புதுச்சேரி மாநிலத்தில் புதிய முதலமைச்சரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக புதுவை முதலமைச்சர் ரங்கசாமியை பதவி விலகும்படி காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தி உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. இதனையடுத்து, புதிய முதலமைச்சரை தேர்ந்தெடுப்பதற்கான சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ரங்கசாமியை மாற்றவேண்டும் என்று, 5 அமைச்சர்களும், பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்களும் போர்க்கொடி உயர்த்தினர். இதனால், ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனையடுத்து, கடந்த திங்கள்கிழமை புதுவை வந்த மத்திய அமைச்சர் வயலார் ரவி தலைமையிலான குழு, சட்டமன்ற உறுப்பினர்களிடம் ஆலோசனை நடத்தியது. அப்போது, அமைச்சர் வைத்திலிங்கம் முதலமைச்சர் ஆவதற்கு எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, ரங்கசாமியை, முதலமைச்சர் பதவியில் இருந்து விலகும்படி சோனியாகாந்தி உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியானது. ஆனால், கட்சி மேலிட முடிவுக்காக, தான் காத்திருப்பதாக ரங்கசாமி தெரிவித்துள்ளார். இதனிடையே, புதுவையில், புதிய முதலமைச்சரை தேர்ந்தெடுப்பதற்கான சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இன்று நடைபெற இருப்பதாக காங்கிரஸ் மேலிட பார்வையாளர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத் தேர்தலில் புதிய அணி-தா.பாண்டியன்
புதுவை முதலமைச்சர் ரங்கசாமி பதவி விலக சோனியா உத்தரவு?
Posted by
தமிழ்க்குமரன்
Wednesday, August 27, 2008

0 comments:
Post a Comment