தொலைக்காட்சி இன்று நம் வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது
இன்றைய நிலையில் தொலைக்காட்சிப்பெட்டியை திறந்தாலே
அழுது வடிகின்ற தொலைக்காட்சி தொடர்கள்,ஒரு சேனலில் ஒலிபரப்பாகும் தொடரை போல மற்றொரு சேனலிலும் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது
நல்ல அறிவு திறனை வளர்க்கும் நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டுஆபாசம் , வன்முறை ,கலாசார சீர்கேடுகளை உருவாக்கும் நிகழ்ச்சிகளே அதிகளவில்
ஒளிபரப்படுகின்றன ஒரு சேனலின் நிகழ்ச்சிகளை மற்றொரு சேனல் திருடுவது போட்டி என்ற பெயரில் ஒரே மாதிரியான நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவது போன்றவை மக்களுக்கு சலிப்பையே ஏற்படுத்துகிறது
இன்றைய தொடர்களில் பெண்களை ஆபசமாகவும் ,கீழ்த்தரமான எண்ணங்கள் கொண்டவர்களாகவும் குடும்ப உறவுகளை கேவலப்படுத்தும் விதமாகவும் , கள்ள தொடர்பு ,ஒருவனுக்கு இரண்டு மனைவி,ஒரு பெண்ணுக்கு இரண்டு கணவன்கள் என சித்தரிக்கும் போக்குதான் இன்றைய தொடர்களில் அதிகம் காண்பிக்கப்படுகிறது.
கணவனையும் குழந்தைகளையும் பிரிந்து விவாகரத்து கேட்பது போன்றவையே இன்று கதை கருவாகி போய்விட்டதுஅரைகுறை ஆடைகளுடன் பெண்கள் குத்தாட்டம் போடுவதையே இன்று பல தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்புகின்றனகுழந்தை கணவன் மணைவி என குடும்ப உறுப்பினர்களுடன் அமர்ந்து பார்க்கும் நிகழ்ச்சிகள் குறைவு
வியாபார நோக்குடன் மட்டுமே தொலைக்காட்சி நிறுவனங்கள் செயல்படுகின்றன வருடக்கணக்கில் ஒளிபரப்பாகும் பல தொடர்கள் அரைத்த மாவையே அரைத்து கொண்டிருக்கின்றன இதனை பார்ப்பதற்க்கு விளம்பரங்கள் வேறுபல ஆயிரம் கொடுத்து தொலைக்காட்சி வாங்கி சில நூறு கொடுத்து கேபிள் இணப்பு வாங்கி தரங்கெட்ட நிகழ்ச்சிகளை மட்டுமே நாம் பார்க்க வேண்டுமா?
பல திட்டங்கள் தீட்டும் அரசு தொலைக்காட்சிகளுக்கு என சில கட்டுபாடுகளை விதித்தால் தவிர இந்த நிலை மாறாது என்பதில் ஐயமில்லை
முட்டாளாக்கும் சேனல்கள்
Posted by
தமிழ்க்குமரன்
Saturday, June 28, 2008
Labels: விமர்சனம்

0 comments:
Post a Comment