தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

8ம் தேதி இரவு 8 மணிக்கு: கல்லூரி மாணவிகள் நூதன பிரசாரம்

இந்த ஆண்டு 8ம் மாதம் (ஆகஸ்ட்), 8ம் தேதி, 8 மணிக்கு, எட்டு நிமிடத்திற்கு...' என்று பாட்டுப் பாடியபடியே கறுப்பு, வெள்ளை உடையணிந்து கையில் குடையை வைத்துக் கொண்டு சென்னை நகரை பரபரப்புடன் நேற்று வலம் வந்தனர் கல்லூரி மாணவிகள். காரணம்: உலகம் வெப்பமயமாதல். எக்ஸ்னேராவும், தி.நகர் ஸ்ரீசங்கர்லால் சுந்தர்பாய் ஷாசுன் மகளிர் கல்லூரி மாணவியரும் இணைந்து, உலகம் வெப்பமயமாதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தி.நகர் நடேசன் பூங்காவில் நேற்று கூடினர்.
80 மாணவிகள் மற்றும் பேராசிரியைகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மாணவிகள் அனைவரும் தங்கள் கைகளில் வைத்திருந்த குடையை விரித்து அசைத்து சுற்றி சுற்றி எட்டு முறை சுழற்றினர். இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு குடையை மடக்கி வைத்துவிட்டு, சுற்றுச்சூழல் செய்தியை கூறினர். அவர்கள் கூறிய செய்தியின் விவரம்: "உலகம் வெப்பமயமாதல்' எனும் விழிப்புணர்வை ஏற்படுத்த "88888 - விளக்கை அணை' எனும் திட்டம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அதாவது, இந்த நூற்றாண்டின் எட்டாம் ஆண்டான 2008ம் ஆண்டில் எட்டாவது மாதத்தில் (ஆகஸ்ட்டில்), எட்டாம் தேதி (நாளை மறுதினம்) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்களுக்கு மின்விளக்கை அணைக்க வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கம். இதன் மூலம் உலகம் வெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம். இவ்வாறு மாணவிகள் தெரிவித்தனர்.
கல்லூரி முதல்வர் தேவகி பேசுகையில், ""மாணவிகள் இந்தப் பிரசாரத்தை மேற்கொள்வதோடு, தாங்கள் குடியிருக்கும் பகுதியிலும் தெரிந்தவர்களிடமும் "விளக்கை அணை' குறித்து விளக்கி, எட்டாம் தேதி எட்டு நிமிடங்கள் விளக்கை அணைக்க வலியுறுத்தவேண்டும்,'' என்றார். பின்னர் மாணவிகள் தி.நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் கூடுமிடங்களில் தங்கள் பிரசாரத்தைத் தொடர்ந்தனர்.

0 comments:

Post a Comment

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive