தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

நாம் வாழும் இந்த பூமியை வாழவிடுங்களேன்... * உங்களது சிறிய முயற்சி பூமி தகிப்பதை தடுக்கும்!

திடீர் மழை... எதிர்பாராத வெள்ளம்... கடுமையான வறட்சி என்று நாம் அடிக்கடி பத்திரிகையில் செய்திகளைப் படிக்கிறோம். பருவ காலத்தில் தூறலுடன் நின்றுவிட்டு, பருவம் தவறியபின் மழை கொட்டித் தீர்ப்பதையும் நாம் பார்த்திருக்கிறோம். இயற்கையின் இந்த மாற்றத்துக்கு காரணம் என்ன? இந்த மாற்றத்தை நம்மால் தடுக்க முடியுமா?ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் பூமியின் வெப்பம்தான், இந்த பருவ மாற்றத்துக்கு காரணம். இதற்கு நாம்தான் மறைமுக காரணம். ஆகவே நாம் மனம் வைத்தால்தான் பூமியின் வெப்பம் மேலும் உயராமல் தடுக்க முடியும்.
தொழிற்புரட்சி ஏற்பட்டு தொழிற்சாலைகளின் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கிய பின்னர் பூமியின் சராசரி வெப்பநிலை 0.8 டிகிரி செல்சியஸ் அதிகரித்திருக்கிறது. இது ஏறத்தாழ ஒரு டிகிரி வெப்பநிலைக்குத்தான் சமம் என்றாலும் கூட, துருவப்பகுதியில் உள்ள பனி உருக இதுபோதுமானது. இதனால் கடல் மட்டம் உயரும். பல தீவு நாடுகளுக்கு சேதம் ஏற்படும். மலை உச்சியில் உள்ள பனி உருகிவிட்டால், கோடை காலங்களில் ஆறுகள் வறண்டு பாலைவனமாகிவிடும்.பூமி எப்படி வெப்பமடைகிறது என்பதை அறிந்து கொள்ளும் போது, நம்மால் இயன்ற அளவுக்கு அது வெப்பமடைவதிலிருந்து தடுக்க முடியும் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
சூரியனிலிருந்து வரும் வெப்பக்கதிர்கள், புவியின் மேற்பரப்பில் பட்டு அதை சூடேற்றுகிறது. இந்த கதிர்கள் பூமியின் மேற்பரப்பால் "எதிரொளிக்கப்பட்டு' இந்த வெப்பத்தின் ஒரு பகுதி மீண்டும் விண்வெளிக்கே சென்றுவிடுகிறது. எனினும் வளிமண்டலம் போர்வை போல் காத்து மீதமுள்ள வெப்பத்தை பூமியிலேயே தக்க வைக்கிறது.பூமியிலிருந்து வெளியேறும் வெப்பம் மற்றும் பூமியிலுள்ள வெப்பம் ஒரு குறிப்பிட்ட விகித்தில் இருக்க வேண்டும்.
வாகனங்கள் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு, ஏ.சி., மற்றும் பிரிட்ஜ்கள் வெளியிடும் குளோரோ புளோரோ கார்பன்கள், தொழிற்சாலைகள் வெளியிடும் நைட்ரஜன் ஆக்சைடு, கால்நடைகள் வெளியேற்றும் மீத்தேன் உள்ளிட்டவை வளிமண்டலத்தில் சேர்ந்து வினைபுரிந்து மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் வளிமண்டலம் அதிகப்படியான வெப்பத்தை தக்கவைத்துக் கொள்ளும் நிலை ஏற்படுவதால் பூமி சூடேறுகிறது.சூரியனிலிருந்து வெளியாகும் அகச்சிவப்பு கதிர்கள் அதிக வெப்பமிக்கவை. இவற்றை பூமிக்குள் விடாமல் அரண் போல் காக்கும் ஓசோன் படலத்தையும் கார்பன் மாசு வினைபுரிந்து அவற்றை இல்லாமல் ஆக்கிவிடுவதால் பூமி சூடேற இன்னொரு காரணம் ஆகிவிடுகிறது.2050ம் ஆண்டுக்குள் கார்பன் வெளியேற்றத்தை 50 சதவீதம் குறைத்து, புவி வெப்ப உயர்வை 2 டிகிரிக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்று உலக நாடுகள் முயற்சி எடுத்து வருகின்றன.
பெட்ரோலியப் பொருட்கள், நிலக்கரி உள்ளிட்டவற்றிலிருந்துதான் 40 சதவீதத்துக்கும் அதிகமான கார்பன் வெளியேற்றப்படுகிறது. இதனால் சூரிய சக்தி மற்றும் காற்று சக்தியை மாற்றாக பயன்படுத்துவது அவசியமாகிறது. என்றாலும் இன்று அத்தியாவசியமாகிவிட்ட வசதிகளால் கார்பன் வெளியேற்றத்தை தடுக்க முடியாது. அதேசமயம் அவற்றை கட்டுப்படுத்தலாம்.எரிசக்தியை வீணடிக்காமலும் சிக்கனமாகவும் பயன்படுத்தினாலே பூமி ஓரளவுக்கு தப்பிவிடும் என்பது விஞ்ஞானிகள் ஆசைப்படுகின்றனர்.
3 ஆயிரம் கி.மீ., ஓடும் ஒரு கார் 1.3 டன் கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றுகிறது. 2,500 கி.மீ., விமானத்தில் பயணம் செய்யும் பயணி ஒவ்வொருவருக்கும் இதே வீதத்தில் கார்பன் வெளியேற்றப்படுகிறது.மின்உற்பத்தியின் போதும் கார்பன் வெளியேறுவதால், மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தினால் கணிசமான அளவுக்கு கார்பன் வெளியேற்றத்தை குறைக்க முடியும். குறைந்த மின்சக்தியை செலவழிக்கும் சி.எப்.எல்., பல்புகளை தேர்வு செய்யலாம். சி.எப்.எல்., பல்புகளுக்கு அனைவரும் மாறினால் உலகம் முழுவதிலிருமிருந்து வெளியேறும் 500 டன் கார்பன் குறையும்.
"டிவி', "டிவிடி', கம்ப்யூட்டர்கள், மொபைல் போன் சார்ஜர் உள்ளிட்டவற்றை நீங்கள் பயன்படுத்தாத போது அவற்றை அணைத்துவிட வேண்டும். பழைய வாஷிங்மிஷின், பிரிட்ஜ், இன்வெர்டர் பேட்டரிகள் அதிக மின்சாரத்தை பயன்படுத்தும். ஏர்கண்டிஷனர்களை தூய்மையாக்கி பயன்படுத்துவதால் ஒரு ஆண்டுக்கு 158 கிலோ கார்பன் வெளியேற்றத்தை தடுக்க முடியும்.
அருகில் உள்ள பகுதிகளுக்கு சைக்கிளிலும் நடந்து செல்லும் தூரப் பகுதிகளுக்கு நடந்தே செல்வதும், கார்களில் தேவையில்லாத பொருட்களை அகற்றி தூய்மையாக வைத்துக் கொண்டு, அவசியம் ஏற்பட்டால் மட்டும் பயன்படுத்துவதும் கார்பன் வெளியறி சுற்றுச்சூழலை கெடுப்பது தவிர்க்கப்படும். கிராமங்களில் சாண எரிவாயு அடுப்புகளை பயன்படுத்துவது எரிபொருள் சிக்கனத்துக்கும் வளிமண்டல பாதுகாப்புக்கும் உதவும்.மரங்கள் மொத்தமாக அழிக்கப்படுவதை தடுக்க வேண்டும். மரங்கள் அதிகரிக்கும் போது அவை வளிமண்டலத்தில் உள்ள கார்பனை தூய்மைப்படுத்தும்.
நம் வாழ்க்கையில் சிறிய மாற்றங்களை உருவாக்குவதன் மூலம் நம் எதிர்கால சந்ததியினருக்கு முழுமையாக பயன்படும் வகையில் இந்த பூமியை மாற்றி அமைக்கலாம். நாம் வாழும் இந்த பூமியையும் வாழவிடலாமே...!

0 comments:

Post a Comment

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive