முன்னே போனால் கடிக்கவும், பின்னே நின்றால் உதைக்கவும் கற்றுக் கொண்டார் மாளவிகா! கார்த்தீகை படத்தில் தன்னால் தொடர்ந்து நடிக்க முடியாது என்று நடிகர் சங்கத்திடம் கூறிவிட்டார்! வேறுவழியில்லாத இயக்குனரும் படத்திலிருந்தே அவரை நீக்கி விட்டார். மாளுவுக்கு பதிலாக நமீதாவை கேட்டார்களாம். 30 லட்சம் சம்பளம் கேட்ட நமீ, இறுதியாக ஓ.கே சொல்லிவிட்டார். இந்த விஷயம் மாளவிகாவின் காதில் எட்ட, அவ்வளவுதான்! கர்ப்பம் என்றும் பாராமல் ஒரு ஆட்டம் ஆடியிருக்கிறார் (இதைதானே படத்திலும் செய்ய சொன்னார்கள்?)
தனது வழக்கறிஞர்கள் மூலம் இயக்குனர் வீராவை தொடர்பு கொண்ட மாளவிகா, எனக்கு பதிலாக வேறு யார் நடித்தாலும் அவர்கள் மீதும் தயாரிப்பு நிறுவனம் மீதும் வழக்கு தொடருவேன். என் கேரக்டரில் நான்தான் நடிப்பேன் என்றாராம். 'அட, நல்லாயிருக்கே' என்று மகிழ்ந்த இயக்குனருக்கு அடுத்ததாக மாளவிகா சொன்னதுதான் 'ஆப்பு' ரகம்!
இன்னும் சில மாதங்களில் நான் குழந்தை பெற்றதும் உங்கள் படத்தில் நடித்துக் கொடுப்பேன். அதுவரை நீங்கள் வேறு நடிகையை வைத்து இந்த படத்தை எடுக்க கூடாது. இப்படி அவர் போட்ட கண்டிஷன் கேட்டு வெறுத்துப்போன வீரா, போனை துண்டித்து விட்டாராம்.
தயாரிப்பாளர், நடிகை, இருவருமே மாறி மாறி வழக்கு போட்டுக் கொள்ளட்டும். படத்தை முடிக்கிற வழியை பார்ப்போம் என்பதுதான் வீராவின் முடிவு. வீரமான முடிவுதான்!
_ நன்றி தமிழ்சினிமா.காம்

0 comments:
Post a Comment