்ளத்தில் இருப்பதை வெளிக் கொணர வேண்டும்.
”உங்க சந்தோஷத்தைக் கெடுக்கக் கூடாதுன்னு நீங்க செலவழிக்கிறபோது நானும் சும்மா இருந்துட்டேன். எனக்கு இந்த மாதிரியான சந்தோஷத்தை, வாயப்பைக் கொடுங்க” என்றும் அசத்தலாம். இதற்கு அவரால் சரிவரப் பதில் பேச முடியாது.
மாறாக, நாம் செலவழிப்போம்; அவராகக் கேட்கட்டும், பிறகு அவரிடம் வாங்கிக் கொள்வோம் என்று பெருந்தன்மையாக முன்வந்து செலவழித்தவரை நம் சுயநலத்திற்காகத் தண்டிப்பது சற்றும் நியாயமல்ல!
ஒரு வேளை எப்படி நீங்க அப்படிச் சொல்லப் போச்சு? என்று பொய்க் கோபம் காட்டினாலும், பின்னால் வேறிடமாவது சொல்வார். ”தர்றேன்னு மனப்பூர்வமாகச் சொன்னார். நான்தான் வேண்டாம்னு சொல்லிட்டேன்” என்று.
நல்லுறவு தொடர இதுவே வழி!
பாதிப்புகளைப் பாதியாக்கலாம்!
தமிழகச் சாலைப் பாதுகாப்புக் குழுவின் அறிக்கை ஒன்று தமிழகத்தில் 2006-ஆம் ஆண்டு மட்டும் 11,000 பேர் சாலை விபத்தில் இறந்துள்ளனர் என்கிற அதிர்ச்சித் தகவலைத் தந்துள்ளது.
2007 ஆம் ஆண்டு இதைவிட 10 சதவிகிதம் அதிகம் இருந்திருக்கும் என்கிறது.
இந்த உயிரிழப்புகள் குறைய வேண்டுமானால் இவ்விபத்துகளை ஆய்வுக் கோணத்தில் அணுக வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது எனலாம்.
ஒவ்வொரு சாலை உயிரிழப்பும் காரணம் அறியப்பட்டு அந்தந்தக் காவல்துறை அதிகாரிகளால் இதைத் தவிர்க்கவோ குறைக்கவோ என்ன செய்யலாம் என்று அறிக்கை சமர்ப்பிக்கச் சொல்லலாம்.
மேலைநாடுகளில் அனைத்து விபத்துகளையும் கவனக் குறைவுகளின் கீழ் அடக்கி கோப்பைக் கட்டிப் பரணில் போட்டுவிடாமல் நன்கு ஆராய்கிறார்கள்.
வருங்காலத்தில் நடக்காதிருக்க என்ன செய்யலாம் என்று தொடர்புடைய துறை அதிகாரிகளை அழைத்து விவாதிக்கிறார்கள்.
தீர்வுகளை, ஆலோசனைகளைச் சமர்ப்பித்து, உயிரிழப்புகளைத் தடுக்கப் பெருமுயற்சி எடுத்துக் கொள்கிறார்கள்.
இங்கோ உயிர்களின் விலை மிக மலிவு. ஓட்டுநர் உரிமங்கள் விலைக்குக் கிடைக்கின்றன. போதுமான காவல்துறை அதிகாரிகள் இல்லாமை; பழுதடைந்த சாலைகள்; போக்குவரத்துக் காவல்துறையில் கீழ்மட்டத்திலிருந்து உயர்மட்டம் வரை உள்ள கையூட்டுகள்; குடிப்பழக்கத்திற்கு இங்கு விதிக்கப்படும் எளிமையான தண்டனைகள் என இன்னும் பல காரணங்களால் சாலை விபத்துகளின் எண்ணிக்கைகள், வாகனங்களின் எண்ணிக்கைகளைப் போலவே கட்டுபாடு இல்லாமல் பெருகி வருகின்றன.
சென்னைப் புறநகரில் மட்டும் நாள் ஒன்றிற்கு 2000 வாகனங்கள் சாலையில் இறங்குகின்றனவாம்.
இவையெல்லாம் எங்கு போய் முடியும்?
பாகிஸ்தானியச் சிறையில் சிக்கிக் கொண்ட ஓர் இந்தியருக்காகப் பிரதமர் உட்பட மெனக்கெடுகிறார். இவராவது தீவிரவாதக் குற்றச்சாட்டை எதிர்கொண்டிருப்பவர்.
ஆனால் தமிழகத்தில் இறக்கும் ஆயிரமாயிரம் உயிர்கள் என்ன பாவம் செய்தன?
சம்பந்தப்பட்ட பல்துறைகளும் கைகோர்த்தால் வரும் வருடமே, குறைந்தபட்சம் உயிரிழப்புகளைப் பாதியாக்கிவிட முடியும்.
வாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள்
நோய்களைக் குணமாக்கும் வண்ண உடைகள்!
நமது வயது, தோற்றம் முதலியவற்றிற்கு ஏற்ப உடை அணிகிறோம். சிலர் ராசி, எண் கணிதம், முதலியவற்றிற்கு ஏற்ப உடையணிகிறார்கள்.
ஆனால், புதிதாக எழுந்துள்ள ஒரு வாதமே நோய்களுக்கு ஏற்ப உடையணிந்தால், ஆரோக்கியம் நீடிக்கும் என்பதுதான். நோய்கள் குணமாகும். பிரச்னைகள் தீர்ந்து எழுச்சி பெற்று உழைத்து வருமானத்தையும் அதிகரிக்க முடியும். இதனால்தான் வண்ண சிகிச்சை முறையும், கிரிஸ்டல் சிகிச்சை முறையும் பலரது நோய்களைக் குணப்படுத்தி வருகின்றன.
நவரத்தினக் கற்கள் உள்ள மோதிரங்கள் அணிவது, இந்த நிறங்கள் உடலில் செல்ல எளிதாக இருக்கிறது என்பதால்தான்.
இதேபோல சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், செம்மஞ்சள், பச்சை, டர்க்யூஸ் (Turcuoise) நீலம், கருநீலம், வைலட் (செந்நீலம்), பர்ப்பிள் (கருஞ்சிவப்பு), ஸ்கார்லெட் (இளஞ்சிவப்பு) இந்த நிறங்களில் உங்களுக்குரிய நிறத்தில் உடைகளைத் தேர்வு செய்து அணியலாம்.
வயலட் நிறம் உள்ள அறையில் ஒருவர் இருந்தால், அவரது இதயம் சீராகத் துடிக்கும். இதய நோயாளிகளின் இதயத் துடிப்பு வேகவேகமாக இருந்தால் இதைச் சரி செய்யும். இந்த நிறச்சட்டை அணிந்தால், உடலில் இந்த ஒலி அலைகள் படுவதால், இதயம் சீராக இயங்கும். ஒவ்வோர் வண்ணத்திற்கும் ஒலி அதிர்வுகள் உள்ளன. இவை உடலில் மாறுபாட்டை உண்டாக்குகின்றன.
ஆண்களுக்கு இளம்பெண்களைப் பார்த்ததும் நாடித்துடிப்பு அதிகம் துடிக்கிறது என்கிறார்கள். உண்மையில் சிவப்பு நிறத்தைப் பார்த்ததும்தான் இதயம் வேகமாகத் துடிக்கிறதாம். டாக்டர் ஜாய்ஸ் நெல்சன் என்ற ஸான்டைகோவின் பெண் டாக்டர் வண்ண மருத்துவம் மற்றும் கிரிஸ்டல் மருத்துவம் மூலம் இந்த உண்மையைக் கண்டறிந்துள்ளார்.
சிவப்பு நிற உடைகள் நரம்புகளுக்கும், சிந்திக்கும் சக்திக்கும் வலுவூட்டும். இரத்த ஓட்டத்தைச் சரியாகக் கவனித்துக்கொள்ளும், தொற்று நோய் உள்ளவர்கள், எக்ஸ்ரே அடிக்கடி எடுப்பவர்கள், உடல் எரிச்சலால் கொப்புளங்கள் உள்ளவர்கள் இந்த உடையை அணியலாம். சுறுசுறுப்பாக விரைந்து வேலை செய்யச் சிவப்பு நிற உடை நல்லது.
ஆரஞ்சு நிற உடைகள் நுரையீரல்களையும், மூச்சுக் குழாய்களையும் வலுப்படுத்தும். கழுத்தில் உள்ள தைராய்டு சுரப்பி, வயிறு முதலியன சீராகச் செயல்படவும், சுளுக்கு, தசைபிடிப்பு போன்றவை அகலவும் எலும்புகள் பலமுடன் இருக்கவும் உதவும்.
பச்சை நிறம் நோய் நுண்மக்கொல்லி மருந்து போல் செயல்படுகிறது. இந்த நிற உடையணிந்தால் உடற்பயிற்சி செய்தால் கிடைக்கக்கூடிய நன்மைகள் கிடைக்கும். பெருமூளையை உடல் நலனுக்கு ஏற்பச் சமன் செய்து வைத்திருக்கும். பிட்யூட்டரி சுரப்பி சிறப்பாக இயங்க இந்தப் பச்சை நிறம் உதவும். அறிவுத் தெளிவு உண்டாகும்.
காய்ச்சலைக் குறைப்பதில் நீல நிற உடை வேகமாகச் செயல்படும். எரிச்சல், கோபம், உடலில் சொறி, சிரங்கு, நமைச்சல் உள்ளவர்களுக்கும் இந்த நிறம் உதவும். ஞாபக சக்தியை அதகரிக்கும். ஒற்றுமையை அதிகரிக்கும். மருந்தைப் போல மனதிற்கும் உடலுக்கும் அமைதியும் நலமும் தரும் நிறம் இது.
தசைவலி, காய்ச்சல் முதலியவை குறையவும், முதுகுத் தண்டும், வெள்ளை இரத்த அணுக்கள் செயல் துடிப்புடன் இயங்கவும் வயலட் (செந்நீலம்) நிற உடை உதவும். கடும் காய்ச்சல், முதுகு வலி முதலியவை குணமாக இந்த நிற உடை நல்லது.
இரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தவும், இதயம் சீராக இயங்கவும், சிறு நீரகம் மற்றும் நுரையீரல் கோளாறுகள் விரைந்து குணமாகவும் கருஞ்சிவப்பு (Purple) நிற உடைகள் உதவும். தியானம் செய்பவர்கள் இந்த நிறத்தை மனதில் கற்பனை செய்து கொண்டால், வேறு எந்த ஒரு எண்ணமும் குறுக்கிடாது.
கோபத்தை மிகச் சரியான நேரத்தில் கட்டுப்படுத்தவும், இரத்த அழுத்தம் உயராமல் இருக்கவும், அடரீனல் சுரப்பி, சிறு நீரகங்கள், உயிரணுக்களின் உற்பத்தி முதலியவை சிறப்பாக இயங்கவும் இளஞ்சிவப்பு நிறத்தைச் சேர்ந்த உடைகள் நல்லது. குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகள் குழந்தை பிறக்கும் வரை, மற்ற சிகிச்சை முறைகளுடன் மேற்கண்ட இளஞ்சிவப்பு ரோஸ் நிற உடைகள் சீருடைபோல் தினமும் அணிய நல்ல பலனைத் தரும்.
கருணாநிதி, ஜெயலலிதாவின் வரிசையில் வைத்து எண்ணப்படும் தமிழக அரசியலின் புதிய விடிவெள்ளியான விஜயகாந்த் மிகவும் தரம் தாழ்ந்து பேசியிருப்பது ஏமாற்றம் தருவத
விஜயகாந்திற்குச் சொந்தமான மதுராந்தக நிலத்தைப் பொறுத்த வரை, இதனை ஒரு அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாகக் கருத முடியவில்லை.
விஜயகாந்த், ஹேமலதாவிற்குச் சொந்தமான 400 ஏக்கர் நிலத்தில், 28 ஏக்கர் அரசுக்குச் சொந்தமானது என்பது ஆதாரபூர்வமாகக் கண்டறியப்பட்டுள்ளதாக அரசு குறிப்பிடுகிறது.
நில ஆக்கிரமிப்பைத் தெளிவுபடுத்தி, அதைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்ற அரசுத் தரப்பு வேண்டுகோள் செவி சாய்க்கபடவில்லை என்பது அடுத்தகட்ட ஏமாற்றமிகு செய்தி.
மாறாக அப்படி ஏதும் தவறு நிகழவில்லை என்கிற பதிலும் விஜயகாந்த் தரப்பு வழக்கறிஞர் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சரியான தகவலாக இருந்திருந்தால் இந்நேரம் நீதிமன்றத்தின் மூலம் தடையுத்தரவு வாங்கியிருக்க வேண்டும்.
இது சாத்தியமாகாமல் போனதால் பொக்லைன்களும், கடப்பாரைகளும் கேப்டன் நிலத்திற்குள் நுழைய ஏதுவாகிவிட்டது.
மின்வேலி அமைப்பது என்பது காட்டு மிருகங்கள் நடமாடும் பகுதிக்குப் பொருந்தலாம். ஆனால் மதுராந்தகம் பகுதிக்கு இது அவசியமற்றது. அதிலும் ஒரு கட்டாந்தரைபோல் காட்சியளிக்கும் வெட்டவெளிக்கு நிச்சயம் தேவையில்லை. இந்த மின்வேலியில் பட்டு ஆடு மாடுகள் இறந்துவிட்டன என்கிற குற்றச்சாட்டு ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும் இதை ஆபத்தில்லாத 110 வோல்ட் மின்சாரமாக மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது.
அதிகாரிகள் பண்ணைக்குள் நுழைய முயன்றபோது பண்ணை மேலாளர் இதற்கு மறுப்புத் தெரிவித்து வாயிலைத் திறக்க மறுத்திருக்கிறார். அரசு உத்தரவுக்கு விஜயகாந்த் நிர்வாகம் கட்டுப்படாதது ஏன் என்பது கேள்வி.
நினைத்ததை முடிப்போம் என்று உள்ளே நுழைந்த அரசு அதிகாரிகள் எல்லைகளை அளந்து புதிய எல்லைகளை வரையறுத்தார்கள்.
முள்ளி ஓடைப் புறம்போக்கில் விஜயகாந்த் கட்டியிருந்த பல இலட்சம் மதிப்புள்ள பாலம் இடிக்கப்பட்டிருக்கிறது.
பொதுவாழ்வில் ஈடுபடுகிறவர்களின் புகழை, இத்தகைய செயல்பாடுகள் நிச்சயம் குறைக்கும்.
‘அரசு இடத்தை ஆக்கிரமிக்கிறவர் வேறு என்ன செய்யத் துணிய மாட்டார்’ என்கிற பேச்சிற்கும் இச்செயல் இடம் தந்துவிடும்.
ரஜினியின் திருவள்ளூர் இடம் முறைகேடாகப் பதிவு செய்யப்பட்டது என்று புகார் எழுந்தது. ஆனால் இல்லை என்பது தெளிவுபட நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இதுமட்டும் உண்மையாக இருந்திருந்தால், ரஜினியின் புகழ் நிச்சயம் சரிந்திருக்கும். இவ்வளவு நியாயம் பேசுகிறவர் இப்படிச் செய்துவிட்டாரே என்கிற பேச்சிற்கு இடமாகியிருக்கும். ஆனால் எது நடந்ததோ அது சரியாகவே நடந்தது என்கிறார் அமைச்சர் சுரேஷ்ராஜன்.
உண்மையை நோக்கி நெருங்கி வரும் வேளையில் விஜயகாந்த் தவறு நடந்துவிட்டதை ஏற்று இது உள்நோக்கமுடையதல்ல என்று பெருந்தன்மையாக ஒப்புக் கொண்டிருந்தால்,
அரசுத் தரப்பிற்குத் தான் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டிருக்கும்.
தராசு முள் வேறு பக்கம் திரும்பியிருக்கும்.
விஜயகாந்த் ஒரு நல்ல வாய்ப்பை நழுவவிட்டுவிட்டார் என்றே இப்போதைக்குத் தோன்றுகிறது
விஜயகாந்திற்கு ஆகும் வெகுகாலம்
கருணாநிதி, ஜெயலலிதாவின் வரிசையில் வைத்து எண்ணப்படும் தமிழக அரசியலின் புதிய விடிவெள்ளியான விஜயகாந்த் மிகவும் தரம் தாழ்ந்து பேசியிருப்பது ஏமாற்றம் தருவதாக உள்ளது.
இவரது பேச்சின் சில பகுதிகளை உங்களுக்கு அப்படியே தந்திருக்கிறேன்.
”கலைஞர் இன்றைக்குத் தன்னோட டி.வி.யில் என்ன சொல்றாரு? ‘தமிழர்களே… தமிழர்களே… நீங்கள் என்னைக் கடலில் தூக்கிப் போட்டாலும் கட்டுமரமாக மிதப்பேன். அதில் நீங்கள் பயணம் செய்யலாம். கவிழ்ந்துவிட மாட்டேன்’னு பேசறாரு… யோவ் நீ கவிழமாட்டே… மக்கள்தான் கவுந்து போவாங்க. இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் தமிழ், தமிழர்கள்னு சொல்லி மக்களை ஏமாத்திக்கிட்டு இருக்கப்போறே? நான்கு முறை முதல்வரா இருந்து கொள்ளையடிச்சது போதாதா? வயசான காலத்துலேயும் இன்னும் பதவிவெறி, பணவெறியோடு ஏன் அலையிறே? போகும்போது எல்லாத்தையும் கொண்டா போகப்போறே? செத்துட்டா இடுப்புல கட்டியிருக்கிற அரணாகயிறு கூட மிஞ்சாது.
‘மதுரை தினகரன் அலுவலகத்தில் நடந்த மூன்று கொலைக்குக் காரணம் உன் மகன் தானாமே?’ என்று டெல்லியில் ஒரு பத்திரிகையாளர் கேட்ட போது அவர் மீது கோபப்பட்டு எழுந்து போனே. ஏன்யா, உன் பிள்ளை உயிருன்னா உனக்கு அவ்வளவு முக்கியம். இங்கே நடுக்கடல்ல சாகுற மீனவர்கள்னா அவ்வளவு இளப்பமா?”- தம் ஆதரவாளர்களையே நெளிய வைக்கும் பேச்சு இது.
பாதிக்கப்பட்ட மீனவர்கள் மத்தியில் ஆறுதலாகவும் அரவணைப்பாகவும் பேசியிருந்தால் அதை யாரும் குறை சொல்லிவிட முடியாது.
ஆனால் இந்தப் பேச்சோ இரத்த நாளங்களைச் சூடேற்றுகிற பேச்சு.
இப்பேச்சு இவரது அரசியல் வெண்சட்டையில் வீசப்பட்ட அப்பட்டமான கறை என்பதை எவரும் மறுத்துவிட முடியாது.
இந்தப் பேச்சினை ஆதாரமாகக் கொண்டு சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க இயலும். ஆனால் ஆட்சியில் இருப்பவர் கெட்டிக்காரர். யானை தன் தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொள்கிறது என்றால் அந்தப் பாதிப்பே போதும்; நாம் வேறு ஏன் கைது செய்து இவரை மேலும் பிரபலமாக்க வேண்டும் என்று நினைக்கக்கூடிய புத்திசாலி.
அரசியலில் முதன்மை பெற எத்துணையோ வழிமுறைகள் உண்டு. இவற்றுள் முக்கியமானது மேடைக் கண்ணியம்.
எம்.ஜி.ஆரைப் பின்பற்றுவதாகச் சொல்லும் விஜயகாந்த் எம்.ஜி.ஆரால் பேசப்பட்ட இப்படிப்பட்ட கண்ணியக் குறைவான பேச்சிற்கு ஒரு முனனுதாரணத்தையாவது காட்ட முடியுமா?
ஒரு 86 வயதுப் பெரியவரை ‘நீ’ ‘வா’ ‘போ’ என்று பேசுவது எந்த வகையில் சரி? அவரது மறைவைப் பற்றி விமரிசிப்பதையும் எப்படி நியாயப்படுத்த இயலும்.
மேலும் ”நடுக்கடலுக்குச் சென்று கடல் உள்ளிருப்புப் போராட்டம் ஒன்றைத் தொடங்குங்கள். உங்களோடு நானும் ஒரு படகில் ஏறி சாகும்வரை நடுக்கடலில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தத் தயாராக இருக்கிறேன். தமிழ்நாட்டை ஆளும் தி.மு.க. அரசை மட்டும் அல்ல… இலங்கையை ஆளும் அராஜக ராஜபக்சே அரசையும் நம் போராட்டத்தால் ஸ்தம்பிக்க வைப்போம்” என்றும் விஜயகாந்த் பேசியுள்ளார்.
அது சரி, இலங்கை அரசை எப்படி ஸ்தம்பிக்கச் செய்யப் போகிறாராம்? நடுக்கடலில் முகாமிட்டுப் போராட்டம் நடத்தினால் இலங்கை அரசு ஸ்தம்பித்துவிடுமா? எப்படி?
விஜயகாந்த் அரசியலில் வெற்றி பெறவும், பக்குவப்படவும் இன்னும் வெகுகாலம் ஆகும் போலிருக்கிறது!
ஜீரணிக்கத்தான் முடியவில்லை!
தமிழுக்கு, தமிழருக்கு ஓர் ஊறு என்றால் அதுபற்றி முதல் குரல் கொடுப்பவர் நம் தமிழக முதல்வர் என்பதில் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது.
ஆனால் இலங்கைத் தமிழர் விஷயத்தில் கருணாநிதி எடுத்த நிலைப்பாடு விவாதத்திற்குரியது.
“யாருக்குப் பாதிப்பு வரும் யாருக்குப் பாதிப்பு வராது என்று நான் சிந்திக்கவில்லை” என்று பத்திரிகையாளர் சந்திப்பின்போது முதல்வர் தந்துள்ள வாக்கு மூலம் கூர்ந்து ஆராயத்தக்க ஒன்று. தம்மையறியாமல் கூறிய உண்மை இது எனலாம்.
இந்திய இறையான்மை என்பது இந்திய எல்லையோடு முடிந்துவிடக்கூடிய விஷயம். இலங்கையின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் உள்ள வட்ட எல்லைக்குள் இந்தியா அவ்வளவு சுலபத்தில் தலையிட்டுவிட முடியாது.
இதை உணர்ந்துதான் நம் பிரதமர் மன்மோகன்சிங், தமிழகப் பாராளுமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா அறிவிப்பிற்கு, எதிர்பார்த்த அளவிற்கெல்லாம் அசைந்து கொடுக்காமல் நிதானமாகவே செயல்பட்டு, “இலங்கை நிலவரம் எனக்குக் கவலை தருவதாக உள்ளது” என்று மட்டும் தம் அக்கறையைத் தெரிவித்திருக்கிறார்.
தங்கள் அறிவிப்பைக் கேட்டு மத்திய அரசு அலறும் என்று எதிர்பார்த்த தி.மு.க. கூடாரத்திற்கு இது பெரும் ஏமாற்றமளித்திருக்கும். இலங்கை அரசு நிகழ்த்துவது புலிகளுக்கு எதிரான யுத்தமே தவிர, அப்பாவித் தமிழர்களுக்கு எதிரதானதல்ல. அப்பாவித் தமிழர்களைப் பாதுகாப்பு வளையமாகப் பயன்படுத்துபவர்கள் புலிகளே என்கிற ஜெயலலிதாவின் கருத்தும் இந்த இடத்தில் எண்ணிப் பார்க்கத்தக்கது.
தமிழகத்தின் அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் இராஜினாமா செய்து, மத்திய அரசைக் கவிழ்ப்பதன் மூலமாக தி.மு.க. என்ன சாதிக்க நினைக்கிறது? அடுத்த தேர்தல் வருமுன் இலங்கைத் தமிழர் நலனைத் தட்டிக் கேட்க யார் பதவியில் இருப்பார்களாம்? குடியரசுத் தலைவர் திருமதி. பிரதிபாபட்டீல் நடவடிக்கை எடுக்கப்போகிறார்? என்ன அரசியல் கண்க்கீடு இது?
ஓர் அரசியல் சாணக்கியர் எடுத்த சறுக்கலான முடிவல்லவா இது! அடுத்த நாட்டின் உள்விவகாரத்தில் இந்தியா எப்படித் தலையிட முடியும் என்கிற பத்திரிகையாளர் ஒருவரின் கேள்விக்குத் தமிழக முதல்வர், “பின் பங்களாதேஷ் எப்படித் தோன்றியதாம் என்று பதிலளித்திருப்பது சற்றும் பொருத்தமில்லை.”
கிழக்குப் பாகிஸ்தானின் (பங்களாதேஷ்) நிலைமைகள் முற்றிலும் வேறு. கிழக்கு பாகிஸ்தானை ஆண்ட முஜிபுர் ரகுமானே இந்தியாவைத் தலையிடுமாறு கேட்டுக் கொண்டதை உலகமே அறியும்.
இந்நிலையை எப்படி இலங்கை நிலையோடு ஒப்பிட முடியும்?
இதனால்தான் உலக நாடுகளின் கண்டனத்திற்கு ஆளாகாமல் இந்தியா தப்பிப் பிழைத்தது. இது அந்நியத் தலையீடல்ல என்பதால்தான் இந்திராவும் உலக அளவில் சிறந்த தலைவியாக ஏற்றக் கொள்ளப்பட்டார்.
இலங்கைத் தமிழர் நலன் காக்கத் தமிழக முதல்வர் மத்திய அரசிடம் முன்வைக்கும் எந்த ஒரு கோரிக்கையும் அக்கறையுடன் கூடிய நல்ல நடவடிக்கையாகவே பாராட்டப் பெறும். ஆனால் இராஜினாமா என்கிற அச்சுறுத்தல் ஒட்டுமொத்த இந்திய நலன்களையே பாதித்துவிடக்கூடியது.
எந்த நோக்கத்திற்காக இதில் தி.மு.க. இறங்கியதோ அதுவும் நிறைவேறாமல் போய், இந்திய நலன்களும் பாதிக்கப்படுகிற ஒரு செயலை ஒரு தோழமைக் கட்சியா செய்வது? ஜீரணிக்கத்தான் முடியவில்லை.
புகையும் அடங்க வேண்டும்!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள உத்தப்புரம் கிராமத்தில் ஆதிதிராவிடர்களுக்கும் பிரிதொரு பிரிவினருக்கும் ஏற்பட இருந்த மோதல் தற்காலிகமாகத் தவிர்க்கப்பட்டிருப்பது ஆறுதலை அளிக்கிறது.
ஒரு சுவர் விஷயம்கூட முதல்வர்வரை செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.
1989 ஆம் ஆண்டில் இத்தரப்பினரிடையே கடுமையான மோதல் ஏற்பட்டு 100 அடி நீளமுள்ள சுவர் ஒன்று எழுப்பப்பட்டது.
இதை ‘விலக்கி வைத்த’ குற்றச்சாட்டாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகள் முன்வைக்க பாதுகாப்புக் காரணங்களுக்காகவே சுவர் எழுப்பப்பட்டதாக மாற்றுத் தரப்பினர் கூற, பிரச்னை பெரிதானது. ஆட்சியர் ஜவஹர் கவனத்திற்கு விஷயம் எடுத்துச் செல்லப்பட, முதல்வரும் தலையிட்டு, சுவரின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு சிறு வழி அமைக்கப்பட்டுள்ளது.
இதைச் சுவர் எழுப்பிய தரப்பினர் எதிர்த்து ஊரைக் காலி செய்துவிட்டு மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள தாழையூத்துப் பகுதிக்கு நகர்ந்துவிட்டனர்.
ஆனால், முதல்வர் சட்டசபையில் ஆண்கள் மட்டுமே புலம்பெயர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டிருக்கிறார். தினமணியில் வெளியாகிவுள்ள ஒரு புகைப்படம் முதல்வர் தந்துள்ள தகவல் தவறானது என்று நிரூபிக்கும் வகையில் பெண்கள் சிறுபிள்ளைகளுடன் வெளியாகிவுள்ளது.
பிரச்னை தீர்ந்துவிட்டது போல் அரசுத் தரப்பு நினைத்தாலும் இதனை முழுமையாக ஏற்பதற்கில்லை.
இந்த நூற்றாண்டிலும் தீண்டாமை எனும் தீக்கரங்கள் பலரது மனத்தில் எவ்வளவு ஆழமான இடத்தை ஆக்கிரமித்திருக்கின்றன என்பதை இச்சம்பவம் சொல்லாமல் சொல்கிறது.
மீண்டும் சுவர் எழுப்பப்படும் வரை நாங்கள் ஊர் திரும்புவதாக இல்லை என்று இவர்கள் காட்டும் உறுதி அரசுக் கோப்பின் முடிச்சை மறுபடி அவிழ்க்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தும் என்றே தோன்றுகிறது. நெருப்பு அடங்கிவிட்டது. புகை இன்னும் இருக்கிறதே? காட்டில் குடியேறியவர்களுக்கு மாற்றுக் குடியிருப்புகளை உருவாக்குவதும் மனங்களில் ஊடுருவியுள்ள அழுக்கை அகற்றுவதும் இப்போது அரசுக்குள்ள இரு மாற்று வழிகள் என்று சொல்லலாம்.
அரசியல் கட்சிகளுக்கு ஆயிரம் கவனஈர்ப்புகள். என்னென்னவோ பேசி எதிலெதிலோ கட்சிகள் இப்பிரச்னையைப் பேசித் தீர்க்க முன்வரலாம்.
தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இங்கு முகாமிட்டு தங்களுக்கு ஆபத்து என்பது வீண் அச்சம் என்பதை விளக்கலாம். கசப்புணர்வுகளை வெளியேற்றிப் பழங்காயங்களுக்கு மருந்திடலாம்.
எதிலும் அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கும் கட்சிகளுக்கு ஒரு நற்காரியம் செய்ய நல்வாய்ப்புக் கிடைத்திருப்பதாகவே தோன்றுகிறது
ரஜினி போட்டுக் கொடுத்த தங்கத் தடம்!
இவர் மனத்தில் என்னதான் இருக்கிறது என்று ரஜினியைப் பார்ப்பவர்களுக்கெல்லாம் ஒரு நினைப்பு ஏற்பட்டபடி இருந்தது. இதற்கு இப்போது விடை கிடைத்துவிட்டது.
தம் இரசிகர் மன்றப் பொறுப்பாளர்களை இராகவேந்திரா மண்டபத்தில் சந்தித்தையே இப்படிக் குறிப்பிடுகிறேன். ரஜினி பாணியிலேயே சொல்வது என்றால் லேட்டானாலும் லேட்டஸ்டாக வந்துவிட்டார்.
மனிதர் திருவாய் மட்டுமா மலர்ந்தருளினார்? உள்ளத்தையல்லவா திறந்து கொட்டிவிட்டார்.
இரசிகர்களைச் சந்திக்காமல் தவிர்த்து வந்த ரஜினி, இனி அவர்களுக்கு அடிக்கடி தரிசனம் தருவார் என்கிற நம்பிக்கை பிறந்திருக்கிறது. இரசிகர்களின் ஒரு சிறு விருப்பத்தைக்கூட நிறைவேற்றாமல் ஒரு நாயகர் நடந்துகொண்டது முறை அல்ல.
ரஜினியிடம் அவரது ரசிகர்கள் இரசிக்கும் விஷயங்கள் பல. இவரது ஒவ்வோர் அசைவையும் இரசிப்பார்கள். ஆனால் வெளிமனிதர்கள் பலரும் இரசிப்பது, ரஜினியின் போலித்தனமில்லாத வெளிப்படையான பேச்சு.
இதுதான் ராகவேந்திரா மண்டபத்திலும் நிகழ்ந்திருக்கிறது. எவரும் கண்டதையும் கேட்டுவிடக்கூடாது என்பதற்காக முன்பே கேள்விகளை எழுதி வாங்கி அவற்றில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து இந்தச் சந்திப்பு மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.
தன் பிறந்தநாளின்போது ஏன் இரசிகர்களைச் சந்திப்பதில்லை என்பதற்கான விளக்கம் அவ்வளவாக ஏற்கும்படி இல்லாவிட்டாலும் இது ஒரு தனி மனித விருப்பம் என்ற வகையில் இதனை நாம் அதிகம் விமர்சிப்பதற்கில்லை.
அரசியலைப் பொறுத்தவரை விடை கிடைத்துவிட்டது. ரஜினிக்கு நாட்டை ஆளும் ஆசை இருக்கிறது. அதற்கான சந்தர்ப்பத்திற்காகக் கைகட்டிக் கொண்டு காத்திருக்கிறார். தமிழகத்தில் அரசியலில் பெரிய வெற்றிடம் ஒன்று வரப்போகிறது. அப்போது அந்த இடத்தை நிரப்ப முன்வருவார் என்பது அவர் பதிலுக்குள் அடங்கியிருக்கும் விளக்கமாகப் படுகிறது.
பண உதவிகளை எதிர்பார்த்த இரசிகர்களுக்கு ரஜினி நன்கு குட்டு வைத்திருக்கிறார். தியாக உணர்வும் தன்னலமற்ற போக்கும் தம் இரசிகர்களுக்கு வேண்டும் என்கிற மறைமுகச் செய்தியைப் பதித்து இந்தச் செய்தியை அழகுறச் சொல்லியிருக்கிறார். ரஜினி இரசிகர்களின் சந்திப்பிலேயே அடிக்கோடிட வேண்டிய இரண்டு செய்திகள், என்னைப் பொறுத்த அளவில் மிகப் பிடித்திருக்கின்றன.
கேள்வி நேரத்தின்போதும் சரி, கேள்வி நேரத்திற்குப் பிறகு ரஜினி ஆற்றிய உரையின்போதும் சரி, ரஜினி வலியுறுத்தியும் வற்புறுத்தியும் சொல்லியிருக்கும் கனமான இரு விஷயங்கள், ‘கடமையைப் பாருங்கள். உங்கள் தாய் தந்தை குடும்பத்தைக் கவனியுங்கள்’ என்பதுதான்.
தமிழக இரசிக மன்றங்கள் எப்போதுமே ரொம்ப ஓவர். நடிகைக்குக் கோயில், கட்-அவுட்டுக்குப் பால் அது இது என்று ரொம்பத்தான் அலட்டிக் கொள்வார்கள்.
தேவையற்ற நடவடிக்கைகளுக்குத் தடை போட்டு, அவசியமான விஷயங்களை வலியுறுத்தியிருக்கும் இந்தச் சந்திப்பு, ரஜினி போட்டுக்கொடுத்திருக்கும் தங்கத் தடம் என்பேன்!
மின் துறையின் முனைப்பின் அவசியம்!
தமிழக நலன்களை வேரோடு அசைத்துப் பார்க்கவல்ல கொடிய அரக்கனாம் மின்வெட்டைச் சீர் செய்ய முதல்வரும், மின்துறை அமைச்சரும் உயர் அதிகாரிகளும் சேர்ந்து எடுத்துள்ள சில நல்ல முடிவுகள் வரவேற்கத்தக்கனவாகவும் ஆறுதல் அளிப்பனவாகவும் இருக்கின்றன.
தமிழகத்தில் தனியார் நிறுவனங்களால் உருவாக்கப்பட இருக்கும் மின் திட்டங்களுக்கு நன்கு ஊக்கமளிப்பது என்கிற தமிழக அரசின் முடிவு நெடுநாள்களுக்கு முன்பு எடுக்கப்பட்டிருக்க வேண்டிய முடிவு. Better late than never என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு.
இல்லாமல் போனைதைவிடக் கால தாமதம் பரவாயில்லை என்கிற இந்தக் கருத்தின் அடிப்படையில் மின்துறையின் பார்வை இப்போதாவது கடைக்கண் திறந்திருக்கிறது.
ஜுரோஸ் இன்ஜினீயரிங் என்ற நிறுவனம் தமிழகத்தின் ஸ்பிக் நிறுவனத்துடன் இணைந்து இந்தியா முழுக்க நிறையத் தனியார் மின்னுற்பத்தி நிலையங்களை ஆரம்பிக்க இறங்கியது.
நம் அரசுகளின் சிவப்பு நாடா முறைகளால் இம்முயற்சிகள் முடங்கிப் போயின.
இப்போது தனியார் வடகொரிய நிறுவனம் ஒன்று ஓர் அணுமின் நிலையத்தை உருவாக்க முன்வந்திருக்கிறது. உலக அளவில் ஏற்கெனவே 12 அணுமின் நிலையங்களை நிர்மாணித்த மிகுந்த முன்னனுபவம் கொண்ட நிறுவனம் இது.
தனியார் மின்உற்பத்தி நிறுவனங்களுக்குத் தமிழக அரசு ஒரு நற்செய்தியைத் தந்துள்ளது. நீங்கள் உற்பத்தி செய்யும் உபரி மின்சாரத்தைத் தொழில் நிறுவனங்களுக்கு நேரிடையாக விற்பனை செய்யலாம் என்பதே இந்த நற்செய்தி.
ஒரு யூனிட்டுக்கு அரசு கொடுக்கும் விலை வேறு, தனியார் நிறுவனங்கள் தர முன்வரும் விலை வேறு.
இந்த அணுகுமுறை பல தனியார் நிறுவனங்களை மேலும் ஊக்குவிக்கும் என்பதில் சந்தேகமில்லை. தனியார் நிறுவனங்கள் இனி ஜெனரேட்டர்கள் வாங்க 25 சதவிகித மானியம் வழங்குவது என்பது அற்புதமான முடிவு.
ஜெனரேட்டர்களின் பயன்பாட்டை ஊக்கப்படுத்தும் நல்ல முயற்சி இது. ஆனால் டீசல் தட்டுப்பாடு நிலவுவதும், டீசலை வாகனத்தில் ஊற்றுவதைத் தவிர கைகளில் தனியே கேன்களில் எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று எண்ணெய் விநியோக நிறுவனங்கள் பிடிவாதம் பிடிப்பதும் கவனிக்கப்படட வேண்டிய விஷயங்கள்.
மின் உற்பத்தியைப் பற்றிப் பல சிறுதொழில் அதிபர்கள் தெளிவான பார்வைகளோடும், ஏராளமான அரிய யோசனைகளோடும் காத்திருக்கிறார்கள். இவர்களைத் துறைச் செயலர்கள் அளவில் சந்திப்பு ஒன்றை ஏற்படுத்த வேண்டியது இன்றையச் சூழலில் அவசியம்.
இயற்கை பொய்க்கிறபோது செயற்கை தலைதூக்க வேண்டிய அவசியம் இருக்கிறது
தடுக்கப்பட வேண்டிய தொடர் விளைவுகள்
உடன்பயிலும், நண்பர்களை உடன்பிறந்தவர்களுக்கும் மேலாக நேசிப்பதுதான் உலகம் எங்கும் வழக்கமாக இருக்கிறது.
ஆனால், சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள், சகமாணவர்களை, மரக்கட்டைகளால் அடித்துத் துவைத்த காட்சிகளை தொலைக்காட்சியில் கண்டபோது மனம் பதைக்காதவர்கள் குறைவு.
அதுவும், இந்தக் காட்சிகளை வடஇந்திய ஊடகங்கள் திரும்பத் திரும்பக் காட்டியபோது தமிழகத்தின் மானமே காற்றில் பறப்பது போன்ற உணர்ச்சியே ஏற்பட்டது.
காவல்துறை இந்த விஷயத்தில் கையாலாகாத துறையாகச் செயல்பட்டதைப் பற்றிய விவகாரத்திற்குள் நான் நுழைய விரும்பவில்லை. நான் இந்த விஷயத்தை எடுத்துக் கொள்கிற கோணமே வேறு.
மீண்டும் ‘சட்டக் கல்லூரி திறக்கப்படும்போது பாதிக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களும் பாதிப்பை ஏற்படுத்திய சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களும் ”என்ன மச்சி! எப்படி இருக்கே?” என்று பேசிக் கொள்கிற அளவுக்கு நேசம் காட்டாவிட்டாலும் நீறு பூத்த நெருப்பாக வெறுப்பை உள்ளுக்குள் வைத்துக் கொள்ளாதிருக்க என்ன செய்யப்பட வேண்டும் என்பதில்தான் என் அக்கறை நீள்கிறது.
ஏற்கெனவே பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இன்னமும் கூட இவர்களது கைத்தொலைபேசி வழியே மிரட்டலான குறுஞ்செய்திகள் வருகின்றன என்பதுதான் சற்றுக் கலக்கம் தரும் செய்தியாக இருக்கிறது. அடித்தவர்கள்மீது நடவடிக்கை; அடித்தவர்களைப் பார்த்துக்கொண்டு கைகட்டி வேடிக்கை பார்த்தவர்கள் மீது நடவடிக்கை என்பவையெல்லாம் சட்டச் சம்பிரதாயங்கள்.
ஆனால், இனிச் சட்டக் கல்லூரி வளாகத்தில் நல்லுணர்வும், புரிந்துணர்வும், இனிய சூழலும் ஏற்படுத்த சட்டக் கல்லூரி நிர்வாகமும், சமூக அக்கறை கொண்ட அமைப்புகளும், சமூகத் தலைவர்களும், அரசியல் தலைவர்களும், அரசும் கூட்டாக இணைந்து என்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சிந்திக்க வேண்டிய, செயல்பட வேண்டிய அத்தியாவசியத் தேவை இருக்கிறது.
நல்லவேளையாக, பாதிக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தலைவர்கள் இந்த விஷயத்தில் வெளிப்படையாக மாணவச் சமுதாயத்தைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் செயலை இக்கணம் வரை மேற்கொள்ளவில்லை.
ஒரு வேளை இது நீறுபூத்த நெருப்பாக நடக்கிறதா என்பதைப் புலனாய்வு செய்ய வேண்டிய அவசியமும் காவல்துறைக்கு இருக்கிறது.
சட்டக் கல்லூரி திறக்கப்படும் முன் இரு சமூகத்தவரிடையே சமூகச் சூழலை ஏற்படுத்த வேண்டியது அவசியம். இதன் வீரியத்தையும் ஆழத்தையும் உணராமல் சட்டக் கல்லூரி நடந்துகொண்டால் இதன் தொடர்விளைவுகள் பிற தமிழகக் கல்லூரிகளிலும், ஏன் கல்லூரிக்கு வெளியேயும்கூட நிகழந்துவிடலாம்.
இத்தகைய கலவர வெடிப்புகளைத் தாங்கிக்கொள்ளும் சக்தி இன்று தமிழகத்திற்கு இல்லை.
தமிழக அரசு இந்த விஷயத்தில் இனியும் மெத்தனம் காட்டுவது கூடாது!
மத்திய அரசுக்கு நெருக்குதல் தவற தவறி விட்டார் கருணாநிதி - நெடுமாறன்
இலங்கைத் தமிழர்களைக் காக்கும் விஷயத்தில் மத்திய அரசுக்கு நெருக்குதல் தரத் தவறி விட்டார் முதல்வர் கருணாநிதி. இந்த விஷயத்தில் அவர் தோல்வி அடைந்து விட்டார் என தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் குற்றம் சாட்டியுள்ளார்.
கன்னியாகுமரி வந்த நெடுமாறன் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கைத் தமிழர்களைக் காக்கத் தவறி விட்டார் கருணாநிதி. இந்த விஷயத்தில் மத்திய அரசுக்கு நெருக்குதல் கொடுத்து, இலங்கைத் தமிழர்களைக் காத்தால்தான், மத்திய அரசுக்கு ஆதரவை தொடருவோம் என அவர் கூறியிருக்க வேண்டும். அதை செய்ய அவர் தவறி விட்டார்.
திமுகவின் ஆதரவு இல்லாமல், மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஒரு நாள் கூட ஆட்சியில் இருக்க முடியாது என்ற உண்மையை அறிந்தும், அப்படி ஒரு நெருக்குதலைத் தவறி விட்டார் கருணாநிதி.
சோமாலியாவில் இந்திய சரக்குக் கப்பல்கள் தாக்கப்படுவது குறித்துத்தான் மத்திய அரசு அதிகம் கவலைப்படுகிறது. ஆனால், தமிழக மீனவர்கள் நடுக் கடலில் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்படுவது குறித்து கண் மூடிக் கொள்கிறது.
நமது மீனவர்கள் மீது மத்திய அரசுக்கு அக்கறை இல்லை என்பதைத்தான் இது காட்டுகிறது.
இலங்கைத் தமிழர்களுக்கு தமிழகத்திலிருந்து அனுப்பப்படும் நிவாரணப் பொருட்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் இலங்கையி்ல உள்ள தமிழர் மறு வாழ்வு மையம் மூலமாகவே விநியோகிக்க வேண்டும்.
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, தமிழர் மறு வாழ்வு மையம் மூலமாக ரூ. 6 கோடி நிதியை வழங்கினார். மேலும், அந்த கழகம் மூலமாக 2 கப்பல்கள் நிறைய நிவாரணப் பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டன.
இலங்கைக்கு இந்தியா வழங்கியுள்ள ஆயுதங்கள், அப்பாவித் தமிழர்களைத் தாக்கவே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் உறுதியான நடவடிக்கை காரணமாக 1971ம் ஆண்டு வங்கதேசம் உருவானது, அந்த நாட்டு மக்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டன.
ஆனால் அந்த உறுதியும், தைரியமும், பிரதமர் மன்மோகன் சிங்கிடம் சுத்தமாக இல்லை என்றார் நெடுமாறன்.
என்னை கொன்றுவிடுங்கள்.. வாக்குமூலத்தின்போது கதறிய கஸாவ்
மும்பை தாக்குதலி்ல் ஈடுபட்டு பிடிபட்டு, விசாரிக்கப்பட்டு வரும் தீவிரவாதி அஜ்மல் அமீர் கஸாவ் தன்னைக் கொன்றுவிடும்படி இந்திய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளான். இல்லாவிட்டால் தனது குடும்பத்தினரை லஷ்கர் ஏ தொய்பா அமைப்பு கூண்டோடு காலி செய்து விடும் என்றும் கூறியுள்ளான்.
அவனிடம் நடத்தப்பட்ட விசாரணைகளி்ல் ஏகப்பட்ட தகவல்கள் கிடைத்தவண்ணம் உள்ளன.
அவர் கூறியுள்ள தகவல்கள்:
நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன். நான் 4ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளேன். அதன் பின்னர் மதரஸாவில் தான் படித்தேன்.
நான் உள்பட 40 பேர் லஷ்கர் ஏ தொய்பாவால் பயிற்சி அளிக்கப்பட்டோம். பாகிஸ்தானின் பல இடங்களில் வைத்து இந்தப் பயிற்சி அளிக்கப்பட்டது.
துப்பாக்கிளைக் கையாள்வது, நீச்சல், படகுகளை கையாள்வது, ஆர்டிஎக்ஸ் குண்டுகளை வைப்பது உள்பட பல பயிற்சிகள் தரப்பட்டன. இடையே மும்பைக்குச் சென்று டார்கெட்களை பார்த்துவிட்டு வரவும் குழுக் குழுவாக அனுப்பி வைக்கப்பட்டோம்.
இதற்காக இந்திய கல்லூரிகளின் ஐடி கார்டுகள் எங்களுக்குத் தரப்பட்டன. அந்த கார்டுகளைக் காட்டி ஹோட்டல்களில் அறை எடுத்துத் தங்கினோம். எனக்கு பெங்களூரைச் சேர்ந்த ஒரு கல்லூரியின் ஐடி கார்ட் தரப்பட்டது.
இதையடுத்து மும்பையில் தாக்குதல் நடத்த அனுப்பப்பட்டோம். எங்கள் குடும்பத்தினருக்கு பணம் தருவதாகவும் கூறினார்கள்.
தாக்குதல் நடத்திய பின்னர் பத்திரமாக கராச்சிக்குத் திரும்பி வந்துவிடலாம், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்கள்.
என் குடும்பத்துக்கு வேண்டிய நிதி உதவிகள் செய்யப்படும் என்றனர்.
போலீசாரிடம் மாட்டினால் தற்கொலை செய்யுமாறு கூறியிருந்தனர். ஆனால், நான் உயிரோடு மாட்டிக் கொண்டேன். இதனால் என்னை பேசாமல் கொன்றுவிடுங்கள். இல்லாவிட்டால் என் குடும்பத்தை லஷ்கர் ஏ தொய்பா கூண்டோடு காலி செய்துவிடும்.
என்னுடன் மும்பை வந்த தீவிரவாதிகள் 9 பேர். அவர்களது பெயர்கள், அபு அக்சா, அபு உமர், படா அப்துல் ரஹ்மான், சோட்டா அப்துல் ரஹ்மான், அபு அலி, அபாதுல்லா, சோஹய்ப், உமர் ஆகியோர்.
எங்கள் 10 பேரையும் தலா 2 பேர் கொண்ட 5 குழுக்களாகப் பிரித்து தாக்குதல் திட்டத்தைக் கொடுத்தார்கள். ஒரு குழு செய்யும் வேலை இன்னொரு குழுவுக்குத் தெரியாது.
நாங்கள் கராச்சியிலிருந்து 13ம் தேதி ஒரு கப்பலில் அனுப்பப்பட்டோம். ஆனால், கடலிலேயே அந்தக் கப்பல் பல முறை நிறுத்தப்பட்டது. குஜராத் கடல் பகுதி வரை வந்தது.
அங்கு எங்களது இன்னொரு கூட்டாளிகள் குஜராத்தைச் சேர்ந்த ஒரு படகை (குஜராத்தைச் சேர்ந்த மீன்பிடி படகு குபேர்) கடத்தி தயார் நிலையில் வைத்திருந்தனர். நாங்கள் அந்தப் படகுக்கு ஆயுதங்கள் மற்றும் 2 ரப்பர் படகுகளுடன் மாறினோம்.
அந்தப் படகில் இருந்தவர்கள் எங்களை மும்பை கடல் பகுதி வரை கொண்டு வந்தனர். இதையடுத்து ரப்பர் படகுகளுக்கு மாறி மும்பைக்கு வந்தோம்.
நானும் என்னுடன் வந்தவனும் சிஎஸ்டி ரயில் நிலையத்தில் தாக்குதல் நடத்திவிட்டு ஓபராய் ஹோட்டலுக்கு வந்தோம். மற்றவர்கள் பந்த்வார் பார்க்கில் உள்ள லியோபோல்ட் கபேவில் தாக்குதல் நடத்திவிட்டு தாஜ் ஹோட்டலுக்குச் சென்றனர்.
என்னுடன் வந்தவர்களில் சிலர் பிரிட்டஷைச் சேர்ந்த பாகிஸ்தானியர்கள். அவர்களுக்கு வேண்டுமானால் அல்-கொய்தாவுடன் தொடர்பு இருக்கலாம். எனக்கு லஷ்கர் மட்டுமே தெரியும். வேறு எதுவும் தெரியாது.
இந்தத் தாக்குதல் குறித்தோ, கொலைகள் குறித்தோ எனக்கு எந்தக் கவலையும் இல்லை. என் கவலை எல்லாம் நான் உயிரோடு பிடிபட்டது தான். என்னைக் கொன்றுவிடுங்கள். இல்லாவிட்டால் லஷ்கர் என் குடும்பத்தைக் காலி செய்துவிடும் என்று கூறியுள்ளான் கஸாவ்.
மேலும் குபேர் படகில் இருந்த ஊழியர் கொலை செய்யப்பட்டது குறித்து தனக்குத் தெரியாது என்றும் இவன் கூறியுள்ளான். இவர்களை ரப்பர் படக்குக்கு மாற்றிவிட்டு குபேரில் திரும்ப பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் நுழைந்த இந்தத் தீவிரவாதிகளின் வழி காட்டிகள் தான் அந்த ஊழியரைக் கொலை செய்துவிட்டு தங்களது கப்பலில் ஏறி கராச்சிக்குத் தப்பியதாகத் தெரிகிறது.
இப்போது இவனிடம் எப்பிஐயும் தனது விசாரணையை ஆரம்பித்துள்ளது.
கஸாவை காப்பாற்ற போலீஸ் பட்டபாடு:
முன்னதாக இவனும் இவனது கூட்டாளியும் ஸ்கோடா காரில் தப்பியபோது மும்பை டி.பி. மார்க் போலீசார் சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் காதம் தலைமையில் வழிமறித்தனர். அப்போது இவன் சுட்டதில் ஒரு போலீஸ்காரர் பலியானர். போலீசார் தி்ருப்பிச் சுட்டதில் இவனது கூட்டாளி பலியானான்.
இதையடுத்து இவனை போலீசார் பிடித்தனர். அப்போது அப் பகுதி பொது மக்கள் பலரும் இவனைப் பிடிக்க உதவியுள்ளனர். பிடிபட்ட இவனை பொது மக்கள் அடித்து உதைத்துள்ளனர். இவனை உயிரோடு அவர்களிடம் இருந்து மீட்டு பத்திரமாகக் காவல் நிலையத்துக்குக் கொண்டு வரவே படாதபாடு பட்டுள்ளனர் போலீசார்.
ரவுடிகளுக்கு வெடிகுண்டு சப்ளை செய்த சாமியார் கைது
திருச்சி அருகே பிரபல ரவுடிகளுக்கு வெடி குண்டு சப்ளை செய்த சாமியார் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி உறையூர் தொழில் அதிபர் பாலகிருஷ்ணன், புத்தூர் ஒட்டல் ஊழியர் கருணாகரன், உறையூர் ஜவுளி தொழில் அதிபர் ஆதிமூலம் ஆகியோரை கடந்த சில திங்களுக்கு முன்பு பிரபல ரவுடிகள் கண்ணாடி ஆனந்த், எடமலைப்பட்டி புதூர் பிரதாப், சறுக்குப்பாறை ஆனந்த், ஒத்தக்கை வினோத் ஆகியோர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டியது.
தகவல் அறிந்த போலீசார் துரித கதியில் செயல்பட்டு அந்த ரவுடிகளை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள், வெடி பொருட்கள் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.
போலீசார் கண்களில் இருந்து தப்பிச் சென்ற மணச்சநல்லூர் குணாவை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் ரவுடி கும்பல்களுக்கு வெடி குண்டு தயாரித்துக் கொடுத்த மணச்சநல்லூர் அண்ணாநகர் கீழ காமாட்சித் தெரு சாமியர் அழுக்கு சித்தன் என்கின்ற சரவணனை திருச்சி கோட்டை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் ரவுடிகளுடன் ஏற்பட்ட தொடர்பு, வெடி குண்டு தயாரிப்பு பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்துக்கு மத்திய தொகுப்பிலிருந்து 200 மெகாவாட் மின்சாரம்
மத்தியத் தொகுப்பில் இருந்து தமிழகத்துக்கு நேற்று நள்ளிரவு முதல் 200 மெகா வாட் மின்சாரம் வரத் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் நிலவும் மின்தட்டுப்பாட்டை சமாளிக்க மத்திய தொகுப்பில் இருந்து 1000 மெகாவாட் மின்சாரம் தர மத்திய அரசு ஒப்புக் கொண்டிருந்தது.
இந் நிலையில் முதல் கட்டமாக 200 மெகாவாட் மின்சாரத்தை தர ஆரம்பித்துள்ளது. ஆனால், மாநிலத்தின் நிலவும் மிக பயங்கர தட்டுப்பாட்டை சமாளிக்க இந்த மின்சாரம் போதாது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி முதல் மேலும் கூடுதல் மின்சாரத்தை மத்திய அரசு வழங்குமாம். அதன் பிறகே நிலைமை கொஞ்சம் சரியாகலாம்.
டெஹல்கா 'டேப்'பில் சிக்கிய வீரபாண்டி ஆறுமுகம்
சேலம், அங்கம்மாள் காலனி நிலத்தைப் பறித்தது தொடர்பான சர்ச்சையில், தமிழக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் சார்பில், வழக்கு தொடர்ந்த வக்கீலிடம், அரசு வக்கீல் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தியதை வழக்கு தொடர்ந்த வக்கீல் ஹரிபாபு டேப் செய்து டெஹல்கா.காம் இணையதளத்திடம் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் பஸ் நிலையம் அருகே அங்கம்மாள் காலனி என்ற இடத்தில் நீண்ட நாட்களாக வசித்த ஏழை, எளிய மக்கள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் தூண்டுதலின் பேரில், அடியாட்களால் வெளியேற்றப்பட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது.
அவர்களை மிரட்டி வெற்றுக் காகிதங்களில் கையெழுத்து வாங்கியதாகவும் கூறப்படுகிறது.
இந்தப் பிரச்சனை சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலத்தை மீட்டு ஏழை, எளிய மக்களுக்கு மீண்டும் கிடைக்கச் செய்ய மக்கள் சிவில் உரிமை பாதுகாப்பு மையம் பாடுபட்டு வருகிறது. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் டெஹல்கா.காம் இணையதளத்தின் ரகசிய ஆடியோ பதிவில் சிக்கியுள்ளார் வீரபாண்டி ஆறுமுகம்.
இதுகுறித்து சிவில் உரிமை பாதுகாப்பு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சேலம் பஸ் நிலையம் அருகே அங்கம்மாள் காலனியில் 31 ஏழை மக்கள் வசித்து வந்த நிலத்தை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் அடியாட்கள் வெளியேற்றி அதை கைப்பற்றினார்கள்.
அந்த நிலத்தின் மதிப்பு 25 கோடி ரூபாயாகும். பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்காக எங்கள் மையம் அமைச்சர் மீது வழக்குத் தொடர்ந்து போராடி வருகிறது.
இதில் இருந்து ஒதுங்கி செல்ல வேண்டும் என்பதற்காக சேலத்தைச் சேர்ந்த கூடுதல் துணை நீதிபதி மற்றும் கூடுதல் அரசு வழக்கறிஞர் ஆகியோர், அமைப்பின் பொதுச் செயலாளர் ஹரிபாபுவுடன் நடத்திய உரையாடலை டெகல்கா.காம் இணைய தளம் ரகசிய கேமரா மூலம் பதிவு செய்து அம்பலப்படுத்தி உள்ளது.
அமைச்சர்களின் ஆட்களோடு சமரசம் செய்து கொண்டு, அங்கம்மாள் காலனி தொடர்பாக போடப்பட்ட வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று அவர்கள் கூறியது பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
துணை நீதிபதியும், அரசு வழக்கறிஞர் ஒருவரும், ஹரிபாபுவுடன் நடத்திய உரையாடலை ரகசிய கேமரா மூலம் டெகல்கா.காம் பதிவு செய்துள்ளது.
அபகரிக்கப்பட்ட நிலத்தை வாங்கிக் கொள்ளும்படி கோயம்புத்தூரைச் சேர்ந்த நகை கடை நிறுவனம் ஒன்றை அமைச்சரின் ஆட்கள் நிர்ப்பந்தம் செய்ததும் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
முதலமைச்சர் கருணாநிதி இதில் தலையிட்டு, பல்வேறு நிலப்பறிப்பு புகார்களுக்கு ஆளாகி உள்ள அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை பதவியில் இருந்து விலக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
அமைச்சர் சார்பாக பேரம் நடத்திய துணை நீதிபதி, அரசு வழக்கறிஞர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையிட இருக்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.
டெஹல்கா சொல்வது என்ன?:
வீரபாண்டி ஆறுமுகம் வழக்கு குறித்து டெஹல்கா.காம் வெளியிட்டுள்ள செய்தி:
வழக்கறிஞர் ஹரிபாபு, பாதிக்கப்பட்ட அங்கம்மாள் காலனி மக்களுக்கு தேவைப்படும் அனைத்து விதமான சட்ட உதவிகளையும் செய்து வருகிறார். இதற்காக அவரது அலுவலகம் தாக்கப்பட்டது. அவரது உயிருக்கும் மிரட்டல் உள்ளது.
திமுகவினர் ஹரிபாபுவை மாவோயிஸ்ட் தீவிரவாதி என சித்தரித்து வருகின்றனர். அவருக்கு எதிராக சேலத்தில் போராட்டத்தையும் நடத்தியுள்ளனர். இந்த நிலையில் அமைச்சருடன் சமரசமாக போகுமாறும் ஹரிபாபுவை மிரட்டத் தொடங்கியுள்ளனர்.
இதற்காக அவர் மீது கொலை முயற்சி வழக்கு ஒன்று சேலம் கூடுதல் உதவி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் பதிவாகியுள்ளது.
இந்தப் பின்னணியில், டெஹல்கா.காம் களத்தில் இறங்கியது. தன்னுடன் உதவி மாஜிஸ்திரேட்டும், அரசு வழக்கறிஞரும் சமரசம் பேசியது தொடர்பான ஆதாரங்கள் இருப்பதாக அவர் கூறினார். அந்த ஆதாரங்களை நம்மிடமும் (டெஹல்கா.காம்) ஒப்படைத்தார்.
கூடுதல் உதவி மாஜிஸ்திரேட் அமுதாவும், அரசு வக்கீல் மூர்த்தியும் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் சார்பில் தன்னுடன் பேசியதாக கூறுகிறார் ஹரிபாபு.
நீதிபதி மற்றும் வக்கீல் ஆகியோர் தலா இருமுறை ஹரிபாபுவுடன் பேசியுள்ளனர். இவை இரண்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன.
செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.
அதன் விவரம்..
ஹரிபாபு: அங்கம்மாள் காலனி விவகாரம் தொடர்பாக நான் கடந்த எட்டு மாதங்களாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். ஒரு வக்கீலாக உங்களால் இதைப் புரிந்து கொள்ள முடியும்.
என் மீது போடப்பட்டுள்ள 307வது பிரிவு வழக்கு (கொலை முயற்சி) பொய் வழக்கு என்பது உங்களுக்குத் தெரியும். இந்த வழக்குக்காக அங்கம்மாள் காலனி தொடர்பாக அமைச்சர் மீது நான் போட்ட வழக்கை வாபஸ் பெறச் சொல்கிறீர்களா?
மூர்த்தி: என்னால் எதுவும் செய்ய முடியாது. எனது நிலையை உங்களிடம் சொல்லி விட்டேன். நான் இல்லாவிட்டால், இன்னொரு வக்கீலை எனது இடத்தில் நியமித்து, உங்களுக்கு எதிராக வாதாடச் சொல்வார்கள். மாஜிஸ்திரேட் அமுதாவை அவரது இல்லத்தில் சந்திக்க ஏற்பாடு செய்கிறேன்.
நீங்கள் மேடத்திடம் வெளிப்படையாக பேசுங்கள். பஞ்சாயத்து செய்வதற்கு சரியான மாஜிஸ்திரேட்டாக அவர் உள்ளார். உங்களது மனதில் உள்ள எல்லாவற்றையும் அவரிடம் தயக்கமே இல்லாமல் சொல்லுங்கள்..
மூர்த்தி ஏற்பாடு செய்வதாக கூறிய தினத்தன்று மாஜிஸ்திரேட்டை ஹரிபாபுவால் சந்திக்க முடியவில்லை. அதற்கு அடுத்த நாள் நீதிபதியின் அறையில் சந்திப்பு நடந்தது.
நீதிபதியுடன் இருமுறை அவரது அறையில் ஹரிபாபு பேச்சு நடத்தியுள்ளார். அந்த இரண்டு சந்திப்புகளின்போதும் பேசியவற்றை டேப் செய்துள்ளார்.
பாபுவும், அவரது வக்கீலும் அங்கம்மாள் காலனி வழக்கு தொடர்பான அனைத்து விவரங்களையும் மாஜிஸ்திரேட்டிடம் தெரிவித்துள்ளனர். அதற்கு மாஜிஸ்திரேட் அமுதா, சமரசமாக போகுமாறு அறிவுரை கூறியதாக ஹரிபாபு கூறுகிறார்.
மேலும் அங்கம்மாள் காலனி விவகாரம் தொடர்பாக இன்னொரு ஆதாரம் தன்னிடம் இருப்பதாக கூறும் ஹரிபாபு அதை பொருத்தமான சமயத்தில் வெளியிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
அமைச்சருக்கு ஆதரவாத கூடுதல் உதவி மாஜிஸ்திரேட்டும், அரசு வக்கீலும் செயல்படுகிறார்கள். இதை வெளிப்படுத்துவதே அவர்களுடன் நடந்த பேச்ச நான் டேப் செய்ததற்கு முக்கிய காரணம்.
என் மீதான பொய் வழக்கின் விசாரணை வேண்டுமென்றே தாமதப்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2006ம் ஆண்டு செப்டம்பர் முதல் 2008 ஜூலை 24ம் தேதி வரை மொத்தம் 19 விசாரணைதான் நடந்துள்ளது.
இந்த வழக்கில் நான் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி நான் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. ஆனால் நான் அமைச்சருடன் சமரசமாகப் போக வேண்டும் என நீதிபதியும், வக்கீலும் பேசிய பின்னர் எனது கோரிக்கை மனுவை தற்போது நிலுவையில் வைத்துள்ளனர் என்று கூறியுள்ளார் ஹரிபாபு.
இவ்வாறு டெஹல்கா செய்தியில் கூறப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் வீரபாண்டி ஆறுமுகம்:
இந் நிலையில், அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், உல் நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.
அவருக்கு கடும் காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டிருப்பதாக அவருக்கு வேண்டிய வட்டாரங்கள் கூறுகின்றன.
முதல்வர் கருணாநிதி நேற்று காலை மருத்துவமனைக்கு சென்று அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.
இலவசத் திட்டங்களால் சமூகம் முன்னேறாது: சிவகாமி
இலவசத் திட்டங்களால் சமுதாய முன்னேற்றம் ஏற்படாது என சமீபத்தில் அரசியலில் குதித்தவரும், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில பொதுச் செயலாளருமான சிவகாமி கூறியுள்ளார்.
நெல்லையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில பொது செயலாளர் சிவகாமி பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், அரசியல் பின்புலம் இல்லாமல் அரசு அதிகாரிகள் சுதந்திரமாக செயல்பட முடியாது. மக்களின் ஓட்டுக்கு பயப்படும் அவர்கள் அதிகாரிகளை மதிப்பதில்லை.
தாழ்த்தப்பட்டவர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களின் நலனுக்காக ஐஏஎஸ் பதவியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்துள்ளேன்.
பல கிராமங்களில் வீடு, விவசாய நிலம், சுடுகாடு இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். அரசியல் ரீதியாகவும் புறக்கணிக்கப்பட்டு வருபவர்களுக்கு கல்வியும், நிலமும் வழங்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்.
தாழ்த்தப்பட்டவர்களின் பொருளாதார மேம்பாட்டிற்கென பிரத்யேக திட்டங்கள் கிடையாது.
இலவச திட்டங்கள் என்ற மாயையில் மக்கள் சிக்கியுள்ளனர். இதனால் எவ்வித சமுதாய முன்னேற்றமும் ஏற்பட போவதில்லை. இலவச அரிசிக்கு பதிலாக விவசாயம் செய்ய நிலத்தை அளித்தால் போதும்.
தமிழகத்தில் ஆதிதிராவிட நலப்பள்ளிகள் போதிய ஆசிரியர் இல்லாமல் சீர்கெட்டு போய் உள்ளன. இதுபோல் உண்டு உறைவிட பள்ளிகளும் செயல் இழந்துவிட்டன.
எங்கள் கட்சி தனித்து போட்டியிடும். தலைமை அனுமதியளிக்கும் பட்சத்தில் தேர்தலில் நான் போட்டியிடுவேன்.
கிராமங்கள் அளவில் தொண்டர்கள் இருக்கும் கட்சி வலுவானதாக இருக்கும். எனவே ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று மக்களை சந்திக்க உள்ளோம்.
தலித் அமைப்புகளை ஒருங்கிணைப்பதோடு
கருணாநிதி-மாறன் சகோதரரர்கள் சந்திப்பு, மீண்டும் இணைந்தனர்
முதல்வர் கருணாநிதியை சன் டிவி நிர்வாக இயக்குநர் கலாநிதி மாறன் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோர் நேற்று சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது மு.க.அழகிரி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முதல்வரின் குடும்பத்தினர் உடன் இருந்தனர்.
முதல்வரின் மகன் மு.க.அழகிரி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தனர். முதல்வரின் கோபாலபுரம் இல்லத்தில் இந்த உணர்ச்சிமிகு சந்திப்பு நிகழ்ந்தது.
பின்னர் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வரிடம், இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, மு.க.அழகிரி மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோரது முயற்சியால் இந்த சந்திப்பு நிகழ்ந்தது.
சந்திப்பின்போது கண்கள் பணித்தது, இதயம் இனித்தது என்றார்முதல்வர் கருணாநிதியை சன் டிவி நிர்வாக இயக்குநர் கலாநிதி மாறன் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோர் நேற்று சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது மு.க.அழகிரி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முதல்வரின் குடும்பத்தினர் உடன் இருந்தனர்.
முதல்வரின் மகன் மு.க.அழகிரி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தனர். முதல்வரின் கோபாலபுரம் இல்லத்தில் இந்த உணர்ச்சிமிகு சந்திப்பு நிகழ்ந்தது.
பின்னர் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வரிடம், இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, மு.க.அழகிரி மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோரது முயற்சியால் இந்த சந்திப்பு நிகழ்ந்தது.
சந்திப்பின்போது கண்கள் பணித்தது, இதயம் இனித்தது என்றார்
‘ திருந்த ஒரு கடைசி வாய்ப்பு ’: அமெரிக்கா கடும் எச்சரிக்கை
பயங்கரவாத விஷயத்தில் பாகிஸ்தான் தன்னுடைய போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்; மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விஷயத்தில் இந்தியாவுக்கு தேவைப்படும் உதவிகளைச் செய்து, தன்னைத் திருத்திக் கொள்ள பாகிஸ்தானுக்கு இது ஒரு வாய்ப்பு’ என்று அமெரிக்க வெளி உறவு அமைச்சர் கண்டலீசா ரைஸ் தெரிவித்தார்.
தீவிரவாதிகளை ஒழிக்க கூட்டு நடவடிக்கை : ரைஸ் விருப்பம்
மும்பை தாக்குதல் குறித்து விசாரிக்க இந்தியா வந்துள்ள கண்டலீசாரைஸ், தீவிரவாதத்தை கட்டுப்படுத்தவும், தீவிரவாதிகளை ஒழிக்கவும் இந்தியாவுடன் இணைந்து கூட்டு நடவடிக்கைகளில் ஈடுபட விருப்பம் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு தான் வந்திருப்பதற்கு இந்திய அரசுடனும் பாதிக்கப்பட்ட மும்பை மக்களுடனும் பரஸ்பர உணர்வை பகிர்ந்து கொள்வதற்காகவே என அவர் தெரிவித்துள்ளார்.
அல்கைதா ஸ்டைலில் அட்டாக்! ரைஸ் தகவல்
மும்பையில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில், அல்கைதா இயக்குத்துக்கு தொடர்பு இருக்கிறதா என்று செய்தியாளர்கள் ரைசிடம் கேள்வி கேட்டனர். இதற்கு பதிலளித்த ரைஸ் கூறியதாவது : அல்கைதாவுக்கு தொடர்பு இருக்கிறது என்று நான் திட்டவட்டமாக சொல்லவில்லை. ஆனால், அல்கைதா இயக்கத்தினர் நடத்தும் தாக்குதல் விதம் தான் மும்பையில் நடந்த தாக்குதலிலும் கையாளப்பட்டுள்ளது. அல்கைதா இயக்கம் மக்களை அச்சுறுத்துவதோடு அரசாங்கத்தையும், பொருளாதாரத்தையும் சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது வழக்கம். மும்பை தாக்குதலும் இந்த வகையில் தான் அமைந்துள்ளது. இவ்வாறு ரைஸ் விளக்கமளித்துள்ளார்.
பிரணாப், அத்வானியை சந்திக்கிறார் ரைஸ்
மும்பை தாக்குதலில் பாகிஸ்தானுக்கு உள்ள தொடர்பு குறித்து, வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றம் எதிர் கட்சி தலைவர் அத்வானி ஆகியோரை ரைஸ் சந்திக்கவிருக்கிறார். அப்போது தீவிரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து வந்தததற்கான ஆதாரம், பாகிஸ்தானில் இருந்து இயக்கப்பட்டதற்கான ஆதாரம் ரைசிடம் தெரிவிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா வந்துள்ள ரைஸ் , மும்பை தாக்குதல் விஷயத்தில் இந்தியாவுக்கு எந்த அளவு உதவ முடியும் என்பதை ஆராய்ந்து உதவி செய்ய இருப்பதாக உறுதி அளித்துள்ளார்.
Labels: அரசியல்
