இவரு மாற்றி பேசுவதில் அரசியல்வாதியையேமிஞ்சிட்டாரப்பா ! தமிழனாலே இளிச்சவாயனா நெனைக்கிறாங்கப்பா!
ஒகேனக்கல் பிரச்னை குறித்து, சென்னையில் திரைப்படத் துறையினர் நடத்திய உண்ணாவிரதத்தில் "தண்ணீரைக் கூட பிரச்னையாக்குபவர்களை உதைக்க வேண்டாமா?' என ஆவேசமாக பேசிய ரஜினிகாந்த், "குசேலன்' திரைப்படம் வெளியிடுவதற்காக கன்னட மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார்.ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு கர்நாடக அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தின. இதற்கு பதிலடி தரும் வகையில், தமிழ்த் திரைப்படத் துறையினர் சென்னையில் உண்ணாவிரதம் இருந்தனர். கூட்டத்தில் பங்கேற்று பேசிய நடிகர் ரஜினிகாந்த், "கர்நாடக - தமிழக மக்கள் ஒற்றுமையாக வாழ்கின்றனர். ஆனால், சிலர் இந்த ஒற்றுமையைக் குலைக்கும் வகையில் தூண்டி விடுகின்றனர். குடிக்கிற தண்ணியில கூட பிரச்னை கிளப்புறவங்களை உதைக்க வேண்டாமா?' என ஆவேசமாக பேசினார். ரஜினியின் இந்த பேச்சு கன்னட அமைப்புகளுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. "கர்நாடகாவில் ரஜினி சினிமாக்களை திரையிட அனுமதிக்க மாட்டோம்' என எச்சரிக்கப்பட்டது.
இந்தப் பிரச்னை அமுங்கியிருந்த நிலையில், ரஜினி நடித்த "குசேலன்' திரைப்படம் இன்று வெளியாகிறது. கர்நாடகாவில் தனது திரைப்படத்தை வெளியிட அனுமதிக்க வேண்டும் என கர்நாடகா பிலிம் சேம்பருக்கு கடிதம் எழுதியுள்ளார் ரஜினிகாந்த். அதில், "எனது பேச்சு கர்நாடக மக்களின் மனதை புண்படுத்தியதை நான் அறிவேன். எனது தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டுள்ளேன்; இனிமேல் இதுபோல் பேசமாட்டேன். எனது திரைப்படத்தை தமிழ், கன்னட ரசிகர்கள் உட்பட அனைத்து ரசிகர்களும் பார்த்து மகிழ்கின்றனர். எனவே, "குசேலன்' திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க வேண்டும்' எனக் கூறியிருந்தார். இதையடுத்து, இன்று "குசேலன்' திரைப்படத்தை வெளியிட கர்நாடகா பிலிம் சேம்பர் அனுமதித்தது.
இதை அறிந்த கன்னட ரக்சன வேதிகே அமைப்பைச் சேர்ந்தவர்கள், கர்நாடகா பிலிம் சேம்பர் முன் கூடி, "ரஜினி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். அதுவரை "குசேலன்' திரைப்படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம்' என்று கோஷமிட்டனர். "ரஜினி, கன்னடர்களை அவமரியாதையாக பேசியுள்ளார். எனவே, அவர் நேரடியாக மக்களிடம் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும்' என "வாட்டாள்' நாகராஜ் கூறினார்
இதுகுறித்து கர்நாடகா பிலிம் சேம்பர் துணைத் தலைவர் ராக்லைன் வெங்கடேஷ் கூறும்போது, ""ரஜினி ஏற்கனவே "டிவி' சேனல்கள் மூலமாக மன்னிப்பு கேட்டுள்ளார். தற்போது கடிதம் மூலமும் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார். இதையடுத்து அவரது திரைப்படத்தை இன்று வெளியிட அனுமதித்துள்ளோம்,'' என்றார்.ஆனாலும், கன்னட அமைப்புகளின் கடும் எதிர்ப்பையும் மீறி "குசேலன்' திரைப்படம் இன்று வெளியாகுமா? என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்துள்ளது.
ரஜினி உருவப்படம் தீ வைப்பு: கன்னட அமைப்பினர் போராட்டம் : நடிகர் ரஜினி நடித்த "குசேலன்' படத்தை திரையிட அனுமதித்ததைக் கண்டித்து கர்நாடகா ஃபிலிம் சேம்பர் முன் கன்னட அமைப்பினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ரஜினி உருவப் படம் தீ வைத்து கொளுத்தப்பட்டது.
ஒகேனக்கல் குடிநீர் திட்டத்துக்கு, கர்நாடகாவில் எதிர்ப்பு கிளம்பியபோது, தமிழ் சினிமா நடிகர்கள் அனைவரும் இணைந்து சென்னையில் போராட்டம் நடத்தினர். அதில் நடிகர் ரஜினியும் பங்கேற்றார்.அப்போது அவர் பேசியது, கன்னட வெறியர்கள் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்தியது. அதனால் ஆத்திரத்தில் இருந்த கன்னட வெறியர்கள், ரஜினியின் குசேலன் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.கர்நாடகாவில் 18 திரையரங்குகளில் குசேலன் படம் வெளியிட அனுமதி தரப்பட்டது. அதையடுத்து கன்னட அமைப்பைச் சேர்ந்த வாட்டாள் நாகராஜ், நாராயண கவுடா, பிரவீன் ஷெட்டி ஆகியோர் தலைமையில் நேற்று கர்நாடகா பிலிம் சேம்பர் முன்பு கன்னட அமைப்பினர் போராட்டத்தில் குதித்தனர்.அப்போது ரஜினி உருவப் படத்தை தரையில் போட்டு அதைச் சுற்றி செருப்புகள் வைத்திருந்தனர். சிறிது நேரம் கழித்து அப்படத்தை எடுத்து வாட்டாள் நாகராஜ் தீ வைத்து கொளுத்தினார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குசேலன் திரைப்படம் வெளியிடும் தியேட்டர்கள் முன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ரஜினி கேட்ட மன்னிப்பு
Labels: அரசியல்
"விருத்தாசலத்தை கோட்டை விடும் கேப்டன் என்ற தலைப்பில் தமிழன் எக்ஸ்பிரஸ் கட்டுரை வெளியிட்டுள்ளது உங்கள் பார்வைக்கு இதோ"
http://www.tamilanexpress.com/politics/politics.asp
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா
நாட்டை சின்னாபின்னமாக்க துடிக்கும் 'சிமி': தடை செய்யப்பட்ட பின்னும், வேகமாக, பல கிளைகளுடன் வளர்ச்சி. கண்டு கொள்ளாத மத்திய, மாநிலஅரசுகள்,
பெங்களூரு மற்றும் ஆமதாபாத் தில் நடந்த குண்டு வெடிப்புகளுக்கு, மத்திய அரசால் தடை செய்யப்பட்ட அமைப்பான "இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம்' என்ற "சிமி' அமைப்பே காரணமாக இருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது. தடை செய்யப்பட்ட அந்த அமைப்பு, தீவிரமாக செயல்படவில்லை என, போலீசார் கூறி வந்தாலும், அது தமிழகம் உட்பட பல மாநிலங்களில் நன்றாக வேரூன்றி இருப்பதும், பல கிளைகளைக் கொண்டிருப்பதும் சமீபத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், அல்-குவைதா, லஷ்கர்-இ-தொய்பா உட்பட பல சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடனும் தொடர்பு வைத்துள்ளது. பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,யின் தூண்டுதலின் பேரிலேயே, இந்த அமைப்பினர் சதி வேலைகளை அரங் கேற்றி வருகின்றனர்.
கடந்த 1977ம் ஆண் டில், உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் துவக்கப் பட்ட அமைப்பு, "இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம்' என்ற "சிமி' அமைப்பு. மேலை நாட்டு கலாசாரத்தில் இருந்து, இந்தியாவை விடுவிப்பது மற்றும் ஒரு இஸ்லாமிய சமுதாயமாக இந்தியாவை மாற்றுவது என்ற நோக்கத்துடன் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பின் நிறுவன தலைவர் முகமது அகமதுல்லா சித்திக். இவர் தற்போது, அமெரிக்காவின் வெஸ்டர்ன் இல்லினாய்ஸ் பல்கலைக்கழக பேராசிரியராக உள்ளார்.
"ஜமாத்-இ-இஸ்லாமி ஹிந்த்' என்ற அமைப்பின் மாணவர் அமைப்பாகவே, "சிமி' முதலில் உருவானது. ஈரானில் ஏற்பட்ட இஸ்லாமிய புரட்சியால் கவரப்பட்ட இந்த அமைப்பினர், இந்தியாவிலும், அதேபோன்ற மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தில், வன்முறைகளில் ஈடுபடத் துவங்கினர். புனிதப் போர் என அழைக்கப் படும், பயங்கரவாத செயல்பாடுகளிலும் ஆர்வம் காட்டினார். இதனால், "சிமி' அமைப்பினர் அணுகுமுறை, "ஜமாத்-இ-இஸ்லாமி ஹிந்த்'திற்கு பிடிக்கவில்லை. முரண்பாடுகள், மோதல்கள் அதிகரித்ததால், அந்த அமைப்புடனான கூட்டணியை "சிமி' முறித்துக் கொண்டது.
பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அராபத், இந்தியா வந்த போது, இந்த அமைப்பினர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். டில்லியில் கறுப்புக் கொடி காட்டும் போராட்டமும் நடத்தினர். யாசர் அராபத்தை மேற்கத்திய நாட் டினரின் ஊது குழல் எனவும் வர்ணித்தனர். 1981ம் ஆண்டு முதல், இந்த அமைப்பு பயங்கரவாத பாதையை பின்பற்றும் ஒரு அமைப்பாகவே செயல்படத் துவங்கியது. உண்மையான முஜாகிதீன், சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லாடனே எனவும் கூறி வருகிறது.
கடந்த 1980ம் ஆண்டுகளில் மகாராஷ்டிராவில் நடந்த பல்வேறு வன்முறை சம்பவங்களுக்கு இந்த அமைப்பே காரணமாக இருந்தது. 1992ம் ஆண்டு மும்பையில் நடந்த வன்முறையின் போதும், அதன்பின் மாலேகானில் நடந்த வன்முறையின் போதும், "சிமி' அமைப்பினர், ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தினர் மற்றும் போலீசாருடன் மோதினர். இந்து மக்களையும், ஆர்.எஸ்.எஸ்., போன்ற இந்து அமைப்புகளையும், தங்களின் எதிரிகளாகக் கருதி, இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப் பட்ட பின்னர், பெரிய அளவில் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. நாடு முழுவதும் வன்முறைகள் நடப்பதற்கும் காரணமாக அமைந்தது.
அதன்பின், நாட்டில் நடந்த பல்வேறு வன்முறை சம்பவங்களுக்கு இந்த அமைப்பே காரணம் என, போலீஸ் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் தொடர்ச்சியாக குற்றம் சாட்டினர். 2001ல் அமெரிக்காவில் உலக வர்த்தக மைய கட்டடங்கள் தகர்க்கப் பட்ட பின்னர், லஷ்கர்-இ-தொய்பா அமைப்புடன் "சிமி' அமைப்புக்கு இருந்த தொடர்பு உறுதி செய்யப்பட்டதால். அந்த ஆண்டு, இந்த அமைப் புக்கு தடை விதிக்கப்பட்டது. நகோரி என்பவரின் தலைமையில் தற்போது திரைமறைவில் இந்த இயக்கம் செயல்பட்டுவருகிறது. வகாபிகளுடன் இந்த அமைப்புக்கு தொடர்பு உண்டு.
வன்முறை மற்றும் பயங்கரவாதத்தில் ஈடுபடக் கூடாது என்பதற்காக தடை விதிக்கப்பட்டாலும், அதன் பின்னர் தான் இந்த அமைப்பு இந்தியாவிற்கு எதிராக செயல் படும் மற்ற பயங்கரவாத இயக்கங்களுடன் கை கோர்த்து செயல்படத் துவங்கியது. குறிப்பாக, பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., யின் தொடர்பும் அதற்கு ஏற்பட்டது. 2006ம் ஆண்டு ஜூலையில் மும்பையில் புறநகர் ரயில்களில் நடந்த குண்டு வெடிப்பின் போது, 300க்கும் மேற்பட்டவர்களை மும்பை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அவர்களில் பலர் "சிமி' அமைப்பினர் என்பதும், அந்த அமைப்பினருக்கும் குண்டு வெடிப் புக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், 2003ம் ஆண்டு மும்பையில் நடந்த குண்டு வெடிப்புக்கும் இந்த அமைப்புக்கும் தொடர்பு இருப் பதும் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனாலும், முலாயம் சிங், மாயாவதி போன்ற அரசியல்வாதிகள், ஓட்டு வங்கியை கருத்தில் கொண்டு, இந்த அமைப்பு விஷயத்தில் கருணை காட் டினர். அதை, பயங்கரவாத அமைப்பு இல்லை என வர்ணித்தனர். இருந்தாலும், தடை செய்யப்பட்ட, "சிமி' அமைப்பினர், "இந்தியன் முஜாகிதீன்,' "டெக்பாஸ்-இ-பாஸ்சி' அல் லது "டெபி' என்ற பெயரில் தற்போது செயல்பட்டு வருவதாக போலீசார் கூறுகின்றனர்.
மத்திய அரசு தடை விதித்தாலும், மாற்றுப் பெயரில் செயல்படும் இந்த அமைப்பினர், பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பினருடன் நெருங்கிய கூட்டு வைத்துள்ளனர். மேலும், தடைக்குப் பின், இந்த அமைப்பு சிறிதளவும் நசுங்கவில்லை. அதற்கு மாறாக பெருமளவு வளர்ந்து, பல கிளைகளைக் கொண்டுள்ளது. பெயர் தெரியாத பல சிறிய மத அமைப்புகளுடன், பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு கொண்டு, தங்களின் சதி வேலைகளை அரங்கேற்றி வருகிறது. ஏதோ ஒரு வழியில் அவர்களால் புனிதப் போர் என அழைக்கப்படும், பயங்கரவாத செயல்களை நாட்டிற்கு எதிராக நடத்தி வருகின்றனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன், "சிமி' அமைப்பில் 600க்கும் மேற்பட்ட வர்கள் உறுப்பினர்களாக இருந்தனர். இப்போது இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்திருக்கும். மேலும், 50 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் இந்த அமைப்புக்கு மறைமுகமாக ஆதரவு அளித்து வருகின்றனர். நிதி உதவி தருகின்றனர். இந்த அமைப்பைச் சேர்ந்த பலர் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளால் தொடர்ந்து கண்காணிக் கப்பட்டு வந்தாலும், எந்த பலனும் இல்லை. இந்த ஆண்டின் முற்பகுதியில் ஜெய்ப்பூரிலும், சமீபத்தில் ஆமதாபாத் மற்றும் பெங்களூரில் நடந்த குண்டு வெடிப்புகளுக்கும் "சிமி' அமைப்பே காரணம் என, போலீசாரும் உளவுத்துறையினரும் நம்புகின்றனர். "சிமி' அமைப்பைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர், பெங்களூரில் சமீபத்தில் கைது செய்யப்பட்டதன் மூலம் இந்த அமைப்பின் செயல்பாடுகள் நாட்டின் பல நகரங்களுக்கு விரிவடைந்திருப்பது உறுதியாகியுள்ளது.
புதுப்பிக்க காரணம் யார்: பெங்களூரில் சமீபத்தில் கைதான முகமது சுபாஷ் குரேசியே, தடை செய்யப் பட்ட இந்த அமைப்பை புதுப்பிக்க காரணமாக இருந்துள்ளான். இவன், 2006-07ம் ஆண்டில், தங்கள் அமைப் புக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்காக, தென்மாநிலங்களில் 12க்கும் மேற்பட்ட பயிற்சி முகாம் களை நடத்தியுள்ளான். ஒரு கால கட்டத்தில் மும்பை மீரா ரோடு பகுதியில் வசித்த இவன், அதிக சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை தயாரிப்பதில் கைதேர்ந்தவன். 2003ம் ஆண்டு, கேட்வே ஆப் இந்தியா மற்றும் ஜாவேரி பஜார் பகுதியில் நடந்த குண்டு வெடிப்புக்கு இவனும் காரணம்.
அதேபோல், இந்த அமைப்பை புதுப்பிக்க காரணமாக இருந்த மற்றொருவன் கேம் பஷீர். போலி பாஸ் போர்ட்டில் சவுதி அரேபியா சென்று, தற்போது அங்கு தங்கியுள்ள அவன், அங்கிருந்து இந்த அமைப்பிற்கு நிதி உதவி அளிப்பதாகவும், புலனாய்வு அமைப்புகள் தெரிவிக்கின்றன. ஏர்-இந்தியா நிறுவனத்தில், இன்ஜினியராக இருந்த இவன், "சிமி' அமைப்பில் முழு நேர ஊழியராக பணியாற்றுவதற்காக, அந்த வேலையை கைவிட் டான். 2003ம் ஆண்டில், மும்பையில் நடந்த குண்டு வெடிப்புக்கு இவன் நிதி உதவி செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த சம்பவத்தில் 48 பேர் கொல்லப்பட்டனர்; 150க்கும் மேற்பட் டோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மார்ச் மாதம், "சிமி' அமைப் பைச் சேர்ந்த 13 பேரை மத்திய பிரதேச போலீசார் கைது செய்தனர். அவர் களில் சப்தர் நகோரி, அவரின் சகோதரர் கமருதீன் நகோரி, அப்துல் பெடிக் கல் ஷிப்லி மற்றும் ஹபீஸ் அட்னன் உசேன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். கடந்த ஆண்டு ஜூலை மாதம் உஜ்ஜயினியில் இவர்கள் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். அதில், இந்தியாவிற்கு எதிராக பயங்கரவாத நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது என்று முடிவு செய்துள்ளனர். அந்தக் கூட்டத்தில், முகமது சுபாஷ் குரேசியும் பங்கேற்றுள்ளான்.
அப்போது, தலிபான்களிடம் இருந்து தங்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கவும், பாகிஸ்தான் மற் றும் ஆப்கானிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளின் உதவிகளைப் பெறவும், குரேசியே மத்தியஸ்தராக, மீடியேட்டராக செயல்பட வேண்டும் என்றும் கேட் டுக் கொள்ளப்பட்டது. இந்தக் கூட்டத்தில், சப்தர் நகோரியை அனைவரும் முன்மாதிரியான நபர் எனவும் வர்ணித்துள்ளனர்.
இக்கூட்டத்தில், முடிவுகள் எடுத்தபடி, தலிபான்கள் மற்றும் பாக்., கில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளின் ஆதரவை அவர்கள் பெற்றிருக்கலாம் என நம்பப்படுகிறது. மேலும், 2002ம் ஆண்டில், குஜராத்தில் நடந்த வன்முறைகளுக்குப் பின், அந்த மாநிலத்தின் மீது, "சிமி' மற்றும் லஷ்கர்-இ-தொய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகளின் கவனம் திரும்பியுள்ளது. தங்கள் அமைப்பைச் சேர்ந்த சிலரின் உதவியுடன் குஜராத் போலீஸ் அதிகாரிகள், தொழிலதிபர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பலரை கொல்ல திட்டமிட்டுள்ளனர். இதற்காக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள சில பகுதிகளில் பலருக்கு பயிற்சியும் தரப்பட்டுள்ளது. இருந்தாலும், முதல்வர் மோடி மேற் கொண்ட உஷாரான நடவடிக்கை, பயங்கரவாதத்தை கையாள் வதில் காட்டும் கடுமை போன்றவற்றால், அங்கு பெரிய அளவில் இதுவரை சதித் திட்டத்தை அரங்கேற்ற முடியவில் லை. தற்போது அதைச் செய்துள்ளனர். இதன் மூலம் ஒரு பீதியை உண்டாக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
புதிய வடிவில் பழைய பயங்கரவாதம்! சமீபத்தில் இந்தியாவை உலுக்கி வரும் தொடர் குண்டு வெடிப்புகளின் பின்னணியில் செயல்படும் பயங்கரவாத இயக்கங்களின் விவரம்: இந்தியன் முஜாகிதீன்கள்: பயங்கரவாத இயக்கங்கள் தடைசெய்யப்படும் போதெல்லாம், அவை இன்னொரு பெயருடன் புதிய வடிவில் முளைப் பது வாடிக்கை. 2001 செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னரும், 2002 செப் டம்பரில் அக்ஷர்தாம் கோவில் தாக்குதலுக்குப் பின்னரும் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., உத்தரவின் படி பயங்கரவாத இயக்கங்கள் பெரும்பாலானவை வேறு பெயர் களில் செயல்பட்டு வருகின்றன.
தடை செய்யப்பட்டுள்ள சிமி இயக் கத்தினரில் பெரும்பாலான இளைஞர்களைக் கொண்டு இந்தியன் முஜாகிதீன் அமைப்பு உருவாக்கப்பட் டுள்ளது. வங்கதேசத்தில் செயல்படும் பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கமான வங்கதேச ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமி (ஹூஜி) மற்றும் லஷ்கர்-இ-தொய்பா ஆகிய அமைப்புகளும் இந்திய முஜாகிதீன் அமைப்பு உருவாக உதவியிருக்கின்றன. இந்த அமைப்பு கடந்த ஆண்டு உ.பி.,யில் தனது முதல் தாக்குதலை நடத்தியது.
கடந்த 2002ம் ஆண்டில் குஜராத்தில் நடந்த வன்முறையை அடுத்து, பா.ஜ., ஆளும் மாநிலங்களில் அமைதியை சீர்குலைப் பதே இந்த அமைப்பின் தற்போதைய முக்கிய நோக்கம். இந்த அமைப் புக்கு நிதி உதவி மற்றும் பயங்கரவாதிகளை சேர்க் கும் முயற்சியில் இஸ்லாமிய வகாபி அடிப்படைவாதியினர் முக்கிய பங்கு வகிக்கின்றனர். சவுதி அரேபியாவில் இருந்து இவர்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. தங்கள் வழிக்கு பிற இஸ் லாமியர்களை இழுக்கும் விதமாக, புனித வழிக்கு திரும்புங்கள் என்று பிரசாரம் செய்கின்றனர். இஸ்லாமியருக்கு எதிராக நடக்கும் வன்செயல்களுக்கு தண்டனை அளிக்கும் பொறுப்பு, தங்களுக்கு உள்ளதாகக் கூறிக்கொள்ளும் வகாபி அமைப்பினர், ஐ.எஸ்.ஐ., உளவு அமைப்பால் பயிற்சி அளிக்கப்பட்டவர்கள். இதனால், இந்தியன் முஜாகிதீன்களுக்கு எளிதாக உதவி வருகின்றனர்.
ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமி (ஹூஜி): வங்கதேசத்தில் கிளையை துவக்கி செயல்பட்டு வரும் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பு தான் ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமி(ஹூஜி) அமைப்பு. இஸ்லாமியர்களின் பாதுகாப்புக்கான இரண்டாம் வழி என்று தங்களை கூறிக் கொள்ளும் ஹூஜி அமைப்பினர், ஐதராபாத்தில் கடந்த ஆண்டு குண்டு வெடிப்பை நடத்தினர். ராஜஸ்தானில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வங்கதேசத்தினரை வெளியேற்றும் திட்டத்தை எதிர்த்து ஜெய்ப்பூரில் குண்டுவைக்க இந்தியன் முஜாகிதீன்களுக்கு உதவினர்.
கர்நாடகா மற்றும் குஜராத்தில் பா.ஜ., ஆட்சி நடைபெறுவதால், அங்கு அமைதியை குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் இந்தியன் முஜாகிதீன்களுக்கு உதவியாக பெங்களூரு மற்றும் ஆமதாபாத் தொடர் குண்டு வெடிப்புக்கு உதவி செய்தனர். இந்த அமைப்புக்கு பஷீர் அகமது மிர் என்பவர் கமாண்டர் இன் சீப் ஆக உள்ளார். இளைஞர்களின் மனதை மாற்றி பயங்கரவாதத்தை கற்றுக் கொடுப்பதை விட, குழந்தைகளுக்கு பயிற்சி கொடுப்பது சுலபம் என்று கருதி, மேற்கு வங்கத்தில், வங்கதேச எல்லைப்பகுதியில் குழந்தைகளை பயங்கரவாதத்துக்காக இந்த அமைப்பு கடத்தி வருகிறது. பாதுகாப்பற்ற சூழ்நிலையில் உள்ள ஏழை பள்ளிக் குழந்தைகளுக்கு பணத்தாசை காட்டி இந்த முயற்சிக்கு மாற்றி வருகின்றனர்.
ரஷ்ய- ஆப்கானிஸ்தான் போரின் போது, இந்த அமைப்பு துவக்கப் பட்டது. 2001க்குப் பின் அமெரிக்கா, ஆப்கனில் தாக்குதல் நடத்திவருவதால் இந்த அமைப்பினர் தற்போது இந்தியாவில் ஊடுருவி உள்ளனர். இன்றும் ஒசாமா பின்லாடனின் அல்-குவைதா அமைப்புடன் இந்த அமைப்புக்கு தொடர்பு உண்டு.
"சிமி'யின் மறுவடிவமான இந்தியன் முஜாகிதீன்: ஆமதாபாத், ஜெய்ப்பூர், லக்னோ, பைசாபாத் மற்றும் வாரணாசியில் நடந்த குண்டு வெடிப்புகளுக்கு தானே முன்வந்து பொறுப்பேற்ற அமைப்பு இது. இந்த பயங்கரவாத அமைப்பு உள்நாட்டில் உருவானது என்று கூறப்பட்டாலும், அப்படிப்பட்ட ஒரு அமைப்பே இல்லை என, உளவு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஹூஜி, சிமி மற்றும் லஷ்கர்-இ-தொய்பா இந்த மூன்று அமைப்புகளில் ஒன்றே, இந்தப் போலி பெயரில் செயல்படலாம். குறிப்பாக தடை செய்யப்பட்ட "சிமி' அமைப்பு இந்தப் பெயரில் செயல்படலாம் என, உளவு நிறுவன மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
லக்னோ, பைசாபாத் மற்றும் வாரணாசியில், 2007 நவம்பர் 23ம் தேதி குண்டு வெடிப்புகள் நிகழ்வதற்கு, ஐந்து நிமிடங்களுக்கு முன்னர், இந்த அமைப்பின் பெயரில் இ-மெயில் ஒன்று அனுப்பப்பட்டிருந்தது. ஜெய்ப்பூரில் கடந்த மே மாதம் நடந்த குண்டு வெடிப்பிற்குப் பின், இரண்டு நாட்கள் கழித்து இதே அமைப்பின் பெயரில் இ-மெயில் ஒன்று அனுப்பப்பட்டிருந்தது. அப்போது தான், இந்த அமைப்பின் பெயர் வெளியே தெரிந்தது.
ஐதராபாத் மெக்கா மசூதி, மாலேகான் குண்டு வெடிப்பு, அஜ்மீர் குண்டு வெடிப்பு மற்றும் சம்ஜூதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டு வெடிப்புகளுக்கு, "சிமி' அல்லது "ஹூஜி' அமைப்பு காரணமாக இருக்கலாம் என உளவுத் துறையினர் கூறுகின்றனர். ஆனாலும், இந்த குண்டு வெடிப்புகளில் சில, மசூதிகள் மீது நடத்தப்பட்டுள்ளதால், இந்த அமைப்புகளுக்கு தொடர்பு இருக்க வாய்ப்பில்லை என, வேறு சில தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காலூன்ற அரங்கேற்றப்பட்ட சதி வழக்குகளுக்காக லட்சக்கணக்கில் நிதி உதவி:
லக்னோ: தடை செய்யப்பட்ட "சிமி' அமைப்பு, கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக, தங்கள் மாநிலத்தில் தீவிரமாக செயல்படவில்லை என, உத்தர பிரதேச மாநில போலீசார் சமீபத்தில் அறிவித்திருந்தனர். அது தற்போது பொய்யாகியுள்ளது. அந்த மாநிலத்தில் மட்டுமின்றி, வேறு பல மாநிலங்களிலும், "சிமி' அமைப்பினர் தீவிரமாக செயல்பட்டு வருவது உறுதியாகியுள்ளது.
"சிமி' அமைப்பின் உ.பி., மாநில முன்னாள் தலைவர் ஹுமாயூன் அகமது சமீபத்தில் கைது செய்யப்பட்டார். உத்தர பிரதேச பயங்கரவாத எதிர்ப்புப் படையினர், அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. அதன் விவரம் வருமாறு: ஹுஊமாயூன் அகமது, "சிமி' அமைப்பின் நிதியை நிர்வகிப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்ததோடு, அதன் சட்ட ஆலோசகராகவும் செயல் பட்டு வந்துள்ளார். தமிழகம், கேரளா, அசாமில் அமைப்பின் செயல்பாடுகள் விரிவடைய காரணமாக இருந் துள்ளார். அதற்கான நிதி உதவிகள் மற்றும் ஆட்களை சேர்ப்பது போன்ற பணிகளையும் செய்துள்ளார்.
தமிழகம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 40க்கும் மேற்பட்ட "சிமி' அமைப்பினர் தொடர்பான வழக்குகளை கையாளவும் லட்சக் கணக்கில் நிதி கொடுத்துள்ளார். மேலும், தமிழகம் உட்பட சில மாநிலங்களில் மதரசாக்கள் மற்றும் சில முன்னணி மத அமைப்புகள் மூலம், "சிமி' வளர்ச்சி அடைய தேவையான உதவிகளை செய்ததோடு, பலரிடம் நிதியும் திரட்டியுள்ளார். இவ்வாறு விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுபற்றிய எந்த விவரங்களையும் உ.பி., மாநில உயர் போலீஸ் அதிகாரிகள் இதுவரை வெளியிடவில்லை. இருப்பினும், விசாரணை மூலம் கிடைத்த தகவல்கள் மற்றும் அது தொடர்பான ஆவணங்களை மத்திய, மாநில அரசுகளுக்கும், புலனாய்வு நிறுவனங்களுக்கும் பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் அனுப்பி வைத்துள்ளனர் என்பது குறிப் பிடத்தக்கது.
குண்டு வெடிப்புகளை தடுக்க செய்ய வேண்டியது என்ன?: நடப்பு 2008ம் ஆண்டில், மூன்று பயங்கர குண்டு வெடிப்புகள் நிகழ்ந் துள்ளன. கடந்த ஆண்டில் ஐந்து சம்பவங்கள் நடந்துள்ளன. இவைகள் மட்டுமின்றி, கடந்த ஐந்து ஆண்டுகளில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகள் அனைத் தையும் ஒப்பிட்டுப் பார்த்தால், அனைத்தும் ஒரே மாதிரியாக இருப்பது தெரியவந்துள்ளது. அனைத்து சம்பவங்களிலும் சைக்கிள்கள், டிபன் பாக்ஸ்கள் மற்றும் பிளாஸ்டிக் பைகளே பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும், இந்த பயங்கர சதி செயலுக்கு பயன்படுத்தப்பட்ட குண்டுகளில் எல்லாம், அம்மோனியம் நைட்ரேட், டைமர், ஆணிகள் போன்றவை இடம் பெற்றுள்ளன.
மேலும், குண்டு வெடிப்புகள் எல் லாம் பொது இடங்களில் தான் நடத்தப் பட்டுள்ளன. மசூதிகள், கோர்ட்டுகள், மருத்துவமனைகள் கூட விட்டு வைக் கப்படவில்லை. இவையெல்லாம், போலீசார் தங்களின் விசாரணைக்கு பயன்படுத்துவதற்கு தேவையான நல்ல தகவல்கள் என்றாலும், உளவுத் துறையினர் முழு அளவில் பயன் படுத்திக் கொள்ளவில்லை. சதி வேலைக்கு காரணமான அமைப்பை கண்டறியவில்லை.
அத்துடன், குண்டு வெடிப்புக்கு சில நாட்களுக்கு முன்னரே, மொபைல் போன்களை பயன்படுத்துவதையும் பயங்கரவாதிகள் தவிர்த்து விடுகின்றனர். அப்பாவி சிலரின் இ-மெயில் முகவரிகளை பயன்படுத்தி, குண்டு வெடிப்பு தொடர்பான இ-மெயில் களை, பத்திரிகை நிறுவனங்களுக்கும், அரசுக்கும் அனுப்புவதை வழக்கமாக கொண்டுள்ளனர். மேலும், பயங்கரவாதிகள் தங்களுக்குள் இ-மெயில் மூலம் தகவல்களை பரிமாறிக் கொள்வதில் லை. அப்படி பரிமாறிக் கொண்டால், அதை மற்றவர்கள் படித்துப் பார்க்கலாம் என நினைத்து தந்திரமாக செயல் படுகின்றனர். அத்துடன், குண்டு வெடிப்புகளை பயங்கரவாத அமைப் பின் உறுப்பினர்களே நடத்துவதில்லை. அவற்றை வெளிப்படையாக தெரியாத சில அமைப்பைச் சேர்ந்தவர்களிடம் ஒப்படைக்கின்றனர்.
அதுமட்டுமின்றி, குண்டு வெடிப்பை நிகழ்த்தியது யார் என்பதை போலீசார் கண்டு பிடிக்காமல் இருப்பதற்காக, வேறு ஏதோ ஒரு அமைப்பின் பெயரில், குண்டு வெடிப் புக்கு பொறுப்பேற்று தகவல்கள் அனுப்புவதும் தொடர்கிறது. ஆமதாபாத்தில் நடந்த குண்டு வெடிப்புகள், நமது மாநிலங்களில் பெரும்பாலானவை, பயங்கரவாதத்தை சுயமாகக் கையாள திறமையற்றதாக உள்ளன என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டன. மாநிலங்கள் மற்றும் மத்திய புலனாய்வு நிறுவனங்கள் இடையே ஒருங்கிணைப்பு இல்லாததாலும், இதுபோன்ற குண்டு வெடிப்புகளை தடுக்க வேண்டும் என்ற அக்கறை அரசியல்வாதிகளிடம் இல்லாததாலும், பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு நகரங்கள் எளிதில் இலக்காகி விடுகின்றன. எனவே, இந்தக் குறைபாடுகளை எல்லாம் சீர்படுத்தி, குண்டு வெடிப்புகள் தொடர்ந்து நிகழாமல் தடுக்க வேண்டியது அவசியம். அதற்கேற்ற நடவடிக்கைகளை அரசுகள் எடுக்க வேண்டும். உளவுத் துறையினரும் பொறுப்போடு, மிகவும் கவனமாகவும் செயல்பட வேண்டும்.
என்ற செய்தியினை வெளியிட்டு தினமலர் நாளிதழ் இன்றைய அரசியல்வாதிகளின் முகத்திரையைகிழித்துள்ளது. ஓட்டுஎன்ற ஒரு விஷயத்துக்காக மட்டுமேசெயல்படும் இது போன்ற ஓட்டு பொருக்கி அரசியல்வாதிகளுக்கு ஒன்றை நினைவுபடுத்த வேண்டும். ஓட்டுக்காக அவர்களை இன்று ஆதரிக்கும் நீங்கள்இந்தியா என்றவொரு நாடு இருந்தால் தானேசுரண்டி பிழைப்பு நடத்த முடியும் ஊழல் செய்து கோடிகோடியாக சம்பாதிக்க முடியும் . அதுவேஇல்லாமல் போய்விட்டால் எங்கே போய் சுரண்டி சம்பாதிப்பிர்கள். நாட்டை தான் சுரண்டி ஒழித்து ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிட்டீர்கள்அனைத்து துறைகளிலும் ஊழலை புகுத்தி விளையாடுகிறீர்கள் பாதுகாப்பு துறையிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது பாதுகாப்பு விஷயத்தில் மட்டுமாவது கொஞ்சம்ஜாக்கிரதையாக செயல் படக்கூடாதா? உங்களிடம் ஏமாந்து ஓட்டு போட்ட எங்களைநினைத்து பாருங்கள். பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு வாழும் நீங்கள்தீவிரவாதிகளின் தாக்குதலில் இந்தியா அழிந்து விட்டால் என்ன செய்வீர்கள் உங்கள் குடும்பத்தாருடன் எங்கே செல்வீர்கள் ஆமாம் உங்களிடம் தான் பணம் இருக்கிறதே நீங்கள் சந்திரனில் கூட குடியேறுவீர்கள் உங்களுக்கு என்ன குறை உங்களுக்கு ஓட்டு போட்டதற்கு நாங்கள் தானே மடிந்து போகவேண்டும் எல்லாவற்றிக்கும்அடித்து கொள்ளும் நீங்கள் இது போன்ற விஷயங்களிலாவது ஒற்றுமையுடன் செயல்படமாட்டீர்களா? கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் சாவு என்பது போல தீவிரவாதத்துக்கு துணை போகும் ஒவ்வொருவனுக்கும்அதனாலேயே தான் சாவு.
இதே நிலைமை நீடித்தால் இந்தியா என்றவொரு நாடும் இருக்காது இந்தியன் என்ற ஒரு இனமும் இருக்காது
Labels: விமர்சனம்
அமெரிக்காவை விட்டு ஐரோப்பாவில் இன்போசிஸ் தீவிர கவனம்
பெங்களூரு: அமெரிக்காவை நம்புவதை விட்டு, ஐரோப்பிய நாடுகளில் சாப்ட்வேர் பணிகளை செய்வதில் இந்தியாவின் முன்னணி நிறுவனம் இன்போசிஸ் தீவிரமாக உள்ளது.அமெரிக்காவில் உள்ள வங்கிகள், இன்சூரன்ஸ், நிதி மற்றும் பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்களுக்கு சாப்ட்வேர் சேவைகளை இந்தியாவில் உள்ள டி.சி.எஸ்., இன்போசிஸ், விப்ரோ, சத்யம் போன்ற சாப்ட்வேர் நிறுவனங்கள் செய்து தருகின்றன.சமீப காலமாக, அமெரிக்காவின் டாலர் கரன்சிக்கு எதிரான ரூபாய் மதிப்பு உயர்ந்து வருகிறது. இதனால், ஒரு டாலருக்கு 50 ரூபாய் மாற்று மதிப்பு கிடைத்து வந்தது போய், இப்போது 40 ரூபாய் தான் கிடைக்கிறது.
இதனால், சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு வெளிநாட்டு வருவாயில் கடும் அடி விழுந்தது. நடுத்தர, சிறிய சாப்ட்வேர் நிறுவனங்கள் சில மூடப்பட்டு விட்டன. இன்னும் சில நிறுவனங்கள் தத்தளிக்கின்றன.முன்னணி நிறுவனங்கள் மட்டும் லாபத்தில் இழப்பு நேர்ந்தாலும் சமாளித்து வருகின்றன. இழப்பை சமாளிக்க, ஊழியர்கள் சம்பளத்தில் கைவைத்துள்ளன; சலுகைகளை ரத்து செய்துள்ளன.சாப்ட்வேர் நிறுவனங்கள் பார்வை இப்போது அமெரிக்க நிறுவனங்களிடம் டாலராக வாங்குவதை விட்டு, ஐரோப்பிய நாடுகளில் பவுண்ட் கரன்சி மூலம் வருவாய் ஈட்டுவதில் திரும்பியுள்ளது.
இந்தியாவிலிருந்து செல்லும் சாப்ட்வேர் ஊழியர்களும், அமெரிக்கா போவதை விட, ஐரோப்பிய நாடுகளில் பணியாற்றுவதையே விரும்புகின்றனர். இதற்கு காரணம், ஒரு பவுண்ட் கரன்சிக்கு 80 ரூபாய் கிடைப்பது தான்.சாப்ட்வேர் நிறுவனங்களை பொறுத்தவரை, அதிக வருவாய் கிடைப்பதுடன், ஐரோப்பிய நாடுகளில் அதிக அளவில் வாய்ப்பு உள்ளது தான்.இந்த வகையில் இன்போசிஸ் நிறுவனம், அமெரிக்காவில் கணிசமான அளவில் சாப்ட்வேர் பணிகளை செய்து தந்து கொண்டிருக்கிறது.
இந்த நிறுவனத்தின் பணிகளில் 60 சதவீதம், அமெரிக்க நிறுவனங்களை சார்ந்தது.ஆனால், இப்போது இவற்றில் 40 சதவீத சேவைகளை புதுப்பிக்காமல், ஐரோப்பிய நாடுகளில் சேவை செய்ய தீவிர முயற்சி செய்து வருகிறது. "நிறுவனத்துக்கு கிடைத்த வருவாயில் அமெரிக்காவின் பங்கு 63 சதவீதம். ஐரோப்பிய நாடுகளில் இருந்து 27 சதவீத வருவாய் கிடைத்தது. இதை 40 சதவீதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஐரோப்பிய நாடுகளின் சாப்ட்வேர் சந்தையில், கூடுதலாக 20 சதவீத சேவைகளை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது' என்று இதன் தலைவர் கோபாலகிருஷ்ணன் கூறினார்.
பெங்களூர், அகமதாபாத் குண்டு வெடிப்பில் பலியானோர்க்கு அஞ்சலி
இந்த குண்டு வெடிப்பில் பலியான குடும்பத்திற்க்கு
நம் இரங்கலை தெரிவித்துக்கொள்வோம். மேலும்இது போன்ற செயல்களில் ஈடுபடும் அமைப்புகள்இதற்கு துணை போகும் நபர்கள் போன்றோரைஅரசு உடனுகுடன் தூக்கிலிட வேண்டும் அதற்கான சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் அதை விடுத்து அவர்களை விருந்தினர் போல் நடத்தும்வெட்கங்கெட்ட நிலை மாற வேண்டும்.
மத்திய அரசு பாதுகாப்பு விஷயத்தில் கோட்டை விட்டு கொண்டிருக்கிறது. பாதுகாப்பு விஷயத்தைமறந்துவிட்டு ஆட்சியை காப்பாற்ற யாருக்கு எத்தனை கோடி கொடுத்தோம் என்பதை கணக்கிட்டுக்கொண்டிருக்கிறது.
நாட்டுக்காக செயல்படவேண்டிய உளவுத்துரைஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகளுக்காகசெயல்பட்டுக்கொண்டிருக்கிறது.எதிர்கட்சி ஆளுங்கட்சியை பற்றி கூறும் விமர்சனங்களையும் குற்றசாட்டுகளையும் ஆளுங்கட்சியினருக்கு அனுப்பும் ஒரு தபால் துறையைபோல் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது
கருணை காட்டவேண்டும் யாருக்கு மனிதர்களுக்குதானே தவிர தவிர இது போன்ற மனித உரு கொண்ட மிருகங்களுக்கு அல்ல ஆனால் மத்திய அரசு இன்னும் பயங்கரவாதிகளிடம் மென்மையான போக்கையேகடைபிடித்துக்கொண்டு வருகிறது
நடாளுமன்ற தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி "அப்சல்குரு"வை தூக்கில் போடாமல் இன்னும் அவனுக்கு விருந்து வைத்துக்கொண்டுள்ளோம் இது மானக்கேடான விஷயமில்லையா?
நாம் இன்றைய சூழலுக்கு ஏற்ப சட்டத்திருத்தம் கொண்டு வராவிட்டால் இது போன்ற செயல்களில்ஈடுபடுவோரை உடனடியாக தண்டிக்க இயலாது.
இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர்க்குசிறிதளவேயினும் பயம் ஏற்ப்பட வேண்டுமெனில்நம் சட்டங்கள் கடுமையானதாக மாற்றியமைக்கப்படவேண்டும்.
தீவிரவாதசெயலுக்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் ஒன்றினைந்து செயல்படவேண்டும்இல்லையென்றால் விரைவில் அனைத்து நாடுகளும் இதற்க்கான இழப்பை சந்தித்தே ஆக வேண்டும் என்பதை மறுப்பதற்கில்லை
தீவிரவாதத்துக்கு துணைபோகும், அவர்களுக்குஉதவும் நாடுகளுக்கு கடும் நிபந்தனைகளை உலக நாடுகள் விதிக்க வேண்டும்.
இன்றைய சூழ்நிலையில் நாம் ஒன்றினைந்து செயல்பட்டாலன்றி தீவிரவாதம் எனும் கொடிய அரக்கனை அழிக்க இயலாது .
Labels: விமர்சனம்
சென்னைக்கு ரெட் அலர்ட்: எல்லைகள் 'சீல்'
தென் மாநிலத்தில் பயங்கரவாதிகளின் தாக்குதல் பட்டியலில், அமைதி பூங்காவாக விளங்கும் தமிழகம் இடம் பெற்றுள்ளது."மதவாத பயங்கரவாதிகளால் தமிழகத்திற்கு ஆபத்து அதிகரித்துள்ளதால் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும்'என, தமிழக அரசுக்கு மூன்று எச்சரிக்கை கடிதங்களை மத்திய அரசு அனுப்பியது.மாநிலத்தின் அபரிமிதமான வளர்ச்சி, தகவல் தொழில்நுட்ப பூங்காக்களால் ஏற்படுகிறது. மாநிலத்தின் வளர்ச்சியைத் தடுக்க பயங்கரவாதிகள் ஐ.டி., நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்திவருகின்றனர்.
பெங்களூரு, ஆமாதாபாத் குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து பயங்கரவாதிகளின் அடுத்த குறி சென்னையாக இருக்கலாம் என்ற எச்சரிக்கை தகவல், மத்திய உளவுத் துறையில் இருந்து தமிழக அரசுக்கு வந்துள்ளது.சென்னையில் அமெரிக்கா ஐ.டி., நிறுவனங்கள், பழைய மாமல்லபுரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரைச் சாலையில் டைடல் பார்க், டைசல் பார்க், அன்ட்டஸ், நேஷனல் டேட்டா சென்டர் உட்பட 50க்கும் மேற்பட்ட ஐ.டி., நிறுவனங்கள் உள்ளன.இவற்றில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை மாநகர போலீசார் செய்துள்ளனர்.
சென்னை அண்ணா சாலையில் ஸ்பென்சர் பிளாசா, எழும்பூரில் அல்சாமால், ராதாகிருஷ்ணன் சாலையில் சிட்டி சென்டர் போன்ற மக்கள் அதிகளவில் கூடும் வணிக வளாகங்களுக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஒவ்வொரு வணிக வளாகத்திலும் உள்ள 100க்கும் மேற்பட்ட கடைகளை மெட்டல் டிடெக்டர் மூலம் வெடிகுண்டுகள் உள்ளதா என்ற சோதனை நடந்து வருகிறது.அரசு பொது மருத்துவ மனை, கோயம்பேடு மட்டுமின்றி, வெளிநாட்டினர் தங்கும் நட்சத்திர ஓட்டல்களில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய் யப்பட்டுள்ளன.
சென்னை நகரில் முக்கிய ஓட்டல்களில் தங்கியுள்ள வெளிநாட்டினர்கள் குறித்த கணக்கெடுப்பில் உள வுத்துறை போலீசார் ஈடுபட்டுள்ளனர்.திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, மயிலாப்பூர் கபாலீஸ்வரர், மதுரை மீனாட்சி யம்மன், ஸ்ரீரங்கம் ரங்கநாதர், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் உட்பட தமிழகத்தில் உள்ள 17 முக்கியமான கோவில்களுக்கு 24 மணி நேரம் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என, மத்திய உளவுத்துறை எச்சரித்துளளது.
சென்னை சிந்தாதிரிப்பேட்டை முதல் வேளச்சேரி வரை மேம்பால ரயில் போக்குவரத்து உள்ளது. தரைக்கு மேல் செல்லும் ரயில் தண்டவாளத்தைக் கண்காணிக்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.மாநகரில் புதியதாக கட் டப்பட்டுள்ள 20 மேம்பாலங்கள் மற்றும் சாஸ்திரி பவன் உட்பட மத்திய அரசு அலுவலகங்கள், அண்ணா சாலை யில் உள்ள அமெ ரிக்க தூதரகம் உட்பட பல வெளிநாட்டு தூதரக அலுவலகங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாது காப்பு அளிக் கப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
"வேறு மாநிலங்களில் இருந்து ரயில், பஸ், விமானம், கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவ வாய்ப் புள்ளது. வாகன சோதனை தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. போலீஸ் பாது காப்பு அதிகமாக உள்ள நகர் ப்பகுதியில் பயங்கர வாதிகள் தங்குவதில்லை. நகரின் ஒதுக்குப்புறத்தில் உள்ள திருமண மண்டபங்கள், கோவில் மண்டங்களை பயன் படுத்தும் வாய்ப்புள்ளது.தமிழகம் முழுவதும் சந்தேகத்திற்கிடமான இடங்களில் நிறுத்தப்பட்டுள்ள பழைய மற்றும் புதிய சைக்கிள்களை கண்காணிக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள் ளது.
பல மணி நேரம் ஒரே இடத்தில் நிறுத்தப் பட்டிருக்கும் சைக்கிள்களை வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் அகற்றவும் உத்தரவிடப்பட்டது. சென்னையில் திருவல்லிக்கேணி, மண்ணடி, பாரிமுனை, கொடுங்கையூர், பெரம்பூர் பகுதிகளில் பயங்கரவாதிகள் பொது மக்களுடன் எளிதாக ஊடுருவ வாய்ப்புள்ள பகுதிகளாக கருதப்படுகின்றன. இந்த பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகள் போலீஸ் கண்காணிப்பில் உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
Labels: செய்திகள்
ஹிட் லிஸ்ட்டில் மீனாட்சியம்மன் கோவில்
மத்திய உளவு துறை டி.ஜி.பி., பி.சி.ஹல்தார் தமிழக போலீஸ் டி.ஜி.பி., கே.பி.ஜெயினை நேற்று முன்தினம் தொடர்பு கொண்டு, மத்திய அரசின் கவலையை வெளியிட்டுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், தமிழக முதல்வர் கருணாநிதியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இது பற்றி விவாதித்து மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்துவார்.தன்னுடைய ரகசிய "பேக்ஸ்' அறிக்கைகள் மீது தமிழகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே சென்னை, பூந்தமல்லியில், வங்கதேசத்தை சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகள் நுழைந்தது பற்றி, மாநில அரசுக்கு உளவுத் துறை தகவல் அளித்தது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் உளவுத் துறை தரும் இது போன்ற தகவல்கள் மீது போலீசார் தாமதமாக நடவடிக்கை எடுப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.பெங்களூரு மற்றும் ஐதராபாத் ஆகிய நகரங்கள் தகவல் தொழில் நுட்ப மையங்களாக உள்ளன. ஆனால், மத ரீதியிலான தாக்குதலுக்கு சென்னை நகரை தங்களது, "ஹிட் லிஸ்ட்'டில் பயங்கரவாதிகள் வைத்துள்ளனர். பெங்களூரு வெடிகுண்டு தாக்குதலைத் தொடர்ந்து தீவிர பாதுகாப்பு நடவடிக்கையை எடுக்கும்படி தமிழகத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
சீரழிக்கும் சினிமா: செயலிழந்த சென்சார் போர்டு
முதாயத்தை பாதிக்கக்கூடிய தவறான விஷயங்கள், மக்களிடம் எளிதில் சென்றடையக்கூடிய சினிமா மூலமாக பரப்பப்படக் கூடாது என்பதற்காகவே "சென்சார் போர்டு' என்ற அமைப்பு துவக்கப்பட்டது. ஆனால் தற்போது, "சென்சார் போர்டு' முற்றிலும் செயலிழந்துவிட்ட நிலையில் இருப்பதால், சமுதாயத்தில், குறிப்பாக இளைஞர்கள் மனதில் அதிகளவில் ஆபாச மற்றும் கொடூர எண்ணங்களை திரைப்படங்கள் விதைத்து வருகின்றன.ஒரு சினிமா தணிக்கைக்காக வரும்போது, மாநில சென்சார் போர்டின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அப்படத்தை பார்வையிட்டு தணிக்கை சான்றிதழ் வழங்குகின்றனர்.
அமைப்பு இருக்கிறதா?: ஒரு சினிமாவை தணிக்கை செய்வதற்கு முன், படத்தில் எப்படிப்பட்ட காட்சிகள் இடம்பெறக் கூடாது என்பதற்கு ஒரு வீடியோ, தணிக்கைக் குழு உறுப்பினர்களுக்கு போட்டுக் காட்டப்படுகிறது.அவற்றை பார்த்துவிட்டு, சினிமாவில் அத்தகைய காட்சிகள் இருந்தால், அவற்றை அனுமதிக்கக் கூடாது என்பது தான் விதிமுறை. கத்தியால் வெட்டுவது, ரத்தம் பீச்சியடிப்பது போன்ற காட்சிகளை காட்டக் கூடாது; பெண்களின் தொப்புளை ஆபாசமாக காட்டக் கூடாது; பெண்களின் மார்பகத்தை "குளோசப்'பில் காட்டக் கூடாது என்பன உள்ளிட்ட பல விதிமுறைகள் இதில் உள்ளன.ஆனால், சில ஆண்டுகளாக வெளிவரும் சினிமாக்களை பார்க்கும்போது, சென்சார் போர்டு என்று ஓர் அமைப்பு இருக்கிறதா? என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழுகின்றது.
"ஆசை' என்ற படத்தில், பிளாஸ்டிக் பையால், முகத்தை கட்டி மூச்சித் திணறச் செய்து கொலை செய்யும் காட்சி, குழந்தைக்கு கூட புரியும் வகையில் செய்முறை விளக்கத்தோடு இடம்பெற்றிருந்தது. "பட்டியல்' படத்தில் கத்தியால் குத்திவிட்டு, உடல் தப்பிக்கக் கூடாது என்பதற்காக உள்ளே மணலை எடுத்து போடும் காட்சி இடம்பெற்றிருந்தது. சமீபத்தில் திரைக்கு வந்த "தசாவதாரம்' படத்தில் சீன பெண்ணின் கழுத்தை கம்பியில் அழுத்தி அறுத்துக் கொலை செய்யும் காட்சி மிகவும் கொடூரமாக படமாக்கப்பட்டிருந்தது. இத்தகைய காட்சிகளை சென்சார் போர்டு எப்படி அனுமதித்தது என்ற கேள்வி எழுகிறது.
இவற்றை பார்க்கும் இளைஞர்கள், சிறுவர்கள் மனதில் இந்த கொடூர காட்சிகள் பதிந்துவிடுகின்றன. சிறிய சண்டைகளின்போது கூட வாய்ப்பு கிடைத்தால், இவற்றை அவர்கள் செயல்படுத்த துணிகின்றனர்.மேலும் சினிமாவில் ஆபாச காட்சிகளும், வசனங்களும் அதிகரித்து வருகின்றன. குழந்தைகளுடன் சினிமா பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சினிமாவிற்கு தணிக்கை இருக்கும் நிலையில், அந்த சினிமாவின் "ஆடியோ' கேசட்டிற்கு தணிக்கை என்பதே முற்றிலும், இல்லை. சினிமாவில் தணிக்கைக்குழுவின் ஆட்சேபத்தால் நீக்கப்படும் பாடல் வரிகள் "ஆடியோ' கேசட்டில் எவ்வித பிரச்னையும் இல்லாமல் இடம்பெறுகின்றன.
இசையால் கவரப்படும் சிறு குழந்தைகள் அந்த ஆபாச வார்த்தைகளின் அர்த்தம் தெரியாமல், பலர் முன்னிலையில், "கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா? ஓடிப்போய் கல்யாணந்தான் கட்டிக்கலாமா?' என பாடி வருகின்றன.சினிமாவில் ரஜினி "சிகரெட்' பிடிப்பதை பார்த்து அப்பழக்கத்திற்கு ஆளான இளைஞர்கள் பலர், ரஜினியே "சிகரெட் பிடிப்பது தவறு' என்று கூறினாலும் அப்பழக்கத்தைக் கைவிடுவதில்லை. சமுதாயத்தில், குறிப்பாக இளைஞர்களிடம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமை சினிமாவிற்கு உள்ளது. ஆனால், இதை உணர்ந்து செயல்படுவதாக இன்றைய திரையுலகம் இல்லை.
கிளுகிளுப்பான காட்சி : முழுக்க, முழுக்க வர்த்தக நோக்கத்துடன் மட்டுமே இன்றைய திரையுலகம் செயல்பட்டு வருகிறது.முன்பெல்லாம், தங்கள் படத்துக்கு "ஏ' சான்றிதழ் அளிக்கப்பட்டுவிடக் கூடாது என, தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் தவித்தனர். தற்போது, "தாராளமாகப் போடுங்க' எனக் கேட்டு வாங்கிக் கொள்கின்றனர். "ஏ' தான் கிடைக்கும் என உறுதியானால், மேலும் கிளுகிளுப்பான மற்றும் வன்முறையான காட்சிகளை வைத்து விடுகின்றனர்."சென்சார் போர்டு, தணிக்கை தொடர்பான விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். சினிமாவில் இடம்பெற்றுள்ள ஆட்சேபகரமான கருத்துக்கள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க "சென்சார் போர்டு' ஒரு தனி அமைப்பை உருவாக்க வேண்டும்.
இதன்மூலம், பரவலாக பொதுமக்களின் கருத்தை அறிந்து அதனடிப்படையில் சினிமா தணிக்கையை மாற்றியமைக்க வேண்டும்' என்பதே "காதல், ஆட்டோகிராப்' போன்ற நல்ல படங்களை விரும்புபவர்களின் கோரிக்கை. அவையும் வெற்றிகரமாக வசூலைக் குவித்தவை என்பதே இதற்குச் சான்று.
Labels: விமர்சனம்
இலவசக்கல்வி -----_சட்டமா? உரிமையா? ஏமாற்று வேலையா?

குழந்தைகளின் படிப்புதான் முக்கியம்! அதற்காக வீடு, காடு, கழனி என்று எதையும் விற்கத் தயாராக இருக்கும் பாசக்கார அப்பாக்கள் பலகோடியும்; படிப்புக்கார பிள்ளைகள் பலகோடியும் இருக்கும் இந்தியாவில் எழுதப்படிக்கக்கூடத் தெரியாதவர்களின் எண்ணிக்கை அதிகம்என்று ஒரு ஆய்வறிக்கை சொன்னதும் உங்களைப்போலவே நமக்கும் அதிர்ச்சி! அதுவும் கொஞ்ச நஞ்சமல்ல... `அமெரிக்காவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையைவிட இந்தியாவில் உள்ள எழுதப்படிக்கத் தெரியாதவர்களின் எண்ணிக்கை அதிகம்!' என்று TOI ஆங்கிலப் பத்திரிகை வெளியிட்ட செய்தியை அறிந்ததும் அதற்கு என்ன காரணம் என்று நம் வழியில் அலசினோம்....
`12 லட்சம் பள்ளிக்கூடங்கள், 63 லட்சம் ஆசிரியர்கள். ஒரு நாளைக்கு பள்ளிக்கூடம் செல்லும் மாணவ மாணவிகள் மட்டும் 29 கோடி. உலகத்திலேயே மிகப் பெரிய எஜுகேஷன் சிஸ்டம் இந்தியாவில் இருப்பதுதான்... என்ன இருந்து என்ன பிரயோஜனம்... இந்தியாவில் எழுதப்படிக்கத்?தெரியாதவங்க 38 கோடிப் பேர்.
இதற்கெல்லாம் காரணம் என்ன? படிப்பு விஷயத்தில் நகரத்திற்கும்-கிராமத்திற்கும் அரசு காட்டும் பாகுபாடு, சமூகத்தில் உள்ள ஆண்-பெண் வேற்றுமை. ஏழை-பணக்காரன் என்கிற ஏற்றத்தாழ்வு, சாதி சமாச்சாரங்கள்' என பலவற்றைச் சொல்கின்றனர் கல்வியாளர்கள். இதன்விளைவு, இன்று இந்தியாவில் ஆறுமுதல் இருபத்துநான்கு வயதிற்குள் இருக்கும் 46 கோடிப் பேரில் 17 கோடிப் பேர் பள்ளிக்கூடங்கள் பக்கமே போக முடியாத நிலைமையில் உள்ளனராம்!
ஒட்டுமொத்த இந்தியாவோட நிலவரம் இப்படி என்றால், நம்ம தமிழ்நாட்டோட தலைவிதி எப்படி? `என்னதான் சாஃப்ட்வேர் சாம்ராஜ்யமாக இருந்தாலும் மூன்றாம் வகுப்பில் இருந்து ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களை எடுத்துக் கொண்டால் அவர்களில் தாய்மொழியில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வெறும் 49 சதவிகிதம்தான். ஆனால் மஹாராஷ்டிராவில் இதே வகுப்புகளில் தாய்மொழியில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் 85 சதவிகிதம்! என்கிறது ஓர் ஆய்வு. தொடக்கக் கல்வியில் தமிழ்நாட்டில் ஏன் இப்படியொரு தொய்வு?
`தொடக்கக்கல்வியை மேம்படுத்த போடப்பட்ட சட்டங்கள் அரசால் சரிவர பின்பற்றப்படாததும். அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லாததும் என்கிறது ஒரு தன்னார்வ அமைப்பு. இதற்கு ஆதாரம் அண்மையில் ‘VOICEஎன்கிற கன்ஸ்யூமர் கேர் கவுன்சில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசுக்கு எதிராக தொடர்ந்திருக்கும் ஒரு பொது நல வழக்கு...
`2002-ம்?ஆண்டு 14வயது வரை அனைவருக்கும் இலவசக் கல்வி என்பதை அரசியல் சட்டமாக்கினர். ஆனால் அது முறையாகப் பின்பற்றப்படவில்லை. அந்த சட்டத்தின்படி அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என எதுவுமே 14 வயதுக்குட்பட்ட மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது!
ஆனால், இன்று பல பள்ளிகளில் தொடக்கக் கல்விக்கே 3000 முதல் 15,000வரை கட்டணம் வசூலிக்கிறார்கள். 15000 முதல் 1 லட்சம் வரை டொனேஷன் வாங்குகிறார்கள்... அரசு இதை கண்டுகொள்வதில்லை. எனவே நீதிமன்றம் இதில் தலையிட வேண்டும்!' என்பதே அந்த வழக்கு... நீதிமன்றமும் அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது...
இப்படி சட்டங்கள் காகிதத்தோடு மட்டுமே இருந்தால் எழுத்தறிவும் படிப்பறிவும் எங்கிருந்து வரும்?
மாநில அரசின் நிலைமை இதுவென்றால் மத்திய அரசோ கல்விக்காக நாட்டின் ஒட்டுமொத்த வருவாயில் (ஜி.டி.பி.யில்) 3.6 சதவிகிதத்தை மட்டுமே ஒதுக்குகிறது.இப்படியிருந்தால் எழுதப்படிக்கத் தெரியாதவர்களின் எண்ணிக்கை உயராதா, என்ன?
இந்தக் குறைகளை நிவர்த்தி செய்யாமல் `தமிழ்நாட்டில் 333 பொறியியல் கல்லூரிகள்' என்று மார்தட்டிக் கொள் வதில் என்ன லாபம்? ஒட்டுமொத்த இந்தியாவில் பள்ளியில் சேர்பவர்களில் பத்து சதவிகிதம்தான் கல்லூரிக்குள் காலடி எடுத்து வைக்கிறார்கள்.ஆனால் இங்கு கல்லூரிகள் புதிது புதிதாக முளைக்கின்றன, பள்ளிகள் காணாமல் போகின்றன... இருக்கும் பள்ளியிலும், `வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருக்கும் குழந்தைகளே லஞ்சம் கொடுத்துதான் சேரவேண்டியிருக்கிறது. பள்ளிகளில் சேரவும், டி.சி. வாங்கவும் இந்த ஏழைப் பெற்றோர்கள் கொடுத்த லஞ்சம் சுமார் பன்னிரண்டு கோடி ரூபாய்க்குமேல்' என்று ஒரு அமைப்பு சர்வே செய்து, கல்வியில் இந்தியாவின் அவலத்தை தோலுரித்துக் காட்டியுள்ளது.
நன்றி குமுதம்
Labels: விமர்சனம்
மாறாத காலனிய அடிமை மனப்பாங்கு
இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த பன்னாட்டு அணு சக்தி முகமையுடன் (IAEA) செய்யப்படவுள்ள
கண்காணிப்பு ஒப்பந்த வரைவை மக்களின் பார்வைக்கு வைக்கத் தயங்கிய மத்திய அரசின் நடவடிக்கை காலனிய அடிமை மனப்பாங்கையே பிரதிபலிப்பதாக நமது மூத்த விஞ்ஞானி பி.கே. ஐயங்கர் வருத்தத்துடன் கூறியுள்ளது கருத்தில் எடுத்துக் கொண்டு யோசிக்கத்தக்கது.பன்னாட்டு அணு சக்தி முகமையுடன் மத்திய அரசு செய்யவுள்ள அந்த ஒப்பந்த வரைவின் விவரங்களை வெளியிடுமாறு இடதுசாரிகளும், அதற்கு முன்னர் நமது நாட்டின் மூத்த விஞ்ஞானிகளும் கோரியிருந்தனர். கண்காணிப்பு ஒப்பந்த வரைவு ஒரு ரகசிய ஆவணம் (privileged document) என்றும் அதனை பொதுவில் வெளியிட முடியாது என்றும் அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.அது ரகசியமான ஆவணம் அல்ல, அதனை பொதுவில் வெளியிட்டு தனது நாட்டு மக்களுக்கு இந்திய அரசு தெரிவிப்பதில் எந்தத் தடையும் இல்லை என்று பன்னாட்டு அணு சக்தி முகமை அதிகாரிகள் தெளிவுபடுத்தினர்.
பன்னாட்டு அணு சக்தி முகமையுடன் அமெரிக்கா பேசிவரும் கூடுதல் கண்காணிப்பு ஒப்பந்த வரைவு இணையத் தளத்தில் வெளியிடப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய மார்க்ஸிஸ்ட் கட்சி, அமெரிக்காவிற்கென்று ஒரு நடைமுறையும், இந்தியாவிற்கென்று வேறுபட்ட நடைமுறையும் உள்ளதாவென வினவியிருந்தது.இந்த நிலையில், இந்தியா ஒப்புதலுக்கு அனுப்பிய ஒப்பந்த வரைவு இணையத் தளத்தில் வெளியிடப்பட்டதும், அதனை மத்திய அரசின் அயலுறவு அமைச்சகம் முழுமையாக வெளியிட்டது.இது ரகசியமான ஆவணம் அல்ல என்பதும், அதனை வெளியிடத் தடையேதும் இல்லை என்ற விவரம் தெளிவுபடுத்தப்பட்டதும், சற்றும் வெட்கமின்றி அந்த வரைவு ஆவணத்தை வெளியிட்டது மத்திய அரசு.இதைத்தான், “வெள்ளைய காலனி ஆட்சியிடமிருந்து விடுதலைப் பெற்று 60 ஆண்டுக் காலம் கடந்துவிட்டப் பின்னரும், அன்று நம்மிடையே ஆழ ஊடுருவி ஒட்டிக்கொண்டிருந்த காலனி அடிமை மனப்பாங்கு இன்றளவும் மாறாததை வெளிப்படுத்துகிறது” என்று இந்திய அணு சக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவர் பி.கே. ஐயங்கர் வருத்தத்துடன் கூறியிருந்தார்.200 ஆண்டுக் காலம் நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் நாம் எப்படி நடத்தப்பட்டோமோ அதே முறையில்தான் விடுதலைப் பெற்று 60 ஆண்டுகள் ஆகியும் நமது நாட்டு மக்களை, அவர்களால் வாக்களிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் நடத்துகின்றன என்பதையே விஞ்ஞானி ஐயங்கரின் கருத்துகள் வெளிப்படுத்துகின்றன.
இதே இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கக் கூடிய அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட்டும், காங்கிரஸூம் அதனை மிக விலாவாரியாக விவாதித்தன. ஆனால், நமது
நாடாளுமன்ற அவைகளில் அது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டபோதெல்லாம் மேம்போக்காகத்தான் பதிலளிக்கப்பட்டதே தவிர, நேரான பதில் ஒருபோதும் தரப்படவில்லை. இதுதான் இரண்டு ஜனநாயக நாடுகளுக்கும் உள்ள வேறுபாடு. அடிமைத் தளையில் இருந்து விடுபட்டாலும் அந்த மனப்பாங்கிலிருந்து நாம் (அதாவது நமது அரசியல்வாதிகள்) விடுபடவில்லை. விடுதலை பெற்றோம், ஆனால் ஜனநாயகமயமாகவில்லை. அதற்குள் உலகமயமாக்கலில் புகுந்துகொண்டு, “இன்னும் 20 ஆண்டுகளில் பொருளாதார வல்லரசாகப் போகிறோம்” என்று முழங்கிக்கொண்டிருக்கின்றோம்.அந்த ஆவணம் வெளியிடப்பட்டதால்தானே, எரிபொருள் தொடர்ந்து வழங்கப்படுவது உள்ளிட்ட பிரதமர் கூறிய பல உறுதிமொழிகள் பெறப்படவில்லை என்பது வெளிபட்டது. இதனை மறைக்கத்தானே அதனை ‘ரகசிய ஆவணம்’ என்று கதை கூறியது.
நாட்டின் மின் தேவை நிமித்தமாக செய்யப்படும் ஒரு ஒப்பந்தத்தின் விவரங்களை வெளியிடுவதிலேயே இவ்வளவு தயக்கம் காட்டும் அரசுகள், நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்களில் நமது நாட்டின் நலனை காப்பாற்றுவார்கள் என்று எப்படி நம்புவது?நமது மாநில அரசுகள் கூட, ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு அன்னிய நிறுவனத்திடம் (அவர்கள் இங்கு வந்து முதலீடு செய்து தங்கள் நிறுவனங்களைத் தொடங்க) புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கையெழுத்திடுகின்றன. ஆனால் அவற்றின் விவரங்களை மக்களுக்கு வெளியிடுவதில்லை! இதெல்லாம் அந்த நாள் காலனிய ஆட்சியின் பிரதிபலிப்புகள்தான். சுதந்திரம் பெற்றோமே தவிர நமது மனப்பான்மையில் எந்த மாற்றமும் பெரிதாக ஏற்படவில்லை. அதனால்தான் பல நேரங்களில் கடுமையாகப் பணியாற்றி நமது விஞ்ஞானிகள் சாதித்த பல விடயங்களை புரிந்துகொள்ளாமலேயே சிறுமைபடுத்துகிறோம். அப்படிப்பட்ட மனப்பான்மை நம்மிடம் இருந்ததால்தான் இந்த ஒப்பந்தம் தொடர்பாக நமது விஞ்ஞானிகள் எழுப்பிய கேள்களுக்கு நமது அரசு பதில் கூறாமல் புறக்கணித்தபோதுகூட பெரிதாக கூக்குரல் ஏதும் எழவில்லை.அணு ஆயுத உருவாக்கத்திலும், அணு சக்தி தொழில் நுட்ப மேம்பாட்டிலும் நம்மை பெருமைப்படும்
உயரத்திற்கு கொண்டு சென்ற விஞ்ஞானிகளை - அவர்களின் எண்ணங்களை அறியாமல், இதனை ஒரு அரசியல் ரீதியான ஒப்பந்தமாக கருதி - புறக்கணித்ததன் விளைவே இன்று மத்திய அரசை நம்பிக்கை வாக்கெடுப்புக் கோரும் நிலைக்குத் தள்ளியுள்ளது.அரசியல்வாதிகளை விட்டுத்தள்ளுவோம், நாம் முதலில் அந்த காலனிய அடிமை மனப்பாங்கிலிருந்து விடுபடுவோம். உண்மையான ஜனநாயகத்தை நோக்கி நடைபோடுவோம்
நன்றி வெப்உலகம்
Labels: அரசியல்
அரசு விளம்பரங்கள் கேட்டு தமிழ்ஓசை நாளேடு உயர் நீதிமன்றத்தில் வழக்கு
அரசு விளம்பரங்கள் வழங்க அரசுக்கு உத்தரவிடக்கோரி அதன் வெளியீட்டாளர்
ஜி.கே.மணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்
இனி நமக்கு நல்ல காலம்தான்..!
வெ. பாலசரஸ்வதி
ஒரு காக்கா வெகுதூரம் பறந்து போயிட்டேயிருந்தது.. வழியில அதுக்கு தண்ணீர் தாகம் எடுத்துச்சு… ஆறு, ஓடை, தேங்கியிருக்கிற தண்ணி என்று எதுவுமே கண்ல படல.. சோர்வா மரத்துமேல வந்து உக்காந்துச்சு. அந்த மரத்தடில ஒரு பானை இருந்துச்சு, காக்கா ஆர்வமா போயி பானையில என்ன இருக்குதுன்னு போய் பார்த்துச்சு… அதுல கொஞ்சுண்டு தண்ணி இருந்துச்சு, அதோட இருக்கிற கற்களை எல்லாம் ஒவ்வொன்னா.. எடுத்து போட்டு கிட்டே இருந்துச்சு.. தண்ணி மேல வந்தது, காக்கா தன் தாகத்த தீர்த்துக்குச்சு…
இது காக்கா கதைதாங்க ஆன நமக்காக சொல்லப்பட்ட கதை. இது தெரிஞ்ச கதைதாங்க. ஆனா எத்தனை முறை படிச்சாலும் நமக்குள்ள ஒரு நம்பிக்கைய ஏற்படுத்தக்கூடிய கதை… பானையில இவ்வளவு கீழே தண்ணியிருக்குதே இத நம்மாள குடிக்க முடியாதுன்னு காக்கா நினைக்கில… இந்தத் தண்ணிய நம்மால மேல கொண்டுவர முடியும்.. நம்ம தாகத்த தீர்த்துக் கொள்ள முடியும்னு நினைச்சது. முடிஞ்சுது. நம்மால முடியும்னு நம்ம நினைக்கனும். அப்பதான். வெற்றி பெற முடியும்.
நம்ம ஒவ்வொர்த்த கிட்டேயும் பானையில கொஞ்சமா இருந்த தண்ணீர் போலத்தான் திறமையிருக்கு. அது கற்களாலே மேல வந்தது போல நம்ம முயற்சியால திறமை வளர்க்கப்படும். திறமை வளர்ந்த பிறகு கட்டாயம் அதை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் வந்து சேரும். நமக்கு நேரம் நல்லாயிருக்கு. அப்படின்னு சொல்றதெல்லாம் நம்ம திறமை வெளிப்படும் காலம்னு சொல்ல்லாம். நேரம் சரியில்லன்னு சொல்றது எதனால….
ஒரு படி மேல ஏறும்போது கீழே விழுந்தோமானால் இது அந்த வழியில செல்லக்கூடாது. வேறு வழி பார்ப்போம் என்ற படிப்பை நாம் தெரிந்து கொள்கிறோம். சறுக்கி விழும்போதுதான் சரியான பாதை நமக்குத் தெரியும். என் இலக்கினை என்னால் அடைய முடியும் என்ற நம்பிக்கை இருந்தாலே போதும்.
ஒரு புழு இலையத் தேடி திங்கறதுக்கு உடம்ப நெழுச்சு நெழுச்சு நடந்து போகுது அது உடம்பு வலிக்குது. அதனால் நாம பறக்கணும்னு ஆசைப்படுது.. நம்மாலயும் பறக்க முடியும்னு நம்பிக்கை கொண்டதால, அது பட்டாம்பூச்சியாக முடிந்தது. பறக்கணும்னு நினைச்சது. இலைய வேகவேகமா தின்னுது, வேகவேகமாக கூடு கட்டுது உடம்ப சுருக்கி கூட்டுக்குள்ள உக்காந்து இறக்கைகளை உருவாக்கிக் கொள்ளுது. உடனே பறந்து பட்டாம் பூச்சியா வெளில வந்து என்னாலயும் பறக்க முடியுதுன்று ஒவ்வொரு மலர்களிடமும் போய் சொல்லுது. ஒரு நொடி கூட நிக்காம பறந்து கிட்டே இருக்குது. புழு கூட்டுக்குள்ளே இறக்கயை உருவாக்கறதுக்கு காலத்த அதுக்கு நேரம் சரியில்ல.. அப்படின்னு சொல்ல முடியுமா.. கூட்டுக்குள்ள இருந்து வெளியில வந்து பறந்த காலத்த அதுக்கு நல்ல காலம்னு சொல்ல்லாமா…?
சிறகுகள் இல்லாமலே எண்ணச் சிறகுகளைக் கொண்டு நம்மால எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் போக முடியும்.. அப்படிப்பட்ட நமக்கு முடியும் என்கிற இலட்சியத்தை முடிவு செய்து சாதிக்க வேண்டும் என்று நினைத்தாலே நம்மால நிச்சம் முடியும். இடைப்படுகின்ற தடைகளையோ.. துன்பங்களையோ ஏற்றுக் கொண்டு சோம்பல் மட்டும் இல்லாம உயர்வை மட்டும் நினைச்சோம்னா.. இனி நமக்கு எல்லாமே நல்ல காலம்தாங்க..
Labels: தன்னம்பிக்கை
புதிய பாதை
புதிய பாதை
தே.சௌந்தர்ராஜன்
BT பருத்தி உருவான விதம்
சமீக காலமாக அனைத்து பத்திரிகைகள், தொலைக்காட்சி ஆகியவற்றில் பேசப்படுவது, மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் இந்தியாவுக்கு தேவையா?
தற்போது பெரும்பாலான பயிரினங்கள் மரபணு மாற்றம் செய்யப்பட்ட ரகங்கள் பல நாடுகளில் உற்பத்தி செய்து கொண்டு உள்ளார்கள். இவற்றில் அமெரிக்கா முன்னணியில் இருந்து வருகிறது.
BT பருத்தியில் ஆம்பித்து, BT மக்காச்சோளம், BT நெல், சோயா மொச்சை, கத்தரி, வெண்டை பன்ற காய்கறிகளிலும் மரபணு மாற்றம் செய்யப்பட பயிர்கள் அனுமதிக்கப்பட்டு சோதனை முறையிலும், விவசாயிகள் வயலிலும் எப்படி பயிரிடப்பட்டு வருகிறது.
இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களில் பருத்தி மட்டும விவசாயிகள் பயிரிட அனுமதிக்கப்பட்டுள்ளது.
இன்று BT பருத்தி, மரபணு மாற்றப்பட்ட பயிர்களில் ஒரு வெற்றிகரமான முயற்சி.
BT பருத்தி எப்படி இந்தியாவில் விவசாயிகள் மத்தியில் பிரபலம் ஆனது?
உலகில் பருத்தி பயிரிடும் பரப்பளவில் இந்தியாதான் முதலிடம். ஆனால் உலக உற்பத்தியில் இந்தியா 16% சதவிகிதம் தான் பங்களிக்கிறது. பருத்தியில் தாக்கும் 16 முக்கிய பூச்சிகளில், பருத்தி காய்ப்புழழு மிகவும் அதிக சேதத்தை ஏற்படுத்துகிறது. இதற்காக பலவகையான பூச்சிகொல்லிகளைப் பயன்படுத்தியும் இந்த காய்ப்புழுவை சமாளிக்க முடியாமல், நிறைய விவசாயிகள் பருத்தி பயிரிடுவதை விட்டுவிட்டு வேறு பயிர்களுக்கு சென்றுவிட்டனர். இதனால் பருத்தி பயிரிடும் பரப்பளவு மற்றும் அதன் விளைச்சல் வெகுவாக குறைந்தது.
பூச்சி எதிர்ப்புத் தன்மையை உடைய ரகங்கள், தாய் ரகங்களான கருவுறுவதில் கிடையாது என்ற நிலைமையில், விஞ்ஞானிகள் இந்த காய்புழுவை கட்டுப்படுத்த மற்ற உயிரினத்தில் உள்ள நச்சுகளை தேடினர். இதனால் கிடைத்தது BT நச்சு - பேசிலஸ் துரிஞ்சியன்சிஸ் என்ற பாக்டீரியாவில் உள்ள CM புரதம்
BT புரதம் காய் புழுவின் வயிற்றில் உள்ள அதிக காரத்தன்மையில் கரைந்து உடனே நச்சுத் தன்மையை உண்டாக்குகிறது. BT நச்சு வயிற்றில் உள்ள திசுக்களில் இணைந்து அதை சேதமடைய செய்கிறது.
1.BT நச்சு உயிர்கள்2. BT நச்சு புழுவின் வயிற்றில் ஒட்டி கொல்லுதல்3. நச்சு புழுவின் வயிற்றில் ஓட்டை உண்டாக்குதல்4. BT நச்சு புழு பூச்சி உடலில் செல்வதால் இறந்து விடுகிறது.
இதனால் காய்புழு, பருத்தி காயில் உள்ள BT நச்சு சாப்பிட்ட உடன் அதன் வயிற்றில் உள்ள செல்கள் சேதமடைந்து இறக்க நேரிடுகிறது.
BT பருத்தி எப்படி இந்தியாவில் நுழைந்தது?
1945ம் ஆண்டு, மகிகோ நிறுவனம் 100 கிராம் BT பருத்தியை (காக்கர் 312 ரகம்) மான்சான்டோ என்ற அமெரிக்க நிறுவனத்திடம் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்தது.
இந்த பருத்தியை இந்தியாவில் அனுமதிக்க கூடாது என்று பல போராட்டங்கள் நடந்தது . ஆனால் இவற்றின் பிற்கால நன்மையைக் கருதி இந்திய அரசு பயிரிட அனுமதி அளித்தது.
இந்த காகர் 312 BT பருத்தியில் உள்ள காய் புழு கொல்லும் தன்மை கொண்ட CRY உள்ள புரதம் உண்டாக்கும் மரபுக்கூற்றை இந்தியாவில் உள்ள பிரபலமான மகிகோ பருத்தி இரகங்களுக்கு மாற்றம் செய்து புதிய இரகங்களை விவசாயிகளுக்கு விற்பனை செய்தது.
முதல் சில ஆண்டுகளில் அந்த அளவுக்கு BT பருத்தி விவசாயிகள் மத்தியில் பிரபலமடையவில்லை.
காரணம்:
1. BT நச்சுத்தன்மை - போதிய அளவு இல்லாததால் காய்புழு இறப்பு அதிக அளவில் இல்லை.
2. BT பருத்தி ரகங்கள் மற்ற பருத்தி ரகங்களைக் காட்டிலும் விளைச்சல் மற்றும் பருத்தி நூல் தன்மைகள் மேற்பட்டதாக இல்லை.
3. ஆனால் தற்போது உள்ள தனியார் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள 62க்கும் BT பருத்திகள் காய்புழுவை முழுவதுமாக கொல்லும் தன்மையுடன் அதிக விளைச்சல், நல்ல பருத்தி நூல் ஆகியவைகளை கொண்டதாக இருப்பதால், தற்போது விவசாயிகளால் பயிரிடப்படுகின்ற பெரும்பாலான பருத்திகள், BT பருத்தி ரகங்களாகவே இருக்கிறது.
மேலும் தனியார் நிறுவனங்களான ராசி பருத்தி விதைகள், மான்காண்டோ, மகிக்கோ, JK அக்ரி, ஆங்குர் விதை நிறுவனங்கள் தங்களிடம் உள்ள சிறந்த பருத்தி வீரிய ஒட்டுகளை BT வீரிய ஒட்டு ரகங்களாக மாற்றி, புதிய வீரிய ஒட்டு ரகங்களாக வெளிவிட்டதால், தற்போது பருத்தியில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை விவசாயிகள் பெருமளவில் பயிரிடுகிறார்கள்.
Labels: நாட்டு நடப்பு
சதாமின் கார்ரூ.1.5 கோடிக்கு விற்பனை
சதாம் உசேன் பயன்படுத்திய ரோல்ஸ் ராய்ஸ் கார் ரூ.1.5 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.தூக்கில் போடப்பட்ட, ஈராக் அதிபர் சதாம் உசேன் பயன்படுத்திய கார்களில், கருஞ்சிவப்பு நிற ரோல்ஸ் ராய்ஸ் ஸ்போர்ட்ஸ் காரும் ஒன்று. இது விற்பனைக்கு அறிவிக்கப்பட்டது. இந்த காரின் இருக்கைகள், பழுப்பு நிற தோலில், சிவப்பு நிற பைப்புடன் வடிவமைக்கப் பட்டுள்ளது. இந்த கார் விற்பனைக்கு அறிவிக்கப்பட்டது.
பிரிட்டனைச் சேர்ந்த, "ஆட்டோகான்டினென்டல்' நிறுவனத்தின் ஸ்டீவன் பிரவுன், இந்த காரை ரூ.1.5 கோடிக்கு வாங்கியுள்ளார். இந்த காரின் ஆவணங்கள், சதாம் உசேனின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த கார், பாக்தாத்தில் இருந்து ஒரு மாதத்தில் லண்டனுக்கு கொண்டுவரப் பட உள்ளது.
Labels: செய்திகள்
மருத்துவர்களை தாக்கினால் 10 ஆண்டு சிறை தமிழக அரசு அறிவிப்பு
மருத்துவர்களை தாக்கினால் 3 ஆண்டு முதல் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் புதிய சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.சென்னை அருகே உள்ள பொன்னேரி அரசு மருத்துவமனை டாக்டர் கடந்த மாதம் தாக்கப்பட்டார். இதையொட்டி தமிழ்நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மருத்துவரை தாக்கிய வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்கவும், மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.இதைத் தொடர்ந்து தமிழக அரசு அவசர சட்டம் ஒன்றை கொண்டு வந்தது. இந்த சட்டத்தை ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா கடந்த வெள்ளிக்கிழமை கொண்டு வந்தார்.அதன் அடிப்படையில் மருத்துவரையோ, மருத்துவமனை ஊழியர்களையோ தாக்கினாலும், மருத்துவமனையை சேதப்படுத்தினாலும் 3 ஆண்டு முதல் 10 ஆண்டு வரை சிறைத் தண்டனை இச்சட்டத்தின் மூலம் கிடைக்கும்.முதலமைச்சர் கருணாநிதியிடம் கலந்து ஆலோசித்த பிறகு மருத்துவர்களை பாதுகாக்கும் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தகவல் சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் நீக்கம்: வைகோ அறிவிப்பு
கட்சியின் முடிவுக்கு விரோதமாக செயல்பட்ட எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் கட்சியின் அனைத்து பொறுப்பில் இருந்தும் நீக்கப்படுகிறார்கள்'' என்று ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ அறிவித்துள்ளார்.
நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில்மத்திய அரசுக்கு ஆதரவாக இவர்கள் வாக்களித்ததால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு மற்றும் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகிறார்கள் என்று வைகோ அறிவித்துள்ளார்.
Labels: அரசியல்
இனி கலைஞரை திட்டினால்! விஜயகாந்தை வெளுத்து வாங்கிய -நடிகர் ரித்திஸ்
கடந்த பதின்மூன்றாம் தேதி தே.மு.தி.க. சார்பில் ராமேஸ்வரத்தில் நடந்த மீனவர்களுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தில் `ஆளும் தி.மு.க.வினரை சுட்டுக் கொல்லணும்' என்று விஜயகாந்த் பேசிய பேச்சு தமிழக அரசியலில் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது.
விஜயகாந்துக்கு சரியான பதிலடி கொடுக்க தி.மு.க.வினர் காத்துக் கொண்டிருக்க, அதற்குத் தோதாக வந்து வாய்த்தது, தமிழக மீனவர்கள் சிங்கள ராணுவத்தினரால் சுடப்படுவதைக் கண்டித்து கலைஞர் அறிவித்த உண்ணாவிரதப் போராட்டம்.
தமிழகத்தின் கடலோரப் பகுதிகளிலும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கடந்த பத்தொன்பதாம் தேதி நடந்த இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்ட அன்பழகன், ஆற்காட்டார் உள்பட பல தி.மு.க. தலைவர்களும் விஜயகாந்தை ஒரு பிடிபிடித்து விட்டுத்தான் சிங்கள கடற்படை விவகாரத்தையே பேசினார்கள்.
தமிழகம் முழுக்கவே இப்படி என்றால், விஜயகாந்த் வில்லங்கத்தை விதைத்துச் சென்ற ராமேஸ்வரம் நிலவரத்தைப் பற்றிக் கேட்கவா வேண்டும்? விஜயகாந்த்துக்கு எதிராக அனலே பறந்தது.
முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்பதைப் போல் நடிகர் விஜயகாந்தின் பேச்சுக்கு ஒரு நடிகரைக் கொண்டே பதிலடி கொடுத்து புளகாங்கிதப்பட்டுக் கொண்டது ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க.
அமைச்சர் சுப.தங்கவேலனின் பேரனும் ராமநாதபுரத்தைச் சேர்ந்தவருமான முகவை குமார் என்கிற நடிகர் ரித்தீஸை விஜயகாந்துக்கு எதிராகக் கொம்பு சீவி விட, உண்ணாவிரதப் பந்தலில் விஜயகாந்தை விளாசித் தள்ளிவிட்டார் அவர்.
`வாடா, போடா, அடேய்' என்று விஜயகாந்தை குறிப்பிட்டு ரித்தீஸ் பேசிய பத்து நிமிடப் பேச்சுக்கு கூட்டத்தில் விசில் பறந்தது. ஒருகட்டத்தில் தன் பேரனின் பேச்சைக் கேட்டு சுப. தங்கவேலனே கைதட்டி அவரை உற்சாகப்படுத்தினார்.
அப்படி என்னதான் பேசினார் ரித்தீஸ்?
``டேய், யாரு மாவட்டத்துல வந்து யாரைத் திட்டுறே... என் தலைவரையா திட்டுறே... என் தாத்தாவையா திட்டுறே... வயசுக்கு ஒரு மரியாதை தர வேணாம்? கலைஞர் எவ்வளவு பெரிய தலைவர். அவர் வயது என்ன? அவர் அரசியல் அனுபவம் என்ன? அவரோட கால் தூசுக்குப் பெறுவியா நீ? வயசுக்கு மரியாதை தரணும்னு முட்டாளுக்குக் கூட தெரியுமேடா. இவ்வளவு வயசாகி உனக்கு ஏன் அது தெரியாமல் போச்சு?'' என்று ஆரம்பித்து, ``இனிமே நீ ராமநாதபுரம் மாவட்டத்துக்குள்ளே நுழைஞ்சுடுவே? நுழைஞ்சு பாருடா. நாங்க யாருன்னு உனக்குக் காட்டறோம். இனிமேல் கலைஞரைத் திட்டினால் உனக்குக் கருமாதிதாண்டா. இனிமே இந்த மாவட்டத்துக்குள்ளே எங்கேயும் நீ நுழையக்கூடாது. அப்படி மீறி நுழைஞ்சா நடக்குறதே வேற'' என்று அனல் கக்க ரித்தீஸ் பேசி முடித்ததும் ஏக விசில்.
ஒன்றியத் தலைவர் ஒருவர் பேசும் போது, ``டேய், விஜயகாந்த். முதலமைச்சர் கனவா கண்டுக்கிட்டு இருக்கே நீ. இதோ பாரு. இந்த தமிழ்நாட்டுக்கு அடுத்த முதலமைச்சரா நமீதா வந்தாலும் வருமே தவிர. நீ எந்தக் காலத்திலும் வர முடியாது!'' என்று கூற, அதற்கும் ஏகப்பட்ட வரவேற்பு.
உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து வைக்க வந்த மு.க. ஸ்டாலின், விஜயகாந்தை விளாசுவார் என்று ஒட்டுமொத்த கூட்டமும் ஏகப்பட்ட ஆர்வத்தோடு காத்திருக்க. அவரோ தனக்கு உடல்நலமில்லாத காரணத்தைச் சொல்லிவிட்டு, `கச்சத்தீவை மீட்பது ஒன்றே பிரச்னைக்குத் தீர்வு' என்று பேசி ஐந்து நிமிடத்திலேயே தன் உரையை முடித்துக் கொண்டார்.
அன்றைய ராமேஸ்வரம் உண்ணாவிரதப் போராட்டத்தில் விஜயகாந்துக்கு ஆவேசமாகப் பதிலடி கொடுத்ததன் மூலம் ரித்தீஸ்தான் அன்றைக்கு ரியல் ஹீரோவாகி விட்டார்.
நாம் அவரைத் தொடர்புகொண்டு பேசினோம்.
``விஜயகாந்துக்கு என்னங்க அரசியல் பின்பலம் இருக்கு? மக்களுக்காகப் போராட்டம் நடத்தி ஒரு தடவையாவது ஜெயிலுக்குப் போயிருக்காரா? அவருக்கு என்ன தகுதி இருக்கு, என் தலைவனையும் (கலைஞர்) என் தாத்தாவையும் (சுப. தங்கவேலன்) விமர்சனம் பண்ண? அரசியல் விமர்சனம் என்பது நாகரிகமா, ஆரோக்கியமா இருக்கணும். உடனே நீங்க, ராமேஸ்வரம் உண்ணாவிரதப் பந்தல்ல நான் விஜயகாந்தைப் பத்தி பேசினது மட்டும் நாகரிகமானதான்னு கேட்கலாம். விஜயகாந்த் மாதிரி ஆட்களுக்கு அப்படிப் பேசினாதான் புத்தியில் ஏறும். தவிர, பொதுக்கூட்டத்துல ஒன்றைப் பேசிட்டு அதை மறுநாளே மறுத்துப் பேசுற கோழை நான் கிடையாது. நான் ராமநாதபுரத்து மறவன். ஒரு நாக்கு... ஒரு சொல்தான் எனக்கு. அவரு பேசின பேச்சுக்கு மன்னிப்புக் கேட்டே ஆகணும். இல்லாட்டி இந்த மாவட்டத்துக்குள்ளே அவரு நுழையவே முடியாது!'' என்று வெடித்தவரிடம் நாம்,
`` `கலைஞரை இனி திட்டினா, விஜயகாந்துக்கு கருமாதிதான்' என்று நீங்கள் பேசியது மிகமிக அநாகரிகமில்லையா?'' என்று கேட்டோம். ``அவரு மட்டும் `தி.மு.க. காரர்களை சுட்டுத் தள்ளணும். கொல்லணும்னு பேசலாம், நான் அப்படி பேசக் கூடாதா? இதோ பாருங்க சார், கலைஞரோட அரசியல் அனுபவமும், வயதும் எவ்வளவு பெரிய விஷயம்? அவரோட நிழல் தன் மேலே படாதான்னு தொண்டர்கள் மட்டும் இல்ல, படிச்சவங்களே ஏங்கிக்கிட்டு இருக்காங்க. அவரைப் போய் `நீ...' `வா...' `போ'...ன்னு மரியாதை இல்லாம பேசுனா பொறுத்துக்கிட்டு இருக்க முடியுமா? ஒரு தி.மு.க காரனா மட்டுமில்லே, என்னோட தாத்தா (சுப. தங்கவேலன்) என் ரத்தத்துல சின்ன வயசுலேயே ஊட்டி வளர்த்த திராவிடக் கழக உணர்வோடயும் சொல்றேன். கலைஞரைத் திட்டுறதை விஜயகாந்த் இனிமே அடியோட நிறுத்திக்கணும். இல்லேன்னா, அவருக்கு கருமாதிதான். உங்ககிட்டே சொன்ன இதே கருத்தை எத்தனை ஆயிரம் பேர் முன்னிலையிலும் நான் மறுபடி மறுபடி சொல்லுவேன். சொன்னதைச் சொல்லலேன்னு அந்தர்பல்டி அடிக்க நான் ஒண்ணும் கோழை இல்லே!'' என்றார் முகவை குமார் என்ற ரித்தீஸ்.
ஆக மொத்தத்தில்,அரசியலில் நாகரிகம் என்பது கவலைக்குரியதாகத்தான் இருக்கும் போலிருக்கிறது!
-நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்
Labels: அரசியல்
கம்யூ., வியூகம் 'டமால்!' நூலிழையில் தப்பியது மத்திய அரசு! ஆதரவு : 275 எதிர்ப்பு: 256
புதுடில்லி:பார்லிமென்டில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐ.மு., கூட்டணி அரசு வெற்றி பெற்றது. அரசுக்கு ஆதரவாக 275 ஓட்டுகளும், எதிராக 256 ஓட்டுகளும் விழுந்தன. இதன் மூலம், கடைசி நிமிடத்தில் நிகழ்ந்த பரபரப்பான திருப்பங்களுக்கு பின், நூலிழையில் மத்திய அரசு தப்பியது. அரசை கவிழ்த்து, அணுசக்தி ஒப்பந்தத்தை சீர்குலைப்பதோடு, மாயாவதியை பிரதமராக்கலாம் என, இடதுசாரி தலைவர்கள் கண்ட கனவும், மேற்கொண்ட வியூகமும் பெரும் தோல்வியை தழுவியுள்ளது. மீதமுள்ள ஆட்சிக் காலத்தை, இடதுசாரிகளின் நிர்பந்தம் இன்றி, பிரதமர் மன்மோகன் சிங் அரசு முடிக்கும்.
தீவிரமாக செயல்பட்டனர் : கடந்த 2004ம் ஆண்டு முதல், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை, இடதுசாரிகள் சமீபத்தில் வாபஸ் பெற்றனர். அணுசக்தி ஒப்பந்தத்திற்கு எதிராக இந்த நடவடிக்கையை எடுத்தனர். இதையடுத்து, பார்லிமென்டை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்கும்படி, மன்மோகனை, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கேட்டுக் கொண்டார்.இதையடுத்து, "அரசை எப்படியும் காப்பாற்றுவது' என, காங்கிரஸ் தலை மையிலான அணியும், "எப்படியும் வீழ்த்தி விடுவது' என, இடதுசாரி தலைமையிலான அணியினரும் தீவிரமாக செயல்பட்டனர்.
எம்.பி.,க்கள் 25 கோடி மற்றும் 100 கோடி ரூபாய்க்கு பேரம் பேசப்பட்டதாக புகார்கள் எழுந்தன.இந்த பரபரப்பான சூழ்நிலையில், நேற்று முன்தினம் லோக்சபா கூடியது. அப்போது, அரசுக்கு நம்பிக்கை கோரும் ஒருவரி தீர்மானத்தை தாக்கல் செய்து பிரதமர் மன்மோகன் சிங் பேசினார். "நாட்டின் நலன் கருதியே அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேற்றப்படுகிறது' என்றார். இதைத் தொடர்ந்து லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி உட்பட பல கட்சித் தலைவர்கள் பேசினர்.இரண்டாவது நாளாக நேற்று தலைவர்களின் விவாதம் தொடர்ந்தது. விவாதம் தீவிரமாக நடந்து கொண்டிருந்த நேரத்தில், பா.ஜ., கட்சியை சேர்ந்த எம்.பி., அசோக் அகர்வால், அரசுக்கு ஆதரவாக ஓட்டளிக்க தனக்கு லஞ்சம் கொடுத்ததாக புகார் தெரிவித்தார். சபை வரலாற்றில் இல்லாத வகையில், கைப்பையில் இருந்து ஆயிரம் ரூபாய் நோட்டுக் கட்டுக்களை வெளியே எடுத்து சபையில் காண்பித்தார்.
இப்பிரச்னையால் மதியத்திற்கு மேல் சபையில் அமளி ஏற்பட்டு, பின் ஒரு வழியாக 6.30 மணிக்கு மீண்டும் கூடியது. அப்போது, விவாதத்தை முடித்து வைக்க பிரதமர் அழைக்கப் பட்டார். அப்போதும் கூச்சல், குழப்பம் இருந்ததால், பிரதமர் தன் உரையை சில நிமிடங்களில் முடித்து விட்டார்.அவர் தாக்கல் செய்த ஆறு பக்க பதிலுரையில், "என்னை தங்களின் அடிமைகளாக நடத்த இடதுசாரி கட்சியினர் திட்டமிட்டனர். ஒவ்வொரு கட்ட சமரச பேச்சுவார்த்தையின் போது, தங்களின் வீட்டோ அதிகாரத்தை பயன் படுத்த விரும்பினர். அது ஏற்றுக் கொள்ள முடியாதது' என்று தெரிவித்திருந்தார்.
பின்னர், பல நாட்களாக நாடே ஆவலுடன் எதிர்பார்த்த நம்பிக்கை ஓட்டெடுப்பு துவங்கியது. எதிர்க்கட்சியினர் டிவிஷன் ஓட்டு நடத்த வேண்டும் என, வலியுறுத் தினாலும், எலக்ட்ரானிக் மிஷின் மூலம் முதலில் ஓட்டெடுப்பு நடத்த சபாநாயகர் உத்தரவிட்டார். ஆனால், எலக்ட்ரானிக் மிஷினில், 50க்கும் மேற்பட்ட ஓட்டுகள் பதிவாகவில்லை. மொத்த ஓட்டுகள் 487 என்றும், அரசுக்கு ஆதரவு 253 என்றும், எதிர்ப்பு 232 என்றும், ஓட்டுப் போடாதவர்கள் இரண்டு பேர் என்றும் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, எம்.பி.,க்களிடம் சீட்டுக்கள் கொடுக்கப்பட்டு டிவிஷன் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. அதில், அரசுக்கு ஆதரவாக 275 எம்.பி.,க்களும், எதிராக 256 எம்.பி.,க்களும் ஓட்டளித்தனர்.
10 எம்.பி.,க்கள் ஓட்டுப் போடவில்லை. சபையில் நேற்று 541 எம்.பி.,க்கள் ஆஜராகியிருந்தனர். இவர்களில் 271 பேர் ஆதரவு அரசுக்கு தேவை. இருந்தாலும், அதை விட கூடுதலாக நான்கு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.மொத்தத்தில் எதிரணியின் ஓட்டுகளை விட கூடுதலாக 19 ஓட்டுகள் பெற்று அரசு வெற்றி பெற்றது. நேற்றைய ஓட்டெடுப்பில் வெற்றி பெற்றதன் மூலம், கடந்த 30 ஆண்டுகளில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில், வெற்றி பெற்ற ஏழாவது பிரதமர் என்ற பெருமையை மன்மோகன் பெற்றுள்ளார்.ஓட்டெடுப்பின் இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும் முன்னரே, சபையில் இருந்த பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, ஆளுங்கட்சியைச் சேர்ந்த தலைவர்களும், உறுப்பினர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
நேற்று நடந்த இந்த நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது, உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உட்பட பா.ஜ., எம்.பி.,க்கள் நான்கு பேருக்கு, பார்லிமென்டின் லாபியில் ஓட்டளிக்க அனுமதி வழங்கப்பட்டது.நம்பிக்கை ஓட்டெடுப்பில் அரசு வெற்றி பெற்றது குறித்து கருத்து தெரிவித்த சமாஜ்வாடி தலைவர் அமர்சிங், "என் அரசியல் வாழ்வில் இன்று தான் மகிழ்ச்சியான நாள்' என்றார். மத்திய அரசு பெற்ற வெற்றி, "ஊழல் மூலமாகவும், மோசடி வேலைகள் மூலமாகவும் பெற்ற வெற்றி' என, பா.ஜ., கூறியுள்ளது.அரசு வெற்றி பெற்றதை தொழில்துறையும் வரவேற்றுள்ளது.
கட்சி மாறிய எம்.பி.,க்கள் யார்?: பா.ஜ.,வைச் சேர்ந்த நான்கு பேர், தெலுங்கு தேசத்தைச் சேர்ந்த இரண்டு பேர், பிஜு ஜனதா தளம் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த தலா ஒருவர் கட்சி மாறி ஓட்டு போட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.ஐ.மு., கூட்டணிக்கு ஆதரவாக ஓட்டு போட்ட பிஜு ஜனதா தளத்தைச் சேர்ந்த எம்.பி., ஹரிஹர் ஸ்வெயின் அக்கட்சியிலிரு ந்து நீக்கப்பட்டுள்ளார் என, அக்கட்சித் தலைவர் நவீன் பட்நாயக் தெரிவித்தார்.
நன்றி தினமலர்
Labels: அரசியல்
பாய பதுங்குகிறாரா? இல்லை பயந்து ஒதுங்குகிறாரா?
கடந்த 13.7.2008 ஞாயிற்றுக்கிழமையன்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் இராமேசுவரத்தில் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் சுடப்படுவதைக் கண்டித்து, மிகப் பிரமாண்டமான முறையில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏராளமான அளவில் மீனவர்கள் பங்குபெற்ற அந்த ஆர்ப்பாட்டத்தைப் பற்றி அங்கு வந்திருந்த பல பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் அவற்றை தத்ரூபமாக வெளியிட்டன. ஆனால் குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிகை, நான் அங்கு பேசாததைப் பேசியதாக விஷமத்தனத்தோடு வெளியிட்டிருக்கிறது.
இந்த வாரம் 20.7.2008 தேதியிட்ட இதழில் வெளியிடப்பட்டுள்ள குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிகையில் முதல் பக்க அட்டையிலேயே எனது புகைப்படத்துடன் ``ஆளும் தி.மு.க.வினரை சுட்டுத் தள்ள வேண்டும்!'' என்று நான் பேசியதாகத் தலைப்பிடப்பட்டுள்ளது. பத்திரிகையின் உட்பகுதியில் வந்துள்ள செய்தியிலும் ``தமிழக மீனவர்களைச் சுட்டுத் தள்ளும் சிங்கள ராணுவத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் திராணி இல்லாத ஆளும் தி.மு.க.வினரைச் சுட்டுத்தள்ள வேண்டும்'' என்று நான் முழக்கமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கூறியவாறு நான் அங்கு பேசாதது மட்டுமல்ல; எங்குமே பேசக்கூடியவன் அல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
நான் பேசாத சிலவற்றை இராமேசுவரத்தில் பேசியதாகச் செய்தி வெளியிட்டிருப்பது, வேண்டுமென்றே திட்டமிட்டுத் திரித்து வெளியிட்டிருப்பது மட்டுமல்ல, என்னைத் தனிப்பட்ட முறையில் அவதூறு செய்வதாகவும் நாட்டு மக்களிடையே கலவரத்தைத் தூண்டி அமைதியைச் சீர்குலைக்கும் செயலாகவும் அமைந்துள்ளது. பத்திரிகை விற்க வேண்டும் என்கின்ற வெறும் வியாபார நோக்கில் மட்டும் இந்தச் செய்தி வெளியிடப்பட்டதாக நான் கருதவில்லை.
கடந்த 6.7.2008 அன்று வெளிவந்த குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிகையில் கூட இதே போன்று அட்டையில் என் புகைப்படத்தைப் போட்டு, ``தன்னிலை மறந்து பேசிய விஜயகாந்த்!'' என்று தலைப்பிட்டு நடக்காத சம்பவத்தை, நடந்தது போல் அந்தப் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இப்பொழுதும் அதைவிடப் பெரிய தவறை மீண்டும் செய்துள்ளது. எந்தப் பத்திரிகையும் நடுநிலையோடு செய்திகள் வெளியிடுவதையும் விமர்சனம் செய்வதையும் நான் முழுமனதோடு வரவேற்கிறேன். ஆனால் உள்நோக்கத்தோடு செய்திகளை இட்டுக்கட்டி வெளியிட்டு, பொதுஅமைதிக்குப் பங்கம் விளைவிப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள இயலாது. வேண்டுமானால் அந்தப் பத்திரிகை ஆளுங்கட்சியின் கைப்பாவையாகச் செயல்படட்டும். ஆனால், பத்திரிகை தர்மம் தமிழ்நாட்டில் நிலைநிறுத்தப்பட வேண்டும்.
அவதூறு செய்திகளைத் தொடர்ந்து பரப்புவதையும், பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் வன்முறையைத் தூண்டுவதையும், தனிப்பட்ட முறையில் மக்களிடம் என்னைப் பற்றித் தவறான கருத்தைப் பரப்ப முயலுவதையும் தொழிலாகக் கொண்டுள்ளதால், குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிகையின் மீது சட்டப்படி அவதூறு வழக்குத் தொடர்வதற்கு அந்தப் பத்திரிகைக்கு வக்கீல் நோட்டீசு அனுப்பப்பட்டிருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
- தலைவர், தேசிய முற்போக்கு திராவிட கழகம்.
-இப்படி கடந்த 16-ம்தேதியன்று எல்லா தினசரிகளுக்கும் `பத்திரிகைச் செய்தி' என்கிற தலைப்பில் மறுப்பு அறிக்கை ஒன்றை அனுப்பியிருக்கிறார் என்றாலும் ஓரிரு மாலை நாளிதழ் தவிர, வேறு எந்த நாளிதழும் இதைப் பிரசுரிக்கவில்லை.
திரு.விஜயகாந்த் தமது மறுப்பு அறிக்கையை இதுவரை நமக்கு நேரடியாக அனுப்பாவிட்டாலும், நம்மைப் பற்றியே எழுதியிருப்பதால்தான் அதற்கு நாம் இங்கே பதில் சொல்ல வேண்டிய அவசியமாகிறது. அதில், முக்கியமாகச் சொல்வது, அவர் பேசாத ஒன்றை நாம் தலைப்புச் செய்தியாக்கிப் பிரசுரித்துள்ளோம் என்பது; அதனால் கலவரத்தைத் தூண்டி, பொது அமைதியைச் சீர்குலைக்கும் செயலை நாம் செய்திருப்பதோடு, பத்திரிகை தர்மத்தையும் மீறிவிட்டோம் என்பது. மேலும் குமுதம் ரிப்போர்ட்டர் இதழ் ஆளுங்கட்சியின் கைப்பாவையாகச் செயல்படுவதாகவும் கூறியிருக்கிறார்.
உண்மையில்,கடந்த 13-ம்தேதியன்று ராமேஸ்வரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திரு. விஜயகாந்த் பேசாத ஒன்றைத்தான் நாம் பிரசுரித்திருக்கிறோமா? இதை வாசகர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக திரு.விஜயகாந்த் அன்று பேசியவற்றில் சிலவற்றை மட்டும் இங்கே தருகிறோம்:
``...நேத்தோ முந்தா நேத்தோ விண் டிவி பார்த்தேன். அதுல மீனவ சங்கத்தலைவர் போஸ் பேசுறாரு. `எல்லா முதலமைச்சரையும் பாத்தோம். யாரும் ஒண்ணும் செய்யலை'னு எங்க செய்வாங்க? எல்லாம் வாங்கிக்கிட்டே இருக்காங்க. யாருய்யா செய்யப் போறாங்க? பிடிக்கிற மீனுக்கு லஞ்சம் குடுக்குறீங்களா? சொல்லுங்க, குடுத்தீங்கன்னா உடனே கொண்டு வந்து போட்டுடுவாங்க மிலிட்டரிய... ஒரு மீனுக்கு ரெண்டு ரூபாலஞ்சம் குடுக்குறீங்களா?
...(இலவச) டி.வி.ய விக்கிறாங்க. உடனே அரசாங்கம் சட்டம் போடுது... கலெக்டரே `போலீஸே டி.வி.ய வித்தா புடிச்சு உள்ள போடு'ன்னு... அடுத்து அரிசி... அரிசிய ரெண்டு ரூபாக்கு குடுக்குறோம். உடனே அரிசியக் கடத்துறாங்க. அ.தி.மு.க.வுல லாரியில அரிசியக் கடத்துனாங்க. ஆனா இவங்க ரெயில்லயும் கப்பல்லயும் கடத்துறாங்க...
...அதுதான் சொல்றேன். சாது மிரண்டா காடு கொள்ளாது. ரொம்ப நோண்டாதீங்கடா, ரொம்ப நோண்டாதீங்க. இருபது போலீஸ வச்சு கேக்குறாங்களாம். நேரடி ஒலிபரப்பு பண்றாங்க போலீஸு. ஏதாவது தப்பா பேசுனா புடிச்சு ஜெயில்ல போட்டுடுவேன்னு சொல்றாரு. எதுலயாவது போடுங்கறேன். எதுக்காகப் போடப் போற... என் மக்களுக்காகப் பேசுனதுக்காகத்தானே. நீ புரியாம பேசுற... நடிகன்னா, மெரட்டுனா பயந்துடுவான்னு. ஆனா இந்த விஜயகாந்த் பயப்புட மாட்டான். இது அவருக்குப் புரிய மாட்டேங்குது. புரியாம மெரட்டிப் பாக்குறாங்க...
...விலைவாசி ஏறிப்போச்சுன்னு சொன்னா உடனே கலைஞர் சொல்றாரு, வாங்குற சக்திய அதிகமாக்கணும்னு. உங்களுக்கு வாங்குற சக்திய அதிகமாக்கியிருக்கு... (தணிந்த குரலில்) லஞ்சம் வாங்க. எங்களுக்கு தாங்குற சக்தி இல்லையே...
...நான் நிறையப் பேசணும்னு நெனைக்கிறேன். உளவுத்துறை டேப் பண்ணிக்கிட்டிருக்கு. வேற ஒண்ணும் கெடையாது. கோபம் வருது. சத்தியமா, மக்கள ஏமாத்துனா ரொம்பக் கோபம், வெறி வருது. சுட்டுக் கொல்லணும்... பூராபேத்தையும். (தணிந்த குரலில்) ஆட்சியில இருக்குறவங்கள..''
- இப்படித்தான் அவர் பேசியிருக்கிறார். அவர் அங்கே 43 நிமிடங்களும் 42 வினாடிகளும் பேசியிருக்கிறார். அப்படிப் பேசியபோது 33-வது நிமிடத்தில்தான் `சுட்டுக் கொல்லணும்......பூராத்தையும்' என்று உரத்த குரலிலும் `ஆட்சியில் இருக்குறவங்கள....' என்பதைத் தணிந்த குரலிலுமாகப் பேசியிருக்கிறார்.
ஆக, `சுட்டுக் கொல்லணும்' என்று அவர் உணர்ச்சிகளின் கொந்தளிப்பில்-மெய்மறந்த நிலையில் பேசியிருந்தாலும் நாம் அதைப் புரிந்து கொண்டு, `கொல்லணும்' என்பதைத் `தள்ளணும்' என்று வேகத்தைக் குறைத்துத்தான் வெளியிட்டிருக்கிறோம். ஒருவர் தன்னை மறந்த நிலையில் வாய்தவறிப் பேசியதை அப்படியே பிரசுரிப்பது பத்திரிகை தர்மமாகாது என்பதால்தான் அதை நாம் மாற்றிப் பிரசுரித்திருக்கிறோம். சொல்லப் போனால் நாம் பிரசுரித்ததைவிட பிரசுரிக்காமல் விட்டதே அதிகம்.
எனினும், தாம் அன்று ஏதோ உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பேசியதை உணர்ந்துதான் இப்போது அதற்கு மறுப்புத் தெரிவித்திருக்கிறார் என்பதை நம்மால் நன்றாகவே புரிந்து கொள்ள முடிகிறது. அந்த அளவில் அவரை நாம் மனமார பாராட்டுகிறோம். அதற்காக அவர் குமுதம் ரிப்போர்ட்டர் மீது பழிபோடுகிறாரே என்பதிலும் ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பேசியதையே இப்படி மறுக்கிறாரே என்பதிலும் தான் நமக்கு வருத்தம். இப்படியிருந்தால், அவரது வாக்குறுதிகளை மக்கள் எப்படி நம்புவார்கள் என்பதே நமது கவலை.
உலகில் தவறு செய்யாத மனிதர்களே இல்லை. தவறுகளைத் திருத்திக் கொள்பவன்தான் மனிதன். மறைப்பவன் திருடன். மறுப்பவன் குற்றவாளி. ஒப்புக் கொள்பவன்தான் தலைவன். இதை திரு. விஜயகாந்த் புரிந்து கொண்டு, அவர் மிகச் சிறந்த தலைவராக வளர வேண்டும் என்பதே நமது ஆசை!
Labels: அரசியல்
ஆளும் தி.மு.க வினரை சுட்டுத்தள்ள வேண்டும் ராமேஸ்வரத்தில் அனல் கக்கிய விஜயகாந்த்!
சமீபத்தில் நாமக்கல்லில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில், `மக்களுக்குத் துரோகம் செய்யும் அரசியல்வாதிகளுக்கு நல்ல சாவே வராது' என்று முழங்கிய விஜயகாந்த், கடந்த பதின்மூன்றாம் தேதி ராமேஸ்வரத்தில் மீனவர்களுக்கு ஆதரவாக நடத்திய ஆர்ப்பாட்டத்தில்,`ஆளும் தி.மு.க.வினரைச் சுட்டுத் தள்ள வேண்டும்' என்று அதிரடியாக முழங்கி, தி.மு.க.வினரை அதிர வைத்திருக்கிறார்.அவருடைய அந்தப் பேச்சை மாவட்ட உளவுத்துறையினர் வீடியோவில் பதிவு செய்ததோடு, தங்களது செல்போன் மூலம் சென்னையில் உள்ள தங்கள் உயர் அதிகாரிகளுக்கு அப்படியே `லைவ்' செய்தும் விட்டார்கள். சர்ச்சைக்குரிய விஜயகாந்தின் அந்தப் பேச்சு, அவரைக் கைது செய்யும் சூழலையும் உருவாக்கியிருப்பதாக ஒரு பேச்சும் கிளம்பியிருக்கிறது.தவிர,மாவட்ட தி.மு.க.வினரும் கொந்தளித்துப் போய் தங்கள் தலைமைக்கு ஃபேக்ஸ் மேல் ஃபேக்ஸ் அனுப்பி, விஜயகாந்தின் பேச்சுக்குப் பதிலடி கொடுக்க அனுமதியும் கேட்டிருப்பது, நிலவரத்தை மேலும் தீவிரப்படுத்தி இருக்கிறது.மீனவர்கள் நலனுக்காகவும்,கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கைக்காகவும் ராமேஸ்வரத்தில் தனது தலைமையில் ஆர்ப்பாட்டம்நடக்குமென்று கடந்த வாரம் விஜயகாந்த் அறிவித்த போதே, மாவட்டத்தில் பரபரப்பு பற்றிக் கொண்டது.தவிர, ஆர்ப்பாட்டத்துக்கு முந்தைய நாள் வேதாரண்யத்தைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள், சிங்கள கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தால், ராமேஸ்வரம் உள்பட தமிழக கடலோரப் பகுதிகள் மிகவும் சென்சிட்டிவ் நிலைக்கு மாற, அந்தச் சூழலில் விஜயகாந்த் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டமும் முக்கியத்துவம் பெற்று விட்டது.ஆகவே,மத்திய-மாநில உளவுத்துறையினர் ராமேஸ்வரத்தில் குவிக்கப்பட்டு விஜயகாந்த் பேச்சு, மீனவர்களின் எழுச்சி, மக்களின் ஆதரவு, கூடிய கூட்டம் என அத்தனை நடவடிக்கைகளையும் வீடியோவிலும், ஆடியோவிலும் பதிவு செய்தனர்.நிலவரம் தெரிந்தோ, தெரியாமலோ சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் விஜயகாந்த் ஆவேச நர்த்தனம் ஆடித் தீர்த்து விட்டார்.ஒரு மணி நேரம் அவர் பேசிய பேச்சில் கலைஞரை மட்டுமல்ல; தங்கம் தென்னரசு, பொன்முடி. எ.வ.வேலு, சுப. தங்கவேலன் ஆகிய தி.மு.க. அமைச்சர்களையும் விளாசித் தள்ளிவிட்டார். அவருடைய பேச்சுக்கு ஆரவாரத்தோடு கூட்டமும் வரவேற்புக் கொடுக்க, ஒருகட்டத்தில் முழுமையாக உணர்ச்சிவசப்பட்ட சூழலில்தான், ``தமிழக மீனவர்களைச் சுட்டுத் தள்ளும் சிங்கள ராணுவத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் திராணி இல்லாத ஆளும் தி.மு.க.வினரைச் சுட்டுத்தள்ள வேண்டும்'' என்று முழங்கினார் விஜயகாந்த்.அவரின் அந்தப் பேச்சைக் கேட்டு ஒரு கணம் ஸ்தம்பித்த ஒட்டுமொத்த கூட்டமும் அடுத்த கணமே ஆரவாரித்தது. அதனையும் வீடியோ எடுக்கத் தவறவில்லை மாவட்ட உளவுத்துறை.சரியாக பதினொன்றரை மணிக்குப் பேச ஆரம்பித்த விஜயகாந்த், எடுத்த எடுப்பிலேயே டாப் கியரில் கலைஞரைக் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்து விட்டார்.``கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக சிங்கள கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டு இறந்த மீனவர்களின் எண்ணிக்கை முந்நூற்றைம்பது இருக்கும். அவ்வளவு பேரும் கலைஞர் ஆட்சியில் இருக்கும்போதுதான் சாகடிக்கப்பட்டிருக்கிறார்கள். அந்தக் கலைஞர் இன்றைக்குத் தன்னோட டி.வி.ல என்ன சொல்றாரு? `தமிழர்களே தமிழர்களே.... நீங்கள் என்னைக் கடலில் தூக்கிப் போட்டாலும் கட்டுமரமாக மிதப்பேன். அதில் நீங்கள் பயணம் செய்யலாம். கவிழ்ந்து விடமாட்டேன்'னு பேசறாரு. யோவ், நீ கவிழ மாட்டே... மக்கள்தான் கவுந்து போவாங்க. இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் தமிழ், தமிழர்கள்னு சொல்லி மக்களை ஏமாத்திக்கிட்டு இருக்கப் போறே? நான்கு முறை முதல்வரா இருந்து கொள்ளையடிச்சது போதாதா...? வயசான காலத்துலேயும் இன்னும் பதவிவெறி, பணவெறியோடு ஏன் அலையிறே? போகும்போது எல்லாத்தையும் கொண்டா போகப்போறே? செத்துட்டா இடுப்புல கட்டியிருக்கிற அரணா கயிறுகூட மிஞ்சாது.அணுசக்தி ஒப்பந்தம் முக்கியமா? ஆட்சி முக்கியமானு வரும்போது எனக்கு ஆட்சிதான் முக்கியம்னு வர்றே? ஏன்யா.. முதல்வரே? நேத்து வேதாரண்யத்துல ரெண்டு மீனவர்கள் சுடப்பட்டு இறந்தாங்களே... உடனே அமைச்சர்களையும். அதிகாரிகளையும் அனுப்பி வெச்சு அவங்களுக்கு நிவாரணமெல்லாம் கொடுத்தியே? ஏன் இந்த வேகம்? இன்னைக்கு இந்த விஜயகாந்த் ராமேஸ்வரத்துல ஆர்ப்பாட்டம் வெச்சிருக்கான். ஏதாவது அரசியல் பேசி மீனவர்களைத் தன் பக்கம் இழுத்துடுவான்கிற பயம்தானே? இதுக்கு முன்னால மீனவர்கள் சாகலையா? அப்போதெல்லாம் வராத அமைச்சர்கள் இப்போ ஓடி வர என்ன காரணம்? இந்த விஜயகாந்துதான். என்னிடம் இருக்கும் உண்மையும் மக்கள் செல்வாக்கும் கலைஞரை மிரள வைக்குது. என்னைக் கண்டு கலைஞர் பயப்படுகிறார். மதுரை `தினகரன்' அலுவலகத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டபோது, அதுக்குக் காரணம் உன் பிள்ளை தான்னு இந்தத் தமிழ்நாடே சொல்லுச்சு... உன் பிள்ளையைக் காப்பாத்த நீ டெல்லிக்கு ஓடினே. அங்கே ஒரு பத்திரிகையாளர், `கொலைக்குக் காரணம் உங்கள் மகன் தானாமே?' என்று கேட்ட போது, அவர்மீது கோபப்பட்டு எழுந்து போனே. ஏன்யா, உன் பிள்ளை உயிருன்னா, உனக்கு அவ்வளவு முக்கியம். இங்கே நடுக்கடல்ல சாகுற மீனவர்கள்னா அவ்வளவு இளப்பமா?''என்று தடதடத்த விஜயகாந்த், கச்சத்தீவு விவகாரத்துக்குத் தாவினார்.``இந்தக் கச்சத்தீவை இந்திராகாந்தி இலங்கைக்குத் தாரைவார்த்துக் கொடுத்தபோது, தமிழகத்தில் யார் முதல்வர் தெரியுமா? இதே கலைஞர்தான். அன்றைக்கே அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இருந்தால், இன்றைக்கு தமிழக மீனவர்கள் சுடப்படும் கொடுமை நடக்குமா? கேட்டா, மீற முடியாத ஒப்பந்தம், இரண்டு நாடுகளுக்கிடையே நட்புறவைப் பாதிக்கும் என்றெல்லாம் காரணம் சொல்கிறார். தமிழக மீனவர்களோட உயிருக்கு உத்தரவாதம் தராத - இல்லாத அந்த ஒப்பந்தம் எதுக்கு? கிழிச்சு குப்பைத் தொட்டில போடு. இமயமலையில இல்லாத ஒப்பந்தங்களா? காஷ்மீர்ல போடப்படாத ஒப்பந்தங்களா? அதையெல்லாம் மீறலே? கச்சத்தீவு விவகாரத்துல மட்டும் எதுக்கு ஒப்பந்தத்தைக் கட்டிக்கிட்டு அழணும்?அடுத்ததா எல்லைப் பிரச்னை, நம்ம மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்கறாங்கன்னு. இந்தியாவுக்கும், இலங்கைக்கும் உள்ள கடல் தூரமே வெறும் பதினெட்டு நாட்டிக்கல் மைல் தூரம் தான். இதுக்குள்ளே என்னய்யா எல்லை? எல்லாத்தையும் எடு. கச்சத்தீவைத் தாண்டித்தான் மீன் வளம் இருக்குன்னு நம்ம ஆளு அங்கே போறான். அது தப்பா? நம்ம பகுதில மீன்வளம் இல்லை. அவன் என்ன பண்ணுவான்? இது இந்திய எல்லை! இது இலங்கை எல்லைன்னு மீனுக்குத் தெரியுமா? மனுசனுக்கே தெரியலே. மீனுக்கு எப்படித் தெரியும்?'' என்று பேசிய விஜயகாந்த், தடாலடியாக ஒரு போராட்ட ஐடியா ஒன்றையும் அப்போதே அறிவித்தார்.``என் மீனவ மக்களே... உங்கள் வாழ்வாதாரப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க, இந்த விஜயகாந்த் உங்களோடு போராடத் தயாராக இருக்கிறான். மீனவர்கள் எல்லோரும் படகுகளில் திரண்டு நடுக்கடலுக்குச் சென்று கடல் உள்ளிருப்புப் போராட்டம் ஒன்றைத் தொடங்குங்கள். உங்களோடு நானும் ஒரு படகில் ஏறி சாகும்வரை நடுக்கடலில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தத் தயாராக இருக்கிறேன். தமிழ்நாட்டை ஆளும் தி.மு.க. அரசை மட்டும் அல்ல... இலங்கையை ஆளும் அராஜக ராஜபக்சே அரசையும் நம் போராட்டத்தால் ஸ்தம்பிக்க வைப்போம். போராட்ட தினத்தைக் குறித்து விட்டு என்னைக் கூப்பிடுங்கள். தட்டிக் கழிக்காமல் வருகிறேன்'' என்ற போது மீனவப் பெண்கள், இளைஞர்கள் மத்தியில் ஏகப்பட்ட ஆரவாரம்.அந்த ஆரவாரத்தில் குஷியாகிப் போன விஜயகாந்த், மீண்டும் கலைஞரை வசைபாட ஆரம்பித்தார். `தொட்டதுக்கெல்லாம் சோனியா கூட போன்ல பேசுறியே... நடுக்கடல்ல இத்தனை பேர் செத்துப் போறானே... அதுக்காக, ஒரு தடவையாவது சோனியா கூட போன்ல பேசி இருக்கியா? ஒரு மண்ணும் பண்ணலே.கடல்ல நம்ம மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதைக் கண்டிக்கவும், தடுத்து நிறுத்தவும் திராணியற்ற ஆளும் தி.மு.க.வினரையும் சுட்டுத் தள்ள வேண்டும்'' என்றபோது ஒட்டுமொத்தக் கூட்டமும் நிமிர்ந்து அவரைப் பார்த்து, மீண்டும் ஆரவாரித்தது. உளவுத் துறையினரும் உஷாரானார்கள்.உளவுத்துறையினரின் நடவடிக்கைகளை அந்தக் கூட்டத்திலும் கவனித்த விஜயகாந்த், அதன் பிறகு தன் பேச்சில் ஆவேசத்தை அதிகரித்துக் கொண்டார். ``நான் இங்கே பேசுற ஒவ்வொரு பேச்சும் `லைவ்'வா சென்னைக்குப் போயிட்டு இருக்கு. என்னோட பேச்சு இன்னும் ஒரு மணி நேரத்துல முதல்வருக்குப் போட்டுக் காண்பிக்க, உளவுத்துறை பரபரப்பா இயங்கிக்கிட்டு இருக்கு. இந்த விஜயகாந்த் இதுக்கெல்லாம் பயப்பட மாட்டான். என்னோட பேச்சு இதோ பக்கத்துல இருக்கிற இலங்கைக்கே போகுது. நீ என்ன பிசாத்து! என்னை என்ன பண்ணிட முடியும்? நான் பயப்பட மாட்டேன். என்னோட கல்யாண மண்டபத்தை இடித்த போதே நான் கவலைப்படலே. நில ஆக்கிரமிப்புன்னு என் மேல பழி போட்டப்போநான் பயப்படலே. இதுக்கெல்லாமா பயப்படப் போறேன்?'' என்ற விஜயகாந்த், அதன்பிறகு ஆவேசம் தலைக்கேறியவராக இலவச டி.வி., இலவச நிலம், இரண்டு ரூபாய் அரிசி என்று தி.மு.க. அரசைக் குறிவைத்தே அடுத்த முக்கால் மணி நேரமும் வியர்க்க விறுவிறுக்க முழங்கி முடித்தார்.பேச்சை முடித்துவிட்டு ராமேஸ்வரம் கோயிலுக்குச் சென்று விட்டு மதுரைக்குப் புறப்பட்டு விட்டார். கலைந்து சென்ற ஒட்டுமொத்த கூட்டமும் விஜயகாந்தின் ஆவேசப் பேச்சுக்கு அதிலும் குறிப்பாக, `தி.மு.க.வினரைச் சுட்டுத்தள்ள வேண்டும்' என்ற பேச்சை ஆச்சரியத்தோடு அசை போட்டபடி சென்றது.நாம் ஸ்பாட்டில் இருந்த உளவுத்துறை அதிகாரியிடம் தொடர்பு கொண்டு பேசினோம்.``வேதாரண்யத்தில் இரண்டு மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட மறுநாளே, ராமேஸ்வரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் விஜயகாந்த் கலந்து கொண்டார். ஆகவே, அவரின் பேச்சை ஒரு வார்த்தைகூட விடாமல் வீடியோவிலும் ஆடியோவிலும் எங்கள் அதிகாரிகள் பதிவு செய்யச் சொன்னார்கள். தவிர, மொபைல் போன் மூலமாகவும் சென்னையில் உள்ள எங்கள் அதிகாரிகளுக்கு விஜயகாந்த் பேச்சை `லைவ்' செய்தோம். ஒரு கட்டத்தில் உணர்ச்சிவசப்பட்ட விஜயகாந்த் என்ன பேசுகிறோம் என்று அறியாமலேயே, `ஆள்வோரைச் சுட்டுத் தள்ள வேண்டும்' என்று பேசினார். என்னதான் ஒரு கட்சிக்குத் தலைவராக இருந்தாலும், அரசுக்கும் ஆள்வோருக்கும் எதிராக இப்படி வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசுவது கூடாது. ஆள்வோர் என்றால் தி.மு.க.வினரை - அதிலும் குறிப்பாக பெரியவர் கலைஞரைத்தானே குறிக்கும்? விபரீதம் புரியாமல் விஜயகாந்த் பேசிவிட்டார். அவரின் இந்தப் பேச்சை வைத்தே அவரைக் கைது செய்ய சட்டத்தில் இடம் இருக்கிறது. அவரின் பேச்சைப் பதிவு செய்து மேலிடத்துக்கு அனுப்பியதோடு எங்கள் வேலை முடிந்து விட்டது'' என்றார்.விஜயகாந்தின் இந்தப் பேச்சு என்ன மாதிரியான விளைவுகளை அவருக்கு எதிராக உருவாக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.பேசிக்கொண்டே வந்த விஷயகாந்த் மீனவர்கள் சங்க பிரதிநிதிகள் போஸ், அந்தோணி ஆகிய இருவரையும் அழைத்து மைக்கில் பேச வைத்தார். ``எங்கள் பிரச்னைக்காக முதல்வராக இருந்தவர்களை மூன்று முறை நேரில் சந்தித்துப் பேசி இருக்கிறோம். எங்களுக்கு ஸ்வீட், காரம், காபி கொடுத்து அனுப்பினார்களே தவிர, பிரச்னைகளுக்குத் தீர்வைக் காணும் வழியை - நடவடிக்கையைச் செய்யவில்லை'' என்றார் போஸ் என்பவர்.``மீனவர்கள் நலனில் அக்கறையோடு இருந்தவர் எம்.ஜி.ஆர்.! அவருக்குப் பிறகு நாங்கள் நம்புவது விஷயகாந்தைத்தான்'' என்று அந்தோணி என்பவர் கூறிய போது, விஷயகாந்த் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பின் பிரகாசம்.ஒரு மூதாட்டி விஷயகாந்தைப் பார்த்து, ``இப்போ எங்களைத் தேடி வர்ற நீங்க, முதலமைச்சரா ஆன பின்னாடி எங்கே பார்க்க வரப் போறீங்க? எங்களுக்கு எங்கே நல்லது செய்யப் போறீங்க? மத்த முதலமைச்சருங்க மாதிரி நீங்களும்தான் மாறிடுவீங்க'' என்று துணிச்சலாகக் கூற, திகைத்துப் போன விஷயகாந்த், ``எங்கிட்டே ஆட்சி, அதிகாரம் எதையும் கொடுக்காமலே இப்படி கேள்வி கேட்கலாமா? எனக்கு இன்னும் நீங்க எதுவும் செய்யலே. செய்துட்டு இந்தக் கேள்விகளை எங்கிட்டே கேளுங்க. அதுக்குப் பதில் சொல்றேன்'' என்றார்.``இலவச டி.வி., இலவச நிலம், இரண்டு ரூபாய் அரிசி இதெல்லாம் கிடைக்காத மீனவப் பெண்கள் இரண்டு ரூபாய் கொடுத்து தி.மு.க. உறுப்பினர் கார்டு வாங்குங்க. உடனே உங்களுக்குக் கிடைக்காத எல்லாம் கிடைக்கும்'' என்று நக்கலாக விஷயகாந்த் கூறியபோது, மீனவப் பெண்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது.ஆர்வத்தின் காரணமாக ஆர்ப்பாட்டத்தை வேடிக்கை பார்க்க வந்திருந்த லோக்கல் தி.மு.க.வினர் விஷயகாந்தின் கலைஞர் அட்டாக் பேச்சைக் கேட்டு டென்ஜனாகி, தங்களது மொபைல் போன் மூலம் மாவட்ட நிர்வாகிகளுக்கு கேப்டனின் பேச்சை ஒலிபரப்பு செய்து கொண்டிருந்தார்கள்.பரமக்குடியில் தே.மு.தி.க.வின் பேனரை தி.மு.க.வினர் கிழித்து எறிந்தனர். அவர்களைக் கைது செய்யக் கோரி தே.மு.தி.க.வினர் கொடுத்த புகாரை போலீஸ் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனைக் கேள்விப்பட்ட விஷயகாந்த் அமைச்சர் சுப.தங்கவேலனை ஒரு பிடிபிடித்தார். ``ஏன்யா, டம்மி அமைச்சரா உன்னை கலைஞரு மாத்திட்டாரு. இன்னும் நீ பரமக்குடில ஆட்டமா போடுறே? கூடிய சீக்கிரமே உன் அமைச்சர் பதவி காலி ஆகிடும்யா'' என்றபோது, தே.மு.தி.க.வினர் பெருத்த ஆரவாரம் செய்தனர். நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்
Labels: அரசியல்
ராமதாஸ் - தங்கபாலு திடீர் சந்திப்பு
""காங்கிரசின் கூட்டணி அரசுக்கு பா.ம.க., ஆதரவு அளித்துள்ளதால், ராமதாசை நேரில் சந்தித்து நன்றி தெரிவித் தேன்,'' என்று தங்கபாலுவும், ""தமிழகத் தில் யாருடனும் கூட்டணி இல்லை; மத்தியில் காங்கிரசுடன் கூட்டணி,'' என ராமதாசும் தெரிவித்தனர். பா.ம.க., நிறுவனர் ராமதாசை அவரது தி.நகரில் உள்ள பொங்கு தமிழ் அறக்கட்டளை அலுவலகத்தில், நேற்று மதியம் 1.30 மணிக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு சந்தித்து பேசினார்.
இருவரின் சந்திப்பு குறித்து சத்தியமூர்த்தி பவனில் தங்கபாலு நிருபர்களிடம் கூறியதாவது
தமிழக காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பிறகு, ஐக்கிய முற் போக்கு கூட்டணியில் அங்கம் வகிக் கும் கட்சிகளின் தலைவர்களை மரியா தை நிமித்தமாக சந்தித்து வருகிறேன். ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் பெற்ற பா.ம.க., நிறுவனர், தொலைபேசியில் எனக்கு வாழ்த்து தெரிவித்தார். அதை தொடர்ந்து, ராமதாசை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தேன். வருகிற 22ம் தேதி நடக்கும் மத்திய அர சின் நம்பிக்கை ஓட் டெடுப்பில், காங்கிரசின் கூட்டணி அரசுக்கு பா.ம.க., ஆதரவு அளித்துள்ளது. அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்தேன். இவ்வாறு தங்கபாலு கூறினார்.
பொங்கு தமிழ் அறக்கட்டளை அலுவலகத்தில் ராமதாஸ் கூறியதாவது
தங்கபாலு என்னை மரியாதை நிமித் தமாக சந்தித்தார். அரசியல் எதுவும் பேசவில்லை. தற்போது காங்கிரஸ் கூட்டணியில் இருக்கிறோம். அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளது. அப்போது, கூட்டணி குறித்து பார்க்கலாம். இந்த சட்டம் கொண்டு வரப்பட்ட போது, "இது ஆள் தூக்கி சட்டம் என்றும், அரசியல் ரீதியாக தவறாக பயன்படுத்தும் சட்டமாக இருக்கும்' என்றும் முதல்வர் கருணாநிதி ஏற்கனவே கூறியுள்ளார். அதே சட்டத்தில் குரு கைது செய்யப்பட்டுள்ளார். குரு எனது பிள்ளை மாதிரி; துடிப்பு மிக்க இளைஞர். அவரது கைது சம்பவத்தால் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளேன். அவரது கைது நடவடிக்கையை கூட்டணிக் கட்சியில் உள்ள கம்யூனிஸ்ட் கட் சிகளும் கண்டிக்கவில்லை. தமிழகத் தில் நாங்கள் யாருடனும் கூட்டணி இல்லை. இவ்வாறு ராமதாஸ் கூறினார்.
நன்றி தினமலர்
Labels: அரசியல்
மறக்கமுடியுமா? உங்கள் கதறல்களை
"இன்று கும்பகோணத்தில் தீயில் கருகிய சின்னசிறு ரோஜாக்களுக்கு நம் கண்ணீரில் அஞ்சலி செலுத்துவோம்"
நம்மால் வேறென்ன செய்ய முடியும் நினைவு தினத்தன்று இரங்கல் கூட்டம் போடுவதும் கண்ணீர் அஞ்சலிசெலுத்துவதைத்தவிர ஜீலை 16 2004 ஆம் வருடம் நிகழ்ந்த நிகழ்வுக்கு ஜீலை 16 2008 வரை கண்ணீர் அஞ்சலிதானே நடத்திக்கொண்டிருக்கிறோம். அந்த வழக்கின் நிலவரம் என்ன அரசியல்வாதிகள் மேல் போட்டஊழல் வழக்கு போல் இன்னும் இழுத்துக்கொண்டுதான் இருக்கிறதே தவிர 4 வருடங்களாய் முடிந்தபாடில்லைவழக்குகளை நீதிமன்றங்கள் குறுகிய காலத்தில் முடித்தால் மட்டுமே மக்களுக்கு நீதிமன்றங்கள் மேல் நம்பிக்கைபிறக்கும். ஒரு குற்றவாளி 20 வயதில் ஒரு குற்றத்திற்க்காக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டால்அவனுக்கு தண்டனை கிடைப்பது 40 வயதில் இந்த 20 வருடத்தில் அவன் ஜாமீன் என்ற பெயரில் வெளியில் உலவிக்கொண்டுதான்இருக்கிறான் இதற்கு எதற்கு தண்டனை பணம் வைத்திருக்கும் ஒருவனால் ஒரு குற்றத்திலிருந்து எளிதில் வெளி வந்துவிட முடிகிறது இது என்ன சட்டம் பணம் வைத்திருப்பவன் எதை வேண்டுமானாலும் செய்யலாமா?அப்படியானால் நீங்கள் வரையறுக்கின்ற சட்டங்கள் யாருக்கு ஒன்றுமில்லாத ஏழைகளுக்கா?நீங்கள் தருகின்ற தண்டனைகள் இயற்றுகின்ற சட்டங்கள் யாவும் ஒரு வேளை சோற்றுக்கே கஷ்டப்படும் ஏழைகளுக்கு மட்டும் தானா?
இந்த வழக்கு நீதிமன்றத்திற்க்கு வந்து 4 வருடங்களாகி விட்டது ஆனால் தீர்ப்பு வழங்கவில்லை எப்போது தீர்ப்புவரும் குற்றவாளி வாழ்ந்து அனுபவித்து இறந்த பிறகா?
நீங்கள் அனைத்து வழக்குகளையும் இப்படித்தான் இழுத்துக்கொண்டிருப்பீர்கள் ஆனால் இது போன்ற முக்கியவழக்குகளையாவது விரைந்து முடிக்கவேண்டாமா? குழந்தையை பறிகொடுத்தவர்களுக்கு நியாயம் வேண்டாமா? இதே நாளில் அவர்கள் தங்கள்குழந்தைகளை நினைத்து மலர் செண்டு வைத்து கண்னீர் அஞ்சலிசெலுத்த மட்டும் தான் உரிமையா? இது போன்ற வழக்குகளை உடனே முடித்து நீதி வழங்கினால் மட்டுமேகுற்றவாளிகளுக்கு பயம் வரும். இது போன்ற தவறுகள் மேலும் நிகழாமல் தடுக்கமுடியும் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டால் தான் குற்றங்களை குறைக்க முடியும் குற்றங்கள் குறைந்தால் தான் வழக்குகளைவிரைந்து முடிக்கமுடியும்.
நாம் சுதந்திரமடைந்த நாள் ஆகஸ்ட் 15, 1947 லிருந்தது போலவா வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.அன்று நாம் நிலவில் பாட்டி வடை சுட்டுக்கொண்டிருக்கிறாள் என்று நம்பி கொண்டிருந்தோம் ஆனால் அதே நிலவில் இன்று ஆராய்ச்சிகளை மேற்க்கொண்டிருக்கிறோம் இல்லையா?
உடை, மொழி.கலாசாரம்,உணவு,பழக்கவழக்கங்கள்போன்றவற்றில் எல்லாம் நம் இஷ்டத்திற்க்கு மாற்றிக்கொண்ட நாம் அன்றைய சூழலுக்கு ஏற்ப அமைக்கப்பபட்டஅரசியலமைப்பு சட்டத்தை மட்டும்மாற்றாமல் இருப்பது ஏன்? சட்டத்தை யார் மாற்ற வேண்டும் சாதாரணகுடிமக்களா? அரசு தானே மாற்ற வேண்டும் அனைத்தையும் மாற்றும்வல்லமை கொண்ட அரசு அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற மறுப்பது ஏன் ?ஏனென்றால் அவர்கள் சட்டத்தை மாற்றினால் அந்த சட்டத்தின் கீழ் அவர்களே கைது செய்யப்பட்டு தண்டனைக்குள்ளாக்கப்படுவார்கள் என்பது தான் உண்மை.
இதனால் தான் அரசு சட்டத்திருத்தம் கொண்டு வர பயந்து கொண்டு அதே பழைய துரு பிடித்த சட்டங்கள வைத்துக்கொண்டுஇன்னும் ஒப்பேற்றிக்கொண்டிருக்கிறது
" முடிந்தால் குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுங்கல் இல்லையென்றால் குற்றவாளிகளை எங்களிடம் ஒப்படைத்து விடுங்கள் என்றுமக்கள் தாங்களே சட்டத்தை கையில் எடுக்கு முன் அரசு இதற்கு ஒரு முடிவு எடுக்கவேண்டும் என்பது அனைவரின் விருப்பம் "
Labels: விமர்சனம்
நம் பாரம்பரியத்தை நாமே இழக்கலாமா?
ஐரோப்பிய, அமெரிக்க, ஆஸ்திரேலிய கண்டங்களின் உட் பகுதிகளில் சுற்றிய அனுபவம் சொல்லும் பாடம், இந்திய உணவு குறிப்பாகத் தென்னிந்திய உணவு எல்லா இடங்களிலும் கிடைக்காது. சில நகரங்களில் மட்டும் தான் நம்மூர் ஆட்கள் தனிக் கடைகள் வைத்து நம்மூர் உணவுகளைத் "தங்க' விலைக்கு விற்றுக் கொண்டிருப்பர். சிறு நகரங்களிலும், ஊர்களிலும் அத்தகு வசதி எதுவுமில்லை. பட்டினி கிடப்பது தவிர வேறு வழியில்லை. நட்சத்திர ஓட்டல்களில் தங்கினாலும் மாடும், மனுஷனும் கிடைப்பரே தவிர, நாம் நாடும் உணவைப் பெற்றுப் பசியாறிட முடியாது.
நம் ஊர் நட்சத்திர விடுதிகளை ஒப்பிட்டுப் பாருங்கள். அவ்விடுதிகளில் ஐரோப்பிய, அமெரிக்க உணவுகள் அதே மாதிரியில், அதே சுவையில், அதே வடிவ சீனத் தட்டுகளில் கிடைக்கும். நம்மூர் உணவு தான், நம் ஊர்ச் சுவையுடன் கிடைக்காது. எத்துணை வேறுபாடு? ஐரோப்பியரோ, அமெரிக்கரோ நம் நாட்டிற்கு வந்தால் அவருக்கு ஏற்ற உணவைப் பெரும்பாலும் பெற்று உண்டு விட முடியும். ஐநூறு ஆண்டுகள் ஐரோப்பியர் கள் நம்மை ஆண்ட போதும், நம்முடைய உணவு வகைகள் எதனையும் கற்றுக் கொள்ளவோ, நம் நாட்டிற்கு எடுத்துச் செல்லவோ நம் உணவுகளுக்குப் பழக்கமாகவோ, அடிமையாகவோ அவர்கள் ஆனதில்லை. மறுதலையாக நம் ஊர் விடுதிகளில் வழங்கப் பெறும் உணவுகள் பெரும்பாலானவை ஐரோப்பிய, அமெரிக்கச் சுவை நோக்கிச் சென்றுவிட்டன.
ஐரோப்பியருடைய பண்பாடு, உடல் சார்ந்தது; லவுகீகத்தை அடிப்படையாகக் கொண்டது. நம் பண்பாடு மனம் சார்ந்தது; ஆன்மிகத்தை அடிப்படையாகக் கொண்டது. அவர்கள் மூளைக்கே முதலிடம் கொடுப்பர்; நாம் இதயத்திற்கு முதலிடம் கொடுப்பர். அவர்களுக்கு அறிவியல் முக்கியம்; நமக்கோ கலையில் முக்கியம்.
இந்நிலையில், நம் ஊரிலேயே நம் உணவு முறை, உடை முறை, குடும்ப உறவு முறை, நல்ல பழக்க வழக்கப் பண்பாடுகளை நாம் ஏன் இழக்க வேண்டும்? பெற்றவளே குழந்தையைக் கைவிட்டு விட்டால், அக்குழந் தையை எடுத்து வளர்ப்பார் யார்? ஐரோ-அமெரிக்க முறைகளுக்கு மாறினதால் வந்துள்ள வயிறு, குடல் சார் நோய்களையும், பாலுறவு நோய்களையும் வராமல் தடுத்துக் காத்துக் கொள்வது எங்ஙனம் சாத்தியமாகும்?
இஸ்ரேல் நாட்டு யூதர்களைப் பற்றிய வரலாறு உலகம் அறிந்த ஒன்று. கி.மு.,வில் தம் பிறந்தகத்தை விட்டு ரோமானியர்களால் விரட்டப்பட்ட அவர்கள் உலக நாடெங்கும் அகதிகளாகவும், அனாதைகளாகவும் திரிந்தனர் என்றாலும், சென்ற இடங்களில் சிக்கனமாக இருந்தனர். கல்வி கற்பதில் முனைப்போடு இருந்தனர்.
அனைத்திலும் மேலாகத் தம் சமய ஆசாரங்களைக் கடைப்பிடிப்பதில் உறுதியாக இருந்தனர். 1948ல் இஸ்ரேல் தனி நாடாக மத்திய ஆசியப் பகுதியில் உருவான போது, அவர்களுடைய தாய்மொழி ஹீப்ரு பேசப்படும் மொழியாக இல்லை. அவர்கள் கோவில்களில் பூஜை மொழியாக மட்டுமே இருந்தது. அத்தகு நிலையிலிருந்த மொழியை உயிர்ப்பித்து, புதிதாக எழுத்தமைத்து இஸ்ரேலிய ஆட்சி மொழி ஆக்கினர். உலகம் முழுவதும் பரவிக் கிடக்கும் யூதர்களைத் தாயகம் நோக்கி அழைத்தனர்.
அப்போது, கேரளப் பகுதியிலிருந்தும், வடகிழக்கு இந்தியப் பகுதியிலிருந்தும் யூதப் பரம்பரையினர் தம் தாயகம் செல்லத் துடித்தனர். உடனே, அவர்களை இஸ்ரேலிய அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் உண்மையாக யூதப் பரம்பரையில் வந்தவர்கள் தானா என்று பரிசோதித்துப் பார்த்தனர்.
பரிசோதனையில் முக்கியமானது, அவர்கள் தங்கள் பூர்வீக மதச் சடங்குகளைக் கொண்டுள்ளனரா என்பது தான் முதலாவதாக இருந்தது. அதன் அடிப்படையில் அம்மக்கள் இஸ்ரேலியக் குடிமக்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டனர். தம் பாரம்பரிய வேர்களை இழக்காமல் எத்துணைச் சோதனைகள் நேர்ந்த போதும், அவற்றைக் காப்பாற்றிக் கொள்வதில் உலக மக்களிடையே யூதர்களுக்கு முதலாவது இடம் கொடுக்க வேண்டும்.
சமூக உளவியல் அறிஞர்கள், சீனர்களைத் தம் பாரம்பரியத் தைக் கப்பாற்றுவதில் குறிப் பிட்டுப் பேசுகின்றனர். சீனர்கள் அடிப்படையில் தாம் தாம் உலகத்தில் உயர்ந்தவர்கள் என்று நம்புகிறவர்கள். தம் மொழி, பண்பாடு, நாகரிகம் ஆகியன தாம் உயர்ந்தவை என்று கருதுகிறவர்கள். தலைமைக்குக் கட்டுப் படுகிறவர்கள். உலகத்தின் எந்த மூலை முடுக்கிலிருந்தாலும் தங்கள் அடையாளத்தை இழக்காமல் காப்பாற்றிக் கொள்பவர்கள். அவர்களுடைய பெயர், மூன்று கூறுகளை உடையதாக இருக்கும். குடும்பப் பெயர், இனப் பெயர், தன் பெயர் என அமைந்திருக்கும். சான்றாக மா சே துங். இம்மூன்று கூறுகளும் மேற்கண்ட வரிசை முறையை உடையவை.
இம்முறையை அவர்கள் விட்டுக் கொடுப்பதே இல்லை. நிர்பந்தங்களின் காரணமாக எங்கேனும் மதம் மாற நேர்ந்தாலும், அவர்களுடைய சீனப் பெயரும் ஒட்டிக் கொண்டிருக்கும். இந்தப் பிடிவாதம் தான், 15ம் நூற்றாண்டில் ஐரோப்பியர் சீனாவை அடிமைப்படுத்த முயன்ற போது, அரசர் உட்பட அனைவரையுமே எதிர்க்க வைத்தது.
இதில், அவர்கள் முழு அளவு வெற்றி பெறவில்லை என்றாலும், முழு வெற்றி பெற்றவர்கள் சீன (மங்கோலிய) இனத்தைச் சேர்ந்த ஜப்பானியர்கள், தாய்லாந்துகாரர்கள். ஐரோப்பியர்களுக்கு அடிமைகளே ஆகாத ஆசிய நாடுகள் இவை என்பது உலக வரலாறு. புதிய கடவுள் போதனை செய்ய வருகிறோம் என்று நெதர்லாந்தில் இருந்தும் பிரான்சிலிருந்தும் மத போதகர்கள் தம் நாட்டிற்கு வந்த போது, அவர்களை உள்ளே நுழையவே ஜப்பானிய அரசும், தாய்லாந்து அரசும் அனுமதி அளிக்க மறுத்து விட்டன.
யூதர்கள், சீனர்கள் மட்டுமின்றி, இன்று உலகெங்கும் தம் ஆதிக்கத்தைச் செலுத்தும் ஐரோப்பிய, அமெரிக்கர்களுக்கு மூலவரான கிரேக்கரும் ரோமானியரும் தம் வேர்களை இழக்காத வித்தகர்கள் என்று சொல்ல வேண்டும். மிகப் பழைய பண்பாட்டையும், நாகரிகத்தையும் உடையது கிரேக்கம். அதனது பாதிப்பால் மேலும் பரிணமித்தது ரோமானியம்(இத்தாலி).
இவ்விரண்டிலிருந்து தான் ஐரோப்பிய மேற்குலகக் கலாசாரம் பிறந்து வளர்ந்து, தழைத்து உலகம் முழுவதும் படர்ந்தது. ஐரோப்பிய நாடுகள், தமக்குள் முரணிக் கொள்ளுமே தவிர, ஆசிரியர், ஆப்ரிக்கர் முதலானோர்க்கு அடிமை ஆனதே இல்லை. (மங் கோலியத் தலைவன் செங்கிஸ் கான் ஆண்ட சில காலம் தவிர)
நிக்காலோ மானுச்சி (கி.பி.1653-1708) என்ற இத்தாலியரின் பயணக் குறிப்பு இதை மேலும் உறுதி செய்கிறது. கி.பி.1653ல் வெனிஸ் நகரத்தில் இருந்து புறப்பட்ட கப்பல் வழி, மானுச்சி 14 வயது சிறுவனாக உலகைச் சுற்றிப் பார்க்கும் ஆசையில் புறப்பட்டார். கடலிலும் தரையிலுமாக 1380 மைல் கடும் பயணம் செய்து, தன் நண்பர் ஒருவருடன் இந்தியா வந்தடைந்தார். அப்போது, இந்தியாவை அவுரங்கசீப் ஆண்டு கொண்டிருந்தார்(1658).
உடன் வந்த நண்பர் இறந்து விட, மொகலாயச் சட்டப்படி, நண்பரின் உடைமைகளை நேரில் கைப்பற்ற அரசாங்க அதிகாரி, மானுச்சி தங்கி இருந்த இடத் திற்கு படை பரிவாரங்களுடன் வந்தார். வந்தவர், மானுச்சியின் உடைமைகளையும் சேர்த்துக் கைப்பற்றினார். மானுச்சி தடுத்தார். அப்போது, மொகலாய அரசு அதிகாரி, "நீ எங்கள் அரசருடைய அடிமை' என்று சீறினார். அதை மறுதலித்த மானுச்சி, "ஐரோப்பியர்கள் என்றும் எப்பொழுதும் எவருக்கும் அடிமையாக இருந்ததில்லை; இருக்கவும் மாட்டார்கள்,'' என்று கர்ஜித்தார். பின்னாளில், அவரே டில்லி அரச ஆலோசகராய் பதவியில் அமர்ந்தார்.
ஆக கூர்ந்து பார்த்தால், உலகில் பல நூறு ஆண்டுகளாகத் தம் தலைமையை உலக வரைபடத்தில் இருந்து இழக்காமல் நிரந்தரப்படுத்திக் கொண்டிருக் கும் யூதர், சீனர், கிரேக்கர், ரோமானியர் முதலான ஐரோப் பிய இன மக்களிடம் இருந்த மிக முதன்மையான பண்பு, தம் பாரம் பரியத்தை இழக்காமை தான்.
எனவே தான், உலகம் முழுவதும் பரவியிருக்கும் பண்பாட்டுத் தழுவுதலை மூன்று வகையாக்கி அறிஞர்கள் சொல்கின்றனர்.
முதல் வகை : ஐரோப்பிய முறை: ஐரோப்பியர் தம் தாயகத்திலும் செல்லும் இடங்களிலும் தம் மொழி, பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றை இழக்காததுடன், சென்ற இடங்களில் வாழும் உள்நாட்டு மக்களிடமும் பரப்பி விடுவர். உள்நாட்டு மக்கள் தம் மொழி, பண்பாடு, நாகரிகத்தை விட ஐரோப்பியருடையது தான் உயர்ந்தது என்று நம்பவும் வைத்து விடுவர்.
இரண்டாம் வகை : யூத முறை: தாய் நாட்டிலிருந்து பல்வேறு நாடுகளுக்குச் சிதறிய யூதர்கள், தமக்குரிய பண்பாடு முதலானவற்றை இழக்கமாட்டர். அன்றியும் தம்முடையவற்றை மற்றவர்கள் மேல் திணிக்கவும் மாட்டர்.
மூன்றாவது வகை : நீக்ரோ முறை: இம்மக்கள் தம்மையும், தம் தாயகத்தையும் அடிமைப்படுத்திய அயல்நாடுகளின் இறக்குமதிப் பண்பாடு முதலானவற்றை ஏற்றுக் கொள்வதுடன், தம்முடைய பாரம்பரியப் பண்பாட்டையும் தம் தாயகத்திலேயே இழந்து விடுவர்; இழிவாகவும் கருதுவர். இம்மூன்று முறைகளில் நாம் எந்த முறையைச் சேர்ந்தவர்கள் என்பதை எண்ணிப் பார்ப்போமா?
நன்றி தினமலர்
அதிருப்திஎம்.பி.,க்கள் பதவி பறிபோகும்அபாயம்
ம.தி.மு.க.,வின் அதிருப்தி எம்.பி.,க்கள் இருவரும் கொறடா உத்தரவை மீறி, மத்திய அரசுக்கு ஆதரவாக பார்லிமென்டில் ஓட்டளித்தால் பதவி பறிப்பை சந்திக்கும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐ.மு., கூட்டணி அரசு, வரும் 22ம் தேதி பார்லிமென்டில் நம்பிக்கை ஓட்டெடுப்பை சந்திக்கவுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 40 எம்.பி.,க்களில், மத்தியில் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க., - 16, காங்கிரஸ் - 10, பா.ம.க., - 6 ஆகிய 32 எம்.பி.,க்கள் மத்திய அரசுக்கு ஆதரவாக ஓட்டளிக்க உள்ளனர். ம.தி.மு.க., - 4, இந்திய கம்யூனிஸ்ட் - 2, மார்க்சிஸ்ட் - 2 ஆகிய எட்டு எம்.பி.,க்கள் மத்திய அரசுக்கு எதிராக ஓட்டளிக்க உள்ளனர்.இதில், ம.தி.மு.க., சார்பில் அதிருப்தி எம்.பி.,க்களாக வலம் வரும் ராமச்சந்திரன்,
கணேசன் இருவரும் என்ன நிலையை மேற்கொள்வர் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இவர்கள் இருவரும் மத்திய அரசுக்கு ஆதரவாக ஓட்டளிப்பர் எனக் கூறப்படுகிறது. "தி.மு.க., காட்டும் வழியில் செல்வோம்' என கணேசன் கூறியிருந்தார். இவர்கள், ஐ.மு., கூட்டணி அரசுக்கு ஆதரவாக ஓட்டளித்தால், மத்திய அரசுக்கு தமிழகம் சார்பில் 34 ஓட்டுகள் கிடைக்கும். ஆனால், இவர்கள் இன்னும் ம.தி.மு.க.,வின் அடிப்படை உறுப்பினர்களாகவே நீடிப்பதால், கட்சி கொறடாவின் உத்தரவை மீற முடியாது.
ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவருகிறார். அவர், நாளை சென்னை திரும்புகிறார். அவர் வந்ததும் கட்சி கொறடா கிருஷ்ணன் மூலமாக நான்கு எம்.பி.,க்களுக்கும் கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது. கட்சி சார்பில் மத்திய அரசுக்கு எதிராக ஓட்டளிக்கும்படி உத்தரவிட்டு, அதை மீறி செஞ்சி ராமச்சந்திரன், கணேசன் இருவரும் ஆதரவாக ஓட்டளித்தால், கட்சி நடவடிக்கையை சந்திக்க நேரிடும். ம.தி.மு.க., சார்பில் சபாநாயகரிடம் புகார் தெரிவித்தால் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி எம்.பி.,க்கள் இருவரின் பதவியையும் பறிக்கும் நிலை ஏற்படும்.
நன்றி தினமலர்
தொலைபேசி ஒட்டுக்கேட்பு விசாரணை
தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத் தின் ஓய்வுபெற்ற நீதிபதி விசாரணை நடத்துவார் என்று மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் சட்டப் பேரவையில் 15-4-2007 அன்று அறிவித்திருந்தார். அதன்படி, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பி. சண்முகம் விசாரணை அதிகாரியாக நியமிக்கப் பட்டது, அவர் தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரம் குறித்து விசாரணை செய்து 3 மாதங்களில் அரசுக்கு விசாரணை அறிக்கையை அளிப்பார் என 16-4-2008 அன்று அறிவிக்கப்பட்டது.அந்த அறிவிப்பினைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட நீதியரசர் பி. சண்முகம் 19-5-2008 அன்று இடைக்கால விசாரணை அறிக்கை ஒன்றினை அரசுக்கு அளித்தார். அதன் தொடர்ச் சியாக இன்று (ஜூலை 14) தமது விசாரணையின் முழு அறிக்கையினை முதலமைச்சர் கலைஞர் அவர்களிடம் நீதி யரசர் பி. சண்முகம் வழங்கினார்.அவ்வமயம், உள்துறைச் செயலாளர் எஸ். மாலதி, (இ.ஆ.ப.) பொதுத்துறைச் செயலாளர் டி. ஜோதி ஜெகராஜன் (இ.ஆ.ப.) ஆகியோர் உடனிருந்தனர்.
Labels: செய்திகள்
இன்று சர்வதேச மட்டத்தில் உள்ள மூன்றாம் உலக நாடுகளில் 2004 ஆம் ஆண்டு நிகழ்ந்த சுனாமியிலும் பார்க்க ஒரு புதுமையான மௌன சுனாமியை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்
தமிழ்மொழியை அரச காரியாலயங்களில் உடனடியாக அமுல்படுத்தக்கோரி நுவரெலியா சகவாழ்வு மன்றத்தினர், நுவரெலியா மாவட்டத்திலுள்ள சுமார் 80 ஆயிரம் தமிழ், சிங்களம், முஸ்லிம்களின் கையொப்பங்களுடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளனர்.
அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
இருபது ஆண்டுகளுக்கு மேலாக சிங்களமும் தமிழும் அரசகரும மொழியாதல் வேண்டும் என அரசகரும மொழிச் சட்டத்தின்படி அரசயாப்பின் கீழ் கட்டளையிடப்பட்டிருப்பினும், 2008 இல் வடக்கு மற்றும் கிழக்கிற்கு வெளியில் தமிழிலும் வடக்கு மற்றும் கிழக்கில் சிங்களத்திலும் அரசாங்கத்துடன் கொடுக்கல் வாங்கல் செய்ய இன்னமும் முடியாதுள்ளது.
மொழியானது எம் நாட்டைப் பிரித்துவிட்டது. மொழிப் பிரச்சினைகள் காரணமாக எம் நாட்டில் மனித உரிமை மீறல்கள் பெருகிவிட்டன. சட்டப்படி இருக்க வேண்டியிருப்பினும் தமிழ்மொழியில் பரிச்சயமில்லாத அதிகாரிகள் பொலிஸ் நிலையங்களிலும் இராணுவத்திலும் இருப்பதன் காரணமாக தமிழ் மக்கள் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்.
ஒரே ஒரு அரசகரும மொழியில் காணப்படும் அறிவித்தல் பலகைகள் அந்த மொழியை வாசிக்க முடியாத அனைவரையும் ஒதுக்கிவிடுகின்றன. இந்த நிலைமை நாடெங்கிலும் உள்ள வைத்தியசாலைகள், பாடசாலைகள், நீதிமன்றங்கள், பொலிஸ் நிலையங்கள் மற்றும் அரச நிறுவனங்களில் காணப்படுகின்றது.
சிங்கள மொழியில் மாத்திரம் அச்சிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ ஆவணங்கள் அந்த மொழியை வாசிக்க முடியாத மக்களுக்கு அர்த்தமில்லாததாகின்றன. இந்த நாட்டின் பிரஜைகளுக்கு இந்த ஆவணங்களைப் பரிசீலிப்பதற்கான வாய்ப்பு தேவைப்படுகின்றது. அத்துடன், தமது தாய்மொழியில் அரசுடன் தொடர்பாடல் செய்ய அவர்களுக்கு உரிமை உண்டு.
மாவட்டச் செயலகங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பிரிவுகளிலெல்லாம் இரு மொழி நிர்வாகம் அமுலாக்கம் செய்யப்பட வேண்டும். சகல அரச நிறுவனங்களிலுமுள்ள அறிவித்தல் பலகைகளும் ஆவணங்களும் இரு அரச கரும மொழிகளிலும் வழங்கப்பட வேண்டும். இரு அரச கரும மொழிகளிலும் பரிச்சயம் பெற்ற போதுமான ஆளணியினர் உடனடியாக அரச நிறுவனங்களில் நியமிக்கப்படவேண்டும்.
மொழிப் பரிவர்த்தனை சேவையொன்று தாபிக்கப்படல் வேண்டும். இதன்மூலம் பொலிஸ் திணைக்களம், நீதிமன்றம் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களிலும் இரு அரச கரும மொழிகளிலும் சேவைகளை வழங்க முடியும். அரச நிறுவனங்களில் குறிப்பாக ஆஸ்பத்திரிகள், பொலிஸ் மற்றும் இராணுவத்தில் இனவாரியான சமத்துவம் பேணப்படல் வேண்டும். பாடசாலை வயதையடைந்த அனைத்து பிரஜைகளுக்கும் இலவச மொழிப் பயிற்சிக்கான வாய்ப்புகள் அளிக்கப்படுவதுடன், பாடசாலைகளில் இரு அரசகரும மொழிகளிலும் கற்றல் நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளத
Labels: செய்திகள்





