காய்கறி வரத்து கணிசமாக குறைந்துள்ளதால் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளது என்று சென்னை கோயம்பேடு காய்கறி சங்கத்தின் முன்னாள் தலைவர் செளந்தரராஜன் கூறினார்.
கர்நாடகா மாநிலம் கோலார், பெங்களூரு, மைசூர் ஆகியவற்றில் இருந்து காய்கறிகள் அதிகமாக சென்னைக்கு கொண்டு வரப்படும். முன்பு ஒரு நாளைக்கு 300 முதல் 200 லாரிகளில் காய்கறி வரும். தற்போது விளைச்சல் குறைவாக உள்ளதால் 100 முதல் 150 லாரிகள் மட்டுமே வருகின்றன. இதனால் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளது என்று தெரிவித்தார்.
நேற்று முன்தினம் ஐந்து ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கோஸ், இன்று பத்து ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கேரட் விலை தாறுமாறாக விலை உயர்ந்துள்ளது. கிலோவுக்கு 10 ரூபாய் உயர்ந்து இன்று 35 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இதேபோல் பீட்ரூட், சவ்சவ், நூக்கோல், முள்ளங்கி, வெள்ளரிக்காய், பீன்ஸ், கத்திரிக்காய், அவரைக்காய், புடலங்காய், வெண்டைக்காய், மிளகாய் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ளது.
பழங்கள் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை. சில பூக்கள் விலைகள் கனிசமாக உயர்ந்துள்ளது.
காய்கறி விலை கடும் உயர்வு!
Posted by
தமிழ்க்குமரன்
Monday, October 6, 2008
Labels: நாட்டு நடப்பு

0 comments:
Post a Comment