ெட்மான்ட் (வாஷிங்டன்): மைக்ரோசாப்ட் நிறுவனம், தனது விஸ்டா ஆபரேடிங் சிஸ்ட விற்பனை மற்றும் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், எக்ஸ்பி விற்பனையை நிறுத்துகிறது. திங்கள்கிழமை முதல் எக்ஸ்பி ஆபரேட்டிங் சிஸ்ட விற்பனை, வியாபார நிறுவனங்களுக்கும், கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் நிறுத்தப்படுகிறது.எக்ஸ்பி விற்பனை நிறுத்தப்படுவதால் வேறு வழியில்லாமல் விஸ்டா அல்டிமேட் மற்றும் விஸ்டா பிசினஸ் ஆகிய புதிய ஆபரேட்டிங் சிஸ்டங்களை பயன்படுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது.இருப்பினும் ஜனவரி மாத முடிவு வரை, சிறிய விற்பனை நிலையங்களில் எக்ஸ்பி விற்பனையை தொடர மைக்ரோசாப்ட் தீர்மானித்துள்ளது. மேலும் அசஸ் இ (Asus Eee) உள்ளிட்ட குறைந்த விலை பர்சனல் கம்ப்யூட்டர்களில் தொடர்ந்து எக்ஸ்பியை பயன்படுத்தவும் மைக்ரோசாப்ட் தீர்மானித்துள்ளது.இதற்கிடையே, 'எக்ஸ்பியை காப்பாற்றுவோம்' என்ற பெயரில், இன்போவேர்ல்ட் என்கிற இணையதளத்தில் ஒரு பிரசாரமே கிளம்பியுள்ளது. எக்ஸ்பி பிரியர்கள் இந்த பிரசாரத்தை மேற்கொண்டுள்ளனர்.விண்டோஸ் 7 வரும் வரை எக்ஸ்பியை தொடர வேண்டும் என இவர்கள் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 2009ம் ஆண்டில் விண்டோஸ் 7 வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஸ்டா'வை ஊக்குவிக்க 'எக்ஸ்பி' விற்பனையை நிறுத்தும் மைக்ரோசாப்ட்
Posted by
தமிழ்க்குமரன்
Monday, July 14, 2008
Labels: கணிணி செய்திகள்

0 comments:
Post a Comment