தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

மும்பையில் 14 போலீசார் உட்பட 101 பேர் பலி; தீவிரவாதிகள் பிடியில் இன்னும் 340 பேர்.

மும்பை மாநகரின் பரபரப்பு மிகுந்த மையப்பகுதியில் உள்ள தாஜ் ஓட்டல், டிரிடன்ட் ஓட்டல் மற்றும் காமா ஆஸ்பத்திரி உட்பட 10 இடங்களில் தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தி்னர். இந்த தாக்குதலில் 14 போலீசார் உட்பட 101 பலியாயினர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இன்னும் தாஜ் ஓட்டலில் 40‌ பேரும், டிரிடன்ட் ஓட்டலில் 300 பேரும் தீவிரவாதிகளின் பிடியில் உள்ளதாக ராணுவத்தினர் கூறுகின்றனர். தீவிரவாதிகள் குண்டுவெடிப்புகள் மட்டுமல்லாது கடும் துப்பாக்கிச்சூட்டிலும் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். ராணுவத்தினர் மட்டுமல்லாது தீவிரவாத எதிர்ப்புப் போலீசார், தேசிய ராணுவப் படையினர் ஆகியோர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். போலீசாருக்கும் , தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்தது. இதனால் அந்த பகுதியே பெரும் கலவரப் பூமி போல் காட்சியளித்தது.




மும்பை தாக்குதல் வீடியோ
http://www.dinamalar.com/mumbaivideo_main.asp

போலீஸ் உயர் அதிகாரிகள் பலி : போலீசாருக்கும் , தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாத எதிர்ப்புப்படை போலீஸ் தலைமை அதிகாரியான ஹேமந்த் கர்காரே, என்கவுண்டர் போலீஸ் உயர் அதிகாரி விஜய் சர்லாஸ்கர் உள்ளிட்ட 14 போலீசார் பலியாயினர். இந்த தாக்குதல்களில் 20க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் ஈடுபட்டிருந்ததாக போலீசார் தெரிவிக்கப்பட்டுள்ளனர்.






6 தீவிரவாதிகள் பலி : போலீசாருக்கும் , தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 6 தீவிரவாதிகள் பலியானதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 தீவிரவாதிகள் கருப்பு நிற காரில் தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 9 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தனியார் தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.






மர்மப்படகு ? : கடந்த சில நாட்களாக மும்பை துறைமுக பகுதியில் மர்மப்படகு உலவி வந்ததாகவும், அதன் மூலமே தீவிரவாதிகள் மும்பை நகருக்கு வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.






உச்சக்கட்ட பாதுகாப்பு : மும்பை தாக்குதல்களைத் தொடர்ந்து டில்லி , குஜராத் , கோல்கட்டா , சென்னை , பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நட்சத்திர ஒட்டல்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.






பிரதமர் கண்டனம் : இந்த தாக்குதலுக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தீவிரவாதிகள் உடனடியாக கைது செய்யப்படுவர் என்றும் , அவர்கள் தீவிரமாக தண்டிக்கப்படுவர் என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் அத்வானி, பிரதமர் மன்மோகன் சிங்கை தொடர்பு கொண்டு உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். சம்பவ இடத்தைப் பார்வையிட்ட மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் , தீவிரவாதிகளின் தேடுதல் வேட்டை தீவிரமாக நடைபெற்று வருவதாக அவர் கூறினார். இதனிடையே கேரள சற்றுப்பயணம் சென்றிருந்த மகாராஷ்டிரா முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக், அங்கு நடைபெறவிருந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு உடனடியாக மும்பை திரும்பியுள்ளார்.






குண்டுகள் செயலிழப்பு : ராணுவத்தினர் போலீசாருடன் நடத்திய தீவிர சோதனையில் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 வெடிகுண்டுகள் செயலிழக்கப்பட்டுள்ளன.






அமெரிக்கா கண்டனம் : இந்த சம்பவத்திற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அது வெளியிட்டுள்ள அறிக்கையில் தாங்கள் இந்தியாவின் நிலையை கூர்ந்து நோக்கி வருவதாகவும், தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியாவிற்கு எப்போதும் உறுதுணையாக இருப்போம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

0 comments:

Post a Comment

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive