தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

தொலைபேசி ஒட்டுக்கேட்பு விசாரணை

தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத் தின் ஓய்வுபெற்ற நீதிபதி விசாரணை நடத்துவார் என்று மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் சட்டப் பேரவையில் 15-4-2007 அன்று அறிவித்திருந்தார். அதன்படி, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பி. சண்முகம் விசாரணை அதிகாரியாக நியமிக்கப் பட்டது, அவர் தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரம் குறித்து விசாரணை செய்து 3 மாதங்களில் அரசுக்கு விசாரணை அறிக்கையை அளிப்பார் என 16-4-2008 அன்று அறிவிக்கப்பட்டது.அந்த அறிவிப்பினைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட நீதியரசர் பி. சண்முகம் 19-5-2008 அன்று இடைக்கால விசாரணை அறிக்கை ஒன்றினை அரசுக்கு அளித்தார். அதன் தொடர்ச் சியாக இன்று (ஜூலை 14) தமது விசாரணையின் முழு அறிக்கையினை முதலமைச்சர் கலைஞர் அவர்களிடம் நீதி யரசர் பி. சண்முகம் வழங்கினார்.அவ்வமயம், உள்துறைச் செயலாளர் எஸ். மாலதி, (இ.ஆ.ப.) பொதுத்துறைச் செயலாளர் டி. ஜோதி ஜெகராஜன் (இ.ஆ.ப.) ஆகியோர் உடனிருந்தனர்.

இன்று சர்வதேச மட்டத்தில் உள்ள மூன்றாம் உலக நாடுகளில் 2004 ஆம் ஆண்டு நிகழ்ந்த சுனாமியிலும் பார்க்க ஒரு புதுமையான மௌன சுனாமியை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்

தமிழ்மொழியை அரச காரியாலயங்களில் உடனடியாக அமுல்படுத்தக்கோரி நுவரெலியா சகவாழ்வு மன்றத்தினர், நுவரெலியா மாவட்டத்திலுள்ள சுமார் 80 ஆயிரம் தமிழ், சிங்களம், முஸ்லிம்களின் கையொப்பங்களுடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளனர்.
அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
இருபது ஆண்டுகளுக்கு மேலாக சிங்களமும் தமிழும் அரசகரும மொழியாதல் வேண்டும் என அரசகரும மொழிச் சட்டத்தின்படி அரசயாப்பின் கீழ் கட்டளையிடப்பட்டிருப்பினும், 2008 இல் வடக்கு மற்றும் கிழக்கிற்கு வெளியில் தமிழிலும் வடக்கு மற்றும் கிழக்கில் சிங்களத்திலும் அரசாங்கத்துடன் கொடுக்கல் வாங்கல் செய்ய இன்னமும் முடியாதுள்ளது.
மொழியானது எம் நாட்டைப் பிரித்துவிட்டது. மொழிப் பிரச்சினைகள் காரணமாக எம் நாட்டில் மனித உரிமை மீறல்கள் பெருகிவிட்டன. சட்டப்படி இருக்க வேண்டியிருப்பினும் தமிழ்மொழியில் பரிச்சயமில்லாத அதிகாரிகள் பொலிஸ் நிலையங்களிலும் இராணுவத்திலும் இருப்பதன் காரணமாக தமிழ் மக்கள் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்.
ஒரே ஒரு அரசகரும மொழியில் காணப்படும் அறிவித்தல் பலகைகள் அந்த மொழியை வாசிக்க முடியாத அனைவரையும் ஒதுக்கிவிடுகின்றன. இந்த நிலைமை நாடெங்கிலும் உள்ள வைத்தியசாலைகள், பாடசாலைகள், நீதிமன்றங்கள், பொலிஸ் நிலையங்கள் மற்றும் அரச நிறுவனங்களில் காணப்படுகின்றது.
சிங்கள மொழியில் மாத்திரம் அச்சிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ ஆவணங்கள் அந்த மொழியை வாசிக்க முடியாத மக்களுக்கு அர்த்தமில்லாததாகின்றன. இந்த நாட்டின் பிரஜைகளுக்கு இந்த ஆவணங்களைப் பரிசீலிப்பதற்கான வாய்ப்பு தேவைப்படுகின்றது. அத்துடன், தமது தாய்மொழியில் அரசுடன் தொடர்பாடல் செய்ய அவர்களுக்கு உரிமை உண்டு.
மாவட்டச் செயலகங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பிரிவுகளிலெல்லாம் இரு மொழி நிர்வாகம் அமுலாக்கம் செய்யப்பட வேண்டும். சகல அரச நிறுவனங்களிலுமுள்ள அறிவித்தல் பலகைகளும் ஆவணங்களும் இரு அரச கரும மொழிகளிலும் வழங்கப்பட வேண்டும். இரு அரச கரும மொழிகளிலும் பரிச்சயம் பெற்ற போதுமான ஆளணியினர் உடனடியாக அரச நிறுவனங்களில் நியமிக்கப்படவேண்டும்.
மொழிப் பரிவர்த்தனை சேவையொன்று தாபிக்கப்படல் வேண்டும். இதன்மூலம் பொலிஸ் திணைக்களம், நீதிமன்றம் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களிலும் இரு அரச கரும மொழிகளிலும் சேவைகளை வழங்க முடியும். அரச நிறுவனங்களில் குறிப்பாக ஆஸ்பத்திரிகள், பொலிஸ் மற்றும் இராணுவத்தில் இனவாரியான சமத்துவம் பேணப்படல் வேண்டும். பாடசாலை வயதையடைந்த அனைத்து பிரஜைகளுக்கும் இலவச மொழிப் பயிற்சிக்கான வாய்ப்புகள் அளிக்கப்படுவதுடன், பாடசாலைகளில் இரு அரசகரும மொழிகளிலும் கற்றல் நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளத

மௌனப் பட்டினியில் வாழும் மக்கள

இன்று சர்வதேச மட்டத்தில் உள்ள மூன்றாம் உலக நாடுகளில் 2004 ஆம் ஆண்டு நிகழ்ந்த சுனாமியிலும் பார்க்க ஒரு புதுமையான மௌன சுனாமியை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது, வறுமை, பட்டினிச்சாவு, இந்த மௌனப் பட்டினியின் தாக்கம் வருங்காலத்தில் இன்னும் மோசமாக மாறும் என்பதுதான் இன்றைய யதார்த்தம். இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. *உணவுப் பொருள் உயிரி எரிபொருளாக மாற்றப்படுகின்றமை *உணவு உற்பத்தி குறைக்கப்பட்டமை *விலைவாசி நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றமை *உள்நாட்டு யுத்தம் இறக்குமதி அதிகம் ஏற்றுமதி குறைப்பு *முறையற்ற பாரிய பொருளாதாரக் கொள்கை *எரிபொருளின் தொடர்ச்சியான அதிகளவு விலையுயர்வு *உலகமயமாக்கலின் தாக்கம் *நல்லாட்சி அமையாமை *ஊழல் மற்றும் மனித உரிமை மீறல்கள் உயிரி எரிபொருள்
2002 ஆம் ஆண்டு 25 அமெரிக்க டொலராக இருந்த ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 2008 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 132 அமெரிக்க டொலராக அதிகரித்தது. அதாவது, 428 வீதம் அதிகரித்தது. இதனால், எல்லா நாடுகளிலும் எரிபொருள் விலை மலைபோல் ஏறியது. இதற்கு இலங்கையும் விதிவிலக்கல்ல. காரணம் கடந்த இரண்டு வருடங்களாக ஒபெக், (Oகஉஇ) நாடுகள் தேவைக்கு ஏற்ப எரிபொருள் உற்பத்தியை அதிகரிக்கவில்லை. அதாவது, 15 வீதம் எரிபொருள் உற்பத்தி குறைக்கப்பட்டது. கடந்த மூன்று வருடங்களாக உலக எண்ணெய் உற்பத்தி ஒரு நாளுக்கு 85 மில்லியன் பரல்களாக இருந்தது. ஆனால், தேவை நாளாந்தம் கூடிக்கொண்டே போகிறது. பல நாடுகள் எரிபொருளை மானிய விலைக்கு கொடுத்தன. இன்று இந்த மானிய விலை சில நாடுகளில் குறைக்கப்பட்டதால் பாரிய சவாலுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது.
இந்த எரிபொருள் உற்பத்தி குறைவையும் விலையையும் சமச்சீர் செய்வதற்காக உணவுத் தானியங்களிலிருந்து எரிபொருள் தயாரிப்பதில் சில நாடுகள் ஈடுபட்டன. இதைதான் உயிரி எரிபொருள் என (ஆஐO ஊக்உஃ) அழைக்கப்படுகின்றது. இதை உற்பத்தி செய்ய பயன்படும் மூலப் பொருட்களான சோயா, சோளம், சூரியகாந்தி, பாம் ஆகிய தாவரங்களிலிருந்து பெறப்படும் கொழுப்புகளைப் பயன்படுத்துகிறார்கள். இந்த உணவுப் பொருட்கள் ஊடாக உயிரி எரிபொருள் உற்பத்தி செய்வதனால் இன்று உலகில் சகல மக்களும் அனுபவிக்கும் மௌன சுனாமி தான் உணவு நெருக்கடி (ஊOOஈ இகீஐகுஐகு) ஆகும். இந்த உயிரி எரிபொருள் அமெரிக்காவிலிருந்து அயல் நாடான இந்தியாவரை உலகின் பல பாகங்களிலும் உற்பத்தியாக்கப்பட்டு பாவனைக்கு வழங்கப்படுகின்றது. 20 வீதம் உயிரி எரிபொருட்களுடன் 80 வீதம் பெற்றோலிய எரிபொருள் கலந்து பாவிப்பதே இன்று நடைமுறையிலுள்ளது. இம்மூலப் பொருட்களை விளைவிக்கும் பயிர்ச்செய்கையானது உணவுப் பயிர்ச் செய்கை நிலங்களை ஆக்கிரமிக்கின்றது. மேலும், இந்த உயிரி எரிபொருள் மூலப்பொருட்களுக்கு ஏற்படும் அதிக சந்தை வாய்ப்புக்கள் மற்றும் கூடுதல் இலாபம் போன்ற கவர்ச்சிகள் விவசாயிகளை உணவுக்கான உற்பத்திகளில் ஈடுபாட்டை குறைத்து அக்காணிகளில் உயிரி எரிபொருள் மூலப்பொருட்களை உற்பத்திச் செய்வதற்கு உந்துகிறது.
உலக உணவு ஸ்தாபனம் அண்மையில் வெளியிட்ட புள்ளிவிபரத்தின்படி 20002006 ஆண்டு காலப்பகுதிகளில் அமெரிக்காவில் உயிரி எரிபொருளுக்காக சோளத்தைப் பயன்படுத்தும் அளவு சுமார் 21/2 மடங்கு அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளது. 2007 2008 ஆம் ஆண்டுகளுக்கிடையில் அமெரிக்காவில் சுமார் 30 மில்லியன் தொன் சோளம் உயிரி எரிபொருள் உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, கடந்த காலத்தில் அமெரிக்காவில் ஏற்றுமதி செய்யப்பட்ட சோளம் இன்று அங்கு உயிரி எரிபொருளாக பாவிக்கப்படுகிறது. ஆனால், அமெரிக்க அதிபர் புஷ் இந்தியர்களின் வாழ்க்கைத் தரம் உயர்வடைந்து அவர்கள் தரமான உணவு வகைகளை நாடுவதால் தான் உணவுப் பிரச்சினை உருவாக்கியுள்ளது என்ற தனது கூற்றை வெளிப்படுத்தியுள்ளார். இது அமெரிக்காவின் செயற்பாடுகளை மூடி மறைப்பதற்காக மேற்கொள்ளும் ஒரு கபட நாடகம் எனலாம்.
உயிரி எரிபொருள் பாவிப்பதன் மூலமாக பல நன்மைகள் உண்டு என்பதைப் பலரும் அறிவர். ஆனால், இதற்காக மக்களை பட்டினி போட வேண்டிய அவசியம் இல்லை. உணவுப் பொருட் தாவர வகைகளைவிட இலகுவாக உற்பத்தி செய்யக்கூடிய பல தாவரங்களிலிருந்து உயிரி எரிபொருள் பெறமுடியும். இதன் மூலமாக பெற்றோலிய எரிபொருள் பாவனையைக் குறைக்கலாம். இன்று சில நாடுகளில் காலநிலை மாற்றங்களினால் உணவு உற்பத்தி வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. உதாரணம்: அவுஸ்திரேலியாவில் கோதுமை உற்பத்தி 15 வீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ஆகையினால் எல்லா நாடுகளும் உணவு உற்பத்தியில் தன்னிறைவு காணக்கூடிய அளவுக்கு தேவையான தானியங்களை களஞ்சியப்படுத்தத் தயாராக வேண்டும். இல்லாவிடில் பெற்றோலியத்துக்கு ஒபெக்கில் போன்று அரிசி ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பில் தான்; (Oகீஉஇ) மற்ற நாடுகள் தங்கியிருக்க வேண்டும். இந்த அமைப்பானது உலகில் அரிசி தட்டுப்பாடு வந்ததும் ஒன்றிணைந்து அரிசி ஏற்றுமதியை சில நாடுகளுக்கு குறைத்தும் அல்லது நிறுத்தியும் உள்ளது. அங்ஙனமே ஏனைய நாடுகளில் ஒரு மெற்றிக் தொன் அரிசி 206 அமெரிக்க டொலராக இருந்து ஜூன் மாதம் 2008 இல் 1038 அமெரிக்க டொலராகியது. அதாவது 404 வீதம் அதிகரித்தது.
அரிசியை போல் கோதுமைப் பயிர்ச் செய்கையும் பல காரணிகளினால் குறைக்கப்பட்டு அதன் விலையும் நாளாந்தம் ஏறிக்கொண்டேயிருக்கிறது. 2002 ஆம் ஆண்டு ஒரு மெற்றிக் தொன் கோதுமை 110 அமெரிக்க டொலராக இருந்தது. ஜூன் மாதம் 2008 ஆம் ஆண்டு 262 அமெரிக்க டொலராகியது. இது 138 வீத அதிகரிப்பு ஆகும். இவ்வருடம் உலக பாவனைக்கு 640 மில்லியன் கோதுமை தேவைப்படுகிறது. ஆனால், மோசமான காலநிலை காரணமாக கோதுமை உற்பத்தி 610 மில்லியன் தொன் ஆக குறைந்தது. அமெரிக்காவை அடுத்து கோதுமையை அதிகமாக ஏற்றுமதி செய்யும் நாடான அவுஸ்திரேலியாவில் இவ்வருடம் கோதுமை அறுவடை 7 மில்லியன் தொன்னாக குறைந்தது. ஐரோப்பாவில் முக்கிய கோதுமை உற்பத்தி நாடான பிரான்ஸ் இந்த ஆண்டு கோதுமை ஏற்றுமதியை இடைநிறுத்தியுள்ளது.
கோதுமை உற்பத்தி செய்யாத இலங்கை போன்ற ஆசிய நாடுகள் கோதுமையின் விலை அதிகரிப்பு காரணமாக பெருமளவு பாதிக்கப்படுகின்றன. சிக்காகோ வர்த்தக சபை சென்ற வருடம் (2007) செப்டெம்பர் 3 ஆம் வாரத்தில் வரலாறு காணாத வகையில் ஒரு மெட்றிக் தொன் கோதுமையின் விலையை 360 அமெரிக்க டொலராக நிர்ணயித்தது.
கால்நடை உணவுக்கு முக்கியமாக தேவைப்படும் சோளத்தின் விலையும் என்றுமில்லாதவாறு உலக சந்தையில் அதிகரித்துக் காணப்படுகிறது. இதன் காரணமாகவே பால்மா விலையும் இறைச்சி வகைகளின் விலையும் அதிகரித்துள்ளன. சோளத்தை கால்நடை உணவுக்கு விற்பனை செய்வதற்குப் பதிலாக எரிபொருள் உற்பத்திகளுக்கு விற்பனை செய்வதால் நல்ல விலையைப் பெறலாம் என சோளம் உற்பத்தி நாடுகள் கருதுகின்றன. பால்மா ஒரு மெட்றிக் தொன் 2002 ஆம் ஆண்டில் 1300 அமெரிக்க டொலராக இருந்து ஜூன் மாதம் 2008 இல் 4550 அமெரிக்க டொலராகியது. இது 250 வீத அதிகரிப்பாகும். அதேபோல் கோழியிறைச்சி ஒரு மெட்றிக் தொன் 2002 ஆம் ஆண்டு 849 அமெரிக்க டொலராக இருந்து 2008 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் 1761 அமெரிக்க டொலராகியது. இது 107 வீத அதிகரிப்பாகும்.
விலைவாசி உயர்வு
உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட விலைவாசி உயர்வுகள் இலங்கையையும் பாதித்துள்ளதென அரசாங்க சார்பில் கூறப்படுகின்றது. 1977 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட திறந்த பொருளாதாரக் கொள்கையினாலும், உலக மயமாக்கல் என்ற போர்வையில் அரசாங்க சொத்துக்கள் தனியார் மயப்படுத்தப்பட்டதனாலும் தொடர்ந்து மூன்று தசாப்தங்களாக நடைபெறுகின்ற உள்நாட்டு யுத்தம் காரணமாகவும் எமது மக்கள் அரைவயிற்றுப் பட்டனி கிடக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். இதற்கு காரணம் தொடர்ந்து அதிகரிக்கும் பணவீக்கம் மக்களின் நுகரும் சக்தியை படிப்படியாகக் குறைத்துள்ளது. பணப்புழக்கம் அதிகரித்து அதற்கேற்ப பொருட்களின் உற்பத்தி இல்லையென்றால் விலைவாசி நாளாந்தம் கூடிக்கொண்டே போகும். இத்தகைய வேகமான விலைவாசி ஏற்றம் பணவீக்கம் பலமாக ஏறுவதைத்தான் காட்டுகிறது. இதைக் கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், பணவீக்கம் அரசாங்கத்துக்குக் கட்டுடுஞூபடுவதாயில்லை. பணவீக்கம் வாரா வாரம் வளர்ந்தபடியே உள்ளது. பணவீக்கம் விலைவாசி அதிகரிக்கும் போது உணவுப் பண்டங்களின் விலைதான் முதலில் வேகமாக உயருகின்றன. இன்று பணவீக்கம் 30 வீதத்தை எட்டியுள்ளது. இது வாழ்க்கைச் செலவைக் கூட்டியுள்ளது. ஜனவரி 2006 இல் வாழ்க்கைச் செலவுச் சுட்டெண் 4304 ஆக இருந்து 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6527 ஆக உயர்ந்தது. அதாவது, 2223 புள்ளி அதிகரித்துள்ளது. இந்தத் தாங்க முடியாத வாழ்க்கைச் செலவை சமாளிப்பதற்கு அரசாங்கமும் தனியார் துறையும் மக்களுடைய வருமானத்தை அதிகரிக்க வேண்டும். இல்லாவிடில் தோட்டத் தொழிலாளர்கள், அன்றாட கூலியாட்கள், கிராமப்புற, நகர்ப்புற ஏழைகள் தமது வாழ்க்கைக்கு தேவையான உணவுப் பண்டங்களை கொள்வனவு செய்ய முடியாமல் பட்டினிச்சாவை எதிர்நோக்குவார்கள்.

பயங்கரவாதத்தை ஒழிக்க உபாயம் வகுப்பதற்கே சார்க் மாநாட்டில் முன்னுரிமை

கொழும்பில் அடுத்த மாதம் இடம்பெறவுள்ள பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்க (சார்க்) உச்சிமாநாட்டில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு ஒன்றிணைந்த உபாயத்தை வகுப்பது தொடர்பாக முக்கிய கவனம் செலுத்தப்படும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
ஆகஸ்ட் 2, 3 இல் சார்க் உச்சிமாநாடு இடம்பெறும். இந்த மாநாட்டில் சார்க் அமைப்பின் உறுப்பு நாடுகள் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ஒன்றிணைந்த புதிய தந்திரோபாயத்தை மேம்படுத்துதல் தொடர்பாக கலந்து ஆராயப்படும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்தியாவின் ஆந்திர மாநிலத்திலுள்ள திருப்பதியில் வைத்து நிருபர்களுக்கு சனிக்கிழமையன்று கூறியுள்ளார்.
சார்க் உச்சிமாநாட்டுக்கு வருகை தரும் அதிமுக்கிய பிரமுகர்களுக்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் அதேசமயம் சில அதிமுக்கிய பிரமுகர்கள் தமது சொந்தப் பாதுகாப்பு அதிகாரிகளுடன் வருகை தருவார்களெனவும் அவர் கூறியுள்ளார்.
ஏனைய நாடுகளின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அனுமதி அளிப்பது தொடர்பான விமர்சனங்களை நிராகரிக்கும் விதத்தில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, இந்திய அரசாங்கத்தினால் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும் தனது சொந்தப் பாதுகாப்பு அதிகாரிகளுடன் தான் திருப்பதிக்கு வருகை தந்திருப்பதாகக் கூறியுள்ளார்.
இது இவ்வாறிருக்க இந்தியாவுக்கான ஜனாதிபதியின் விஜயம் தனிப்பட்டதொன்றெனவே தெரிவிக்கப்படுகிறது. ஆந்திர மாநிலத்துக்கு சென்று திருப்பதி வெங்கடேஸ்வரரை தரிசித்த பின் சனிக்கிழமை இரவே ஜனாதிபதி நாடு திரும்பிவிட்டார்.
ஆனால், அவர் புதுடில்லிக்கு சென்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசவுள்ளதாக கொழும்பில் பரவலாக ஊகங்கள் வெளிப்படுத்தப்பட்டிருந்தன.

2012 வரை உணவு நெருக்கடி நீடிக்கும்

லகில் உணவுப் பொருட்களின் விலை 2012 ஆம் ஆண்டு வரை அதிகரித்து காணப்படும் என்றும் அதேவேளை, எரிபொருட்களின் விலை அதிகரித்தும் குறைந்தும் செல்லும் என்றும் உலக வங்கித் தலைவர் ரொபேர்ட் சோலேலிக் கூறியுள்ளார்.
அத்துடன் உணவு, எரிபொருட்கள் விலைகளால் மோசமாகப் பாதிக்கப்படும் வறிய மக்களுக்கு உதவுவதற்காக 10 பில்லியன் டொலர்கள் தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
உணவு, எரிபொருட்கள் விலைகள் மோசமாக அதிகரித்துச் செல்வதால் சர்வதேச ரீதியாக பணவீக்கமும் கடுமையாக அதிகரித்துச் செல்கின்றது. அதே சமயம், பொருளாதாரமும் வீழ்ச்சியடைந்து செல்கிறது. இதனால் கொள்கை வகுப்பாளர்கள் பெரும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த வார முற்பகுதியில் ஜி8 நாடுகளின் தலைவர்கள் சர்வதேச ரீதியில் அதிகரித்துச் செல்லும் பணவீக்க பிரச்சினைக்கு தீர்வுகாணப்பட வேண்டும் என்பது தொடர்பாக இணக்கம் கண்டுள்ளனர். குறிப்பாக எண்ணெய், உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பு பிரச்சினைக்கு பரிகாரம் காணப்பட வேண்டுமென்பதில் இந்தச் செல்வந்த நாடுகளின் தலைவர்கள் இணக்கம் கண்டிருக்கின்றனர்.
உணவுப் பாதுகாப்பு தொடர்பான அறிக்கையானது சிறந்ததொன்று என்றுதான் நினைக்கிறேன். ஆனால், செயற்பாடு தொடர்பாகவே சோதனை காணப்படுகின்றது. என்று சோலேலிக் கூறியுள்ளார்.
எரிபொருள், உணவுப் பொருட்களின் விலைகள் தொடர்பாக நாம் ஆபத்தான வலயத்தில் உள்ளோம். இதனை மாநாட்டின் போது நான் வலியுறுத்த முயற்சித்தேன். மேலதிகமாக அதிகளவு வளங்கள் தேவையாக உள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.
தேவைப்படும் 10 பில்லியன் தொகைக்கு பல நாடுகள் கணிசமான தொகையை பங்களிப்புச் செய்துள்ளன. ஆனால், அடுத்துவரும் வருடங்களுக்கு நிதி தொடர்ந்து தேவைப்படுகின்றது என்றும் உலகவங்கித் தலைவர் கூறியுள்ளார்

சுழலும் கட்டடம் - துபாயில் இன்னொரு அதிசயம்!

மேற்கு ஆசியாவிலேயே முதல் முறையாக, துபாயில் சுழலும் கட்டடம் ஒன்று உருவாகி வருகிறது. இந்த கட்டடம், ஒரு வாரத்தில் 360 டிகிரி அளவுக்கு சுழலக் கூடியது. இதனால் தினசரி ஒரு கோணத்தில் துபாயை தரிசிக்க முடியும்.உலக மக்களின் மனம் கவர்ந்த நகரமான துபாயில், கட்டடக் கலையில் பல்வேறு அற்புதங்கள், சாதனைகள் படைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் புதிய சாதனையாக சுழலக் கூடிய கட்டடம் ஒன்று உருவாகி வருகிறது.இந்த கட்டடத்தில் ஒரு சதுர அடி இடம், குறைந்தபட்சம் 6000 திர்ஹாம் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து இந்தத் திட்டத்திற்கான இயக்குநர் தவ் சிங் கூறுகையில், இக்கடட்டத்திற்கு டைம் பீஸ் பில்டிங் என பெயரிட்டுள்ளோம். சூரியனை அடிப்படையாக வைத்தும், அறிவியல் பூர்வமான கற்பனையின் அடிப்படையிலும் இந்த கட்டடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.7 நாட்களில் 360 டிகிரி அளவுக்கு இந்த கட்டடம் சுழலும் வகையில் அமையும். இதன் மூலம் இந்த கட்டடத்தில் இடம் பெறும் அனைத்து அலுவலங்களும் ஒவ்வொரு நாளும் ஒரு கோணத்தில் இருக்கும்.கட்டடம் சுழல்வதை அதில் குடியிருப்போர் உணர முடியாத அளவுக்கு மிக மிக மெதுவான சூழற்சியாக இருக்கும்.ஆகஸ்ட் மாதத்தில் இதன் கட்டுமானப் பணி தொடங்கி 2010ம் ஆண்டில் முடிவடையும்.இந்தக் கட்டடத்திற்கான விற்பனை பிரசாரம் டெல்லி, நியூயார்க், பிராக், மாஸ்கோ, ஹாங்காங்கில் நடைபெறும்.மொத்தம் 80 மாடிகளைக் கொண்ட இந்த சுழலும் கட்டடத்தின் ஒவ்வொரு தளமும் ரூ. 3000 கோடி செலவில் உருவாக்கப்படுகிறது. உலகப் புகழ் பெற்ற இத்தாலி நாட்டு கட்டடக் கலை நிபுணர் டேவிட் பிஷர் இதை வடிவமைத்துள்ளார் என்றார்.

விஸ்டா'வை ஊக்குவிக்க 'எக்ஸ்பி' விற்பனையை நிறுத்தும் மைக்ரோசாப்ட்

ெட்மான்ட் (வாஷிங்டன்): மைக்ரோசாப்ட் நிறுவனம், தனது விஸ்டா ஆபரேடிங் சிஸ்ட விற்பனை மற்றும் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், எக்ஸ்பி விற்பனையை நிறுத்துகிறது. திங்கள்கிழமை முதல் எக்ஸ்பி ஆபரேட்டிங் சிஸ்ட விற்பனை, வியாபார நிறுவனங்களுக்கும், கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் நிறுத்தப்படுகிறது.எக்ஸ்பி விற்பனை நிறுத்தப்படுவதால் வேறு வழியில்லாமல் விஸ்டா அல்டிமேட் மற்றும் விஸ்டா பிசினஸ் ஆகிய புதிய ஆபரேட்டிங் சிஸ்டங்களை பயன்படுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது.இருப்பினும் ஜனவரி மாத முடிவு வரை, சிறிய விற்பனை நிலையங்களில் எக்ஸ்பி விற்பனையை தொடர மைக்ரோசாப்ட் தீர்மானித்துள்ளது. மேலும் அசஸ் இ (Asus Eee) உள்ளிட்ட குறைந்த விலை பர்சனல் கம்ப்யூட்டர்களில் தொடர்ந்து எக்ஸ்பியை பயன்படுத்தவும் மைக்ரோசாப்ட் தீர்மானித்துள்ளது.இதற்கிடையே, 'எக்ஸ்பியை காப்பாற்றுவோம்' என்ற பெயரில், இன்போவேர்ல்ட் என்கிற இணையதளத்தில் ஒரு பிரசாரமே கிளம்பியுள்ளது. எக்ஸ்பி பிரியர்கள் இந்த பிரசாரத்தை மேற்கொண்டுள்ளனர்.விண்டோஸ் 7 வரும் வரை எக்ஸ்பியை தொடர வேண்டும் என இவர்கள் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 2009ம் ஆண்டில் விண்டோஸ் 7 வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

28ம் தேதி சர்வதேச அணு சக்தி ஏஜென்சி கூட்டம்

சர்வதேச அணு சக்தி ஏஜென்சியின் கவர்னர்கள் போர்டு கூட்டம் வருகிற 28ம் தேதி வியன்னாவில் நடைபெறுகிறது.இந்தியாவுக்கு இந்தக் கூட்டம் முக்கியமானது. இக்கூட்டத்தில் இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் பெற வேண்டும். அப்போதுதான் அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல முடியும்.இந்தக் கட்டத்தில், இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்த்திற்கான ஒப்புதல் பெறப்பட வேண்டும். இதில் ஒப்புதல் கிடைத்து விட்டால், அடுத்த கட்டமாக அணு பொருள் சப்ளை நாடுகள் எனப்படும் என்.எஸ்.ஜி. அமைப்பின் நாடுகளுடன் இந்தியா பேச்சுவார்த்தையை மேற்கொள்ளலாம்.எனவே இந்தக் கூட்டத்தில் இந்தியா கட்டாயம் பங்கேற்கும் என்று தெரிகிறது.

மருத்துவமனைகளை நிறுவ இந்தியாவுக்கு ஓமன் அழைப்ப

இந்தியாவில் உள்ள மிகப்பெரிய தனியார் மருத்துவ நிறுவனங்கள் ஓமனிலும் மருத்துவமனைகளை அமைக்க முன் வர வேண்டும் என்று ஓமனுக்கான இந்திய தூதர் அனில் வாத்வாவிடம் அந்நாட்டு அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஓமனின் சலாஹா பகுதிக்கு சென்ற இந்தியத் தூதர் அனில் தலை மையிலான குழுவினர், பல்வேறு துறை அதிகாரிகளை சந்தித்துப் பேசினார்.அப்போது, ஓமனில் உள்ள மருத்துவ நிறுவனங்களுடன் இணைந்து பெரிய மருத்துவமனைகளை அமைக்க இந்தியாவில் உள்ள தனியார் மருத்துவமனைகள் முன்வர வேண்டும். இதற்கு ஒத்துழைப்பு மற்றும் நிதி வசதி செய்துதர தயாராக இருப்பதாக ஓமன் மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.மின்சாரம், எரிவாயு மற்றும் தொழில்துறை ஒத்துழைப்பு ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

பெரம்பலூரில் மருத்துவக் கல்லூரி - இடம் தேர்வ

பெரம்பலூர்: பெரம்பலூரில் அமையவுள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ராஜா பேசுகையில், பெரம்பலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்காக, பெரம்பலூர்- அரியலூர் நெடுஞ்சாலையில், ஓதியம் கிராமத்தில், 26 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.விரைவில் இங்கு கட்டுமானப் பணிகள் தொடங்கும். இன்னும் ஒரு வாரத்தில் இந்த நிலம் மருத்துவக் கல்வி இயக்குநரகத்திற்கு மாற்றிக் கொடுக்கப்படும். அதன் பின்னர் மற்ற பணிகள் தொடங்கும் என்றார்.

கனவு என்பது என்ன சார்?

கனவுகள் என்ன என்பதைப்பற்றி நூற்றுக்கணக்கான தியரிக்கள் இருக்கின்றன. அவற்றில் மிகப் புகழ்பெற்றது சிக்மண்ட் ஃபிராய்டின் கனவு தியரி. அவருடைய இன்ட்ரபிரடேஷன் ஆஃப் டிரீம்ஸ் புத்தகம் மிகப் பிரபலமானது. நம்முடைய உள்மன ஆசைகளே கனவுகளாக வருகின்றன என்பதைப் பல ஆதாரங்களுடன் அவர் அதில் நிரூபித்தார். கனவுகளின் ஆதாரம் பாலுணர்வு என்பதும் அவருடைய கண்டுபிடிப்புகளில் ஒன்று. ஆனால், சமீபத்திய விஞ்ஞான கண்டுபிடிப்புகள் வேறு தியரிக்களைச் சொல்கின்றன. நம்முடைய அரைகுறைத் தூக்கத்தின்போது கண்களில் தோன்றும் `ராப்பிட் ஐ மூவ்மெண்ட்' (ஆர். ஐ. எம்) என்கிற நிலையில் ஏற்படுவதுதான் கனவு. அவை உணர்வுகள், காட்சிகள், எண்ணங்களின் தொகுப்பு. தூங்கும் போது சில நேரங்களில் மனிதனின் மூடிய விழிக்குள் கண்கள் அசைவதாகவும், அந்தச் சமயம் மூளையின் சில பகுதிகளும் விழித்துக் கொள்வதால் அந்தத் தொடர்பில் தோன்றுவதுதான் கனவு என்கிறார்கள் இப்போதைய விஞ்ஞானிகள். ஒவ்வொரு நாள் தூக்கத்தின் போதும் சராசரியாக மனிதன் இரண்டு மணி நேரங்கள் கனவு காண்கிறான். உலகம் முழுவதும் மக்கள் ஒரே மாதிரியான கனவுகளையே காண்கிறார்கள். மெஜாரிட்டி கனவுகள் மனஅழுத்தம் தொடர்பான நெகட்டிவ்வானவையே. பத்து சதவீத கனவுகள் செக்ஸ் சம்பந்தப்பட்டவை. மனிதனுக்கு வரும் பொதுவான கனவுகள் : வாகன விபத்து, உயிரோடு இருப்பவர் இறந்து போவது, ஆபீஸுக்கு லேட்டாகப் போவது, யாரோ துரத்துவது, மெதுவாக ஓடுவது, செக்ஸ் உறவு கொள்வது, பறப்பது, பற்கள் உதிர்ந்து விழுவது, மேலேயிருந்து விழுவது, அங்குமிங்கும் நகரமுடியாமல் இருப்பது, பரீட்சையில் தோற்பது போன்றவை. 12 சதவீத மக்கள் கறுப்பு வெள்ளை நிறத்திலேயே கனவுகளை காண்கிறார்களாம்.

மத்திய அரசு ரூ. 21 ஆயிரம் கோடி கடன்!

மத்திய அரசு இந்த நிதி ஆண்டின் முதல் மூன்று மாதங்களான ஏப்ரல் முதல் மே வரை ரூ.21 ஆயிரத்து 320 கோடி கடன் வாங்கியுள்ளது. மத்திய அரசின் வரவுக்கும் செலவுக்கும் இடையே உள்ள பற்றாக்குறையை ஈடுசெய்யவே கடன் வாங்கியுள்ளது. இந்த நிதி ஆண்டில் மத்திய அரசு ரூ.1,13,000 கோடி கடன் வாங்குவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதில் முதல் இரண்டு மாதங்களிலேயே 19 விழுக்காடு கடன் வாங்கிவிட்டது. சென்ற நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் மே மாதம் வரை கடன் வாங்குவதாக திட்டமிட்டிருந்ததில் மூன்று விழுக்காடு மட்டுமே வாங்கியது. ஆனால் இந்த நிதி ஆண்டில் ஆறு மடங்கு அதிகமாக (19%) வாங்கியுள்ளது. இந்த இரண்டு மாதங்களில் மத்திய அரசின் வருவாய் ரூ. 25,899 கோடியாகவும், செலவு ரூ.90,750 கோடியாக இருந்தது. அதே நேரத்தில் இரு மாதங்களில் வரி வருவாய் பற்றாக்குறை ரூ.67,731 கோடியாக உள்ளது. இது பட்ஜெட் மதிப்பீட்டை விட 122% அதிகம். இதே மாதிரி நிதிப் பற்றாக்குறை ரூ.73,201 கோடியாக உள்ளது.பட்ஜெட் தாக்கல் செய்யும் போது இந்த நிதி ஆண்டில் நிதி பற்றாக்குறை 1,33,287 கோடியாக இருக்கும் என்று மதிப்பீடு செய்யப்பட்டது. முதல் இரண்டு மாதங்களிலேயே நிதி பற்றாக்குறை 55% உள்ளது. மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பட்ஜெட் தாக்கல் செய்யும் போது வருவாய் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு மதிப்பில் 1 விழுக்காடு அளவும், நிதி பற்றாக்குறை 2.5 விழுக்காடு அளவும் குறைக்கப்படும் என்று அறிவித்து இருந்தார். மத்திய அரசு ஏப்ரல், மே இரண்டு மாதங்களில் செலவினங்களுக்காக தேசிய சிறு சேமிப்பு நிதி, பி.எஃப், சிறு சேமிப்பில் இருந்து ரூ.7,500 கோடி கடன் வாங்கியுள்ளது. அதே நேரத்தில் கடந்த நிதி ஆண்டில் வாங்கிய கடனுக்காக ரூ.7 ஆயிரம் கோடி திருப்பி செலுத்தியுள்ளது. இந்த இரண்டு மாதங்களில் கடனுக்கான வட்டியாக ரூ.27,229 கோடி செலுத்தியுள்ளது. சென்ற வருடம் இதே காலகட்டத்தில் கடனுக்கான வட்டியாக ரூ.26,221 கோடி செலுத்தி இருந்தது.இந்த தகவல்களை தலைமை கணக்கு அதிகாரி வெளியிட்டுள்ளார்.

பணவீக்கம்- அரசு ‌விள‌ம்ப‌ர‌ம்!

உணவு உட்பட பல்வேறு பொருட்களின் விலை அதிகரிப்பதால், பணவீக்கம் அதிகரித்து வருகிறது. இதற்கு பொது மக்களிடம் விளக்கம் அளிக்கும் வகையில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு விளம்பரங்களை வெளியிட உள்ளது. இந்த விளம்பரம் பணவீக்கம் அதிகரித்துள்ள மற்ற நாடுகளின் விபரங்களை எடுத்துக் காட்டும் வகையில் இருக்கும். மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவைச் சேர்ந்தவர்கள் பணவீக்கத்தால் அதிக அளவு பாதிக்க‌படவில்லை என்பதை விளக்கும். இந்த விளம்பரங்களை பத்திரிக்கைகள், தொலைகாட்சியில் வெளியிட, அமைச்சரவை செயலாளர் கே.எம். சந்திரசேகர் தலைமையில் நடந்த, துறை செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த கூட்டத்தில் உருக்கு, உணவு, வர்த்தகம், உரம், நுகர்வோர் நலன், தொழில் கொள்கை மற்றும் ஊக்குவிப்பு உட்பட பல்வேறு துறைகள், வெளியிட வேண்டிய விளம்பரங்களையும், தொலைகாட்சியில் ஒளிபரப்ப வேண்டிய தகவல்கள் குறித்து தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. இந்த விளம்பரங்களில் இந்தியாவின் பணவீக்க அளவிற்கும், சீனா, பாகிஸ்தான், இலங்கை, வியட்நாம், இந்தோனேஷியா போன்ற நாடுகளில் உள்ள பணவீக்கம் பற்றிய தகவல் இடம் பெற்று இருக்க வேண்டும். இந்தியாவைவிட மற்ற ஆசிய நாடுகளில் பணவீக்கம் அதிகமாக இருக்கின்றது. உதாரணமாக இலங்கையில் 27 விழுக்காடாக உள்ளது. இது மாதிரியான தகவல்கள் விளம்பரத்தில் இடம் பெற்று இருக்கும். அடுத்த பத்து மாதத்திற்குள் நாடாளுமன்றத்திற்கும், ஏழு மாநில சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. ஏற்கனவே நடந்த கர்நாடகா, உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், இமா‌ச்சல பிரதேசம், பஞ்சாப் மாநில சட்ட மன்றங்களுக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்தது. இந்த தேர்தல்களில் பாரதிய ஜனதா விலைவாசி உயர்வை முக்கிய பிரச்சனையாக பிரச்சாரம் செய்தது. மத்திய அரசு இந்த விளம்பரங்களினால் பலன் கிடைக்கும் என்று கருதும் அதே நேரத்தில், மத்திய அரசின் ஒரு துறை செயலாளர், மற்ற நாடுகளின் விலையை பற்றி, இங்குள்ளவர் ஏன் கவலைப்பட வேண்டும். தான் பாதிக்கப்பட கூடாது என்று தான் கருதுவார். பல கோடி ரூபாய் செலவில் செய்யப்படும் இந்த விளம்பரங்களால், விளம்பர நிறுவனங்கள்தான் பலன் அடைவார்கள் என்று கருத்து தெரிவித்தார்

மனித உடல் பற்றிய அபூர்வ தகவல்கள்!

நமது ம‌னித உட‌ல்க‌ள் ப‌ற்‌றிய பல தகவ‌ல்க‌ள் த‌ற்போது‌ம் ஆராய‌ப்ப‌ட்டு பல உ‌ண்மைக‌ள் வெ‌ளி வ‌ந்து கொ‌ண்டுதா‌ன் இரு‌க்‌கி‌ன்றன. அ‌தி‌ல் பல நம‌க்கு ஆ‌ச்ச‌ரி‌ய‌த்தையு‌ம் ஏ‌ன் அ‌தி‌ர்‌ச்‌சியையு‌ம் கூட ஏ‌ற்படு‌த்து‌ம்.அதுபோ‌ன்று நமது உட‌ல் ப‌ற்‌றிய ‌சில தகவ‌ல்க‌ள் இ‌ங்கே...பூரண ஆயுள் என்பது 120 வருடங்கள் ஆரோக்கியமாக வாழ்வது.ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகளைக் குறிக்கும்.மனித முகத்தில் 14 எலும்புகள் உள்ளன.மனித மூளையில் 6 கிராம் அளவிற்கு தாமிரம் உள்ளது.ஒரு மனிதனின் உடலிலுள்ள நரம்புகளின் மொத்த நீளம் சுமார் 72 மீட்டராகும்.நமது ரத்தம் ஒரு நாளில் 30 கோடி கி.மீ. பயணம் செய்கிறது.நுரையீரல் ஒரு நாளைக்கு 23,040 முறைகள் சுவாசத்தை உள்ளெடுத்து வெளிச்செலுத்துகிறது.நமது இதயம் ஒரு நாளில் 1,03,689 முறை துடிக்கிறது.மனிதனின் நாக்கில் உள்ள சுவை அறியும் செல்களின் எண்ணிக்கை மூன்று ஆயிரம்.உடலில் உள்ள மின்சாரத்தின் அளவு 25 வாட்.ஒரு சராசரி மனிதனின் உடலில் ஓடும் ரத்தத்தின் அளவு 5 லிட்டர்.கைரேகையை‌ப் போலவே நா‌க்‌கி‌ல் உ‌ள்ள வ‌ரிகளு‌ம் ஒ‌வ்வொருவரு‌க்கு‌ம் வேறுபடு‌ம்.ம‌னித உட‌லி‌ல் சதை அழு‌த்த‌ம் அ‌திக‌‌ம் உ‌ள்ள பகு‌தி நா‌க்கு.
WDக‌ண் தான‌த்‌தி‌ல் கரு‌ப்பு ‌வி‌ழிக‌ள் ம‌ட்டுமே அடு‌த்தவரு‌க்கு பொரு‌த்த‌ப்படு‌கி‌ன்றன.900 பெ‌‌ன்சில்களை தயாரிக்கும் அளவிற்கு ம‌னித உட‌லி‌ல் கார்பன் சத்து இருக்கிறது.மனித உடலில் மிகவும் பலமானது விரல் நகங்களே. அதில் கெராடின் சத்து உள்ளது, இது காண்டாமிருகத்தின் கொம்புகளில் காணப்படுவது, மரணத்திற்குப்பிறகும் கூட நகம் ஒன்றுமே ஆகாது

வெ‌ள்‌ளி‌ ‌கிரக‌த்தை‌ப் ப‌ற்‌றி அ‌றிவோ‌ம்!

பல நேர‌ங்க‌ளி‌ல் அ‌திகாலை‌யி‌ல் ‌நிலவுட‌ன் ‌மிக‌ப் ‌பிரகாசமாக ஒ‌ளி ‌வீசு‌ம் ஒரு ந‌ட்ச‌த்‌திர‌த்தை‌க் கா‌ட்டி ந‌ம் ‌வீ‌ட்டு‌ப் பெ‌ரியவ‌ர்க‌ள், அது வ‌ெ‌ள்‌ளி எ‌ன்று சொ‌ல்‌லி‌யிரு‌‌ப்பதை கே‌ட்டிரு‌ப்‌பீ‌ர்க‌ள்.அ‌ந்த வெ‌ள்‌ளி‌க் ‌கிரக‌த்தை‌ப் ப‌ற்‌றியதுதா‌ன் இ‌ந்த க‌ட்டுரை. நமது பூமியின் இரு புற‌த்‌திலு‌ம் அமை‌ந்‌திரு‌ப்பது செவ்வாய், வெள்ளி கிரகங்களாகு‌ம். இ‌தி‌ல் பூமிக்கு ‌மிக அருகில் அமைந்திருப்பது வெள்ளி ‌கிரக‌ம்தான். அன்பு மற்றும் அழகுக்கான ரோமானியக் கடவுளின் பெயரில் இக்கிரகத்துக்கு `வீனஸ்' என்று பெயரிடப்பட்டது. சூரியன், நிலா‌வி‌ற்கு‌ப் பிறகு வெள்ளி மிகவும் பிரகாசமான கோள் ஆகும். சூரிய உதயம் ம‌ற்று‌ம் சூரிய அஸ்தமனம் ஆகிய இரண்டு வேளைகளிலும் வெள்ளி‌க் ‌கிரக‌த்தை‌க் காண முடியு‌ம்.
WDவிண்ணியல் ஆய்வாளர்கள் ஒரு காலத்தில் வெள்ளியு‌ம் பூமியு‌ம் இரட்டைப் பிறவி என்று கருதினார்கள். ஏனெ‌னி‌ல் வெள்ளியின் குறுக்களவு ஏறக்குறைய பூமியை ஒத்திருக்கிறது. அதாவது இதன் குறுக்களவு, பூமியை விட 650 கிலோ மீட்டர்கள் தான் குறைவானது. பூமியுடன் ஒப்பிடுகையில் 81.5 சதவீதம் நிறை கொண்டது. ஆனால், இதை‌த் தவிர பூமிக்கும், வெள்ளிக்கும் வேறு எ‌ந்த ஒற்றுமையு‌ம் இல்லை. மனிதர்கள் வாழ தகுதியற்ற கிரகம் வெ‌ள்‌ளி.வெ‌ள்‌ளி ‌கிரக‌த்‌தி‌ன் புறவெளி மிகவும் வேறுபாடானது. இது 95 சதவீதம் கரியமில வாயுவால் சூழப்பட்டுள்ளது. அது தவிர, அடர்த்தியான கந்தக அமில மேகங்களால் சூழப்பட்டுள்ளது. அதுவே வெள்ளியின் உட்பரப்பை‌க் காணத் தடையாக உள்ளது. இந்த மேகங்கள் சூரிய ஒளியின் 76 சதவீதத்தைப் பிரதிபலிப்பதால் வெள்ளி மிகவும் பிரகாசமான கிரகமாகத் தோன்றுகிறது.சூரியக் குடும்பத்திலேயே மிகவும் சூடான கிரகமாகும் இது. அதாவது புதன் கிரகத்தை விட இரு மடங்கு வெப்பமானது. இத்தனைக்கும் சூரியனிலிருந்து புதனைப் போல இருமடங்கு தொலைவில் வெள்ளி அமைந்துள்ளது.சூரியனின் வெப்பம், வெள்ளிக் கிரகத்துக்குள் கரியமில வாயுவால் தக்க வைக்கப்படுவதுதா‌ன் அ‌திக வெ‌ப்ப‌த்‌தி‌ற்கு‌க் காரண‌ம்.வெள்ளியில் சாதாரணமாக நிலவும் த‌ட்பவெ‌ப்ப ‌நிலையான 460 டிகிரி செல்சியல் வெப்பநிலையில் காரீயம் கூட உருகிவிடும். இக்கிரகத்தில் காண‌ப்படு‌ம் புறவெளி அழுத்தமும் மிக அதிகமானது. அதாவது கடலுக்குள் ஒரு கிலோ மீட்டர் ஆழத்தில் நீந்துவது போன்ற அழுத்தம் இங்கு ‌நில‌ப்பர‌ப்‌பி‌ல் காணப்படு‌கிறது.‌‌பிரகாசமாகவு‌ம் அழகாகவு‌ம் இரு‌க்கு‌ம் வெ‌ள்‌ளி பா‌ர்‌த்து ர‌சி‌க்க‌த்தா‌‌ன் உக‌ந்தது. அ‌ங்கு செ‌ன்று ம‌னித‌ர்க‌ள் வா‌ழ்வதை‌ப் ப‌ற்‌றி ‌நினை‌த்து‌க் கூட பா‌ர்‌க்க இயலாது.

பூமி வெப்பமடைந்து வருவதால் ஏற்படும் தட்பவெப்ப மாற்றங்களால் மன நோய்

பூமி வெப்பமடைந்து வருவதால் ஏற்படும் தட்பவெப்ப மாற்றங்களால் மன நோய் ஏற்படுகிறது என்று உலகச் சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.கடும் வெள்ளம், தீவிர வறட்சி இன்னும் பிற இயற்கை பேரழிவுகளால் பல்வேறு நோய்கள் மக்களை தாக்கக்கூடும், இதில் மன நோயும் ஒன்று என்று உலகச் சுகாதார அமைப்பின் மண்டல உதவி இயக்குனர் பூனம் கேத்ரபால் சிங் தெரிவித்துள்ளார்.பூமி வெப்பமடைவதால் அடிக்கடி வெள்ளம் ஏற்படும் என்ற எச்சரிக்கைகளுக்குப் பிறகு புயலால் பாதிக்கப்பட்ட ஒரிசா, இங்கிலாந்தில் வெள்ளம் சூழ்ந்த ஊர் ஒன்று, ஆகிய இடங்களுக்கு சென்று ஆய்வுகள் மேற்கொண்டபோது பாதிக்கப்பட்ட மக்களில் பலருக்கு மன அழுத்த நோய் இருப்பது தெரிய வந்துள்ளது.அதாவது இதுபோன்ற இயற்கை சீற்றங்கள் நடந்து முடிந்த ஓராண்டிற்கு பிறகும் பீதியால் பலருக்கு மனநோய் ஏற்படுவதாக அந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.அதேபோல் வறட்சியால் ஏற்படும் மன ரீதியான பாதிப்புகளும் ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக விவசாயிகள் கடுமையான மன வாதைக்குள்ளாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பயிர்கள், பயிர் பாதுகாப்பு, விதை சேகரிப்பு ஆகியவற்றை திட்டமிடமுடியாமல் அவர்கள் அன்றாட வாழ்வு பாதிக்கப்படுகிறது, இதனால் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகிறது என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.வறட்சியின் பாதிப்பால் குடும்ப உறவுகளில் முறிவுகள் ஏற்படுவதாகவும், இதனால் கவலை அதிகரிக்க தற்கொலைகள் அதிகம் நடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வறட்சியால் பாதிக்கப்படும்போது, அதிகம் பேர் செய்யவேண்டிய வேலை ஒரு சிலரால் மட்டுமே செய்யப்படுகிறது, இதனால் பணிச்சுமை அதிகரிக்கிறது. கடினமான வேலைகளில் ஈடுபட நேரிடுவதால் உடல் நலமும், மன் நலமும் பாதிக்கப்படுவதாக இந்த ஆய்வு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வானிலை மாற்றம்: இந்திய செயல் திட்டத்திற்கு பாராட்டு!

புது டெல்லி: வானிலை மாற்றத்திற்கு காரணமான கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் இந்திய அரசின் செயல் திட்டங்களுக்கு பாராட்டு கிடைத்துள்ளது.ஐ.நா.வின் உலக விலங்கின பாதுகாப்பு நிதியம் (WWF), சர்வதேச நிதி நிறுவனமான அலையன்ஸ் ஆகியவற்றால் நியமிக்கப்பட்ட ஈகோஃபிஸ் என்ற ஆலோசனை அமைப்பு சமர்பித்த அறிக்கை, பணக்கார நாடுகளான ஜி- 8 நாடுகள் நச்சு வாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவதில் மிகவும் பின் தங்கியுள்ளதாக இன்று டோக்கியோவில் துவங்கிய ஜி- 8 நாடுகள் உச்சி மாநாட்டில் அறிக்கை வாசித்தது.புவி வெப்ப நிலையை 2 டிகிரி செல்சியஸ் உயர்விற்குக் கீழ் தக்க வைக்கும் நடவடிக்கைகளில் முன்னணி தொழிற்துறை நாடுகள் பின்தங்கியுள்ளது என்று டபிள்யூ. டபிள்யூ. எஃப்.- இந்தியாவின் தலைமை செயல் அதிகாரி ரவி சிங் தெரிவித்துள்ளார்.இந்திய அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள பருவ நிலை மாற்றத்தின் மீதான தேசிய செயல் திட்டத்தை பாராட்டிய இந்த அறிக்கை, மற்ற நாடுகளையும் இதனை பின்பற்ற வலியுறுத்தியுள்ளது.1990ஆம் ஆண்டு முதலான கடந்த கால நச்சு வாயு வெளியேற்றம், கியோட்டோ உடன்படிக்கை இலக்கு ஆகியவற்றை ஒப்பிட்டு ஜி- 8 நாடுகளின் நடவடிக்கை பின் தங்கியுள்ளதாக இந்த அறிக்கை கூறியுள்ளது.மேலும் 3 முக்கிய கொள்கைகளான எரிபொருள் ஆற்றல் திறன், மறு ஆக்கம் செய்யக்கூடிய எரிபொருள் ஆற்றல், கார்பன் சந்தை மேம்பாடு ஆகிய துறைகளில் மேற்கொண்ட நடவடிக்கைகளையும் இந்த ஆய்வு கணக்கிலெடுத்துக் கொண்டுள்ளது.இந்த அறிக்கை, ஃபிரான்ஸ், ஜெர்மனி நாடுகளுக்கு சற்று மேலே பிரிட்டனை வைத்துள்ளது. பிரிட்டன் கியோட்டோ உடன்படிக்கை இலக்கை எட்டவுள்ளது. மேலும், பருவ நிலை மாற்ற மசோதா போன்ற சில நடவடிக்கைகளையும் அறிமுகம் செய்துள்ளது. தனது கார்பன் சந்தை அணுகுமுறையை பிரிட்டன் வலியுறுத்திவரும் அதே வேளையில் மறு ஆக்கம் செய்யக்கூடிய எரிபொருள் ஆற்றல் மற்றும் எரிபொருள் திறன் வளர்ப்பு ஆகியவற்றில் சிறிதளவே செய்துள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.மேலும் தற்போது பிரிட்டன் எரிபொருள் பயன்பாட்டில் நிலக்கரிப் பயன்பாடு அதிகரித்து வருகிறது, இதனால் கார்பன் வெளியேற்றம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.இந்தப் பட்டியலில் கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகள் 7வது, 8வது இடங்களில் உள்ளன. இந்த நாடுகளில் கார்பன் வெளியேற்றம் அதிகரித்துள்ளதோடு, எரிபொருள் ஆற்றல் மேம்பாட்டின் முழுப் பயனையும் இந்த நாடுகள் இன்னமும் உணரவில்லை என்று இந்த அறிக்கை கூறுகிறது.இந்தப் பட்டியலில் 5ஆம் இடத்தில் உள்ள ஜப்பான் கியோட்டோ உடன்படிக்கை இலக்கை விட்டு தூர விலகியுள்ளது. மேலும் கார்பன் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் இடைக்கால செயல்திட்டங்கள் எதனையும் ஜப்பான் அறிமுகம் செய்யவில்லை.முன்பு கார்பன் வெளியேற்ற அளவில் குறைவாக இருந்த ரஷ்யா கடந்த 8 ஆண்டுகளாக இதற்கான செயல்திட்டங்கள் எதையும் நடைமுறைப்படுத்தவில்லை என்று இந்த அறிக்கை குறை கூறியுள்ளது.வளரும் பொருளாதார நாடுகளான இந்தியா, பிரேசில், சீனா, மெக்சிகோ, தென் ஆப்பிரிக்கா ஆகியவை ஜி - 8 நாடுகளுடன் ஒப்பு நோக்கத்தக்கவை அல்ல என்று கூறியுள்ள இந்த அறிக்கை, இதனால் இந்த தரவரிசைப் பட்டியலில் இடம்பெறவில்லை என்று தெரிவித்துள்ளது.ஆனால் இந்தியா தற்போது எடுத்துள்ள தேசிய செயல் திட்டத்தின் விளைவுகள் காரணமாக அடுத்த ஆண்டு தர வரிசையில் நுழையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சந்திரனில் குடியேற நீங்கள் தயாரா?

சந்திரனில் வாழக்கை நடத்த முடியுமா? இந்தக் கேள்விக்குரிய பதிலை நீண்டகாலமாக ஆராய்ச்சி செய்து வந்த விண்வெளி ஆய்வாளர்கள், தற்போது நிலவில் குடித்தனம் செய்யும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று கூறியுள்ளனர்.சந்திரனில் தண்ணீரே இல்லை என்றும், கடுமையான வறட்சி நிலவுவதாகவும் கூறப்பட்டு வந்த நிலையில், அங்கிருந்து கடந்த 1970-களில் கண்டெடுக்கப்பட்ட பாறைப்படிமமான `வால்கனிக் கிளாஸ்'-ல் நடத்திய சோதனையின் அடிப்படையில் ச‌ந்‌திர‌னி‌ல் தண்ணீர் இருந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.சந்திரனில் காணப்பட்ட தண்ணீர் குமிழிகள் சுமார் 3.3 முதல் 3.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட இய‌ற்கை பாதிப்புகளா‌ல் இழந்திருக்கலாம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.பிரவுன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி குழுவில் இடம்பெற்றிருந்தவர்களில் ஒருவரான ஆல்பர்டோ சால் கூறுகையில், "பெரும்பாலானவர்களின் கருத்து சந்திரனில் தண்ணீர் இல்லை என்பதே" என்றார்.செவ்வாய் கிரக‌‌‌த்‌தி‌ன் அளவிலான ஒரு கிரகம், பூமி தோன்றிய காலத்தில் அதன்மீது மோதியதில் சந்திரன் உருவாகியிருப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.கடந்த 1971-ம் ஆண்டில் அப்பல்லோ-15, நிலவுப் பயணத்தின் போது எடுத்து வரப்பட்ட பாறையை ஆய்வு செய்வதற்கு சால் மற்றும் அவரது குழுவினர் பிரத்யேக வழிமுறைகளைக் கையாண்டிருக்கிறார்கள்.பாறைப்படிவத்தின் ஹைட்ரஜன் உடன் குளோரின், ஃபுளோரினையும் சேர்த்து கார்பன் - சல்ஃபர் போன்று விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.அதன்படி ஹைட்ரஜன் காணப்பட்டது வெளிப்புற ஆதாரத்தில் இருந்து அல்ல என்றும், சந்திரனிலேயே இருந்திருப்பதாகவும் ஆய்வு முடிவுக‌ளி‌ல் தெ‌ரிய வ‌ந்து‌ள்ளது.சந்திரனில் தண்ணீர் இருந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல், நாசாவின் சந்திரன் அகழ்வுப் பணிகளுக்கு மிக முக்கியமானதாக அமையும்.

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive