தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

குருமீதுதே.பா., சட்டம்ஏன்? கருணாநிதி விளக்கம்

பா.ம.க., பிரமுகர் குரு மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத் தின் படி ஏன் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து, முதல்வர் கருணாநிதி விளக்கம் அளித் துள்ளார்.முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்ட "கேள்வி-பதில்' அறிக்கை:வன்னியர் சங்கத் தலைவர் குரு எந்த வகையில் நாட்டின் பாதுகாப்புக்குத் தீங்கு விளைவித்துள்ளார். எந்த வழியில் ஊறு விளைவித்தார்? என இரண்டு மூன்று நாட்களாக ராமதாஸ் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்.
குரு பேசிய பேச்சின் சில முக்கியப் பகுதிகளை மட்டும் இங்கே மீண்டும் ஒரு முறை தெரிவிக்கிறேன். "எம்.எல்.ஏ., சிவசங்கரின் அப்பாவாலேயே ஒன்றும் முடியவில்லை. சிவசங்கர் நேற்று வந்த சின்னப் பையன்.மத்திய அமைச்சர் ராஜா கருணாநிதியின் எடுபிடி. இவனுக்கு எடுபிடி பெரம்பலூர் மாவட்ட கலெக்டர். எங்கள் கட்சிப் பொறுப்பாளர் மீது வழக்குப் போட்டால் மத்திய அமைச்சர் ராஜாவோ, சிவசங்கரோ, நீங்க யாரும் உயிரோடு இருக்க முடியாது.
உங்கள் குடும்பத்தையே உயிரோடு எரித்துவிடுவோம். பெரம்பலூர் கலெக்டர் மாமா வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான். போலீஸ் எங்கள் மீது எந்த வழக்கு வேண்டுமானாலும் போடட்டும். ஒரு போலீஸ்காரன் கூட பொண்டாட்டிகிட்ட படுக்க முடியாது. ஊரில் ஒரு பஸ் கூட ஓடாது; எரித்து விடுவோம்."டேய் சிவசங்கர் நீ சின்னப் பையன். உன் அப்பனைக் கேளுடா, நீ மட்டும் வைத்தியைக் கைது செய்திருந்தால் ஆண்டிமடம் தொகுதியில் இந்நேரம் இடைத் தேர்தல் வந்திருக்கும்.இனி தி.மு.க.,காரன் எந் தப் பொதுக் கூட்டத்தில் தாக் கிப் பேசினாலும் அத்தனை பேரையும் வெட்டிக் கொளுத்துங்கடா.'வன்முறை என்றால் என்னவென்றே தெரியாத கட்சியைத் சேர்ந்தவர் பேசிய பேச்சுத் தான் இது. இதற்காகத் தான் வழக்கு.
பா.ம.க.,விற்கும் தி.மு.க.,விற்கும் சமரசம் ஏற்படுத்த நடந்த முயற்சி என்னவாயிற்று?
இவ்வளவு பேசியவரைக் கண்டித்து பா.ம.க., பொதுக் குழுவில் ஒரு தீர்மானம் கூட நிறைவேற்றப்படவில்லை. எவ்வளவு தான் பொறுமையாக இருக்க முடியும்? ஒரு வார இதழில் என் பேத்தி கயல்விழி அளித்த ஒரு பேட்டி இடம் பெற்றுள்ளது. அதில் பா.ம.க.,வைப் பற்றியும், அதன் தலைவைரைப் பற்றியும் அந்தக் கட்சி அனாதையாக்கப்பட்டுவிட்டது என்றெல்லாம் வந்திருப்பதைப் படித்தவுடன், தொலைபேசி மூலம் என் பேத்தியை அழைத்து நான் திட்டியதில் அவர் அழுது அழுது காய்ச்சலே வந்துவிட்டது.
குரு மீது புகார் கொடுத்தவர்களே அதை இல்லை என்றும் அப்படி புகார் செய்யவில்லை என்றும் சொல்வதாக பா.ம.க., தலைவர் சொல்கிறாரே?
புகார் கொடுத்தவர், ஒரு நீதிபதியின் முன் அந்தப் புகாரை பதிவு செய்திருக்கிறார் என்று போலீஸ் கூறுகிறது.தற்போது அந்தப் புகாரை மறைத்துவிட்டு, மிரட்டலுக்கு அஞ்சி தான் புகாரே கூறவில்லை என்கிறார் என்று போலீசார் கூறுகின்றனர்.
ஜெயலலிதா ஆட்சியில் அரசு கேபிள் "டிவி' தொடங்கிய போது நீங்கள் அதை ஆதரிக்கவில்லையே?
மாநில அரசு கேபிள் "டிவி' நிறுவனம் தொடங்க மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும். அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை என்று அறிவித்து, "டிவி' நடத்த முடிவெடுத்ததால் ஆதரிக்க முடியவில்லை.ஜெயலலிதா தொடங்குவதாக இருந்தது, அனைத்து "டிவி' கம்பி வடங்களும் அரசுக்கே சொந்தம்; மற்ற நிறுவனங்கள் அந்தத் தொழிலில் ஈடுபட முடியாது.இப்போதைய அரசு கேபிள் "டிவி' நிறுவன திட்டத்தில் மற்ற அனைத்து தனியார் நிறுவனங்களும் தொடர்ந்து கேபிள் இணைப்பு சேவைகளை வழங்கலாம். தற்போதைய அரசு நிறுவனம் பொதுவில் இயங்கக் கூடியது; அரசுக்கே ஏகபோகம் அல்ல. இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.
அவர் பேத்தியின் பேட்டியும் உங்களுக்காக

0 comments:

Post a Comment

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive