கையடக்க தொலைபேசிகள் காற்சட்டைப் பைக்குள் இயங்கு நிலையில் இருக்க, செவிப்பன்னித் தொகுதியைப் பயன்படுத்தி உரையாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ள ஆண்களுக்கு, விந்தணுக்கள் செயற்றிறன் இழக்கும் அபாயம் உள்ளதாக அமெரிக்க கிளேவ்லான்ட் மருத்துவமனையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
கையடக்கத் தொலைபேசியானது இயங்கு நிலையில் இனவிருத்தி உறுப்புகளுக்கு அண்மையில் இருக்கும் போது, விந்தணுவின் உற்பத்திக்கும் அதன் தராதரத்துக்கும் தீங்கு விளைவிப்பது தமது ஆய்வொன்றின் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக மேற்படி மருத்துவமனையின் மீள் உற்பத்தி மருத்துவ நிலைய பணிப்பாளர் அசோக் அகர்வால் தெரிவித்தார்.
இதன்போது ஆய்வு கூடத்தில் ஒரே வெப்பநிலை, நிபந்தனை என்பவற்றின் கீழ் 32 ஆண்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதன்போது மேற்படி ஆண்களின் காற்சட்டைப் பையில் அவர்களது இனவிருத்தி உறுப்பிலிருந்து 2.5 சென்ரி மீற்றர் தூரத்தில் இருக்குமாறு 850 "மெகா ஹேர்ட்ஸ்' கொள்ளளவுடைய கையடக்க தொலைபேசி சுமார் ஒரு மணி நேரத்துக்கு இயங்கு நிலையில் வைக்கப்பட்டது.
இதன்போது மேற்படி ஆண்களில் ஒட்சியேற்ற அழுத்தம் அதிகரித்து அவர்களது விந்தணுக்களின் தராதரம் வீழ்ச்சி அடைவது அவதானிக்கப்பட்டதாக அசோக் அகர்வால் கூறினார்.
எனினும், தாம் தமது ஆராய்ச்சியின் ஆரம்பக் கட்டத்திலேயே இருப்பதாகவும், இது தொடர்பில் உறுதிப்படுத்த பல படிநிலைகள் முன்செல்ல வேண்டியுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
கையடக்க தொலைபேசிகளால் விந்தணுக்கள் பாதிக்கப்படும்
Posted by
தமிழ்க்குமரன்
Tuesday, October 7, 2008

0 comments:
Post a Comment