பிறந்ததேதி : 15.07.1903
பெற்றெடுத்த தெய்வங்கள்: சிவகாமி அம்மாள், குமாரசாமி நாடார்
படித்தது:மேதைகளின் படிப்பு
பெயர்:கண்ணனைப் பாரதி ”கண்ணம்மா” ஆக்கி அழைத்துப் பாடிப் பரவசப்பட்டதுபோல் ஆணாகப் பிறந்த காமராஜரை ”காமாட்சி” ஆக்கி அனைவரும் அழைத்து மகிழ்ந்தார்கள்.தாயார் சிவகாமி அம்மாள் மட்டும், தன் செல்லக் குழைந்தையை ”ராஜா” என்றே அழைத்து வந்தாள். நாளடைவில் காமாட்சி என்ற பெயர் மாறி, ‘காமராஜ்’ என்று ஆனது.
உடன் பிறப்பு: காமராஜருக்குப் பின்னர், சிவகாமி அம்மாள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.நாகம்மாள் என்று அந்தக்குழந்தைக்குப் பெயர் சூட்டினார்கள். காமராஜரும் தங்கையிடம், அன்பும் பாசமும் கொண்டிருந்தார்.
தமிழ்நாடு காங்கிரஸில், ”காமராஜர் காங்கிரஸ்” என்ற நிலை உருவாகியது. காமராஜர் தனது தியாகத்தாலும், சலியாத உழைப்பாலும், தொண்டுகளினாலும் உயர்ந்த நிலையை அடைந்தார்.
1952-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காமராஜர் சாத்தூர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். சுமார் பன்னிரண்டு ஆண்டுகாலம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்து தமிழ்நாட்டிலே காங்கிரஸ் பேரியக்கத்திற்குப் பெரும் செல்வாக்கை ஏற்படுத்தித் தந்தார்.
1954- ஆம் ஆண்டு காமராஜர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் ஆனார். தலைவர் பதவியைத் துறந்தார். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் துறந்தார். குடியாத்தம் தொகுதியில் சட்டசபைக்குத் தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். மேல்சபை உறுப்பினராகி அவர் முதல் அமைச்சர் பதவியை வகித்திருக்கலாம். குறுக்கு வழியில் உள்ளே புகுந்து கொள்ள என்றும் விரும்பாத பெருந்தலைவரே கு. காமராஜர்.
காமராஜர் தமிழன்னை கண்டெடுத்த தவப்புதல்வன் இவர் புகழ் நான் சொல்லி தெரியவேண்டியதில்லை
"கிங்மேக்கர்" என்றழைக்கப்பட்ட தமிழகத்தின் தனிப்பெரும் தலைவர் தான் நினைத்திருந்தால் இந்தியாவின் பிரதமராகும் வாய்ப்பு கிடைத்தும்அதனை தாரை வார்த்துக்கொடுத்த தன்னிகரில்லா தலைவர் .
"உனை பெற்றதால் தான் தமிழ் மண்ணுக்கே பெருமை நீ வைத்திருந்த பாசமெல்லாம் மக்கள் மீதும் இந்த தமிழ் மண் மீது அல்லவா?"
நீ நினைத்திருந்தால் கோடிகள் உன் காலடி நோக்கி வந்திருக்கும் ஆனால் "அஞ்சா நெஞ்சனாய் மக்கள் தொண்டே மகேசன் தொண்டுஎன்று வாழ்ந்த கருணை கடலே" நீ மட்டும் இந்த மன்ணில் பிறக்காமல் இருந்திருந்தால் தமிழகம் இன்னும் கல்வியறிவு இல்லாமல்இருண்டதமிழகமாக அல்லவா இருந்திருக்கும் முதல்வராய் இருந்து இறக்கும் போதும் உன் சொத்து மதிப்பு வெறும் 67 ரூபாய் யாராலும் முடியுமா இந்த சாதனை செய்ய?
இந்த கேடுகெட்ட அரசியல்வாதிகள் உன்னையும் அல்லவா ஊழல் செய்தாய் என்று மேடை தோறும் முழங்கினார்கள்நீ உத்தமன் என்பதை நிருபித்துவிட்டல்லவா நீ இம்மண்ணில் சாய்ந்தாய் நீ யாருக்காக உழைத்தாயோ அவர்களே உன்னை தேர்தலில் தோற்க்கடித்த போது நீ என்னவெல்லாம் நினைத்திருப்பாய்உனை போல் ஒரு உத்தமனை இனி இந்த தமிழன்னை பெற்றெடுக்க முடியுமா?
உன் பாதம் கழுவிய நீரை குடித்தால் கூட இன்று இருக்கும் அரசியல்வாதிகளுக்கு உன் குணம் வாராதய்யா!நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் உழைத்த உன்னை இன்று சில கேடுகெட்ட ஈன பிழைப்பு நடத்தும்கருங்காலிகள் சாதி சாயம் பூசி தங்கள் ஈன பிழைப்புக்கு காரணம் காட்டுகிறார்களே என்ன கொடுமை இது
அய்யா நீ உயிரோடு இருந்திருந்தால் இந்த கொடூர குணம் படைத்த கொள்ளையர்கள்உன் பெயரை உபயோகப்படுத்த விட்டிருப்பாயா?சாதி மதம் பாராமல் உழைத்த உத்தமரே உனை சாதி சாயம் பூச பார்க்கும் இந்த கேடுகெட்ட பிணம் திண்ணிகளையும் ; கெடுகெட்ட இந்த ஊழல் பெருச்சாளிகளிகளையும் ; அரசியல்வாதிகள் என்ற பெயரில்மக்களை சுரண்டும் பேய்களை விரட்டவும் நீ மீண்டும் பிறக்கவேண்டுமென்று தமிழன்னை கண்ணீர் வடிக்கிறாள்
" மீண்டும் வருவாயா? ஏழைக்கு கல்வி தந்த எங்கள் கடவுளே "