தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

ஒலிம்பிக்கில் இந்தியா வென்றது தங்கப் பதக்கம் * துப்பாக்கி சுடும் போட்டியில் அபினவ் அபாரம்

ஒலிம்பிக் வரலாற்றில் நேற்று இந்தியாவுக்கு பொன்னான நாள். துப்பாக்கிச் சுடுதல் 10 மீட்டர் "ஏர் ரைபிள்' பிரிவில், இந்திய வீரர் அபினவ் பிந்த்ரா தங்கப் பதக்கம் வென்றார். ஒலிம்பிக் தனிநபர் பிரிவில், தங்கம் வெல்லும் முதலாவது இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார். 28 ஆண்டுகளுக்கு பிறகு, இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் பெற்றுத் தந்து, உலக அரங்கில் இந்தியாவை தலை நிமிரச் செய்துள்ளார். சீன தலைநகர் பீஜிங்கில், 29வது ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. இதில், இந்தியா உட்பட 205 நாடுகள் பங்கேற்கின்றன. நேற்று நடந்த ஆண்கள் துப்பாக்கிச் சுடுதல் 10 மீ., "ஏர் ரைபிள்' பிரிவில், 25 வயதான அபினவ் பிந்த்ரா பங்கேற்றார். தகுதிச் சுற்றில் 596 புள்ளிகள் பெற்றிருந்த இவர், இறுதிச் சுற்றுக்கு சூப்பராக முன்னேறினார்.
கடும் போட்டி: மிக முக்கியமான இறுதிச் சுற்றில் அபினவ், ஏதென்ஸ் ஒலிம்பிக் சாம்பியனான சீனாவின் ஜு கினான், பின்லாந்தின் ஹென்றி ஹகினான் ஆகியோரிடையே கடும் போட்டி காணப்பட்டது. "10 ஷாட்' கொண்ட இறுதிச் சுற்றில் பிந்த்ரா அசத்தினார். அனைத்து வாய்ப்பிலும் 10 புள்ளிகளுக்கும் மேல் பெற்று நம்பிக்கை தந்தார். ஏழாவது வாய்ப்பில் 10.6 புள்ளி பெற்ற இவர் முன்னிலை பெறத் துவங்கினார்.
"திரில்' தங்கம்: கடைசி 10வது வாய்ப்பில் பரபரப்பு எகிறியது. இதில், மீண்டும் கலக்கினார் பிந்த்ரா. இவர், மொத்தமுள்ள 10.9 புள்ளியில் 10.8 புள்ளி பெற, இந்திய ரசிகர்கள் உற்சாக கரகோஷம் எழுப்பினர். கினான் 10.5 புள்ளி, ஹகினான் 9.7 புள்ளி மட்டுமே பெற்றனர். மொத்தமாக 700.5 புள்ளிகள் (தகுதிச் சுற்றில் 596 புள்ளி+இறுதிச் சுற்றில் "10 ஷாட்களில்' 104.5 புள்ளி) பெற்ற பிந்த்ரா, 0.8 வித்தியாசத்தில் தங்கம் வென்றார். இதன் மூலம், இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் தனிநபர் பிரிவில் தங்கம் வெல்லும் முதலாவது வீரர் என்ற சாதனை படைத்தார். சீனாவின் கினான் 699.7 புள்ளிகளுடன் (597+102.7)வெள்ளி வென்றார். ஹகினான் 699.4 புள்ளிகளுடன் (598+101.4) வெண்கலம் கைப்பற்றினார்.
28 ஆண்டுகளுக்கு பின்: கடந்த 1900ல் நடந்த ஒலிம்பிக்கில், இந்தியா முதல் முறையாக பங்கேற்றது. தற்போது தான் தனிநபர் பிரிவில், பிந்த்ரா மூலம் தங்கம் வென்றுள்ளது. தவிர, 28 ஆண்டுகளுக்கு பிறகு தங்கம் கைப்பற்றியுள்ளது. கடைசியாக 1980, மாஸ்கோ ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி தங்கம் வென்றிருந்தது.


துணிச்சல் வீரர்: சண்டிகாரைச் சேர்ந்த பிந்த்ரா மிகுந்த துணிச்சலுடன் சாதித்துக் காட்டியுள்ளார். ஏற்கனவே உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ள இவர், இம்முறை முதுகு தண்டுவடத்தில் ஏற்பட்ட காயம் மற்றும் கழுத்து வலியால் அவதிப்பட்டார். போட்டிக்கு முன், துப்பாக்கியை கூட தூக்க முடியாமல் சிரமப்பட்டுள்ளார். ஆனாலும், ஜெர்மனி சென்று கடும் பயிற்சி மேற்கொண்ட இவர், தற்போது தங்க நாயகனாக ஜொலிக்கிறார். இது குறித்து பிந்த்ரா கூறுகையில், ""நான் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பதை விவரிக்க முடியாது. எனது வாழ்க்கையில் ஒரு "திரில்' அனுபவம்,'' என்றார். பிந்த்ராவின் தங்கச் சாதனை, பீஜிங் ஒலிம்பிக்கில் கலந்து கொண்டுள்ள மற்ற வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்க சக்தியாக அமையட்டும். இந்தியா இன்னும் நிறைய பதக்கம் வெல்லட்டும்!


வாழ்த்து, பரிசு மழை : தங்கம் வென்று புதிய "ஹீரோ'வாக உருவாகியுள்ள அபினவ் பிந்த்ராவுக்கு வாழ்த்து, பரிசு மழை குவிகிறது. பிரதமர் மன்மோகன் சிங், ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் பட்டாசு வெடித்து, ஒலிம்பிக் சாதனையை கொண்டாடி மகிழ்ந்தனர். பஞ்சாப் அரசு ரூ. ஒரு கோடி, இந்திய கிரிக்கெட் போர்டு, அரியானா அரசு தலா ரூ.25 லட்சம், மகாராஷ்டிர அரசு ரூ.10 லட்சம், தமிழக அரசு ரூ. ஐந்து லட்சம் உட்பட ஏறத்தாழ ரூ. இரண்டு கோடி பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.


கபில் புகழாரம்: அபினவ் பிந்த்ராவின் சாதனை, உலகக்கோப்பை வெற்றியை விஞ்சிவிட்டதாக கபில்தேவ் புகழ்ந்துள்ளார். பீஜிங் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம் பெற்றுத் தந்துள்ள துப்பாக்கிச் சுடுதல் பிரிவு வீரர் அபினவ் பிந்த்ரா பற்றி முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறுகையில், ""1983ம் ஆண்டு கிரிக்கெட்டில் இந்தியா உலகக்கோப்பை வென்ற சாதனையை, தங்கம் கைப்பற்றிய அபினவ் பிந்த்ரா விஞ்சிவிட்டார். நாடே பெருமை கொள்ளும்படி சாதித்துள்ளார். விளையாட்டில் இதுவரைக் கண்டிராத மாபெரும் வெற்றி இது. சர்வதேச அரங்கில் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வது மிக கடினமானது,'' என்றார். இந்திய ஒருநாள் கேப்டன் தோனி மற்றும் யுவராஜ் ஆகியோரும் அபினவ் பிந்த்ராவுக்கு நேரடியாக வாழ்த்துக் கூற விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive