தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

வானிலை மாற்றம்: இந்திய செயல் திட்டத்திற்கு பாராட்டு!

புது டெல்லி: வானிலை மாற்றத்திற்கு காரணமான கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் இந்திய அரசின் செயல் திட்டங்களுக்கு பாராட்டு கிடைத்துள்ளது.ஐ.நா.வின் உலக விலங்கின பாதுகாப்பு நிதியம் (WWF), சர்வதேச நிதி நிறுவனமான அலையன்ஸ் ஆகியவற்றால் நியமிக்கப்பட்ட ஈகோஃபிஸ் என்ற ஆலோசனை அமைப்பு சமர்பித்த அறிக்கை, பணக்கார நாடுகளான ஜி- 8 நாடுகள் நச்சு வாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவதில் மிகவும் பின் தங்கியுள்ளதாக இன்று டோக்கியோவில் துவங்கிய ஜி- 8 நாடுகள் உச்சி மாநாட்டில் அறிக்கை வாசித்தது.புவி வெப்ப நிலையை 2 டிகிரி செல்சியஸ் உயர்விற்குக் கீழ் தக்க வைக்கும் நடவடிக்கைகளில் முன்னணி தொழிற்துறை நாடுகள் பின்தங்கியுள்ளது என்று டபிள்யூ. டபிள்யூ. எஃப்.- இந்தியாவின் தலைமை செயல் அதிகாரி ரவி சிங் தெரிவித்துள்ளார்.இந்திய அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள பருவ நிலை மாற்றத்தின் மீதான தேசிய செயல் திட்டத்தை பாராட்டிய இந்த அறிக்கை, மற்ற நாடுகளையும் இதனை பின்பற்ற வலியுறுத்தியுள்ளது.1990ஆம் ஆண்டு முதலான கடந்த கால நச்சு வாயு வெளியேற்றம், கியோட்டோ உடன்படிக்கை இலக்கு ஆகியவற்றை ஒப்பிட்டு ஜி- 8 நாடுகளின் நடவடிக்கை பின் தங்கியுள்ளதாக இந்த அறிக்கை கூறியுள்ளது.மேலும் 3 முக்கிய கொள்கைகளான எரிபொருள் ஆற்றல் திறன், மறு ஆக்கம் செய்யக்கூடிய எரிபொருள் ஆற்றல், கார்பன் சந்தை மேம்பாடு ஆகிய துறைகளில் மேற்கொண்ட நடவடிக்கைகளையும் இந்த ஆய்வு கணக்கிலெடுத்துக் கொண்டுள்ளது.இந்த அறிக்கை, ஃபிரான்ஸ், ஜெர்மனி நாடுகளுக்கு சற்று மேலே பிரிட்டனை வைத்துள்ளது. பிரிட்டன் கியோட்டோ உடன்படிக்கை இலக்கை எட்டவுள்ளது. மேலும், பருவ நிலை மாற்ற மசோதா போன்ற சில நடவடிக்கைகளையும் அறிமுகம் செய்துள்ளது. தனது கார்பன் சந்தை அணுகுமுறையை பிரிட்டன் வலியுறுத்திவரும் அதே வேளையில் மறு ஆக்கம் செய்யக்கூடிய எரிபொருள் ஆற்றல் மற்றும் எரிபொருள் திறன் வளர்ப்பு ஆகியவற்றில் சிறிதளவே செய்துள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.மேலும் தற்போது பிரிட்டன் எரிபொருள் பயன்பாட்டில் நிலக்கரிப் பயன்பாடு அதிகரித்து வருகிறது, இதனால் கார்பன் வெளியேற்றம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.இந்தப் பட்டியலில் கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகள் 7வது, 8வது இடங்களில் உள்ளன. இந்த நாடுகளில் கார்பன் வெளியேற்றம் அதிகரித்துள்ளதோடு, எரிபொருள் ஆற்றல் மேம்பாட்டின் முழுப் பயனையும் இந்த நாடுகள் இன்னமும் உணரவில்லை என்று இந்த அறிக்கை கூறுகிறது.இந்தப் பட்டியலில் 5ஆம் இடத்தில் உள்ள ஜப்பான் கியோட்டோ உடன்படிக்கை இலக்கை விட்டு தூர விலகியுள்ளது. மேலும் கார்பன் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் இடைக்கால செயல்திட்டங்கள் எதனையும் ஜப்பான் அறிமுகம் செய்யவில்லை.முன்பு கார்பன் வெளியேற்ற அளவில் குறைவாக இருந்த ரஷ்யா கடந்த 8 ஆண்டுகளாக இதற்கான செயல்திட்டங்கள் எதையும் நடைமுறைப்படுத்தவில்லை என்று இந்த அறிக்கை குறை கூறியுள்ளது.வளரும் பொருளாதார நாடுகளான இந்தியா, பிரேசில், சீனா, மெக்சிகோ, தென் ஆப்பிரிக்கா ஆகியவை ஜி - 8 நாடுகளுடன் ஒப்பு நோக்கத்தக்கவை அல்ல என்று கூறியுள்ள இந்த அறிக்கை, இதனால் இந்த தரவரிசைப் பட்டியலில் இடம்பெறவில்லை என்று தெரிவித்துள்ளது.ஆனால் இந்தியா தற்போது எடுத்துள்ள தேசிய செயல் திட்டத்தின் விளைவுகள் காரணமாக அடுத்த ஆண்டு தர வரிசையில் நுழையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive