தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

தீபாவளி தேதியை மாற்ற முடியுமா டிராபிக் ராமசாமி கோர்ட்டில் கேள்வி?


"தீபாவளியை அக்டோபர், நவம்பர் மாதத்திற்கு பதிலாக ஜனவரியில் கொண்டாடுங் கள் என, மக்களுக்கு உத்தரவு போட முடியுமா அரசு?'இப்படி ஒரு கேள்வியை சுப்ரீம் கோர்ட்டில் எழுப்பியவர் தமிழகத்தைச் சேர்ந்த டிராபிக் ராமசாமி.தை முதல் நாளை தமிழ் புத்தாண்டு தினமாக தமிழக அரசு அறிவித்தது. இது தொடர்பான சட்டமும், தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து, தமிழகத் தைச் சேர்ந்த வக்கீலான டிராபிக் ராமசாமி என்பவர் சென் னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந் தார்.வழக்கை தள்ளுபடி செய்த ஐகோர்ட், அவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது.
சென்னை ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து, டிராபிக் ராமசாமி, சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார்.தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதிபதிகள் சதாசிவம், பாஞ்சால் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.அப்போது, டிராபிக் ராமசாமி சார்பில் ஆஜரான வக்கீல் எம்.என். கிருஷ்ணமணி கூறியதாவது:
வழக்கமாக சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப் படுகிறது. ஆனால், தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக தமிழக அரசு அறிவித்துள்ளது.இதுதொடர்பாக சட்டத்தையும் நிறைவேற்றியுள்ளது. அப்படி ஒரு சட்டம் இயற்ற சட்டசபைக்கு அதிகாரம் உள்ளதா என, தெளிவுபடுத்த வேண்டும்.தற்போது, அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் ஏதாவது ஒரு தேதியில் தீபாவளி கொண்டாடப்படுகிறது.
இந்த தீபாவளியை ஜனவரியில் கொண்டாடும் படி, மக்களுக்கு அரசு உத்தரவு போட முடியுமா? மக்களின் மன நிலையைப் புரிந்து கொள்ளாமல், எந்த கொள்கை முடிவையும் அரசு எடுக்க முடியாது.தமிழக அரசு எடுத்துள்ள முடிவால், எந்த நன்மையும் ஏற்படாது. அதற்கு பதிலாக குழப்பம்தான் அதிகரிக்கும். அத்துடன் பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வந்த நடைமுறையும் மாற்றப் பட்டுள்ளது.
இவ்வாறு கிருஷ்ணமணி கூறினார்.இந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டிலேயே மீண்டும் தொடரும்படி சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பின்னர் உத்தரவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.அத்துடன் டிராபிக் ராமசாமிக்கு விதிக்கப்பட்ட அபராதமும் ரத்து செய்யப் பட்டது.

நன்றி தினமலர்

0 comments:

Post a Comment

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive