லகில் உணவுப் பொருட்களின் விலை 2012 ஆம் ஆண்டு வரை அதிகரித்து காணப்படும் என்றும் அதேவேளை, எரிபொருட்களின் விலை அதிகரித்தும் குறைந்தும் செல்லும் என்றும் உலக வங்கித் தலைவர் ரொபேர்ட் சோலேலிக் கூறியுள்ளார்.
அத்துடன் உணவு, எரிபொருட்கள் விலைகளால் மோசமாகப் பாதிக்கப்படும் வறிய மக்களுக்கு உதவுவதற்காக 10 பில்லியன் டொலர்கள் தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
உணவு, எரிபொருட்கள் விலைகள் மோசமாக அதிகரித்துச் செல்வதால் சர்வதேச ரீதியாக பணவீக்கமும் கடுமையாக அதிகரித்துச் செல்கின்றது. அதே சமயம், பொருளாதாரமும் வீழ்ச்சியடைந்து செல்கிறது. இதனால் கொள்கை வகுப்பாளர்கள் பெரும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த வார முற்பகுதியில் ஜி8 நாடுகளின் தலைவர்கள் சர்வதேச ரீதியில் அதிகரித்துச் செல்லும் பணவீக்க பிரச்சினைக்கு தீர்வுகாணப்பட வேண்டும் என்பது தொடர்பாக இணக்கம் கண்டுள்ளனர். குறிப்பாக எண்ணெய், உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பு பிரச்சினைக்கு பரிகாரம் காணப்பட வேண்டுமென்பதில் இந்தச் செல்வந்த நாடுகளின் தலைவர்கள் இணக்கம் கண்டிருக்கின்றனர்.
உணவுப் பாதுகாப்பு தொடர்பான அறிக்கையானது சிறந்ததொன்று என்றுதான் நினைக்கிறேன். ஆனால், செயற்பாடு தொடர்பாகவே சோதனை காணப்படுகின்றது. என்று சோலேலிக் கூறியுள்ளார்.
எரிபொருள், உணவுப் பொருட்களின் விலைகள் தொடர்பாக நாம் ஆபத்தான வலயத்தில் உள்ளோம். இதனை மாநாட்டின் போது நான் வலியுறுத்த முயற்சித்தேன். மேலதிகமாக அதிகளவு வளங்கள் தேவையாக உள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.
தேவைப்படும் 10 பில்லியன் தொகைக்கு பல நாடுகள் கணிசமான தொகையை பங்களிப்புச் செய்துள்ளன. ஆனால், அடுத்துவரும் வருடங்களுக்கு நிதி தொடர்ந்து தேவைப்படுகின்றது என்றும் உலகவங்கித் தலைவர் கூறியுள்ளார்
2012 வரை உணவு நெருக்கடி நீடிக்கும்
Posted by
தமிழ்க்குமரன்
Monday, July 14, 2008
Labels: செய்திகள்

0 comments:
Post a Comment