தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

நாம் வாழும் இந்த பூமியை வாழவிடுங்களேன்... * உங்களது சிறிய முயற்சி பூமி தகிப்பதை தடுக்கும்!

திடீர் மழை... எதிர்பாராத வெள்ளம்... கடுமையான வறட்சி என்று நாம் அடிக்கடி பத்திரிகையில் செய்திகளைப் படிக்கிறோம். பருவ காலத்தில் தூறலுடன் நின்றுவிட்டு, பருவம் தவறியபின் மழை கொட்டித் தீர்ப்பதையும் நாம் பார்த்திருக்கிறோம். இயற்கையின் இந்த மாற்றத்துக்கு காரணம் என்ன? இந்த மாற்றத்தை நம்மால் தடுக்க முடியுமா?ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் பூமியின் வெப்பம்தான், இந்த பருவ மாற்றத்துக்கு காரணம். இதற்கு நாம்தான் மறைமுக காரணம். ஆகவே நாம் மனம் வைத்தால்தான் பூமியின் வெப்பம் மேலும் உயராமல் தடுக்க முடியும்.
தொழிற்புரட்சி ஏற்பட்டு தொழிற்சாலைகளின் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கிய பின்னர் பூமியின் சராசரி வெப்பநிலை 0.8 டிகிரி செல்சியஸ் அதிகரித்திருக்கிறது. இது ஏறத்தாழ ஒரு டிகிரி வெப்பநிலைக்குத்தான் சமம் என்றாலும் கூட, துருவப்பகுதியில் உள்ள பனி உருக இதுபோதுமானது. இதனால் கடல் மட்டம் உயரும். பல தீவு நாடுகளுக்கு சேதம் ஏற்படும். மலை உச்சியில் உள்ள பனி உருகிவிட்டால், கோடை காலங்களில் ஆறுகள் வறண்டு பாலைவனமாகிவிடும்.பூமி எப்படி வெப்பமடைகிறது என்பதை அறிந்து கொள்ளும் போது, நம்மால் இயன்ற அளவுக்கு அது வெப்பமடைவதிலிருந்து தடுக்க முடியும் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
சூரியனிலிருந்து வரும் வெப்பக்கதிர்கள், புவியின் மேற்பரப்பில் பட்டு அதை சூடேற்றுகிறது. இந்த கதிர்கள் பூமியின் மேற்பரப்பால் "எதிரொளிக்கப்பட்டு' இந்த வெப்பத்தின் ஒரு பகுதி மீண்டும் விண்வெளிக்கே சென்றுவிடுகிறது. எனினும் வளிமண்டலம் போர்வை போல் காத்து மீதமுள்ள வெப்பத்தை பூமியிலேயே தக்க வைக்கிறது.பூமியிலிருந்து வெளியேறும் வெப்பம் மற்றும் பூமியிலுள்ள வெப்பம் ஒரு குறிப்பிட்ட விகித்தில் இருக்க வேண்டும்.
வாகனங்கள் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு, ஏ.சி., மற்றும் பிரிட்ஜ்கள் வெளியிடும் குளோரோ புளோரோ கார்பன்கள், தொழிற்சாலைகள் வெளியிடும் நைட்ரஜன் ஆக்சைடு, கால்நடைகள் வெளியேற்றும் மீத்தேன் உள்ளிட்டவை வளிமண்டலத்தில் சேர்ந்து வினைபுரிந்து மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் வளிமண்டலம் அதிகப்படியான வெப்பத்தை தக்கவைத்துக் கொள்ளும் நிலை ஏற்படுவதால் பூமி சூடேறுகிறது.சூரியனிலிருந்து வெளியாகும் அகச்சிவப்பு கதிர்கள் அதிக வெப்பமிக்கவை. இவற்றை பூமிக்குள் விடாமல் அரண் போல் காக்கும் ஓசோன் படலத்தையும் கார்பன் மாசு வினைபுரிந்து அவற்றை இல்லாமல் ஆக்கிவிடுவதால் பூமி சூடேற இன்னொரு காரணம் ஆகிவிடுகிறது.2050ம் ஆண்டுக்குள் கார்பன் வெளியேற்றத்தை 50 சதவீதம் குறைத்து, புவி வெப்ப உயர்வை 2 டிகிரிக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்று உலக நாடுகள் முயற்சி எடுத்து வருகின்றன.
பெட்ரோலியப் பொருட்கள், நிலக்கரி உள்ளிட்டவற்றிலிருந்துதான் 40 சதவீதத்துக்கும் அதிகமான கார்பன் வெளியேற்றப்படுகிறது. இதனால் சூரிய சக்தி மற்றும் காற்று சக்தியை மாற்றாக பயன்படுத்துவது அவசியமாகிறது. என்றாலும் இன்று அத்தியாவசியமாகிவிட்ட வசதிகளால் கார்பன் வெளியேற்றத்தை தடுக்க முடியாது. அதேசமயம் அவற்றை கட்டுப்படுத்தலாம்.எரிசக்தியை வீணடிக்காமலும் சிக்கனமாகவும் பயன்படுத்தினாலே பூமி ஓரளவுக்கு தப்பிவிடும் என்பது விஞ்ஞானிகள் ஆசைப்படுகின்றனர்.
3 ஆயிரம் கி.மீ., ஓடும் ஒரு கார் 1.3 டன் கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றுகிறது. 2,500 கி.மீ., விமானத்தில் பயணம் செய்யும் பயணி ஒவ்வொருவருக்கும் இதே வீதத்தில் கார்பன் வெளியேற்றப்படுகிறது.மின்உற்பத்தியின் போதும் கார்பன் வெளியேறுவதால், மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தினால் கணிசமான அளவுக்கு கார்பன் வெளியேற்றத்தை குறைக்க முடியும். குறைந்த மின்சக்தியை செலவழிக்கும் சி.எப்.எல்., பல்புகளை தேர்வு செய்யலாம். சி.எப்.எல்., பல்புகளுக்கு அனைவரும் மாறினால் உலகம் முழுவதிலிருமிருந்து வெளியேறும் 500 டன் கார்பன் குறையும்.
"டிவி', "டிவிடி', கம்ப்யூட்டர்கள், மொபைல் போன் சார்ஜர் உள்ளிட்டவற்றை நீங்கள் பயன்படுத்தாத போது அவற்றை அணைத்துவிட வேண்டும். பழைய வாஷிங்மிஷின், பிரிட்ஜ், இன்வெர்டர் பேட்டரிகள் அதிக மின்சாரத்தை பயன்படுத்தும். ஏர்கண்டிஷனர்களை தூய்மையாக்கி பயன்படுத்துவதால் ஒரு ஆண்டுக்கு 158 கிலோ கார்பன் வெளியேற்றத்தை தடுக்க முடியும்.
அருகில் உள்ள பகுதிகளுக்கு சைக்கிளிலும் நடந்து செல்லும் தூரப் பகுதிகளுக்கு நடந்தே செல்வதும், கார்களில் தேவையில்லாத பொருட்களை அகற்றி தூய்மையாக வைத்துக் கொண்டு, அவசியம் ஏற்பட்டால் மட்டும் பயன்படுத்துவதும் கார்பன் வெளியறி சுற்றுச்சூழலை கெடுப்பது தவிர்க்கப்படும். கிராமங்களில் சாண எரிவாயு அடுப்புகளை பயன்படுத்துவது எரிபொருள் சிக்கனத்துக்கும் வளிமண்டல பாதுகாப்புக்கும் உதவும்.மரங்கள் மொத்தமாக அழிக்கப்படுவதை தடுக்க வேண்டும். மரங்கள் அதிகரிக்கும் போது அவை வளிமண்டலத்தில் உள்ள கார்பனை தூய்மைப்படுத்தும்.
நம் வாழ்க்கையில் சிறிய மாற்றங்களை உருவாக்குவதன் மூலம் நம் எதிர்கால சந்ததியினருக்கு முழுமையாக பயன்படும் வகையில் இந்த பூமியை மாற்றி அமைக்கலாம். நாம் வாழும் இந்த பூமியையும் வாழவிடலாமே...!



அஞ்சாநெஞ்சரும், தளபதியும் கைகோத்து விட்டார்கள். தி.மு.க.வின் ஒளிமயமான எதிர்காலத்துக்கு இனி என்ன வேண்டும்?' என்று தி.மு.க.வினர் ஒருபக்கம் மகிழ்ச்சியில் ஊறித் திளைத்திருக்க, மறுபக்கம் இந்த இரு சகோதரர்களுக்கும் இடையில் இன்னமும் ஈகோ கொஞ்சம் எட்டிப்பார்ப்பதாகவே தெரிகிறது. உள்ளுக்குள் ஓர் உரசல் வந்து ஊடாடவே செய்கிறது. இந்த அண்ணன், தம்பி ஈகோ பிரச்னைக்கு தற்போதைய உதாரணம்தான் மலர்விழி சம்பவம்.
கலைஞரின் காலில் விழுந்ததால் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஆண்டிபட்டி அ.தி.மு.க. சேர்மன் மலர்விழி, தற்போது தி.மு.க.வில் சேர்ந்து தமையனுக்கும், தம்பிக்கும் இடையே ஒரு புதிய தகராறை, தனக்குத் தெரியாமலே உருவாக்கி இருக்கிறார். ``இந்த மலர்விழி எந்த நேரத்தில் தி.மு.க.வில் சேர்ந்தாரோ தெரியாது, அவரால் ஆளும்கட்சியின் அண்ணன், தம்பிக்குள் மறுபடியும் ஈகோ பிரச்னை இழையோட ஆரம்பித்திருக்கிறது'' என்று புலம்பித் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள் தி.மு.க.வினர். குறிப்பாக தென் மாவட்ட தி.மு.க.வில் உள்ள ஸ்டாலின் ஆதரவாளர்கள்.
ஜூலை 28-ம்தேதி! சென்னையில் உள்ளாட்சி நிர்வாகிகளுக்கு கார் வழங்கும் விழா நடந்தது. அப்போது ஸ்டாலின் முன்னின்று அறிமுகப்படுத்தி வைக்க, கலைஞரின் காலில் விழுந்து, கார் சாவியை வாங்கியதன் மூலம் பரபரப்பை ஏற்படுத்தினார் ஆண்டிபட்டி யூனியன் அ.தி.மு.க. சேர்மன் மலர்விழி. `இவர் ஏன் கருணாநிதியின் காலில் விழுந்தார்?' என்று அ.தி.மு.க. வட்டாரங்களில் அதிர்ச்சி அலைபாய ஆரம்பித்த போது, மலர்விழியோ, ``இது தற்செயலாக நடந்த நிகழ்ச்சி. நான் என்றுமே அம்மாவின் தீவிர விசுவாசிதான்'' என்று அறிக்கை விட்டார்.. ஆனாலும்கூட அ.தி.மு.க. தலைமை அதில் சமாதானமாகவில்லை.
`இனி தன் தலை தப்பாது' என்பதைத் தெரிந்துகொண்டு மலர்விழி தி.மு.க.வுக்குத் தாவ முடிவெடுத்த நேரத்தில்தான், அவர் தன்னிலை விளக்கம் கொடுத்திருந்த போதிலும், ஆகஸ்ட் 2-ம்தேதி அவருக்கு கல்தா கொடுத்து விட்டார் ஜெ.
அந்த சூட்டோடு சூடாக மலர்விழியை தங்கள் கட்சியில் ஐக்கியமாக்க தி.மு.க. ஆவன செய்தது. ஆகஸ்ட் 6-ம்தேதி மதுரையில் நடந்த டி.எம்.எஸ். விழாவின் போது கலைஞர் முன்னிலையில் மலர்விழியைத் தி.மு.க.வில் சேர்க்க ஏற்பாடானது. அந்த விழா `அரசியல் விழா' அல்ல என்பதால் மலர்விழி சற்று `வெயிட்டிங்கில்' வைக்கப்பட்டார்.
இதற்கிடையே அமைச்சர் ஸ்டாலின் செப்டம்பர் மாதம் திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் விசிட் அடிக்க திட்டம் தயாரானது. அப்போது தேனியில் பிரமாண்டமான கூட்டம் ஒன்றை நடத்தவும், அந்தக் கூட்டத்தில் ஸ்டாலின் முன்னிலையில் மலர்விழியை தி.மு.க.வில் இணைக்கவும் ஜரூராக ஏற்பாடுகள் நடந்தன.
ஏற்கெனவே, `கடந்த 5-ம்தேதி நடந்த ஸ்டாலினின் தூத்துக்குடி விசிட், 18-ம்தேதி நடந்த மதுரை மேம்பாலத் திறப்பு விழா ஆகியவற்றில் அஞ்சாநெஞ்சரின் ஆதரவாளர்கள் தளபதிக்குப் போதிய அளவு ஆதரவு தரவில்லை. அதனால் தளபதி அப்செட்டானார்' என்ற அங்கலாய்ப்பும் கவலையும் ஸ்டாலின் ஆதரவாளர்களிடம் இருந்து வந்தது. இந்த நிலையில் அழகிரி தரப்பிடம் இருந்து கிரீன் சிக்னல் கிடைக்காததால், ஸ்டாலினின் தேனி விசிட் ஒரு முடிவுக்கு வராமலேயே இருந்த நிலையில், மலர்விழி பிரச்னையில் ஒரு புதுத் திருப்பம்.
தளபதி, அழகிரி ஆகிய இருதரப்புக்கும் விசுவாசி போல இருந்து வரும் தேனி மாவட்ட தி.மு.க. மாவட்டச் செயலாளர் மூக்கையாவுக்கு கடந்த 22-ம்தேதி அழகிரியிடம் இருந்து திடீர் அழைப்பு வந்திருக்கிறது. `மலர்விழியை அழைத்துக் கொண்டு உடனே மதுரைக்கு வரும்படி' அழகிரியிடம் இருந்து வந்த செல்போன் அழைப்பால் குழம்பிப் போயிருக்கிறார் மூக்கையா. உடனடியாக மலர்விழி மற்றும் போடி எம்.எல்.ஏ. லட்சுமணன் சகிதம் அன்று மதியம் மூன்று மணிக்கு மதுரையில் அழகிரியைச் சந்தித்திருக்கிறார் அவர். அழகிரியின் வீட்டில் அவரிடம் ஆசி பெற்றார் மலர்விழி.
உடனே கோபாலபுரத்துக்குத் தொடர்புகொண்டு மலர்விழிக்கு மறுநாள் காலையில் கலைஞரைச் சந்திக்க அப்பாயின்ட்மெண்ட் வாங்கித் தந்திருக்கிறார் அழகிரி. அன்றிரவே சென்னைக்கு விமானமேறிய மலர்விழி, மறுநாள் 23-ம்தேதி காலையில் கோபாலபுரம் வீட்டில் கலைஞர் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்து கொண்டார். இந்தச் செய்தி மற்றும் மதுரையில் அழகிரியிடம் மலர்விழி ஆசி பெற்ற செய்தி போன்றவை அடுத்தடுத்த நாட்களில் பத்திரிகைகளில் வந்து பரபரத்தன. அதிலும் மதுரையில் அழகிரி வீட்டுக்கு மலர்விழி வந்தபோது, அங்கே முன்னேற்பாடாக இருந்த முரசொலி இதழ் புகைப்படக்காரர் காமிராவை `கிளிக்க', மறுநாள் அது பத்திரிகைகளில் படமாகக் காட்சி தந்தது.
இப்படி கலைஞர் முன்னிலையில் மலர்விழி கட்சியில் இணைந்த நேரம், ஸ்டாலின் அங்கே இருக்கவில்லை. மலர்விழி விவகாரம் தெரிந்து ஸ்டாலின் படு அப்செட்டானதாகக் கேள்வி. இதுபற்றி தனது தேனி மாவட்ட ஆதரவாளர்களிடம் பேசி, கொஞ்சம் வருத்தமாகவே அவர்கைளக் கடிந்து கொண்டாராம் ஸ்டாலின். `தளபதி விஷயத்தில் இப்படி `அசால்டாக' இருந்து விட்டோமே? சரியாக வாங்கிக் கட்டிக் கொண்டோமே' என்று வருத்தப்பட்டிருக்கிறார்கள் தேனி மாவட்ட ஸ்டாலின் ஆதரவாளர்கள். அதோடு தளபதியின் தேனி மாவட்ட விசிட் இனிமேல் இருக்குமோ? இருக்காதோ? என்ற கவலையும் அவர்களை ஆட்கொண்டிருக்கிறது.
இந்த வருத்தத்துக்கிடையிலும் ஸ்டாலின் ஆதரவாளர்கள் மத்தியில் ஒரு சிறிய நம்பிக்கைக் கீற்று. மதுரையில் அழகிரி நடத்திய டி.எம்.எஸ். விழாவின் போது தென்மண்டல தி.மு.க.வினர் அனைவருமே பிரிவு, பேதமில்லாமல் முடிந்தவரை அவரவர் `பங்களிப்பைச்' செய்திருக்கிறார்கள். அந்த விழாவுக்குப் பின்னால் இரு சகோதரர்களின் ஆதரவாளர்களுக்கும் இடையில் எப்போதும் இல்லாத அளவுக்கு உறவு வளர்ந்திருக்கிறது. அழகிரி தரப்பினர், ஸ்டாலின் தரப்பினரிடம் அடிக்கடி பேசி வரும் நிலை உருவானது. நிலைமை இப்படியிருக்க, மலர்விழியால் இந்தப் புதிய பிணைப்புக்கு எந்த ஆபத்தும் வந்து விடக்கூடாது என்று மனதுக்குள் வேண்டியபடி உள்ளனர் ஸ்டாலின் ஆதரவாளர்கள். `ஸ்டாலினின் தேனி விசிட் ஏற்பாட்டை அண்ணன் சொன்ன பின்னால் பண்ணுங்க' என்று அவர்களுக்குத் தகவல் வந்திருப்பதாகக் கேள்வி.
இந்த மலர்விழி குழப்பத்தால், ஸ்டாலின் மற்றும் அழகிரி ஆகிய இருதரப்புக்குமே ஆதரவாளர்கள் போல இருக்கும் தேனி மாவட்ட தி.மு.க. செயலாளர் மூக்கையா, போடி எம்.எல்.ஏ. லட்சுமணன், டெல்லி சிறப்புப் பிரதிநிதி கம்பம் செல்வேந்திரன் போன்றோர்தான் மிகவும் குழம்பிப் போயிருக்கிறார்களாம்.
தி.மு.க.வுக்குள் நுழைந்த வேகத்தில் அவரையும் அறியாமல் ஏகப்பட்ட அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கும் ஆண்டிபட்டி அ.தி.மு.க. சேர்மன் மலர்விழியுடன் நாம் இதுபற்றிப் பேசினோம்.
``வெள்ளிக்கிழமை காலையில் அழகிரி அண்ணனின் அப்பாயின்ட்மெண்ட் கிடைத்தது. அவரே தலைவரிடம் பேசி விமானத்தில் என்னை சென்னைக்கு அனுப்பி வைத்தார். சனிக்கிழமை காலை கோபாலபுரம் வீட்டில் கலைஞரைப் பார்த்தேன். ``ஏம்மா.. என் காலில் விழுந்ததால் உன்னைக் கட்சியை விட்டு நீக்கிட்டாங்களாமே?'' என்று கலைஞர் பரிவோடு என்னிடம் விசாரித்தார். கலைஞர் முன்னிலையில் தி,மு.க.வில் சேர்ந்தேன். என் மூன்று வயது மகள் யோகலட்சுமியை கலைஞர், ``கமான்.. கமான்'' என்று கூப்பிட்டு சந்தோஷமாகக் கொஞ்சியது இன்னும் என் கண்ணுக்குள் நிற்கிறது'' என்றார் மலர்விழி. வேறு எதையும் அவரிடம் பேசி நம்மால் பெயர வைக்க முடியவில்லை.
தேனி தி.மு.க. மா.செ. மூக்கையாவிடம் பேசினோம். ``சேர்மனுக்கான தேர்தல் நடந்து முடிந்தபோதே கொஞ்சம் டிரை பண்ணியிருந்தால் மலர்விழியை தி.மு.க.வில் சேர்த்திருக்கலாம். இப்போதும் மலர்விழி விஷயத்தில் முடிவு எடுக்க லேட்டாகி கடைசியில் அவர் அழகிரி அண்ணனைச் சந்தித்ததும், அவரே தலைவரிடம் பேசி, சென்னைக்கு அனுப்பி கட்சியில் சேர வைத்து விட்டார்.
தளபதியின் தேனி மாவட்ட விசிட் இப்போது தாற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 15-ம்தேதி திருச்சியில் நடக்க இருக்கும் முப்பெரும் விழா மீதுதான் இப்போது தளபதியின் முழுக்கவனமும் இருக்கிறது. நேரு, பொன்முடி, திருச்சி சிவா ஆகியோர் உதவியுடன் அதை பிரமாண்டமாக, ஒரு மாநாடு போல பிரமாதப்படுத்த அவர் திட்டமிட்டிருக்கிறார். மீண்டும் ஒருமுறை தென் மாவட்ட விசிட் அடிக்கும் முன், அதைத் திட்டமிட்டு சிறப்பாகச் செய்யவே தளபதி விரும்புகிறார்'' என்றார் மூக்கையா.
மலர்விழி விவகாரத்தால் கட்சிக்குள் பூத்திருக்கும் சலசலப்பு பற்றி நாம் கேட்க முயன்றபோது, ``அப்படியெல்லாம் எதுவுமில்லை. அப்படியே பிரச்னை வந்தாலும் அது படிப்படியாகத் தீர்ந்து விடும்'' என்றார்.
அ.தி.மு.க. தரப்பில் மலர்விழியைப் பற்றி விசாரித்தோம்.
``ஆண்டிபட்டி யூனியன் சேர்மன் பதவி மகளிர்க்கு அதுவும் எஸ்.சி. பிரிவுக்கு ஒதுக்கப்பட்டநிலையில் சுயேச்சையான மலர்விழி, சேர்மன் பதவி கேட்டு அவராகத்தான் அ.தி.மு.க.வுக்கு வந்தார். அப்போது அ.தி.மு.க.வில் நாங்கள் சேர்த்துக் கொண்ட இரண்டு பேரில் அவரும் ஒருவர். சுயலாபத்துக்காக கட்சிக்குள் வந்த மலர்விழி, கடைசிவரை கட்சியில் ஒட்டாமலேயே இருந்தார். கட்சிக்கு அவர் எந்த ஒத்துழைப்பும் தரவில்லை. அந்த அம்மாவை ஜெயிக்க வைக்க, ஒத்திவைக்கப்பட்டிருந்த தேர்தலை மீண்டும் நடத்த நாங்கள் பட்டபாடு கொஞ்சம் நஞ்சமில்லை. ரத்தக் காயம் எல்லாம் பட்டு ஜெயிலுக்குப் போனோம். ஆனால், அந்தம்மா இப்போது சொந்த லாபத்துக்காக தி.மு.க.வுக்குப் போய் விட்டார். நடுவில் வந்த அவர், நடுவிலேயே போய் விட்டார். `மலர்விழி ஏற்கெனவே கட்சியில் இருந்து விலக்கப்பட்டு விட்டார்' என்று ஓ.பி.எஸ். அறிக்கை கொடுத்திருக்கிறார். மலர்விழியால் தேனி மாவட்ட அ.தி.மு.க.வில் எந்தக் குழப்பமும் இல்லை. இழப்பும் இல்லை'' என்றனர் அவர்கள்.
யார் என்ன சொன்னாலும் மலர்விழியின் திடீர் நுழைவு, இணையத் தொடங்கியிருந்த இரு சகோதரர்களின் கைகளுக்குள் நுழைந்து சற்று இடைவெளியையும் உரசலையும் ஏற்படுத்தியிருப்பதைப் போலத்தான் தெரிகிறது. என்கிறார்கள் உடன் பிறப்புகள். ஸீ

புதுவை முதலமைச்சர் ரங்கசாமி பதவி விலக சோனியா உத்தரவு?

புதுச்சேரி மாநிலத்தில் புதிய முதலமைச்சரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக புதுவை முதலமைச்சர் ரங்கசாமியை பதவி விலகும்படி காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தி உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. இதனையடுத்து, புதிய முதலமைச்சரை தேர்ந்தெடுப்பதற்கான சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ரங்கசாமியை மாற்றவேண்டும் என்று, 5 அமைச்சர்களும், பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்களும் போர்க்கொடி உயர்த்தினர். இதனால், ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனையடுத்து, கடந்த திங்கள்கிழமை புதுவை வந்த மத்திய அமைச்சர் வயலார் ரவி தலைமையிலான குழு, சட்டமன்ற உறுப்பினர்களிடம் ஆலோசனை நடத்தியது. அப்போது, அமைச்சர் வைத்திலிங்கம் முதலமைச்சர் ஆவதற்கு எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, ரங்கசாமியை, முதலமைச்சர் பதவியில் இருந்து விலகும்படி சோனியாகாந்தி உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியானது. ஆனால், கட்சி மேலிட முடிவுக்காக, தான் காத்திருப்பதாக ரங்கசாமி தெரிவித்துள்ளார். இதனிடையே, புதுவையில், புதிய முதலமைச்சரை தேர்ந்தெடுப்பதற்கான சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இன்று நடைபெற இருப்பதாக காங்கிரஸ் மேலிட பார்வையாளர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத் தேர்தலில் புதிய அணி-தா.பாண்டியன்

கட்சியைத் துவக்கி சிரஞ்சீவி ஆவேசம் * பத்து லட்சம் ரசிகர்கள் திரண்டனர் * 'பிரஜா ராஜ்யம்' என பெயர் சூட்டினார

ஆந்திர அரசியலில் புது அவதாரம் எடுத்துள்ள தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, திருப்பதி நகரில் நேற்று நடந்த பிரமாண்ட கூட்டத்தில் தனது புதியக் கட்சிக்கு, "பிரஜா ராஜ்யம்' என பெயர் சூட்டினார். 10 லட்சம் ரசிகர்கள் திரண்டதால் திருப்பதி நகரமே திக்குமுக்காடியது. தெலுங்கு சினிமாவில் 148 படங்களில் நடித்து ஆந்திர மக்கள் மத்தியில் மெகா நடிகர் என்று அழைக்கப்பட்ட சிரஞ்சீவி, அரசியலுக்கு வருவார் என பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்டது. மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப தனது புதிய கட்சிக்கான பெயரை புனிதத் தலமான திருப்பதியில் நேற்று மாலை அறிவிப்பதாக தெரிவித்தார். இதற்கென, திருப்பதியில் அவிலாலா பகுதியில் 123 ஏக்கர் நிலப்பரப்பில் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு பல நாட்களாக தீவிர ஏற்பாடுகள் நடந்து வந்தன. பொதுக்கூட்டத்தில் பங்கேற்க ஆந்திரா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர். சிறப்பு ரயில்கள், ஆயிரக்கணக்கில் பஸ்கள் என ஆந்திராவே திருப்பதியை நோக்கி தான் என்று சொல்லுமளவிற்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. நேற்று காலை முதலே தொண்டர்கள் மைதானத்தில் குவியத் தொடங்கினர். ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவவும், திரளான மக்கள் கூட்டத்தை ஹெலிகாப்டரில் இருந்து படமாக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. ராகு காலம் முடிந்து, மாலை 5:30 மணிக்கு சிரஞ்சீவி மேடைக்கு வந்தார். மேடையில் தொண்டர்களைப் பார்த்து கையசைத்ததும் ஆரவாரம் எழுந்தது. தெலுங்கு சினிமா பாணியில் அவரது அறிவிப்புகள் இருந்தன. புதிய கட்சி என்பதால் சிரஞ்சீவி மட்டுமே நேற்று பிரதானமாக இருந்தவர்.
வழக்கமாக அரசியல் கட்சிகளின் மேடை என்றால் இரண்டாம் கட்ட தலைவர்கள் முழங்குவார்கள். கடைசியாக கட்சியின் தலைவர் பேசுவது வழக்கம். ஆனால், சிரஞ்சீவி தனது கட்சி துவக்க விழாவில் வேறு யாரையும் பேச அனுமதிக்கவில்லை. சிரஞ்சீவி ஒருவர் மட்டுமே சினிமா பாணியில் பேசினார். கட்சியின் பெயர் அறிவிப்பை வெளியிடும் போது தொண்டர்களோடு சேர்ந்து அறிவிக்கும் வகையில் மேடையை விட்டு கீழே இறங்கி வந்து தொண்டர்களுடன் இணைந்து வெளியிட்டார். சிரஞ்சீவியின் மைத்துனர் அல்லு அரவிந்த் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் மேடை அருகே அமர்ந்திருந்தனர்.
தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் சிலரும் கூட்டத்தில் பங்கேற்றனர். குடும்பத்தினரின் படங்களுடன் கூடிய பேனர்களை ஆங்காங்கே வைத்திருந்தனர். போலீஸ் பாதுகாப்பு போதுமான அளவில் இல்லை. தனியார் பாதுகாப்பு படையினர் பலர் பணியில் ஈடுபட்டிருந்தனர். கட்டுக்கடங்காத தொண்டர்கள் இருந்ததால் ஆங்காங்கே தள்ளுமுள்ளு ஏற்பட்டு தொண்டர்கள் காயமடைந்தனர். மின் விளக்குகள் பாதுகாப்பு இல்லாமல் அமைக்கப்பட்டிருந்ததால் மின்கசிவு ஏற்பட்டு தொண்டர்கள் சிலர் காயமடைந்தனர். தொண்டர்கள் வந்த வாகனங்கள் நெடுந்தொலைவில் நிறுத்தப்பட்டு விட்டதால் தொண்டர்கள் பல கிலோ மீட்டர் நடந்தே வந்து மேடையை அடைந்தனர். நரசாபுரம் எம்.பி., பதவியை ராஜினாமா செய்த காங்கிரஸ் பிரமுகர் ஹரிராம ஜோகையா, தொண்டர்களோடு தொண்டராக கூட்டத்தில் கலந்து கொண்டார். விழா துவங்கும் முன் நடன நிகழ்ச்சிகள், பாடல் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. சிரஞ்சீவி நடித்த பிரபல படங்களின் காட்சிகள் சில, டிஜிட்டல் திரையில் ஒளிபரப்பப்பட்டன. கட்சி அறிவிப்பு விழா முடிந்ததும் சிரஞ்சீவி தனது குடும்பத்தினருடன் திருமலைக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார்.
"8' ஐ விரும்பும் சிரஞ்சீவி: நடிகர் சிரஞ்சீவி எல்லா விஷயங்களில் தனது ராசி எண் "8' வரும்படி பார்த்துக் கொள்கிறார். நேற்று 26ம் தேதி கட்சி துவக்கினார். அதன் கூட்டுத் தொகை எட்டு. மாலை 5:30 மணிக்கு மேடை ஏறினார். அதன் கூட்டுத் தொகை "8'. கட்சியின் பெயரை 6:20 மணிக்கு அறிவித்தார். "ப்ரஜா ராஜ்ஜியம்' என்ற கட்சிப் பெயரின் கூட்டுத் தொகையும் "8' வருகிறது. கட்சியின் பெயர் அறிவித்ததும் தொண்டர்களின் கரகோஷமும் எட்டு நிமிடங்கள் நீடித்து கட்சித் தலைவரின் நம்பிக்கைக்கு விசுவாசம் காட்டினர். சிரஞ்சீவி 80 நிமிடங்கள் பேசியதும் குறிப்பிடத்தக்கது.
தேர்தல் கமிஷனில் பதிவு: திருப்பதியில் சிரஞ்சீவி புதுக்கட்சியைத் துவக்கும் அதே சமயத்தில், அவரது சார்பில் பிரதிநிதிகள் டில்லியில் நேற்று மாலை தேர்தல் ஆணையத்தில் புதுக்கட்சியைப் பதிவு செய்ய மனு செய்தனர். இது குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறுகையில், "ஆந்திராவில் புதுக்கட்சியைத் துவக்கியுள்ள நடிகர் சிரஞ்சீவியின் பிரதிநிதிகள், கட்சியைப் பதிவு செய்வதற்காக மனு கொடுத்துள்ளனர்' என்றனர். மனுவில் கட்சியின் பெயரை "பிரஜா ராஜ்யம்' என குறிப்பிட்டு உள்ளனர்.
சிரஞ்சீவி கூட்டத்தில் பெண் பலி : திருப்பதியில் சிரஞ்சீவியின் பொதுக்கூட்டத்தைக் காண வந்த ஒரு பெண் நெரிசலில் சிக்கி பலியானார்; மேலும், 35 பேருக்கு காயம் ஏற்பட்டது. இறந்த பெண் யார்? என்ற விவரங்கள் தெரியவில்லை.

தே.மு.தி.க.,வுக்கு காங். அழைப்பு

""காங்கிரஸ் தலைமையில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு தே.மு.தி.க.,வும் வரலாம்,'' என்று தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு அழைப்பு விடுத்தார்.சென்னையில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி: வ.உ.சி.,யின் வாரிசுகள் நான்கு பேர் நிரந்தரமாக தங்கியிருக்க வீடும், மாதந்தோறும் தேவையான அனைத்து உதவிகளும் காங்கிரஸ் சார்பில் வழங்கப்படும். நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்கள் யாராவது வாழ வழித் தெரியாமல் இருந்தால், அவர்கள் அனைவருக்கும் உரிய உதவி வழங்கப்படும்.
"மூழ்கும் கப்பல் காங்கிரஸ்' என்று கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் ஒரு பிரமாண்டமான கப்பல்; மூழ்காத கப்பல்; கப்பலில் இருந்து விழுந்தவர்களைக் காப்பாற்றும் கப்பல். பாதுகாப்பாகப் பயணம் செய்து வந்த இடதுசாரி தலைவர்கள், திடீரென்று கடலில் குதித்துவிட்டனர். இப்போது அவர்கள் தான் மூழ்கிக் கொண்டிருக்கின்றனர். "தமிழகத்தில் மதச்சார்பற்ற கட்சிகள் ஓர் அணியில் இருக்க வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். "பா.ம.க., இந்தக் கூட்டணியில் இருந்திருந்தால் பலம் அதிகரிக்கும்' என்று அவரே தெரிவித்துள்ளார். காலப்போக்கில் எல்லாம் நல்லதாக நடக்கும். தே.மு.தி.க., உட்பட எந்தக் கட்சியானாலும், காங்கிரஸ் தலைமையை ஏற்றால், அவர்களை எங்கள் கூட்டணியில் சேர்த்துக் கொள்வோம். காங்கிரஸ் எம்.எல். ஏ.,க்களின், ஆட்சியில் பங்கு விருப்பத்தை சோனியாவிடம் தெரிவித்துவிட்டோம். இவ்வாறு தங்கபாலு கூறினார்.

லவ் கிளப்

இத படிக்கிறப்ப நாம இருக்கிறது தமிழ்நாடுதானா என சந்தேகம் வருது

ஜாலி ஃப்ரெண்ட்ஷிப் சர்வீஸா?''

``ஆமா!''
``சார், நான் இதுல சேர்ந்துக்கணும். அதுக்கு என்ன செய்யணும்?''
``நீங்க சென்னையா? உங்க போன் நம்பரைப் பார்த்தாலே தெரியுது. முதல்ல ஐயாயிரம் ரூபா பணம் கட்டுங்க.''
``கட்டுனா என்னாகும் சார்?''
``உங்க ஏரியாவுல இருக்கிற பெண்களோட ஃபோன் நம்பர்களை அனுப்பி வைப்போம். நீங்க அவங்ககூட ஃப்ரெண்ட்ஷிப் வச்சுக்கலாம்.''``இவங்கள்லாம் வெறும் ஃப்ரெண்ட்ஷிப்புக்குதானா?''
``அது உங்க சாமர்த்தியம். ஃப்ரெண்ட்ஷிப் கிளப்பை நீங்க லவ் கிளப்பா மாத்திக்கலாம். செக்ஸ் கிளப்பா கூட மாத்திக்கலாம்'' எதிர்முனைக் குரலில் சிரிப்பு. நமது தயக்கமும் யோசனையும் எதிர்முனைக்காரருக்குத் தெரிந்துவிட்டது.
``யோசித்துச் சொல்லுங்க. பணத்தை எப்படி கட்டணும்னு உங்க நம்பருக்கு எஸ்.எம்.எஸ். பண்றோம்.''
தொடர்பு துண்டிக்கப்படுகிறது. இந்த உரையாடல் நடந்தது ஆங்கிலத்தில். அந்த ஃப்ரெண்ட்ஷிப் சர்வீஸ் இருப்பது டெல்லியில் என்று விளம்பரத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
அது ஆண்களுக்கும் பெண்களுக்கும் அவரவர் விருப்பத்துக்கு ஏற்றபடி, புது நண்பர்களை உருவாக்கித் தருவதாகச் சொல்லும் விளம்பரம். இண்டர்நெட்டிலும் பத்திரிகைகளிலும் இதுபோன்ற விளம்பரங்கள் அதிகரித்துவிட்டன. அப்படியொரு விளம்பரத்தைப் பார்த்து போன் செய்தபோது பேசியவற்றைத்தான் மேலே படித்தீர்கள்.
ஒரு வருடத்துக்கு முன்னால், சூளைமேட்டைச் சேர்ந்த ஜெயராஜ் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது)என்பவருக்கும் ஏதேனும் லவ் கிளப்பில் சேரும் ஆசை இருந்தது. ``ஒருநாள் பேப்பர்ல `லவ் கிளப்' விளம்பரத்தைப் பார்த்து, அதிலிருந்த செல் நம்பருக்கு போன் பண்ணிப் பேசினேன். அது டெல்லி நம்பர். எங்கிட்ட பேசியது ஒரு பொண்ணு. இங்கிலீஷ்ல சரளமா பேசினா. கிளப் சொல்ற பேங்க் அக்கவுண்ட்ல குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செஞ்சா, எக்கச்சக்கமா ஃப்ரெண்ட்ஸை அறிமுகப்படுத்தி வைப்போம்னு அந்தப் பொண்ணு சொன்னா. இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் கட்டுனா, மூணு மாசத்துக்கு இளம்பெண்களுடைய டெலிபோன் நம்பர்களைத் தருவோம்னு சொன்னாங்க. `அந்தப் பொண்ணுங்களோட பேசி, நெருக்கத்தை வளர்த்துக்கிறது உங்க சாமர்த்தியம்'னு டெல்லிப் பொண்ணு சொன்னதைக் கேட்டு, எனக்கு ஆசையாயிடுச்சு. அதனால அவங்க சொன்ன பணத்தைக் கட்டினேன். ஆனா அவங்கட்டருந்து எந்தப் பதிலும் வரலை. போன் பண்ணிக் கேட்டா சரியான பதிலும் இல்லை. நாங்க எங்க போய் இந்த மோசடியைச் சொல்ல?'' என்கிறார் ஜெயராஜ்.
``இந்த லவ் கிளப்புகள் முக்கிய நகரங்கள்ல மட்டும் ஆபீஸ் போட்டிருந்தாலும், இந்தியா முழுக்க அவங்களுக்கு நெட்வொர்க் இருக்கு. போனில் கூப்பிடுறவங்களோட செல் நம்பரை வெச்சே அவங்க எந்த ஊர்னு `லவ் கிளப்' கும்பல் கண்டுபிடிச்சுடும். எங்கிட்டே பேசுன மும்பை ஆசாமி சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, நுங்கம்பாக்கம்னு கொச்சைத் தமிழ்ல லிஸ்ட் போட்டதைக் கேட்டு அசந்துட்டேன்'' என்கிறார், இது போன்ற ஒரு கிளப்புக்கு போன் செய்து பார்த்த ஸ்ரீதர்.
இவர்கள் இருவருக்கும் எந்தப் பெண்கள் நம்பரும் கிடைக்காவிட்டாலும் வேறு சிலருக்கு எஸ்.எம்.எஸ், ஈமெயில் மூலம் சில டெலிபோன் எண்கள் அனுப்பப்பட்டுள்ளன.
அவற்றில் சில எண்கள் நமக்கும் கிடைத்தன. அந்த எண்களைத் தொடர்பு கொண்டு பேசியபோது நமக்குப் பகீரென்றிருந்தது. ஹைடெக்காக நடைபெறும் ஹைலெவல் விபச்சாரம் என்பது பட்டென்று புரிந்தது.
ஒரு நம்பரில் பேசியவர் அனுபவமிக்க புரோக்கர்.
``எந்த ஏரியா சார்? பொண்ணு அங்க வரணுமா, நீங்க வர்றீங்களா?'' என்று கேட்டு நம்மை அதிர்ச்சியில் உறைய வைத்தார். ``இப்போ பணம் எதுவும் கொடுக்கவேண்டாம். வர்ற பொண்ணுகிட்ட கொடுத்துட்டிங்கனா போதும்'' என்றவர் அத்துடன் நிறுத்தவில்லை.
``ஃப்ரஷ்பீஸா, ஃபேமிலியா எப்படி வேணும்?'' என்றதும் போனை துண்டித்தோம்.
அதிர வைத்த இன்னொரு நம்பர் ஒரு பெண்ணுடையது. உடனடியாகவே விஷயத்துக்கு வந்துவிட்டார்.
``ஓ அவங்க நம்பர் கொடுத்தாங்களா?'' என்று கேட்டு செக் பண்ணிக்கொண்டார். அவர் கேட்ட அடுத்த கேள்வி இன்னும் அதிர வைத்து, ``எங்க வரணும்? எங்க இடம்னா ஆயிரம் ரூபா ஜாஸ்தியாகும்'' தமிழ்நாட்டில் செக்ஸ் எத்தனை எளிதாகப் போய்விட்டது. இது போன்ற தொலைபேசி எண்களுக்காக இப்போது இளைஞர் கூட்டம் அலைந்துகொண்டிருக்கிறது.
ஏதாவது ஒரு லவ் கிளப்புக்கு நேரடியாக விசிட் செய்யும் நோக்கத்துடன், சென்னையில் இயங்கும் ஒரு ஃப்ரெண்ட்ஷிப் கிளப்பைத் தொடர்புகொண்டோம். எதிர்முனையில் நம்மிடம் பேசிய பெண், ஃப்ரெண்ட்ஷிப்புக்கான கட்டண விவரங்களை புரொபஷனலாக அடுக்கியதுடன், அலுவலகத்தின் முகவரியையும் நமக்கு எஸ்.எம்.எஸ். செய்தார். நகரத்தின் மத்தியிலுள்ள சற்று பிரபலமான வணிக வளாகத்தில் அந்த அலுவலகம் இருக்கிறது. நாம் போன போது ஒரு அலுவலகத்துக்கான எந்த அடையாளமும் அங்கு இல்லை. நம்மிடம் போனில் ஏற்கெனவே பேசிய பெண் மட்டுமே இருந்தார். நம்முடைய வயது, வேலை குறித்த விவரங்களைக் கேட்ட அந்தப் பெண் மாறி மாறி கேட்ட கேள்வி, ``எப்போ பணம் கட்டப் போறீங்க?''
`பணம் செலுத்தியதற்கு ஏதேனும் ரசீது கிடைக்குமா? பெண்கள் போனில் பேசுவார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?' போன்ற கேள்விகளை நாம் எழுப்ப, அந்தப் பெண் சுதாரித்துக் கொண்ட முக பாவத்துடன் நமக்கு ஆபீஸ் வாசலை நோக்கி கை காட்டினார். `லவ் கிளப்' படு உஷாரான கிளப்தான்!
இதுபோன்ற கிளப்புகள் கொடுக்கும் ஃபோன் நம்பர்களில் பல அப்பாவிப் பெண்களுடையது. எங்கேயோ எப்படியோ கிடைக்கும் எண்களை `பலான' நம்பர் என்று அனுப்பிவிடுகிறார்கள்.
``இண்டர்நெட்டில் இதுபோன்று அப்பாவிகளின் போன் நம்பர்கள் குவிந்து கிடக்கின்றன. பலான பெண்கள் என்று இந்த அப்பாவிப் பெண்களின் எண்களைப் போட்டு வைத்திருக்கிறார்கள்'' என்கிறார், இது போன்ற தப்புகளில் ஆர்வமாய் ஈடுபடும் ஓர் இளைஞர்.
இவரைப் போன்ற பல இளைஞர்கள் தாங்கள் உழைத்துச் சம்பாதிக்கும் பணத்தை தங்களின் சின்னத்தனமான சபலங்களைத் தீர்க்க செலவழித்து அதிலேயே சீரழிந்து போய்க்கொண்டிருக்கிறார்கள். யார் நடவடிக்கை எடுத்து இந்த இளைஞர்களைக் காப்பாற்றப் போவது என்று தெரியவில்லை..
பையனுக்கு பர்ஸ், பெண்ணுக்கு சைஸ்
இது போன்ற ஃப்ரெண்ட்ஷிப் கிளப்புகளுக்கு ஆண்கள் பேசினால் ஒரு ரியாக்ஷன். பெண்கள் பேசினால் நேர்மாறான ரியாக்ஷன். ஒரு பெண்ணை இந்த கிளப் நபர்களிடம் பேசச்சொன்னோம். ஒரு பெண் பேசியதும் அவர்களுக்கு மகிழ்ச்சி. `நிறைய ஆண் நண்பர்கள் கிடைப்பார்கள். உங்கள் வயசையும் சைஸையும் சொல்லுங்கள்' என்றார்கள். அது போதுமாம். பெண்கள் காசு கட்டவேண்டாமாம். ஆண்களின் பர்ஸைப் பார்க்கும் இந்த கிளப்புகள் பெண்களிடம் பார்ப்பது வேறு! தப்பித் தவறி இதுபோன்ற கிளப்புகளிடம் மாட்டும் பெண்களின் எண்களை எல்லோரிடமும் கொடுத்து வாழ்க்கையை நாசமாக்கி விடுகின்றன இந்த கிளப்புகள்.

நமக்கு அறிவு வருவது எப்போது ஞாநியின் விளாசல்

சீனாவில் ஒலிம்பிக் போட்டிகளில் அமெரிக்காவும் சீனாவும் தங்க வேட்டை ஆடிக் கொண்டிருக்கும் அதே வேளையில், சீனாவுக்கு எதிராக இந்தியாவின் உதவியுடன் அமெரிக்கா 1960களில் நடத்திய ஆபத்தான உளவு வேலையில் சம்பந்தப்பட்ட அமெரிக்கரின் வாக்குமூலம் வெளியாகியிருக்கிறது.
இமயமலை உச்சியில் நடந்த இந்த உளவு வேலையின் விளைவாக இன்றும் கங்கை ஆற்றில் அணுக் கதிர் வீச்சு அபாயம் ஏற்படும் ஆபத்து இருக்கிறது.
1964-ல் சீனா அணுகுண்டு சோதனை நடத்தியது. இது அமெரிக்காவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. அடுத்தடுத்து சீனா என்னவெல்லாம் செய்யப்போகிறது என்று உளவு பார்க்க ஒரு திட்டம் வகுத்தது. அப்போது அமெரிக்காவின் செயற்கைக் கோள் திட்டங்கள் ஆரம்ப நிலையில் இருந்தன. சீனாவை வானிலிருந்து வேவு பார்க்கும் வசதி இல்லை.
இமயமலை உச்சியிலிருந்து வேவு பார்க்கலாம் என்று அமெரிக்கர்கள் திட்டம் போட்டார்கள். மலை உச்சியிலிருந்து திபெத்தும், சீனாவின் ஏவுகணை சோதனைகள் நடக்கும் சின்சியாங் மாவட்டமும் தெரியும்.
இதற்கு ஏற்ற இடம் இந்தியப் பகுதியில் இருக்கும் இரண்டாவது உயரமான மலையான நந்தாதேவிதான். 25 ஆயிரம் அடி உயரம். உலகத்தின் மிக உயரமான 25 சிகரங்களில் இது ஒன்று. இந்தப் பனிமலையில் இருந்துதான் ரிஷி கங்கை என்ற ஓடை தொடங்குகிறது இது அடுத்த மலையான நந்தாகோட்டில் ஓடும் தவுளிகங்கையில் சேர்ந்து பிரும்மாண்டமான கங்கை நதியாகிறது.
நந்தாதேவி சிகரத்தின் மீது சீனாவை வேவு பார்ப்பதற்கான கருவியைப் பொருத்துவதுதான் அமெரிக்காவின் திட்டம். இமயமலையில் ஏறுவது சாதாரண விஷயம் அல்ல. கடும் பனிப் புயல்கள் வீசும் பனிப் பொட்டல் அது. 1936 வரை யாருமே நந்தாதேவி மீது ஏறியதே இல்லை. இதற்கு இந்திய அரசின் உளவுப் பிரிவான ஐ.பி.யின் உதவியை சி.ஐ.ஏ பெற்றுக் கொண்டது. கடற்படை கேப்டனாக இருந்து ஐ.பி. அதிகாரியாக இருந்த எம்.எஸ்.கோலி என்பவர் மலையேறுவதில் ஆர்வமுடையவர். இமயமலைப் பகுதியில் பல முறை சிகரங்களுக்குச் சென்றவர். 1965-ல் ஒரே சமயத்தில் ஒன்பது பேரை எவரெஸ்ட் சிகரத்தில் ஏற வைத்த பெருமைக்குரியவர் கோலி.
இவர் தலைமையில் சில உளவு அதிகாரிகளும், சி.ஐ.ஏ. அனுப்பிய சிலருமாகச் சேர்ந்து நந்தாதேவி சிகரத்துக்குச் சென்று உளவுக் கருவியை வைக்கும் வேலையில் ஈடுபட்டார்கள்.
அந்த அமெரிக்கர்களில் முக்கியமானவர் டாக்டர் ராபர்ட் ஸ்காலர். சியாட்டில் பகுதியில் பிரபலமான குழந்தைகள் சர்ஜன் ராபர்ட். மலையேறுவதில் பெரு விருப்பம் உடையவர். இவரை சி.ஐ.ஏ. ஏஜெண்ட் சந்தித்து தேச நலனுக்காக அவர் இமயமலைக்குச் செல்ல வேண்டும் என்று கேட்டார். இது தவிர மாதம் ஆயிரம் டாலர்கள் (1965-ல்) பணமும் கிடைக்கும் என்றார்.
ராபர்ட் ஸ்காலர் ஒப்புக் கொண்டார். அவரை அடிக்கடி ரகசியமான இடங்களுக்குக் கண்ணைக் கட்டி அழைத்துப் போய் கடுமையான பயிற்சிகள் தரப்பட்டன. எங்கே போய் வருகிறார் என்று மருத்துவமனைக்கும் மனைவிக்கும் சொல்லக் கூடாது. இதன் விளைவாக ராபர்ட்டின் மனைவி அவருடன் கசப்படைந்து விவாகரத்தே வாங்கிப் போய்விட்டார்.
மலை உச்சியில் வைக்க வேண்டிய உளவு சாதனம் சீனாவில் சோதனைகள் நடந்தால் பதிவு செய்யும். 40 பவுன்ட் எடையுள்ளது. இதை இயக்கும் அணுசக்தி புளுட்டோனியம் 238,239 கொண்ட செல்களிலிருந்து கிடைக்கும். இதிலிருந்து கிடைக்கும் வெப்பத்தில், மலையேறுபவர்கள் இரவு நேரங்களில் குளிர் காய்ந்தார்களாம்.
சிகரத்தை அடைவதற்கு முந்தைய ஓய்விடத்தில் எல்லாரும் இருந்தபோது கடுமையான பனிப் புயல் வீசியது. இனி ஒரு அடி கூட மேலே போக முடியாது என்ற நிலை. கீழே திரும்பியாவது போவோமா என்ற கவலையான நிலை. உளவுக் கருவியை அருகே ஒரு பாறைப் பகுதியில் வீசி எறிந்தார்கள். சில மாதங்கள் கழித்து புயல்கள் வீசாத பருவத்தில் வந்து திரும்ப எடுத்துச் சென்று உச்சியில் வைத்துவிடலாம் என்று முடிவு செய்தார்கள்.
ஆனால், சில மாதங்கள் கழித்து அதே இடத்துக்கு வந்து பார்த்தபோது கருவியைக் காணோம். தொடர்ந்து வீசிய பனிப்புயல்களில் மலைக்குள் எங்கேயோ போய் புதைந்துவிட்டது.
சி.ஐ.ஏ.வும் ஐ.பி.யுமாக அடுத்த இரண்டு வருடங்களில் பல முறை விமானங்களில் ஹெலிகாப்டர்களில் வந்து தேடித் தேடிப் பார்த்தார்கள். கருவி போன இடம் தெரியவில்லை.
இதற்குள் பக்கத்து மலையான நந்தாகோட்டில் இதே போன்ற அணுசக்தியில் இயங்கும் ஒரு கருவியைப் பொருத்தினார்கள். அது சில வருடங்கள் இயங்கி சீனா பற்றிய தகவல்கள் கிடைத்த பிறகு, அமெரிக்கா அதை அகற்றி விட்டது.
ஆனால் நந்தாதேவியில் தொலைந்து போன புளுட்டோனிய சக்தியில் இயங்கும் கருவி என்ன ஆயிற்று? யாருக்கும் தெரியாது. அதிலிருந்த புளுட்டோனியம் கசிந்தால், கங்கைக்கு வரும் ஓடை நீரில் கலந்தால்? மனிதர்களுக்கும் உயிரினங்களுக்கும், நீரைப் பயன்படுத்துவோருக்கும் பல சிக்கலான விளைவுகள் ஏற்படும்.
புளுட்டோனியத்தின் கதிர் இயக்கம் அடங்குவதற்கு எத்தனை வருடம் ஆகும் தெரியுமா? 24 ஆயிரம் வருடங்கள்!
ராபர்ட் ஸ்கெல்லருக்கு இப்போது 74 வயது. அமெரிக்காவுக்கு அவர் ஆற்றிய தேசத் தொண்டுக்காக அவருக்கு சி.ஐ.ஏ.விலிருந்து வீட்டுக்கே வந்து ஒரு மெடல் அணிவித்துப் பாராட்டிவிட்டு, பிறகு அதைக் கழற்றி எடுத்துக் கொண்டும் போய்விட்டார்கள். இப்படி ஒரு விஷயம் நடந்தது வெளியில் தெரியக்கூடாது என்பதே காரணம்.
நந்தா தேவிக்கு ராபர்ட் சென்றபோது எடுத்த படங்கள், டயரிக்குறிப்புகள் எல்லாம் சி.ஐ.ஏ.விடம் உள்ளன. அவற்றைத் திருப்பித் தரக் கோரி 40 வருடமாக மன்றாடி வருகிறார் ராபர்ட். நந்தாதேவியில் தன்னந்தனியே ஏறிய முதல் அமெரிக்கர் என்ற அவருடைய சாதனைக்கு அவரிடம் எந்த ரிக்கார்டும் இல்லை. எல்லாம் சி.ஐ.ஏ.விடம் உள்ளன. அவர்களோ தர மறுக்கிறார்கள்.
இமயமலைக்கு பல முறை சென்று வந்த பின், புகழ் பெற்ற குழந்தை மருத்துவராக 40 வருடங்கள் செயல்பட்ட ராபர்ட் இப்போது மனக் கசப்புடன் எல்லா உண்மைகளையும் பகிரங்கமாகச் சொல்ல ஆரம்பித்துவிட்டார். ஆனால், அமெரிக்க அரசு இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்ததாக இதுவரை ஒப்புக் கொள்ளவில்லை.
1978-ல் பிரதமர் மொரார்ஜி தேசாய் மக்களவையில் இனி இப்படிப்பட்ட ஆபத்தான சோதனைகளில் இந்தியா ஒத்துழைக்காது என்று அறிவித்தார். எம்.எஸ்.கோலி ஓய்வு பெற்ற பின் எல்லா உண்மைகளையும் தன் சாகச அனுபவப் புத்தகமாக எழுதிவிட்டார்.
இமயமலையில் கங்கை தோன்றும் இடத்தில் காணாமற்போன புளுட்டோனியக் கருவி பற்றி இப்போது மறுபடியும் ஒரு தகவல் வந்திருக்கிறது. மலையேறும் வீரரான தகேதா என்பவர் 2005-ல் நந்தாதேவிக்கு அதே இடத்துக்குச் செல்ல முயற்சித்தார். இப்போது இந்திய அரசு யாரையும் அங்கே செல்ல அனுமதிப்பதில்லை. அருகில் உள்ள நந்தாகோட்டுக்குச் சென்ற தகேதா, அங்கே ரிஷி கங்கை நதிக்கருகிலிருந்து மண் சேம்பிளை எடுத்து வந்து பரிசோதனைக்கு அனுப்பினார்.
பாஸ்டனில் ஓர் ஆய்வுக்கூடம், அதைச் சோதித்து முடிவுகளைத் தெரிவித்தது. மண்ணில் புளுட்டோனியம் கலந்திருப்பதாக உறுதிப்படுத்தியிருக்கிறது! இமயமலையில் மண் எடுக்கப்பட்ட ஆற்றுப் பகுதியில் புளுட்டோனியம் கலப்பதற்கு வேறு எந்த வாய்ப்பும் இல்லை, 1965-ல் காணாமல் போன அமெரிக்க உளவுக் கருவி உடைந்து போயிருக்கலாம் என்பதைத் தவிர.
1965-ல் இந்தியா அணி சேரா கொள்கையைப் பின்பற்றியதாக சொல்லிக் கொண்ட காலத்தில், அமெரிக்காவுடன் சீனாவுக்கெதிராக ரகசிய உளவு வேலையில் ஈடுபட்டிருக்கிறது. இப்போது மன்மோகன் ஆட்சியில் அமெரிக்காவுடன் இந்திய ராணுவம் பகிரங்கமாகவே கூட்டுப் பயிற்சிகளுக்கு உடன்பாடுகள் போடப்பட்டுள்ளன.
அமெரிக்காவுடன் அணுசக்தி முதல் ராணுவ ஒப்பந்தம் வரை எல்லாமே எவ்வளவு ஆபத்தானவை என்பதற்கு நந்தாதேவியில் தொலைந்து போன புளுட்டோனியம் மட்டும் சாட்சியம் அல்ல. ஆஸ்திரேலியாவின் சாட்சியமும் இருக்கிறது. 90_களில் ஆஸ்திரேலிய கடற்படைக்கு அமெரிக்கா சில கணினி மென்பொருட்களை அளித்தது. அந்த மென்பொருட்களைப் பயன்படுத்தும் போதெல்லாம் கடற்படையின் தகவல்கள், அமெரிக்காவுக்கும் ஒரு பிரதி போய்ச் சேருவது போல மென்பொருட்களில் திட்டம் எழுதி வைக்கப்பட்டிருந்ததை ஆஸ்திரேலியா கண்டுபிடித்தது. நன்றி என்று சொல்லி மென்பொருட்களைத் திருப்பிக் கொடுத்துவிட்டது!
நந்தாகோட் சிகரத்தில் வைக்கப்பட்டிருந்த உளவுக் கருவிகள் சீனாவை மட்டுமல்ல, இந்தியாவையும் உளவு பார்த்திருக்கக்கூடியவைதான்!நமக்கு அறிவு வருவது எப்போது?.
இந்த வாரப் பூச்செண்டு
`தாரே ஜமீன் பர்' படத்துக்காக, சிறந்த முதல் பட இயக்குநருக்கான கொல்லப்புடி சீனிவாஸ் விருதைப் பெற்றுள்ள இந்தி நடிகர் அமீர்கான், விருதுத் தொகையை சென்னை அரசு திரைப்படக் கல்லூரிக்கு நன்கொடையாக அளித்திருப்பதற்காக இ.வா.பூ.
இந்த வாரக் குட்டு
பெரியாரின் எழுத்து, படைப்புகள் எதுவும் இன்னும் நாட்டுடைமையாக்கப்படாமல் இருப்பதற்காக, `பெரியார் பல்கலைக்கழக மாணவமணி' கலைஞர் கருணாநிதிக்கும், `பல்கலைக்கழகத்தின் மொத்தக் குத்தகைதாரர்' கி.வீரமணிக்கும் இ.வா.குட்டு.
குடியரசு இதழ் தொகுப்புகளை பெரியார் திராவிடர் கழகம் வெளியிடக் கூடாது என்றும், உரிமை தன்வசம் உள்ள அமைப்பிடமே உள்ளது என்றும் வீரமணி எச்சரிக்கை விடுத்திருப்பது ஓர் அற்பமான செயல்.
தன் கருத்தைத் தனக்குப் பின்னரும் பரப்புவதற்காகவே கடும் உடல் நலக் குறைவுடன் சிக்கனமாக வாழ்ந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களைச் சேர்த்து வைத்துவிட்டுச் சென்றார் பெரியார். அவற்றை விட மிகப் பெரிய சொத்து அவருடைய கருத்துகள். அவை மக்களின் பொதுச் சொத்து. எவரும் அவற்றை வெளியிட்டுப் பரப்பலாம் என்ற நிலையை உடனடியாக தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்.
இலவச டி.வி பெட்டி தருவதற்காக ஆயிரம் கோடி ரூபாய்களை வீணாக்கும் அரசு, வீரமணிக்கு ஒரு கோடி ரூபாயாவது கொடுத்து, பெரியாரை விடுவிக்க வேண்டும். இதற்கான அறிவிப்பை வரும் செப்டம்பர் 17 பெரியார் பிறந்த நாளுக்குள் கலைஞர் கருணாநிதி செய்யத் தவறினால், மீண்டும் குட்டுவேன். செய்தால் 129 பூச்செண்டுகள் அளிப்பேன்.
இ.வா.அவமானம்
ஆப்ரிக்க நாடான காங்கோவில் `அமைதி'யை நிலை நிறுத்தச் சென்றிருந்த இந்திய அமைதிப்படை `வீரர்'களில் 100 பேர், அங்கிருந்த ஐந்தாண்டுகளில் தொடர்ந்து காங்கோ நாட்டுச் சிறுமிகளிடமும் சிறுவர்களிடமும் பாலியல் முறைகேடுகள் செய்ததை ஐக்கிய நாடுகள் சபைச் செயலாளர் கண்டித்திருக்கிறார்.
பாலியல் முறைகேடு மட்டுமன்றி, தங்கக் கடத்தல், ஆயுதக் கடத்தல் முதலியவற்றிலும் `வீரர்கள்` ஈடுபட்டார்களாம். இதே போன்ற குற்றச்சாட்டுகள் பாகிஸ்தான் `வீரர்கள்' மீதும் கூறப்பட்டிருக்கிறது.

கம்பிக்குள் உல்லாச உலகம் குமுதத்தின் பகீர் ரிப்போர்ட்

சென்னை புழல் சிறையில் நடந்த குளறுபடிகளும் அதனைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் பத்திரிகைகளில் செய்திகளாய் வந்தன. நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
அதிகாரிகள் மாற்றப்பட்டனர். சரி, புழல் சிறையில் மட்டும்தான் இந்த ஊழல்களா? தமிழகம் முழுவதிலும் உள்ள முக்கிய சிறைகளின் நிலை என்ன? அங்கு கைதிகள் எப்படி இருக்கிறார்கள் என்பதை விசாரித்தோம். சிறை அதிகாரிகள், கைதிகளாய் உள்ளே இருந்தவர்கள், பணியாளர்கள் என பல தரப்பினரிடம் பேசினோம். நமக்கு கிடைத்த பதில்...
அதிர்ச்சி!
பீடி முதல் பிரியாணி வரை செல்ஃபோன் முதல் செக்ஸ் வரை எல்லாமே கிடைக்கும் என்கிறார்கள். ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு விலை உண்டு.
சென்ற வாரம் சேலம் மத்திய சிறையில் கைதியை பார்க்க மனு போட வந்திருப்பதைப் போல் உட்கார்ந்திருந்தோம்.
மூன்று இளைஞர்களை கொத்தாக பிடித்து இழுத்து வந்தனர் சிறைக் காவலர்கள். அவர்கள் செய்த குற்றம் மிக்சருக்குள் செல்ஃபோனை வைத்து உள்ளே இருக்கும் தங்கள் கைதி நண்பனுக்கு கொடுக்க முயன்றது. நாம் விசாரித்தபோது ``ஜெயில்ல இதெல்லாம் சகஜமப்பா'' என்றனர் அலட்சியமாக.
சிறையில் இப்போது அதிகம் தேவைப்படுவது செல்ஃபோனும் சிம்கார்டும்தானாம். எவ்வளவு விலை கொடுத்து வாங்கவும் கைதிகள் தயாராய் இருக்கிறார்களாம்.
இந்தச் சிறையின் உள்ளே இருக்கும் ஒரு தாதா தலைவர் எப்பவும் செல்ஃபோனும் கையுமாகத்தான் உள்ளே இருக்கிறாராம். பணம் கொடுத்தால் சிறை ஊழியர்களே செல்ஃபோனுக்கு சார்ஜும் போட்டுக் கொடுத்துவிடுவார்களாம். உள்ளே உட்கார்ந்துகொண்டு ஜாலியாக காதலியுடன் பேசலாம். சதித் திட்டங்களைத் தீட்டலாம்.
சேலம் சிறை மட்டுமல்ல மற்ற சிறைகளிலும் இதே நிலைதான்.
செல்ஃபோனுக்கு அடுத்த படியாக திருச்சி சிறையில் அதிகம் கடத்தப்படும் பொருள் கஞ்சா. உள்ளே ஏக விநியோகம் நடக்கிறது என்கிறார்கள்.இங்கு ஒவ்வொரு ப்ளாக்கிலும் பீடி, சிகரெட், ஷாம்பூ, சோப்பு, டீ வரை வாங்கிக் கொள்ள, சிறைச் சாலைக்குள் திறக்கப்படாத கடைகள் இருப்பதுபோல, கஞ்சா சப்ளை செய்வதற்கும் ஆட்கள் இருக்கிறார்களாம். சரியான ஆளைப் பிடித்து சரியான பணத்தைக் கொடுத்தால் எதுவும் கிடைக்குமாம்.
தினமும் காலையில் உள்ளே வரும் `காய்கறி வண்டியில்'தான் சட்டத்திற்கு புறம்பான அனைத்தும் வருகிறது. பணம் கண்களை மறைப்பதால் யாருக்கும் தெரிவதில்லை என்கிறார்கள் உள்ளே சென்று வந்த பழைய குற்றவாளிகள்.
ஜெயிலில் நடக்கும் இன்னொரு மோசடி, கைதிகளுக்கு கொடுக்கும் உணவு.
``நூறு கிலோ காய்கறி போட்டு சமைக்க வேண்டிய இடத்துல முப்பது கிலோ போடுறது. சமையலுக்கு 50 லிட்டர் எண்ணெயைப் பயன்படுத்தணும்னா 10 லிட்டர் எண்ணெயிலயே எல்லாத்தையும் முடிச்சிடுவாங்க. ஆனா கணக்குல மொத்தமா இருக்கும்.
ஒரு கைதிக்கு அரசாங்கம் நாளொன்றுக்கு நூறு கிராம் பருப்பு தருது. 2000 கைதிகளுக்கு 200 கிலோ பருப்பு வருது. 50 கிலோ பருப்பை போட்டுட்டு பாக்கி 150 கிலோவும் பயன்படுத்திட்டோம்னு கணக்கு காட்டுறாங்க.
ஒரு நாளைக்கு பருப்புல மட்டுமே இவ்வளவு சம்பாதிக்கிறாங்கன்னா கொள்ளையடிக்கிற மொத்த கணக்கையும் போட்டா ஹார்ட் அட்டாக்கே வந்துடும்'' என்கிறார் உள்ளே உணவருந்தி இப்போது வெளியில் இருக்கும் ஒருவர்.
பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையிலும் இதே கதைதான். இங்கே கூடுதலாக ஒரு விஷயம், சிறைக்குள்ளேயே சதித் திட்டங்கள் தீட்டப்படுவது. தென் மாவட்டத்தில் கொலையுண்ட பலரது முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டது பாளையங்கோட்டை சிறையில்தான்.
கொலைக்குற்றத்திற்காக பாளையங்கோட்டை ஜெயிலில் இருந்து ஜாமீனில் வந்த ஒருவர் கூறும்போது,
``சார், ஜெயில் என்கிறது வெளில இருந்து பார்க்கத்தான் பயமா தெரியும். உள்ள எல்லாம் கிடைக்குது சார். ஒரு கைதியை பார்க்க வர்றவங்க பீடி அல்லது சிகரெட் மூணுபாக்கெட் கொண்டு வந்து கொடுக்கலாம். அவுங்க அந்த பீடி, சிகரெட்ல உள்ள தூளைக் கொஞ்சம் தட்டிவிட்டு அந்த இடத்தில் கஞ்சாவை வைத்து கொடுத்துவிடுவார்கள். அதே மாதிரி ஷாம்பு பாட்டில் உள்ளே சிம்கார்ட் போட்டு மூடிக் கொடுத்துவிடுவார்கள். கஞ்சாவுல இருந்து சோப்பு, சீப்பு, எண்ணெய், துண்டு என எல்லாமே உள்ள கிடைக்கும். விலை மட்டும் கொஞ்சம் அதிகமாக இருக்கும். வெளில ஒரு பீடிக்கட்டு விலை இரண்டு ரூபாய்ன்னா உள்ளே இருபது ரூபாய்'' என்கிறார் அந்த கைதி.
மதுரை மத்திய சிறைக்குள் கஞ்சா, சரக்கு அயிட்டங்கள், பீடி, சிகரெட், செல்ஃபோன் சிம்கார்டு, தினமும் வெளியில் இருந்து மூணு வேைளக்கும் வகை வகையான சாப்பாடு பார்சல்கள் கிடைக்கும் என்கிறார்கள், இந்தச் சிறையின் அனுபவசாலிகள். இதைவிட அதிர்ச்சியான தகவல், கைதிகளை ரகசியமாய் வீட்டுக்கு அனுப்பும் விஷயம்.
நம்பிக்கையான நீண்ட நாள் கைதிகளை வீட்டுக்கு அனுப்பி ஒரு இரவு தங்கி வர அனுமதிப்பார்களாம். இதற்கு பத்தாயிரம் ரூபாய் வரை செலவழிக்க வேண்டும் என்ற தகவலை ஒரு கைதி சொல்ல பகீரென்றிருக்கிறது. எத்தனை உண்மை என்று தெரியவில்லை.
சிறையில் கைதிகள் போட்டி போட்டு வாங்கும் இன்னொரு விஷயம், சிறை மருத்துவமனையில் இடம். உங்களிடம் பணமிருந்தால் `உடல் நிலை சரியில்லை' என்ற மருத்துவச் சான்றிதழோடு சிறை மருத்துவமனையில் ஜம்மென்று படுத்துக் கொள்ள முடியும்! இதற்கு 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை செலவு ஆகுமாம். அப்படியென்ன ஜெயில் மருத்துவமனைகளில் கிடைக்கும் என்கிறீர்களா?
ஒரு பெரிய ஹாலிலோ, அல்லது தனி அறைகளிலோ மெத்தையில் படுத்துக் கொள்ள முடியும். படிப்பதற்கு நாவல்கள், நினைத்த நேரத்தில் பொழுதைக் கழிப்பதற்கு கேரம் போர்டிலிருந்து, செஸ் ஆட்டம் வரை கிடைக்கும். ஆனால் இதற்கு நேர்மாறாக விசாரணைக் கைதிகள் அடைக்கப்படும் அறைகள் கொடுமையாக இருக்கும். இங்கு இரவில் ஹோமோ செக்ஸ் வக்கிரம் சகஜமான விஷயம். புதிதாக வரும் கைதிகளைப் பயமுறுத்துவதற்காகவே இந்த ஹோமோ செக்ஸ் அறைகளில் அடைப்பார்கள். இதனால் அரண்டு போகும் புதியவர்கள் அடுத்த நாளே வார்டன்களை நல்ல விதத்தில் கவனிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
ஒரு விஷயம், மேலே சொன்ன வசதிகள் எல்லாம் பணம் படைத்த, செல்வாக்கு மிக்க குற்றவாளிகளுக்குத்தான். சாதாரண குற்றவாளிகளுக்கு சிறை வாழ்க்கை கொடுமையானது. கழிப்பறை சுத்தம் செய்வது, பணக்கார ரவுடிகளுக்கு துணி துவைப்பது, தூங்கும்போது கால் அமுக்கிவிடுவது போன்ற வேலைகளையும் செய்ய வேண்டும். சிறையில் கிடைக்கும் உணவு கூட சரியான அளவு கிடைக்காது.
இந்த ஏழைக்கைதிகளின் நிலை மிகவும் பரிதாபமானது. பணக்காரன், ஏழை, சாதி, மத வித்தியாசம் எல்லாம் சிறை வாசத்தில் மறந்துபோகும் என்பார்கள். அது அந்தக் காலம் பணமிருந்தால் என்னமும் செய்யலாம். இதுதான் இன்றைய சிறை (அ)நீதி.
தேங்காய் எண்ணெய் பாட்டிலில் விஸ்கி!நெல்லையில் ஒரு முக்கியமான கொலை வழக்கு. அதில் முக்கிய குற்றவாளி பாளையங்கோட்டை சிறையில் இருக்கிறான். அவனால் `தண்ணி'யடிக்காமல் இருக்க முடியாதாம். இதற்காக அவனுக்கு தேங்காய் எண்ணெய் பாட்டிலில் விஸ்கியை ஊற்றி சிறைக்குள் அனுப்புவது வழக்கமாம். என்னது இவனுக்கு மட்டும் அடிக்கடி தேங்காய் எண்ணெய் பாட்டில் வருகிறது என்று சந்தேகப்பட்ட ஒரு நேர்மையான வார்டன், உள்ளுக்குள் விஸ்கி இருப்பதை கண்டுபிடித்திருக்கிறார். கொண்டு வந்து கொடுத்த பெண்ணின் மேல் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
சிறை விலைப்பட்டியல் பீடிக்கட்டு ரூ. 30சிகரெட் ரூ. 100கஞ்சா ரூ. 20 (ஒரு சிகரெட்)பிரியாணி ரூ. 200செல்ஃபோன் பேச ரூ.50 (1 நிமிடம் பேச)செல்ஃபோன் வைத்துக்கொள்ள ரூ. 1000 (பத்து நாளுக்கு)மதுபானம் ரூ. 500 (பாட்டிலுக்கு)

வெண்கல விஜேந்தருக்கு வாழ்த்து!


ஒலிம்பிக் குத்துச்சண்டையில் வெண்கலம் வென்று வரலாறு படைத்த இந்தியாவின் விஜேந்தர் குமாருக்கு பரிசு, வாழ்த்து குவிகிறது. சீன தலைநகர் பீஜிங்கில் ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. நேற்று நடந்த குத்துச்சண்டை 75 கி.கி., "பிரீஸ்டைல்' பிரிவில் 22 வயதான விஜேந்தர், கியூபாவின் எமிலியோ கோரியாவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். ஆனாலும் வெண்கலப்பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பரிசுகளும் குவிகின்றன.
மத்திய விளையாட்டு துறை அமைச்சர் எம்.எஸ்.கில் தனது பாராட்டு செய்தியில்,""விஜேந்தர் தோல்வியடைந்தாலும் அவரது திறமையான ஆட்டம் பாராட்டுக்குரியது. டில்லியில் அவரை நேரில் சந்திக்க ஆர்வத்துடன் இருக்கிறேன்,'' என்றார்.
இளைஞர் எழுச்சி: சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி தனது வாழ்த்து செய்தியில்,""விஜேந்தர் மற்றும் சுஷில் குமாரின் அபார திறமை, இந்திய இளைஞர்களிடையே விளையாட்டு எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இந்திய கிராமப்புறங்களில் ஒளிந்திருக்கும் விளையாட்டு திறமைகள் வெளிப்படும் என எதிர்பார்க்கலாம்,'' என்றார்.
உலகமே பார்க்கிறது: விஜேந்தர் வெண்கலம் வென்ற மகிழ்ச்சியில் இந்திய ஒலிம்பிக் குத்துச்சண்டை பயிற்சியாளர் குர்பக்ஸ் சிங் சாந்து கூறுகையில், ""ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. தடைகளை உடைத்து இந்திய குத்துச்சண்டை முன்னேற்றம் கண்டுள்ளது. முதன் முறையாக பதக்கம் வென்றது மட்டுமில்லாமல் மூன்று இந்திய வீரர்கள் காலிறுதிக்கு முன்னேறியதை ஒரு சாதனையாக கருதுகிறேன். எங்களால் சர்வதேச அளவில் ஜொலிக்க முடியும் என்பதை நிரூபித்துள் ளோம். குத்துச்சண்டை உலகம் தற்போது இந்தியாவை கவனிக்க துவங்கியுள்ளது,'' என்றார்.
இலவச விமானப்பயணம்: ஒலிம்பிக் பதக்கம் வென்றதை அடுத்து விஜேந்தருக்கு வாழ்நாள் முழுவதும் இலவச விமான சேவை வழங்க, தனியார் ஜெட் சர்வீஸ் ஒன்று முன்வந்துள்ளது. இது குறித்து அந்நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்,""பிந்த்ரா, சுஷில் குமார் ஆகியோரை தொடர்ந்து விஜேந்தருக்கு இலவச விமான சேவை வழங்க முடிவு செய்துள்ளோம்,'' என்றார்.
டி.எஸ்.பி., பதவி: ஒலிம்பிக்கில் இம்முறை சாதித்த அரியானா வீரர்களான விஜேந்தர் குமார், ஜிதேந்தர் குமார், அகில் குமார், யோகேஷ்வர் தத் ஆகிய நால்வருக்கும் டி.எஸ்.பி., பதவி வழங்கப் படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. குத்துச்சண்டை போட்டியில் அகில் குமார், ஜிதேந்தர் குமார் காலிறுதி வரை முன்னேறினர். அரையிறுதியில் தோல்வி அடைந்த விஜேந்தர் குமார் வெண்கலம் வென்று ஆறுதல் தேடினார். இதே போல மல்யுத்த போட்டியின் காலிறுதிக்கு யோகேஷ்வர் தத் தகுதி பெற்றார். இவர் களை கவுரவிக்கும் வகையில் டி.எஸ்.பி., பதவி வழங்குவதாக முதல்வர் புபிந்தர் சிங் ஹூடா தெரிவித்தார். தவிர விஜேந்தருக்கு ரூ. 50 லட்சம் பரிசு அளிக்கப்படும் என அரியானா அரசு அறிவித்துள்ளது.
அடுத்து தங்கம்: பீஜிங் ஒலிம்பிக் குத்துச்சண்டை யில் வெண்கலம் வென்ற விஜேந்தர் 2012, லண்டன் ஒலிம்பிக்கில் தங்கம் வென்று காட்டுவதாக சவால் விடுத் துள்ளார். இவர் கூறுகையில், ""அரையிறுதியில் தோல்வி அடைந்தது வருத்தம் அளிக்கிறது. என்னால் வெற்றி பெற முடியாததற்கு அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். 2012 லண்டன் ஒலிம்பிக்கில் நிச்சயம் தங்கம் வெல்வேன். இம்முடிவில் மிக உறுதியாக இருக்கிறேன்,'' என்றார்.

முஷாரபை கைகழுவுகிறார் அதிபர் புஷ


அதிபர் பதவியில் இருந்து முஷாரப் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, பிரதமர் யூசுப் ரசா கிலானியுடன் தொலைபேசியில் பேசிய அமெரிக்க அதிபர் புஷ், பாகிஸ்தானுக்கு அனைத்து உதவிகளையும் தனது நிர்வாகம் தொடர்ந்து அளிக்கும் என்று உறுதி கூறியுள்ளார். கிலானியுடன் பேசிய புஷ், பாகிஸ்தானின் புதிய அதிபர் தேர்தல் குறித்தும் பேசினார். அதே போல, அதிபர் அதிகாரத்தையும் பார்லிமென்ட் அதிகாரத்தையும், வகைப்படுத்துவது எப்போது என்பது குறித் தும் அவர் கேட்டார். "அதிபர் தேர்தல் குறித்து அனைத்து விஷயங்களையும், தேர்தல் தேதியையும் முடிவு செய்யும் முழு அதிகாரம் தேர்தல் கமிஷனுக்குத் தான் உண்டு. பார்லிமென்ட் மற்றும் அதிபர் அதிகாரங்களை சமப்படுத்தும் வகையில், மூன்று மாதங்களுக்குள் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்று கிலானி தெரிவித்தார்.
"பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா இடையே வலுவான உறவு நீடிக்கிறது. பாகிஸ்தானின் ஜனநாயக அரசுக்கு அனைத்து உதவிகளும் தொடர்ந்து அளிக்கப்படும்' என்று புஷ் கூறினார். உரையாடலின் போது, ஒலிம்பிக் போட்டி துவக்கவிழாவின் போது, கிலானியுடன் நடந்த சந்திப்பு குறித்து நினைவு கூர்ந்த புஷ், முன்னாள் பிரதமர் பெனசிரின் குழந்தைகளை தனக்கு அறிமுகப்படுத்தியதற்காக நன்றி தெரிவித்தார். அப்போது, பெனசிரின் குழந்தைகளும், புஷ்சை சந்தித்து பேசியதால் பெரிதும் உற்சாகத்தில் இருப்பதாகவும், அவர்களைப் போலவே, பெனசிரின் கணவரும் மகிழ்ச்சியில் இருப் பதாகவும் கிலானி கூறினார்.
பாகிஸ்தானில் ஜனநாயகம் வலுவடைய தொடர்ந்து அமெரிக்கா அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த கிலானி, இதற்காக அரசும், மக்களும் அமெரிக்காவுக்கு நன்றியுள்ளவர்களாக இருப் பதாகவும் கூறினார். பின்னர், பாகிஸ்தானில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டது குறித்து தனது இரங்கலை புஷ் தெரிவித்தார். பாகிஸ்தானுக்கு எப். 16 ரக விமானங்களை வழங்கியதற்காகவும், பழைய எப் - 16 விமானங்களை மேம்படுத்த 465 கோடி ரூபாய் நிதி வழங்கியதற்கும் கிலானி நன்றி தெரிவித்தார்.
அதே போல, முஷாரப்புடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட புஷ், பாகிஸ்தானில் ஜனநாயகம் திரும்புவதற்கு அவர் எடுத்த முயற்சிக்கு நன்றி தெரிவித்தார். அதே போல, பயங்கரவாதத்துக்கு எதிரான போரில், முஷாரப் அளித்த ஆதரவுக்கும் நன்றி தெரிவித்தார். முடிவு அமெரிக்கா கையில்: இந்த டெலிபோன் பேச்சு, மாறிவரும் பாகிஸ் தான் சூழ்நிலையை புஷ் ஆதரிப்பதாகக் காட்டுகிறது. பாகிஸ்தானில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டும் என்றால், அது முதலில் அமெரிக்க வெளியுறவுச் செயலர் கண்டலீசா ரைசால் அனுமதிக்கப்பட வேண் டும் என்று கூறுகின்றனர். தற்போது பாக்., அதிபர் முஷாரப் பதவி விலக அமெரிக்கா, ராணுவம், சவுதி அரேபியா ஆகிய மூன்று சக்திகள் செயல் பட்டிருக்கின்றன. பாகிஸ்தான் நலனைவிட, முஷாரபின் நட்பு அல் லது நெருக்கம் தேவையில்லை என்று ராணுவத் தளபதி கியானி முடிவு செய்துவிட்டார்.
இப்போது கிலானியுடன் டெலிபோனில் பேசியபின் அதிபர் முஷாரபிடம் பேசியிருக்கிறார். அதற்குமுன் கடந்தவாரத்தில் முஷாரப் நெருக்கடிகளைச் சந்தித்த போது அதிபர் புஷ்ஷிடம் பேச முடியவில்லை. பத்து நாட்களுக்கு முன் சவுதி நாட்டின் உளவுத் துறைத் தலைவர் இளவரசர் முக்ரீன் பின் அப்துல் அசீஸ் இஸ்லாமாபாத் வந்து நவாஸ், சர்தாரி உட்பட எல்லாத் தலைவர்களுடனும் பேசியிருக்கிறார். அப்போது அவர், "எவரும் கேலி செய்து சிரிப் பிற்கு ஆளாகாத வகையில், அதே சமயம் முடிவும் காணப்பட வேண்டும்' என்று கூறியிருக்கிறார். இவை எல்லாம் பாகிஸ்தானில் அடுத்து வரும் மாற்றம் நிஜமாகவே ஜனநாயகம் வலுப்படுமா, அல்லது புதிய குழப்பத்துடன், அமெரிக்கா சொல்படி நடக்கும் நம்பிக்கை நிர்வாகம் உருவெடுக்குமா என்பது இனித் தெரியும்.

ரஜினி படங்களை வெளியிடுவதில்லை : தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு

குசேலன் படத்தில் ஏற்பட்ட நஷ்டத்திற்கு, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், மதுரையில் ரஜினியின் புதியப் படங்களை வெளியிடுவதில்லை' என, தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

மதுரை மாவட்ட தியேட்டர் உரிமையாளர்கள் சங்க செயலர்கள் கூறியதாவது: குசேலன் படத்தை வெளியிட, மதுரை மற்றும் புறநகர் பகுதி தியேட்டர் உரிமையாளர்கள் பல கோடி ரூபாய் கொடுத்துள்ளனர். குசேலன் படத்தில் 25 நிமிடங்கள் ரஜினி வருகிறார். அதில், அவரது பழைய படங்களின் கிளிப்பிங்ஸ் தான் அதிகம். இதனால், பெரும் நஷ்டம் அடைந்துள்ளோம். நாங்கள் அடைந்த நஷ்டத்திற்கு ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம், கவிதாலயா செவன் ஆர்ட்ஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த விஷயத்தில் ரஜினி தலையிட வேண்டும். நாங்கள் படத்திற்காக கொடுத்த மினிமம் கேரண்டி (எம்.ஜி.,) தொகையை, டெபாசிட்டாக மாற்றம் செய்ய வேண்டும். படம் ஓடிய நாள் வரையிலான சதவீதத்தை மதிப்பீடு செய்து, மீதமுள்ள தொகையை திருப்பித் தரவேண்டும்.



மாநிலத்தில் அனைத்துப் பகுதி தியேட்டர் உரிமையாளர்களும், இந்த முடிவுக்கு வந்துள்ளனர். சென்னையில் 23ம் தேதி, சங்கத்தின் தலைமை அலுவகத்தில் கூடி, முக்கிய முடிவுகள் எடுக்க உள்ளோம். நாங்கள் அடைந்த நஷ்டம் தொடர்பாக, ரஜினி மற்றும் படம் வெளியிட்ட நிறுவனங்களுக்கு அனுப்பிய கடிதங்கள் திரும்பி வந்துள்ளன.



இப்பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் வரை, மதுரை மாவட்டத்தில், ரஜினியின் புதியப் படங்கள் மற்றும் கவிதாலயா செவன் ஆர்ட்ஸ், ஐங்கரன் இன்டர்நேஷனல், ஜி.பி., விஜயகுமார் நிறுனங்களின் படங்களை வெளியிடுவதில்லை என, முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

முதல்வராகிறார் ஸ்டாலின்


தி.மு.க.வைத் தொடங்கும்போது அண்ணாவுக்கு நாற்பது வயது, நாவலருக்கு 29 வயது, பேராசிரியருக்கு 27 வயது, கலைஞருக்கு 25 வயது, மதியழகனுக்கு 25 வயது... எனவே, வயது எதற்கும் தடையில்லை... - இப்படித்தான் தி.மு.க.வின் தலைவர்கள் எல்லாரும் பேசினார்கள், 1980-ல் மதுரையில் இளைஞரணி தொடங்கப்பட்டபோது!

ஆனால், தி.மு.க.வில் இளைஞர்களுக்கு வழிவிடப்படுமா? என்ற கேள்வி எழுப்பப்பட்டுக் கொண்டே இருந்தாலும்கூட கேள்விக்குறியாகவே தொடருகிறது இது. கடந்த சில ஆண்டுகளில், குறிப்பாக முதல்வர் கலைஞரின் உடல்நலம் பற்றிய சங்கடங்கள் வெளியே தெரியத் தொடங்கியபோது, ஸ்டாலின் முதல்வராவாரா? என்ற கேள்வி விவாதமானது. ஸ்டாலின் முதல்வராவதை ஆதரிப்பதாக பேராசிரியர் அன்பழகன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பகிரங்கமாகவே அறிவித்தபோதிலும்கூட, பதில்கள் மட்டும் பூடகமாகவே வெளியிடப்பட்டு வந்தன.

இந்தக் கோரிக்கையும் எதிர்பார்ப்பும் கொதிநிலையை எட்ட, நெல்லையில் நடந்த தி.மு.க. மாநாட்டின்போது ஸ்டாலின் முதல்வராக அறிவிக் கப்படுவார் என பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வழக்கமான பதிலுடன் அறிவிப்பு தள்ளிப் போனது. அதைத் தொடர்ந்துதான், இந்த யோசனையை யார் எதிர்ப்பது, ஏன் தள்ளிப் போகிறது, அறிவிப்பதில் என்ன தயக்கம் என்பது போன்ற கேள்விகளும் விவாதங்களும் பெரிதாக அடிபடத் தொடங்கின.

தொடர்ந்து, அடுத்த வாரிசுகளான அழகிரி, கனிமொழி போன்றோர் பற்றிய விவாதங்களும் சூடுபிடிக்கத் தொடங்கின. ஒரு சர்வேயின் பலனால் கட்சியிலிருந்து கட்டங்கட்டப்பட்ட தயாநிதி மாறனுடைய அரசியலும் இந்த சர்ச்சைகளுக்குள்ளே புகுந்து விளையாடத் தொடங்கியது.

அதிகாரத்தைக் குறிவைக்கும் குடும்ப அரசியலில் ஸ்டாலினும் ஒரு காயாகி, அங்கே இங்கே என்று நகர்த்தப்பட்டுக் கொண்டிருக்க, அண்மையில் ஸ்டாலின் மேற்கொண்ட லண்டன் பயணமும், அது தொடர்பான செய்திகளும் சர்ச்சைகளை மேலும் மேலும் வளப்படுத்தின. ஒருகட்டத்தில் ஸ்டாலின் ஓரங்கட்டப்படுகிறார் என்றேகூட கட்சிக்கு உள்ளேயும், வெளியேயும் இருந்த பலரால் கருதப்பட்டது.

வேலூர் மாநகராட்சித் தொடக்க விழாவில் பேசிய கலைஞரோ, `அடுத்த முறை முதல்வராக நான் விரும்பவில்லை. தகுதியும் திறமையும் வாய்ந்தவருக்கு உறுதுணையாக இருப்பேன்' என்றார். இத்தனைக்கும் மேடையில் உடனிருந்த ஸ்டாலின் பற்றி அவர் எதுவும் குறிப்பிடவில்லை. மதுரையில் டி.எம். சௌந்தரராஜனுக்கு நடந்த பாராட்டு விழாவில் அழகிரியைப் பாராட்டி அவர் பேசிய பேச்சும், பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் சிலை திறப்புக்கேகூட ஸ்டாலின் வராததும் சேர, அவருடைய ஆதரவாளர்களிடையே தர்மசங்கட அலைகளை ஏற்படுத்தியது.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு சென்னையில் அண்மையில் ஒரு மேம்பாலத் திறப்பு விழாவில் உள்ளாட்சித் துறை அமைச்சரான ஸ்டாலினையும் வைத்துக்கொண்டு பேசியபோதுதான், ஸ்டாலின் ஊக்கை விழுங்கிய கதையைக் கூறி, `அந்த ஊக்கத்தால் அவர் மேயராகி, அமைச்சராகி, இன்னும் என்னென்னவோ ஆகப் போகிறார்' என்று குறிப்பிட்டு மீண்டும் ஒரு நம்பிக்கை சஸ்பென்ஸ் வைத்திருக்கிறார் கலைஞர்.

ஸ்டாலின் முதல்வராவாரா?

இந்த விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க கலைஞர் முடிவு செய்துவிட்டதாகவே நம்பத் தகுந்த வட்டாரங்களின் லேட்டஸ்ட் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்டாலினை முதல்வராக அறிவிப்பதுடன், காங்கிரஸின் கோரிக்கைக்கு செவிமடுத்து அவர்களை அமைச்சரவையில் சேர்த்துக் கொள்வது பற்றிய அறிவிப்பையும் ஒருசேர செப்டம்பரில் கலைஞர் வெளியிடுவார் என இந்த வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன. அனேகமாக, செப்டம்பரில் அண்ணா பிறந்த நாளான 15-ம் தேதி, உள்கட்சித் தேர்தல் முடிந்து நடைபெறவுள்ள முப்பெரும் விழாவில் இதுபற்றிய முறைப்படியான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக கட்சியிலும் குடும்பத்திலும் ஒரு `காம்ப்ரமைஸ் ஃபார்முலா' உருவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த சில நாள்களாக ஸ்டாலின் மீண்டும் உற்சாகமாகக் காணப்படுவதற்கு இந்தப் புதிய முடிவுதான் காரணம் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.
இந்த முடிவை நோக்கி கலைஞர் சென்றடையப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

முதலாவதாக, உள்கட்சி தாண்டி அரசியல் கட்சிகள் மட்டுமின்றி சாதாரண மக்கள் மத்தியிலும் விவாதிக்கப்படும் `யார் அடுத்த வாரிசு?' என்பது பற்றிய அநாவசியமான சர்ச்சை. இதையொட்டியே பேசப்படும் அவருடைய உடல்நிலை தொடர்பான சங்கடங்கள்.

இவையெல்லாம் இப்படியே தொடர்ந்தால் காலப்போக்கில் கட்சியைப் பலவீனப்படுத்திவிடக் கூடும் என்ற கருத்து வலுப்பட்டு வருகிறது.

``கலைஞர் கண் முன்னாலேயே ஸ்டாலின் முதல்வராக அறிவிக்கப்பட்டால் பெரிய அளவில் எதிர்ப்பு எதுவும் இருக்காது. தென் மாவட்டங்களையும் சேர்த்தால்கூட பெரும்பாலான மாவட்டச் செயலர்கள் ஸ்டாலின் வருவதை எவ்வித முணுமுணுப்புமின்றி எளிதில் ஏற்றுக்கொள்வார்கள். இந்த விஷயத்தில், சட்டமன்றத் தேர்தலுக்கு முன் தமிழகம் முழுவதும் ஸ்டாலின் செய்த சுற்றுப்பயணம் நல்ல பலனைத் தந்திருக்கிறது.

``வீரபாண்டி ஆறுமுகம் போன்ற சிலரும்கூட பல்வேறு காரணங்களால் இப்போது ஸ்டாலினை ஏற்றுச்செல்லும் மனநிலைக்கு வந்துவிட்டனர். ஒருவேளை எதிர்ப்பு இருந்தாலும் ஒரு சொல்லில் கலைஞரால் அடக்கிவிடவும் முடியும். தக்க விதத்தில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படும் பட்சத்தில் வாரிசுகள் இணக்கமாகச் செயல்படுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. கலைஞருடைய கண்காணிப்பு இல்லாவிட்டால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். காமராஜருக்குப் பிறகும், எம்.ஜி.ஆருக்குப் பிறகும் தமிழகத்தில் காங்கிரஸுக்கும் அ.தி.மு.க.வுக்கும் நேர்ந்ததை வரலாறு திருப்பிச் சொன்னாலும் வியப்பதற்கில்லை'' என்று அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

``ஆட்சியிலும் தேர்தலிலும் ஸ்டாலின் முன்னிறுத்தப்படும்பட்சத்தில் மாறன் சகோதரர்களின் எதிர்ப்புகூட மழுங்கடிக்கப்பட்டு விடக் கூடும். ஏனெனில், அழகிரியிடம் காட்டும் வன்மத்தை இவர்கள் ஸ்டாலினிடம் காட்டுவதில்லை. தேர்தல் என்று வரும்போது தி.மு.க. வேட்பாளர்களைத் தோற்கடிக்க இவர்கள் செய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படும் முயற்சிகள் எல்லாமும்கூட மட்டுப்படலாம்.

``பாட்டாளி மக்கள் கட்சி வெளியேற்றப்பட்ட நிலையில் இடதுசாரிகளும் வெளியேறினால் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகளை மட்டும் வைத்துக் கொண்டுதான் எதிர்வரும் மக்களவைத் தேர்தலை தி.மு.க. எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அ.தி.மு.க. அணி மேலும் வலுப்படும்பட்சத்தில், கட்சிக்குள் நடைபெறும் உள்குத்து அரசியல், தி.மு.க.வுக்குப் பெரும் பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும்'' என்பதும் சுட்டிக்காட்டப்படுகிறது.

வெற்றியோ, தோல்வியோ மக்களவைத் தேர்தலை ஒருவழியாகச் சமாளித்துவிட்டாலும் மாநிலத்தில் மீதியுள்ள ஆட்சிக்காலம்? இந்த இடத்தில்தான் அமைச்சரவையில் காங்கிரஸுக்கு இடம் தரும் முடிவு முக்கியத்துவம் பெறுகிறது.

காங்கிரஸை மட்டுமே நம்பி ஆட்சியைத் தொடர வேண்டிய சூழ்நிலையில், காங்கிரஸையும் ஆட்சியில் பங்கேற்கச் செய்வது மட்டுமே அவர்களின் ஒத்துழைப்பை உறுதி செய்யும். இல்லாவிட்டால், கோஷ்டிகளுக்குப் புகழ்பெற்ற காங்கிரஸில் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி (மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இல்லாவிட்டால் மிகவும் வசதியாகப் போய்விடும்) தி.மு.க. அரசை மிக எளிதாக, மிக விரைவாக ஜெயலலிதா கவிழ்த்துவிடும் வேலைகளில் இறங்குவார். இதற்கான வேலைகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டதாக அ.தி.மு.க. வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

காங்கிரஸ் பங்கேற்புடனான தி.மு.க. ஆட்சி என்றால் தற்போதைய சூழலில் உடனடியாக சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க வேண்டிய அவசியமின்றி, ஸ்டாலின் தலைமையில் மீதியுள்ள ஆண்டுகளை உறுதிப்பட நகர்த்திவிடவும் முடியும். ஸ்டாலின் சிறப்பாகச் செயல்படும்பட்சத்தில், கூட்டணியிலும் மாற்றங்கள் ஏற்பட்டு வலுப்பட்டால், சட்டமன்றத் தேர்தலின்போது வெற்றிக்காக மிகுந்த சிரமப்பட வேண்டியிருக்காது என்றும் கலைஞரும் தி.மு.க. வட்டாரங்களும் கருதுவதாகக் கூறப்படுகிறது.

`நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக கட்சிக்காரராக அரசியலில் தொடர்ந்து இருக்கிறார் ஸ்டாலின். சிறுவயதிலேயே கட்சித் தலைவர்களுக்கு அஞ்சல் அட்டையில் அவர் பொங்கல் வாழ்த்துகளை அனுப்புவார். இளைஞர் தி.மு.க. என்று தொடங்கிப் பல்வேறு நிலைகளைக் கடந்து வந்திருக்கிறார். ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல்காந்தி போல திடீரென வந்தவரல்லர் அவர்' என்றே தி.மு.க. வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

`தலைவர் மகன் என்றாலும் தொடக்க காலத்திலிருந்தே கட்சி தொடர்பான சிந்தனையுடன்தான் ஸ்டாலின் இருந்து வருகிறார். தி.மு.க.வின் கடந்த நாற்பதாண்டு கால வரலாற்றில் அவருக்கும் இடமிருக்கிறது. போராட்டங்களில் எல்லாம் பங்கேற்று வந்திருக்கிறார். சிறைக்கும் சென்றிருக்கிறார்' என்றும் இவர்கள் குறிப்பிடுகின்றனர்.

தந்தைக்கு இணையாக முடியாது என்றாலும் பெரிதாகக் குறைகூற முடியாத அளவுக்கு அவர் சிறந்த நிர்வாகி என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. சென்னை மாநகரின் மேயராக இருந்த காலத்தில் வெற்றிகரமாகவே செயல்பட்டிருக்கிறார். ஆனால், அந்த வெற்றியையேகூட எவ்வாறு வெளிக்காட்டிப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது அவருக்குத் தெரியாது என்பது பலவீனம்.

மேலும், தனக்கு நெருக்கமான விசுவாசிகளுக்குச் சிக்கல் வரும்போதுகூடத் துணிந்து எதிர்ப்புக் குரல் காட்ட முன்வர மாட்டார். இவருடைய தீவிர ஆதரவாளரான கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனிடமிருந்து நல்வாழ்வுத் துறை பறிக்கப்பட்டபோது இவரிடமிருந்து ஒரு முணுமுணுப்புக்கூட எழவில்லை என்பது சமீபத்திய எடுத்துக்காட்டு. எந்தவொரு விஷயமானாலும், அப்பாவிடம் கேட்க வேண்டுமே, கட்சிக்குக் கெட்ட பெயர் வந்துவிட்டால்..., நான் சொன்னால் நன்றாக இருக்குமா? என்கிற பாணியிலான இவருடைய அணுகுமுறைதான் பெரும் பலவீனங்களாக இருக்கும் என்றும் இவருடைய ஆதரவாளர்களே சுட்டிக்காட்டுகின்றனர்.

``ஸ்டாலின் முதல்வராக்கப்படுவது எப்போதோ நடந்திருக்க வேண்டியது. கலைஞர்தான் மிகவும் தயக்கம் காட்டி வருகிறார். சரியான காரணம் என்னவென்றுதான் தெரியவில்லை. இந்த முப்பெரும் விழாவிலாவது அறிவித்து விடுவார் என்றுதான் நம்புகிறோம்.

வட மாவட்டங்களின் அமைப்புச் செயலராக நீலநாராயணனும், தென் மாவட்டங்களின் அமைப்புச் செயலராக எஸ்.எஸ். தென்னரசுவும் இருந்தனர். தென்னரசுவின் மறைவுக்குப் பிறகு அந்தப் பொறுப்புக்கு யாரும் நியமிக்கப்படவில்லை. அனேகமாக, ஸ்டாலினுக்கு முடிசூட்டுவது பற்றி அறிவிக்கப்படும் விழாவிலேயே தென் மாவட்ட அமைப்புச் செயலராக அழகிரிக்கும் கட்சிப் பொறுப்பு வழங்கப்படலாம்'' என்று தி.மு.க. வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

எல்லாம் உறுதிதான் என்றே கூறப்பட்டாலும்கூட, ஸ்டாலின் முதல்வர் பொறுப்பேற்கக் காலம் கனிந்துவிட்டதா? அழகிரிக்கு கட்சிப் பொறுப்பு அறிவிக்கப்பட்டு விடுமா? காங்கிரஸுக்கு அமைச்சரவையில் பங்களிக்கப்படுமா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் திட்டவட்டமான பதில்களை கலைஞரைத் தவிர வேறு யார் அறிவார்?

படங்கள் : ம. செந்தில் நாதன், மீடியா ராமு
ஸீ எம்.பாண்டியராஜன்

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலத் துணைச் செயலர் சி. மகேந்திரன் என்ன சொல்கிறார்?

``கலைஞர் இருக்கும்போதே ஸ்டாலினைக் கொண்டுவருவதால், பெரிய விளைவு ஏற்பட்டுவிடாது. ஏனெனில், மிகவும் சிக்கலான பணிகள் காத்திருக்கின்றன. கட்சிக்காரர்களை அரவணைத்துச் செல்ல வேண்டும்; பிற அரசியல் கட்சிகளுடன் இணக்கமாகச் செல்ல வேண்டும். முன்னர் தங்கள் கட்சிப் பிரச்னைகளைச் சமாளித்தால் மட்டும் போதும். இப்போதெல்லாம் வேறு கட்சிகளுக்கும் தங்கள் கட்சிக்குமுள்ள பிரச்னைகைளயும் தீர்த்துவைக்க வேண்டும். என்றாலும் தி.மு.க. என்ன நினைக்கிறது, கலைஞர் என்ன நினைக்கிறார் என்பதைப் பொறுத்த விஷயம் இது.''

பா.ஜ.க. தலைவர் இல. கணேசன்:

``மத்தியில் காங்கிரஸுக்குத் தரும் ஆதரவை தி.மு.க. விலக்கிக் கொள்ள இயலாது. காரணம், காங்கிரஸ் ஆதரவை விலக்கிக் கொண்டால் மாநிலத்தில் தி.மு.க. அரசு கவிழும்.

மத்தியில் காங்கிரஸைப் போலவே மாநிலத்திலும் காங்கிரஸ் வெல்ல வாய்ப்பில்லை. எனவே, இருக்கிற அதிகாரத்தை இழக்க தி.மு.க. விரும்பாது.
கலைஞர் நீடிக்கும்போதே அமைச்சரவையில் காங்கிரஸ் அங்கம் வகிக்கலாம். சோனியா ஒரு வார்த்தை தொலைபேசியில் சொன்னால் நடந்துவிடும். தாற்காலிகமாக காங்கிரஸ் அதிகாரத்தைப் பெற்றாலும் தி.மு.க. அரசு மீதான மக்களின் கோபம், காங்கிரஸின் மீதும் பாயும். தேர்தலில் இவையிரண்டும் படுதோல்வியடையும். அமைச்சரவையில் காங்கிரஸுக்கு இடம் தருவதற்கும் ஸ்டாலின் முதல்வராவதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.

ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போதே தன் அதிகாரத்தைத் தன் வாரிசிடம் ஒப்படைப்பது அவருக்குப் பெருமை சேர்க்கும். ஆனால், அது சுலபமானதல்ல.

அண்மையில் ஒரு விழாவில், தாம் மீண்டும் முதல்வராக விரும்பவில்லை. தகுதியும் திறமையும் வாய்ந்த நபர்களில் ஒருவருக்கு நான் உறுதுணையாக இருப்பேன் என்று அவர் பேசியதில் பன்மை தொனிக்கிறது. ஒருவர் அல்ல, ஒருசிலர் என்றிருக்கிறார். நான் முதல்வராக மாட்டேன். ஸ்டாலினை ஆக்குவேன் என்றுதான் அவர் தெரிவித்திருக்க வேண்டும். அவ்வாறெனில் தி.மு.க. வட்டாரத்திலேயே சந்தேகம் இருக்கிறது. எதுவாக இருந்தாலும் முழு ஆட்சிக் காலத்தையும் முடித்த பிறகு (அடுத்த சட்டமன்றத் தேர்தலின்போதுதான்) அடுத்த முதல்வர் யார் என முடிவெடுக்கும் நிலையில் தி.மு.க. இருக்குமானால், அதற்கு அந்த அவசியமே ஏற்படாது.''

தயாநிதி மாறன் என்ன செய்வார்?

ஸ்டாலின் முதல்வரானால் தயாநிதி மாறன் நிச்சயம் மகிழ்ச்சியடைவோர் பட்டியலில்தான் இடம் பெறுவார். ஏனெனில் குறைந்தபட்ச தற்காப்பு நிச்சயம், தொழிலிலும் அரசியலிலும். பணபலமும் ஊடகங்களும் கைவசமிருக்கும் நிலையில் தேர்தல் வரை பொறுத்திருந்தால், பேரவைத் தேர்தலில், கடந்த தேர்தல் போலவே தி.மு.க. வேட்பாளர்களுக்கே `பண உதவி' செய்து அவர்களைத் தங்கள் ஆதரவாளர்களாக ஏற்படுத்திக் கொள்ள முடியும். தேவைப்பட்டால் எதிர்காலத்தில் அவர்களைப் பயன்படுத்திக் கொள்ளவும் முடியும். மேலும் எதிர்காலத்தில் குடும்ப உறவு மீண்டும் துளிர்க்கும் என்ற நம்பிக்கையுடனும் இருக்க முடியும் என்கின்றன தி.மு.க. வட்டாரங்கள்.

சட்டமன்ற காங்கிரஸ் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் யசோதா :

``அமைச்சரவையில் காங்கிரஸுக்குப் பங்கு கொடுத்தால் கட்டாயம் வரவேற்போம். மாநில அமைச்சரவையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படுவது சோனியாகாந்தியின் கைகளில்தான் உள்ளது. அவர் `சரி' என்றாலும் நாங்கள் ஏற்றுக் கொள்வோம். `இல்லை' என்றாலும் ஏற்றுக் கொள்வோம். அமைச்சரவையில் எங்களுக்கு உரிய பங்கீடு கொடுக்கப்பட்டால் சோனியா காந்தி தடையாக இருக்க மாட்டார் என்பதே காங்கிரஸ் தொண்டர்களின் எண்ணம்.

நாங்களும் தமிழகத்தில் `பவர் பாலிடிக்ஸ்' நடத்த வேண்டும் என்றால் இதுதான் ஒரே வழி. கட்சியை இன்னும் வலுப்படுத்த ஒட்டுமொத்த காங்கிரஸ் தொண்டர்களுக்கும் ஊக்கமாக இருக்கும். காரைக்குடிக்கு சோனியா காந்தி வந்தபோது, பீட்டர் அல்போன்ஸ், நான் உள்பட முப்பத்தைந்து எம்.எல்.ஏ.க்களும் கையெழுத்துப் போட்டு தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி, சோனியாவிடம் கொடுத்தோம். அந்தத் தீர்மானத்தில் `அமைச்சரவையில் பங்கு வேண்டும்' என்பதைத்தான் முன்னிலைப்படுத்தி இருந்தோம். இப்போது அதற்கான காலம் கனிந்து வந்தால் வரவேற்போம். இதனை தமிழகத்தின் ஒட்டுமொத்த காங்கிரஸ் தொண்டர்களும் வரவேற்பார்கள்''.

பாகிஸ்தானை விட்டு செல்ல மாட்டேன் : முஷாரப் உறுதியோ உறுதி

""நான் மிகவும் நேசிக்கும் நாடு பாகிஸ்தான். அந்த நாட்டை விட்டு எங்கும் செல்ல மாட்டேன். நான் வெளிநாட்டில் குடியேறப் போவதாக வெளியான செய்திகள் பொய்யானவை,'' என, பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் தெரிவித்துள்ளார். பதவி விலகிய, முஷாரப்பை நேற்று முன்தினம் சில பிரிவினர் சந்தித்துப் பேசினர்.
அப்போது அவர் கூறியதாவது: நான் அதிபர் பதவியிலிருந்து விலகியதை, தோல்வி அடைந்து விட்டதாகக் கருதக்கூடாது. நாடு மற்றும் மக்களின் நலன் கருதியே பதவி விலகினேன். நான் முதலில் நேசிப்பது பாகிஸ்தானைத்தான். அந்த நாட்டை விட்டு எங்கும் செல்ல மாட்டேன். வெளிநாட்டில் குடியேறும் எண்ணமும் இல்லை. கடந்த திங்கள் கிழமை நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்திய போது, தெரிவித்ததன் அடிப்படையில், நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பாக, விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடுவேன். எனது மகன் அமெரிக்காவில் நல்ல தொழிலதிபராகி இருப்பதால், நான் அங்கு செல்வதாக கூறப்படுவதில் உண்மையில்லை. இதையெல்லாம் ஆதாரமற்ற தகவல்கள். இவ்வாறு முஷாரப் கூறினார். இதற்கிடையில், முஷாரப்பிற்கு விதிமுறைகளின் அடிப்படையில் பாதுகாப்பு அளிக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக, அந்நாட்டின் உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக் கூறுகையில், "பாதுகாப்பு தொடர்பாக முஷாரப் சில வேண்டுகோள்களை விடுத்துள்ளார். விதிமுறைகளின் அடிப்படையில் அவருக்கு சிறப்பான பாதுகாப்பு அளிக்கப்படும்' என்றார்.
ஐ.எஸ்.ஐ.,யின் ஆதிக்கம் குறையும்: "அதிபர் பதவியிலிருந்து முஷாரப் விலகி விட்டதால், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,யின் ஆதிக்கம் குறையும். அதை தற்போதைய கூட்டணி அரசு அடக்கி வைக்கும்' என, ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
லண்டனில் அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது: காபூலில் இந்திய தூதரகத்தில் நடந்த தற்கொலை படை தாக்குதலில், பிரிகேடியர் அந்தஸ்திலான அதிகாரிகள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் பலியாயினர். இந்த தாக்குதல் சம்பவத் திற்கு பாக்., உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., யின் சதியே காரணம். பாகிஸ்தான் பிரதமர் கிலானி நல்ல மனிதர். நல்ல நோக்கங்களை கொண்டவர். அவர் ஐ.எஸ்.ஐ., அமைப்பை அடக்கி வைப்பார் என நம்புகிறேன். அப்படி செய்வது சர்வதேச சமுதாயத்திற்கு உதவுவதாக இருக்கும். இவ்வாறு கர்சாய் கூறினார்.

ஸ்பெயினில் விமான விபத்து : 146 பேர் பலி

ஸ்பெயின் ஏர் ஜெட் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மாட்ரிட் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 178 பயணிகளுடன் புறப்பட தயாரான விமானம் ஓடுபாதையில் திடீரென சறுக்கி எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தின் கீழ்ப்புற பகுதி தீப்பிடித்துக் கொண்டது. இந்த விபத்தில் 146 பேர் பலியாயினர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.

ஒலிம்பிக்கில் சுஷில்குமார் வெண்கலம்! * விஜேந்தர் வெற்றியால் இன்னொரு பதக்கம் உறுதி

இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் நேற்று மறக்க முடியாத நாள். மல்யுத்த போட்டியில் சுஷில் குமார் வெண்கலம் வென்று சாதித்துக் காட்டினார். குத்துச்சண்டையில் விஜேந்தர் குமார் வெற்றி பெற்று, பதக்க வாய்ப்பை உறுதி செய்துள்ளார். ஏற்கனவே அபினவ் பிந்த்ரா துப்பாக்கிச் சுடுதலில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இதன் மூலம் ஒலிம்பிக்கில் முதல் முறையாக இந்தியா, மூன்று பதக்கங்களை கைப்பற்றும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.
சீனத் தலைநகர் பீஜிங்கில் 29வது ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. இதில் 205 நாடுகளைச் சேர்ந்த சுமார் 11 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். துப்பாக்கிச் சுடுதல் 10 மீட்டர் "ஏர் ரைபிள்' பிரிவில் இந்திய வீரர் அபினவ் பிந்த்ரா தங்கப் பதக்கம் வென்றார். இதற்கு பிறகு டென்னிஸ் நட்சத்திரங்கள் பயஸ், பூபதி, சானியா மிர்சா போன்றோர் ஏமாற்றினார். நீளம் தாண்டுதலில் அஞ்சு ஜார்ஜ் தகுதிச் சுற்றில் வெளியேற, நிலைமை மோசமானது. இந்தச் சூழலில் நேற்று நடந்த மல்யுத்த போட்டியில் டில்லியைச் சேர்ந்த 25 வயதான சுஷில் குமார் நம்பிக்கை தந்தார்.
சாதித்தார் சுஷில்: ஆண்களுக்கான 66 கி.கி., "பிரீஸ்டைல்' பிரிவில் பங்கேற்ற சுஷில் குமார் முதல் சுற்றில் உக்ரைனின் ஆன்ட்ரி ஸ்டாட்னிக்கிடம் தோல்வி அடைந்தார். ஆனாலும் "ரெபிசேஜ்' (வைல்ட் கார்ட் போன்றது) அடிப்படையில் அடுத்த சுற்றில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றார். இதில் அசத்தலாக செயல்பட்டார் சுஷில். துவக்கப் போட்டியில் அமெரிக்காவின் டக் ஸ்கவாபை வீழ்த்தினார். அடுத்த சுற்றில் பெலாரசின் ஆல்பர்ட் பாதிரோவை வென்றார். இதையடுத்து இரண்டு வெண்கலப் பதக்தங்கள் அடங்கிய அரையிறுதிக்கு முன்னேறினார். இதில் கஜகஸ்தானின் லியானிட் ஸ்பிரிடோனோவை சந்தித்தார். வென்றால்...வெண்கலம் உறுதி என்ற நிலையில் மிகுந்த துடிப்பாக செயல்பட்டார் சுஷில். இவரது இரும்புப் பிடியில் இருந்து லியானிட் தப்ப முடியவில்லை. தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய சுஷில் குமார் 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கலம் வென்றார். துருக்கியின் சாகின் ரமசான் தங்கம், உக்ரைனின் ஆன்ட்ரி ஸ்டாட்னிக் வெள்ளி வென்றனர். மற்றொரு வெண்கலப் பதக்கத்தை ஜார்ஜியாவின் ஓடார் துஷிஷ்விலி பெற்றார்.
ஜாதவுக்கு பிறகு: கடந்த 1952, ஹெல்சின்கி ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற ஜாதவுக்கு பிறகு மல்யுத்தத்தில் பதக்கம் பெறும் இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை சுஷில் குமார் பெற்றுள்ளார். இதே 1952ல் நடந்த ஹாக்கியில் இந்திய அணி தங்கம் வென்றது. இதன் மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் 56 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் இந்தியாவுக்கு இரண்டு பதக்கங்கள்(பிந்த்ரா, சுஷில் குமார்) கிடைத்துள்ளன.
விஜேந்தர் அபாரம்: தவிர நேற்று நடந்த குத்துச்சண்டை 75 கி.கி., "மிடில் வெயிட்' காலிறுதியில் இந்தியாவின் விஜேந்தர் குமார், ஈகுவடாரின் கார்லஸ் கங்கோராவை வீழ்த்தினார். இதையடுத்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ள விஜேந்தர் குறைந்தபட்சம் வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்துள்ளார். இவர் தொடர்ந்து சூப்பராக "குத்து' விட்டால் தங்கம் வென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
வாழ்த்து, பரிசு மழை: வெண்கலம் வென்ற சுஷில் குமாருக்கு ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ரயில்வேயில் "டிக்கெட் இன்ஸ்பெக்டராக' பணிபுரியும் இவரை துணை "கமர்ஷியல் மேனேஜராக' பதவி உயர்த்துவதாக மத்திய அமைச்சர் லாலு தெரிவித்துள்ளார். தவிர ரூ. 55 லட்சம் பரிசு வழங்குவதாகவும் அறிவித்துள்ளார். இதைத் தவிர அரியானா அரசு ரூ. 25 லட்சம், டில்லி அரசு ரூ. 50 லட்சம் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளன.

பல மாநிலங்களில் 'சிமி' பயிற்சி முகாம் * குண்டு வைத்த சதிகாரன் 'திடுக்' தகவல்

தடை செய்யப்பட்ட, "சிமி' அமைப்பு, கேரளா மற்றும் குஜராத்தில் மட்டுமின்றி, நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் பயிற்சி முகாம்கள் நடத்தி வருவது தெரிய வந்துள்ளது. இதனால், இந்தியாவுக்கு ஆபத்து காத்திருப்பதாகக் கருதப்படுகிறது. ஆமதாபாத் குண்டுவெடிப்பில் முக்கிய பங்காற்றிய முப்தி அபு பஷிர் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தில் "சிமி'யின் பயங்கரத்தால் ஏற்படும் ஆபத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. ஆமதாபாத் தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கு முன் இந்த முகாம்களில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ம.பி., மாநிலம் கந்த்வா மாவட்டம், கர்நாடக மாநிலம் தர்வாத் மாவட்டத்திலும் இந்த முகாம்கள் செயல்பட்டு வந்துள்ளன.
கேரளாவில், 2007ம் ஆண்டு டிசம்பரில் நடத்தப்பட்ட பயிற்சி முகாமைப் போலவே இவையும் செயல்பட்டுள்ன. "சிமி' அமைப்பைச் சேர்ந்த, பல்வேறு மாநிலங்களில் உள்ளவர்கள் இந்த முகாம்களில் பங்கேற்றுள்ளனர். அவர்களுக்கு கைத்துப்பாக்கி சுடுதல், மலையேற்றம், நகரின் வரைபடத்தை அறிதல் உள்ளிட்டவற்றில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மும்பையைச் சேர்ந்த கம்ப்யூட்டர் நிபுணரான தவுபிக் பிலாயின் உண்மையான பெயர் அப்துல் சுபான். இவன் தான், குண்டுவெடிப்பின் மூளையாகச் செயல்பட்டு இருப்பதாகக் கருதப்படுகிறது. டில்லியில் இருந்து வெளியாகும் "இஸ்லாமிய இயக்கம்' என்ற பத்திரிகையின் ஆசிரியராகவும், வெளியீட்டாளராகவும் இவன் இருந்து வந்துள்ளான். சுபன் என்ற தவுபிக் மீது, பல்வேறு மாநிலங்களில் ஐந்துக்கு மேற்பட்ட வழக்குகள் உள்ளன. மும்பை குண்டுவெடிப்பு வழக்கிலும், சூரத்தில், "சிமி' அமைப்புக்கு எதிரான வழக்கிலும், இவன் தேடப்பட்டு வந்தான். இந்திய முஜாகிதீன் என்ற அமைப்பின் பெயரில் இவன் தான் இ-மெயில் அனுப்பியதாக நம்பப்படுகிறது. குஜராத் மற்றும் இதர மாநிலங்களில், மதக் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில், மதவெறி பிரசாரத்தில் ஈடுபட்டதற்காகவும் இவன் தேடப்பட்டு வந்தான்.
போலீஸ் சீல்: சுபானும், வதோதராவைச் சேர்ந்த முகமது கயாமுதீனும் தொடர்ந்து தலைமறைவாகவே இருந்து வருகின்றனர். வதோதராவில் உள்ள முகமது கயாமுதீனுக்குச் சொந்தமான அடுக்குமாடிக் குடியிருப்பின் இரண்டு படுக்கை அறை வீட்டுக்கு போலீசார் நேற்று சீல் வைத்தனர். ஆமதாபாத் குண்டுவெடிப்புக்கு முன் அப்துல் சுபான் என்ற தவுபீக், இங்கு அடிக்கடி வந்து சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. வதோதராவில், நான்கு மாடிகளைக் கொண்ட அக்மல் வளாகத்தில் மூன்றாவது தளத்தில் இந்த வீடு உள்ளது. இந்த வீட்டில் தான் வெடிகுண்டுகள் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளன. தற்போது இந்த வீட்டின் முன் குஜராத் மாநில ரிசர்வ் போலீசார், காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். ஆமதாபாத் போலீஸ் குழுவினர் இங்கு வந்த பின், இந்த வீடு திறக்கப்பட்டு சோதனையிடப்பட உள்ளது. இந்த வீடு, "சிமி' அமைப்பினரால், பல்வேறு சதித்திட்டங்களுக்குப் பயன்படுத்தப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவனான இம்ரான் ஷேக்கிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தானும், தனது கூட்டாளியும் ஆமதாபாத் மருத்துவமனையில் தங்கியிருந்த படி, சதித்திட்டம் தீட்டியதாக தெரிவித்துள்ளான். இம்ரானின் தந்தை இதய நோயாளி. ஏப்ரல் முதல் ஜூலை வரை அடிக்கடி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருவார். அவரது தந்தை மருத்துவமனைக்கு வரும் போதெல்லாம், ஆமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள யூனுஸ் மன்சூரி, உஸ்மான் அகர்பத்திவாலா, ஜாகித் ஷேக், சம்சுதீன் ஷேக் ஆகிய ஐந்து பேரும் அவரைப் பார்க்க ஒன்றாக வருவது வழக்கம். இம்ரானின் தந்தையைப் பார்த்துவிட்டு, மருத்துவமனையின் பல்வேறு பகுதிகளிலும் உலவிக் கொண்டே சர்வே எடுப்பர். இங்கு அவர்கள் வைத்த வெடிகுண்டு அதிகளவில் உயிர்ப்பலி ஏற்படுத்தியிருக்கிறது.
ஆமதாபாத் தொடர் குண்டுவெடிப்பின் மூளையாகச் செயல்பட்டு வந்த முப்தி அபு பஷிர் உள்ளிட்ட, "சிமி' அமைப்பைச் சேர்ந்த 10 பேர், போலீஸ் காவலில் எடுக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இத்தகவல்கள் தெரிய வந்துள்ளன. விசாரணையில், ஆமதாபாத் தொடர் குண்டுவெடிப்பில் தனக்கு தொடர்பு இருப்பதாக முப்தி அபு பஷிர் ஒப்புக் கொண்டுள்ளான். ஆனால், பல கேள்விகளுக்கு மழுப்பல் பதிலளித்தான். இதற்கிடையே ஜெய்ப்பூரில் 68 உயிர்களைப் பலிகொண்ட மார்ச் 13ம் தேதி நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கியமான, வலுவான ஆதாரம் கிடைத்திருப்பதாக, ராஜஸ்தான் முதல்வர் வசுந்திரா ராஜே கூறியுள்ளார். இவ்வழக்கில் இரண்டு டாக்டர்கள் மற்றும் தனியாக மருத்துவம் பார்த்து வந்த டாக்டர் உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இன்னொருவர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டார்.
தவிரவும் கேரளாவில், "சிமி' அமைப்புடன் தொடர்பு கொண்டிருப்பதாக உளியனூரைச் சேர்ந்த ரகுமான் மற்றும் வெடிமரா என்ற இடத்தைச் சேர்ந்த அஷ்ரப் ஆகிய இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்துகின்றனர்.
குஜராத், உ.பி., கர்நாடகம், தற்போது கேரளா என்று மாநிலங்கள் தனித்தனியாக குண்டுவெடிப்பு வழக்குகளை விசாரித்து, அதன் பின்னணியில் "சிமி'முக்கிய பங்கு வகித்திருப்பதை வெளிக்கொண

முஷாரப் எழுச்சியும்... வீழ்ச்சியும்!

கண்டன தீர்மானம் கொண்டுவரப்படும் என, ஆளுங்கட்சி மிரட்டியதை அடுத்து, முஷாரப் நேற்று பதவி விலகினார். 1999ல் அதிகாரத்தை கைப்பற்றிய முஷாரப், ஒன்பது ஆண்டுகள் ஆட்சியை தன்வசம் வைத்திருந்தார்.
அக்., 12, 1999: ராணுவ தளபதியாக இருந்த முஷாரப்பை பதவி நீக்கம் செய்தார் பிரதமர் நவாஸ் ஷெரீப். பதில் நடவடிக்கையாக, நவாஸ் ஷெரீப் ஆட்சியை கவிழ்த்து விட்டு அதிகாரத்தை கைப்பற்றினார் முஷாரப்.
மே 13, 2000: நவாஸ் ஆட்சி கவிழ்ப்புக்கு பாகிஸ்தானின் சுப்ரீம் கோர்ட் ஒப்புதல்.
டிச., 2000: விமான கடத்தல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நவாசுக்கு விடுதலை. சவுதி அரேபியாவுக்கு நாடு கடத்தல். 10 ஆண்டுகள் பாகிஸ்தானுக்கு திரும்ப தடை.
ஜூன் 20, 2001: பாகிஸ்தான் அதிபர் முகமது ரபீக் தரார் ராஜினாமா. முஷாரப் அதிபரானார்.
செப்., 11, 2001: உலக வர்த்தக மைய கட்டடங்கள் தகர்ப்புக்கு பின்னர், தலிபானுக்கு அளித்த ஆதரவை முஷாரப் விலக்கினார். அமெரிக்காவுடன் பாகிஸ்தான் நெருக்கம்.
ஏப்., 30, 2002: ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள நடந்த தேர்தலில் சர்ச்சைக்குரிய முறையில் முஷாரப் வெற்றி.
அக்., 10, 2002: முஷாரப் ஆதரவு முஸ்லிம் லீக் பொதுத் தேர்தலில் வெற்றி.
நவ., 16, 2002: முஷாரப் மீண்டும் அதிபராக பதவியேற்பு.
டிச., 2003: இரண்டு முறை படுகொலை முயற்சியில் இருந்து தப்பினார் முஷாரப்.
ஜன., 1, 2004: 2007 வரை பதவியில் தொடரும் வகையில் பார்லிமென்டில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் முஷாரப் வெற்றி.
பிப்., 2004: ஈரான், வட கொரியா, லிபியாவுக்கு அணு ஆயுத உற்பத்தி குறித்த தகவல்களை வழங்கிய அப்துல் காதீர் கானுக்கு முஷாரப் மன்னிப்பு.
டிச., 30, 2004: ராணுவ தளபதி பதவியை உதற முஷாரப் மறுப்பு.
மார்ச் 9, 2007: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி இப்திகர் சவுத்ரியை நீக்கினார் முஷாரப். வக்கீல்கள் போராட்டம் வெடித்தது.
ஜூலை 10, 2007: இஸ்லாமாபாத்தின் சிவப்பு மசூதிக்குள் நுழைந்து தலிபான் ஆதரவு பயங்கரவாதிகளை தாக்கும்படி, ராணுவத்துக்கு முஷாரப் உத்தரவு. 105 பேர் பலி.
ஜூலை 20, 2007: நீதிபதி இப்திகர் சவுத்ரியை மீண்டும் நியமனம் செய்தது சுப்ரீம் கோர்ட். முஷாரப்புக்கு பின்னடைவு.
ஜூலை 27, 2007: அபுதாபியில் பெனசிர், முஷாரப் சந்திப்பு. பதவி விலகும்படி முஷாரப்பிடம் பெனசிர் வலியுறுத்தல்.
செப்., 10, 2007: சுப்ரீம் கோர்ட் உத்தரவுடன் நாடு திரும்பிய நவாஸ் ஷெரீப் இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் கைது. மீண்டும் சவுதி அரேபியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.
அக்., 6, 2007: எதிர்க்கட்சிகள் புறக்கணிப்புக்கு இடையே பார்லிமென்டில் நடந்த ஓட்டெடுப்பில் முஷாரப் வெற்றி.
அக்., 18, 2007: பெனசிர் நாடு திரும்பினார்.
அக்., 19, 2007: தற்கொலைப்படை பயங்கரவாதிகள் பெனசிரை படுகொலை செய்ய முயற்சி.
நவ., 2, 2007: முஷாரப் மீண்டும் தேர்தலில் நிற்க முடியுமா என்பது குறித்து விவாதிக்க சுப்ரீம் கோர்ட் கூடியது.
நவ., 3, 2007: பாகிஸ்தானில் எமர்ஜென்சி அமல். தலைமை நீதிபதி இப்திகர் நீக்கம்.
நவ., 25, 2007: நவாஸ் ஷெரீப் நாடு திரும்பினார்.
நவ., 28, 2007: அஷ்பக் கியானியிடம் ராணுவ தலைவர் பதவியை ஒப்படைத்தார் முஷாரப்.
நவ., 29, 2007: முஷாரப் மீண்டும் அதிபராக பதவியேற்பு.
டிச., 15, 2007: எமர்ஜென்சி விலக்கிக்கொள்ளப்பட்டது.
டிச., 27, 2007: பெனசிர் படுகொலை செய்யப்பட்டார்.
பிப்., 18, 2008: முஷாரப் ஆதரவு கட்சிகள் தேர்தலில் தோல்வி.
மார்ச் 24, 2008: யூசுப் ரசா கிலானி பிரதமராக தேர்வு.
ஆக., 17, 2008: முஷாரப் மீது கண்டன தீர்மானம் கொண்டு வர ஆளுங்கட்சி முடிவு.
ஆக., 18, 2008: அதிபர் பதவியில் இருந்து முஷாரப் ராஜினாமா.

அதிபர் பதவியை விட்டு விலகினார் முஷாரப்

பதவி நீக்கக் கோரும் கண்டன தீர்மானத்தை எதிர்கொள்ள முடியாத அதிபர் முஷாரப், நேற்று தன் பதவியை ராஜினாமா செய்தார். அரசுடன் மோதலை தவிர்க்கவும், நாட்டில் நிலையற்ற தன்மை உருவாவதை தடுக்கவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக அறிவித்தார். ஆனால், அவர் இனி சவுதி அரேபியாவின் தலைநகரான ஜெட்டாவில், அந்த அரசின் கவுரவ விருந்தினராக இருப்பார் என்று கூறப்படுகிறது.
பாகிஸ்தானில், 1999ம் ஆண்டு ராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைப் பிடித்து, அதன்பின் அதிபரானவர் முஷாரப். அங்கு கடந்த பிப்ரவரி 18ம் தேதி நடந்த பொதுத் தேர்தலுக்குப் பின், பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைமையிலான கூட்டணி அரசு பதவியேற்றது. இந்தக் கூட்டணி அரசில் நவாஸ் ஷெரீபின் முஸ்லிம் லீக் கட்சியும் இடம் பெற்றுள்ளது. ஐந்து மாதமாக பதவி வகித்து வரும் இந்த அரசு, "ராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைப் பிடித்த அதிபர் முஷாரப் பதவி விலக வேண்டும்' என, தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இதற்கு அவர் உடன்படாததால், கண்டன தீர்மானம் மூலம் அவரை பதவியிறக்க முடிவு செய்யப்பட்டது. முஷாரப்பிற்கு எதிராக 100 பக்கங்கள் கொண்ட கண்டன தீர்மானத்தை இன்று பார்லிமென்டில் தாக்கல் செய்யவும் ஆளும் கூட்டணி கட்சிகள் தயாராகின.
அதே நேரத்தில், "முஷாரப் விரைவில் பதவி விலக வேண்டும். அப்படி விலகினால், அவர் மீது எந்த வழக்கும் தொடரப்படாது. பதவி விலக மறுத்தால், அவரை ராணுவம் காப்பாற்றாது' என, பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி கியானி அறிவித்தார். இதற்கிடையில், முஷாரப் பதவி விலகிய பிறகு அல்லது வெளியேற்றப்பட்ட பின், பெண் ஒருவர் நாட்டின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார் என, பாக்., மக்கள் கட்சி தலைவர் சர்தாரி அறிவித்தார். இந்த சூழ்நிலையில், கண்டன தீர்மானத்தை எதிர்கொள்ள முடியாத முஷாரப், நேற்று தன் பதவியை ராஜினாமா செய்தார். தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த போது இதை தெரிவித்தார். அவர், மேலும் கூறியதாவது: ஆளும் கூட்டணியுடன் மோதலை தவிர்க்கவும், நாட்டில் நிலையற்ற தன்மை உருவாவதை தடுக்கவும் நான் பதவி விலகுகிறேன். எந்த கண்டன தீர்மானமும் அல்லது எந்தக் குற்றப்பத்திரிகையும் எனக்கு எதிராக நிற்க முடியாது. எனக்காக நான் எதையும் செய்யவில்லை; எல்லாவற்றையும் நாட்டிற்காகவும், மக்களுக்காகவுமே செய்தேன். எனவே, நான் மிகுந்த நம்பிக்கையில் இருந்தேன். எந்தக் குற்றச்சாட்டைக் கண்டும் நான் அஞ்சவில்லை. இருந்தாலும், கண்டன தீர்மானத்திற்குப் பின், நாடு எந்த சூழ்நிலைக்குச் செல்லும் என்பது தான் தற்போதைய கேள்வி. அப்படிப்பட்ட ஒரு நிலையற்ற, மோதலான சூழ்நிலைக்கு நாட்டை கொண்டு செல்ல நான் விரும்பவில்லை. அதிபர் அலுவலகம் நெருக்கடியில் பணியாற்றுவதை நான் விரும்பவில்லை.
நான் வெற்றிப் பெறுகிறேனா அல்லது தோல்வி அடைகிறேனா என்பது முக்கியமில்லை. கண்டன தீர்மானம் பார்லிமென்டில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டால், என்ன நிலைமையாகும் என யோசித்தேன். அதிபர் அலுவலகத்தின் கவுரவம் பாதிக்கப்படும்; நாட்டின் கவுரவமும் பாதிக்கப்படும் என உணர்ந்தேன்.
தனி நபரின் தைரியத்தை வெளிக்காட்ட இது சரியான தருணம் அல்ல; இது மிகவும் ஆழமாகவும், தீவிரமாகவும் சிந்திக்க வேண்டிய தருணம். அதனால், நாட்டின் நலன் கருதியே என் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். ராஜினாமா கடிதம் விரைவில் பார்லிமென்டை சென்றடையும்.
என் வாழ்நாளில் 44 ஆண்டுகளை ஒரு ராணுவ வீரராக நாட்டிற்காக அர்ப்பணித்துள்ளேன். அப்படிப்பட்ட நான், பார்லிமென்டில் குதிரைப் பேரம் நடைபெறாமல் தடுக்கவே பதவி விலகியுள்ளேன். சுயநலமாக செயல்பட நினைத்திருந்தால், நான் மாறுபட்ட முடிவை எடுத்திருக்க முடியும்; அதை விரும்பவில்லை. எனக்கு எதுவும் தேவையில்லை. என்னுடைய எதிர்காலத்தை நான் மக்களின் கைகளில் ஒப்படைக்கிறேன். நானும் மனிதன் தான்; சில தவறுகள் செய்திருக்கலாம். அது மக்களால் மன்னிக்கப்படும் என நம்புகிறேன். எனது ஒன்பது ஆண்டுகால ஆட்சியில், நாட்டின் நலன் கருதியே அனைத்து முடிவுகளையும் எடுத்தேன். இவ்வாறு அதிபர் முஷாரப் கூறினார்.
முஷாரப்பின் இந்த ராஜினாமாவால், அவருக்கும் ஆளும் கூட்டணிக்கும் இடையே நீடித்து வந்த மோதல் முடிவுக்கு வந்தது. இருந்தாலும், முஷாரப் தொடர்ந்து பாகிஸ்தானிலேயே இருப்பது பற்றிக் கூறப்படவில்லை என்றாலும், தலைநகரின் புறநகர்ப்பகுதியில் உள்ள அவரது பண்ணை மாளிகையில் வாழ்வது சுலபம் அல்ல. பொதுவாக இம்மாதிரி பதவியில் இருந்து தூக்கி எறியப்படும் போது, துருக்கி அல்லது சவுதியில் தங்குவது பாகிஸ்தானில் வழக்கம். முஷாரப் தற்போது சவுதி தலைநகர் ஜெட்டாவில் தங்கி, அரசு விருந்தினராக வாழ வாய்ப்புகள் உள்ளன. பலவீனமான கூட்டணி என்பதால், அவர் அங்கிருந்து அரசியல் நடத்தவும் விரும்பலாம். முஷாரப் ராஜினாமாவை அடுத்து, பாகிஸ்தான் செனட் சபை தலைவர் முகமது மியான் சூம்ரோ, தற்காலிக அதிபராக பதவியேற்கிறார். முஷாரப் பதவியில் இருந்து ஓட்டம் பிடித்தது குறித்து இந்திய அரசு கருத்து ஏதும் கூறவில்லை; அது பாகிஸ்தான் உள்நாட்டு விவகாரம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்: "பதவி விலகப் போவதாக அதிபர் முஷாரப் அறிவித்தது, ஜனநாயக சக்திகளுக்குக் கிடைத்த வெற்றி' என, பாகிஸ்தான் ஆளும் கூட்டணி தெரிவித்துள்ளது. முஷாரப்பின் விலகலை, பாக்., மக்கள் கட்சி தொண்டர்களும், நவாஸ் ஷெரீபின் முஸ்லிம் லீக் கட்சி தொண்டர்களும் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், கோஷங்கள் எழுப்பியும் கொண்டாடி வருகின்றனர். "ஜனநாயகத்தின் குறுக்கே இருந்த மிகப்பெரிய தடை அகற்றப்பட்டு விட்டது' என, பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பிலாவல் புட்டோ கூறினார்.
பாக்., வெளியுறவு அமைச்சர் குரேசி கூறுகையில், "முஷாரப்பை பாதுகாப்பாக நாட்டை விட்டு வெளியேற்றுவதா அல்லது வேண்டாமா என்பதை ஆளும் கூட்டணி தலைவர்கள் முடிவு செய்வர். நாட்டின் அரசியல் சூழ்நிலை உட்பட பல்வேறு விஷயங்களைக் கருத்தில் கொண்டு அவர்கள் முடிவு எடுப்பர்' என்றார்.
பாகிஸ்தான் ஆளும் கூட்டணி அரசில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களின் வீடுகளின் முன், ஏராளமான கட்சித் தொண்டர்கள் கூடி நேற்று முழுவதும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்த வண்ணம் இருந்தனர்.
காஷ்மீரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஹூரியத் அமைப்பின் தலைவர் ஜிலானியும், முஷாரப் பதவியை ராஜினாமா செய்ததில் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார். காஷ்மீர் விவகாரத்தைச் சிக்கலாக்கியது மட்டுமின்றி, இஸ்லாமிய உலகத்திற்கும் கெட்ட பெயர் ஏற்படுத்தியவர் முஷாரப் என்றும் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

ஜெய்ஹிந்த்!!


எல்லாமே கவரிங்தான்

வளர்ப்பு மகனுக்கு இப்படியொரு திருமணமா?' என்று தமிழகமே வாய்பிளந்து பார்த்தது... பி.பி.சி. உட்பட உலகத் தொலைக்காட்சி களே அதிசயித்து அந்தத் திருமணத்தை நேரடி ஒளி பரப்பு செய்தன... அது மட்டுமா?`பார்த்தாயா உடன்பிறப்பே... இந்தப் பகட்டையும் படாடோ பத்தையும்... ஊரெல்லாம் மின் விளக்குத் தோரணம்... உடம்பெல்லாம் தங்கம் வைரம்... ஒரு திருமணத்திற்கு செலவு நூறு கோடி!' என எதிர்க்கட்சிகள் எல்லாம் எரிமலையாய்க் குமுறின...விளைவு! ஆட்சிகள் மாறின, காட்சிகள் மாறியது! ஆர்ப்பாட்டமாக திருமணம் செய்தவர்களின் வீடுகளில் சி.பி.ஐ.யின் அதிரடி சோதனை... பறிமுதல் செய்யப்பட்டவை என்று, 27 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகளை பத்திரிகைகள் பட்டியல் போட்டதோடு, தொலைக்காட்சிகளும் போயஸ் தோட்டத்து சுவர்களை ஊடுருவி சுனாமியாய் சுழன்றடித்தது.சோதனையின்போது 381 வளையல்கள், 172 கம்மல்கள், 104 மோதிரங்கள் என வியப்பு விரிந்து கொண்டே போனது... அரசியலே சுத்தப்படுத்தப்பட்டுவிட்டதாக மக்களும் அதிசயப்பட்டனர். காலம் மாற மாற திடீரென காட்சிகளும் மாறிவிட்டன. ஆண்டுக் கணக்கில் நீண்ட அந்த வழக்கில் `பறிமுதல் செய்யப்பட்டதாகச் சொல்லப்பட்ட நகைகளில் விலையுயர்ந்த இரண்டு ஒட்டியானங்கள் பறிமுதல் செய்யப்பட்ட பொழுதே மிஸ்ஸிங்' என்றும்; `நீதிமன்ற ஆவணங்களில் அவை ‘not available’என்றும் குறிப்பிடப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டது. சி.பி.ஐ. அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட அந்த ஒட்டியானங்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவில்லையென்றும், அந்த ஒட்டியானங்களை கடைசியாக இரு வி.ஐ.பி.க்கள் பார்வையிட்டபின் வேறு யார் கண்ணிலும் அவை படவில்லை என்றும்' பலவிதமான பரபரப்புக் காட்சிகள் அரங்கேறின.ஒரு வழியாக இந்த பரபரப்புகள் ஓய்ந்து, அமைதியான சூழ் நிலையில் பெங்களூரு தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு சுமுகமாக நடந்து கொண்டிருக்கும் பொழுது மீண்டும் ஓர் ஆழிப் பேரலை... அதை ஏற்படுத்தியது நீதிமன்றத்தில் ஜெயலலிதா, சசிகலாவின் வாக்குமூலங்களாக தாக்கல் செய்யப்பட்ட ஓர் ஆவணம்! சுதாகரன் திருமணத்தின் போது ஜெயலலிதாவும், சசிகலாவும் அணிந்திருந்த நகைகள் எல்லாம் கவரிங் எனவும், அந்த கவரிங் நகைகள் மைசூரில் இருந்து திருமணத்திற்காக வரவழைக்கப்பட்டன எனவும், அதை மைசூரில் இருந்து ஒரு மேக்கப்மேனே எடுத்து வந்ததாகவும், திருமணம் முடிந்தபின் கையோடு அவற்றை யெல்லாம் அவர் திரும்ப எடுத்துச் சென்று விட்டதாக ஜெயலலிதாவும், சசிகலாவும் சொன்னதாகவும் தாக்கல் செய்யப்பட்டிருப்பதுதான் அந்த வாக்குமூலமாம்!வீடு நிறைய பித்தளையே வைத்திருந்தாலும் ஒரு குண்டுமணித் தங்கம் திருடு போய்விட்டதென்றால் இருந்ததெல்லாம் தங்கம் என்று சொல்லும் இந்தக் காலத்தில் காணாமல் போனது மட்டுமல்ல நான் வைத்திருந்ததெல்லாம் பித்தளை என்பதுபோல் ஒருவர் சொல்கிறார் என்றால் அதன் சூட்சுமம் தெரியாமல் தலைசுற்றியது.இதை நமக்குப் புரிய வைக்க முடியும் என்றால் அது ஒருவரால்தான் சாத்தியம்... அதனால் அவரிடம் கேட்கலாமென்று, ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணை அதிகாரி நல்லம நாயுடுவைத் தொடர்பு கொண்டோம்... வழக்கு விசாரணை நடந்து கொண்டிருப்பதால் கருத்து எதுவும் கூற மறுத்துவிட்டார்.சம்பந்தப்பட்டவர் பேசமாட்டார்... சட்டம் தெரிந்த ஒருவரிடம் கேட்கலாம் என சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கச் செயலாளரும் வழக்கறிஞருமான மோகனகிருஷ்ணனிடம் கேட்டோம்...``பொதுவாகவே எந்தவொரு வழக்கிலும் குற்றவாளிகளிடம் பெறப் பட்டதாக விசாரணை அதிகாரிகளால் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்படும் வாக்கு மூலங்கள் குற்றம்சாட்டப் பட்டவர்களால் விசாரணையின் போது மறுக்கப்படும். விசாரணை அதிகாரி தாக்கல் செய்யும் அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டவரின் கையொப்பம் அவசியமில்லை.... ஆனால் ஜெயலலிதா, சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் அவர்களே தங்கள் நகையெல்லாம் கவரிங் நகை என வாக்குமூலம் அளிக்கின்றனர். இது, `காணாமல் போன ஒட்டியானங்களைப் பற்றியும் நாங்கள் கவலைப்படத் தயாரில்லை. கைப்பற்றப்பட்ட மீதி நகையும் கவரிங் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் எங்களுக்கு நல்லது' என நினைப்பதாகத்தான் தோன்றுகிறது.எதுவாக இருந்தாலும் அரசுத் தரப்பின் அடுத்த நடவடிக்கையைப் பொறுத்துத்தான் வழக்கின் போக்கு தெரியும்... அரசுத் தரப்பும் இரண்டு விதமாக யோசிக்கலாம்... `ஜெயலலிதாவும் சசிகலாவும் சொல்கிற மாதிரி, நகையெல்லாம் கவரிங் இல்லை. தங்கம்தான்!'னு அவர்களின் வாக்குமூலத்தை மறுத் தால் காணாமல் போன ஒட்டியானப் பிரச்னை மீண்டும் வரலாம். ஒருவேளை அவர்கள் `கவரிங்'னு சொல்வதை அப்படியே கண்டுக்கொள்ளாமல் விட்டு விட்டால் ஒட்டியானமும் கவரிங்கோடு கவரிங்காகச் சேர்ந்து பிரச்னையே இல்லாமலும் போகலாம்... இந்த இரண்டில் எதுவேணும்னாலும் நடக்கலாம்.'' இப்படி பிரச்னையின் நோக்கம் மட்டுமல்ல போக்கும் எப்படி இருக்கும் என்று தெளிவாகச் சொல்லி முடித்தார் மோகன கிருஷ்ணன்....வடிவேலு பாணியில் நமக்குத் தோன்றியதெல்லாம்... ஆளாளுக்கு இப்படி திருப்பித் திருப்பி விட்டர்றாங்களே... என்னதான்யா நடக்குது?.

ஒலிம்பிக்கில் இந்தியா வென்றது தங்கப் பதக்கம் * துப்பாக்கி சுடும் போட்டியில் அபினவ் அபாரம்

ஒலிம்பிக் வரலாற்றில் நேற்று இந்தியாவுக்கு பொன்னான நாள். துப்பாக்கிச் சுடுதல் 10 மீட்டர் "ஏர் ரைபிள்' பிரிவில், இந்திய வீரர் அபினவ் பிந்த்ரா தங்கப் பதக்கம் வென்றார். ஒலிம்பிக் தனிநபர் பிரிவில், தங்கம் வெல்லும் முதலாவது இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார். 28 ஆண்டுகளுக்கு பிறகு, இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் பெற்றுத் தந்து, உலக அரங்கில் இந்தியாவை தலை நிமிரச் செய்துள்ளார். சீன தலைநகர் பீஜிங்கில், 29வது ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. இதில், இந்தியா உட்பட 205 நாடுகள் பங்கேற்கின்றன. நேற்று நடந்த ஆண்கள் துப்பாக்கிச் சுடுதல் 10 மீ., "ஏர் ரைபிள்' பிரிவில், 25 வயதான அபினவ் பிந்த்ரா பங்கேற்றார். தகுதிச் சுற்றில் 596 புள்ளிகள் பெற்றிருந்த இவர், இறுதிச் சுற்றுக்கு சூப்பராக முன்னேறினார்.
கடும் போட்டி: மிக முக்கியமான இறுதிச் சுற்றில் அபினவ், ஏதென்ஸ் ஒலிம்பிக் சாம்பியனான சீனாவின் ஜு கினான், பின்லாந்தின் ஹென்றி ஹகினான் ஆகியோரிடையே கடும் போட்டி காணப்பட்டது. "10 ஷாட்' கொண்ட இறுதிச் சுற்றில் பிந்த்ரா அசத்தினார். அனைத்து வாய்ப்பிலும் 10 புள்ளிகளுக்கும் மேல் பெற்று நம்பிக்கை தந்தார். ஏழாவது வாய்ப்பில் 10.6 புள்ளி பெற்ற இவர் முன்னிலை பெறத் துவங்கினார்.
"திரில்' தங்கம்: கடைசி 10வது வாய்ப்பில் பரபரப்பு எகிறியது. இதில், மீண்டும் கலக்கினார் பிந்த்ரா. இவர், மொத்தமுள்ள 10.9 புள்ளியில் 10.8 புள்ளி பெற, இந்திய ரசிகர்கள் உற்சாக கரகோஷம் எழுப்பினர். கினான் 10.5 புள்ளி, ஹகினான் 9.7 புள்ளி மட்டுமே பெற்றனர். மொத்தமாக 700.5 புள்ளிகள் (தகுதிச் சுற்றில் 596 புள்ளி+இறுதிச் சுற்றில் "10 ஷாட்களில்' 104.5 புள்ளி) பெற்ற பிந்த்ரா, 0.8 வித்தியாசத்தில் தங்கம் வென்றார். இதன் மூலம், இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் தனிநபர் பிரிவில் தங்கம் வெல்லும் முதலாவது வீரர் என்ற சாதனை படைத்தார். சீனாவின் கினான் 699.7 புள்ளிகளுடன் (597+102.7)வெள்ளி வென்றார். ஹகினான் 699.4 புள்ளிகளுடன் (598+101.4) வெண்கலம் கைப்பற்றினார்.
28 ஆண்டுகளுக்கு பின்: கடந்த 1900ல் நடந்த ஒலிம்பிக்கில், இந்தியா முதல் முறையாக பங்கேற்றது. தற்போது தான் தனிநபர் பிரிவில், பிந்த்ரா மூலம் தங்கம் வென்றுள்ளது. தவிர, 28 ஆண்டுகளுக்கு பிறகு தங்கம் கைப்பற்றியுள்ளது. கடைசியாக 1980, மாஸ்கோ ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி தங்கம் வென்றிருந்தது.


துணிச்சல் வீரர்: சண்டிகாரைச் சேர்ந்த பிந்த்ரா மிகுந்த துணிச்சலுடன் சாதித்துக் காட்டியுள்ளார். ஏற்கனவே உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ள இவர், இம்முறை முதுகு தண்டுவடத்தில் ஏற்பட்ட காயம் மற்றும் கழுத்து வலியால் அவதிப்பட்டார். போட்டிக்கு முன், துப்பாக்கியை கூட தூக்க முடியாமல் சிரமப்பட்டுள்ளார். ஆனாலும், ஜெர்மனி சென்று கடும் பயிற்சி மேற்கொண்ட இவர், தற்போது தங்க நாயகனாக ஜொலிக்கிறார். இது குறித்து பிந்த்ரா கூறுகையில், ""நான் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பதை விவரிக்க முடியாது. எனது வாழ்க்கையில் ஒரு "திரில்' அனுபவம்,'' என்றார். பிந்த்ராவின் தங்கச் சாதனை, பீஜிங் ஒலிம்பிக்கில் கலந்து கொண்டுள்ள மற்ற வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்க சக்தியாக அமையட்டும். இந்தியா இன்னும் நிறைய பதக்கம் வெல்லட்டும்!


வாழ்த்து, பரிசு மழை : தங்கம் வென்று புதிய "ஹீரோ'வாக உருவாகியுள்ள அபினவ் பிந்த்ராவுக்கு வாழ்த்து, பரிசு மழை குவிகிறது. பிரதமர் மன்மோகன் சிங், ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் பட்டாசு வெடித்து, ஒலிம்பிக் சாதனையை கொண்டாடி மகிழ்ந்தனர். பஞ்சாப் அரசு ரூ. ஒரு கோடி, இந்திய கிரிக்கெட் போர்டு, அரியானா அரசு தலா ரூ.25 லட்சம், மகாராஷ்டிர அரசு ரூ.10 லட்சம், தமிழக அரசு ரூ. ஐந்து லட்சம் உட்பட ஏறத்தாழ ரூ. இரண்டு கோடி பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.


கபில் புகழாரம்: அபினவ் பிந்த்ராவின் சாதனை, உலகக்கோப்பை வெற்றியை விஞ்சிவிட்டதாக கபில்தேவ் புகழ்ந்துள்ளார். பீஜிங் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம் பெற்றுத் தந்துள்ள துப்பாக்கிச் சுடுதல் பிரிவு வீரர் அபினவ் பிந்த்ரா பற்றி முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறுகையில், ""1983ம் ஆண்டு கிரிக்கெட்டில் இந்தியா உலகக்கோப்பை வென்ற சாதனையை, தங்கம் கைப்பற்றிய அபினவ் பிந்த்ரா விஞ்சிவிட்டார். நாடே பெருமை கொள்ளும்படி சாதித்துள்ளார். விளையாட்டில் இதுவரைக் கண்டிராத மாபெரும் வெற்றி இது. சர்வதேச அரங்கில் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வது மிக கடினமானது,'' என்றார். இந்திய ஒருநாள் கேப்டன் தோனி மற்றும் யுவராஜ் ஆகியோரும் அபினவ் பிந்த்ராவுக்கு நேரடியாக வாழ்த்துக் கூற விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.

ரஜினிக்கு எதிராக தியேட்டர் உரிமையாளர்கள் போர்க்கொடி

ரஜினிகாந்த் நடித்த "குசேலன்' படத்தால் நஷ்டம் அடைந்திருப்பதாகக் கூறி, மதுரையில் நேற்று, பிரமிட் சாய்மீரா தயாரிப்பு நிறுவனத்தை, தியேட்டர் உரிமையாளர்கள் முற்றுகையிட்டனர். ஜினியின் "குசேலன்' படம், மதுரையில் ஐந்து தியேட்டர்களிலும், தென் மாவட்டங்களில் 26 தியேட்டர்களிலும் திரையிடப்பட்டுள்ளது. பிரமிட் சாய்மீரா மற்றும் கவிதாலயா நிறுவனம் தயாரித்துள்ள இப்படம், திரையிடுவது தொடர்பாக தியேட்டர் உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போது, "முழுக்க முழுக்க இது ரஜினி படம். "சிவாஜியை' விட ஒரு மடங்கு வசூல் அதிகரிக்கும்' என்று கூறி "மினிமம் கியாரண்டி முறையில் ஒப்பந்தம் செய்யப்பட்டது.



படம் ரிலீசாவதற்கு சில நாட்களுக்கு முன், "குசேலன் ' படம் குறித்து கருத்து தெரிவித்த ரஜினிகாந்த், "இப்படத்தில் எனது பங்கு 25 சதவீதம் தான். இது ரஜினிகாந்த் படம் அல்ல; பசுபதி படம்' என்று கூறியிருந்தார். இதனால், தியேட்டருக்கு ரசிகர்களின் வருகை குறைவாக இருப்பதாகவும், பட ரிலீசுக்கு முதல்நாள் கன்னடர்களை சமாதானம் செய்து ரஜினி அளித்த பேட்டியால், வசூல் பெருமளவு பாதித்து நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறி, தியேட்டர் உரிமையாளர்கள், மதுரையிலுள்ள பிரமிட் சாய்மீரா அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.



தியேட்டர் உரிமையாளர்கள் கூறியதாவது : படத்தை திரையிட நாங்கள் பணம் கட்டிய பிறகு ரஜினி பேட்டி அளித்தார். இதனால், போட்ட காசை எடுக்க முடியவில்லை. வங்கிகள் மற்றும் தனியார் பைனான்சியர்களிடம் 75 சதவீதம் கடன் வாங்கி இப்படத்தை திரையிட்டுள்ளோம். இதுவரை வட்டியுடன் சேர்த்து 90 சதவீதம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எங்களது நிலைமை கருதி "மினிமம் கியாரண்டியை' டெபாசிட் தொகையாக மாற்றி, வருவாயில் எங்களுக்குண்டான சதவீதத்தை கணக்கிட்டு தரவேண்டும். இல்லாவிட்டால், 12ம் தேதி, சென்னையில் உள்ள தலைமை அலுவலகம் முன், உண்ணாவிரதம் மற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவோம். ரஜினி இவ்விஷயத்தில் தலையிட்டு பகிரங்க அறிக்கை வெளியிட வேண்டும். இவ்வாறு தியேட்டர் உரிமையாளர்கள் கூறினர்.



அ.தி.மு.க அணியில் விஜயகாந்த் தமிழன் எக்ஸ்பிரஸின் அதிரடி செய்தி

http://www.tamilanexpress.com/cover/cover.asp

கலைஞர் எங்களை மிரட்டி பார்க்கிறார் குருவின் அசத்தல் பேட்டி

மஞ்சள் சட்டைக்கும் மஞ்சள் துண்டிற்கும் நடக்கும் யுத்தம் இது! மஞ்சள் சட்டை - காடு வெட்டி குரு! மஞ்சள் துண்டு-தமிழக முதல்வர் கலைஞர்!
சி.டி.யில் ஆரம்பித்த பிரச்னை சிறை வரைக்கும் போய்விட்டது. வரம்பு மீறி பேசியது, வன்முறையைத் தூண்டியது என்று குற்றம் சுமத்தி காடுவெட்டி குருவைக் கைது செய்த போலீஸார், அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தை பிரயோகப்படுத்தி இருக்கிறார்கள். சிறையிலிருக்கும் கைதிகளை சாதா ரணமாக யார் வேண்டுமானாலும் மனு போட்டுப் பார்க்கலாம்! எல் லோருக்கும் பொதுவான சிறை வழக்கம் இது. ஆனால் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளவர்களை நெருங்கிய உறவினர்கள் தவிர்த்து வழக்கறிஞர்கள் மட்டுமே சந்தித்துப் பேச முடியும்.
மாவீரன் ஜெ.குரு! வன்னியர் சிங்கம் குரு! என்ற புகழ்ப் பேச்சுக்கு மத்தி யில் பரபரப்பாக இயங்கிக் கொண் டிருந்த குரு இப்போது சிறையில் சைலண்ட் 'குரு'வாக வலம் வருகிறார். பத்திரிகையாளர் சந்திப்பு என்றால் `குரு'வின் முகத்தில் அப்படி ஒரு பூரிப்பு! ஆனால் இப்போது சிறையில் பத்திரிகை யாளர் யாருக்கும் தடா! மொத்தத்தில் நோ என்ட்ரி! இந்த நிலையிலும் `குரு' என்னதான் நினைக்கிறார்? அவரது தரப்பு பதில்கள் என்ன என்றறிய பல்வேறு வழிகளில் முயற்சித்தோம். நமது கேள்விகளை அவரின் வழக்கறிஞர் கே.பாலு மூலம் குருவுக்கு அனுப்பி வைத்து பதில்களைப் பெற்றோம். சிறையிலிருந்து குரு நமக்களித்த சிறப்பு பேட்டி


சாதாரணமாக சுறுசுறுப்பாகவும் படுபிஸியாகவும் செயல்பட்டுக் கொண்டிருந்த நீங்கள், சிறையில் எப்படி பொழுதைக் கழிக்கிறீர்கள்?
``என் உடல்தான் சிறையில். என் உயிரை ஒருபோதும் சிறையில் அடைக்க முடியாது. மாபெரும் லட்சியப் போருக்கு `உயிரே உணர்வே பொங்கி எழு' என்ற லட்சியத்தோடு எதிர்கால அரசியல் திட்டங்களை சிறையிலிருந்தபடி வகுத்துக்கொண்டிருக்கிறேன். நீண்ட நாள் சிறையிலிருந்த உலகத் தலைவர்கள் மற்றும் போராளிகளின் சுயசரிதை மற்றும் அவர்கள் எழுதிய புத்தகங்களைப் படித்து வருகிறேன். என் செயல்பாடுகளுக்கு ஆளுங்கட்சி கொடுத்திருக்கும் கட்டாய ஆனால் தற்காலிக ஓய்வு இது. அரசியல்வாதிகள் ஒவ்வொருவரும் கண்டிப்பாக சிறைவாசத்தை அனுபவிக்கவேண்டும். அப்போதுதான் பொது வாழ்க்கையில் ஈடுபடும் பக்குவம் அவர்களுக்குக் கிடைக்கும்.''
உங்கள் கைதுக்கான உண்மையான காரணம் என்ன?
தமிழக அரசுக்கே என்னைக் கைது செய்ததற்கான காரணம் தெரியவில்லை. கல்யாண மண்டபத்தில் கட்சிக்காரர்களிடம் பேசியதற்காக என்னைக் கைது செய்துள்ளனர்.
இதற்காக கைது செய்ய வேண்டுமென்றால் இந்தியாவில் எந்த அரசியல் தலைவரும் வெளியில் நடமாட முடியாது. நான் வன்முறையைத் தூண்டும்படி பேசினேனாம். அதுவும் ஆறு மாதம் கழித்து, வன்முறையைத் தூண்டும் பேச்சைக் கண்டறிந்திருப்பது ஆளுங்கட்சிதான். மொத்தத்தில் இது பழிவாங்கும் நடவடிக்கையே தவிர வேறில்லை.

உங்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அடைத்திருப்பது பற்றி?
ஆங்கிலேயர் ஆட்சியில் விடுதலை வேட்கையை மக்களிடம் ஊட்ட உண்மையை எடுத்துப் பேசியவர்கள் கைது செய்யப்பட்டனர். அப்போது பேச்சு சுதந்திரம் இல்லை. இப்போதும் உண்மையைப் பேசியதற்காக நான் கைது செய்யப்பட்டுள்ளேன். இந்த ஆட்சியிலும் பேச்சு சுதந்திரம் கூட்டணியில் இல்லாதவர்களுக்கு இல்லை. நான் கூட்டணியில் இருக்கும்போது பேசியதற்காக கூட்டணியிலிருந்து வெளியேறிய பிறகு கைது செய்யப் பட்டுள்ளேன். ஆனால் உண்மையிலேயே வன்முறையைத் தூண்டி, ஆபாசமாகப் பேசிவரும் தி.மு.க. பேச்சாளர்கள் போலீஸாரின் பாதுகாப்புடன் சுற்றித் திரிகிறார்கள். தலைவர் மருத்துவர் ஐயா சொன்னது போல் நாங்கள் எந்தப் பத்திரிகை அலுவலகத்தையும் தீ வைத்துக் கொளுத்தவில்லை. யாரும் தீயில் எரிந்து இறக்கவுமில்லை.''
உங்கள் கைது பா.ம.க.வை மிரட்டும் வேலை என்று கூறப்படுகிறதே
``உண்மைதான். இந்தக் கைதின் மூலமும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் மூலமும் எங்களை மிரட்டி பேசவிடாமல் செய்யலாம் என்று நினைக்கிறார் கலைஞர். ஆனால் எத்தனையோ போராட்டங்கள், கைதுகள், தேசிய பாதுகாப்புச் சட்டங்களை சந்தித்து முறியடித்து வளர்ந்தது வன்னிய சங்கமும் பா.ம.க.வும். எனவே இதற்கெல்லாம் நாங்கள் பயப்படமாட்டோம். எங்களில் எவ்வளவு பேரை கைது செய்து சிறையிலடைத்தாலும் நேர்மைக்காகப் போராடும் எங்களை ஒடுக்கிவிட முடியாது.''

அடுத்த தேர்தலில் பா.ம.க. யாருடன் கூட்டணி அமைக்கும்!

அதை பா.ம.க. முடிவு செய்யும்.''

சிறையில் உங்களை எப்படி நடத்துகின்றனர்?

நான் முதல் வகுப்புக் கைதியாக சிறையிலிருக்கிறேன். ஆனால் முதல் வகுப்புக் கைதிக்குத் தரப்படவேண்டிய எதுவும் எனக்கு அளிக்கப்படவில்லை. ஆளுங்கட்சியினர் சிறைக் குள்ளும் கையை நீட்டி என்னைச் சீண்டிப் பார்க்கின்றனர்! பார்க்கட்டும்...'' என்று சொல்லும் குருவுக்கு குரல் உயர்கிறது.
பா.ம.க. வழக்கறிஞர் பிரிவுத் தலை வரும் குருவின் சார்பில் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளவருமான உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கே.பாலுவை சந்தித்துப் பேசினோம். ``இந்த வழக்கில் அண்ணன் குரு பேசியதால் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்பதற்கான எந்த ஆதாரமும் காட்டப்படவில்லை. அதேபோல் அவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில்தான் அடைத்தாகவேண்டும் என்பதற்கு பிரத்தியேக காரணம் எதுவும் கூறப்படவில்லை. ஆறுமாத கால தாமதத்திற்கு எந்தவித விளக்கமும் இல்லை. அதேபோல் மாவட்ட ஆட்சித் தலைவரும் அரசின் காலாவதியான அதிகாரத்தைப் பயன்படுத்தி அண்ணன் குருவை தடுப்புக்காவலில் அடைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த முரண்பாட்டிற்கெல்லாம் தமிழக அரசு நீதிமன்றத்தில் பதில் சொல்லி யாகவேண்டும்'' என்றார்..

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive