தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

150 ரூபாய்க்கு 150 சேனல்! வழங்கப்போகிறது பி.எஸ்.என்.எல்., இன்டர்நெட் இணைப்பும் உண்டு

மாதம் 150 ரூபாய் கட்டணத்தில் 150 சேனல்கள் பார்க்கும் வசதியினை பிராட்பேண்ட் ஐ.பி.டி.வி., இணைப்பு மூலம் பி.எஸ்.என்.எல்., வரும் மார்ச் மாதத்தில் வழங்குகிறது. இந்த இணைப்பு மூலம் டெலிபோன், இன்டர்நெட் இணைப்பையும் பெறலாம்.மொபைல் சேவைகளை பொறுத்தவரை பி.எஸ்.என்.எல்., நிறுவனம் கால் பதிக்காத வரை தனியார் மொபைல் நிறுவனங்கள், தங்கள் இஷ்டத்துக்கு கட்டணத்தை வசூலித்து வந்தன. ஜி.எஸ்.எம்., மொபைல் சேவையை பி.எஸ்.என்.எல்., வழங்கத் தொடங்கியவுடன் மொபைல் போன் கட்டணம் பெருமளவில் குறைந்தது. தற்போது, பி.எஸ்.என்.எல்., நிறுவனம் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மூன்றாம் தலைமுறை மொபைல் சேவையை அடுத்தாண்டு மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்துகிறது.


இரண்டு பேக்கேஜ் திட்டங்கள் : கேபிள், டி.டி.எச்., சேவை மூலம் "டிவி' நிகழ்ச்சிகளைப் பார்த்து வந்த காலம் போய், தற்போது தொலைத் தொடர்பு சேவையில் " ஐ.பி.டி.வி., ' அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது. இந்தியாவில் மும்பை, புனே உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் ஏற்கனவே இந்த சேவை வழங்கப்பட்டு விட்டது. சென்னையில், வரும் மார்ச் முதல் இந்த சேவையை பொதுமக்கள் பெறும் வகையில், திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான கட்டணம் தற்போதே அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், இரண்டு பேக்கேஜ் திட்டங்கள் உள்ளன. முதல் பேக்கேஜில் 75 சேனல் வரை 100 ரூபாய் கட்டணமும், இரண்டாவது பேக்கேஜில் 150 சேனல் வரை 150 ரூபாய் கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


ஒரு படத்திற்கு 50 ரூபாயும்: தேவையான திரைப்படங்கள் பார்க்கும் "வீடியோ ஆன் டிமாண்டு' வசதியும் வழங்கப்படுகிறது. இதில், திரைக்கு வந்து ஓர் ஆண்டுக்கு மேலான படங்களைப் பார்ப்பதற்கு, ஒரு படத்திற்கு 10 ரூபாயும், திரைக்கு வந்து ஒரு மாதத்தில் இருந்து ஓராண்டுக்கு உள்ளான படங்களை பார்க்க ஒரு படத்திற்கு 25 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திரையிடப்பட்டு ஒரு மாதமும் அதற்கு குறைவாகவும் ஆன படங்களை பார்க்க ஒரு படத்திற்கு 50 ரூபாயும், ஹாலிவுட் படத்திற்கு 50 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பை பெறுவதற்கு செட் டாப் பாக்ஸ் அவசியம்.செட்டாப் பாக்சில் தனிப்பட்ட முறையில், வீடியோ படங்களை பதிவு செய்யும் வசதியும் உள்ளது.


வீடுகளில் ஆள் இல்லாத நேரத்தில் ஒளிபரப்பப்படும் படங்கள், (நிகழ்ச்சிகளை "பெர்சனல் வீடியோ ரெக்கார்டிங்- பி.வி.ஆர்.,) முறையில் பதிவு செய்துகொள்ளலாம். செட் டாப் பாக்ஸ் வாங்க முடியாதவர்கள், வாடகைக்கும் பெற்றுக்கொள்ளலாம். பி.வி.ஆர்., வசதி கொண்ட செட்டாப் பாக்சிற்கு 140 ரூபாயும், இந்த வசதி இல்லாத செட்டாப் பாக்சிற்கு 70 ரூபாயும் மாதவாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பு பெறும் வாடிக்கையாளர்களுக்கு கட்டணம் பிராட்பேண்ட் கட்டணத்துடன் இணைத்து வழங்கப்படும்.

நன்றி
தினமலர்

0 comments:

Post a Comment

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive