தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

விளையாட்டு செய்தி

ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் இன்று நடந்த ஆட்டத்தில் இலங்கை அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வெற்றி கொண்டது.
முதலில் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஒவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 302 ரன் எடுத்தது.
அந்த அணியில்அபாரமாக ஆடிய சங்ககாரா 112 ரன் எடுத்தார்
பின்னர் களமிறங்கியபாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 ஒவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 238 ரன் எடுத்தது
இதன் மூலம் இலங்கை 64 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி கொண்டது

தினகரன் செய்தி கலைஞர் அதிரடி

அந்தப் பசங்களுக்குக் கட்டம் கட்டுங்க !
_கொதிநிலையில் உத்தரவிட்டமுதல்வர்
குமுதம் ரிப்போர்ட்டர் வெளியிட்டுள்ள செய்தி


25-ம்தேதி! திருச்சியில் இருந்து ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸ் மூலம் சென்னை வந்து காரில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த கலைஞர், அந்த அதிகாலை நேரத்தில் காருக்குள்ளிருந்தபடி நாளிதழ்களைப் புரட்டியிருக்கிறார். ஒவ்வொரு நாளிதழாகப் புரட்டியபடி வந்த கலைஞரின் பார்வை தினகரன் நாளிதழின் ஒரு பக்கத்தில் உன்னிப்பாகப் பதிந்தது. அந்தப் பக்கத்தில் இருந்தது ஜெயலலிதாவின் அறிக்கை. `மரண பயத்தில் மதுரை மக்கள்' என்ற தலைப்பில் இருந்த அந்தச் செய்தியைப் பார்த்து அப்படியே அதிர்ந்து போனார் கலைஞர்.
அந்த அறிக்கையை வரிக்குவரி தனது பேனாவால் அடிக்கோடிட்டபடி கோபாலபுரம் வீட்டுக்கு வந்து சேர்ந்த கலைஞர், உடனடியாக அங்கு வந்திருந்த உயரதிகாரிகள் சிலருடன் ஆலோசனை நடத்தினார். `அறிக்கையில் வந்திருப்பது போல மதுரையில் நிலைமை அவ்வளவு மோசமாகவா இருக்கிறது?' என்றவரிடம், `மதுரையில் சன் டி.வி. தெரியவில்லை என்பதைத் தவிர, பிரச்னை எதுவும் இல்லை. அதையும் முறைப்படி வாங்க ராயல் கேபிள் விஷன் முயன்று வருகிறது' என்று அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். அதற்கு கலைஞர் `அதுதான் உண்மை என்றால், அந்த அம்மையாரின் அறிக்கையை இவர்கள் (தினகரன்) ஏன் இவ்வளவு பெரிதுபடுத்துகிறார்கள்?' என்று கூறிக் கொதித்தவர், `இந்தத் தலைப்பு நமது ஆட்சியையே களங்கப்படுத்துகிறது' என்று கூறி, சட்டென தனது உதவியாளர் சண்முகநாதனிடம், `சரி! போதும். அந்தப் பசங்களுக்கு கட்டம் கட்டி விடுங்கள்' என்று சொன்னதோடு, கைகளின் சைகையிலும் கட்டம் கட்டுவது போல காண்பித்து விட்டு அறிக்கையை தானே `டிக்டேட்' செய்தாராம். பிறகு தன்னை வரவேற்க வந்திருந்த அமைச்சர்களுடன் ஆலோசனைகளில் மூழ்கி விட்டாராம். அதன்பின் கலைஞர், அதேநாளில் ஓர் ஆங்கில நாளேட்டில் வந்த கட்டுரையைச் சுட்டிக்காட்டி, அதில் மாறன் சகோதரர்களின் நிறுவனங்கள் ஜெயலலிதாவுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் பற்றி விளக்கி, `இந்தக் கட்டுரையில் பெரும்பாலும் உண்மை இருக்கிறது. அவர்கள் பிழைப்புக்காக எதையும் செய்வார்கள் போலிருக்கிறது' என்று குறிப்பிட்டிருக்கிறார். அதோடு, ``முரசொலியில் அவர்களுக்கு கட்டம் கட்டிய அதே செய்தியின் அருகில் இந்த ஆங்கிலக் கட்டுரையின் சாராம்சத்தையும் போடச் சொல்லுங்கள்' என்றாராம்.
அதிகாலையில் ஆரம்பித்த இந்த ஆலோசனையில் கலைஞர் எடுத்த அதிரடி முடிவு பரபரவென பல மட்டங்களிலும் பரவியது. தினகரனுக்கு கட்டம் கட்டப்பட்ட விஷயம் முடிவான நிலையில், கலைஞருடன் இருந்த ஆற்காட்டார் இந்தத் தகவலை சந்தோஷத்துடன் அழகிரியிடம் கூறியிருக்கிறார். அதற்கு அழகிரி, `இந்த முடிவை எப்போதோ எடுத்திருக்க வேண்டும். இப்போதுதான் அதற்கு நேரம் வந்ததாக்கும்' என்றாராம்.இந்த அதிரடி முடிவு பற்றி நம்மிடம் சில தகவல்களைக் கூறிய மூத்த அமைச்சர் ஒருவர், ``மாறன் சகோதரர்கள் தினகரனை வாங்கியதில் இருந்தே தொடர்ந்து தி.மு.க.வுக்குக் குடைச்சல்தான். தினகரனில் வெளிவரும் செய்திகளில் உள்ள தவறுகளை அதன் ஆசிரியர் மற்றும்நிர்வாகிகளுக்கு கலைஞர் வாரத்தில் குறைந்தது மூன்று நாட்களாவது போனில் சுட்டிக்காட்டுவார். ஆரம்பத்தில் விரும்பியே செய்த இந்த விமர்சனத்தை அங்குள்ள நிர்வாகிகள் சரிவரப் புரிந்து கொள்ளாமல், தொடர்ந்து தவறான பாதையிலேயே போனார்கள். பொதுவாக ஓர் ஊடகத்தில் எல்லா அரசியல் தலைவர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். என்றாலும், எந்த விவகாரத்தில் யாருக்கு முக்கியத்துவம்கொடுக்க வேண்டும் என்பதில் இவர்கள் நிலைதடுமாறி விட்டார்கள்.
கழகத்தையும்,அதன் சொத்துக்களையும் மூலதனமாக வைத்து ஆரம்பிக்கப்பட்ட, சன் டி.வி.யும், அதன்மூலம் வாங்கப்பட்ட தினகரனும், இன்றைக்கு இந்த சகோதரர்களை இந்தியக் கோடீஸ்வரர்களில் ஒருவராக ஆக்கியிருக்கிறது. இதற்குக் காரணம் கலைஞர் என்பதை அவர்கள் மறந்து விட்டார்கள். அத்துடன் தொடர்ந்து தவறு செய்து விட்டு பழியை அவர்கள் அழகிரி மீது போடுவது மகா பாவம் என்றே சொல்வோம். ஆரம்பத்தில் `சுமங்கலி'யை ஆரம்பிக்க மாறன் சகோதரர்கள் எந்த வழியைக் கையாண்டார்களோ அதே வழியைத்தான் அழகிரியின் ராயல் கேபிள் விஷனும் கையாள்கிறது.
தாங்கள் மட்டுமே சம்பாதிக்க வேண்டும் என்றும் தங்களின் அடிமைகளாகவே இங்குள்ளவர்கள் இருக்க வேண்டும் என்றும் மாறன் சகோதரர்கள் நினைத்து வந்தார்கள். அப்படியிருந்தும் அவர்களை மன்னிக்க கலைஞர் தயாராகவே இருந்தார். ஆனால் அவர்கள் தொடர்ந்து தங்களுக்குள்ள மீடியா பலத்தைப் பயன்படுத்தி, அவ்வப்போது தவறான தகவல்களைப் பரப்புவது கலைஞருக்கு அதிருப்தியைக் கொடுத்து வந்தது. இதற்கு எத்தனையோ உதாரணங்களைச் சொல்லலாம். இப்போது மதுரையில் கேபிள் பிரச்னை பற்றிய ஜெயலலிதாவின் அறிக்கையை எடுத்துக் கொள்வோம். அதன் மூலம் தனது ஆட்சியையே அவர்கள் அவமானப்படுத்தி விட்டதாகப் பெரிதும் நொந்து போனார் தலைவர்'' என்று கூறினார் அந்த அமைச்சர்.
அவரே தொடர்ந்து ``அறிவாலயத்தில் இயங்கி வந்த சன் டிவி. அலுவலகத்தை மாறன் சகோதரர்கள் காலி செய்துவிட்டுப் போகும்போது, பல இடங்களில் உடைப்பையும், சேதத்தையும் ஏற்படுத்திவிட்டுப் போயிருக்கிறார்கள். காலையில் தலைவர் வாக்கிங் வரும்போது, அறிவாலய மேனேஜர் பவ்யமாக இந்த விஷயத்தை எடுத்துக்கூறி, `பூச்சுவேலைக்குக் கொஞ்சம் அதிகம் செலவாகும்' என்றிருக்கிறார். இதில் அதிர்ந்து போன தலைவர், உடனடியாக லிஃப்ட் மூலம் மேலே போய், சேதாரமான பகுதிகளைப் பார்வையிட்டிருக்கிறார். அதோடு, `என் வியர்வையும்,ரத்தமும் கலந்து கட்டிய கட்டடத்தை இப்படி சின்னாபின்னமாக்கி இருக்கிறார்களே.இந்த அநியாயத்தைப் பண்ணியவர்களுக்கு சப்போர்ட் செய்யும் செல்வியிடம் இதைக் கூறுங்கள்'' என்றவர், தானே தன் மகள் செல்வியிடம் செல்போனில் பேசி கட்டட டேமேஜ் பற்றி கூறியிருக்கிறார்.
செல்வி உடனடியாக, இதுபற்றி தயாநிதி மாறனிடம் பேச, தயாநிதி ஏதோ அப்போதுதான் தனக்கு டேமேஜ் பற்றித் தெரியும் என்பது போல் உடனே அறிவாலயத்துக்குள் போய் சுற்றிப் பார்த்தார். அதே நேரம் தலைவர் கட்டளைப்படி ஆற்காட்டாரும், வீரபாண்டியாரும் அறிவாலயத்துக்குப் போய் சேதாரத்தைப் பார்த்திருக்கிறார்கள். தயாநிதி ஒரு ஃபுளோரில் இருக்கும் போது, ஆற்காட்டாரும், வீரபாண்டியாரும் வேறு ஒரு ஃபுளோரில் இருந்த சூழ்நிலையில், ஆற்காட்டாரை தயாநிதி சந்தித்துப் பேசிக் கொண்டதாக ஒரு பத்திரிகையில் தயாநிதி தரப்பே ஒரு செய்தியை வரவழைத்து விட்டது.
இதே மாதிரிதான் கலைஞர் பிறந்தநாளன்று அவரைச் சந்திக்காமலேயே சந்தித்த மாதிரி செய்தியை அவர்கள் பரப்பினார்கள். கற்பனையும், பொய்யும் கலந்த சகோதரர்கள் என்றால் அது இவர்கள்தான். பிறந்தநாள் சந்திப்பு நடக்கவில்லை என்று அழகிரி கூறியது போல, இந்தமுறை ஆற்காட்டார் மறுப்பு கொடுக்கத் தயாரானார். அதற்குள் இப்படி ஒரு பிரச்னை வந்து மாறன் சகோதரர்களுடனான உறவு முற்றிலும் முறிந்து விட்டது'' என்று தெரிவித்தார் அவர்.
இதுபற்றி மாறன் சகோதரர்களின் கருத்து என்ன என்பதை அறிய நாம் தினகரன் வட்டாரத்துடன் பேசினோம். இதற்காகவே காத்திருந்ததுபோல மளமளவென தங்கள் உணர்வுகளை நம்முடன் பகிர்ந்து கொண்டார்கள் அவர்கள்.
``உண்மையைச் சொல்வது என்றால் தினகரன் ஊழியர்கள் இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறோம். மாறன் சகோதரர்கள் வாங்கிய தினகரனில் கலைஞருக்குப் பிடிக்காத செய்தி ஏதாவது வந்து விட்டால், அவரே நேரடியாகப் போன் போட்டு காது கூசும் அளவுக்குத் திட்டுவது வாடிக்கை. எங்கள் எம்.டி.க்கும், இவர்களுக்கும் பிரச்னை வந்து பிரிந்த பிறகுதான் அந்த வாடிக்கை நின்று போய் இருக்கிறது. நிஜத்தில் தி.மு.க. இப்போது அ.தி.மு.க. ஆகி விட்டது. அதாவது அழகிரி தி.மு.க. அப்பேர்ப்பட்ட தி.மு. கழகம் முன்பு ஒருமுறை தினமணியையும், பின்னர் தினமலர் நாளிதழையும் ஆதரிக்க வேண்டாம் என்றது. மேடை தோறும் இப்படியெல்லாம் தி.மு.க. தலைவர்கள் கூறிய பிறகுதான் அந்த நாளிதழ்களின் சர்க்குலேஷன்கள் எக்கச்சக்கமாக எகிறியிருக்கிறது. அதுபோல எங்கள் சர்க்குலேஷன் இன்னும் உயரும் என்பது உறுதி.
தி.மு.க.வினர் இப்போது மானப் பிரச்னையாகக் கருதும் ஜெயலலிதாவின் அறிக்கையை, இங்குள்ள நாளேடுகள் அத்தனையும் வெளியிட்டுள்ள நிலையில் அறிக்கை வெளியிட்ட ஜெயலலிதாவை விட்டுவிட்டு எங்கள் மீது ஏன் இத்தனை காட்டம் காட்டுகிறார்கள் என்பது புரியவில்லை. தி.மு.க. ஆட்சி வருவதற்கு முன் ஜெயலலிதாவின் மிடாஸ் நிறுவனம் பற்றி கன்னாபின்னா வென்று பல குற்றச்சாட்டுகளைக் கூறிய தி.மு.க. நிர்வாகிகள், இப்போது கமுக்கமாக இருக்கக் காரணம் என்ன? மாதாமாதம் அவர்கள் கமிஷன் வாங்குவதைப் பற்றியோ, அல்லது ஒரு மூத்த அமைச்சர் அவ்வப்போது ரகசியமாக சசிகலாவைச் சந்திப்பதைப் பற்றியோ செய்தி போட்டால் அவர்கள் கோபப்படலாம். மாறாக தமிழக எதிர்க்கட்சித் தலைவியின் அறிக்கையை நாங்கள் வெளியிட்டதற்கு இத்தனை கோபமா?
கலைஞர் டி.வி.யிலும் அவர்களின் மற்றொரு சேனலான இசையருவியிலும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் படங்கள் மற்றும் பாடல்களை அவர்கள் வெளியிடுவது மட்டும் தப்பில்லையாம். நடுநிலையான எங்கள் நாளேட்டில், நாட்டில் நடக்கும் பிரச்னை குறித்து ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையைப் பிரசுரித்ததை தவறு என்று சொல்வதுதான் வேடிக்கை.
ஆரம்பத்தில், நாங்கள் போட்ட கருத்துக்கணிப்பை இன்றுவரை தவறு என்கிறார்கள். உண்மையில் அந்தக் கருத்துக் கணிப்புகள் ஒவ்வொன்றையும் கலைஞரின் ஒப்புதலுக்குப் பிறகே பிரசுரித்தோம். கலைஞரின் நள்ளிரவுக் கைதின்போது, `கொல்றாங்க கொல்றாங்க' என்ற கூக்குரலுக்குச் சொந்தக்காரரான தயாநிதி மாறனால் தலைவருக்கு ஒருபோதும் ஒரு கஷ்டமும் வராது. மேலும், இதே அறிவாலயத்தில் சன் டி.வி.யை காலி பண்ணும்போது ஏதோ சேதாரம் நடந்து விட்டது என்கிறார்கள். இந்த அறிவாலயத்தில் உருவாகியுள்ள கண் ஆஸ்பத்திரி, நூலகம், கலந்தாய்வுக் கூடம் மற்றும் தலைவரின் அறை இவை எல்லாமே எங்கள் எம்.டி. (கலாநிதி மாறன்) கட்டிக் கொடுத்ததுதான்.
அறிவாலயத்தில் இன்றளவும் கலைஞர் தொடங்கி பார்வையாளர்கள் வரை போய் அமரும் சேர்கள் எல்லாம் மாறன் சகோதரர்கள் வாங்கிக் கொடுத்ததுதான். இதை எல்லாம் மறந்துவிட்டு டேமேஜ் என்றெல்லாம் கூறி யாரை டேமேஜ் செய்கிறார்கள் என்று தெரியவில்லை? அப்படி டேமேஜ் ஏதாவது செய்திருந்தால் அதைச் சரி செய்ய உரிய பணத்தைக் கொடுக்கும் வசதியுள்ள எங்கள் நிறுவனம் பற்றி தாறுமாறாகப் பேசுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.
அத்துடன் எங்கள் நாளிதழுக்குக் கட்டம் கட்டிய திமு.க.அரசு, எங்களுக்குத் தந்து வந்த அரசு விளம்பரங்களையும் நிறுத்தியுள்ளது. இதன்மூலம் எங்களைப் பணிய வைக்கலாம் என்று அவர்கள் கணக்குப் போடுகிறார்கள் போலும். அது ஒருபோதும் நடக்காது. இந்த அரசு தரும் விளம்பர வருவாய் எங்கள் ஊழியர்களின் ஒருநாள் டீ செலவுக்குக் கூட வராது என்பதுதான் உண்மை. இதற்காகவே அழகிரி ஏற்பாட்டில் கனிமொழியின் முயற்சியின் பெயரில் ஓர் ஆங்கிலப் பத்திரிகையில் அரைப் பக்கக் கட்டுரை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் எங்கள் நடுநிலையை அதாவது ஜெயலலிதாவுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதை விமர்சித்து இருக்கிறார்கள். அவர்களது நோக்கம் இப்போதைக்கு ஜெயித்திருக்கிறது. ஆனால் அது நீடிக்க வாய்ப்பில்லை.
இந்த சூழ்நிலையில் தி.மு.க. கூட்டணியைவிட பலமான கூட்டணி ஒன்று எதிர்ப்புறத்தில் இருந்து எங்களுக்கு மறைமுக ஆதரவு அளிக்கிறது. அந்த ஆதரவு இன்னும் வலுப்படும் என்றாலும் எங்கள் எம்.டி.க்கள் (மாறன் சகோதரர்கள்) எந்த சூழ்நிலையிலும் தி.மு.க.வை விட்டு விலகுவார்கள் என்று கனவில் கூட நினைக்க வேண்டாம்.
தேவையில்லாமல் எங்களைச் சீண்டியுள்ள கலைஞர் காங்கிரஸையும், கம்யூனிஸ்டுகளையும் ஒன்று சேர்த்து வைக்க பாடுபடுவதாகச் செய்திகள்வருவதைப் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது. முதலில் தனித்தனியாகப் பிரிந்துள்ள அவரது குடும்ப உறுப்பினர்களை அவர் ஒன்று சேர்க்கட்டும் பார்க்கலாம்.
இப்போதைக்கு தினகரன் மீது கட்டம் கட்டியதை பெரிதுபடுத்தும் அழகிரிக்கே 2001-ல் இதே தி.மு.க. தலைமைக் கழகம் கட்டம் கட்டவில்லையா? அவ்வளவு ஏன்? ஜெயலலிதாவிடம் போய் யாசகமாக ஐந்து லட்சம் வாங்கி வந்த மூத்த மகன் மு.க.முத்துவின் மணிவிழாவில்கலைஞர் கலந்து கொண்டு உச்சி முகரவில்லையா? இதே பாணியில் கலைஞர் எங்கள் அலுவலகம் வந்து புது புராஜெக்டுக்கு குத்துவிளக்கேற்றும் வைபவம் நடந்தாலும் ஆச்சரியப்படாதீர்கள்'' என்று ஒரேபோடாகப் போட்டார்கள் அவர்கள்.
ஆயினும்,அப்படியொரு நிகழ்ச்சி நடக்காது என்றும்,இப்போது தினகரனுக்குக் கட்டப்பட்ட `கட்டம்' நாளை சன் டி.வி.க்கும் கட்டப்படலாம் என்கிறார்கள் தி.மு.க. தரப்பில்! ஸீ
ஸீ வி. குமார்
`மரண பயத்தில் மதுரை மக்கள்' என்ற தலைப்பில் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையும், அதை தினகரன் நாளிதழ் வெளியிட்டதும் மதுரையிலுள்ள அழகிரி ஆதரவாளர்களை ஆத்திரப்பட வைத்துள்ளது. ```மாறன் சகோதரர்கள் தி.மு.க.வுக்குச் சாதகமாக இருக்க மாட்டார்கள்' என்று அண்ணன் ஆரம்பத்திலிருந்தே சொல்லி வருகிறார்.அது படிப்படியாக நிரூபணமாகி வருகிறது'' என்று ஆவேசப்பட்டனர் அவர்கள்.`ஜெயலலிதாவின் இந்த அறிக்கை பற்றிய கருத்தறிய அழகிரியை அவரது ராயல் கேபிள் விஷன் அலுவலகத்தில் சந்தித்தோம்.
``ஜெயலலிதாவின் அறிக்கைக்கு ராயல் கேபிள் விஷன் மூலம் பதிலளித்து விட்டோம். தினகரன் நாளிதழுக்கு தி.மு.க. தலைமைக்கழகம் பதிலளித்து விட்டது. இது குறித்து முரசொலியில் விளக்கமாகவே அறிவிப்பு வந்துள்ளது. தலைவர் கருத்துக்குப் பிறகு நான் சொல்ல இதில் என்ன இருக்கிறது?'' என்றார் அழகிரி சிரித்துக் கொண்டே.
-பதி.

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive