தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

முஷாரப் எழுச்சியும்... வீழ்ச்சியும்!

கண்டன தீர்மானம் கொண்டுவரப்படும் என, ஆளுங்கட்சி மிரட்டியதை அடுத்து, முஷாரப் நேற்று பதவி விலகினார். 1999ல் அதிகாரத்தை கைப்பற்றிய முஷாரப், ஒன்பது ஆண்டுகள் ஆட்சியை தன்வசம் வைத்திருந்தார்.
அக்., 12, 1999: ராணுவ தளபதியாக இருந்த முஷாரப்பை பதவி நீக்கம் செய்தார் பிரதமர் நவாஸ் ஷெரீப். பதில் நடவடிக்கையாக, நவாஸ் ஷெரீப் ஆட்சியை கவிழ்த்து விட்டு அதிகாரத்தை கைப்பற்றினார் முஷாரப்.
மே 13, 2000: நவாஸ் ஆட்சி கவிழ்ப்புக்கு பாகிஸ்தானின் சுப்ரீம் கோர்ட் ஒப்புதல்.
டிச., 2000: விமான கடத்தல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நவாசுக்கு விடுதலை. சவுதி அரேபியாவுக்கு நாடு கடத்தல். 10 ஆண்டுகள் பாகிஸ்தானுக்கு திரும்ப தடை.
ஜூன் 20, 2001: பாகிஸ்தான் அதிபர் முகமது ரபீக் தரார் ராஜினாமா. முஷாரப் அதிபரானார்.
செப்., 11, 2001: உலக வர்த்தக மைய கட்டடங்கள் தகர்ப்புக்கு பின்னர், தலிபானுக்கு அளித்த ஆதரவை முஷாரப் விலக்கினார். அமெரிக்காவுடன் பாகிஸ்தான் நெருக்கம்.
ஏப்., 30, 2002: ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள நடந்த தேர்தலில் சர்ச்சைக்குரிய முறையில் முஷாரப் வெற்றி.
அக்., 10, 2002: முஷாரப் ஆதரவு முஸ்லிம் லீக் பொதுத் தேர்தலில் வெற்றி.
நவ., 16, 2002: முஷாரப் மீண்டும் அதிபராக பதவியேற்பு.
டிச., 2003: இரண்டு முறை படுகொலை முயற்சியில் இருந்து தப்பினார் முஷாரப்.
ஜன., 1, 2004: 2007 வரை பதவியில் தொடரும் வகையில் பார்லிமென்டில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் முஷாரப் வெற்றி.
பிப்., 2004: ஈரான், வட கொரியா, லிபியாவுக்கு அணு ஆயுத உற்பத்தி குறித்த தகவல்களை வழங்கிய அப்துல் காதீர் கானுக்கு முஷாரப் மன்னிப்பு.
டிச., 30, 2004: ராணுவ தளபதி பதவியை உதற முஷாரப் மறுப்பு.
மார்ச் 9, 2007: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி இப்திகர் சவுத்ரியை நீக்கினார் முஷாரப். வக்கீல்கள் போராட்டம் வெடித்தது.
ஜூலை 10, 2007: இஸ்லாமாபாத்தின் சிவப்பு மசூதிக்குள் நுழைந்து தலிபான் ஆதரவு பயங்கரவாதிகளை தாக்கும்படி, ராணுவத்துக்கு முஷாரப் உத்தரவு. 105 பேர் பலி.
ஜூலை 20, 2007: நீதிபதி இப்திகர் சவுத்ரியை மீண்டும் நியமனம் செய்தது சுப்ரீம் கோர்ட். முஷாரப்புக்கு பின்னடைவு.
ஜூலை 27, 2007: அபுதாபியில் பெனசிர், முஷாரப் சந்திப்பு. பதவி விலகும்படி முஷாரப்பிடம் பெனசிர் வலியுறுத்தல்.
செப்., 10, 2007: சுப்ரீம் கோர்ட் உத்தரவுடன் நாடு திரும்பிய நவாஸ் ஷெரீப் இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் கைது. மீண்டும் சவுதி அரேபியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.
அக்., 6, 2007: எதிர்க்கட்சிகள் புறக்கணிப்புக்கு இடையே பார்லிமென்டில் நடந்த ஓட்டெடுப்பில் முஷாரப் வெற்றி.
அக்., 18, 2007: பெனசிர் நாடு திரும்பினார்.
அக்., 19, 2007: தற்கொலைப்படை பயங்கரவாதிகள் பெனசிரை படுகொலை செய்ய முயற்சி.
நவ., 2, 2007: முஷாரப் மீண்டும் தேர்தலில் நிற்க முடியுமா என்பது குறித்து விவாதிக்க சுப்ரீம் கோர்ட் கூடியது.
நவ., 3, 2007: பாகிஸ்தானில் எமர்ஜென்சி அமல். தலைமை நீதிபதி இப்திகர் நீக்கம்.
நவ., 25, 2007: நவாஸ் ஷெரீப் நாடு திரும்பினார்.
நவ., 28, 2007: அஷ்பக் கியானியிடம் ராணுவ தலைவர் பதவியை ஒப்படைத்தார் முஷாரப்.
நவ., 29, 2007: முஷாரப் மீண்டும் அதிபராக பதவியேற்பு.
டிச., 15, 2007: எமர்ஜென்சி விலக்கிக்கொள்ளப்பட்டது.
டிச., 27, 2007: பெனசிர் படுகொலை செய்யப்பட்டார்.
பிப்., 18, 2008: முஷாரப் ஆதரவு கட்சிகள் தேர்தலில் தோல்வி.
மார்ச் 24, 2008: யூசுப் ரசா கிலானி பிரதமராக தேர்வு.
ஆக., 17, 2008: முஷாரப் மீது கண்டன தீர்மானம் கொண்டு வர ஆளுங்கட்சி முடிவு.
ஆக., 18, 2008: அதிபர் பதவியில் இருந்து முஷாரப் ராஜினாமா.

0 comments:

Post a Comment

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive