தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

பண்டிகை நேரத்தில் விஜயகாந்த் கட்சி மாநாடு : சென்னையில் நடந்தால் வெற்றி பெறுமா?

பெரிய கட்சிகள் கூட்டணி அமைக்க தூது விடும் அளவுக்கு தே.மு.தி.க., வளர்ச்சி கண்டுள்ளது. அக்கட்சியின் இளைஞர் அணி முதல் மாநில மாநாடு அடுத்த மாதம் 18ம் தேதி சென்னை தீவுத்திடலில் நடக்கவுள்ளது. இம்மாநாட்டில் தனது வளர்ச்சியையும் அதிகரித்துள்ள கட்சியின் பலத்தையும் காட்ட விஜயகாந்த் முடிவு செய்துள்ளார். அந்த மாநாடு வெற்றி பெறுமா என்பதில் பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன.
அக்டோபர் 8 மற்றும் 9ம் தேதிகளில் சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி கொண் டாடப்படுகிறது. அதைத் தொடர்ந்து 27ம் தேதி தீபாவளி பண்டிகை. இவற்றுக்கு இடையில் 18ம் தேதி மாநாடு நடைபெறுகிறது. தீபாவளிக்கு முன்னதாக வடகிழக்கு பருவமழை நீடிப்பது வழக்கம். தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று நாள் மழை பெய்தால் தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட நெடுந்தூர மாவட்டப் பகுதிகளில் இருந்து தொண்டர்கள் சென்னைக்கு வருவதில் சிக்கல் ஏற்படும்.
பண்டிகை கொண்டாட்டத்திற்கு தேவையான ஏற்பாடுகளை தொண்டர்கள் செய்ய வேண்டியது வரும். கடந்த ஆண்டு செப்டம் பரில் தே.மு.தி.க.,வின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா புதுக்கோட்டையில் நடந்தது. விழா அன்று பெய்த பலத்த மழையால் தொண்டர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். மேலும் தீபாவளி நெரிசலில், தொலைதூர மாவட்ட பகுதிகளில் இருந்து சென்னைக்கு வருபவர்களுக்கு ரயில், பஸ்களில் டிக்கெட் கிடைப்பதிலும் சிக்கல் உள்ளது. மழை காரணமாக வேன் போன்ற வாகனங்களில் வந்து விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது.
இதற்கு முன் தே.மு.தி.க.,விற்கு சென்னையில் மாநாடு நடத்த அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் இம்முறை போலீசாரின் அனுமதி கிடைத்துள்ளது. அதற்கு காரணம் மேற்கண்ட பிரச்னைகளால் ஏராளமான தொண்டர்கள் சென்னைக்கு வருவதை தவிர்த்து விடுவார்கள் என்று, உளவுத்துறை போலீசார் அளித்திருக்கும் "ரிப்போர்ட்' தான். இதையெல்லாம் மனதில் வைத்து மாநாடு குறித்து விஜயகாந்த் மறு பரிசீலனை செய்ய வேண்டுமென அவரது விசுவாச தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர்.
அடுத்த ஆண்டு ஜனவரியில் தேர்தல் கூட் டணி மற்றும் வியூகங்கள் அமைக்க வேண்டிய சூழ்நிலையில், அக்டோபர் மாத மாநாடு, கட்சியின் பலத்தை குறைத்து மதிப்பிட வாய்ப்பளித்து விடும் என்றும் கட்சித் தொண்டர்கள் கருதுகின்றனர். ஆனால், கட்சியின் தலைவர் விஜயகாந்த் என்ன கணக்கு போடுகிறாரோ?

0 comments:

Post a Comment

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive