தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

'சர்ச்சை' சைமண்ட்ஸ் ஓய்வு?

வங்கதேச தொடரிலிருந்து நீக்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர் சைமண்ட்ஸ் சர்வதேச போட்டிகளிலிருந்து விரைவில் ஓய்வு பெறுவார் என தெரிகிறது. ஆஸ்திரேலியா சென்றுள்ள வங்கதேச அணி மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டிக்கு முன்பாக நடந்த வீரர்களின் கூட்டம் மற்றும் பயிற்சி ஆகியவற்றில் ஆஸ்திரேலிய வீரர் சைமண்ட்ஸ் கலந்து கொள்ளவில்லை. அந்நேரத்தில் அவர் டார்வின் கடற்கரையில் மீன்பிடித்து கொண்டு "ஜாலி'யாக பொழுதுபோக்கினார். இதையடுத்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு அவரை தொடரிலிருந்து நீக்கியது. முன்னதாக 2005ல் மது அருந்திவிட்டு போட்டியில் விளையாட வந்த காரணத் துக்காக இவர் 2 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப் பட்டார். அதன்பின்னர் இந்தாண்டு துவக்கத்தில் நடந்த டெஸ்ட் தொடரின் போது, ஹர்பஜன் தன்னை "குரங்கு' என கேலி செய்ததாக தவறான புகார் அளித்து, சர்ச்சையில் சிக்கினார்.
முதல் முறை அல்ல:தற்போது வங்கதேச தொடரிலிருந்து நீக்கப்பட்டிருப்பதால் ஓய்வு பெறும் எண்ணத்தில் இருக்கிறார். ஏற்கனவே கடந்த 2002ல் இவர் பிரிஸ்பேன் ரக்பி அணியின் பயிற்சியாளரிடம் தன்னை ரக்பி வீரராக மாற்றும்படி கேட்டுக்கொண்டார். அப்போதும் கிரிக்கெட் அணியிலிருந்து விலகும் எண்ணத்தில் இருந்தார். அடுத்த மாதம் ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற் கொண்டு நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இத்தொடருக்கான ஆஸ்திரேலிய அணி இன்னும் இரண்டு வாரங்களுக்குள் அறிவிக்கப்படவிருக்கும் நிலையில் இவரது முடிவு முக்கியத்துவம் வாய்ந்தது. இவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு அளிக்கும் ரூ. 2 கோடி ஒப்பந்த தொகை கிடைக்காமல் போய்விடும். ஆனால், கடந்தாண்டு ஐ.பி.எல்., தொடரில் ரூ. 5.4 கோடி பெற்ற இவர் இது போன்ற போட்டிகளில் பங்கேற்கலாம்.
ஆதரவுக்கு நன்றி: இந்நிலையில் ஆஸ்திரேலிய பத்திரிகைக்கு சைமண்ட்ஸ் பேட்டியளித்த போது, ""எனக்கு எது முக்கியம் என்பதை தீர்மானிக்கும் பொறுப்பை ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு என்னிடம் விட்டுவிட்டது. விரைவில் சரியான முடிவை எடுக்க விருக்கிறேன்,'' என்றார். சைமண்ட்ஸ் விவகாரம் குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறுகையில்,""சைமண்ட்ஸ் இல்லாத ஆஸ்திரேலிய அணி முழு நிறைவுபெறாது. ஆனால், அவர் எப்போது விளையாட வருவார் என தெரியவில்லை,'' என்றார். இவரை தொடர்ந்து காயம் காரணமாக வங்கதேச தொடரில் பங்கேற்காத ரிக்கி பாண்டிங் மற்றும் பயிற்சியாளர் டிம் நீல்சன் ஆகியோரும் சைமண்ட்ஸ் மீது அதிருப்தியடைந்துள்ளனர்.
ஹசி நம்பிக்கை: ஆனால், மைக் ஹசி இவருக்குஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,"சைமண்ட்ஸ் சுழற்பந்து வீச்சை நன்றாக சமாளிக்க கூடியவர். அவர் மீண்டும் அணிக்கு திரும்புவார் என்ற நம்பிக்கை இருக்கிறது' என்றார்.

0 comments:

Post a Comment

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive