தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

மௌனப் பட்டினியில் வாழும் மக்கள

இன்று சர்வதேச மட்டத்தில் உள்ள மூன்றாம் உலக நாடுகளில் 2004 ஆம் ஆண்டு நிகழ்ந்த சுனாமியிலும் பார்க்க ஒரு புதுமையான மௌன சுனாமியை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது, வறுமை, பட்டினிச்சாவு, இந்த மௌனப் பட்டினியின் தாக்கம் வருங்காலத்தில் இன்னும் மோசமாக மாறும் என்பதுதான் இன்றைய யதார்த்தம். இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. *உணவுப் பொருள் உயிரி எரிபொருளாக மாற்றப்படுகின்றமை *உணவு உற்பத்தி குறைக்கப்பட்டமை *விலைவாசி நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றமை *உள்நாட்டு யுத்தம் இறக்குமதி அதிகம் ஏற்றுமதி குறைப்பு *முறையற்ற பாரிய பொருளாதாரக் கொள்கை *எரிபொருளின் தொடர்ச்சியான அதிகளவு விலையுயர்வு *உலகமயமாக்கலின் தாக்கம் *நல்லாட்சி அமையாமை *ஊழல் மற்றும் மனித உரிமை மீறல்கள் உயிரி எரிபொருள்
2002 ஆம் ஆண்டு 25 அமெரிக்க டொலராக இருந்த ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 2008 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 132 அமெரிக்க டொலராக அதிகரித்தது. அதாவது, 428 வீதம் அதிகரித்தது. இதனால், எல்லா நாடுகளிலும் எரிபொருள் விலை மலைபோல் ஏறியது. இதற்கு இலங்கையும் விதிவிலக்கல்ல. காரணம் கடந்த இரண்டு வருடங்களாக ஒபெக், (Oகஉஇ) நாடுகள் தேவைக்கு ஏற்ப எரிபொருள் உற்பத்தியை அதிகரிக்கவில்லை. அதாவது, 15 வீதம் எரிபொருள் உற்பத்தி குறைக்கப்பட்டது. கடந்த மூன்று வருடங்களாக உலக எண்ணெய் உற்பத்தி ஒரு நாளுக்கு 85 மில்லியன் பரல்களாக இருந்தது. ஆனால், தேவை நாளாந்தம் கூடிக்கொண்டே போகிறது. பல நாடுகள் எரிபொருளை மானிய விலைக்கு கொடுத்தன. இன்று இந்த மானிய விலை சில நாடுகளில் குறைக்கப்பட்டதால் பாரிய சவாலுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது.
இந்த எரிபொருள் உற்பத்தி குறைவையும் விலையையும் சமச்சீர் செய்வதற்காக உணவுத் தானியங்களிலிருந்து எரிபொருள் தயாரிப்பதில் சில நாடுகள் ஈடுபட்டன. இதைதான் உயிரி எரிபொருள் என (ஆஐO ஊக்உஃ) அழைக்கப்படுகின்றது. இதை உற்பத்தி செய்ய பயன்படும் மூலப் பொருட்களான சோயா, சோளம், சூரியகாந்தி, பாம் ஆகிய தாவரங்களிலிருந்து பெறப்படும் கொழுப்புகளைப் பயன்படுத்துகிறார்கள். இந்த உணவுப் பொருட்கள் ஊடாக உயிரி எரிபொருள் உற்பத்தி செய்வதனால் இன்று உலகில் சகல மக்களும் அனுபவிக்கும் மௌன சுனாமி தான் உணவு நெருக்கடி (ஊOOஈ இகீஐகுஐகு) ஆகும். இந்த உயிரி எரிபொருள் அமெரிக்காவிலிருந்து அயல் நாடான இந்தியாவரை உலகின் பல பாகங்களிலும் உற்பத்தியாக்கப்பட்டு பாவனைக்கு வழங்கப்படுகின்றது. 20 வீதம் உயிரி எரிபொருட்களுடன் 80 வீதம் பெற்றோலிய எரிபொருள் கலந்து பாவிப்பதே இன்று நடைமுறையிலுள்ளது. இம்மூலப் பொருட்களை விளைவிக்கும் பயிர்ச்செய்கையானது உணவுப் பயிர்ச் செய்கை நிலங்களை ஆக்கிரமிக்கின்றது. மேலும், இந்த உயிரி எரிபொருள் மூலப்பொருட்களுக்கு ஏற்படும் அதிக சந்தை வாய்ப்புக்கள் மற்றும் கூடுதல் இலாபம் போன்ற கவர்ச்சிகள் விவசாயிகளை உணவுக்கான உற்பத்திகளில் ஈடுபாட்டை குறைத்து அக்காணிகளில் உயிரி எரிபொருள் மூலப்பொருட்களை உற்பத்திச் செய்வதற்கு உந்துகிறது.
உலக உணவு ஸ்தாபனம் அண்மையில் வெளியிட்ட புள்ளிவிபரத்தின்படி 20002006 ஆண்டு காலப்பகுதிகளில் அமெரிக்காவில் உயிரி எரிபொருளுக்காக சோளத்தைப் பயன்படுத்தும் அளவு சுமார் 21/2 மடங்கு அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளது. 2007 2008 ஆம் ஆண்டுகளுக்கிடையில் அமெரிக்காவில் சுமார் 30 மில்லியன் தொன் சோளம் உயிரி எரிபொருள் உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, கடந்த காலத்தில் அமெரிக்காவில் ஏற்றுமதி செய்யப்பட்ட சோளம் இன்று அங்கு உயிரி எரிபொருளாக பாவிக்கப்படுகிறது. ஆனால், அமெரிக்க அதிபர் புஷ் இந்தியர்களின் வாழ்க்கைத் தரம் உயர்வடைந்து அவர்கள் தரமான உணவு வகைகளை நாடுவதால் தான் உணவுப் பிரச்சினை உருவாக்கியுள்ளது என்ற தனது கூற்றை வெளிப்படுத்தியுள்ளார். இது அமெரிக்காவின் செயற்பாடுகளை மூடி மறைப்பதற்காக மேற்கொள்ளும் ஒரு கபட நாடகம் எனலாம்.
உயிரி எரிபொருள் பாவிப்பதன் மூலமாக பல நன்மைகள் உண்டு என்பதைப் பலரும் அறிவர். ஆனால், இதற்காக மக்களை பட்டினி போட வேண்டிய அவசியம் இல்லை. உணவுப் பொருட் தாவர வகைகளைவிட இலகுவாக உற்பத்தி செய்யக்கூடிய பல தாவரங்களிலிருந்து உயிரி எரிபொருள் பெறமுடியும். இதன் மூலமாக பெற்றோலிய எரிபொருள் பாவனையைக் குறைக்கலாம். இன்று சில நாடுகளில் காலநிலை மாற்றங்களினால் உணவு உற்பத்தி வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. உதாரணம்: அவுஸ்திரேலியாவில் கோதுமை உற்பத்தி 15 வீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ஆகையினால் எல்லா நாடுகளும் உணவு உற்பத்தியில் தன்னிறைவு காணக்கூடிய அளவுக்கு தேவையான தானியங்களை களஞ்சியப்படுத்தத் தயாராக வேண்டும். இல்லாவிடில் பெற்றோலியத்துக்கு ஒபெக்கில் போன்று அரிசி ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பில் தான்; (Oகீஉஇ) மற்ற நாடுகள் தங்கியிருக்க வேண்டும். இந்த அமைப்பானது உலகில் அரிசி தட்டுப்பாடு வந்ததும் ஒன்றிணைந்து அரிசி ஏற்றுமதியை சில நாடுகளுக்கு குறைத்தும் அல்லது நிறுத்தியும் உள்ளது. அங்ஙனமே ஏனைய நாடுகளில் ஒரு மெற்றிக் தொன் அரிசி 206 அமெரிக்க டொலராக இருந்து ஜூன் மாதம் 2008 இல் 1038 அமெரிக்க டொலராகியது. அதாவது 404 வீதம் அதிகரித்தது.
அரிசியை போல் கோதுமைப் பயிர்ச் செய்கையும் பல காரணிகளினால் குறைக்கப்பட்டு அதன் விலையும் நாளாந்தம் ஏறிக்கொண்டேயிருக்கிறது. 2002 ஆம் ஆண்டு ஒரு மெற்றிக் தொன் கோதுமை 110 அமெரிக்க டொலராக இருந்தது. ஜூன் மாதம் 2008 ஆம் ஆண்டு 262 அமெரிக்க டொலராகியது. இது 138 வீத அதிகரிப்பு ஆகும். இவ்வருடம் உலக பாவனைக்கு 640 மில்லியன் கோதுமை தேவைப்படுகிறது. ஆனால், மோசமான காலநிலை காரணமாக கோதுமை உற்பத்தி 610 மில்லியன் தொன் ஆக குறைந்தது. அமெரிக்காவை அடுத்து கோதுமையை அதிகமாக ஏற்றுமதி செய்யும் நாடான அவுஸ்திரேலியாவில் இவ்வருடம் கோதுமை அறுவடை 7 மில்லியன் தொன்னாக குறைந்தது. ஐரோப்பாவில் முக்கிய கோதுமை உற்பத்தி நாடான பிரான்ஸ் இந்த ஆண்டு கோதுமை ஏற்றுமதியை இடைநிறுத்தியுள்ளது.
கோதுமை உற்பத்தி செய்யாத இலங்கை போன்ற ஆசிய நாடுகள் கோதுமையின் விலை அதிகரிப்பு காரணமாக பெருமளவு பாதிக்கப்படுகின்றன. சிக்காகோ வர்த்தக சபை சென்ற வருடம் (2007) செப்டெம்பர் 3 ஆம் வாரத்தில் வரலாறு காணாத வகையில் ஒரு மெட்றிக் தொன் கோதுமையின் விலையை 360 அமெரிக்க டொலராக நிர்ணயித்தது.
கால்நடை உணவுக்கு முக்கியமாக தேவைப்படும் சோளத்தின் விலையும் என்றுமில்லாதவாறு உலக சந்தையில் அதிகரித்துக் காணப்படுகிறது. இதன் காரணமாகவே பால்மா விலையும் இறைச்சி வகைகளின் விலையும் அதிகரித்துள்ளன. சோளத்தை கால்நடை உணவுக்கு விற்பனை செய்வதற்குப் பதிலாக எரிபொருள் உற்பத்திகளுக்கு விற்பனை செய்வதால் நல்ல விலையைப் பெறலாம் என சோளம் உற்பத்தி நாடுகள் கருதுகின்றன. பால்மா ஒரு மெட்றிக் தொன் 2002 ஆம் ஆண்டில் 1300 அமெரிக்க டொலராக இருந்து ஜூன் மாதம் 2008 இல் 4550 அமெரிக்க டொலராகியது. இது 250 வீத அதிகரிப்பாகும். அதேபோல் கோழியிறைச்சி ஒரு மெட்றிக் தொன் 2002 ஆம் ஆண்டு 849 அமெரிக்க டொலராக இருந்து 2008 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் 1761 அமெரிக்க டொலராகியது. இது 107 வீத அதிகரிப்பாகும்.
விலைவாசி உயர்வு
உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட விலைவாசி உயர்வுகள் இலங்கையையும் பாதித்துள்ளதென அரசாங்க சார்பில் கூறப்படுகின்றது. 1977 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட திறந்த பொருளாதாரக் கொள்கையினாலும், உலக மயமாக்கல் என்ற போர்வையில் அரசாங்க சொத்துக்கள் தனியார் மயப்படுத்தப்பட்டதனாலும் தொடர்ந்து மூன்று தசாப்தங்களாக நடைபெறுகின்ற உள்நாட்டு யுத்தம் காரணமாகவும் எமது மக்கள் அரைவயிற்றுப் பட்டனி கிடக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். இதற்கு காரணம் தொடர்ந்து அதிகரிக்கும் பணவீக்கம் மக்களின் நுகரும் சக்தியை படிப்படியாகக் குறைத்துள்ளது. பணப்புழக்கம் அதிகரித்து அதற்கேற்ப பொருட்களின் உற்பத்தி இல்லையென்றால் விலைவாசி நாளாந்தம் கூடிக்கொண்டே போகும். இத்தகைய வேகமான விலைவாசி ஏற்றம் பணவீக்கம் பலமாக ஏறுவதைத்தான் காட்டுகிறது. இதைக் கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், பணவீக்கம் அரசாங்கத்துக்குக் கட்டுடுஞூபடுவதாயில்லை. பணவீக்கம் வாரா வாரம் வளர்ந்தபடியே உள்ளது. பணவீக்கம் விலைவாசி அதிகரிக்கும் போது உணவுப் பண்டங்களின் விலைதான் முதலில் வேகமாக உயருகின்றன. இன்று பணவீக்கம் 30 வீதத்தை எட்டியுள்ளது. இது வாழ்க்கைச் செலவைக் கூட்டியுள்ளது. ஜனவரி 2006 இல் வாழ்க்கைச் செலவுச் சுட்டெண் 4304 ஆக இருந்து 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6527 ஆக உயர்ந்தது. அதாவது, 2223 புள்ளி அதிகரித்துள்ளது. இந்தத் தாங்க முடியாத வாழ்க்கைச் செலவை சமாளிப்பதற்கு அரசாங்கமும் தனியார் துறையும் மக்களுடைய வருமானத்தை அதிகரிக்க வேண்டும். இல்லாவிடில் தோட்டத் தொழிலாளர்கள், அன்றாட கூலியாட்கள், கிராமப்புற, நகர்ப்புற ஏழைகள் தமது வாழ்க்கைக்கு தேவையான உணவுப் பண்டங்களை கொள்வனவு செய்ய முடியாமல் பட்டினிச்சாவை எதிர்நோக்குவார்கள்.

0 comments:

Post a Comment

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive